Followers

Friday, August 30, 2013

அஃப்சல் குரு, அஜ்மல் கசாப், அடுத்த இலக்கு யாசின் பட்கல்!



பொய்யே உன் மறு பெயர்தான் உளவுத் துறையா?

ஆச்சரியமாக கைதாகப்படும் அனைத்து தீவிரவாதிகளும் இந்து நாடான நேபாளத்திலேயே என்ற செய்தி எந்த அளவு உளவுத் துறை கச்சிதமாக தங்களின் காரியத்தை இதுவரை சாதித்து வருகிறது என்பதை தெளிவாக்குகிறது.

இனி நியூ இந்தியாவில் வந்த செய்தியை கீழே பார்ப்போம்.

இந்திய-நேபாள எல்லையில் கைது செய்யப்பட்டதாக கூறப்படும் யாசின் பட்கல், போலி என்கவுண்டரில் பலியாகாமல் உயிரோடிருப்பது மிகுந்த நிம்மதியை தருவதாக அவரின் தந்தை தெரிவித்துள்ளார்.

இதுக்குறித்து யாசின் பட்கலின் தந்தை ஜரார் சித்திபாபா கூறும்போது; ‘காணமல் போன எனது மகன் யாசினை, போலி என்கவுண்டர் மூலம் போலீசார் சுட்டுக்கொன்று விடுவார்களோ என்று பயந்து கொண்டே இருந்தோம். ஆனால் தற்போது யாசின் கைதாகி இருப்பதாக வெளியாகி இருக்கும் தகவல் மிகுந்த நிம்மதியை அளித்துள்ளது.

இந்திய நீதித்துறையின் மீது எங்கள் குடும்பம் முழு நம்பிக்கை வைத்து இருக்கிறது. நீதி விசாரணையில் உண்மை வெளிவரும்.

யாசின் குற்றவாளி என்றால் தண்டிக்கப்படட்டும் அதில் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. ஆனால் யாசின் அப்பாவி; ஒருவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படும் வரை அவர் அப்பாவிதான்.

யாசின் 1983-ம் ஆண்டு பத்கல் கிராமத்தில் பிறந்து அங்கேயே 10-ம் வகுப்பு வரை படித்தான். ஆனால் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெறவில்லை. இதையடுத்து கடந்த 2005-ம் ஆண்டு நவம்பர் மாதம் துபாய் சென்ற யாசின் திரும்பி வரும்போது, 2007-ம் ஆண்டு திடீரென்று காணாமல் போய்விட்டான். இதுக்குறித்து துபாய் போலீஸிடம் முறையிட்டோம். நாங்களும் யாஸினை கண்டுபிடிக்க தீவிர முயற்சிகளை மேற்கொண்டோம் ஆனால் பயன் இல்லை.

அதன் பிறகு யாசின் தான் புனே குண்டுவெடிப்பை நிகழ்த்தினான் என்றும் அவன் இந்திய முஜாஹிதீனின் நிறுவனர்களில் ஒருவன் எனவும் உளவுத்துறை கதைகளை பரப்பி வந்தது.’ என அவர் தெரிவித்துள்ளார்.

-----------------------------------------------------

இந்திய உளவுத்துறையால் கைது செய்ததாக கூறப்படும் யாஸீன் பட்கல் என்ற நபர் உண்மையில் யாஸீன் பட்கல் அல்ல என்று அவரது வழக்கறிஞர் கூறியுள்ளார்.

இதுக்குறித்து வழக்கறிஞர் எம்.எஸ்.கான் கூறியதாவது; ‘யாஸீன் பட்கல் என்று கைது செய்யப்பட்ட நபர் முஹம்மது அஹ்மத் சித்திபாபா ஆவார். இந்தியாவால் தேடப்படும் முக்கிய குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள 12 நபர்களில் ஒருவராக இண்டலிஜன்ஸ் அதிகாரிகள் இவரை குறிப்பிடுவது தவறாகும். இவர் தாம் யாஸீன் என்பதை நிரூபிக்கவேண்டிய பொறுப்பு புலனாய்வு ஏஜன்சிகளுக்கு உண்டு. கைது செய்யப்பட்டவர் யாஸீன் என்பதை நிரூபிக்க அவர்களின் வசம் ஆதாரம் எதுவுமில்லை.’ என குறிப்பிட்டார்.

அஹ்மத் சித்தி பாபாவை யாஸீன் பட்கல் என்று பெயர் மாற்றியது இண்டலிஜன்ஸ் ஏஜன்சிகள் என்று அவரது உறவினரும், பெங்களூரைச் சார்ந்த வழக்கறிஞருமான அக்மல் ரஸ்வி நேற்று முன் தினம் குற்றம் சாட்டியிருந்தார்.

10-வது வகுப்பு கூட வெற்றிப் பெறாத முஹம்மது அஹ்மத் சித்திபாபாவை, பொறியியல் பட்டதாரியாக மாற்றியது மற்றும் 1983-ஆம் ஆண்டு பிறந்த அஹ்மதை 1973-ஆம் ஆண்டு பிறந்தார் என்று உளவுத்துறையும், ஊடகங்களும் கூறுவது குறித்து அக்மல் ரஸ்வி விமர்சித்திருந்தார்.

-http://newindia.tv/tn/india/141-crime/1800-2013-08-31-03-09-02

அஹ்மத் சித்திக் என்கிற பெயரை யாசீன் பட்கல் என்று மற்றியது இண்டெலிஜென்ஸ் ஏஜென்ஸிகள் என்று அஹ்மத்தின் உறவினரும் பெங்களூருவில் வழக்கறிஞராக பணி புரியும் அக்மல் ரஸ்வி தெரிவிக்கிறார்.
1983 ஆம் ஆண்டு பிறந்த அஹ்மத்தை 1973 ஆம் ஆண்டு பிறந்தார் என காவல் துறை கூறி வருகிறது.1990 ஆம் ஆண்டு புனேவிற்கு சென்றார் என்று இண்டெலிஜென்ஸ் பீரோ குற்றம் சாட்டும்போது அஹ்மத்திற்கு வயது வெறும் 7. பத்தாம் வகுப்பு கூட வெற்றி பெறாத அஹ்மத்தை இஞ்னியரிங் பட்டதாரியாக சித்தரித்தும் பல குண்டுவெடிப்புகளின் சூத்திரதாரி என்றும் சித்தரிக்கிறது உளவுத்துறை.
2004 ஆம் ஆண்டு அஹ்மத்தை அவருடைய தந்தை துபாய்க்கு அழைத்து சென்ற போதும் 6 மாதத்தில் திரும்பி வந்துவிட்டார்.
மீண்டும் 2005 ஆம் துபைக்கு சென்ற அஹ்மத் 2007 ஆம் ஆண்டு முதல் காணாமல் போய்விட்டார்.
குண்டு வெடிப்புகள் நடைபெற்ற இடங்களில் அஹ்மத் குண்டுகளை பொறுத்தும் சி.சி.டி..வியில் பதிவாகி இருக்கிறது என்று காவல் துறை கூறுகிறது.
ஆனால் அதனை இதுவரை வெளியிடாமல் மறைத்து வைப்பது ஏன் என்றும் கேள்வி எழுப்பினார்.

இதனிடையில் தீவிரவாதிகள் அனைவரும் இந்திய நேபாள எல்லையில் தொடர்ந்து கைதாகும் மர்மம் என்ன?
இவர்கள் எப்படி நேபாள் எல்லை வருகை தருகிறார்கள்?இதனில் ஒளிந்திருக்கும் மர்மத்தை அரசு பொதுமக்களுக்கு தெளிவு படுத்த வேண்டும் என்று இசுலாமிய அமைப்புகள் கோரிக்கை விடுத்து இருக்கின்றன.அரசுக்கு ஏதேனும் சிக்கலான தருணம் ஏற்படும் போது சொல்லி வைத்தாற் போல் தீவிரவாதிகள் கைது செய்யப்படுகிறார்கள். என்றும் அரசு இதனை தெளிவு படுத்த வேண்டும் என்று இசுலாமிய அமைப்புகளும் மனித உரிமை ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

யாசீன் பட்கலுக்கு தொடர்பு உண்டு என்று உளவுத்துறையும் காவல் துறையும் கூறிவரும் குண்டுவெடிப்புகள் பலவற்றிலும் முன்னர் கைது செய்யப்பட்ட அப்பாவி இசுலாமியர்களுக்கு எதிராக காவல் துறை குற்றத்தை நிறுப்பிக்க போதுமான ஆதாரங்களை தர இயலாமல் நீதிமன்றங்களில் தொடந்து கண்டனங்களை பெற்று வரும் வேளையில் புலனாய்வு பத்திரிக்கையான ‘குலைல் டாட் காம்’ என்ற இணைய தள ஆசியர் ஆஷிக் கேதான் குற்றத்த்திற்க்கு தேவையான ஆதாரங்களை காவல் துறை போலியாக உருவாக்கி அப்பாவி இசுலாமியர்களை வழக்குகளில் சிக்க வைக்கிறது என்று குற்றம் சாட்டினார்.இதனை அடிப்படையாக கொண்டு காவல் துறைக்கும் உளவு துறை அமைப்புகளுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்குகளை தொடுத்திருக்கிறார் என்பதும் தவறு செய்த காவல் துறை மற்றும் உளவுத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் வழக்கை நடத்தி வருக்கிறார் என்பதும் குறிப்பிடபட வேண்டிய முக்கிய செய்தியாகும்.

வழக்கு தற்போது தேசிய புலனாய்வு அமைப்பின் வசம் சென்றுள்ளது.யாசீன் பட்கலிடம் என்.ஐ.ஏ விசாரனை மேற்கொண்டு வருகிறது,முன்பு இதுபோல் தீவிரவாத முத்திரை குத்தப்பட்டு கைது செய்யப்பட்ட பல அப்பாவி இசுலாமியர்களின் விடுதலைக்கு என்.ஐ.ஏ ஆற்றிய பங்கு சிறிது ஒன்றும் அல்ல.வழக்கை என்.ஐ.ஏ விசாரனை செய்யட்டும் உண்மைகள் வெளிவரட்டும்..



----------------------------------------------------

பிரபலம் அடைய தன்னுடைய வீட்டில் தானே பெட்ரோல் குண்டு வீசிய பாஜக நிர்வாகியும், அவரது நண்பரும் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனர்.

திண்டுக்கல்-பழனி சாலையில் உள்ள செல்லாண்டியம்மன் கோயில் 3 ஆவது தெருவில் வசித்து வருபவர் பாஜக நிர்வாகி பி. பிரவீண்குமார். இவரது வீட்டில் புதன்கிழமை நள்ளிரவு பெட்ரோல் நிரப்பப்பட்ட பாட்டில்கள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.

அப்போது, வீட்டிலிருந்த பிரவீண்குமாரின் மனைவி சத்தியலட்சுமி, பெட்ரோல் குண்டை வீசிச் சென்ற 2 மர்ம நபர்கள் குறித்து தனது கணவருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, பா.ஜ.க நிர்வாகிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து வியாழக்கிழமை காலை, பெட்ரோல் குண்டு வீசியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, திண்டுக்கல் மேற்கு காவல் நிலையத்தில் பிரவீண்குமாரும் சத்தியலட்சுமியும் புகார் அளித்தனர். அதன்பேரில், வழக்குப் பதிந்த போலீஸார் தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் சுயவிளம்பரம் தேடும் வகையிலும், போலீஸ் பாதுகாப்பு பெறுவதற்காகவும், தனது வீட்டின் மீது தானே வெடிகுண்டு வீசிய தகவலை பிரவீண்குமார் விசாரணையின்போது தெரிவித்துள்ளார். மேலும் அதே பகுதியைச் சேர்ந்த இவரது நண்பர் கமலக்கண்ணன் (28) என்பவர் இதற்கு உடந்தையாக இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து, பிரவீண்குமார் மற்றும் கமலக்கண்ணன் ஆகியோரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்து, மேலும் விசாரித்து வருகின்றனர்.

http://dinamani.com/tamilnadu/2013/08/31/%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%87-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%80/article1760548.ece

-Read more at: http://tamil.oneindia.in/news/2013/08/31/tamilnadu-dindigul-bjp-functionary-arrest-bomb-hurled-his-own-house-182455.html

இதே வேளையை சில முஸ்லிம் பெயர்தாங்கிகள் செய்திருந்தால் அனைத்து ஊடகங்களும் ஒரே குரலில் இஸ்லாத்தின் மீது சேற்றை வாறி இறைக்க ஆரம்பித்திருக்கும். ஊடகம் முஸ்லிம்களிடம் குறிப்பிடும்படியாக இல்லையாதலால் இந்த நிலை. இனியாவது இஸ்லாமிய உலகம் விழித்துக் கொள்ளுமா!

17 comments:

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

ஸலாம் சகோ. சுவனப்பிரியன்.

//இதனிடையில் தீவிரவாதிகள் அனைவரும் இந்திய நேபாள எல்லையில் தொடர்ந்து கைதாகும் மர்மம் என்ன?//

விடை ரொம்ப ரொம்ப சுலபம்.

இந்தியாவில் இருந்து ஒருவர் நேபாள் போக... பாஸ்போர்ட் விசா எல்லாம் கட்டாயம் இல்லை. அதேபோல... நேபாளில் இருந்து ஒருவர் இந்தியா வர பாஸ்போர்ட் விசா எல்லாம் கட்டாயம் இல்லை. இப்படி ஒரு பித்துக்குளி சட்டம் உள்ளது.

தொறந்து போடப்பட்ட வேலி இல்லாத வழி அது. எதுவும் வரும்... போகும். எந்த போக்குவரத்துக்கும் ரெக்கார்ட் இல்லை என்பதால்... யார் பத்தியும் பொய் சொல்ல வசதியாக உள்ளது.

எனவேதான்... வெளிநாட்டில் இருந்ததாக சொல்ல வசதியாக இருக்கும் என்று அந்த அஜ்மல் கசாப் உட்பட இந்த யாசின் பட்கல் வரை எல்லாரையும் இந்தியாவில் எங்காவது ஓரிடத்தில் கைது செய்துவிட்டு... நேப்பாள் பார்டரில் வைத்து கைது பண்ணியதாக சொல்வார்கள் நம்ம இண்டல்லிஜென்ஸ்..!

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

ஸலாம் சகோ. சுவனப்பிரியன்.

//இதனிடையில் தீவிரவாதிகள் அனைவரும் இந்திய நேபாள எல்லையில் தொடர்ந்து கைதாகும் மர்மம் என்ன?//

விடை ரொம்ப ரொம்ப சுலபம்.

இந்தியாவில் இருந்து ஒருவர் நேபாள் போக... பாஸ்போர்ட் விசா எல்லாம் கட்டாயம் இல்லை. அதேபோல... நேபாளில் இருந்து ஒருவர் இந்தியா வர பாஸ்போர்ட் விசா எல்லாம் கட்டாயம் இல்லை. இப்படி ஒரு பித்துக்குளி சட்டம் உள்ளது.

தொறந்து போடப்பட்ட வேலி இல்லாத வழி அது. எதுவும் வரும்... போகும். எந்த போக்குவரத்துக்கும் ரெக்கார்ட் இல்லை என்பதால்... யார் பத்தியும் பொய் சொல்ல வசதியாக உள்ளது.

எனவேதான்... வெளிநாட்டில் இருந்ததாக சொல்ல வசதியாக இருக்கும் என்று அந்த அஜ்மல் கசாப் உட்பட இந்த யாசின் பட்கல் வரை எல்லாரையும் இந்தியாவில் எங்காவது ஓரிடத்தில் கைது செய்துவிட்டு... நேப்பாள் பார்டரில் வைத்து கைது பண்ணியதாக சொல்வார்கள் நம்ம இண்டல்லிஜென்ஸ்..!

suvanappiriyan said...

சலாம் சகோ ஆஷிக்!

//இந்தியாவில் இருந்து ஒருவர் நேபாள் போக... பாஸ்போர்ட் விசா எல்லாம் கட்டாயம் இல்லை. அதேபோல... நேபாளில் இருந்து ஒருவர் இந்தியா வர பாஸ்போர்ட் விசா எல்லாம் கட்டாயம் இல்லை. இப்படி ஒரு பித்துக்குளி சட்டம் உள்ளது. //

தெரிந்தே இவர்கள் நேபாள எல்லையை திறந்து விட்டுள்ளார்கள். முஸ்லிம்களின் மீது பழி போட சிறந்த வழி நேபாள எல்லை. இந்த நாட்டை மேலும் சிக்கலில் கொண்டு விட வெளியாட்கள் தேவையில்லை. சிபிஐ, மற்றும் ஆளும் வர்க்கத்தில் உள்ள இந்துத்வா வாதிகளே போதும். நாட்டை ஒரு வழி பண்ணி விடுவார்கள்.

Seeni said...

nantri..

அஜீமும்அற்புதவிளக்கும் said...

அஸ்ஸலாமு அலைக்கும், இந்த மாதிரி கைதுகள் நடக்கிற நேரம் கவனித்திர்களா, மத்திய அரசுக்கு ஏதாவது நெருக்கடி வரும் நேரங்களில் இதைப்போல கைதுகள் நடத்தி மக்களை குழப்புவார்கள்.அதைத்தான் செய்திருக்கிறார்கள் . மேலும் கைது படலம் நடந்தவுடன் அவர்கள் ஒப்புக்கொண்டதாக அதிரகரபூர்வமற்ற செய்திகள் பத்திரிகைகளில் வர தொடங்கும் கைதை நியாயப்படுத்த .

Dr.Anburaj said...

அனைவரும் புரண யோக்கியர்கள்தாம்இஅஜ்மல் கசாப்பிற்கம் மற்றவர்களுக்கும் பாரத ரத்னா பட்டம் வழங்கிவிடுவோம் வாருங்கள். கோரிக்கை வைப்போமா ?
பையனின் யோக்கியதை அறிந்துதான் தந்தை encounter ல் மகன் அதுவரை மரணம் அடையாதது குறித்து மகிழ்ச்சி அடைகிறார். வீட்டைவிட்டு யோக்கியர் உலக சுற்றுப்பயணமா மேறக் கொண்டார்.பயங்கரவாதத்தை ஒழிக்க அறும்பணியாற்றினார் எனில் நோபல் பரிசே வழங்கலாம். யாசின் பட்கலுக்கு. இஸ்லாம் என்றால் சமாதானம் என்றெல்லாவ அர்த்தம்.

suvanappiriyan said...

சகோ சீனி!

//nantri..//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

suvanappiriyan said...

வஅலைக்கும் சலாம் சகோ அஜீம்!

//அஸ்ஸலாமு அலைக்கும், இந்த மாதிரி கைதுகள் நடக்கிற நேரம் கவனித்திர்களா, மத்திய அரசுக்கு ஏதாவது நெருக்கடி வரும் நேரங்களில் இதைப்போல கைதுகள் நடத்தி மக்களை குழப்புவார்கள்.அதைத்தான் செய்திருக்கிறார்கள் . மேலும் கைது படலம் நடந்தவுடன் அவர்கள் ஒப்புக்கொண்டதாக அதிரகரபூர்வமற்ற செய்திகள் பத்திரிகைகளில் வர தொடங்கும் கைதை நியாயப்படுத்த .//

அவர்களின் திட்டமிட்ட சதிகள் ஒவ்வொன்றாக கச்சிதமாக அரங்கேறி வருகிறது. ஆனால் அதிக நாள் பொய்களை வைத்து காலம் தள்ள முடியாது என்பதை அதி விரைவில் உணருவார்கள்.

suvanappiriyan said...

//அனைவரும் புரண யோக்கியர்கள்தாம்இஅஜ்மல் கசாப்பிற்கம் மற்றவர்களுக்கும் பாரத ரத்னா பட்டம் வழங்கிவிடுவோம் வாருங்கள். கோரிக்கை வைப்போமா ?//

அஜ்மல் கசாபும், அப்சல் குரு எனது நாட்டின் மீது தீவிரவாதத்தை அரங்கேற்றியது உண்மையானால் தாராளமாக தூககில் இடப்பட வேண்டியவர்களே! ஆனால் உண்மை வேறு விதமாகவல்லவா உள்ளது. இது பற்றி முன்பே விபரமாக விளக்கியாகி விட்டது.

Unknown said...

மீண்டும் எரியக் காத்திருக்கிறது கோவை !
in சிறுபான்மையினர், நச்சுப் பிரச்சாரம், பயங்கரவாதப் படுகொலைகள், பா.ஜ.க, பார்ப்பன இந்து மதம், போலீசு by வினவு, August 30, 2013

ஒருவர் சொல்லக் கேட்பவர், தன் பங்குக்கு சில கற்பனைகளை சேர்த்து அடுத்தவரிடம் சொல்வார். ஒரு கதை ஏழெட்டு சுற்று வந்தபின் அந்தக் கதையில் வரும் முசுலீம் ஒரு மாபெரும் டைனோசராக உருமாறியிருப்பார்.

பதிவு
மறுமொழிகள்
35

கண்ணீர் அஞ்சலி போஸ்டர்கள் ஒன்றும் புதிதில்லை தான். ஆனால் சமீபத்தில் கோவையில் கண்ட கண்ணீர் அஞ்சலி போஸ்டர்களில் ஒரு வித்தியாசத்தை உணர முடிந்தது. சேலத்தில் செத்துப் போன ஆடிட்டர் ரமேசுக்கு அடிக்கப்பட்ட கண்ணீர் அஞ்சலி போஸ்டர்களில் “இந்து மக்கள் மக்கள் கட்சி மற்றும் ஊர் பொதுமக்கள்” சார்பாக அஞ்சலி செலுத்தப்படுவதாக அச்சிடப்பட்டிருந்தது. புறநகர்ப் பகுதிகளில் ‘கோவைபுதூர் / சின்னியம்பாளையம் / நரசிம்மநாய்க்கன் பாளையம்” என்று அந்தந்த ஊரின் பெயர்களை அச்சிட்டிருந்ததைக் காண முடிந்தது.
கலவரம் - ஆர்எஸ்எஸ்

கலவரத்தைத் தூண்டி விடும் ஆர்எஸ்எஸ் குண்டர்கள்.

கோவை ப்ரிக்காலில் நண்பர் ஒருவரைப் பார்த்து வரச் சென்றிருந்த போது அதே போன்ற கண்ணீர் அஞ்சலிப் போஸ்டர்கள் பெரியநாய்க்கன் பாளையத்திலும் ஒட்டப்பட்டிருப்பதைக் காண நேர்ந்தது.

ப்ரிக்கால் கேட்டிலிருந்து பேருந்து நிறுத்தம் வரும் வழியில் ஆங்காங்கே மோடி, அத்வானி , பாரதமாதா போன்ற பாரதிய ஜனதா தலைவர்களின் படங்களைக் காண முடிந்தது. தேனீருக்காக ஒரு கடையில் நின்ற போது கேட்டோம்.

“அண்ணா, இந்த ஆர்.டி.ஓ ஆபீஸ்ல புரோக்கரா இருந்தாப்லயே ரமேசு, அவரு தானே இங்கே பி.ஜே.பி செயலாளரு?” டீக்கடைக்காரரிடம் மெல்ல பேச்சுக் கொடுத்தேன். எப்படியும் ஊருக்கு நாலைந்து ரமேசும் சுரேசும் இருந்தாக வேண்டும் தானே?

“ராமேசா… அப்பிடி யாருமே இல்லீங்களே. பிஜேபிக்கு இங்கெ யார் தலைவருன்னே தெரிலீங்க. போஸ்டர் மட்டும் ஒட்டிக்கிறாங்க” பதில் சொல்லி விட்டு ‘நீ யார்’ என்பது போலப் பார்த்தார்.

“நமக்கு பழனி பக்கம்ங்க. அப்பப்ப, கோயமுத்தூருக்கு வருவனுங்க. முன்னாடியெல்லா ரமேசு பேர்ல தான் போஸ்டர் போடுவாங்க, இப்ப ஊர் மக்கள்னு போட்ருக்காங்களேன்னு கேட்டனுங்க”

”ஓஹோ… இது சம்பத்து கட்சிக் காரங்க போட்ட போஸ்டருங்க” சம்பத்து கட்சியெனப்பட்டது இந்து மக்கள் கட்சி “இந்த _____ (முசுலீம்) பசங்க சும்மாவே இருக்க மாட்டீங்கறாங்க பாத்தீங்களா.. எல்லா ஊர்லயும் பிஜேபி காரங்கள கொன்னுட்டே இருக்காங்களாமா?” உங்க ஊர் நிலவரம் என்னவென்பதைப் போல பார்த்தார்.

Anonymous said...

//எனது நாட்டின் மீது //

appadiyaa!

suvanappiriyan said...

//appadiyaa! //

ஆடு மாடுகளை மேய்த்துக் கொண்டு கைபர் கணவாய் வழியாக வந்த ஒரு கூட்டம் இந்த நாட்டின் ஒட்டு மொத்த தேசபக்திக்கு அடையாளம் என்ற பொய்யுரை பரப்பப்படுகிறது. வந்தேறிகளே சொந்தம் கொண்டாடும் போது இந்த மண்ணின் மைந்தனான நான் 'எனது நாடு' என்று கூறக் கூடாதா? :-)

ராவணன் said...

அண்ணாச்சி...

வத்தேறிகள் எங்கள் நாட்டை சொந்தம் கொண்டாடுகின்றார்கள்...

அரேபிய அடிமைகள் எங்கள் நாட்டில் குண்டு வைக்கின்றார்கள்....

இத்தாலிய மாபியாக்கள் எங்கள் நாட்டை சூறையாடுகின்றார்கள்...

எங்களுக்கு வேறு போக்கிடம் இல்லை...இந்த மூன்று கும்பலும் ஒழிந்தால்தான் எங்கள் நாடு வளப்படும்.

Anonymous said...

//இந்த மண்ணின் மைந்தனான நான் 'எனது நாடு' என்று கூறக் கூடாதா? :-)//
இந்த மண்ணின் மைந்தன் இதை கூறுவதில் தவறு இல்லை. அரபு அடிமைகள் கூறுவது தான் கேவலமாக இருக்கிறது,

//ஆடு மாடுகளை மேய்த்துக் கொண்டு கைபர் கணவாய் வழியாக வந்த ஒரு கூட்டம்//
அப்படியா!, உங்கள் முன்னோர்கள் தான் அவர்களை இங்கே அழைத்து வந்தார்களா.

Anonymous said...

//இந்த மண்ணின் மைந்தனான நான் 'எனது நாடு' என்று கூறக் கூடாதா? :-)//
இந்த மண்ணின் மைந்தன் இதை கூறுவதில் தவறு இல்லை. அரபு அடிமைகள் கூறுவது தான் கேவலமாக இருக்கிறது,

//ஆடு மாடுகளை மேய்த்துக் கொண்டு கைபர் கணவாய் வழியாக வந்த ஒரு கூட்டம்//
அப்படியா!, உங்கள் முன்னோர்கள் தான் அவர்களை இங்கே அழைத்து வந்தார்களா.

Dr.Anburaj said...

செங“கொடியின் கேள்வி யூப்பரடீஸ் மற்றும் நைல் நதிகள் ஏழாம் வானத்தில் பிறக்கிறது என்பதை பகுத்தறிவு உள்ளவர்களால் எப்படி ஏற்க முடியும்? கங்கை நதி சிவனின் தலையில் இருந்து வருகிறது என்ற இந்து மதத்தினரின் நம்பிக்கைக்கும் இதற்கும் என்ன வேறுபாடு?.

suvanappiriyan said...

//செங“கொடியின் கேள்வி யூப்பரடீஸ் மற்றும் நைல் நதிகள் ஏழாம் வானத்தில் பிறக்கிறது என்பதை பகுத்தறிவு உள்ளவர்களால் எப்படி ஏற்க முடியும்? கங்கை நதி சிவனின் தலையில் இருந்து வருகிறது என்ற இந்து மதத்தினரின் நம்பிக்கைக்கும் இதற்கும் என்ன வேறுபாடு?.//

அப்படி எங்கு சொல்லப்பட்டுள்ளது?