Followers

Sunday, August 11, 2013

ரயில் பயணத்தில் ஒரு பாதிரியாரோடு கலந்துரையாடல்!சகோ எஸ். யூ. அப்துல் ஹை அவர்கள் தன்னுடன் ரயிலில் பயணம் செய்த ஒரு கிறிஸ்தவப் பாதிரியுடன் கிறிஸ்தவ மதம் குறித்து கேட்ட சில சிக்கலான கேள்விகள்

நெல்லை எக்ஸ்ப்ரெஸ் எழும்பூர் நிலையத்திலிருந்து புறப்பட்டது. என்னுடன் அமர்ந்திருந்த பயணக் கூட்டாளிகளைச் சுற்றிலும் பார்த்தேன் யார் யாரோ அறிமுகமில்லாத பல முகங்கள் அதில் என் அருகே அமர்ந்திருந்த ஓர் இளைஞரின் முகம் என்னைக் கவர்ந்தது, அழகான ஷேவ் செய்யப்பட்ட -இளமையும் அமைதியும் தவழும் களையான முகம் . வயது முப்பத்தைந்து இருக்கலாம் அரைக்கை ஷர்ட்டும் பேண்டும் அணிந்திருந்தார். "யாரோ ? நல்ல வசதியான குடும்பத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும். " என்று எண்ணிக்கொண்டேன். புகை வண்டி புறப்பட்ட சிறிது நேரத்துக்கெல்லாம் இரவு சிற்றுண்டியை முடித்துக் கொண்டு அந்த இளைஞர் மேலே அப்பர் பெர்த்தில் படுத்து விட்டார்.

உறங்கும் பயணிகளை தன் கற்பத்தில் சுமந்து கொண்டு உறங்காமல் ஓடிக் கொண்டிருந்தது அந்த நெல்லை விரைவுப் புகை வண்டி.

பல பல என்று விடிந்தபோது விருதுநகரில் அந்த இளைஞர் விழித்தார் கை கால் முகம் கழுவி காப்பியும் அருந்தி விட்டு உடை மாற்றத் தொடங்கினார் . மாற்று உடையில் அவரைக் கண்டதும் ஓரளவு திகைத்துத்தான் போனேன். ஆம் ! அத்துணை நேரமும் அவரை செல்வக் குடியில் பிறந்த ஒரு வாலிபர் எனக் கருதியிருந்த என் முன் அவர் ஒரு கிறிஸ்தவப் பாதிரியாரின் உடையில் காட்சியளித்தார் .

அருகில் அமர்ந்திருந்த அந்தக் கிறிஸ்தவப் பாதிரியாரைப் பார்த்ததும் அவருடன் ஏதாவது பேசவேண்டுமென என் துடுக்கு மனம் துடித்தது. நெல்லை வரை பொழுதும் போகவேண்டுமே !

பேசத் தொடங்கினேன்! சென்னையில் பாதிரியார்களின் மாநாட்டுக்கு சென்று வருவதாகவும் , பாளையம் கோட்டையில் வசிப்பதாகவும் அவர் தம்மைப் பற்றிக்கூறினார் . அவர்களின் மத குருவாக ஆவதற்குரிய கல்வி, பயிற்சி சடங்குகள் முதலியவைகளையும் இனிமையுடன் விவரித்தார் . நான் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் அன்புடனும் கனிவுடனும் விளக்கம்கூறினார். அவரது பேச்சும் பதிலளித்த முறையும் சகஜமாகப் பழகிய விதமும் "இன்னும் ஏதாவது கேள் " என்று என்னைத் தூண்டிக் கொண்டே இருந்தன ! சரி !நாம் என்ன கேட்டாலும் இவர் கோபப் பட மாட்டார் ! என்ற தைரியம் வந்து விட்டது எனக்கு!

" சார் !உங்கள் கிறிஸ்தவ மதத்தைப் பற்றி எனக்கு சில சந்தேகங்கள் ! உங்களிடம் அதைக் கேட்டுநீக்கிக் கொள்ளலாம் என்று நினைக்கிறேன் ! கேட்கலாமா சார் ? நீங்கள் தவறாக நினைக்க வில்லையென்றால் கேட்கிறேன் " என்று ஆரம்பித்தேன் !

"ஏன் ? தாராளமாகக் கேளுங்கள்" எனப் புன் முறுவல் பூத்தார் !

"சார் !எங்களுடைய வேதத்திற்கு "குரான்" என்று பெயர் ! இந்தப் பெயர் அந்த வேதத்திலேயே சொல்லப்பட்டிருக்கிறது ! அதேபோல் உங்களுடைய வேதமாகிய பைபிளில் "பைபிள்" என்று எங்காவது வருகிறதா ?

"இல்லை !" - அவரது பதில் .

"அப்படியானால் உங்கள் வேதத்திற்கு "பைபிள்" என்று எப்படிப் பெயர் வந்தது ? யாரால் சூட்டப் பட்டது ? "

"நல்ல கேள்வி; ஆனால் உடனடியாக என்னால் பதில் சொல்லமுடியவில்லை "

"சார் !வருத்தப் படக் கூடாது ! பதினேழு ஆண்டுகள் நீங்கள் பாதிரியார் ஆவதற்குப் பயிற்சி பெற்றும் இந்தச் சந்தேகத்திற்கு யோசித்துத்தான் பதில் சொல்ல வேண்டுமா ?"

" சார் !இன்னொரு சந்தேகம் ! எங்களுடைய வேதமாகிய குர் ஆன் அரபி மொழியிலேயே அருளப்பட்டது.உங்களுடைய பைபிளை எந்த மொழியில் இயேசு கூறினார் ?"

"ஹிப்ரூ மொழியில்"

" சரி !நாங்கள் இன்ஜீல் வேதம் சுர்யானி மொழியில் அருளப்பட்டதாக நம்புகிறோம் ! ஆனால் அந்த மொழி உங்களுக்கு தெரியுமா ?"

"தெரியாது !"

"அப்படியானால் நீங்கள் எந்த மொழியில் உங்கள் பைபிளை ஓதுகிறீர்கள் ?"

"ஆங்கிலத்திலும் தமிழிலும் , பிற மொழிகளிலும் "

"எங்கள் குர்ஆனை எடுத்துக் கொள்ளுங்கள் ! அது எந்த அரபு மொழியில் அருளப்பட்டதோ அதே மொழியில்ஒரு புள்ளியும் மாறாமல் இன்றளவும் உயிருடன் இருக்கிறது ! எங்களில் சின்னஞ் சிறு வயதினரும் அதை ஓதத் தெரிந்திருக்கின்றனர் ஆனால் உங்களுடைய வேதமாகிய பைபிளோ எந்தமொழியில் இயற்றப் பட்டதோ அந்த ஒரிஜினல் மொழியில் இன்று இல்லை என்று நீங்கள்ஒப்புக் கொள்கிறீர்கள். இன்று உங்களிடம் இருப்பதெல்லாம் வெறும் மொழிபெயர்ப்புக்கள்மட்டுமே !"

"எந்த மொழியாக இருந்தாலும் அந்தந்த மொழிக்கென்று சில தனித் தன்மைகள் இருக்கும் ! ஆங்கிலமோ , தமிழோ அரபியோ எதுவாக இருந்தாலும் சரிதான் ! ஒரு மொழியிலுள்ள வேதத்தையோ , இலக்கியங்களையோ எவ்வளவுதான் திறமையுடன் பிற மொழிகளில் பெயர்த்தாலும் மூல நூலின் சாறை யதார்த்தத்தை பிற மொழிகளில் அப்படியே கொண்டு வந்திடமுடியாது ! எப்படியும் சிறிது கூடவோ குறையவோ தான் மொழி பெயர்க்க முடியும் இல்லையா ? "

"ஆம்....உண்மைதான்!"

"அப்படியானால் உங்களுடைய பைபிள் மூல மொழியில் இல்லை என்பதால் அது தன் ஒரிஜினாலிட்டியை இழந்துவிட்டது ! இப்போது உங்களுடைய கையில் இருக்கும் பைபிள் "ஒரிஜினல்" அல்ல என்று நான் சொன்னால் உங்களால் அதை எப்படி மறுக்கமுடியும் ?"

"..........................." (பதில் இல்லை )

"இரவா வரம்பெற்ற உங்கள் இயேசுவின் வேத மொழி இறந்து விட்டது என்று சொல்வது உங்கள் வேதத்துக்கும் உங்கள் மதத்துக்கும் பெருமையா ? உங்கள் பைபிள் எப்படி உயிருள்ளதாக இருக்கமுடியும் ?

"................................."(பதில் இல்லை)

சிறிது நேர மௌன இடைவெளி. எங்களுடன் அதே பெட்டியில் பயணம் செய்த மற்றவர்கள் அனைவரும் இந்து நண்பர்கள் எங்களது உரையாடலை ஆர்வத்துடன் கவனித்துக் கொண்டிருந்தனர் !

மீண்டும் தொடர்ந்தேன்!

"சார் ! இன்னும்ஒரு சந்தேகம் ! என்னுடைய தகப்பனாரை ஒருவன் துப்பாக்கியால் சுட்டுக் கொன்று விட்டான் என்று வைத்துக் கொள்வோம் .அந்தக் கொலைகாரனை மட்டுமல்ல அவன் பயன்படுத்திய துப்பாக்கியை எப்போது பார்த்தாலும் எனக்கு என் தந்தையின் நினைவும் , இந்தத் துப்பாக்கியால் அல்லவா என் தந்தை கொல்லப்பட்டார் என்றஆத்திரமும்தான் எனக்கு ஏற்படும் இல்லையா ?"

"துப்பாக்கியைப் பார்க்கும் போதெல்லாம் என் தந்தையைக் கொன்ற கருவி என்ற காரணத்தால் அவைகளின் மீதுவெறுப்புதான் ஏற்படுமே தவிர "ஆஹா ! என் தந்தையைக் கொன்ற துப்பாக்கியே வா ! என் கண்ணே! " என்று அதன் மீது பிரியமோ வாஞ்சையோ ஏற்படுமா ?ஏற்படாதே ! ஏனெனில் சராசரி மனித இயல்பே அதுதான் !கொலைக் கருவிகள் மீது மனிதனுக்கு நேசம் ஏற்பட எந்த நியாயமும் இல்லை . அல்லவா ?"

"ஆம் !சொல்லுங்கள் "

" ஆனால்உங்கள் ஏசுவைக் கொன்ற கொலைக் கருவி சிலுவை ! அதில் அறைந்து தான் கொன்றார்கள் என்றுநீங்கள் சாதிக்கிறீர்கள் ! அப்படியானால் உங்களுடைய பிதா -மகன்-பரிசுத்த ஆவியான கடவுளையே கொலை செய்யக்காரணமான அந்தச் சிலுவையின் மீது உங்களுக்கு வெருப்பல்லவா ஏற்படவேண்டும் ? மாறாக அதன் மீது அன்பும் பக்தியும் கொள்கிறீர்களே !எப்படி ? தமது குருநாதரான கடவுளை கடவுளின் குமாரனை கொலைசெய்த கொலைக் கருவியான

சிலுவையின் மீதுபிரியம் கொள்ள உங்களுக்கு எப்படி மனம் வருகிறது ?இதுமனித இயல்புக்கே முரண் அல்லவா ?"

"அது மட்டுமல்ல! சாதாரணமாக கொலைக் கருவி யார் கையில் இருக்கிறதோ அவன்தான் கொலைகாரனாய் இருக்கமுடியும் ! அல்லது அவனுக்கும் கொலைக்கும் எப்படியேனும் ஒரு தொடர்பு இருக்க வேண்டும் . இல்லையா ? சாதரணமாக இந்த முடிவுக்கே எல்லோரும் வருவர் !"

"ஆனால் கிரிஸ்துவர்கலாகிய நீங்கள் உங்கள் இயேசு பெருமானை கொலை செய்த ஆயுதத்தை கையிலும் கழுத்திலும் மாட்டிக் கொண்டு போற்று கிறீர்களே ! இதைப் பார்க்கும் எந்த மனிதனுக்கும் ஒருவேளை இயேசுவைநீங்கள் தான் கொலை செய்தீர்களோ என்ற சந்தேகம் வராதா ?"

"இயேசுகிருஸ்துவைசிலுவையில் அறைந்துகொன்ற யூதர்களுக்கு வேண்டுமானால் சிலுவை புனிதச் சின்னமாக விளங்கலாமே தவிர கிருஸ்துவர்கலாகிய உங்களுக்கு எப்படி அது புனிதமாக இருக்க முடியும்? "

"......................................" (பதில் இல்லை)

" சார்நான் என் மனதில் எழுந்த சில சந்தேகங்களைத்தான் கேட்டேன் ! நீங்களோ மௌனம் சாதிக்கிறீர்கள் ! ஆரம்பத்தில் இருந்த ஆர்வம் உங்களிடம் மறைந்து விட்டது போல் தெரிகிறது ! எனது கேள்விகளால் உங்களுக்கு மன வருத்தம் ஏற்பட்டிருக்குமானால் நான்இனி கேட்கவில்லை ! சரியா சார் ?"

"இல்லை; வருத்தம் இல்லை ! ஆனால் எங்கள் கிருஸ்த்துவமதத்தைப் பற்றி ஒரு முஸ்லிம் எப்படியெல்லாம் கருதுகிறார் எனபது குறித்து நேரடியாகஅறிந்து கொள்ள இந்த உரையாடல் ஒரு வாய்ப்பு ! அதற்காக ரொம்ப தேங்க்ஸ் ! நீங்கள்கேட்ட கேள்விகள் எனது சிந்தனையைத் தட்டி எழுப்பியிருக்கிறது ! அதற்காகவும் நான் உங்களுக்கு நன்றிசொல்லவேண்டும் ! "

பாதிரியாரான அந்தரயில் நண்பர் இப்படிக் கூறி முடிப்பதற்கும் ரயில் நெல்லை சந்திப்பை நெருங்குவதற்கும் சரியாக இருந்தது, கைலாகுகொடுத்தபடி இருவரும் விடைபெற்றோம்.

(சிலேடைக் கவிஞர் சிராஜ்அப்துல் ஹை -என்ற நூலிலிருந்து பீ. எம் கமால், கடையநல்லூர்)40 comments:

சுவனப் பிரியன் said...

திரு க்ருஷணகுமார்!

நலமே! நீங்கள் நலமா? வாழ்த்துக்கு நன்றி!

//ஏசு என்ற நபர் சரித்ரத்தில் இருந்ததில்லை என்ற விஷயம் திண்ணை தளத்தில் ஏற்கனவே விவாதிக்கப்பட்டுள்ளது.//

ஒரு இஸ்லாமியன் என்ற வகையில் ஏசு வாழ்ந்து மரித்ததை ஐயம் திரிபுற நம்புகிறேன். அவருக்கு வேதமும் அருளப்பட்டது. அவரும் ஏக இறைவனையே உபதேசித்தார். அதையும் பைபிளைக் கொண்டே நிரூபிக்க முடியும்.

“அப்போது நீ பார்வோனோடே சொல்ல வேண்டியது என்னவென்றால் “இஸ்ரவேல் என்னுடைய குமாரன்; என் சேஷ்ட புத்திரன். எனக்கு ஆராதனை செய்யும்படி என் குமாரனை அனுப்பி விடு என்று கட்டளையிடுகிறேன். அவனை விட மாட்டேன் என்பாயாகில் நான் உன்னுடைய குமாரனை உன் சேஷ்டபுத்திரனைச் சங்கரிப்பேன் என்று கர்த்தர் சொன்னார் என்று சொல்” என்றார்.” – (யாத்திராகமம் 4:22,23)

“இஸ்ரவேலுக்கு நான் பிதாவாயிருக்கிறேன், எப்பிராயீம் என் சேஷ்ட புத்திரனாயிருக்கிறான்.” – (எரேமியா 31:9)

இஸ்ரவேலை இறைவனின குமாரர் எனக் கூறும் இவ்வசனத்தில் கர்த்தரே இவ்வாறு கூறியதாகத் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. எனவே இயேசுவை விட இஸ்ரவேலர் தாம் கர்த்தரின் குமாரர் எனக் குறிப்பிடப்பட அதிகம் தகுதி பெறுகிறார். இயேசுவை கர்த்தரின் மகன் என்று நம்பும் கிறித்தவ நண்பர்கள் இஸ்ரவேலையும் கடவுளின் மகன் என்று ஏன் நம்புவதில்லை? பைபிளில் கூறப்படுவதை அவர்கள் நிராகரிக்கலாமா? என்பதைச் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளனர்.

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

மாஷாஅல்லாஹ்...

அதிரடியான பதிவு சகோ..!
பகிர்வுக்கு மிக்க நன்றி..!

அறிவுப்பூர்வமான அற்புத கேள்விகளால் கலக்கி இருக்கிறார்... சகோ எஸ். யூ. அப்துல் ஹை.

அதிலும் அந்த "சிலுவை = கொலை ஆயுதம்" மேட்டர்... நான் இதுவரை இந்த கோணத்தில் என்றுமே சிந்தித்ததே இல்லை. எனக்கு இது முற்றிலும் புத்தம் புதிய விஷயம்..!

சுவனப் பிரியன் said...

சலாம் சகோ ஆஷிக்!

நலமா! நீண்ட நாட்களுக்குப் பிறகு உங்களை எல்லாம் சந்திப்பதில் மகிழ்ச்சி.

//அதிலும் அந்த "சிலுவை = கொலை ஆயுதம்" மேட்டர்... நான் இதுவரை இந்த கோணத்தில் என்றுமே சிந்தித்ததே இல்லை. எனக்கு இது முற்றிலும் புத்தம் புதிய விஷயம்..!//

எனக்கும் இது முற்றிலும் புதிய விஷயமே! வருகைக்கும் கருத்தைப் பதிந்தமைக்கும் நன்றி!

faizeejamali said...

சலாம் சகோ அருமயான பதிவு

சுவனப் பிரியன் said...

சகோ ஃபைஜி ஜமாலி!

//சலாம் சகோ அருமயான பதிவு //

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

Dr.Anburaj said...

தேவையற்ற வீண்விவாதம். இயேசு தன்னை சிலுவையில் அறைந்து கொடுமைப்படுத்திய மக்களுக்காக பிதாவிடம் அல்லாவிடம் ” பிதாவே இவர்களை மன்னியும்.தாங்கள் செய்வது என்னவென்று அறிகிலார் ” என்றுப் பிரார்த்தித்தார். இந்த ஒரு அற்புதமான பிரார்த்தனைக்கு அரபிநாடுகள் அரபி இலக்கியங்கள் அனைத்தும் ஈடுஆகாது.மேற்படி கிறிஸ்தவ மத போதனர் மனதில் மத துவேசத்தை தங்களின் அகப்பாவமான செய்கைகளினால் தாங்கள் விதைத்திருக்கக்கூடும். அவர் isakoran alisina www.jihad போன்ற வலைதளங்களைப்படித்திருந்தால் தங்களையும் மடக்கிக் கேள்வி கேட்டிருப்பார். ஒரு அப்பாவியை சங்கடப்படுத்துவது நல்ல பண்பாடு அல்ல. ஆணவம்.அகம்பாவம்.

Dr.Anburaj said...

ஏசு கன்னிக்கு பிறந்தாரா இல்லையா என்பதும் சிலுவையில் அறையப்பட்டாரா இல்லையா, இயேசுவின் இரத்தம் பாவத்தைப்போக்குமா போக்காதா, உலக மக்களின் பாவத்துக்காக இயேசு சிலுவையில் அறையப்பட்டாரா இல்லையா , மீண்டும் உயர்த்தெடுந்தாரா இல்லையா என்பதெல்லாம் முக்கியம் அல்ல. இந்துவாகிய என்னை கவர்ந்த ஒரே வசனம் ” பிதாவே இவர்களை மன்னியும் ....... என்பதுதான். எலியா என்ற தீர்க்கதரிசி வந்தபின் கிறிஸ்து வருவார் என்ற நம்பிக்கையில் வாழ்ந்த யுத மக்கள் இயேசு தன்னை கிறிஸ்து என்றும் யோவான் என்பவரை எலியா என்று கூறியதை நிராகரித்தனர். யோவான் எலியா அல்ல எனவே ஏசு ,கிறிஸ்து அல்ல. தன்னை கிறிஸ்து என்று பொய்யாகச் சொன்னதால் வேதப்புரட்டன் என்று குற்றப்பத்திரிகை அளித்து ஏசுவை சிலுவையில் அடித்தனர். யுதர்களுக்கான கிறிஸ்து -இறைதூதர் இன்றும்பிறக்கவில்லை என்பது இன்றும் யுத மக்களின் விசுவாசம். இயேசுவும் புறசாதியினர் வீடுகளுக்குச் செல்லாதீர்கள். இஸ்ரவேலர் வீடுகளுக்கு போங்கள் என்று கூறியிருப்பது நினைத்துப்பார்க்கத்தக்கது.
-----------------------------
அரேபிய மதம் மட்டுமே அரேபிய கலாச்சாரம்தான் அல்லாவின் இறையவனின் கலாச்சாரம் என்று இறுமாந்து பேசுகின்றது. மகம்மது நமது அரேபிய கலாச்சாரத்தை அவர அறிந்த வகையில் நவீனப்படுத்தினார் என்று சுருக்கமாகச் சொல்லலாம். ஒழுக்கம் பணபாடு நேர்மை மனித நேயம் போன்றவையே ஒரு மனிதனுக்கு இறைநேசர் என்ற அந்தஸ்தை வழங்கும். அரபிப் பெயர், அரபி உடை,தாடி, அரபித்திருமண முறைகள், அரபி சொத்துரிமைச்சட்டம், கிரிமினல் சட்டங்கள், அரேபியகலாச்சார தலாக் அரபு கட்டடக்கலை, அரேபியர்கள் போல் வழிபாடு போன்ற வெளி தோற்றங்களினால் அல்லாவை ஏமாற்ற முடியாது. இதுபோன்ற வெளிவேசங்களுக்கு அல்லா மதிப்பளிப்பார் என்று அரேபிய புத்தகங்கள் சொலவது தவறு.

கிறிஸ்துவின் ஊழியன் said...

//அதிலும் அந்த "சிலுவை = கொலை ஆயுதம்" மேட்டர்... நான் இதுவரை இந்த கோணத்தில் என்றுமே சிந்தித்ததே இல்லை. எனக்கு இது முற்றிலும் புத்தம் புதிய விஷயம்..!//
//எனக்கும் இது முற்றிலும் புதிய விஷயமே! வருகைக்கும் கருத்தைப் பதிந்தமைக்கும் நன்றி!//

நண்பர் ஆசிக், சுவனப்பிரியன் அவர்களுக்கு,
ஆம், உங்களுக்கு இது முற்றிலும் புதிய விசயம் தான். சிலுவைக்கு கிறிஸ்தவர்களிடன் விளங்கும் மதிப்பு அதனால் தான் தங்களுக்கு புரியவில்லை, சரி தான் சகோஸ், இயேசு நாதரை கொலை செய்ய பயன்படுத்தப்பட்ட கருவிதான் சிலுவை. சிலுவையை கண்டால் கிறிஸ்தவர்களுக்கு கோபம் தான் வர வேண்டும். ஆனால் ஏன் நேசிக்கிறார்கள் என்பது குறித்து தங்களுக்கு புரிய வாய்ப்பில்லை :-) சிலுவையில் இயேசு பாவங்களை சுமந்தார், நமக்காக இரத்தஞ்சிந்தி மரித்தார் என்பது எங்களின் விசுவாசம். சிலுவையை காணும் போது அந்த கொலைகாரர்களை செய்த கொடுமைகளை விட இயேசு நாதரிடம் இருந்து வெளிப்பட்ட கல்வாரி அன்பே நினைவிற்கு வருகிறது. சிலுவையை கண்டால் ஏற்பட வேண்டிய கோபத்தை விட அந்த அன்பு அதிகமாக எங்களது இதயத்தை துளைக்கிறது...

//ஆனால் கிரிஸ்துவர்கலாகிய நீங்கள் உங்கள் இயேசு பெருமானை கொலை செய்த ஆயுதத்தை கையிலும் கழுத்திலும் மாட்டிக் கொண்டு போற்றுகிறீர்களே ! இதைப் பார்க்கும் எந்த மனிதனுக்கும் ஒருவேளை இயேசுவை நீங்கள் தான் கொலை செய்தீர்களோ என்ற சந்தேகம் வராதா?//
சந்தேகம் தேவையில்லை. அவரை கொன்றது நாம்தான் (நாங்கள் தான் என்றே வைத்து கொள்ளுங்கள்).... நமது அக்கிரமங்களாக அவர் பலியானார் என்பது எங்கள் நம்பிக்கை. இயேசு கிறிஸ்துவின் சிலுவை மரணத்தில் நம்பிக்கை இல்லாத உங்களுக்கு இது எப்படி புரியும்!

//அப்படியானால் உங்கள் வேதத்திற்கு "பைபிள்" என்று எப்படிப் பெயர் வந்தது ? யாரால் சூட்டப்பட்டது ?//

சகோ சுவனம்,
பைபிள் என்பது ஒரு கிரேக்க வார்த்தை. அதை தமிழ் பைபிளில் தேடினால் எப்படி கிட்டும் சொல்லுங்கள்! பைபிள் என்பதற்கு 'நூல்' என்பது பொருள். அதனால் தான் 'ஹோலி பைபிள்' (புனிதநூல்) என்கிறோம். பைபிள் எபிரேயம், கிரேக்கம், அரமாயிக் என மூன்று மொழிகளை மூலபாஷைகளாக கொண்டு பகுதிவாரியாக எழுதிமுடிக்கப்பட்டது. கிரேக்க பகுதிகளில் 'வேதம்', 'நூல்', 'ஆகமம்', 'புத்தகம்' போன்ற சொற்கள் 'பைபிள்' என்ற கிரேக்க வார்த்தையால் எழுதப்பட்டுள்ளன. அதனால் தான் பைபிள் என்ற சொல் வழக்கத்திற்கு வந்தது. காலப்போக்கில் உங்களை போன்று விளக்கம் அறியாதவர்கள் 'பைபிள்' என்பதை ஒரு பெயராக எண்ணிவிட்டனர். 'பைபிள்' என்ற வார்த்தை பைபிளேலேயே உள்ளது. தெரிந்துகொள்ளுங்கள். குரான் ஏன் கிறிஸ்தவர்களையும் யூதர்களையும் 'வேதத்தையுடையோரே' (People of the book) என்கிறது? அக்கால முஸ்லிம்களுக்கு தெரிந்தது உங்களுக்கு தெரியவில்லையா? இது அந்த பாதிரியாருக்கு தெரியாததுதான் இன்னும் வருத்தம்.

//அப்படியானால் உங்களுடைய பைபிள் மூல மொழியில் இல்லை என்பதால் அது தன் ஒரிஜினாலிட்டியை இழந்துவிட்டது ! இப்போது உங்களுடைய கையில் இருக்கும் பைபிள் "ஒரிஜினல்" அல்ல என்று நான் சொன்னால் உங்களால் அதை எப்படி மறுக்கமுடியும் ?//
குழப்பியுள்ளீர்கள். ஐயா, பைபிளின் முதல் பிரதிகள் தான் தொலைந்துவிட்டன. அதற்கு பதிலாக மூலமொழி பிரதிகளே இல்லை என்றுள்ளீர்கள். எபிரேய மொழி, கிரேக்க மொழி பிரதிகள் எல்லாம் இன்றும் உள்ளன. சரி, குரானை சிறுவர்கள் கூட அரபியிலேயே ஓதும் அளவிற்கு கற்றிருக்கிறார்கள். வாழ்த்துக்கள். எங்களிடம் உள்ளது பைபிளின் தமிழ் மொழிப்பெயர்ப்பு தான். மூல மொழிகளான எபிரேயமோ, கிரேக்கமோ எங்களுக்கு தெரியாது. எபிரேய பைபிளையோ, கிரேக்க பைபிளையோ எங்கள் கைகளில் கொடுத்தாலும் எங்களுக்கு படிக்கத்தெரியாது. சரி தான். ஆனால் அப்படியே மனனம் செய்து ஒப்பிப்பதற்கு இறைவேதம் ஒன்றும் பரிட்சை புத்தகம் அல்ல. மூல மொழிகளை உட்கார்ந்து மனப்பாடம் செய்துவிட்டால் மட்டும் பெரும் சாதனை அல்ல. இறைவேதம் வாழ்க்கைக்கு வழிகாட்டும் ஒரு நன்னூல். அதன் கருத்துக்களை எந்த மொழியிலும் எடுத்துக்கூறலாம். எபிரேயத்தில் படிக்கிறானோ, தமிழில் படிக்கிறானோ அது முக்கியம் இல்லை. அதனை படித்து அதன்படி வாழ்க்கையை வாழ வேண்டியது தான் முக்கியம். ஒரு குறுகிய வட்டத்தை விட்டு வாங்க.

கிறிஸ்துவின் ஊழியன் said...

//இஸ்ரவேலை இறைவனின குமாரர் எனக் கூறும் இவ்வசனத்தில் கர்த்தரே இவ்வாறு கூறியதாகத் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. எனவே இயேசுவை விட இஸ்ரவேலர் தாம் கர்த்தரின் குமாரர் எனக் குறிப்பிடப்பட அதிகம் தகுதி பெறுகிறார். இயேசுவை கர்த்தரின் மகன் என்று நம்பும் கிறித்தவ நண்பர்கள் இஸ்ரவேலையும் கடவுளின் மகன் என்று ஏன் நம்புவதில்லை? பைபிளில் கூறப்படுவதை அவர்கள் நிராகரிக்கலாமா? என்பதைச் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளனர்//

சொல்கிறோம். இஸ்ரவேலர் மட்டும் அல்ல. நானும், நீங்களும் கூட இறைவனின் புத்திரர்கள் தான். இஸ்ரவேலை மட்டும் அல்ல, தாவீது, தேவதூதர்களை கூட கர்த்தர் தன் புத்திரர்கள் என்று தான் சொல்லுகிறார். இவையெல்லாம் அன்பின் நிமித்தமாக சொல்லப்பட்டவை. ஆனால், இவை அனைத்திலும் இயேசு நாதருக்கும் கர்த்தருக்கும் உள்ள உறவு வேறுபட்டது.

"தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்" - யோவான் 3:16

இயேசு நாதரை தவிர வேறொருவருக்கும் 'ஒரே பேறான குமாரன்' என்ற வார்த்தையை பைபிளில் காணமுடியாது.

//ஏசு என்ற நபர் சரித்ரத்தில் இருந்ததில்லை என்ற விஷயம் திண்ணை தளத்தில் ஏற்கனவே விவாதிக்கப்பட்டுள்ளது.//

இயேசு என்ற நபர் சரித்திரத்தில் வாழ்ந்தாரா இல்லையா என்பது உங்களுக்கே தெரியும்.... தொடருங்கள் :-)

//ஒரு இஸ்லாமியன் என்ற வகையில் ஏசு வாழ்ந்து மரித்ததை ஐயம் திரிபுற நம்புகிறேன். அவருக்கு வேதமும் அருளப்பட்டது. அவரும் ஏக இறைவனையே உபதேசித்தார். அதையும் பைபிளைக் கொண்டே நிரூபிக்க முடியும்//

அப்படியா? ஐயா, நானும் குர்ஆனை படித்துகொண்டுதான் இருக்கிறேன். இதுவரை நான் சந்தித்த அனைத்து முஸ்லிம்களுமே இயேசு சிலுவையில் அறையப்படவுமில்லை, உயிர்த்தெலவுமில்லை, அல்லாவால் பரலோகத்திற்கு உயிருடன் எடுத்துக் கொள்ளப்பட்டார், மீண்டும் இவ்வுலகத்திற்கு இறுதி நாளின் போது வருவார், அக்கிரமத்தை ஒழிப்பார் என்று தான் கூறுகிறார்கள். நீங்கள் தான் 'மரித்தார்' என்று ஒரு வார்த்தையில் உண்மையை ஒப்பு கொண்டிருக்கிறீர்கள். இது எதுக்கு? கிறிஸ்தவர்களை போல நீங்களும் இயேசு இறந்தார் என நம்புகிறீர்களா? 'ஐயம் திரிபுற' நம்பும் நீங்கள் இயேசு நாதர் இறுதி நாளில் பூமியின் மேல் வருவார் என்று மட்டும் ஏன் பெருமளவாக பிறரிடம் கூறுவதில்லை? சொல்லலாமா? 'ஏசு வாழ்ந்தார், மரித்தார், வேதத்தை போதித்தார்' என்பதை ஒப்புகொள்வதை போல ஒரு நயவஞ்சக வேலையை பார்த்துள்ளீர்கள். பைபிளை பற்றியோ, குரானை பற்றியோ தெரியாத நபர் இந்த வரியை படித்தால் என்ன நினைப்பார்? இயேசுவும் பிறரை போல வாழ்ந்து இறந்துள்ளார், வேதத்தை அருளியுள்ளார் என்று தான் நினைப்பார். கிறிஸ்துவிற்கு இறுதி நாளில் ஒரு மிகப்பெரிய கடமையுண்டு என்பது அவருக்கு எப்படி தெரியவரும்? 'இறந்தார்' என்று ஒரு முற்றுபுள்ளி வைத்தது போல அவரது மேல் கொண்ட உங்கள் நம்பிக்கையை முடித்துள்ளீர்கள். இறந்தார் என நீங்கள் தெளிவுற நம்பினாலும் பரவாயில்லை. அதுவும் கிடையாது! பின் எதற்கு உங்களுக்கு இந்த வேண்டாத வேலை? இயேசு நாதரை பற்றி அறிய ஒரு கிறிஸ்தவரை அணுகிவிட்டால் உங்கள் அழைப்புப்பணி பாதிக்கும் என்பதற்காகவா?

கிறிஸ்துவின் ஊழியன் said...

ஐயா உங்களிடம் ஒரு கேள்வியை கேட்க விரும்புகிறேன். இது வழக்கமாக உங்களது தளத்தில் பல நண்பர்கள் கேட்டவை தான். நீங்கள் பதில் அளித்துள்ளீர்களா என தெரியவில்லை. பரவாயில்லை. ஒருமுறை கேட்பதால் ஒன்றும் நேரப்போவதில்லை.

ஒரு எஜமான், வேலைக்காரன் இருக்கின்றனர் என வைத்துகொள்ளுங்கள். இந்த வேலைக்காரனிடம் எஜமான் ஒரு வேலையை ஒப்படைக்கிறார். அதற்கு அந்த வேலைக்காரன் 'நான் அந்த வேலையை செய்தமுடித்தப்பின் என் கூலி என்ன?' என்கிறான். அதற்கு எஜமான் "நீ மட்டும் நான் சொன்ன வேலையை கச்சிதமாக செய்து முடித்துவிட்டால் உனக்கு ஒரு அழகிய சோலையை தருவேன், அதில் அழகுமிகுந்த கன்னிப்பெண்கள் இருக்கின்றனர், தங்ககட்டில் பட்டுமெத்தை எல்லாம் விரித்து வைக்கப்பட்டுள்ளது, அப்பப்ப உனக்கு இறைச்சி, மது ஊற்றிகொடுக்க அழகான பசங்க வருவாங்க. இது தான் உனக்கு நான் தரப்போகும் கூலி" என்கிறார். அந்த வேலைக்காரனும் சொன்ன வேலையை சரியாக செய்துவிட்டு அவரிடம் வரான். உடனே அந்த எஜமான் சொன்னபடி அவனுக்கு எல்லா ஏற்பாடும் செஞ்சு கொடுத்து சந்தோசமா இருக்க சொல்லிட்டு போய்ட்டாரு. இது செஞ்ச அந்த எஜமானர என்ன சொல்லுவாங்க?

இதுக்கு மேல எதுவும் கூற விரும்புல. கொஞ்சம் யோசிங்க. காமம் என்பது இனப்பெருக்கத்திற்காக இறைவன் உயிர்களுக்கு அளித்த ஒரு உணர்வு. இனப்பெருக்கம் பரலோகில் இல்லை. அங்கு இதற்கான தேவை என்ன? கட்டில் தான் சொர்கம் என சொன்னவரை நாங்கள் எப்படி நம்ப முடியும்? கறைப்படுத்தப்பட்ட வேதம் என தூசிக்கிறீர்களே, அந்த வேதம் என்ன சொல்லுதுனு கொஞ்சம் கீழ பாருங்க...

"உங்களுக்கு மறைநூலும் தெரியாது; கடவுளின் வல்லமையும் தெரியாது. எனவேதான் தவறான கருத்தைக் கொண்டிருக்கிறீர்கள். ஏனெனில் உயிர்த்தெழுந்தவர்களுள் யாரும் திருமணம் செய்து கொள்வதில்லை; அவர்கள் விண்ணகத் தூதரைப்போல் இருப்பார்கள்" - இயேசு (மத்தேயு 22:29,30)

ஒரே கடவுள்ட இருந்த வந்த தூதர்கள் தான் இயேசு நாதரும் முகமது அவர்களும்னு சொல்றீங்க. சரி. பின்ன ஏன் இரண்டு பேரும் மாற்றி சொல்றாங்க? ஒருத்தர் பரலோகத்தில் திருமணமே கிடையாதுனு சொல்றார், இன்னொருத்தர் அப்படியே மாற்றி ஒருத்தருக்கு 72னு சொல்ராரு... யார நாங்க நம்பறது?

இந்த கம்மெண்டெல்லாம் வெளியிட மாட்டீங்க. பிற மார்க்கங்கள இகழ்ந்து நீங்க எழுதற கட்டுரைக்கு யாராவது வாழ்த்து சொன்னா அத மட்டும் போடுவீங்க. நான் ஏற்கனவே உங்க தளத்தில கம்மண்டுகள் கொடுத்திருக்கேன். சிலவற்றை நீங்கள் வெளியிடவில்லை. ஏன் உங்களுக்கு இந்த வேலை? இல்லாட்டி பதில் மட்டும் கொடுக்கிறீங்க. ஏன் கம்மண்ட போட்டுட்டு பதில் கொடுத்தாதான் என்ன? கம்மண்ட்ல எதாவது தரக்குறைவா இருக்கா? நீங்க நம்பற வேத வசனங்கள பற்றி தான சந்தேகம் கேக்றோம்! அத வெளியிடறதுல என்ன உங்களுக்கு பிரட்சன?

Micheal Antony said...

//. இயேசுவை கர்த்தரின் மகன் என்று நம்பும் கிறித்தவ நண்பர்கள் இஸ்ரவேலையும் கடவுளின் மகன் என்று ஏன் நம்புவதில்லை?//
நம்புகிறோம் சுவனப்ரியரே, இஸ்ரவேலும் கடவுளின் புத்திரன் தான், எந்த அரபு கோமாளிகளாலும் அதை ஏதும் செய்ய முடியாது. உலக இறுதி நாளில் இஸ்ரவேல் புத்திரன் தான் நிலைத்து இருக்க போகிறான். அரபு திருட்டு கோமாளி புத்திரர்கள் இருந்த இடம் தெரியாமல் போக போகிறார்கள்.

Micheal Antony said...

//அப்படியானால் உங்களுடைய பைபிள் மூல மொழியில் இல்லை என்பதால் அது தன் ஒரிஜினாலிட்டியை இழந்துவிட்டது ! இப்போது உங்களுடைய கையில் இருக்கும் பைபிள் "ஒரிஜினல்" அல்ல என்று நான் சொன்னால் உங்களால் அதை எப்படி மறுக்கமுடியும்//

சுவனப்ரியரே பைபிளில் மனித கரம் பட்டுவிட்டது என்று முகமதுவிடம் ஓதிய அல்லா! அதை காப்பாற்ற முடியாமல் போன தனது கையாலாகத்தனத்தை பற்றி ஏதும் சொல்லவில்லையா. வேதத்தை காப்பாற்ற முடியாத ஒருவர் எப்படி கடவுளாக இருக்க முடியும். வேதம் போச்சு என்று புலம்பும் ஒருவரையா எல்லாம் வல்ல கடவுளாக வணங்கி கொண்டிருக்கிறீர்கள்.

Dr.Anburaj said...

குரானைக்காப்பாற்றுவேன் என்று வீராப்பு பேசும் அல்லாஃ காபிரியேல்என்ற பேய் ஃபையினையோ 1.25 லட்சம் நபிகளுடைய வேதங்களைக் காக்க தவறியது ஏன் ? ஆதம் நபிக்கு அளித்த வேதம் அசல் எங்கே? என்ன மொழி? சிவகாசியில் அச்சடிக்கப்ட்டதா ? Email or Teleprinter மூலம் அல்லா அனுப்பினாரா ? அந்த அசல் எங்குள்ளது ? முகம்மது செத்து 23 வருடங்கள் கழித்துதானே குரான் வெளிவந்தது? எதற்கு 23 வருடம் ?

Dr.Anburaj said...

ஹதைபிய்யா உடன்படிக்கை, துல்காயிதா 6உதுமான் அவர்களே..! நீங்கள் வேண்டுமானால் கஃபாவை வலம் வந்து விட்டுப் போங்கள் என்று சலுகை காட்டினார்கள். ஆனால் உதுமான் (ரலி) அவர்களோ, இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கஃபாவை வலம் வராத வரை நான் வலம் வர மாட்டேன் என்று கூறினார்கள்.

இதனைக் கேட்ட குறைஷித் தலைவர்களுக்கு கோபம் கொப்பளித்துக் கொண்டு வந்தது, இப்பொழுது உதுமான் (ரலி) அவர்களை தங்களது பாதுகாப்பின் கீழ் திரும்பிப் போக முடியாத அளவுக்கு தடுத்து வைத்துக் கொண்டார்கள். உதுமான் (ரலி) அவர்களை தடுத்து வைத்துக் கொண்ட செய்தி, இப்பொழுது உதுமான் (ரலி) அவர்கள் கொல்லப்பட்டு விட்;டார்கள் என்ற வதந்தியாக ஹ{தைபிய்யாவில் இருக்கக் கூடிய முஸ்லிம்களிடம் வந்தடைந்தது.

உதுமான்(ரலி) அவர்கள் கொல்லப்பட்டு விட்டார்கள் என்ற செய்தியைக் கேள்விப்பட்ட இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கடுமையான கோபத்திற்கு ஆளானார்கள். இன்னும் கொலைக்குப் பழிக்குப் பழி எடுக்காமல் விடுவதில்லை என்று சபதம் செய்து கொண்டார்கள். இப்பொழுது, தனது தோழர்கள் அனைவரையும் அழைத்தார்கள். புதிதாக உருவெடுத்துள்ள இந்தப் பிரச்னையில், அனைவரும் உறுதியோடு இருந்து போராடுவோம் என்று அனைவரிடம் பைஅத் என்று சொல்லக் கூடிய சத்தியப் பிரமாணம் பெற்றுக் கொண்டார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ஒரு மரத்தினடியில் நின்று கொள்ள, நபித்தோழர்கள் அனைவரும் ஒருவர் பின் ஒருவராக வந்து இறைத்தூதர் (ஸல்) அவர்களின் கையில் கை வைத்து, சபதம் எடுத்து உறுதிப் பிரமாணம் செய்தார்கள். இந்த உறுதிப் பிரமாணத்தைத் தான் இஸ்லாமிய வரலாறு, பைஅத்துர் ரிழ்வான் என்றழைக்கின்றது.உதுமான் (ரலி) அவர்கள் அங்கே இல்லாத காரணத்தால், அவர்களுக்காக வேண்டி இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தானே பைஅத் எடுத்துக் கொண்டார்கள். தனது கரத்தின் மீது தனது மற்றொரு கரத்தை வைத்து உதுமான் (ரலி) அவர்களுக்காக பைஅத் எடுத்துக் கொண்டார்கள். இந்த பைஅத் நடந்து முடிந்த பின் தான், தமக்குக் கிடைத்த செய்தி தவறான செய்தி என்பதையும், இன்னும் இந்த வருடம் ஹஜ்ஜுச் செய்யாமல் திரும்பி விட்டால், அடுத்த வருடம் தாராளமாக வந்து ஹஜ் செய்து விட்டுப் போகலாம் என்ற நிபந்தனையுடன் கூடிய செய்தியை, சுஹைல் அவர்களிடம் குறைஷிகள் தெரிவித்து அனுப்பி விட்டனர்.

அல்லா E-mail அனுப்ப மறந்தது ஏனே ? தவறான தகவலுக்கு போர் மற்றும் பழிவாங்கலுக்கு சத்தியபிரமாணம் எடுக்கும் வரை அல்லாவும் காபிரியேலும் என்ன செய்து கொண்டிருந்தனர் என்பதை சுவனப்பிரிய்ன விளக்க வேண்டும் ஐயா.

Dr.Anburaj said...

ஆதாம்மை மண்ணிலிருந்து படைத்தாராம் அல்லா. பின் அவனது எலுமபிலிருந்து ஏவாள் நுரைரா-வை படைத்தானாம். அருவரும் அம்மணமாக ப்படைத்தாராம் ஆணையும் பெண்ணையும் படைத்த அல்லாவுக்கு உடையைப் படைக்கத் தெரியவில்லை. தோட்டத்தில் ஞானப்பழம்தரும் கனியை சாப்பிடக் கூடாது என்றாராம். சாத்தானின் போதனையைக் கேட்டு இருவரும் உண்டார்கள். உடனே வாந்தி பேதி தலைசுற்று வரவில்லை.தாங்கள் நிர்வாணிகளாக இருப்பது குறித்து வெட்கப்பட்டு இலை கொடிகள் கொண்டு உடை அணிந்தார்கள். கடவுள் அவர்கள் தோட்டத்தை விட்டு வெளியிற்றி விட்டார். இருவருக்கும் ஆபேல் காயின் என்ற இரு மகன்கள். இதில் காயின் ஆபேலைக் கொன்று விட்டரர். நிலைமை இப்படி இருக்க காயினின் மனைவியார் என்ற கேள்வி எழுகின்றது. அம்ாவா அல்லது சகோதரிகளா ? கடவுள் எவ்வளவு முட்டாள் பாரு்ங்கள். ஒரே நேரத்தில் 100 ஆண்களையும் பெண்களையும் படைத்து விட்டால் மேற்படி சிக்கல் வராமல் செய்திருக்கலாமே? குரானில் உள்ள மேற்படி கதை கட்டுக்கதை. பண்டைய சிந்தனையாளனின் ஒரு அனுமானம். உண்மையல்ல. சுவனப்பிரியனின்பதில் என்ன?

சுவனப் பிரியன் said...

//அல்லா E-mail அனுப்ப மறந்தது ஏனே ? தவறான தகவலுக்கு போர் மற்றும் பழிவாங்கலுக்கு சத்தியபிரமாணம் எடுக்கும் வரை அல்லாவும் காபிரியேலும் என்ன செய்து கொண்டிருந்தனர் என்பதை சுவனப்பிரிய்ன விளக்க வேண்டும் ஐயா. //

பல இறைத் தூதர்கள் கொல்லப்பட்டுள்ளார்கள். ஏசுவையும் அன்றைய மக்கள் கொடுமைப் படுத்தியுள்ளார்கள். முகமது நபியையும் பலர் அடித்தும் இருக்கிறார்கள. மறைவான விஷயங்கள் இறைவன் ஒருவனே அறிந்தவன். எனவே மனிதர் என்ற வகையில் முகமது நபி தவறான செய்தியை நம்பியுள்ளார். இது போன்று இன்னும் பல சம்பவங்களும் உண்டு. இறைவன் தான் நாடும் போதே தனது தூதருக்கு செய்திகளை அறிவிப்பான். பைபிளையும், குர்ஆனையும் நன்றாக ஆராய்ந்தால் இந்த உண்மை உங்களுக்கும் விளங்கும்.

சுவனப் பிரியன் said...

//குரானில் உள்ள மேற்படி கதை கட்டுக்கதை.//

குரங்கிலிருந்து மனிதன் பரிணமித்தான் என்ற ஹாஸ்யத்தை நம்புவதை விட ஒரு ஜோடியிலிருந்து மனிதன் பல்கி பெருகினான் என்பதுதான் எல்லோரும் ஒத்துக் கொள்ளக் கூடிய கருத்தாக உள்ளது. அறிவியலும் இதனை உறுதி செய்கிறது.

Dr.Anburaj said...

எனது கடிதத்தின் கருத்துக்களுக்கு தங்களிடம் பதில் இல்லையோ ? காயினின் மனைவியார் ?பரிணாமம் கருத்துதான் எல்லோராலும் ஏற்கப்பட்டது. படைப்புக் கொள்கையல்ல. படைப்புக் கொள்கை என்பது சரியென்றால் - மனிதனுக்கு முழுமையான கல்வி அறிவு வாழ்ககை வசதிகள் படிப்பு உடை கலாச்சாரம் புத்தகம் மொழி வழிபாடு முறைகள் திருமண முறைகள் கலால் பழக்கங்கள் இப்படி ஒரு வாழ்ககைக்கு தேவையான அனைத்தும் படைத்த அன்றே கடவுளால் வழங்கப்படடு இருக்க வேண்டும். ஆனால் அப்படிஇல்லையே.பல மொழிகள் படிப்படியாக பரிணமித்து முழுமையாகியுள்ளது.அரபி மொழி ஒரு நாளில் முழுமையாக அல்லாவால் படைக்கப்பட்டதா ? எந்த மொழதான் அப்படி படைக்கப்பட்டது ? உடை உணவு போன்றவைகள் கூட படிப்படியாகத்தான் பரிணாமம் ஏற்பட்டுள்ளது. வேத சமய அறிவு கூட முழுமையாக ஒரே நாளில் அளிக்கப்படவில்லை. ஆதமுக்கு என்ன வழிபாடு பாராயாணம் பாட்டுகள் மந்திரங்கள் வழங்கப்பட்டது ? என்ன மொழி வழங்கப்பட்டது. இப்படி மனிதன் தோன்றியபிறகு அனைத்தும் பரிணாமம் அடைந்துள்ளபோது அல்லாவின் பங்கு என்ன ? மனிதன் தன் சொந்த படைப்பாற்றலின் அடிப்படையில்படிப்படியாக trial and error வாழ்ந்து பாரத்து அனுபவப்பட்டு படைப்பாறறல் மூலம் சமயம் விஞ்ஞானம் தொழில்நுட்பம் உடையில் பிரமாண்டமான மாற்றம் வீடு கட்டுதலில் குகைகளில் வசிததது முதல் இன்று 100 மாடி கட்டடங்கள் கட்டுவது வறை அனைத்தும் பரிணமித்துள்ளது. குரங்கிலிருந்து மனிதன் வந்தானா இல்லையா என்பது ஒருபுறம் இருக்கட்டும். மனிதன் காட்டுவாசி என்ற நிலையிலிருந்து இன்றைய வளர்ச்சிக்கு அல்லா எந்த வகையிலும் பங்கேற்க வில்லையே ? மனிதனின் படைப்பாற்றலே மனிதனை வளரச்சி அடைய வைத்துள்ளது ? அலலா எதைப்படைத்தார்.

சுவனப் பிரியன் said...

//காயினின் மனைவியார் ?//

அதை தெரிந்து என்ன ஆகப் போகிறது? அது அவசியமும் இல்லை.

//பரிணாமம் கருத்துதான் எல்லோராலும் ஏற்கப்பட்டது//

யாரால் எப்போது நிரூபிக்கப்பட்டது. பொய்களை பரப்ப வேண்டாம்.

//இப்படி மனிதன் தோன்றியபிறகு அனைத்தும் பரிணாமம் அடைந்துள்ளபோது அல்லாவின் பங்கு என்ன ? //

உலகில் முதல் உயிர் எவ்வாறு உண்டானது?

//மனிதன் காட்டுவாசி என்ற நிலையிலிருந்து இன்றைய வளர்ச்சிக்கு அல்லா எந்த வகையிலும் பங்கேற்க வில்லையே ?//

ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட இறைத் தூதர்களை இறைவன் அனுப்பி படிப்படியாக மனிதப் படைப்பு செம்மைப்படுத்தப்பட்டது. தானாக எதுவும் நடந்து விட வில்லை.

கிறிஸ்துவின் ஊழியன் said...

//எனது கடிதத்தின் கருத்துக்களுக்கு தங்களிடம் பதில் இல்லையோ ? காயினின் மனைவியார் ?//

அன்பு சார், கொஞ்சம் கிடிக்கிப்பிடி போட்டால், பாய் ஆஃப் ஆகிடுவார் :-) யூ டோன்'ட் வொரி... நீங்கதான் கொஞ்சம் அவருக்கு ரெஸ்ட் கொடுங்கலே...

//நிலைமை இப்படி இருக்க காயினின் மனைவியார் என்ற கேள்வி எழுகின்றது. அம்மாவா அல்லது சகோதரிகளா? கடவுள் எவ்வளவு முட்டாள் பாருங்கள். ஒரே நேரத்தில் 100 ஆண்களையும் பெண்களையும் படைத்து விட்டால் மேற்படி சிக்கல் வராமல் செய்திருக்கலாமே? குரானில் உள்ள மேற்படி கதை கட்டுக்கதை. பண்டைய சிந்தனையாளனின் ஒரு அனுமானம். உண்மையல்ல. சுவனப்பிரியனின் பதில் என்ன?//

ஐயா, மேலே உங்களது கம்மண்டுகளை படித்த போது இயேசு கிறிஸ்து ஏதோ ஒரு விதத்தில் உங்கள் மனதை கவர்ந்துள்ளார் என்பதை அறிந்தேன். சந்தோசம். தெரிந்து கொள்ளுங்கள். ஆதாம் - ஏவாள் கதை குரானில் மட்டும் இல்லை, பைபிளிலும் உள்ளது. உங்களது கேள்விகள் உண்மையில் நியாயமானவைகள் தான். அறிவியல் வளர்ந்து வரும் இக்காலத்தில் இது போன்ற கதைகள் நிச்சயமாக ஒருவருக்கு சந்தேகத்தை எழுப்பும். ஆனால்,'விசுவாசம்' என்பது வேறு. பைபிள் இவ்வாறு சொல்கிறது விசுவாசம் என்பது காணப்படாதவைகளின் உறுதியும், நம்பப்படுகிறவைகளின் நிச்சயமுமாய் உள்ளது என்று. இயேசுநாதரை நாம் கண்டதில்லை, பவுலடியார், பேதுரு, யோவான் என யாரையும் நாம் கண்டதில்லை. இருந்தாலும் அவர்களை பற்றி பைபிள் கூறுகின்ற செய்திகளை நாம் மன்னப்பூர்வமாக நம்புகிறோம். அதுதான் விசுவாசம். அதுபோலதான், ஆதாம் - ஏவாள் கதையும். விசுவாசத்தில் மிகுந்த ஒரு கிறிஸ்தவரை கேட்டால் அவர் இப்படி சொல்லுவார் - "பைபிளில் உள்ள செய்திகளோடு அறிவியல் பொருந்தவில்லை என்றால், பைபிளை சந்தேகப்படாதீர்கள், அறிவியலில் தான் ஏதோ பிழை உள்ளது" என்பார். இறைவனின் அன்பை உணர, அவரது வார்த்தைகளில் முதலில் நமக்கு விசுவாசம் வேண்டும்.

அதற்காக, கடவுள் பெயரை சொல்லி என்ன வசனங்களை யார் சொன்னாலும் அப்படியே தலையாட்டி கொண்டு போக வேண்டும் என்று அர்த்தமா? அப்படியில்லை. நீங்கள் இறையன்பை விரும்பியதால் தான் நான் உங்களுக்கு இவைகளையெல்லாம் சொன்னேன். பைபிளை விசுவாசத்தோடு படித்துப்பாருங்கள், சத்தியம் விளங்கும். நீங்கள், இயேசு கிறிஸ்துவை விரும்புவதால் உங்களுக்கு இச்செயதியை சொன்னேனே அன்றி வேறில்லை.

இருந்தாலும் பிறர் பார்வையில் இருந்தும் நாம் விளக்கம் அளிக்க வேண்டும். நிச்சயமாக பிறருக்கு இக்கதை கேள்விகளை எழுப்பும். ஆனால் இன்றைய அறிவியல் பார்வையில் இருந்து பார்த்தால், ஒரே பெண்ணிடம் இருந்தே இன்றுள்ள வெள்ளைக்காரர், ஆப்ரிக்கர், இந்தியர், சீனர் என அனைத்து தரப்பு மக்களும் பெருகி இருக்க வேண்டும் என்று 100% உறுதியாகியுள்ளது. இச்செய்தி பெருமளவான மக்களுக்கு தெரிவதில்லை. அந்த பெண்ணிற்கு அறிவியல் 'Mitochondrial eve' என பெயர் சூட்டியிருக்கிறது. ஏவாளை ஆங்கிலத்தில் eve என்பர். ஏவாளை குறிக்கும் விதமாக அறிவியல் ஆய்வாளர்கள் அப்பெண்ணிற்கு 'Mitochondrial eve' என பெயரை சூட்டி தேவவார்த்தையை பெருமைப்படுத்தி இருக்கின்றனர். ஆனால், அறிவியல் இப்படியும் சொல்கிறது, அதாவது 'Mitochondrial eve' தான் உலகத்தின் முதல் பெண் என்று கூறமுடியாது, அவள் வாழ்ந்த காலத்தில் பிற பெண்களும் வாழ்ந்திருக்கலாம், ஆனால் பிற பெண்களுக்கு பிறந்த மக்கள் காலப்போக்கில் மாண்டிருக்க, Mitochondrial eve-இன் வம்சவாரிசுகள் மட்டும் நிலைத்து இன்றுவரை பெருகியுள்ளனர் என்கின்றனர். எதுஎப்படியோ, நினைத்து பாருங்கள், இன்று உலகில் வாழும் அத்தனை மக்களுக்குமே ஏதோ ஒரு காலக்கட்டத்தில் ஒரே பெண் தாயாக இருந்திருக்கிறாள் என்று அது எவ்வளவு ஆச்சரியமான விடயம். இதைதான் வேதவசனமும் சொல்கிறது. Mitochondrial eve வாழ்ந்த காலத்தை குறித்து இன்றும் ஆராய்ச்சிகள் நடைப்பெற்று கொண்டிருக்கின்றன.

அது ஒரு புறம் இருக்கட்டும், ஒரு ஆண், ஒரு பெண்ணில் இருந்து உலக மக்கள் அனைவரும் வந்தனர் என்பதை சந்தேகப்படும் நீங்கள் ஒன்றை சிந்திக்க வேண்டும். இதையே தங்களால், நம்ப முடியாத போது ஒரே ஒரு நுண்ணுயிரி தானாய் தோன்றி அதில் இருந்து பூராண், தேள், செடி, பாம்பு, பல்லி, கழுதை, யானை, ஒட்டகம், மனிதன் என எல்லாருமே வந்தார்கள் என்றால் என்ன சொல்வது? இதனை அறிவியலில் இன்று போதித்து வேற வருகிறார்கள்! அதே அறிவியல் இப்படியும் சொல்லுது - அதாவது உயிரற்ற பொருட்களில் இருந்து உயிர் தோன்றவே முடியாதாம் (Abiogenesis), எந்த ஒரு நிகழ்வும் அழிவை நோக்கியே செல்லுமாம் (Second law of thermodynamics)! அப்படி என்றால் பரிணாமம் கூறும் முதல் நுண்ணுயிரி எப்படி வந்தது? ஏன் பரிணாமம் மட்டும் வளர்ச்சியை நோக்கிக் கொண்டே செல்கிறது?

Dr.Anburaj said...

எனது கடிதங்களைப் சரியாகப்புரந்து கொள்ளுங்கள். காயினுக்கு மனைவியார் என்ற கேள்வி மிகவும் முக்கியமானது. ஆதாம் கதை ஒரு கட்டுக்தை என்பதை நீருபிப்பதற்கு அது அவசியம்தான்.பாய்தான் பல்டி அடிக்கிறார் எனில் தாங்களும் பல்டிதான் அடிக்கின்றீர்கள். திருவாபளத்தூா் முஸ்லீம் என்ற வலைதளம் காயின் தனது சகோதரிகளைத்திருமணம் செய்திருந்தார் என்றுச் சொல்கிறது. தாயை சகோதரிகளை திருணம் செய்திருந்தார்கள்.குரான் அதை தடை செய்துவிட்டது என்கிறது. பொருத்தமற்ற இக்கதையை ஏன் நீங்கள் இவ்வளவு தூரம் கட்டிப்பிடித்து தொங்குகின்றிர்கள். கட்டுக்கதையை கட்டுக்கதை என்று சொல்ல நமக்கு தைரியம் இல்லை.காயினின் மனைவி யார் என்று சொல்லுங்கள். பின் விவாதம் செய்யலாம்.

சுவனப் பிரியன் said...

அந்த காலகட்டத்தில் சகோதரியிடமும், உறவு வைத்திருந்த காரணத்தினாலேயே திருகுரானில் இப்படியொரு அழகிய வசனம் உள்ளது. எல்லா கேள்விகளுக்கும் விடையிருக்கும் திருகுர்ஆனை படியுங்கள்: 4:23. உங்களுக்கு (மணமுடிக்க) விலக்கப்பட்டவர் கள்; உங்கள் தாய்மார்களும், உங்கள் புதல்வியரும், உங்கள் சகோதரிகளும், உங்கள் தந்தையின் சகோதரிகளும்; உங்கள் தாயின் சகோதரிகளும், உங்கள் சகோதரனின் புதல்வியரும், உங்கள் சகோதரியின் புதல்வியரும், உங்களுக்குப் பாலூட்டிய (செவிலித்) தாய்மார்களும், உங்கள் பால்குடி சகோதரிகளும், உங்கள் மனைவியரின் தாய்மார்களும் ஆவார்கள்; அவ்வாறே, நீங்கள் ஒரு பெண்ணை விவாகம் செய்து அவளுடன் நீங்கள் சேர்ந்துவிட்டால ், அவளுடைய முந்திய கணவனுக்குப் பிறந்த உங்கள் கண்காணிப்பில் இருக்கும் மகளை நீங்கள் கல்யாணம் செய்யக்கூடாது. ஆனால் நீங்கள் ஒரு பெண்ணை மணந்த பின்னர், அவளுடன் வீடு கூடாமலிருந்தால் (அவளை விலக்கி அவளுக்கு முந்திய கணவனால் பிறந்த பெண்ணை விவாகம் செய்து கொள்வதில்) உங்கள் மீது குற்றமில்லை. உங்களுக்குப் பிறந்த குமாரர்களின் மனைவியரையும் நீங்கள் விவாகம் செய்து கொள்ளக்கூடாது. இரண்டு சகோதரிகளை (ஒரே காலத்தில் மனைவியராக) ஒன்று சேர்ப்பது விலக்கப்பட்டது - இதற்கு முன் நடந்து விட்டவை தவிர , நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்போனும், கருணையுடையோனுமா க இருக்கின்றான்.( Quran 4:23)

கிறிஸ்துவின் ஊழியன் said...

சுவனம்பாய், நல்லா மாட்டிக்கொண்டார், இந்த கேள்விக்கு நீங்க கண்டிப்பா பதில் சொல்லியே தீரணும், மௌனம் சாதித்தோ, கம்மண்ட்டை கண்டுக்கொள்ளாதது போலோ நடிக்கக்கூடாது :-) ரிப்லை பன்னுவிங்கனு நம்பறேன்... :-)

//இதற்கு முன் நடந்து விட்டவை தவிர , நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்போனும், கருணையுடையோனுமாக இருக்கின்றான்//

அதாவது அல்லா சகோதரிகளை திருமணம் செய்யக்கூடாதுனு வசனம் இறக்குவதிற்கு முன்னால் காயீன் தன் சகோதரிகளை அறியாமல் மணந்துவிட்டார், அதனால் அவர் அல்லாவால் மன்னிக்கப்பட்டார்னு சுவனம் பாய் சொதப்பி இருக்கிறார்...

பாய், எனக்கு ஒரு சந்தேகம், உலகத்தில முதல் ஆண் பெண் ஆதாம் ஏவாள், அவர்களால் தான் பூமியில் உள்ள சந்ததிகள் எல்லாருமே பிறந்தனர் என வேதம் கூறுகிறது. சரி, இப்போ ஒரு கேள்வி. ஆதாம் ஏவாளிற்கு பிறந்த மகன் காயீன். அவருக்கு வாரிசுகள் உண்டாக வேண்டுமென்றால், அவருக்கு மனைவியாக பூமியில் பெண்கள் என இருப்பது ஏவாளும் காயீனின் சகோதரிகளும் தான். எனவே, காயீன் ஒரு நிர்பந்தத்திற்கு தள்ளப்பட்டு தன் சொந்த குடும்ப பெண்களுடனே வாரிசுண்டாகும் பொருட்டு உறவுகொள்கிறார். இந்த சம்பவத்திற்கு முழுக்க முழுக்க காரணம் அல்லாதான். ஏன் காயீன் மேல பலியை போடுகிறீர்? ஏதோ பிற பெண்கள் எல்லாம் இருக்கும் போதே காயீன் அறியாமல் தன் சகோதரிகளை மனைவியாக்கிக் கொண்டது போல எழுதுயுள்ளீர்கள். "நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்போனும், கருணையுடையோனுமாக இருக்கின்றான்" - இதில் இது வேற? விளக்கம் கேட்பவரை குழப்பாதீர்கள்....

கிறிஸ்துவின் ஊழியன் said...

சரி, இப்ப அன்பு சார் விசயத்திற்கு வருவோம்.

என்ன அன்பு சார் காயீன் மனைவி யார்னு தெரிஞ்சுக்கனுமா :-)

இந்த கேள்வி கிறிஸ்தவர்களையும், இஸ்லாமியர்களையும் பெரிதாக மடக்கும் அளவிற்கு ஒன்றுமே கிடையாது... அந்த கேள்விலேயே நீங்கள் தொங்கி கொண்டிருப்பதை பார்த்தால் உங்களுக்கு அது பெரிதும் இடிக்கிறது என நன்றாக புரிகிறது... சரி, கேளுங்கள்... காயீன் மனைவி யார் என்பதை பைபிள் கூறவில்லை. நிச்சயமாக அது ஏவாளாகவோ, அல்லது காயீனின் சகோதரிகளாகவோ தான் இருக்க வேண்டும்... நீங்க சொல்வது சரிதான்.... காயீன் தனக்கு வாரிசை தன் தாயிடம் இருந்தோ அல்லது தன் சகோதரிகளிடம் இருந்தோ தான் ஏற்படுத்தி கொண்டார். இதற்காக நீங்கள் இறைவனை பழித்தால் எனக்கு உங்கள் அறியாமையை கண்டு பரிதாபம் தான் வருகிறது.... என்ன அன்பு சார், எவ்வளவு அழகா பரிணாமத்தை குறித்தும், மனிதனின் நாகரீகத்தை குறித்தும் பேசுகிறீர்கள்.. உங்களுக்கு இந்த சின்ன விசயம் புரியலயா?

குரங்கிலிருந்து மனிதன் வந்தானு சொல்றீங்களே சரி, அந்த குரங்குமனிதர்கள் எல்லாம் இது நம் தாய், இது நம் சகோதரி, இது நம் தாயின் சகோதரி, இது நம் தந்தையின் சகோதரி, இவர்கள் கூட எல்லாம் நாம் உறவு வைத்துகொள்ள கூடாதுனு என தரம்பிரித்து, அத்தை மகள்களையும், மாமன் மகள்களையுமா தேடி கண்டுபிடித்து குழந்தை பெற்றனர்? மிருகங்கங்களை போல உறவு அறியாமல், சொந்த குடும்பத்து பெண்களுடனேயே உறவுகொண்டு குழந்தைகளை பெற்றனர். இது அந்த பெண்களுக்கும் புரியவில்லை. இது நம் மகன், இது நம் சகோதரன், இது நம் தந்தையின் சகோதரன் என உறவறியும் அளவிற்கு அக்கால பெண்களுக்கு அறிவில்லை. ஒருவனுக்கு மட்டுமே மனைவியாக இருக்க வேண்டும் என்ற பண்பும் அப்பெண்களுக்கு தெரியாது. மக்கள் ஆரம்ப காலத்தில் மிருகங்களை போல அப்படி தான் இருந்தனர் என நீங்கள் கூறும் பரினாமமே ஏற்றுக்கொள்கிறது...சரியா? எனவே, காயீன் தன் தாயிடமோ, சகோதரிகளிடமோ உறவுகொண்டு குழந்தைகளை பெற்றார் என்பதில் உங்களுக்கு அருவருப்பு தேவையில்லை. நீங்க அருவருப்புப்பட்டாலும் ஒன்றும் செய்யமுடியாது, நீங்களும் நானும் அப்படித்தான் வந்தோம். ஏனெனில் அதுதான் உண்மை. உங்கள் பரிணாமும் அதை தான் சொல்கிறது...

மனிதன் ஆரம்பகாலத்தில் நாகரீகம் இல்லாமல் உறவு அறியாமல் இனப்பெருக்கம் செய்துவந்தான். இது அறிவியல் உண்மை. இதைதான் 3000 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்டுள்ள வசனம் கூறுகிறது...

ஆதியாகமம் 1:28 - "பின்பு தேவன் அவர்களை நோக்கி: நீங்கள் பலுகிப் பெருகி, பூமியை நிரப்பி, அதைக் கீழ்ப்படுத்தி, சமுத்திரத்தின் மச்சங்களையும் ஆகாயத்துப் பறவைகளையும், பூமியின்மேல் நடமாடுகிற சகல ஜீவஜந்துக்களையும் ஆண்டுகொள்ளுங்கள் என்று சொல்லி, தேவன் அவர்களை ஆசீர்வதித்தார்."

இப்போ புரியுதா?

கிறிஸ்துவின் ஊழியன் said...

சரி இவைகளை சொன்ன கடவுள் ஏன் பிற்காலத்தில் தாயிடமோ, சகோதரிகளிடமோ, தாயின் சகோதரிகளிடமோ, தந்தையின் சகோதரிகளிடமோ உறவு வைத்து கொள்ள வேண்டாம் என கூறினார் என நீங்கள் கேட்கலாம். சொல்கிறோம் கேளுங்கள்...

என்னதான் ஆரம்ப கால மனிதர்கள் உறவு அறியாமல், நாகரீகமில்லாமல் மிருகங்களை போல வாழ்ந்து வந்தாலும், காலப்போக்கில் அவர்கள் அறிவு பெற்று நாகரீகத்தில் தேறினர். வாழ்க்கை முன்னேற்றம் அடைந்தது. நாகரீகம் தோன்ற தோன்ற ஒரே குடும்பமாக கூடி வாழ ஆரம்பித்தனர், அதன் பின் கொஞ்சம் கொஞ்சமாக ஊர் ஊராக குடி அமர ஆரம்பித்தனர். நல்ல வளார்ச்சி காணப்பட்டது. இக்கால மனிதர்கள் தங்களது மனைவிகளை தங்களுக்கு மட்டுமே உரியவர்களாக எண்ணும் அளவிற்கு அறிவடைந்தனர், ஆண் பெண்ணிற்கு தேவையான பாதுகாப்பையும், உணவையும், இருப்பிடத்தையும் ஏற்படுத்தி கொடுக்க வேண்டும், பெண் ஆணையும் குழந்தைகளையும் கவனித்து கொள்ள வேண்டும் என புரிந்துகொண்டனர். இந்தளவு அறிவு பெற்றபின் தான் மனைவியாக தெரிந்துகொண்ட பெண் பிறனுடன் உறவு கொள்வதை மனிதன் வெறுக்க ஆரம்பித்தான், பெண்ணும் தன் கணவனை பிறருக்கு பகிர்ந்துகொள்வதை வெறுக்க ஆரம்பித்தாள். இதனால் தேவையில்லாத பிரட்சனைகள், சண்டைகள், வெறுப்பு, கசப்புகள் எல்லாம் தோன்ற ஆரம்பித்தன. இவைகள் எல்லாம் மனித நாகரீத்தின் வளர்ச்சி... இதெல்லாம் உங்களுக்கே தெரியும்...

இந்த காலம் வந்த பின்புதான் கடவுள் இத்தகைய கட்டளைகளை மனிதனுக்கு கொடுக்கிறார்... அதாவது தாயோ, சகோதரிகளோ, மாமியார்களோ, அத்தைகளோ, தாயின் சகோதரிகளோ திருமணம் செய்ய வேண்டாம் என்கிறார், மனிதனும் கீழ்படிந்து அத்தை மகள்களையும், மாமன் மகள்களையும் தனக்கு மனைவிகளாக தெரிந்து கொள்கிறான்.. சரி, அத்தை மாமன் மகள் என்ற உறவில்லாதவன் என்ன செய்வான்? அவன் பிறனது சகோதரிகளை தனக்கு மனைவியாக்கி கொண்டான். இவ்வாறு கடவுள் ஒரு அழகான வழிகாட்டுதலை மனிதன் நாகரீகம் பெற்றபின் கொடுத்தார். இவ்வளவுதான்...

இனி முதலிலேயே 100 ஆண், 100 பெண் என படைத்திருந்தால் இந்த பிரட்சனையை தவிர்த்திருக்கலாம் அல்லவா என நீங்கள் கேட்பீர்கள்... அதற்கும் பதில் உண்டு, தெரிந்துகொள்ளுங்கள்....

கடவுள் மனிதனை பலுகி பெருகவே படைத்தார், நாகரீகம் பெற்ற பிறகுதான் மனிதனுக்கு இலகுவாக இருக்க திருமணத்திற்கு ஏற்ற உறவுகளை காண்பித்தார். மனித ஜனம் பழுகிபெருக அவர் படைத்த 2 மக்களே போதுமானவர்களாக இருந்தனர். அவ்வளவுதான். நெடுங்காலமாக, அத்தை மகள்களையும் மாமன் மகள்களையும் மக்கள் திருமணம் செய்து வருவதால் உங்களுக்கு அது சாதரணமாக தெரிகிறது. ஒரு வேளை ஒரு 2000 வருசத்திற்கு முன்பே அத்தை மகள்களையும், மாமன் மகள்களையும் ஒருவன் தனக்கு சகோதரிகளாகவே எண்ண வேண்டும் என்ற வழக்கம் இருந்திருந்தால், இன்று எவனாவது தன் அத்தை மகளை கட்டி கொண்டால், உங்களுக்கு அருவருப்பாக தோன்றியிருக்கும். இதெல்லாம் மனித நாகரீகத்தை செம்மைபடுத்த இறைவன் கொடுத்த கட்டளைகள். இதை ஏன் இவ்வளவு குழப்பிக்கொள்கிறீர்கள்?

//பொருத்தமற்ற இக்கதையை ஏன் நீங்கள் இவ்வளவு தூரம் கட்டிப்பிடித்து தொங்குகின்றிர்கள். கட்டுக்கதையை கட்டுக்கதை என்று சொல்ல நமக்கு தைரியம் இல்லை.காயினின் மனைவி யார் என்று சொல்லுங்கள். பின் விவாதம் செய்யலாம்//

உங்களை போல யோசித்த சில வேதபண்டிதர்கள் ஆரம்பத்திலேயே கடவுள் மனிதர்களை 7 ஜோடிகளாக படைத்து முறைப்படி புணர வைத்தார் என கச்சிதமாக தங்கள் வேத நூல்களை எழுதினர். அக்காலத்தில் மனிதனுக்கு உண்மையும் தெரியாது. கேட்பதற்கு நன்றாக இருக்கிறது என நிறைய மக்கள் அவ்வேதங்களை புகழ்ந்து பைபிளை இகழ்ந்து வந்தனர். இருந்தாலும் 3000 வருடங்களாக ஆதியாகமம் இதே படைப்பைத்தான் கூறுகிறது....

இப்பொழுது சொல்லுங்கள்... இது பொருத்தமற்ற கட்டுக்கதையா? இல்லை ஒரே நுண்ணுயிரியில் இருந்து இன்றுள்ள யானை வரை வந்துள்ளது என நீங்கள் சொல்கிறீர்களே, அது பொருத்தமற்ற கட்டுக்கதையா? நீங்களே இவ்வளவு யோசிக்கும் போது அக்கால சமய ஞானிகள் இதெல்லாம் யோசித்து இருக்க மாட்டார்களா? 2 பேரால உலகில் உள்ள ஜனம் எல்லாம் வந்ததுனு சொன்னா சகோதரிகள், தாய்மார்களுடனே ஆரம்ப கால மனிதன் உறவு கொண்டான் என்ற அர்த்தம் வருமே, நம் வேதத்தை மக்கள் தூசிப்பார்களே என அவர்களுக்கு தெரியாதா? இருந்தாலும் ஏன் அப்படி எழுதினர்? ஏனெனில் அதுதான் இன்று மனிதன் அறிந்துள்ள நாகரீகத்தோடு செவ்வையாக பொருந்துகிற உண்மையாய் இருக்கிறது...

சுவனப் பிரியன் said...

திரு கிறித்துவின் ஊழியர்!

//பாய், எனக்கு ஒரு சந்தேகம், உலகத்தில முதல் ஆண் பெண் ஆதாம் ஏவாள், அவர்களால் தான் பூமியில் உள்ள சந்ததிகள் எல்லாருமே பிறந்தனர் என வேதம் கூறுகிறது. சரி, இப்போ ஒரு கேள்வி. ஆதாம் ஏவாளிற்கு பிறந்த மகன் காயீன். அவருக்கு வாரிசுகள் உண்டாக வேண்டுமென்றால், அவருக்கு மனைவியாக பூமியில் பெண்கள் என இருப்பது ஏவாளும் காயீனின் சகோதரிகளும் தான். எனவே, காயீன் ஒரு நிர்பந்தத்திற்கு தள்ளப்பட்டு தன் சொந்த குடும்ப பெண்களுடனே வாரிசுண்டாகும் பொருட்டு உறவுகொள்கிறார். இந்த சம்பவத்திற்கு முழுக்க முழுக்க காரணம் அல்லாதான். ஏன் காயீன் மேல பலியை போடுகிறீர்? ஏதோ பிற பெண்கள் எல்லாம் இருக்கும் போதே காயீன் அறியாமல் தன் சகோதரிகளை மனைவியாக்கிக் கொண்டது போல எழுதுயுள்ளீர்கள். "நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்போனும், கருணையுடையோனுமாக இருக்கின்றான்" - இதில் இது வேற? விளக்கம் கேட்பவரை குழப்பாதீர்கள்....//

காயினின் மனைவி யார் என்பது ஒருபுறம் இருக்கட்டும். ஆதம் நபி அவர்களே பழத்தை தின்று தவறு செய்ததால்தான் உலகுக்கு அனுப்பப்படுகிறார்கள். இது போன்று ஆதம் தவறு செய்ய வேண்டும் அதன் மூலம் அவர் பூமிக்கு அனுப்பப்பட வேண்டும். அதன் மூலம் மனிதர்கள் பல்கிப் பெருக வேண்டும் என்பது இறைவனின் ஏற்பாடு. முக்காலத்தையும் அறிந்தவன்தான் இறைவனாக இருக்க முடியும்.

ஏன் இவ்வாறெல்லாம் இறைவன் செய்ய வேண்டும் என்ற கேள்வி நாம் கேட்கக் கூடாது. விதி சம்பந்தமாக நாம் எவ்வளவுதான் சர்ச்சை செய்தாலும் ஒரு முடிவே கிடைக்காது. இது போன்று எழக் கூடிய பல கேள்விகளுக்கு மறு உலகில் இறைவன் அனைவருக்கும் பதிலளிப்பான். அது வரை பொறுப்போமே!

நான் நாளை இறப்பது இன்றே தெரிந்து விட்டால் என்னால் நிம்மதியாக இருக்க முடியுமா? எனவே எதிலுமே ஒரு நன்மை மனித குலத்துக்கு உண்டு. அனைத்தையும் இறைவனே அறிந்தவன்.

Dr.Anburaj said...

தங்கள் சொலவதைப்பார்த்தால் சமூக சட்டங்கள் அனைத்தும் சுழ்நிலைக்குத் தக்க மாற்றி அமைத்துக் கொள்ளலாம் என்பதுதான். அவைகளில் நிரந்தரம் என்று ஏதும் இல்லையா ? அப்படியானால் பாவம் புண்ணியம் ஒழுக்கம் என்பதெல்லாம் என்ன ? நியாயத்தீர்ப்பு நாளில் ஆதமு்ம ஏவாளும் காயினும் எழுவார்கள். நாமு்ம் எழுவோம். நாகரீகத்தின் ஒவ்வொரு படித்தரத்திலும் வாழ்நத மக்கள்- பண்பாடுபரிணாமத்தின் ஒவ்வொரு படியிலும் வாழ்ந்து மடிந்த அனைத்து ரக மனிதர்களும் எழுவார்கள். அல்லா யார் நல்லவன் யார் கெட்டவன் யார் நரகவாசி யார் சொர்க்கவாசி என்பதை எப்படி முடிவு செயவான் ? எந்த ஒழுங்கையும் அல்லா படைக்காமல் ஒழுங்கின்மை- ஒழுக்கக் கேடு என்பதை எப்படி நிர்ணயம் செய்வார். காயின் தன் தாயோடு சகோதரியோடு உறவு கொள்ளும் விசயத்திற்கு கடவுளே முழு பொறுப்பு. அப்படியானால் இன்றும் ஒருவர் அப்படிச் செய்தால் அதை நியாயத்தீர்ப்பு நாளில் கடவுள் பாவம் என்றால் ஆதமுக்கு ஒரு நியாயம் மற்றொருவனுக்கு ஒரு நியாயமா ? கடவுள் என்ன கிறுக்கனா ?..............................
இயேசுவின் மீது எனக்கு உயர்நத அபிப்ராயம் உண்டு. இந்தியாவின் கலாச்சாரமாண்புகளுக்கு இணக்கமாக அவரது வாழ்வின் முக்கிய அம்சங்கள் உள்ளன. மென்மையான குணம் அன்புள்ளம் கொண்ட இயேசு எவரையும் கவர்வார் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் அவரது போதனைகளையும் ” கத்தோலிக்க சபை” அல்லது எதோ ஒரு அமைப்பு பாவம் மன்னிப்பு இரட்சிப்பு இயேசுவிற்கு ஏகபோகம் கொள்வதை எற்பதற்கில்லை. லட்சக்கணக்கான இறைநேசர்களில் இயேசுவும் ஒருவர். இயேசுவை போன்றவர்கள் எண்ணற்ற பேர்கள் இந்தியாவில் பிறந்நதுள்ளார்கள். இயேசுவைப்பற்றிய எனது கடிதங்களில் சொல்லப்பட்ட விசயஙமகள் குறித்து தங்களின் கருத்தை தெரிவிக்க விரும்பினால் தெரிவிக்கலாம்.ஆனால் காயின் கதையிலிருந்து விவாதம் மாறக்கூடாது. கிறிஸ்தவமும் .இஸ்லாமும் ஒரே மண்ணில் தோன்றிய மதம். பல விசயங்களில் ஒரே கொள்கைதான்.ஆனவே நியாயத்தீர்ப்பு நாள் என்று ஒன்றும் கிடையாது என்பது எனது முடிவு.

Dr.Anburaj said...

மனிதன் காட்டுவாசி என்ற நிலையிலிருந்து இன்றைய வளர்ச்சிக்கு அல்லா எந்த வகையிலும் பங்கேற்க வில்லையே ?//

ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட இறைத் தூதர்களை இறைவன் அனுப்பி படிப்படியாக மனிதப் படைப்பு செம்மைப்படுத்தப்பட்டது. தானாக எதுவும் நடந்து விட வில்லை.
1.25 லட்சம் பேர்கள் யார் ? குரானில் மொத்தம் 4-5 பேர்கள் தானே உள்ளது. பிற நாடுகளில் இனங்களில் தோன்றியவர்கள் கொண்டுவந்த வேதம் எங்கே ? ஒருலட்சத்து 24 ஆயிர்து 999 வும் பாழாகி விட்டதே ஏன் ? அதனுடைய நகல் எங்கே? குரானைக் காப்பேன் என்ற அல்லா 1.25 லட்சம் வேதங்களை காக்க மறந்தது ஏனோ ? அப்படியானால் நாகரீகம் வளர 1.25 லட்சம் பேரகள் ஏதும் செய்யவில்லை என்பதுதானே பொருள் . ஒரு பொய்யைப்பிடித்துக் கொண்டு ......................
மதங்கள் தனி மனிதனைப்பின்பற்றும் போது இப்படித்தான் தவறுகளை தவறுகள் என்று ஏறக இயலாமல் தவித்துப் புசி மெழுகுவோம். அணுவைப்பிளக்க முடியாது என்ற விஞ்ஞானியை உலகம் ஒப்புக் கொண்டது. பின் ஒருவர் முடியும் என்றார் செய்தும் காட்டினால். அணுவை பிளக்க முடியாது என்றவரை யாரும் இழிவு படுத்த மாட்டார்கள். நான் கலிலியோவை பினபற்றுவேன். அவர் கண்டுபிடிப்புகளில் தவறு காணக்கூடாது என்று எந்த நபரும் சொல்வதில்லை.அதுபோல் நமக்கு கிறிஸ்தவர் முஸ்லீம் என்று தனிநபர்கள் மீது பற்று.மேற்படி பிரிய நபர்களை நியாயப்படுத்த எந்த எல்லைக்கும் போக முனைகிறோம்.அவர்களது போதனையில் குறை கண்டால் நம் மனம் வேதனைப்படகின்றது. கௌரவம் குறைந்து விட்டதாக நினைக்கின்றோம். விஞஞானம் போல் சமயத்துறையும் ” நபர்கள் ” சாராது கருத்துக்கள் சார்ந்து வாழும் நிலை உருவாக வேண்டும்.விஞ்ஞாகத்தில் புதிய விஞ்ஞானிகள் சதா தோன்றிக்கொண்டேயிருப்பதுபோல் புதிய தெளிவுகள் பிறந்து கொண்டே யிருப்பது போல் உண்மைகள் வெளிவந்து கொண்டேயிருப்பது பொல் சமயத்துறையிலும் நடக்க வேண்டும். குரானைத்தாண்டி வேதாகமத்தை தாண்டி வெளியே வாருங்கள்.காலத்தின் தேவை அறிவு வளர்ச்சிக்கு ஈடு கொடுக்கக் கூடிய கருத்துக்கள் கொண்ட புதிய வேதங்களைப் படைப்போம்.

Dr.Anburaj said...

மனிதன் காட்டுவாசி என்ற நிலையிலிருந்து இன்றைய வளர்ச்சிக்கு அல்லா எந்த வகையிலும் பங்கேற்க வில்லையே ?//

ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட இறைத் தூதர்களை இறைவன் அனுப்பி படிப்படியாக மனிதப் படைப்பு செம்மைப்படுத்தப்பட்டது. தானாக எதுவும் நடந்து விட வில்லை.
1.25 லட்சம் பேர்கள் யார் ? குரானில் மொத்தம் 4-5 பேர்கள் தானே உள்ளது. பிற நாடுகளில் இனங்களில் தோன்றியவர்கள் கொண்டுவந்த வேதம் எங்கே ? ஒருலட்சத்து 24 ஆயிர்து 999 வும் பாழாகி விட்டதே ஏன் ? அதனுடைய நகல் எங்கே? குரானைக் காப்பேன் என்ற அல்லா 1.25 லட்சம் வேதங்களை காக்க மறந்தது ஏனோ ? அப்படியானால் நாகரீகம் வளர 1.25 லட்சம் பேரகள் ஏதும் செய்யவில்லை என்பதுதானே பொருள் . ஒரு பொய்யைப்பிடித்துக் கொண்டு ......................
மதங்கள் தனி மனிதனைப்பின்பற்றும் போது இப்படித்தான் தவறுகளை தவறுகள் என்று ஏறக இயலாமல் தவித்துப் புசி மெழுகுவோம். அணுவைப்பிளக்க முடியாது என்ற விஞ்ஞானியை உலகம் ஒப்புக் கொண்டது. பின் ஒருவர் முடியும் என்றார் செய்தும் காட்டினால். அணுவை பிளக்க முடியாது என்றவரை யாரும் இழிவு படுத்த மாட்டார்கள். நான் கலிலியோவை பினபற்றுவேன். அவர் கண்டுபிடிப்புகளில் தவறு காணக்கூடாது என்று எந்த நபரும் சொல்வதில்லை.அதுபோல் நமக்கு கிறிஸ்தவர் முஸ்லீம் என்று தனிநபர்கள் மீது பற்று.மேற்படி பிரிய நபர்களை நியாயப்படுத்த எந்த எல்லைக்கும் போக முனைகிறோம்.அவர்களது போதனையில் குறை கண்டால் நம் மனம் வேதனைப்படகின்றது. கௌரவம் குறைந்து விட்டதாக நினைக்கின்றோம். விஞஞானம் போல் சமயத்துறையும் ” நபர்கள் ” சாராது கருத்துக்கள் சார்ந்து வாழும் நிலை உருவாக வேண்டும்.விஞ்ஞாகத்தில் புதிய விஞ்ஞானிகள் சதா தோன்றிக்கொண்டேயிருப்பதுபோல் புதிய தெளிவுகள் பிறந்து கொண்டே யிருப்பது போல் உண்மைகள் வெளிவந்து கொண்டேயிருப்பது பொல் சமயத்துறையிலும் நடக்க வேண்டும். குரானைத்தாண்டி வேதாகமத்தை தாண்டி வெளியே வாருங்கள்.காலத்தின் தேவை அறிவு வளர்ச்சிக்கு ஈடு கொடுக்கக் கூடிய கருத்துக்கள் கொண்ட புதிய வேதங்களைப் படைப்போம்.

Anonymous said...

அன்பு சார், ஒரு மனிதனை நல்லவன் கெட்டவன் இவன் சொர்கத்திற்கு போவான், இவன் நரகத்திற்கு போவான் என நியாந்தீர்க்க எனக்கு அணுஅளவும் தகுதியில்லை. இருந்தாலும் உங்கள் கேள்விக்கான பதில் உங்கள் கேள்வியிலேயே உள்ளது. முதலாவது காயீன் மனைவி யார் என தொற்றி கொண்டிருந்தீர்கள். இப்பொழுது, அதற்கு விடை அளிக்க, ஏதோ ஒரு புது ட்ரெண்டை கையாளுகிறீர்கள். சரி பரவாயில்லை... :​-)

//தங்கள் சொல்வதைப்பார்த்தால் சமூக சட்டங்கள் அனைத்தும் சுழ்நிலைக்குத் தக்க மாற்றி அமைத்துக் கொள்ளலாம் என்பதுதான். அவைகளில் நிரந்தரம் என்று ஏதும் இல்லையா ?//

அனைத்து விடயங்களையும் சூழ்நிலைக்கு ஏற்ப மாற்றி கொள்ளலாம், எதுவுமே நிரந்தரம் இல்லை என்று நான் கூறவே இல்லை. நீங்களாக அப்படி எழுதி ஏதேதோ கேள்விகளை கேட்டுள்ளீர்கள்.... போகட்டும். நிச்சயமாக சூழ்நிலைக்கு ஏற்ப '----சில----' சட்டங்களை மாற்றிக் கொள்வதில் தவறில்லை. சில ஆண்டுகளுக்கு முன்பு, நமது தேசத்தில் பணபரிமாற்றம் செய்ய பெரிதளவு கட்டுப்பாடுகள் இல்லை. ஆனால் இப்போது கருப்புப்பணம் பெருகி வருகிறது.இதனை தடுக்க இன்று ரிசர்வ் வங்கி ஏகப்பட்ட விதிகளை விதித்துள்ளது. உங்களைப்போல் ரிசர்வ் வங்கி எந்த மாற்றமும் செய்யவேண்டாம் என முடங்கிக்கொண்டிருந்தால் நாடு என்னாகும்? மனித வாழ்க்கையை செம்மைப்படுத்த காலத்திற்கு ஏற்ப '----சில----' விதிகளை மாற்றுவதில் எந்த வித தவறும் இல்லை....

//எந்த ஒழுங்கையும் அல்லா படைக்காமல் ஒழுங்கின்மை- ஒழுக்கக் கேடு என்பதை எப்படி நிர்ணயம் செய்வார். காயின் தன் தாயோடு சகோதரியோடு உறவு கொள்ளும் விசயத்திற்கு கடவுளே முழு பொறுப்பு. அப்படியானால் இன்றும் ஒருவர் அப்படிச் செய்தால் அதை நியாயத்தீர்ப்பு நாளில் கடவுள் பாவம் என்றால் ஆதமுக்கு ஒரு நியாயம் மற்றொருவனுக்கு ஒரு நியாயமா ?//

ஆம் ஆதாமுக்கு ஒரு நியாயம், நமக்கு ஒரு நியாயம் தான். ஆரம்ப கால மனிதன் மிருகத்தை போல இருந்தான், அவனுக்கு நாகரீகம் என்றால் என்ன தெரியும்? மிருகங்களை போல உறவறியாது புணர்ந்து இனப்பெருக்கம் செய்தான். நாகரீக அறிவே அவர்களுக்கு இல்லாத போது இறைவன் அவர்களை ஏற்றுக்கொள்வதில் எவ்வித தவறும் இல்லை. ஆனால் இன்று நீங்களும் நானும் நாகரீகம் மிகுந்த உலகில் வாழ்கிறோம். நாகரீகம் வள்ர்ந்த பின்பு இறைவன் நமக்கு சில சட்டங்களை வகுத்துக் கொடுத்துள்ளார். இந்த காலத்தில் நாம் அப்படிதான் இருக்க வேண்டும். அதைவிடுத்து மிருகங்களை போல நாம் காண்பவர்களுடன் எல்லாம் உறவுகொண்டால் அது தவறுதான். ஆதாமுக்கு தான் பண்பும் நாகரீக அறிவும் கிடையாது, அவர் ஏற்றுகொள்ளப்படுகிறார். நமக்கு என்ன கேடு?

//இயேசுவின் மீது எனக்கு உயர்நத அபிப்ராயம் உண்டு. இந்தியாவின் கலாச்சாரமாண்புகளுக்கு இணக்கமாக அவரது வாழ்வின் முக்கிய அம்சங்கள் உள்ளன. மென்மையான குணம் அன்புள்ளம் கொண்ட இயேசு எவரையும் கவர்வார் என்பதில் சந்தேகம் இல்லை//

அதனால் தான் நாங்களும் 2000 வருடங்களாக அவரை விட்டுக்கொடுக்காமல் போராடிக்கொண்டிருக்கிறோம்...

//ஆனால் அவரது போதனைகளையும் ” கத்தோலிக்க சபை” அல்லது எதோ ஒரு அமைப்பு பாவம் மன்னிப்பு இரட்சிப்பு இயேசுவிற்கு ஏகபோகம் கொள்வதை ஏற்பதற்கில்லை//

அது உங்கள் விருப்பம். நம்புவதும் நம்பாததும் முழுக்க முழுக்க உங்கள் உரிமை. ஆனால் நாங்கள் முழுமனதார நம்புகிறோம். எங்களது விசுவாசத்தை பிறருக்கு தெரிவிப்பதை ஒரு சேவையாகவும் கடமையாகவும் கடவுளுக்கு செய்கின்ற தொண்டாகவும் எண்ணுகிறோம். அவ்வளவு தான். அதே நேரத்தில் கிறிஸ்தவ நம்பிக்கைகளை ஏற்றுக்கொண்டே தீரவேண்டும் இல்லாவிடில் வரி, கொலை, மிரட்டல் தான் என யாரையும் வற்புறுத்துவதில்லை. ஏதேனும் கிறிஸ்தவர் அவ்வாறு பிறரை வற்புறுத்தி இருந்தால் அச்செயலை இயேசுவே விரும்பமாட்டார்...

Anonymous said...

//லட்சக்கணக்கான இறைநேசர்களில் இயேசுவும் ஒருவர். இயேசுவை போன்றவர்கள் எண்ணற்ற பேர்கள் இந்தியாவில் பிறந்நதுள்ளார்கள். இயேசுவைப்பற்றிய எனது கடிதங்களில் சொல்லப்பட்ட விசயஙமகள் குறித்து தங்களின் கருத்தை தெரிவிக்க விரும்பினால் தெரிவிக்கலாம்//

ஒன்றை புரிந்துகொள்ளுங்கள்.... ஒரு கிறிஸ்தவன் உலகத்தின் மாமனிதர்களை மதிக்க கூடாது என்றில்லை. எனக்கும் விவேகானந்தர், சாய்பாபா, மகாத்மா காந்தி, கபிர்தாசர், திருவள்ளுவர், புத்தர் போன்ற இந்தியமண்ணின் தவப்புதல்வர்கள் மீது அளவு கடந்த மதிப்பும் மரியாதையும் உண்டு. ஆனால் நான் இயேசுநாதரை மட்டுமே என் தெய்வமாக கருதுகிறேன். ஏனெனில் அவருக்கு என என் மனதில் ஒதுக்கிய இடத்தை பிறருடன் பங்கிட எனக்கு மனதில்லை. அதற்கு இந்திய தேசத்தின் இறைநேசர்களை நான் வெறுக்கிறேன் என்றும் அர்த்தம் இல்லை.

//ஆனால் காயின் கதையிலிருந்து விவாதம் மாறக்கூடாது. கிறிஸ்தவமும் .இஸ்லாமும் ஒரே மண்ணில் தோன்றிய மதம். பல விசயங்களில் ஒரே கொள்கைதான். ஆகவே நியாயத்தீர்ப்பு நாள் என்று ஒன்றும் கிடையாது என்பது எனது முடிவு//

நான் இஸ்லாமை வெறுப்பவன் அல்ல. அவர்களை வெறுத்து எனக்கென்ன வரப்போகிறது! "எல்லாரிடத்திலும் அன்பு கூறுங்கள்" என்ற கட்டளையை பின்பற்ற முயல்கிறேன். ஆனால் jesusinvites.com, onlinepj.com போன்ற சில இஸ்லாமிய வலைதளங்கள் மிகவும் கேவலமாக இயேசுகிறிஸ்துவை சித்தரித்து வருகின்றன. இயேசு தங்களுக்கும் நபிதான் என்பதை கூட மறந்து இவர்கள் இழிவுப்படுத்தி வருவதை கண்டால் இவர்களுக்கு முகமது அவர்கள் மட்டுமே முக்கியம் என்பது தெரியும். 'எல்லா நபிமார்களும் ஒன்று' என்று இவர்களின் வாய் மட்டும்தான் சொல்கிறது. இத்தகைய வேலைகளை காணும் போதுதான் பொறுக்க முடியாமல் கம்மெண்ட் செய்கிறேன்.

கிறிஸ்துவத்திற்கும் இஸ்லாமிற்கும் சம்மந்தம் உண்டு என்பதை ஏற்பதற்கில்லை. கிறிஸ்தவம் இஸ்லாம் தோன்றியதில் இருந்தே அக்கொள்கைகளை புறக்கணித்தே வருகிறது. இஸ்லாம் தான் பைபிள் கறைப்பட்டுவிட்டது அதனால் குரான் வழங்கப்பட்டது என கிறிஸ்துவத்துடன் தன்னை ஒட்டுப்போட்டு கொள்கிறது. நியாத்தீர்ப்பு நாள் மீது உங்களுக்கு நம்பிக்கையை வரவைக்க பிராத்தனையைத் தவிர என்னால் ஒன்னும் செய்ய முடியாது. அது உங்கள் சுயமுடிவிற்கு உட்பட்டது.

- கிறிஸ்துவின் ஊழியன்...

C.Sugumar said...
This comment has been removed by the author.
Dr.Anburaj said...

இதற்காவது பதில் சொல்லுங்கள். இதுஉண்மயா ?
அபூதர் (ரலி) அவர்கள் அறிவித்துவந்ததாக அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
…அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பிறகு ஜிப்ரீல் (அலை) அவர்கள் என்னை அழைத்துக்கொண்டு (இன்னும் மேலே) உயர்ந்தார்கள். நான் ஓர் உயரமான இடத்தில் ஏறிக்கொண்டிருந்தபோது (வானவர்கள் தலை விதிகளைப் பதிவு செய்துகொண்டிருக்கும்) எழுதுகோல்களின் ஓசையைச் செவியுற்றேன்...
முஸ்லீம் 263

ஒவ்வொரு மனிதனுக்கும் அவனது கழுத்தில் அவனது குறிப்பேட்டை மாட்டியுள்ளோம். கியாமத் நாளில் அவனுக்காக ஒரு புத்தகத்தை வெளிப்படுத்துவோம்.
குர் ஆன் 17:13

Dr.Anburaj said...

அபூதர் (ரலி) அவர்கள் அறிவித்துவந்ததாக அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
…அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பிறகு ஜிப்ரீல் (அலை) அவர்கள் என்னை அழைத்துக்கொண்டு (இன்னும் மேலே) உயர்ந்தார்கள். நான் ஓர் உயரமான இடத்தில் ஏறிக்கொண்டிருந்தபோது (வானவர்கள் தலை விதிகளைப் பதிவு செய்துகொண்டிருக்கும்) எழுதுகோல்களின் ஓசையைச் செவியுற்றேன்...
முஸ்லீம் 263

ஒவ்வொரு மனிதனுக்கும் அவனது கழுத்தில் அவனது குறிப்பேட்டை மாட்டியுள்ளோம். கியாமத் நாளில் அவனுக்காக ஒரு புத்தகத்தை வெளிப்படுத்துவோம்.
குர் ஆன் 17:13

சுவனப் பிரியன் said...

//ஒவ்வொரு மனிதனுக்கும் அவனது கழுத்தில் அவனது குறிப்பேட்டை மாட்டியுள்ளோம். கியாமத் நாளில் அவனுக்காக ஒரு புத்தகத்தை வெளிப்படுத்துவோம்.
குர் ஆன் 17:13//

ஒவ்வொருவருக்கும் அவரது செயல்கள் பதியப்படுகிறது என்பது இஸ்லாமியர், இந்து கிறித்தவம் என்ற மூன்று மதங்களுமே ஒத்துக் கொண்ட ஒன்று. இதில் என்ன பிரச்னை உங்களுக்கு?

Dr.Anburaj said...

இந்து மதத்தை காபீர்களின் மதத்தை தாங்கள்் துணைக்கு அழைப்பது ஏன் ?
இந்திய புராணங்களில் இதுபோன்ற கருத்துள்ளது. சித்திரகுப்பதன் கதையெல்லாம் இலக்கிய தரம் வாய்ந்தவை. சைவசித்தாந்தம் வேதாங்தமும் இதை ஒப்புக் கொள்வதில்லை. மனிதன் செய்யும் நல்வினை தீவனை அவனது ஆத்மாவோடு சுட்சமமாகத் தொடர்கிறது என்ற கருத்து இஸ்லாமிய கருத்தோடு மாறுபட்டது.
முகம்மது மனவியாதிகொண்டிருந்தார் என கருதுவோர் இப்படிப்பட்ட கருத்துக்களை மேற்கோள்காட்டுகின்றனர். யார் கழுத்திலும் எதுவும் தொங்க வில்லை. (வானவர்கள் தலை விதிகளைப் பதிவு செய்துகொண்டிருக்கும்) எழுதுகோல்களின் ஓசையைச் செவியுற்றேன்...
முஸ்லீம் 263

ஒவ்வொரு மனிதனுக்கும் அவனது கழுத்தில் அவனது குறிப்பேட்டை மாட்டியுள்ளோம். கியாமத் நாளில் அவனுக்காக ஒரு புத்தகத்தை வெளிப்படுத்துவோம்.
நம்புவதற்கு பராணத்தனமாக உள்ளது.தலைவிதியை எழுதும் ஓசையைக் கேட்டார்.தலைவிதியை அல்லாவே எழுதியபின் நியாயத்தீர்ப்பு நாளில் ஒருமனிதனிடம் காணப்பட்ட சிறப்புகளுக்கும்குறைகளுக்கும் அல்லாதானே பொறுப்பு. இதில நியாயத்தீர்ப்பு நாள் என்பது தவறானது அல்லவா ?

சுவனப் பிரியன் said...

//அல்லாவே எழுதியபின் நியாயத்தீர்ப்பு நாளில் ஒருமனிதனிடம் காணப்பட்ட சிறப்புகளுக்கும்குறைகளுக்கும் அல்லாதானே பொறுப்பு. இதில நியாயத்தீர்ப்பு நாள் என்பது தவறானது அல்லவா ?//

நீங்கள் கேட்பது விதி சம்பந்தமானது. இதை பற்றி சர்ச்சை செய்ய இஸ்லாம் அனுமதிக்கவில்லை.

அடுத்து நீங்கள் நாளை என்ன செய்யப் போகிறீர்கள் என்று அறியாதவன் எப்படி நமது இறைவனாக இருக்க முடியும்? இறைவனின் வல்லமைகளில் இதுவும் ஒனறு. முக்காலத்தையும் உணர்ந்தவனே இறைவனாக இருக்க முடியும்.

C.Sugumar said...

நீங்கள் கேட்பது விதி சம்பந்தமானது. இதை பற்றி சர்ச்சை செய்ய இஸ்லாம் அனுமதிக்கவில்லை.
விவாதிக்க எல்லைகள் வகுப்பது முட்டாள்த்தை வளர்க்கும்.ஜரோப்பிய சமூகங்கள் விஞ்ஞானத்தில் பெற்ற பிரமாண்டமான வளர்ச்சிக்கு விவாகத்திற்கு எல்லைகள் வகுக்கவில்லை என்பதுதான். ஏன் விதியைப்பற்றி விவாதிக்கக் கூடாது ?

Irfan Ali said...

Sago... Ungal facebook id ai ingu padhividungalaen...

சுவனப் பிரியன் said...

சலாம் சகோ...

//Sago... Ungal facebook id ai ingu padhividungalaen...//

http://facebook.com/suvanappiriyan