Followers

Tuesday, August 13, 2013

தர்மபுரி: என்று தணியும் இந்த சாதி வெறி!சமீப காலங்களில் என்னை மிகவும் பாதித்த குறும்படங்களில் இதுவும் ஒன்று. என்ன ஒரு திட்ட மிட்ட இன அழிப்பு? பார்க்கும் போது மனது மிகவும் கனக்கிறது. சாதி மாறி காதலித்ததுதான் இத்தனை கலவரத்துக்கும் காரணம் என்பது முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பதைப் போன்றதாகும். ஏனெனில் இதற்கு முன்பு பல திருமணங்கள் தலித் இளைஞர்களுக்கும் வன்னிய பெண்களுக்கும் இனிதே நடந்து வாழ்வு இன்று வரை இனிமையாகவே சென்று கொண்டு உள்ளது. சில பெண்கள் பேரன் பேத்தியும் எடுத்துள்ளார்கள். அதை இந்த குறும்படத்திலும் பேட்டியாகவே காணலாம். ஆக இந்த வன்முறைக்கு காதல் ஒரு காரணமே அல்ல. சமீப காலமாக பாமகவுக்கு தேர்தலில் அடி மேல் அடி விழுந்து வருகிறது. திமுகவும், அதிமுகவும் இந்த கட்சியை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை. வன்னியர்களின் ஓட்டை கணிசமாக விஜயகாந்தும் பிரித்துக் கொண்டு சென்று விட்டார். இனி அன்பு மணியை முதல்வராக்கி பார்க்கும் ராமதாஸின் ஆசையில் மண் விழுந்துள்ளதால் அதை துடைக்க இழந்த வன்னிய ஓட்டுக்களை குவிப்பதற்காக எடுத்த துருப்புச் சீட்டே இளவரசன் காதல் விவகாரம்.

இரண்டு மணி நேரத்தில் மூன்று கிராமங்களை ஒன்றும் இல்லாமல் ஆக்குவதென்பது ஏதோ உணர்ச்சி வசத்தால் நடைபெறுவதல்ல. பல நாட்கள் திட்டமிட்டு யார் யார் எந்த பணியைச் செய்ய வேண்டும் என்று பக்காவாக திட்டமிட்டே இந்த கொள்ளையிடல் நடந்துள்ளது. அவர்களின் இலக்கு அந்த மக்களின் வாழ்வாதாரங்களை அழிப்பதே! அதில் வெறறியும் பெற்றுள்ளார்கள். ஒருவர் 40 வருடம் குருவி சேர்ப்பது போல் சேர்த்த பொருட்கள் அனைத்தும் திருடு போய் விட்டது என்று சொன்னது மனதைக் கசிய செய்தது. இந்த பணம் அனைத்தும் ஏதோ கந்து வட்டியிலோ, ஊழல் செய்தோ, வந்ததல்ல. அனைத்தும் கடின உழைப்பிலே சேர்க்கப்பட்ட பணங்கள்.

அப்படி எந்த விதத்தில் தலித்களை விட வன்னியர்கள் உயர்ந்து விட்டார்கள் என்று தெரியவில்லை. பார்ப்பனர்களாவது தங்களின் நிறத்தை வைத்து, தான் பார்க்கும் தொழிலை வைத்து நான் உயர்ந்த சாதி என்று என்று சொல்லிக் கொண்டனர். ஆனால் தலித்களும், வன்னியர்களும் செய்யும் தொழிலும் ஒன்று: நிறமும் ஒன்று: முக சாயலும் ஒன்று: இதில் எந்த விதத்தில் வன்னியர்கள் உயர்ந்து விட்டார்கள் என்பது எனக்கு விளங்கவில்லை.

நமக்கு முன்னால் கை கட்டி வாய் பொத்தி இதுவரை சேவகம் செய்த தலித்துகள் மாட மாளிகைகளில் வாழ்வதா என்ற எரிச்சலே இந்த மக்களை இவ்வளவு அக்கிரமங்களையும் செய்யத் தூண்டியுள்ளது. கையில் கம்புடனும், பெட்ரோல் டின்களோடும் சில வன்னிய பெண்களே கூட இந்த அராஜகத்தில் ஈடுபட்டுள்ளது சாதி வெறியின் உச்சத்தைக் காட்டுகிறது.

ஏன் அந்த மக்கள் மாடி வீடு கட்டக் கூடாதா? இரு சக்கர வாகனத்தில் செல்லக் கூடாதா? கல்லூரிக்குச் சென்று பட்ட படிப்பு படிக்கக் கூடாதா? இவற்றை எல்லாம் அந்த மக்கள் பெறக் கூடாது என்று தடுப்பதற்கு உங்களுக்கு உரிமையை யார் கொடுத்தது? அந்த பெண்கள் தங்கள் வயிற்றில் அடித்துக் கொண்டு அழுத அழுகை உங்களை சும்மா விடுமா? அத்தனைக்கும இந்த ஆதிக்க சாதிகள் பதில் சொல்லியே தீர வேண்டும்.

எங்கள் கிராமத்தை ஒட்டி தலித் கிராமம் ஒன்று உண்டு. 100 அல்லது 120 குடும்பங்கள் பல ஆண்டுகளாக வாழ்ந்து வருகிறது. முன்பு வயல் வேலை, வீட்டு வேலை, துணி துவைப்பபு, என்று எங்கள் கிராமத்தின் அனைத்து வேலைகளையும் அந்த தலித் மக்களே செய்து வந்தனர். ஆனால் இன்று நிலைமை வேறு. அரபு நாடுகளுக்கு செல்கின்றனர், கல்லூரி வரை சென்று படித்து நல்ல முன்னேற்றத்தில் உள்ளனர். சமீபத்தில் அந்த கிராமத்துக்கு சென்று கூலி வேலைக்காக மூன்று பெண்களை கூப்பிட சென்றேன். 'இப்போ எல்லாம் நாங்க வேலைக்கு போறத எங்கவூட்டுக் காரர்களெல்லாம் விரும்புறதில்லை பாய்.. நாங்க வரலை..' என்றனர். நான் திரும்பி விட்டேன். பிறகு வேறு ஆட்களை வைத்து அந்த வேலையை முடித்தேன். இதை எல்லாம் நாம் பிரச்னையாக எடுத்துக் கொள்ளக் கூடாது.

அதே போல் எங்கள் கிராமத்திலிருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் ஒரு இஸ்லாமிய கிராமத்தில் ஒரு இஸ்லாமிய பெண்மணி ஒரு இந்து இளைஞனோடு ஓடி விட்டாள். அந்த குடும்பமும் வறுமையான குடும்பம். ஊர் பெரியவர்கள் மூலம் முயற்சித்து பார்த்தனர். அந்த பெண் அவனோடுதான் வாழ்வேன் என்று பிடிவாதமாக சொனனாள்.வேறு வழி இல்லாமல் ஜமாத்தும் அந்த பெண்ணை கை கழுவியது. பெற்றோரும் கை கழுவி விட்டனர். படை திரட்டிக் கொண்டு அந்த இளைஞனின் குடும்பத்தை எந்த முஸ்லிமும் துவம்சம் செய்யவில்லை. ஏனெனில் தவறு இரண்டு பக்கமும் உள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு கையில் ஒரு குழந்தையோடும் தனது கணவனோடும் அந்த பெண் தனது வீட்டின் கதவை தட்டினாள். கதவை திறந்த தாயாருக்கு தனது மகளும், மருமகனும், பேரக் குழந்தையும் வீட்டின் வெளியே நிற்பதைக் கண்டு ஆச்சரியம்.

'உள்ளே வரவாம்மா'

'வாம்மா'

மகளையும் மருமகனையும் அந்த தாய் உபசரித்தார். தற்போது ஓடிப் போன அந்த பெண்ணின் தொழுகை வணக்கங்கள் போன்றவற்றால் கவரப்பட்ட அந்த இந்து இளைஞன் இன்று இஸ்லாத்தை ஏற்று தனது வாழ்வையே மாற்றிக் கொண்ட செய்தியை தனது தாயாரோடு அந்த பெண் சந்தோஷமாக பகிர்ந்து கொண்டிருந்தாள். இவர் இஸ்லாத்தை ஏற்ற செய்தி ஊர் முழுக்க தெரிய வரவே 'என் வீட்டுக்கு விருந்துக்கு வா' 'உன் வீட்டுக்கு விருந்துக்கு வா' என்று தினமும் அந்த தம்பதிக்கு விருந்து உபசரிப்புதான்.

மதம் மாறி திருமணம் செய்து கொண்ட இந்த இருவரின் குடும்பத்தாரும் ஒத்துழைத்தது போல் இளவரசன் பிரச்னையில் தலித் மக்களும், வன்னிய மக்களும் ஒன்றுபட்டிருந்தால் இன்று சாதித் தீ இந்த அளவு பரவியிருக்காது. அநியாயமாக இரண்டு உயிர் போயிருக்காது. அந்த பெண்ணும் மனநலம் பாதிக்கப்பட்டிருக்க மாட்டாள்.

டிஸ்கி: டிராஃப்டில் சில மாதம் முன்பு எழுதி போஸ்ட் செய்யாமல் விட்ட பதிவு. இன்றுதான் அதற்கு நேரமும் கிடைத்தது.

9 comments:

சுவனப் பிரியன் said...

டாக்டர் ஜான்ஸன்!

//Da Vinci Code is fiction. It is not history.The Bible is authentic and there is no mention of Jesus having wives. Writers can write according to their whims and fancies. The Chrristian world has never approved any of those writings.We never question what is written in the Ramayana, Maha Bharatham and the Holy Koran as they are the holy books of the Hindus and Muslims. Arguments are only based on what is written in them.//

'பின்பு ஏசு கலிலியோ எங்கும் சுற்றி திரிந்து அவர்களுடையே ஜெப ஆலயங்களில் உபதேசித்து ராஜ்ஜியத்தின் சுவிசேசத்தைப் பிரசிங்கித்தார்.' - (மத்தேயு 4:23)

'ஏசு கலிலியோவில் வந்து தேவனுடைய ராஜ்ஜியத்தின் சுவிசேஷத்தைப் பிரசிங்கித்தார்' - (மாற்கு 1:14)

'காலம் நிறைவேறிற்று. தேவனுடைய ராஜ்ஜியம் சமீபமாயிற்று. மனம் திரும்பி சுவிசேஷத்தை விசுவாசியுங்கள் என்றார்' -(மாற்கு 1:15)

உங்கள் வேத கருத்துப்படியே வருகிறேன். தேவன் என்பவரை விசுவாசிக்கச் சொல்லி ஏசுவே சொல்லும் போது எந்த ஆதாரத்தின் அடிப்படையில் ஏசுவைக் கடவுளாக்கினீர்கள்?

ஏசுவுக்கு வழங்கிய அந்த சுவிஷேம் என்ன ஆனது? அதை ஏன் மக்கள் மன்றத்திலிருந்து மறைக்கப்பட்டது?

திண்டுக்கல் தனபாலன் said...

இந்தக் கொடுமை இப்போது இங்கும்... அறியாமை என்பதை தவிர என்ன சொல்ல முடியும்...?

சுவனப் பிரியன் said...

திரு திண்டுக்கல் தனபாலன்!

//இந்தக் கொடுமை இப்போது இங்கும்... அறியாமை என்பதை தவிர என்ன சொல்ல முடியும்...? //

இந்த மாய வலையில் படித்தவர்கள் முதற்கொண்டு வீழ்ந்து கிடப்பதுதான் வேதனையான விஷயம்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

Anonymous said...

அத்வானி பாதையில் குண்டு வைத்தது யார்?...

உண்மை ஆதாரம் கீழே!

''ஹைதராபாத் குண்டுவெடிப்பை இல்லாத இந்தியன் முஜாஹிதீன் செய்ததாக ஊடகங்களும், உளவுத்துறை அறிக்கைகளும் பரப்புரை செய்து வந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் மும்பையிலிருந்து புதுவை வந்த தாதர்-புதுவை சாளுக்கியா எக்ஸ்பிரஸ் ரயிலில் குண்டுவைத்த பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் தான் மதுரையில் பா.ஜ.கவின் அத்வானி வருகையின் போது பைப் வெடிக்குண்டு வைத்தவர்கள் என தெரியவந்துள்ளது.

ஒரு மோசடி வழக்கிற்காக திருச்சியை சேர்ந்த குபேரனை விசாரித்த போலீசார் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர். ஆம்! கடந்த மாதம் மும்பையிலிருந்து புதுவையை நோக்கி வந்த தாதர்-புதுவை சாளுக்கியா எக்ஸ்பிரஸ் ரயிலில் வைக்கப்பட்ட வெடிக்குண்டு தொடர்பு பற்றியும் அதனோடு தொடர்புடைய நபர்களை பற்றியும் அவன் வெளியிட்ட வாக்குமூலம் தான் அது. உடனே இது பற்றிய தகவலை வெடிக்குண்டு வழக்கை விசாரிக்கும் புதுவை மாநில சி.ஐ.டி போலீசாருக்கு தகவல் தந்தனர். புதுவை போலீசாரும் இதுபற்றிய தீவிர விசாரணையில் இறங்கினர். புதுவையை சேர்ந்த அந்த நபர்களுடன் (பெயர் வெளியிடப்படவில்லை) குபேரனை விசாரிக்க திருவண்ணாமலை ஆரணியை அடுத்த மட்டதாரியை சேர்ந்த தீனதயாளன் மற்றும் மட்டாசிமங்கலம் துறையூர் சிவசங்கர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

கடந்த பிப்ரவரி 8ம் தேதி மும்பையிலிருந்து புதுவை வந்த தாதர்-புதுவை சாளுக்கியா எக்ஸ்பிரஸ் ரயிலின் முன்பதிவு செய்யப்படாத பெட்டி ஒன்றில் இருந்த சூட்கேசில் வெடிகுண்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதை வெடிகுண்டு நிபுணர்கள் செயலிழக்கச் செய்தனர். அதை சோதனையிட்ட போது குண்டுக்குள் பசை போன்ற ஒரு பொருள் இருந்தது. அது திரவநிலை வெடிகுண்டு என்று உறுதிபடுத்தப்பட்டது. இதுதொடர்பாக புதுவை சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

புதுவை போலீசார் திருச்சி சென்று சிவசங்கரை காவலில் புதுவை அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 5 நாள் விசாரணைக்காக அவரை காவலில் எடுத்தனர். விசாரணையில் ரயிலில் வெடிக்குண்டு வைத்ததை ஒப்புக்கொண்டுள்ளான் சிவசங்கர். அவனிடம் சி.ஐ.டி. போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அவன் அளித்த தகவலின் அடிப்படையில் அவன் வீட்டிலிருந்து 5 டெட்டனேட்டர், 5 ஜெலட்டின் குச்சிகள், 7 செல்போன், 19 சிம்கார்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

Anonymous said...

........continue

‘குடும்ப பிரச்சனை காரணமாக தன் மீது ஜோதிடர் ஒருவர் பில்லி சூனியம் வைத்ததாகவும், அவரை கொல்வதற்காகத்தான் ரயிலில் குண்டு வைத்ததாகவும’ விசாரணையில் கூறி இருக்கிறான் இந்த சிவசங்கர். விசாரணையை திசை திருப்பவே அவன் இவ்வாறு தெரிவிப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

ஆனால் ரயில் எந்த இடத்தில் நின்றபோது குண்டுவைத்தான், அந்த ஜோதிடர் ரயிலில் இருந்தாரா? போன்ற விவரங்களை அவன் தெரிவிக்கவில்லை. மேலும் தனி மனிதன் ஒருவரை கொல்வதற்காக அவன் ஏன் இத்தகைய திட்டத்தை தீட்டவேண்டும்? நுட்பமான திரவ வெடிக்குண்டு அவனுக்கு எப்படி கிடைத்தது? மேலும் பயங்கரவாத செயல்கள், பயங்கரவாத தொடர்புகள் ஏதேனும் உண்டா? போன்ற விவரங்களை சேகரிக்கும் வேளையில் தீவிரமாக இறங்கியுள்ளனர் போலீசார்.

இதற்கிடையே இவ்வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட தீனதயாளனை விசாரித்தபோது மதுரையில் பா.ஜ.க அத்வானியின் ரதயாத்திரை வழியில் வைக்கப்பட்ட பைப் வெடிக்குண்டுடன் தொடர்புடையவன் என கண்டறியப்பட்டுள்ளது. இதுகுறித்தும் இதன் பின்ணணி குறித்தும் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
முன்னதாக மதுரை சம்பவத்தை வைத்து பல அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் கைது செய்யப்பட்டு பல இன்னல்களுக்கு ஆளாக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தென்காசி ஆர்.எஸ்.எஸ் அலுவலக குண்டுவெடிப்பு வழக்கில் காவி பயங்கரவாதிகளின் சூழ்ச்சி திட்டம் வெளிப்பட்ட நிலையில், அதுபோன்ற இந்த சம்பவமும் காவி பயங்கரவாதத்துடன் தொடர்பு கொண்டிருக்கும் என சந்தேகிக்கப்படுகிறது.

இந்த விசாரணையில் கைது செய்யப்பட்டிருப்பது சிவசங்கர், தீனதயாளன் மற்றும் குபேரன் என்பதால் பெரும்பாலான ஊடகங்கள் இதனை வெளியிடவில்லை. அவ்வாறு செய்தி வெளியிட்டிருந்தால் ஏதாவது ஒரு மூலையில் அறிவிப்புகள் போன்று சிறிய பெட்டி செய்தியாகத்தான் அவை இருக்கும். மாறாக இது ஒரு இஸ்லாமியரின் பெயராக இருந்திருந்தால் அவற்றின் வெளிப்பாடு, அவற்றின் பத்திரிக்கை தர்மம் அனைத்தும் கேள்விக்குறியாத்தான் இருந்திருக்கும். மேலும் கைது செய்யப்பட்டவரின் முகவரி இல்லாத அமைப்பு என தலைப்புச் செய்தியாக, விவாத பொருளாக தங்களின் முஸ்லிம் விரோத போக்கை தீர்த்திருக்கும் என்பதில் ஐயமில்லை!

Dr.Anburaj said...

சுவனப்பிரியன் ஞாபகமறதி அதிகம் போலிருக்கின்றது. தினம் தினம் பள்ளிவாசலில் வெடிகுண்டு தாக்குதல் மனித வெடிகுண்டு தாக்குதல் -சியா முஸ்லீம்கள் சாவு சன்னி முஸலீம்கள் சாவு அகமதி முஸ்லீம்கள் சாவு என்று சகோதரத்துவ சமூகத்தில் சாவுகளின் எண்ணிக்கை அளவில்லாமல் உள்ளது. உலகத்திலேயே அரபியர்களின் ஜனத்தொகை பெருகினால் பிற சமய மக்களுக்குப் பேரழிவுதான்.எனவேதான் அல்லா முகம்மதுவையும் குரானையும் படைத்து அரபிகள் அரபிகளைப் பின்பற்றுபவர்களின் எண்ணிக்கை அதிகப்படாமல் உள்ளது. முதலில் சியா-சன்னி -அகமதி வன்முறையை நீக்க வழிகாணும்.பின் தர்மபுரி பிரச்சனையைப் பேசலாம்.

Dr.Anburaj said...

இந்தியாவின் கலாச்சார பரிணாமத்தின் போக்கை நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். 10000 ஆண்டுகளுக்கு முந்தைய இந்திய சமூகததில் சாதிகள் கிடையாது. சாதிகள் அற்ற சமூகம்தான் பல ஆயிரம் சாதிகளாக ........ நிலம் மொழி தொழில் மற்றம் ஆளுமை ஆகியவற்றின் அடிப்படையில் பிரிந்துள்ளது. அனைத்தின் உள் நோக்கம் மனிதனை -திருவாசகம் சொல்வதுபோல் - அந்தணனாக்குவதே. அதற்கான நடவடிக்கையும் தொடா்ந்து கொண்டிருக்கின்றது.இன்றைய அரிசனங்களின் பிறாமணர்களின் ஆதி
மூதாதையுர் ஒரு கூட்டமே.1000 ஆண்டுகாலமாக அரசியல் நிலையற்ற தன்மை இந்தியாவில் நிலவியது. மனிதனின்பொறாமையும் பேராசையும் இணைந்து தீண்டாமை உருவாகிவிட்டது.தீண்டாமைக்கு இஸ்லாம் என்றும் மருந்து அல்ல. கௌதம புத்தர் முதல் ஆயிரக்கணக்கான சித்தர்கள் சீர்திருத்தவாதிகள் என்று இந்தியாவில் தோன்றிய அருளாளர்களின் எண்ணிக்கை எண்ணமுடியாது. அரேபியாவிலிருந்து எண்ணெய் பேரீச்சம்பழம் வேண்டுமானால் இறக்குமதி செய்யலாம். சமயம் கலாச்சாரம் இறக்குமதி செய்யும் அளவிற்கு அரேபியா உயர்ந்தது இல்லை. மனிதனை அந்தணன் ஆக்குவதே இந்திய கலாச்சாரத்தின் அடிநாதம். ஸ்ரீசுவாமி விவேகானந்தர் நூல்களைப் படித்தால் இதற்கான விளக்கங்கள் கிடைக்கும்.

Micheal Antony said...

//உங்கள் வேத கருத்துப்படியே வருகிறேன். தேவன் என்பவரை விசுவாசிக்கச் சொல்லி ஏசுவே சொல்லும் போது எந்த ஆதாரத்தின் அடிப்படையில் ஏசுவைக் கடவுளாக்கினீர்கள்?//

எங்கள் வேத கருத்துப்படி இயேசு இறைமகன் என்றே நம்புகிறோம், அதற்கான வசனங்கள் பைபிளில் உண்டு, ஓன்று சொல்லுங்கள் நாங்கள் இயேசுவை கடவுளாக்கியதில் முஸ்லிம்களுக்கு என்ன பிரச்சனை, யாருங்க இந்த முஸ்லிம்கள் என்பவர்கள்.

//ஏசுவுக்கு வழங்கிய அந்த சுவிஷேம் என்ன ஆனது? அதை ஏன் மக்கள் மன்றத்திலிருந்து மறைக்கப்பட்டது?//

அதை எங்களிடம் கேட்டால் எங்களுக்கு எப்படி தெரியும். மறைந்துவிட்டது, மனிதகரம் பட்டுவிட்டது என்று சொல்பவர்களிடம் அல்லவா கேட்கவேண்டும், நாங்களா சொல்லிக்கொண்டு இருக்கிறோம். மறைக்கப்பட்டது என்று. அல்லா சொல்லி இருந்தால் எங்கே மறைந்தது என்று கண்டிப்பாக அவருக்கு தெரிந்து இருக்கும், குர்ஆனில் சொல்லி இருப்பார் மறைந்த இடத்தை, முகமது சொல்லி இருந்தால், எங்கே மறைந்தது என்று ஹதீஸில் சொல்லி இருப்பார், நீங்கள் சொல்வதாக இருந்தால் எங்கே போனது என்று உங்களுக்கு தெரிந்து இருக்கும் கொஞ்சம் சொல்லுங்களேன்.

Dr.Anburaj said...

என்னவோ குரான் என்பது சொா்கத்தில் உள்ள அச்சகத்தில் அல்லாவின் முன்னிலையில் திருத்தம் செய்து அல்லாவால் சாிபாா்க்கப்பட்டது என்று குறிப்பும் எழுதி கையொப்பம் இட்டு புத்தகங்களாக செய்து புமிக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றது. இன்றும் தேவையான பிரதிகள் அனைத்தும் சொா்க்கத்திலிருந்துதான் வருகின்றதுபோல் சுவனப்புத்திரன் கதைக்கின்றாா். முகம்மது காலத்தில்குரான் கிடையாது. அபுபக்கா்கலிபாவாக இருந்து காலத்தில் குரான் என்ற அரேபிய புத்தகம் தொகுக்கப்படவில்லை. அதற்குபின் வந்த உதுமான என்ற கலிபா முகம்மதுவின் வாழ்ககைசம்பவங்கள் மற்றும் உபதேசங்கள் ஆகியவற்றை தொகுக்கும் பணியில் ஈடுபட்டாா். படிப்றிவு பண்பாடு கிஞ்சித்தும் இல்லாத காட்டறவிகள் மத்தியில் ஏரளாமான கட்டுக்தைகள் காட்டுமிராண்டித்தனமான சம்பவங்கள் நறை ய இருந்தது. குரான் தயாாித்து பின் அழித்து விட்டாா். பின்னா் தொகுத்து 6 பிரதிகள் எடுத்து பலமுக்கியஸ்தா்களுக்கு கொடுத்து அனுப்பினாா். இதுதான் சீமையில்லாத சரக்கு குரான் என்ற புத்தகம் உருவான கதை. உதுமான முதலில் தயாாித்த குரானை ஏன் எாித்தாா் ? எாிக்கும்போது அல்லா ஏன் தடுக்கவில்லை. மனித இச்சைபடிதான் குரான் தொகுக்கப்பட்டது.முகம்மதுவும் தன் மன ஒட்டங்களை அரேபிய கலாச்சார நம்பிக்கைகளை இறைவனின் கட்டளை என்று கதைகட்டி மக்களின் விசுவாசம் தன் பக்கம் இருக்கும் வண்ணம் பாா்ததுக்கொண்டாா்.அழகிய பணக்கார பெண்களின் கணவளைக் கொன்று அப்பபெண்ணையும் அவள் சொத்துக்களையும் கைப்பற்றுவது அன்றைய அரேபிய கலாச்சாரத்தில் சாதாரணமான நிகழ்வு. முகம்மதுவும் அதை தாராளமாகச் செய்தாா். அதையேகுரானில் இறை கட்டளையாக பொய்யுரைத்து சோ்த்தாா். வலககரம் -போா்களத்தில் செத்தவன் கைதானவன் குடும்பத்தைச் சோ்ந்த பெண்களை அடிமைகளாக வைப்பாட்டிகளாக விற்பன பொருளாக வைக்கும் -குமுஸ் கலாச்சாரத்திற்கு ஏற்ப முகம்மதுவும் எதிா் அணி வீரா்களின் பெண்களை வைப்பாட்டிகளாக வைத்துக்கொண்டாா்.தனது வீரா்களுக்கு பெண்களைப் பங்கு போட்டுத் கொடுத்தாா். முகம்மதுவிற்கு 13 திருமணம்.ஆனால் 40 குமுஸ் பெண்களை வைப்பாட்டிகளாக வைத்திருந்ததாா். அரேபிய அடைவடித்தனங்கள் எல்லாம் ஆண்டவனின் கட்டளையாகி குரான் ஆனது. குரான் வேதம் அல்ல. முகம்மது என்ற அரேபியனின் கட்டுக்கதை. அலிசேனா இறையில்லா இஸ்லாம் செங்கொடி போன்ற வலைதளங்களை முதலில்படியுங்கள் .பின் நிறைய எழுதலாம்.அரேபிய குப்பைகள் வண்டி வண்டியாக உள்ளது.