Followers

Saturday, August 10, 2013

தமிழ்நாடு வெளங்கிடும்...தலைவா படத்துக்காக தூக்காம்!துடியலூர்,ஆக.10

கோவை துடியலூர் கே.ன்.ஜி.புதூர் பகுதியை சேர்ந்தவர் ஆனந்தன். இவரது மகன் விக்ரம் (எ) விஷ்ணுகுமார் (வயது 20). கட்டிட வேலை செய்து வந்தார். இவர் நடிகர் விஜய்யின் தீவிர ரசிகர். விஜய் படம் எப்போது ரிலீசானாலும் உடனே பார்த்து விடுவார்.

நேற்று நடிகர் விஜய் நடித்த தலைவா படம் ரிலீஸ் ஆக வில்லை. படம் பார்க்கும் ஆவலில் விஷ்ணுகுமார் கோவை சென்ட்ரல் தியேட்டருக்கு நேற்று காலை 6 மணிக்கே வந்தார். அங்கு படம் திரையிடப்படவில்லை. இதனால் விஷ்ணுகுமார் மிகவும் மன வேதனையடைந்தார்.

கேரளாவில் தலைவா படம் ரிலீஸ் ஆனதால் பாலக்காட்டுக்கு படம் பார்க்க சென்றார். அங்கு உள்ள தியேட்டர்களிலும் தலைவா படம் பார்க்க விஷ்ணுகுமாருக்கு டிக்கெட் கிடைக்கவில்லை.

மனவேதனையுடன் கோவை திரும்பினார். மீண்டும் கோவையில் உள்ள தியேட்டர்களுக்கு சென்று படம் ரிலீசாகியுள்ளதா என்று பார்த்தார். எந்த தியேட்டரிலும் தலைவா படம் திரையிடப்படவில்லை. மிகவும் வருத்தத்துடன் வீடு திரும்பிய விஷ்ணுகுமார் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தகவல் அறிந்து வந்த துடியலூர் இன்ஸ்பெக்டர் கனகசுந்தரம் விஷ்ணு குமார் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்.

நன்றி மாலை மலர்இது போன்று கூத்தாடிகளை அளவுக்கதிகமாக முக்கியத்துவம் கொடுத்து இன்னும் எத்தனை இளைஞர்களை பலி கொடுக்க போகிறோம். முதலில் ரசிகர் மன்றங்களுக்கு தடை விதித்து பெரும் கட்அவுட் வைப்பதற்கும் தடை விதித்தால் ஓரளவாவது இவர்களின் முக்கியத்துவத்தைக் குறைக்க முடியும். ஒவ்வொரு படத்திற்கும் கோடிகளில் சம்பளத்தைப் பெற்று சுகமாக வாழ்ந்து வரும் இந்த கூத்தாடிகளின் வாழ்க்கையை இறந்த அந்த இளைஞன் நினைத்துப் பார்த்திருப்பானா? தற்கொலைக்கு செல்லும் இந்த கோழைகளை தடுத்து நிறுத்த ஏன் எந்த சமூக சீர்திருத்தவாதிகளும் தமிழகத்தில் முயலுவதில்லை?

இந்து மத காவலர்களாக காட்டிக் கொள்ளும் பிஜேபி இந்து முண்ணனியினர் இது போன்று சினிமா நடிகர்களால் சீரழியும் இளைஞர்களை நேர் வழி படுத்த முயற்சிக்கலாம். அதன் மூலம் தங்கள் கட்சியை வளர்க்க முயற்ச்சிக்கலாம். இதனால் நமது நாடும், இந்து மதமும் செழுமையடையும். அதை விடுத்து கந்து வட்டி பிரச்னை, காதல் பிரச்னை, நிலப் பிரச்னை, குடும்ப பகை காரணமாக விழும் கொலைகளை இஸ்லாமியர்களோடு இணைத்து தங்கள் கட்சியை வளர்க்க பிஜேபியும், இந்து முண்ணனியும் முயல்கிறது. இதனால் பிஜேபி வளர துளியும வாய்ப்பில்லை. எனவே இஸ்லாமிய வெறுப்பை தூர வைத்து விட்டு இந்து மத சீர்திருத்தத்தை கையிலெடுத்தால் வரும் தேர்தலில் ஏதோ டெபாசிட்டாவது பிஜேபிக்கு கிடைக்கலாம் என்று சொல்லி வைக்கிறோம்.

5 comments:

சிராஜ் said...

பொதுவா விஜய் படம் பார்த்த பிறகு சிலர் தூக்கு போட்டு சாவாங்க...
தம்பி கொஞ்சம் முந்திகிட்டாப்ல.....

கடுப்பா இருக்கு இந்த பையனை நினைச்சா..

சுவனப் பிரியன் said...

வாங்க சிராஜ்!

//பொதுவா விஜய் படம் பார்த்த பிறகு சிலர் தூக்கு போட்டு சாவாங்க...
தம்பி கொஞ்சம் முந்திகிட்டாப்ல.....

கடுப்பா இருக்கு இந்த பையனை நினைச்சா..//

தமிழகத்தின் பெரும்பாலான இளைஞர்களின் நிலை இதுதான். பாவம் இவனை பெற்ற பெற்றோர்கள்.

AL Mumin said...

இந்தியாவின் எதிர்காலமாக இருக்கும் இளைஞர்கள் இப்படி கூத்தாடிகளை தலைவர்களாக ஏற்று கொண்டு
தன் வாழ்கையை தொலைக்கின்றனர். இது போன்ற கூத்தாடிகள் சினிமாவில் சொல்லும் வசனங்களை எல்லாம்
உண்மை என நம்புகின்றனர் . உண்மையில் இது போன்ற கூத்தாடிகள் நிஜவாழ்கையில்
இருப்பதோ வேறு .

சுவனப் பிரியன் said...

சகோ மூமின்!

//உண்மையில் இது போன்ற கூத்தாடிகள் நிஜவாழ்கையில்
இருப்பதோ வேறு .//

சரியாக சொன்னீர்கள். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

Anonymous said...

இதை படிங்க முதல்ல...

நேற்று - மதியம் பஸ் பயணத்தின்போது..

சபரி மலையில் இருந்து வேலூர் திரும்பும் ஒரு அய்யப்ப பக்தர் அருகில் நின்று கொண்டிருந்த ஒரு முஸ்லிம் பெரியவருக்கு இருக்க இடமளித்து எழும்பி நின்றார்...

அந்த பெரியவர் நீங்க இருங்க தம்பி மலையில் இருந்த இறங்கி களைப்பாக வந்திருப்பீங்க என கூறி இருக்க மறுத்தார்...

நான் ரெயிலில் வரும்போதே நல்லா ரெஸ்ட் எடுத்துட்டேன் நீங்க நோன்பு பிடிசிருப்பீங்க காலைல இருந்தே எதுவும் சாப்பிடாம களைப்பா இருப்பீங்க... நீங்க உக்காருங்க என்று சொல்லி உக்கார வைத்தார்...

மக்கள் தெளிவாகத் தான் இருக்காங்க.இடையில் புகுந்து ஆட்டையைக் கொழப்புறது ஓட்டு வாங்கிகள் தான்.

via; தமிழன் என்கிற திமிரு எனக்கும் உண்டு