Followers

Wednesday, August 14, 2013

மோடிக்குப் பொறுப்பில்லையா?



2002 - கோத்ரா ரயில் பெட்டி எரிப்பு என்பதைக் காரணம் காட்டி நரேந்திர மோடி அரசால் கட்ட விழ்த்து விடப்பட்ட திட்டமிடப்பட்ட வன்முறையால் சிறுபான்மை மக்களான முஸ்லிம்கள் கொன்று குவிக்கப்பட்டனர்.

சுதந்திரத்திற்குப் பிறகு மதக் கலவரத்தில் பலியானோர் எண்ணிக்கை என்று பார்க்கும்போது மோடி அரசில் நடத்தப்பட்ட மனித வேட்டைதான் முதல் இடத்தில் இருக்கும்.

மோடி குற்றமற்றவர் என்ற ஒரு பெருமழைப் பிரச்சாரத்தை பார்ப்பன மேல் ஜாதி ஊடகங்கள் செய்துகொண்டு இருக்கின்றன. பண முதலைகளும் மோடியின் பக்கம் வலுவாக நின்று கொண்டுள்ளன.

2002 முதல் குஜராத்தில் நடைபெற்ற வன் முறைக்குக் காரணமான குற்றவாளிகளுக்குத் தண்டனைகள் ஒவ்வொன்றாக நீதிமன்றத்திலிருந்து வந்துகொண்டுள்ளன.

மோடி அமைச்சரவையில் உயர்கல்வித் துறை அமைச்சராக இருந்த மாயாபென் கோட்நானி என்னும் பெண் அமைச்சர் (அவர் ஒரு டாக்டரும்கூட!) பாட்டியா மாவட்டம், நரோடா என்னும் கிராமத்தில் 95 முசுலிம்கள் (குழந்தைகள் 35 பேர்) கொல்லப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளியாவார். குற்றம் நிரூ பிக்கப்பட்டு 28 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட் டுள்ளார். அவரோடு மேலும் 31 பேர்களுக்கு ஆயுள் தண்டனை!
இப்படி தண்டனைகள் ஒவ்வொன்றாக வெளி வந்து கொண்டிருக்கின்றன. இன்று ஒரு தகவல்:

குஜராத் மாநில கூடுதல் காவல்துறைத் தலைமை இயக்குநர் (டிஜிபி) பாண்டே இப்பொழுது சிறையில் இருக்கிறார்.

2004 ஆம் ஆண்டில் இஸ்ரத் ஜகான் என்ற பெண் உள்பட நான்கு பேர் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் இந்தப் பாண்டே குற்றவாளி என்கிற அடிப்படையில்தான் இந்தத் தண்டனை; அவரின் பிணை மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.

கோத்ரா சம்பவத்திற்குப் பிறகு அவசர அவசரமாக முதலமைச்சரால் கூட்டப்பட்ட அவசரக் கூட்டத்தில் பங்கேற்ற காவல்துறை உயர் அதிகாரிகள் சிறீகுமார், ஷர்மா, சஞ்சீவி பட் ஆகியோர் மோடி கட்டளை யிட்டதை அம்பலப்படுத்தினரே!

நாளை நடக்கும், கொலை, கொள்ளை, தீ வைப்பு, சூறையாடல் சம்பவங்களின்போது காவல்துறை கண்டுகொள்ளக் கூடாது; தலையிடக் கூடாது என்று முதலமைச்சர் மோடி ஆணையிட்டார் என்று கூறி யுள்ளனரே!

முதலமைச்சர் நரேந்திர மோடி கூட்டிய கூட்டத்தில் கலந்துகொண்டவர் அமைச்சர் ஹிரேன் பாண்டியா. விசாரணை ஆணையத்திடம் கூட்டத்தில் நடந்தவை களைக் கூறியவர் இவர்.

விளைவு என்ன? ஹரேன் பாண்டியா நடைப் பயிற்சியில் ஈடுபட்டு இருந்தபோது படுகொலை செய்யப்பட்டுவிட்டாரே! தன் மகன் படுகொலைக்குக் காரணம் முதலமைச்சர் நரேந்திர மோடிதான் என்று அவரின் தந்தையார், நீதிபதி நானாவதி ஆணை யத்திடமும் கூறியுள்ளாரே!

குஜராத் வன்முறையில் பதிவு செய்யப்பட்ட வழக் குகளின் எண்ணிக்கை 4252; 2000 வழக்குகளை மோடி அரசு விலக்கிக் கொண்டுவிட்டது. அந்த வழக்குகள் மீதும் மீண்டும் புலனாய்வு மேற்கொள்ளப் படவேண்டும் என்று உச்சநீதிமன்றம் அழுத்தமாகக் குட்டு வைத்ததால், அந்த வழக்குகள் பெயர் அளவுக்கு விசாரணைக்கு உட்பட்டுத்தப்பட்டன.

இவ்வளவும் குஜராத் மாநிலத்தில் முதலமைச்சர் மோடியின் காலத்தில்தான் நடைபெற்றது. இதற்கு யார் பொறுப்பு? எனக்குச் சம்பந்தம் இல்லை என்று ஒரு முதலமைச்சர் கூறுவாரேயானால், அவரைவிடப் பொறுப்பற்றவர், கடமை என்ற சொல்லை அசிங்கப் படுத்துபவர் யாராகத்தான் இருக்க முடியும்?

அரியலூரில் ரயில் கவிழ்ந்ததால் மத்திய அமைச்சர்கள் லால்பகதூர் சாஸ்திரியும், தமிழகத் தைச் சேர்ந்த ஓ.வி.அளகேசனும் பதவி விலக வில்லையா?

அந்தப் பண்பாடு பா.ஜ.க.வில் அறவேயில்லை என்பதற்கு மிகப்பெரிய எடுத்துக்காட்டு குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடிதான்.

இந்தத் தன்மையில் உள்ளவர்தான் இந்தியா வுக்குப் பிரதமராக வரக் கங்கணம் கட்டிக் கொண்டு குதிக்கிறார்.

வாக்காளர்கள் ஏமாந்துவிட வேண்டாம்! எச்சரிக்கை!!

விடுதலை

15-08-2013

---------------------------------------------------------------------

அனைவருக்கும் இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள். எவ்வளவுதான் அநியாயங்களை இந்திய அரசு சிறுபான்மையினர் மீது அரங்கற்றினாலும் கண்டிப்பாக ஒரு நாள் இதற்கான விடிவுகள் கிடைக்கும் என்று ஒவ்வொரு முஸ்லிமும் ஒவ்வொரு இந்திய குடிமகனும் எதிர்பார்ப்பில் இருக்கிறான். நம்பிக்கையில்தானே வாழ்க்கை ஓடுகிறது.

8 comments:

Unknown said...

அஸ்ஸலாமு அலைக்கும் , சுவனப்பிரியன் !

உத்தரகாண்டில் கடும் மழை பொழிவால் ஏற்ப்பட்ட வெள்ளத்தில்
பெரும் பாதிப்பு ஏற்பட்டது .
அதையும் அரசியல் ஆக்க முயன்றது மோடி .
மோடிக்கு காவடி தூக்கும் சில தமிழ் பத்திரிக்கைகள்
அவர் கூறும் பொய்யை ஆர்வகோளாரில் உண்மையென நம்பி ,
15,000 பேர்ரை மீட்ட சூப்பர் மேன் மோடி
என்று வெளியிட்டது .
கடைசியில் அவர் காப்பாற்றுவதற்காக பயன்படுத்திய
வாகனங்களை கணக்கு பார்த்ததில்
2000 பேர் கூட அழைத்து சென்றிருக்க முடியாது என்பது உறுதுயானது !
அந்த இக்கட்டான சூழ்நிலையிலும் கூட அதை
வைத்து அரசியல் செய்யும் கேவளமான புத்திதான் மோடிக்கு
உள்ளது . இது போன்ற அரசியல் வாதியை அல்லாஹ் நாடினால்
கிதாயத்து கிடைக்கட்டும் , இல்லையெனில் இந்த பூமியைவிட்டும்
அகற்றி சுத்தபடுத்தட்டும் என அல்லாஹ்விடம் பிராத்திதவனாக
என் பதிவை முடிவு செய்கிறேன் .
சகோ சுவனபிரியனுக்கு சுதந்திர தின வாழ்த்து கூறுவதோடு,
சுதந்திர போறாட்டத்திற்காக பல ஆயிரகணகான முஸ்லிம்களும்
தம் இன்னுயிர் நீத்துள்ளனர் . என்பதை அனைவருக்கும் கூற
கடமைபட்டுள்ளேன் . !!

suvanappiriyan said...


இந்தியன்!

@suvanappiriyan

//The question is WHY? Why should women cover the whole body except face and hands? Are Muslims that they cannot control their lust? Even animals have a fair degree of control over their lust.Are they worse than animals?//

இதே புர்கா இல்லாமல் அரை குறை ஆடைகளுடன் தெருவில் திரிவதால்தான் இந்தியாவில் கற்பழிப்புகள் அதிகம் நடக்கின்றன. புர்கா அணிந்து சென்றால் அந்த பெண்ணின் மேல் நம்மையறியாமலேயே ஒரு மரியாதை வந்து விடும். பெண்களுக்கும் பாதுகாப்பு. டெல்லி மருத்துவ கல்லூரி மாணவி வன் புணர்வு , வினோதினி ஆசிட் வீச்சையெல்லாம் நாம் அவ்வளவு சீக்கிரம் மறந்து விட முடியாது. இதற்கெல்லாம் மூல காரணம் ஆபாச உடைகளே!

//Why should Islam allow men to marry four ( or is it five!) women? Why there is no equality in Islam?//

உடல் ரீதியாகவும் மன சீதியாகவும் ஆணும் பெண்ணும் சமமல்ல என்பது மருத்துவ ஆய்வு வெளியிடும் முடிவாகும். எனவே ஆணும் பெண்ணும் சமம் என்பது நகைப்பிற்குரிய வாதம்.

குழந்தை இன்மை, பெண்கள் அதிகரிப்பு, பெண்கள் உடலுறவில் ஈடுபடும் தன்மையை இழத்தல் போன்ற அத்தியாவசிய காரணங்கள் இருந்தாலே ஆண்களுக்கு வேறொரு திருமணம் செய்ய இஸ்லாம் கட்டளையிடுகிறது. அனுமதி இருந்தும் இந்தியாவில் 99 சதவீதமான இஸ்லாமியர்கள் ஒரு மனைவியுடனேயே வாழ்கிறார்கள். பலதார மணத்தால் சின்ன வீடு வைத்துக் கொள்ளும் பழக்கம் குறைகிறது. அந்த பெண்ணுக்கும் குழந்தைக்கும் சமூக அந்தஸ்து கிடைக்கிறது.

suvanappiriyan said...


சாரங்!

//33.30
O Consorts of the Men! If any of you were guilty of evident unseemly conduct, the Punishment would be doubled to her, and that is easy for Allah.

அனைவரும் படிக்க வேண்டிய குர்ஆனில் எதற்கு ஒரு தூதரின் மனைவிகளுக்கு எச்சரிக்கை. அப்படி எச்சரிக்க விடுவதாகின் எல்லா பெண்களுக்கும் அல்லாவா விட வேண்டும் //

இறைத் தூதரின் மனைவிகள் உலக முஸ்லிம்களுக்கு அன்னையின் ஸ்தானத்தை பெற்றவர்கள். ஒரு சாதாரண குடும்பப் பெண் வழி தவறினால் அந்த குடும்பம் மட்டுமே பாதிக்கப்படும். நபியின் மனைவிகள் தவறிழைத்தால் ஒட்டு மொத்த இஸ்லாமிய சமூகமே பாதிக்கப்படும். எனவே தான் வெட்கக் கேடான செயல்களை அவர்கள் செய்தால் இரு மடங்கு வேதனை என்ற சட்டம் இறங்கியது. இது அந்த பெண்மணிகளின் உயர்ந்த அந்தஸ்தையே காட்டுகிறது.

உதாரணத்திற்கு சாதாரண குடும்பப் பெண்ணிற்கும் ராமனின் மனைவி சீதைக்கும் நிறையவே வித்தியாசம் உண்டு. சீதை மிகவும் கண்ணியத்தோடு நடந்து கொள்ள வேண்டும் என்று நீங்களும் விரும்புவீர்கள். இந்து சமூகமும் விரும்பும். இதைப் புரிந்து கொண்டால் இந்த வசனம் நமது இந்தியாவுக்கும் பொருந்தும் என்பது விளங்கவில்லையா சாரங்!

suvanappiriyan said...

வெள்ளை வாரணன்!

//மகனுக்கு கொடுக்கும் சொத்தில் பாதி தான் மகளுக்கு என்கிறாயே இதன் பேர்தான் சமத்துவமா யாரை ஏமாற்றுகிறாய் ? ஒரு ஆண் மகன் சொல்லும் சாட்சியத்தை மறுக்க இரண்டு பெண்கள் சேர்ந்து சாட்சியம் சொல்ல வேண்டும் என்கிறாயே இது தான் சமத்துவமா ? யாரை ஏமாற்றுகிறீர்கள் ?//

ரொம்பவும் டென்ஷனாயிட்டது மாதிரி இருக்கே...:-(

கிரேக்கர்கள் பெண்களை வியாபாரப் பொருட்களாகவே கருதினர். அவர்களுக்கென எந்த உரிமையும் கிடையாது. உரிமைகள் அனைத்தும் ஆண்களுக்கே என்றனர். இன்னும் அப்பெண்களுக்குச் சொத்துரிமை, கொடுக்கல், வாங்கல் போன்ற உரிமைகள் தடுக்கப் பட்டிருந்தன. அவர்களில் பிரபல்யமான தத்துவஞானியான சாக்ரடீஸ் என்பவன் பெண்கள் இருப்பது உலகின் வீழ்ச்சிக்கு மிகப்பெரும் மூல காரணமாகும். மேலும் பெண்கள் விஷ மரத்திற்கு ஒப்பானவர்கள். அம்மரத்தின் புறத் தோற்றம் அழகாக இருக்கும். எனினும் அதன் கனிகளை சிட்டுக்குருவிகள் தின்றவுடனேயே இறந்துவிடுகின்றன என்று கூறியுள்ளான்.

ரோமானியர்கள் பெண்களை உயிரற்ற ஒரு பொருளாகவே கருதி வந்துள்ளனர். அவர்களிடம் பெண்களுக்கு எந்த மதிப்பும் உரிமையும் இருந்ததில்லை. பெண்கள் உயிரற்ற பொருளாகக் கருதப்பட்டதால்தான் அவர்களைக் கொதிக்கின்ற எண்ணெயை ஊற்றியும், தூண்களில் கட்டியும் வேதனை செய்தார்கள். இதுமட்டுமின்றி குற்றமற்ற பெண்களை குதிரைகளின் வால்களில் கட்டி அவர்கள் மரணித்து போகின்ற அளவிற்கு மிக விரைவாக ஓட்டிவிடுவார்கள்.
பெண்கள் விஷயத்தில் இந்தியர்களின் கண்ணோட்டமும் இவ்வாறுதான் இருந்துள்ளது. அவர்கள் இன்னும் ஒருபடி அதிகமாக கணவன் இறந்துவிட்டால் அவனின் சிதையுடன் மனைவியையும் எரித்து விடுபவர்களாகவும் இருந்திருக்கின்றனர்.
சீனர்கள் பெண்களை நற்பாக்கியத்தையும் செல்வங்களையும் அழித்துவிடக்கூடிய தண்ணீருக்கு ஒப்பாக்கினர். அவர்கள் தம் மனைவியரை உயிரோடு புதைத்து விடுவதற்கும் விற்றுவிடுவதற்கும் உரிமை பெற்றிருந்தனர்.
பெண்கள் சாபத்திற்குரியவர்களென யூதர்கள் கருதுகிறார்கள். ஏனெனில் அவள் தான் ஆதம்(அலை) அவர்களை வழிகெடுத்து மரக்கனியை சாப்பிடச் செய்துவிட்டாள். மேலும் பெண்ணுக்கு மாதவிடாய் வந்துவிட்டால் அவள் அசுத்தமானவள், வீட்டையும் அவள் தொடும் பொருளையும் அசுத்தப்படுத்திவிடக்கூடியவள் எனவும் கருதுகிறார்கள். பெண்ணுக்குச் சகோதரர்களிருந்தால் அவள் தன் தந்தையின் சொத்தில் சிறிதும் உரிமை பெறமாட்டாள் எனவும் கருதுகிறார்கள்.
கிறிஸ்தவர்கள் பெண்களை ஷைத்தானின் வாசலாகக் கருதுகிறார்கள். கிறுத்தவ அறிஞர்களில் ஒருவர் பெண் மனித இனத்தைச் சார்ந்தவளல்ல எனக் கூறினார். இன்னும் புனித பூனபெஃன்தூரா என்பவன் கூறினான்: ”நீங்கள் பெண்களைக் கண்டால் அவளை மனி த இனத்தைச் சார்ந்தவள் எனக் கருதிவிடாதீர்கள். அது மட்டுமல்ல அவளை ஒரு உயிருள்ள ஜீவனாகக் கூட கருதாதீர்கள். மாறாக நீங்கள் காண்பது நிச்சயமாக ஷைத்தானின் உருவத்தைத்தான். இன்னும் நீங்கள் செவியேற்கும் அவளது சப்தம் பாம்பின் சீற்றம் தான்”"

மேலும் கடந்த(19ஆம்) நூற்றாண்டின் நடுப்பகுதி வரை ஆங்கிலேயே பொதுச் சட்டப்படி பெண்கள் பிரஜா உரிமை கொடுக்கப்படாதவர்களாக இருந்தனர். இதுபோன்றே பெண்களுக்கென எந்த தனிப்பட்ட உரிமைகளும் கிடையாது. இன்னும் அவள் அணியும் ஆடை உட் பட எந்தப் பொருளையும் சொந்தப்படுத்திக் கொள்வதற்கும் உரிமையில்லை. 1567 ஆம் ஆண்டு ஸ்காட்லண்ட் பாராளுமன்றம் பெண்களுக்கு எந்த அதிகாரமும் கொடுக்கக்கூடா தென சட்டம் இயற்றியது. இவ்வாறே எட்டாவது ஹென்றியின் காலத்தில் ஆங்கிலேயப் பா ராளுமன்றம் பெண்கள் அசுத்தமானவர்கள் என்பதால் இன்ஜீலைப் படிக்கக் கூடாதென சட்டம் இயற்றியது.

உலகம் முழுவதும் பெண்களின் நிலை இவ்வாறு இருக்கும் போது பெண்களுக்கும் சொத்தில் பங்கு கொடுத்து அந்த பெண்மையை மேன்மைப்படுத்தியது இஸ்லாம். ஆண்களுக்கு தாய் தந்தையரை பாதுகாப்பது, தங்கை, அக்கா, தம்பி போன்ற உடன் பிறந்தவர்களின் படிப்பு, மருத்துவ செலவு, திருமண செலவு போன்றவற்றை ஏற்கும் பொறுப்பை ஆண் மகனே ஏற்றுக் கொள்வதால் அவனுக்கு சொத்தில் சற்று கூடுதலாக பிரித்துக் கொடுக்கப்படுகிறது. பெண் திருமணம் முடித்து தனது கணவன் வீட்டுக்கு சென்று விட்டால் பிறகு எந்த உதவிகளையும் தனது பிறந்த வீட்டுக்கு செய்வதில்லை. உலகம் முழுக்க உள்ள நிலை இதுதான். எனவே தான் ஆண்களுக்கு சொத்தில் அதிக பங்கு கொடுக்க இஸ்லாம் கட்டளையிட்டது. அதுதான் நியாயமும் கூட...

Anonymous said...

இந்திய முஜாஹிதீன் பெயரில் போலி எஸ்.எம்.எஸ்: பாலிடெக்னிக் மாணவர் கைது!

1 Mar 2012

கொல்கத்தா:இந்திய முஜாஹிதீன் என்ற இயக்கத்தின் பெயரால் தாக்குதல் மிரட்டல் செய்தியை எஸ்.எம்.எஸ் மூலம் அனுப்பிய பாலிடெக்னிக் மாணவர் சவ்ராதீப்சிங்(வயது 17) என்பவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

ஸீல்டா, ஹவுரா ஸ்டேசன்களிலும், முதல்வர் மற்றும் தலைமை போலீஸ் அதிகாரியின் அலுவலகத்திலும், அருகிலுள்ள பாரா பஜாரிலும் கடந்த செவ்வாய்க்கிழமை வேலை நிறுத்தம் நடைபெற்ற நாளில் குண்டுவைக்கப் போவதாக எஸ்.எம்.எஸ் மிரட்டல் வந்தது.

இச்செய்தியுடன் ‘இந்தியன் முஜாஹிதீன்’ என்ற பெயரையும் இணைத்து சவ்ராதீப் சிங் ஏராளமானோருக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பியுள்ளார். எஸ்.எம்.எஸ் செய்தி வேகமாக பரவியதை தொடர்ந்து போலீஸ் பாதுகாப்பை பலப்படுத்தி விசாரணையை துவக்கியது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை சவ்ராதீப் சிங் எஸ்.எம்.எஸ் செய்தியை அனுப்பியுள்ளார். அவருடைய ஃபோன் நம்பரை பின் தொடர்ந்த போலீஸ் செவ்வாய்க்கிழமை கைது செய்தது. பிர்பம் மாவட்டத்தில் உள்ள சூரியில் சவ்ராதீபின் வீட்டில் வைத்து போலீஸார் அவரை கைது செய்தனர். ஐ.டி சட்டத்தின் அடிப்படையில் போலீஸ் வழக்கு பதிவுச் செய்துள்ளது.

இம்மாதம் 6-ஆம் தேதி சவ்ராதீப் சிங் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார். இவருக்கு 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது என்று அரசு தரப்பு வழக்குரைஞர் ஸைஃபுல் அலி கான் தெரிவித்துள்ளார்.


நண்றி தூதுஆன்லைன்

Anonymous said...

பெண்களுக்குரிய பொதுவான உரிமைகள்

நிச்சயமாக பெண்கள் அவசியம் தெரிந்திருக்க வேண்டிய பொதுவான உரிமைகள் உ ள்ளன. அவற்றை அவள் விரும்பும்போது பூரணமாகச் செய்து கொள்வதைச் சமூகம் அங்கீகரிக்கவும் செய்கின்றது. அவ்வுரிமைகள் வருமாறு:

1- சொந்தமாக்கிக் கொள்ளல்: வீடுகள், விவசாய நிலங்கள், தோட்டங்கள், வெள்ளி, தங்கம், கால்நடை வகைகள் இவற்றில் விரும்பியவற்றை ஒரு பெண் தனக்கு சொந்தமாக்கிக் கொள்ளலாம். அப்பெண் தாயாக அல்லது மகளாக அல்லது சகோதரியாக இருப்பி னும் சரி.

2- திருமணம் செய்வது, கணவனைத் தேர்வு செய்வது, தனக்கு விருப்பமில்லாதவனை ஏற்கமறுப்பது, தனக்கு இடையூறு ஏற்பட்டால் திருமண ஒப்பந்தத்தை முறித்துக் கொள் வது போன்றவற்றிலும் அவள் உரிமை பெறுகிறாள். இவை பெண்களுக்குரிய உரிமைகள் என்பதில் ஏகமனதான முடிவாகும்.

3- தனக்கு அவசியமானவற்றைக் கற்றுக் கொள்தல்: உதாரணமாக அல்லாஹ்வை அறிவது, அவனுக்குச் செய்ய வேண்டிய வணக்கங்களையும் அதை நிறைவேற்றும் முறையையும் அறிவது. இன்னும் தன்னுடைய கடமைகளையும் தனக்குத் தேவையான ஒழுக்கங்களையும் தான் கடைபிடிக்க வேண்டிய சிறந்த பண்பாடுகளையும் அறிவது. ஏனெனில் வண க்கத்திற்குத் தகுதியானவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்பதை நீ அறிந் துகொள்.(47:19) என அல்லாஹ்வும், கல்வியைத் தேடுவது ஆண், பெண் அனைவர் மீதும் கடமையாகும்(இப்னுமாஜா) என நபி(ஸல்) அவர்களும் பொதுவாகவே சொல்லியிருப்பதால்.

4- செலவு செய்தல்: தனது பொருளில் தான் நாடியதைத் தர்மம் செய்து கொள்வதற்கும், தனக்கும் தனது கணவன், பிள்ளைகள், தாய், தந்தையர்கள் இவர்களில் தான் விரும்பியவர்களுக்கு வீண், விரயமில்லாத அளவுக்கு செலவு செய்து கொள்வதற்கும் உரிமை பெறுகிறாள். இவ்விஷயத்தில் இவர்களும் ஆண்களைப் போன்று தான்.

5- விருப்பு, வெறுப்புக் கொள்தல்: அவள் நல்ல பெண்களை விரும்பவும், அவர்களைச் சந்திக்கவும், அன்பளிப்புகள் வழங்கவும் செய்யலாம். இன்னும் அவர்களுக்குத் தபால்கள் அனுப்பி அவர்களின் நிலைமைகளைக் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். கஷ்டகாலங்களில் அவர்களுக்கு ஆறுதலும் சொல்லிக் கொள்ளலாம். அல்லாஹ்விற்காக கெட்ட பெண்களை வெறுத்து, அவர்களை விட்டும் ஒதுங்கி விடுவதும் கூடும்.

6- மரணசாசனம்: அவளின் சொத்தில் மூன்றில் ஒன்றை அவளது ஜீவிதகாலத்தில் மரண சாசனம் எழுதிக்; கொள்வதற்கும் அதை எவ்வித ஆட்சேபணை செய்யாமல் செயல்படுத்து வதும் அவளது உரிமைகளிலுள்ளதாகும். ஏனெனில் மரணசாசனம் எழுதுவதென்பது பொதுவான மனித உரிமைகளைச் சார்ந்ததாகும். எனவே இது ஆண்களுக்கிருப்பது போன்று பெண்களுக்குமிருக்கிறது. ஏனெனில் அல்லாஹ்விடம் நன்மையைப் பெறுவதை விட்டு யாரும் யாரையும் தடுக்க முடியாது. என்றாலும் மரணசாசனம் மூன்றில் ஒரு பகுதியை விட அதிகமாகாமலிருப்பது நிபந்தனையாகும். இதில் ஆண்களும் பெண்களும் சமமே.

7- பட்டாடை, தங்கம் அணிதல்: பட்டையும், தங்கத்தையும் பெண்கள் அணிந்து கொள்வது கூடும். இவ்விரண்டும் ஆண்களுக்கு ஹராமாகும்.

8- அலங்கரித்துக் கொள்ளல்: தனது கணவனுக்காக தன்னை அலங்கரித்துக் கொள்ள உரிமை பெறுகிறாள். எனவே அவள் சுர்மா இட்டுக்கொள்ளவும் விரும்பினால் இரு கன்னங்களிலும் உதடுகளிலும் சிகப்புச்சாயம் வைத்துக் கொள்ளவும் செய்யலாம். மிக அழகிய அணிகலன்கள் அணிந்து கொள்ளலாம். எனினும் முஸ்லிமல்லாத மற்றும் தவறான நடத்தையுள்ள பெண்களுக்கே உரிய ஆடைகளை அணியக்கூடாது. இவற்றை அவள் அணியக் கூடாது என்பது சந்தேகம் தவறுகளிலிருந்து தூரமாகுவதற்காகவே.

9- உண்பது, குடிப்பது: நல்ல, சுவையான பானங்களை பருகவும் அதுபோன்ற உணவுகளை உண்ணவும் அவளுக்கு உரிமையுண்டு. உண்பதிலும் குடிப்பதிலும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் மத்தியில் எந்தப் பாகுபாடுமில்லை. இவ்விரண்டில் ஆண்களுக்கு அனுமதி க்கப்பட்டுள்ள அனைத்தும் பெண்களுக்கும் அனுமதிக்கப்பட்டுள்ளது. அல்லாஹ் கூறுகிற ன்: உண்ணுங்கள் பருகுங்கள் ஆனால் வீண்விரயம் செய்யாதீர்கள். நிச்சயமாக வீண்விர யம் செய்பவர்களை அல்லாஹ் நேசிப்பதில்லை (7:31) இங்கு இருபாலாரையும் நோக்கியே இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Unknown said...

//பெண்களுக்கும் சொத்தில் பங்கு கொடுத்து அந்த பெண்மையை மேன்மைப்படுத்தியது இஸ்லாம்.//

அப்படிங்களா! அப்படி என்றால் எந்த சொத்துரிமையை பயன்படுத்தி கதீஜா மிக பெரிய செல்வந்தராக இருந்தார். அந்த நேரத்தில் உங்கள் கண்ணுமணி தூதராக இல்லையே. இஸ்லாமும் இல்லையே. ஹதீஜா கிறிஸ்தவ பெண்தானே.

விதவையான அவர் உங்கள் திருட்டு தூதரை திருமணம் செய்ய அவர்தானே முடிவு எடுத்தார். பெரும் வியாபாரியாக இருந்திருக்கிறார். விதவை மறுமணம் செய்திருக்கிறார். இப்படி சகல உரிமைகளுடன் பெண்கள் இருந்திருக்கின்றனர் என்பதற்கு உங்கள் பிராடு தூதரின் வாழ்க்கையிலேயே உதாரணம் இருக்கிறதே.

இஸ்லாம் ஓன்றும் எந்த உரிமையும் புதிதாக கொடுக்கவோ தரவோ இல்லை. ஏற்கனவே இருந்ததை முகமது இஸ்லாம் கொடுக்கிறது என்று கூரிகொண்டார். அடுத்தவரை சிந்திக்க சொல்லும்முன் மும்மீன் கூட்டம் சிந்திக்கட்டும். இதில் வேதனையான விஷயம் செல்வா செழிப்புடன் சுதந்திரமாக வாழ்ந்த ஹதீஜா முகமதுவை என்று திருமணம் செய்தாரோ அன்றில் இருந்து பீடை பிடித்து முகமதுவின் அடிமையாக வாழ்ந்து கடைசியில் ஒரு தரித்திரராக இறந்திருக்கிறார். இதுதான் இஸ்லாம் பெண்களுக்கு கொடுத்த கவுறவம்.

பெண்கள் மீதான அடக்குமுறை, வன்முறை என்பது எல்லா மதத்திலும் எல்லா இனத்திலும் காலம் காலமாக இருந்தே வருகிறது. இதில் எவரும் நூறு சதம் தாங்கள் யோக்கியம் என்று கூற இயலாது. இதில் நகைச்சுவையான விசயம் என்னவென்றால் பெண்களுக்கு இஸ்லாம் கொடுக்கும் உங்கள் உரிமைகளை உங்கள் கூட்டத்து ஆண்கள் தான் மேடை போட்டு முழங்கி கொண்டு இருக்கிறார்களே தவிர எந்த இஸ்லாமிய பெண்ணும் இது போன்று முழங்கி எங்கும் பார்க்க முடியவில்லை. தன்னுடைய உரிமைகளை பேச கூடவா உங்கள் பெண்களுக்கு உரிமை இல்லை.

//உண்பது, குடிப்பது: நல்ல, சுவையான பானங்களை பருகவும் அதுபோன்ற உணவுகளை உண்ணவும் அவளுக்கு உரிமையுண்டு. //

அட வெட்கம் கெட்டவர்களே, பெண்களுக்கு மலம் களிக்கவும், அதன் பிறகு அதை கழுவவும் உரிமை உண்டு , இந்த உரிமையும் இஸ்லாம் கொடுகிறது என்று சொல்ல வேண்டியது தானே. உண்ணவும் குடிக்கவும் நீங்கள் உரிமை கொடுத்து தான் அவள் செய்ய வேண்டுமா ?
துப்பு கெட்ட கூட்டமே கிறிஸ்த்தவத்தையோ பிற மதங்களையோ விமர்சிக்க உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது.

Anonymous said...

Micheal Antony said...

//பெண்களுக்கும் சொத்தில் பங்கு கொடுத்து அந்த பெண்மையை மேன்மைப்படுத்தியது இஸ்லாம்.//

அப்படிங்களா! அப்படி என்றால் எந்த சொத்துரிமையை பயன்படுத்தி கதீஜா மிக பெரிய செல்வந்தராக இருந்தார். அந்த நேரத்தில் உங்கள் கண்ணுமணி தூதராக இல்லையே. இஸ்லாமும் இல்லையே. ஹதீஜா கிறிஸ்தவ பெண்தானே.

விதவையான அவர் உங்கள் தூதரை திருமணம் செய்ய அவர்தானே முடிவு எடுத்தார். பெரும் வியாபாரியாக இருந்திருக்கிறார். விதவை மறுமணம் செய்திருக்கிறார். இப்படி சகல உரிமைகளுடன் பெண்கள் இருந்திருக்கின்றனர் என்பதற்கு உங்கள் தூதரின் வாழ்க்கையிலேயே உதாரணம் இருக்கிறதே.

இஸ்லாம் ஓன்றும் எந்த உரிமையும் புதிதாக கொடுக்கவோ தரவோ இல்லை. ஏற்கனவே இருந்ததை முகமது இஸ்லாம் கொடுக்கிறது என்று கூரிகொண்டார். அடுத்தவரை சிந்திக்க சொல்லும்முன் மும்மீன் கூட்டம் சிந்திக்கட்டும். இதில் வேதனையான விஷயம் செல்வா செழிப்புடன் சுதந்திரமாக வாழ்ந்த ஹதீஜா முகமதுவை என்று திருமணம் செய்தாரோ அன்றில் இருந்து பீடை பிடித்து முகமதுவின் அடிமையாக வாழ்ந்து கடைசியில் ஒரு தரித்திரராக இறந்திருக்கிறார். இதுதான் இஸ்லாம் பெண்களுக்கு கொடுத்த கவுறவம்.

பெண்கள் மீதான அடக்குமுறை, வன்முறை என்பது எல்லா மதத்திலும் எல்லா இனத்திலும் காலம் காலமாக இருந்தே வருகிறது. இதில் எவரும் நூறு சதம் தாங்கள் யோக்கியம் என்று கூற இயலாது. இதில் நகைச்சுவையான விசயம் என்னவென்றால் பெண்களுக்கு இஸ்லாம் கொடுக்கும் உங்கள் உரிமைகளை உங்கள் கூட்டத்து ஆண்கள் தான் மேடை போட்டு முழங்கி கொண்டு இருக்கிறார்களே தவிர எந்த இஸ்லாமிய பெண்ணும் இது போன்று முழங்கி எங்கும் பார்க்க முடியவில்லை. தன்னுடைய உரிமைகளை பேச கூடவா உங்கள் பெண்களுக்கு உரிமை இல்லை.

//உண்பது, குடிப்பது: நல்ல, சுவையான பானங்களை பருகவும் அதுபோன்ற உணவுகளை உண்ணவும் அவளுக்கு உரிமையுண்டு. //

பெண்களுக்கு மலம் களிக்கவும், அதன் பிறகு அதை கழுவவும் உரிமை உண்டு , இந்த உரிமையும் இஸ்லாம் கொடுகிறது என்று சொல்ல வேண்டியது தானே. உண்ணவும் குடிக்கவும் நீங்கள் உரிமை கொடுத்து தான் அவள் செய்ய வேண்டுமா ?
கிறிஸ்த்தவத்தையோ பிற மதங்களையோ விமர்சிக்க உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது.