Followers

Monday, July 28, 2014

'சமஸ்கிரதம் ஒரு செத்த மொழி' என்று சொல்வது உண்மையா?



சமஸ்கிரத மொழி என்றோ மரணத்தை தழுவி விட்டது என்கிறார் குஜராத்திக் கவிஞர் தல்பத்ராம் தாஹ்யாபாய். இந்த வாக்கியம் சொல்லப்பட்ட ஆண்டு. 1857.

All the feasts and great donations
King Bhoja gave the Brahmans
were obsequies he made on finding
the language of the gods had died.
Seated in state Bajirao performed
its after-death rite with great pomp.
And today, the best of kings across the land
observe its yearly memorial

குஜராத்திக் கவி தல்பத்ராம் :தாஹ்யாபாயின் கவிதையை தமிழில் இப்படி மொழி பெயர்க்கலாம்:

"போஜ மன்னன் பார்ப்பனர்களுக்கு அளித்த விருந்துகள்,
பெருநிதிக் குவியங்கள் எல்லாமும்
தேவ பாஷையின் சாவைக் கண்டு
அதன் இறுதிச் சடங்குகளுக்காக அவன் அளித்தவை தான்...
ஆடம்பரமாக அமர்ந்திருந்த பாஜிராவ் அந்தச் சாவுச் சடங்குகளைச் செய்தான்.
இன்றும் கூட வழி வழி வரும் ஆட்சியாளர்கள்
ஆண்டு தோறும் அதற்குத் திவசம் செய்யத் தவறுவதில்லை.."


இந்த கவியின் கூற்று தற்போது மெய்யாகியுள்ளது. ஆம்.... இப்போது மோடியின் பா.ஜ.க அரசு அந்த வருடாந்திரத் திவசத்தை துவக்கியுள்ளது.

இப்படியாக இந்தியாவில் ஒரு பெரும் கூட்டமே சமஸ்கிரத மொழிக்கு எதிராக அதுவும் இந்துக்களிலேயே எழுவது கண்டு நான் ஆச்சரியமுறுவேன். ஏன் இவ்வாறு ஒரு மொழியை இந்த அளவு வெறுக்கிறார்கள் என்று சிந்திப்பேன். உலக மொழிகள் அனைத்தும் இறைவனால் மனிதனுக்கு கற்றுக் கொடுக்கப்பட்டது என்ற நம்பிக்கையை உடையவன் நான். இன்று இந்தியாவில் பிற்படுத்தப்பட்ட மக்கள் இவ்வளவு இழிநிலைகளை தாங்குவதற்கு காரணமே சமஸ்கிரத மொழிகளில் அமைந்த இந்து மதத்தின் ஸ்மிருதிகளே! அதனை எழுதியவர்கள் இன்று நம்மோடு இல்லை. எனவே குறைந்த பட்சம் அந்த மொழியையாவது வெறுப்போம் என்ற நிலைக்கு அந்த மக்கள் தள்ளப்பட்டுள்ளார்கள்.

எனவேதான் பெரும்பான்மையான இந்து மக்களின் நினைப்பு இவ்வாறாக இருக்கிறது: 'நீ உருது பேசுகிறாயா பேசிக் கொள்: ஆங்கிலம் பேசுகிறாயா பேசிக் கொள்: அரபியில் பேசிக் கொள்கிறாயா பேசிக் கொள்: ஹிந்தியில் பேசிக் கொள்கிறாயா... பேசிக் கொள் எனக்கு ஒரு இழிவோ பிரச்னையோ இல்லை: ஆனால் வழக்கொழிந்து போன சமஸ்கிரதத்தை மட்டும் மீண்டும் உயிர்ப்பித்து விடாதே! இப்பொழுதுதான் பல போராட்டங்களுக்குப் பிறகு வர்ணாசிரமம் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து வருகிறது. சமஸ்கிரதத்துக்கு உயிரூட்டினால் மீண்டும் முருங்கை மரம் ஏறிக் கொள்ளும் வர்ணாசிரமம்' என்ற நினைப்பே அந்த இந்து மக்களை சமஸ்கிரத மொழியைப் பார்த்து பயம் கொள்ள வைக்கிறதோ என்று நினைக்கிறேன்..

http://www.columbia.edu/itc/mealac/pollock/sks/papers/death_of_sanskrit.pdf

1 comment:

தணிகைநாதன் said...

சுவனப்பிரியன் முதல் முறையாக இந்து மத காழ்ப்பு உணர்வு வெளித்தெரியாமல் ஒரு பதிவிட்டிருப்பது வரவேற்கத் தக்கது.