
'இவர்களது தன்மை வானத்திலிருந்து விழும் மழை போன்றது. அதில் இருள்களும், இடியும், மின்னலும் உள்ளன. இடி முழக்கங்களால் மரணத்திற்கு அஞ்சி தமது விரல்களைக் காதுகளில் வைத்துக் கொள்கின்றனர். ஏக இறைவனை ஏற்க மறுப்போரை இறைவன் முழுமையாக அறிபவன்.'
-குர்ஆன் 2:19
அல்லாஹ் அவர்களின் இதயங்களிலும், அவர்களின் செவிப்புலன்களிலும் முத்திரை வைத்து விட்டான்: இன்னும் அவர்களின் பார்வை மீது ஒரு திரை கிடக்கிறது: மேலும் அவர்களுக்குக் கடுமையான வேதனையுமுண்டு.
-குர்ஆன் 2:6
மழை மேகங்களானது 20 லிருந்து 260 சதுர மீட்டர் (10 லிருந்து 100 சதுர மைல்கள்) பரப்பளவில் விரிந்து பரந்துள்ளது. மேலும் செங்குத்தான உயரத்தில் 9000 லிருந்து 12000 மீட்டர் ( 30000 லிருந்து 40000 அடி வரை) பிரம்மாண்டமான தோற்றத்தில் கட்டமைக்கப்பட்டுள்ளது. இத்தகைய பிரம்மாண்டமான கட்டுமானத்தில் நீர் சூழ்ந்த மேகத்தின் அடிப்பகுதியானது கருமை நிறத்தில் நமக்கு காட்சியளிக்கிறது. சூரியனின் ஒளிக்கதிர்களானது இந்த பிரம்மாண்டமான நீர் சூழ்ந்த மேகத்தை ஊடுருவி பூமிக்கு அதன் வெளிச்சத்தை அனுப்புவது என்பது இயலாத ஒன்று. ஏனெனில் மேகத்தின் கட்டுமானத்தில் அதிகமான குளிர்ந்த தண்ணீரும் ஐஸ் கட்டிகளும் இருப்பதே காரணம். இது போன்ற நேரங்களில் மிக சொற்பமான சூரிய கதிர்களே நமது பூமியை வந்தடைகின்றன.
எப்படி மேகத்தின் கருமையை ஊடுருவி சூரிய ஒளி பூமியை வந்தடைவதில்லையோ அது போல இறை மறுப்பாளர்களின்(காஃபிர்களின்) இதயத்தில் மேகத்தைப் போன்ற கருமை சூழ்ந்துள்ளதால் நேர் வழியான இறை கட்டளைகள் அவர்களின் இதயத்தை சென்றடைவதில்லை என்கிறான் இறைவன். அந்த காலத்திய அரபுகள் குர்ஆன் வசனம் காதுகளில் விழுந்து விடாமல் இருக்க பஞ்சை வைத்துக் கொள்வார்களாம். குர்ஆனின் வசனங்களுக்கு அந்த அளவு சக்தி இருக்கிறது என்பதை அந்த மக்கள் உணர்ந்தே இருந்தார்கள்.
இனி இடி மின்னல்களைப் பார்ப்போம்.
ஒரு வித மின் சக்தியானது இருள் சூழ்ந்த அந்த மேகத்தில் இறைவனால் ஏற்படுத்தப்படுகிறது. இந்த மின் ஆற்றலானது உறைந்த பனிக் கட்டிகளை உருகச் செய்து மழையாக கீழே பொழிவிக்கிறது. இதனிடையே காற்றும் அங்கு குறுக்கிடுவதால் அந்த இடத்தில் மிகப் பெரிய மின்னல் உண்டாகிறது. பிளஸ் மைனஸ் என்ற இரு வேறுபட்ட எதிரெதிர் சக்திகள் மோதுவதால் அது மின்னாற்றலாக மாற்றப்பட்டு ஒளி வெள்ளம் ஏற்படுகிறது. அந்த இடத்தில் உள்ள மின் சக்தியானது ஒரு மில்லியன் வால்ட்ஸ் சக்தியை உமிழ்வதாக அறிவியலார் கணித்துள்ளனர்.
இரண்டு மேகத்திரள்களுக்கிடையே இந்த மின் சக்தி ஊடுருவும் போது மின அதிர்வினால் மிகப் பெரிய சப்தம் உண்டாகிறது. அதைத்தான் நாம் இடி என்கிறோம். இது போன்ற நேரங்களில் அந்த இடத்தின் வெப்பமானது 10000 டிகிரி செல்ஷியஸை நெருங்கும் என்கின்றனர் அறிவியலார்.
தகவல் உதவி
"Allahs miracles in the Quran" - Harun yahya
No comments:
Post a Comment