Followers

Monday, July 14, 2014

மதம் மாறிய மீனாட்சிபுர மக்களின் இன்றைய நிலை!

மதம் மாறிய மீனாட்சிபுர மக்களின் இன்றைய நிலை!

திரு ராஜ மாணிக்கம்!

//”/சாதிகளே இஸ்லாத்தில் இல்லை எனும் போது ‘ஒடுக்கப்பட்ட சாதி’ என்ற பேச்சுக்கே இடமில்லை. இந்து மதத்தில் சாதிக் கொடுமை தாங்க முடியாமல்தான் ஒரு தலித் இஸ்லாத்தை நோக்கி வருகிறார். இங்கும் அதே சாதி முறையை பின் பற்றினால் அதற்கு இந்து மதத்திலேயே இருந்து கொள்ளலாம்./”- அப்படியா திரு .சுவனப்பிரியன் அவர்களே கருப்பாயி எனும் நூர் ஜஹான் என்றொரு நாவல் உண்மையை உரத்து சொல்கிறது. அனவர் எழுதி இருக்கிறார். வாய்ப்பும், புரிந்து கொள்ளும் சக்தியும், மனதும் இருந்தால் முயற்சித்து பாருங்கள்//

அன்வர் பால சிங்கம் என்பவர் எழுதிய கற்பனை கலந்த அந்த கதையை அந்த கிராமத்து மக்களே மறுக்கின்றனர். பிபிசி எடுத்த ஆவணப்படத்தை நான் தமிழில் ஆக்கமாக தந்துள்ளேன். அதனை படித்து உண்மையை உணர்ந்து கொள்ளுங்கள்.

'வெளியூர்களில் உங்களின் நிலைமை தற்போது என்ன?'

'எந்த பிரச்னையும் இல்லாமல் தற்போது இருக்கிறோம். உள்ளூரில்தான் சிலருக்கு நாங்கள் தாழ்த்தப்பட்ட சாதியிலிருந்து மதம் மாறியதாக தெரியும். வெளியூர்களில் எங்களின் பெயரை கேட்டவுடனேயே தானாக சமூக அந்தஸ்து கிடைத்து விடுகிறது. எந்த ஹோட்டலுக்கு போனாலும் சரி சமமாக உட்கார்ந்து சாப்பிடுகிறோம். யாரும் எங்களை ஏளனமாக பார்ப்பதில்லை. பிரச்னையும் கொடுப்பதில்லை. முருகேஷனை 'முருகேஷா இங்க வாடா' என்று கூப்பிடுபவர்கள் மதம் மாறிய அன்வர் அலியை 'வாங்க அன்வர் அலி' என்று கூப்பிடுகின்றனர். இதற்கு என்ன சொல்கிறீர்கள்?'

நாம் பல இடங்களில் பார்த்த வகையில் இஸ்லாத்துக்கு மாறியதால் இந்த மக்களின் வாழ்வில் சமூக அந்தஸ்து கூடியிருப்பதாகவே தெரிகிறது. ஆனால் ஒரு பிரச்னை இன்றும் உள்ளது. அதாவது பூர்வீக இஸ்லாமியர்கள் இவர்களை மதிப்பதில்லை எனவும் இவர்களிடம் பெண் கொடுத்து பெண் எடுப்பதில்லை எனவும் ஒரு குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. இது சம்பந்தமாக 'கருப்பாயி என்கிற நூர்ஜஹான்' என்ற கதை முன்பு வெளி வந்து பெரும் பரபரப்பாக பேசப்பட்டது. இதைப் பற்றி அந்த கிராம மக்களிடம் கேட்டோம்.

'அந்த கதையை எந்த ஊரை மையமாக வைத்து அவர் எழுதினாரோ தெரியவில்லை. ஆனால் எங்கள் ஊரில் அப்படி ஒரு சம்பவம் நடைபெறவில்லை. 20 க்கு மேற்பட்ட பெண்கள் இங்கிருந்து அங்கு போயிருக்கிறார்கள். அதே எண்ணிக்கையில் அங்கிருந்து இங்கு வந்திருக்கிறார்கள். பொருளாதார ஏற்றத் தாழ்வுதான் முக்கியமாக பார்க்கப்படுகிறது. ஏழைகள் ஏழை வீட்டைப் பார்த்து சம்பந்தம் வைத்துக் கொள்கிறார்கள். வசதியுள்ளவர்கள் வசதியான இடததில் சம்பந்தம் வைத்துக் கொள்கிறார்கள். ஒரு சில பூர்வீக முஸ்லிம்கள் எங்களிடம் சம்பந்தம் பண்ண தயங்குவது பொருளாதார ஏற்ற தாழ்வுகளை வைத்தே. நாங்களும் அவர்களைப் போல் பொருளாதாரத்தில் நல்ல நிலைக்கு வந்தால் தாராளமாக பெண் கொடுத்து பெண் எடுப்பார்கள். சில இடங்களில் நடந்தும் இருக்கிறது.

பேட்டியை முழுவதும் படிக்க....

http://suvanappiriyan.blogspot.com/2014/05/blog-post_23.html

No comments: