
1993-ம் ஆண்டு நடைபெற்ற சூரத் குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடைய 11 பேரையும் விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
குஜராத் மாநிலம் சூரத்தில் 1993-ம் ஆண்டு நிகழ்ந்த குண்டு வெடிப்பில் மாணவி ஒருவர் உயிரிழந்தார், பலர் காயம் அடைந்தனர்.
இந்த வழக்கில், கடந்த 2008-ம் ஆண்டு சூரத் நகர தடா நீதிமன்றம், 11 பேருக்கும் 10 முதல் 20 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதித்திருந்தது. இவர்களில் காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் முகமது சூர்த்தியும் அடங்குவார்.
இந்நிலையில், இந்த வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் டி.எஸ். தாகூர் மற்றும் சி.நாகப்பன் அடங்கிய அமர்வு வழக்கை விசாரித்தது.
அப்போது வழக்கில் தொடர்புடையை 11 பேரையும் விடுதலை செய்து உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர். மேலும், குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடையவர்களுக்கு தடா நீதிமன்றம் வழங்கிய 10 முதல் 20 ஆண்டுகள் வரையிலான சிறைத் தண்டனையையும் ரத்து செய்து உத்தரவிட்டனர்.
நன்றி ஹிந்து நாளிதழ்
17-07-2014
1993 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட அப்பாவி முஸ்லிம்கள் 2014 ஆம் அண்டு குற்றமற்றவர்கள் என்று விடுவிக்கப்படுகிறார்கள். கிட்டத்தட்ட 20 வருடங்கள் விசாரணைக் கைதிகளாக காலத்தை கழித்துள்ளனர் இந்த முஸ்லிம்கள். இதுதான் நீதியா? வாழ்க்கையின் 20 வருடங்களை இழந்த அந்த மக்களுக்கு யார் பொறுப்பு ஏற்பது? இவ்வாறு இஸ்லாமியர்களை பொய் கேசுகளில் கைது பண்ணி இந்தியாவில் இஸ்லாத்தின் வளர்ச்சியை தடுத்து விடலாம் என்று ஆள்வோர் நினைக்கலாம். ஆனால் சிறைச் சாலையில் இவர்களின் நடத்தைகளை பார்த்து விட்டு அங்குள்ள சிறைக் கைதிகளும் இஸ்லாத்தை ஏற்ற பல வரலாறுகள் உண்டு.
இன்றில்லா விட்டாலும் இது போன்று அப்பாவிகளை சிறை வைக்கும் கொடுங்கோலர்களுக்கு என்றாவது ஒரு நாள் இறைவன் புறத்திலிருந்து தண்டனை வந்தே தீரும்.
No comments:
Post a Comment