'நபிகள் நாயகத்தின் கட்டளைகளை நமது நாடு பின்பற்றினால் அமைதிப் பூங்காவாக திகழும். சொல்வதோடு மட்டுமல்லாமல் அதன்படி வாழ்ந்தும் காட்டியவர் நபிகள் நாயகம். அனைத்து மதங்களும் அன்பையே போதிக்கின்றன. நோன்பிருக்கும் இந்நன்னாளில் அனைவருக்கும் ரம்ஜான் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.'
அருமையான பேச்சு. தமிழக முதல்வரிடம் தற்போது மிகுந்த நிதானம் தென்படுகிறது. பேச்சில் முதிர்ச்சி தெரிகிறது. நபிகள் நாயகம் குடியின் தீமையை அழகுற அந்த நபருக்கு எடுத்துரைத்தார். அதன்படி முதல்வர் அவர்கள் சிறிது சிறிதாக மதுக் கடைகளை மூட முயற்சிப்பாராக! இலவசங்களை நிறுத்தினாலும் பரவாயில்லை. தமிழர்களின் எதிர்காலமே சூன்யமாகி விடுமோ என்று அஞ்சும் அளவுக்கு குடி நமது தமிழர்களை ஆட்டி படைக்கிறது. இந்நன்னாளில் இதற்கு நிரந்தர தீர்வை தமிழக முதல்வர் காண்பாராக!
No comments:
Post a Comment