
சரத் குமார் தனது முதல் மனைவிக்கு பிறந்த குழந்தையோடும், தனது இரண்டாவது மனைவியான ராதிகாவிற்கு பிறந்த குழந்தைகளோடும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்கிறார். இரண்டு திருமணம் செய்து கொண்டு அந்த இரண்டு மனைவிகளையும் சந்தோஷமாக வைத்துக் கொள்ளும் போக்கு இந்துக்களிடத்தில் தற்போது அதிகரித்துள்ளது. கலைஞர் கருணாநிதி, எம் ஆர் ராதா, காளி முத்து, ராம் விலாஸ் பஸ்வான் என்று பெரும் பட்டியலையே இதற்கு உதாரணமாகக் காட்டலாம்.
'ஒருவனுக்கு ஒருத்தி' என்பதுதான் தமிழர் கலாசாரம். ஆனால் அதனை எல்லோராலும் வாழ்நாளில் கடைபிடிக்க முடியாது. இஸ்லாமும் 'ஒருவனுக்கு ஒருத்தி' என்ற கோட்பாட்டை கட்டாயப்படுத்தி இருந்தால் எல்லா நாட்டுக்கும் எல்லா காலத்துக்கும் ஏற்ற சட்டங்களைக் கொண்டது குர்ஆன் என்று நாம் சொல்ல முடியாமல் போயிருக்கும்.
இஸ்லாத்தில் பலதார மணம் என்பது ஒரு அனுமதிதான். கட்டாய கடமை கிடையாது. அனைத்து மனைவிகளிடத்திலும் நீதமாக நடக்க முடியாது போனால் ஒரு மனைவியோடு மாத்திரம் மட்டுமே குடும்பம் நடத்த வேண்டும் என்று குர்ஆன் கட்டளையிடுகிறது.
தமிழகத்தில் கணக்கெடுத்து பார்த்தால் இஸ்லாமியர்களை விட இந்துக்களே பல தார மணத்தில் அதிக நாட்டமுடையோராக உள்ளனர். இந்து மதம் பலதார மணத்தை அனுமதிக்காததால் பலர் தங்களின் இரண்டாவது மனைவியை சின்ன வீடாக வைத்துக் கொள்கிறார்கள். இதனால் அந்த மனைவிக்கும், பிறக்கும் குழந்தைகளுக்கு ஏற்படும் மன உளைச்சல்களை ஏனோ அரசும் கண்டு கொள்வதில்லை. சொத்திலும் அவர்களுக்கு பங்கு கிடைக்காது.
எனவே இஸ்லாத்தைக் காப்பி அடிப்பதா என்று கௌரவம் பார்க்காமல் பல தார மணத்துக்கு இந்து மத சட்டங்களில் திருத்தம் செய்து பல இரண்டாந்தர மனைவிகளின் அவர்களின் குழந்தைகளின் வாழ்வை சீராக்க அரசு முயற்சிக்க வேண்டும்.
------------------------------------------------------------------------
பலதார மணத்தைப்பற்றி இந்து வேதங்கள்
ஒரு பிராமணர் நான்கு மனைவியரை மணக்கலாம் (விஷ்ணுஸ்மிருதி 24:1)
கிருஷ்ணருக்குப் பதினாராயிரம் மனைவிகள் இருந்ததாக இராமாயணத்திலும் மகாபாரதத்திலும் கூறப்படுகின்றது.
அதுபோக ஒரு பெண்ணிற்குப் பல கணவர்கள் (பஞ்ச பாண்டவர்களுக்கு திரௌபதி என்கிற ஒரு மனைவி) இருந்ததாகவும் மகாபாரத்தில் கூறப்படுகின்றது.
ராமரின் தகப்பனார் தஸரதன் ஒன்றுக்கு மேற்பட்ட (கிட்டத்தட்ட அறுபதாயிரம்) மனைவிகளைக் கொண்டிருந்தார்.
முருகனுக்கும் வள்ளி, தெய்வாணை என இரண்டு மனைவிகள் இருந்தனர்.
யூத, கிறிஸ்தவ மதங்களில் பலதார மணம்
பைபிள் பலதார மணத்தைத் தடைசெய்யவில்லை. அதற்கு மாறாக, பழைய ஏற்பாடும் அறிஞர்களின் எழுத்துக்களும் பலதார மணத்தை அங்கீகரிப்பதையே நாம் காண்கிறோம்:
1. மன்னன் சாலோமோனிற்கு எழுநூறு மனைவிகளும் முன்னூறு வைப்பாட்டிகளும் இருந்தாகச் சொல்லப்படுகிறது. (இராஜாக்கள் 11:3).
2. மன்னன் தாவீதிற்கும் பல மனைவிகளும் பல வைப்பாட்டிகளும் இருந்ததாகச் சொல்லப்படுகின்றது. (சாமுவேல் 5:13).
3. பல்வேறு மனைவிகளுக்குப் பிறந்த மகன்களுக்கிடையே சொத்துக்களை எவ்வாறு வினியோகிப்பது என்பது பற்றிய கட்டளைகளும் பழைய ஏற்பாட்டில் காணப்படுகின்றது. (உபாகமம் 22:7).
4. மனைவியின் சகோதரியை போட்டி மனைவியாக்கிக் கொள்வதற்கு மட்டுமே தடையுள்ளது. (லேவியராகமம் 18:8).
5. அதிகப்பட்சம் நான்கு மனைவிகள் இருக்கலாம் என 'தல்முதிக் (Talmudic) பரிந்துரைக்கிறது.
பதினாறாம் நூற்றாண்டு வரை ஐரோப்பிய யூதர்கள் பலதார மணப் பழக்கத்தைப் பின்பற்றியே வந்தனர். கிழக்கத்திய யூதர்கள், அவர்கள் இஸ்ரேலுக்கு வந்துக் குடியேறும் வரை, தொடர்ந்து பலதார மணத்தை அனுசரித்து வந்தனர். இஸ்ரேலில் சிவில் சட்டத்தின் கீழ் அங்கே பிற்பாடு அது தடைசெய்யப்பட்டது. இருப்பினும், சிவில் சட்டத்தை மிஞ்சும் மதச்சட்டத்தின் கீழ் பலதார மணத்திற்கு அனுமதி நடைமுறையில் இருக்கவே செய்கிறது.
எனவே உலக மதங்கள் எல்லாமே பல தார மணத்தை ஆதரிக்கின்றன. உலக மக்கள் எல்லோருமே பல தார மணத்தை கடைபிடிக்கின்றனர். இஸ்லாத்தில் இது ஒரு அனுமதியே! கட்டாய கடமை கிடையாது. வாரிசு இல்லாதவர்கள், தாம்பத்ய சுகம் தர இயலாதவர்கள், வசதியுடையவர்கள், உடல் ஆரோக்கியமும் உள்ளவர்கள் பல தார மணத்தை செய்து கொள்ளலாம். எனவே இந்த பழக்கம் இஸ்லாத்தில் மட்டுமே உள்ளது என்ற வாதத்தை மற்றவர்கள் இனி வைக்காது இருப்பார்களாக!
No comments:
Post a Comment