Followers

Saturday, November 15, 2014

மேகங்களைப் பற்றி இன்று பார்போமா!



நாம் பார்க்கும் மேகங்களில் பல தரப்பட்ட மேகங்கள் உள்ளன. இவைகளில் ஒரு வகையான மேகம் மலை போன்ற பெரிய மேகமாகும். இது இடி மின்னலுடன் கூடிய மழையோடு சம்பந்தப்பட்டது. இந்த மலை போன்ற மேகங்கள் எவ்வாறு உருவாகின்றன அவை எவ்வாறு மழையையும், பனியையும்,மின்னலையும் உண்டாக்குகின்றன என்பதைப் பற்றி இந்த பதிவில் பார்போம்.

இந்த மலை போன்ற மேகங்கள் மழையைப் பொழிவிப்பதற்கு கீழ்க்கண்ட மாற்றங்கள் நடைபெற வேண்டும் என வானியல் நிபுணர்கள் கண்டறிந்துள்ளனர்.

மேகங்கள் காற்றினால் தள்ளப்படுதல்: மேகங்களின் சிறுசிறு துண்டுகளை காற்றானது ஒரு குறிப்பிட்டப் பகுதிக்கு தள்ளுகின்றன. அவைகளை ஓரிடத்தில் குவியச் செய்வதால் மலை போன்ற மேகங்கள் உருவாகத் தொடங்குகின்றன.

ஒன்று கூடுதல்: இந்த சிறிய மேகங்கள் அனைத்தும் ஒன்று கூடி பெரிய மேகமாக ஆகத் தொடங்குகின்றன.

அடுக்கடுக்காக ஆகுதல்: சிறிய மேகங்கள் ஒன்று கூடி பெரிதாகும்போது, பெரிய மேகத்திலிருந்து மேல் நோக்கிய காற்றில் மின்னோட்டம் அதிகரிக்கின்றது. பெரிய மேகத்தின் மத்திய பகுதியில் இந்த மேல் நோக்கிய காற்றின் மின்னோட்டம் அதிகமாக உள்ளது. இந்த மேல் நோக்கிய காற்றின் மின்னோட்டம் மேகங்களைச் செங்குத்தாக வளரச் செய்கிறது. அதனால் மேகங்கள் அடுக்கடுக்காக உருவாகின்றன. இந்த மேல் நோக்கிய வளர்ச்சியானது மேகத்தை வானத்தின் குளிர்ந்த பகுதிக்கு விரியச் செய்ய வைக்கின்றது. அங்கே நீர்த்துளிகளும் பனிக் கட்டிகளும் உருவாகி அவைகள் பெரிதாக வளர்ந்து கொண்டே செல்கின்றன. இந்த நீர்த்துளிகளும் பனிக்கட்டியும் மேல் நோக்கிய காற்றின் மின்னோட்டத்தினால் மிகவும் கனமாக மாறுகிறது. பின்பு அவைகள் மேகத்திலிருந்து மழையாகவும் பனிக்கட்டியாகவும் பொழிய ஆரம்பிக்கின்றன.

இந்த அறிவியல் உண்மையை குர்ஆன் எப்படி அணுகுகிறது என்று பார்ப்போம்:

'இறைவன் மேகங்களை இழுத்து ஒன்றாக்குவதையும், பின்னர் அதனை அடுக்கடுக்காக அமைப்பதையும் நீர் அறியவில்லையா? அதன் மத்தியில் மழை வெளிப்படுவதை நீர் காண்கிறீர். வானத்திலிருந்து அதில் உள்ள பனி மலைகளிலிருந்து ஆலங்கட்டியையும் இறக்குகிறான். தான் நாடியோருக்கு அதைப் பெறச் செய்கிறான். தான் நாடியோரை விட்டும் திருப்பியும் விடுகிறான். அதன் மின்னொளி பார்வைகளைப் பறிக்கப் பார்க்கிறது.'
-குர்ஆன் 24:43


'அல்லாஹ்வே காற்றை அனுப்புகிறான். அது மேகத்தைக் கலைக்கின்றது. அவன் விரும்பியவாறு அதை வானில் பரவச் செய்கின்றான். அதைப் பல துண்டுகளாக ஆக்குகிறான். அதற்கிடையில் மழை வெளியேறுவதைக் காண்கின்றீர். தனது அடியார்களில் தான் நாடியோருக்கு அதனை சுவைக்கச் செய்யும் போது அவர்கள் மகிழ்சி அடைகின்றனர்.'

-குர்ஆன் 30:48




அறிவியலார் இந்த ஆய்வுகளை மேற்கொள்வதற்கு பல அறிவியல் சாதனங்களின் துணை தேவைப்பட்டது. அதன் பின்னரே வானில் நடக்கும் பல அதிசயங்கள் நமக்கு தெரிய வந்தன. அதுவும் கூட சில நூறு வருடங்களுக்கு முன்புதான் இந்த உண்மைகள் நமக்கு தெரிய வந்தன. மேலே உள்ள குர்ஆனின் வசனங்களைப் பார்க்கிறோம். இது நம்மைப் போன்ற ஒரு மனிதரின் வார்த்தையாகத் தெரிகிறதா? அல்லது நம்மைப் படைத்த இறைவனின் வார்த்தையாகத் தெரிகிறதா என்பதை அவரவரின் ஊகத்துக்கே விட்டு விடுகின்றேன்.

-Richard A. Anthes, et al., The Atmosphere, 3rd ed. (Columbus: Charles E. Merrill Publishing Company: 1981), 268-269; Albert Millers, Jack C. Thompson, Elements of Meteorology, 2nd ed. (Columbus: Charles E. Merrill Publishing Company: 1975), 141.

-Anthes, et al., The Atmosphere, 269; Millers, and Thompson, Elements of Meteorology, 141-142




1 comment:

Anonymous said...

மோடி. புராணத்தில் அறிவியல் இருக்கிறது என்று சொன்னால் அது முட்டாள்தனம், திருட்டு வேதம் குரானில் அறிவியல் இருக்கிறது என்று ஈமாந்தாரி சொன்னால் அது மட்டும் புத்திசாலித்தனமா? உனது குப்பை கும்பலை அப்போதே பாகிஸ்தானுக்கு அடித்து துரத்தாமல் விட்டு வைத்தோமல்லவா அந்த தவறு தான் இதற்கெல்லாம் காரணம்.