Followers

Thursday, October 05, 2017

களமிறங்கிய ஆஸ்திரேலிய தவ்ஹீத் ஜமாஅத்:

களமிறங்கிய ஆஸ்திரேலிய தவ்ஹீத் ஜமாஅத்:

பங்களாதேசில் அகதிகளாக வந்து இருக்க இடமின்றி உண்ண உணவின்றி தவித்து வரும் ரோஹிங்க்யா முஸ்லிம்கள் வாழும் அகதிகள் முகாமிற்கே நேரடியாகச் சென்று அவர்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை வழங்க தவ்ஹீத் ஜமாஅத் ஆஸ்திரேலியா மண்டல நிர்வாகம் முடிவு செய்தது. ஆஸ்திரேலியாவில் இது குறித்து அறிவிப்புச் செய்து ஆஸ்திரேலிய மக்களிடம் சுமார் 40 லட்சம் இந்திய ரூபாய் பணமதிப்புள்ள பொருளாதாரத்தை ஆஸ்திரேலியா தவ்ஹீத் ஜமாஅத்தினர் வசூலித்தனர். பங்களாதேஷின் பண மதிப்பிற்கு இது சுமார் 50 லட்சம் ரூபாய்கள் ஆகும்.

கடந்த  செப்டம்பர் 30ஆம் தேதி ஆஸ்திரேலிய தவ்ஹீத் ஜமாஅத்தின்  மண்டலத்தலைவர் சகோதரர் அஜ்மல் அவர்கள் தலைமையிலான தவ்ஹீத் ஜமாஅத்தின் தொண்டர் குழு பங்களா தேஷ் சென்றடைந்தது. அங்கு அகதிகள் முகாமில் வசிக்கும் மக்களுக்குத் தேவையான பொருட்களை வாங்கி விநியோகம் செய்தனர். ஆஸ்திரேலியாவில் இருந்து பங்களாதேஷ் சென்று திரும்ப ஆகும் செலவு தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகளின் சொந்த செலவு என்ற கூடுதல் தகவலும் நம்மை மெய்சிலிர்க்க வைக்கின்றது.

களமிறங்கிய குவைத் டிஎன்டிஜே:

அந்த பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து அவர்களுடைய தேவைகளை கண்டறிந்து உதவிகள் வழங்க தவ்ஹீத் ஜமாஅத்தின்  குவைத் மண்டல தலைவர் ராஜா சரீஃப் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. குவைத்தில் பணிபுரியும் பங்களாதேஷை சேர்ந்த சகோதரர்கள் மூலம் அந்நாட்டின் ராணுவ தொடர்பு கிடைக்கப்பெற்றது இறைவனின் மாபெரும் கிருபையாகும். இறைவனின் உதவி வேறு ரூபதத்தில் வந்தததையடுத்து குழுவாக செல்ல இருந்த மண்டல நிர்வாகிகள் அதற்காக ஆகும் செலவையும் இந்த பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவலாமே என்றெண்ணத்தில் அவர்களுடைய குழு பயணத்தை தவிர்த்து மண்டல தலைவர் மட்டும் பங்களாதேஷ் பயணமானார்.

குவைத்திலிருந்து வெள்ளி (29.09.17) அன்று நேரிடை விமானம் மூலம்  மாலை கிளம்பிய மண்டல தலைவர் ராஜா சரீஃப் அவர்கள் பங்களாதேஷ் சென்று அங்கு காக்ஸ்பசார் என்ற இடத்திற்கு சனிக்கிழமை (30.09.17) இரவு சென்றடைந்தார். காக்ஸ்பசாரிலிருந்து டெக்னாஃப் என்ற இடத்திற்கு 60 கிலோமீட்டர் தொலைவே இருந்தாலும் அங்கு சென்றடைய ஏறக்குறைய நான்கு மணிநேரம் ஆகிறது. அந்த இடத்திலிருந்து சிறிது தொலைவில் அகதிகளுக்கு பங்களாதேஷ் இராணுவம் அகதிகள் முகாம்கள் அமைத்துக் கொடுத்துக் கொண்டிருக்கிறது. அந்த முகாம்களுக்கு தினந்தோறும் வரும் அகதிகள் கவனிப்பாரற்று இருப்பதை அறிந்த நமது சகோதரர்கள் அங்கு வந்த அகதிகளுக்கு அவசர தேவைக்காக முதலில் பண உதவி செய்தனர்.

அடுத்தடுத்த அகதிகளுக்கான தேவைகள் ஆய்வு செய்யப்பட்டு.முகாம்கள் கிடைக்கப்பெறாத  ஆயிரக்கணக்கான  அகதிகளுக்கு இரண்டு லாரிகளில் உணவுப்பொருட்கள் முதல் கட்டமாக வழங்கப்பட்டன.

நேரடியாகவே தவ்ஹீத் ஜமாஅத்தின் சகோதரர்கள் பங்களாதேஷ் சென்று ரோஹிங்க்யா முஸ்லிம்களுக்கு பல லட்சக்கணக்கான ரூபாய் பெறுமதிப்புள்ள பொருட்களை வழங்கி உதவி செய்த இந்த நிகழ்வு இஸ்லாத்தின் மனிதநேயத்தை பறைசாற்றுவதாக அமைந்தது.

தவ்ஹீத் ஜமாஅத்தின் உலகளாவிய மனித நேய சேவை தொடரட்டும்.


எல்லாப்புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே!

No comments: