Followers

Wednesday, October 04, 2017

தாய்லாந்தில் இன்றும் உயிருடன் புதைக்கப்படும் கொடூரம்!

தாய்லாந்தில் இன்றும் உயிருடன் புதைக்கப்படும் கொடூரம்!

தாய்லாந்தில் குறிப்பிட்ட சில சமூகங்களில் கணவன் இறந்து விட்டால் அவனோடு மனைவியை உயிரோடு அதே புதை குழியில் புதைக்கும் பழக்கம் இன்றும் நடைமுறையில் உள்ளது. றமது நாட்டில் இந்து மக்களிடையே சதி என்ற பெயரில் கணவன் இறந்தவுடன் மனைவியை உயிரோடு அதே சிதையில் தூக்கி வீசும் பழக்கம் இருந்தது. இன்றும் சில இடங்களில் மறைமுகமாக நடக்கிறது. ஒளரங்கசீப் ஆட்சியில் இதற்கு தடை விதித்து இந்த கொடூரத்துக்கு ஒரு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டது. இஸ்லாம் வருவதற்கு முன் அந்த கால அரபுகளிடத்தில் பெண் குழந்தையை உயிரோடு புதைக்கும் பழக்கம் இருந்ததாம். நபிகள் நாயகம் வந்தவுடன்தான் அங்கும் இந்த பழக்கத்தை விட்டொழித்தனர் அரபுகள். 

மத்திய பிரதேசத்தில் பெண் குழந்தைகள் கொல்லப்படுவது சர்வ சாதாரணமாகி விட்டது தற்போது. பெண் குழந்தை பிறந்தவுடன் தாய்க்கு தெரிவிக்காமலேயே குடும்பத்தவரே கழுத்தை நெறித்து கொல்வது, சாக்கு துணியால் முகத்தை மூடி கொல்வது, புகையிலையை பிறந்த குழந்தையின் வாயில் திணிப்பது (நமது ஊர் சேலத்தில், உசிலம்பட்டியில் அரிசியை திணிப்பது, கள்ளிப்பால் ஊற்றுவது) என்று பல வழிகளை கையாள்கின்றனர்.

பெண் குழந்தை பிறந்தால் அதை வளர்ப்பது, அதை படிக்க வைப்பது, அடுத்து அந்த பெண்ணை பல லட்சம் வரதட்சணை கொடுத்து திருமணம் முடித்து கொடுக்க வேண்டும். அந்த பெண்ணும் மருமகளாக வேறொரு குடும்பத்துக்கு சென்று விடுவாள். இதனால் எங்களுக்கு என்ன லாபம் என்று நான்கு பெண் பிள்ளைகளை பெற்ற ஒரு ஆண் தைரியமாக கேமராவுக்கு முன்னால் சொல்வதைப் பார்த்து ஆச்சரியப்படுகிறோம்.


அவர்களில் ஒருவனுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது என்று நன்மாராயங் கூறப்பட்டால் அவன் முகம் கறுத்து விடுகிறது அவன் கோபமுடையவனாகிறான். எதைக் கொண்டு நன்மாராயங் கூறப்பட்டானோ, அதைத் தீயதாகக் கருதி அந்தக் கெடுதிக்காகத் தம் சமூகத்தாரை விட்டும் ஒளிந்து கொள்கிறான் அதை இழிவோடு வைத்துக் கொள்வதா? அல்லது அதை உயிரோடு மண்ணில் புதைத்து விடுவதா? என்று குழம்புகிறான்; அவர்கள் இவ்வாறெல்லாம் தீர்மானிப்பது மிகவும் கெட்டதல்லவா?” 

குர்ஆன் 16:58-59

"
எந்தக் குற்றத்திற்காக அது கொல்லப்பட்டது?" என்று- உயிருடன் புதைக்கப்பட்ட பெண் குழந்தை வினவப்படும் போது"

குர்ஆன் 81:8-9

அன்றைய மெக்கா சிலை வணங்கிகள் தங்கள் பெண் குழந்தைகளை கொல்வதை இந்த குர்ஆன் வசனம் எடுத்துக் காட்டுகிறது. அன்றைய நிலை இன்று அரங்கேறுவது நமக்கு கேவலம் அல்லவா?


4 comments:

Dr.Anburaj said...

மூடநம்பிக்கைகள் பலவிதம்.அரேபியய மண்ணில் அது ஒருவிதம்.அனைவரையும் எடுத்துச்

சொலலி திருத்தமுடியும்.திருத்தமுடியாத ஜென்மங்கள் உண்டு என்றால் அது அரேபிய

அடிமைகள்தாம்.சதா தாய்நாடடை வசைபாடும் அரேபிய அடிமைக்கு என்ன பதில் சொல்வது

என்று தொியவில்லை. தாய்லாந்து அரசு என்ன செய்து கொண்டீருக்கின்றது.ஐநா சபை என்ன செய்து கொண்டிருக்கின்றது. சிாியா ஈராக் ஜோா்டான் போன்ற நாடுகள் இரத்தத்தில் நீந்திக்கொண்டிருக்கின்றது. அண்ணன் சுவனப்பிாியன் தாய்லாந்தில் ஏதோ காட்டு வாசிகள் என்னவோ செய்யகின்றாா்களாம். நரகாளியில் பாக்கிஸ்தான் பிாிவினையின் போது வங்கதேசத்தில் உள்நாட்டு கலவரத்தை அடக்குகின்றேன் என்று பாக்கிஸ்தான் காடையா்கள் என்ன கொடூரம் செய்தாா்கள். குரானும் முஹம்மதும் இருக்கும் வரை உலகத்தின் ஒரு பகுதி சதா இரத்த வெள்ளத்தில்தான் முழ்கி இருக்கும். இறைவா எங்களை காப்பாற்றுவாயாக.

Dr.Anburaj said...

மூடநம்பிக்கைகள் பலவிதம்.அரேபியய மண்ணில் அது ஒருவிதம்.அனைவரையும் எடுத்துச்

சொலலி திருத்தமுடியும்.திருத்தமுடியாத ஜென்மங்கள் உண்டு என்றால் அது அரேபிய

அடிமைகள்தாம்.சதா தாய்நாடடை வசைபாடும் அரேபிய அடிமைக்கு என்ன பதில் சொல்வது

என்று தொியவில்லை. தாய்லாந்து அரசு என்ன செய்து கொண்டீருக்கின்றது.ஐநா சபை என்ன செய்து கொண்டிருக்கின்றது. சிாியா ஈராக் ஜோா்டான் போன்ற நாடுகள் இரத்தத்தில் நீந்திக்கொண்டிருக்கின்றது. அண்ணன் சுவனப்பிாியன் தாய்லாந்தில் ஏதோ காட்டு வாசிகள் என்னவோ செய்யகின்றாா்களாம். நரகாளியில் பாக்கிஸ்தான் பிாிவினையின் போது வங்கதேசத்தில் உள்நாட்டு கலவரத்தை அடக்குகின்றேன் என்று பாக்கிஸ்தான் காடையா்கள் என்ன கொடூரம் செய்தாா்கள். குரானும் முஹம்மதும் இருக்கும் வரை உலகத்தின் ஒரு பகுதி சதா இரத்த வெள்ளத்தில்தான் முழ்கி இருக்கும். இறைவா எங்களை காப்பாற்றுவாயாக.

Dr.Anburaj said...

தமிழ் புலவா்களின் தமி்ழ் விளையாட்டை சற்று ரசிப்போமோ !
கடனால் நடுக்குற்ற புலவர் போட்ட புதிருடன் கூடிய பாடல்!

இராமச்சந்திர கவிராயர் பெரும் புலவர். ஒரு முறை கடன் தொல்லையால் மிகவும் அவதிப்பட்டார்.அதை எப்படித் தீர்ப்பது?வேறு வழி? வள்ளல் ஒருவரைக் கண்டு தமிழ்ப் பாட்டால் வேண்டுகோள் விடுக்க வேண்டியது தான்!

அப்போது சீதாராமன் என்ற வள்ளல் தமிழின் பால் தீராக் காதல் கொண்டிருந்தார் ஆகவே தமிழ்ப் புலவர்கள் வேதனைப் படுவதைக் கண்டு அவர் சகிக்க மாட்டார்.
அவரிடம் வந்தார் நம் புலவர்.கடன் என்று நேரடியாகச் சொல்லத் தயக்கம். ஆகவே, பாடினார் இப்படி ஒரு பாடல்.

அத்திரம்வே லாவலமி ராசி யொன்றிற்

கமைந்தபெயர் மூன்றினிடை யக்க ரத்தால்

மெத்தநடுக் குற்றுனைவந் தடைந்தே னிந்த

விதனமகற் றிடுமற்றை யெழுத்தோ ராறில்

பத்துடையா னைத்தடிந்து பெண்ணார் செய்து

பரிவினுகர் வோனிருதாள் பணிந்து போற்றும்

சித்தசனே தெளியசிங்கன் றவத்திற் றோன்றுஞ்

சீதாரா மப்ரபல தியாக வானே.அத்திரம் - அஸ்திரம் அத்திரம் ஆனது. அதைத் தமிழில் பகழி என்பர்.

வேலாவலம் - கடல்

இராசி ஒன்றிற்கு அமைந்த பெயர் - கன்னி இராசி

மூன்றின் - இந்த மூன்று வார்த்தைகளின்

இடை அக்கரத்தால் - நடுவில் உள்ள எழுத்துக்களால்

மெத்த நடுக்குற்று - மிகவும் நடுக்கம் அடைந்து

உன்னை வந்து அடைந்தேன் - உன்னிடம் வந்து சேர்ந்தேன்.

பகழி, கடல், கன்னி ஆகிய மூன்று வார்த்தைகளில் உள்ள நடு எழுத்து க ட ன் - கடன் என்பதாகும்.

கடனால் மெத்த நடுக்கம் அடைந்தாராம் கவிஞர்.

ஆகவே உன்னை வந்து அடைந்தேன் என்கிறார்.

இந்த விதனம் அகற்றிடு - இந்த விசனத்தை - என் கவலையை நீக்கிடு.

மற்றை எழுத்து ஓர் ஆறில் - மற்றைய ஆறு எழுத்துக்களினால்

பத்து உடையானைத் தடிந்து - பத்துத் தலைகளை உடைய இராவணனைக் கொன்று

பெண் ஆக செய்து - பெண்ணுருவாக்கி

பரிவின் நுகர்வோன் - அன்போடு கொடுத்ததை வாங்கி உண்டவனாகிய திருமாலின்

இரு தாள் - இரண்டு பாதங்களை


பரந்து போற்றும் - வணங்கித் துதிக்கின்ற

சித்தசனே - அழகினால் மன்மதனை நிகர்த்தவனே

தெளிய சிங்கன் - தெள்ளிய சிங்கனது

தவத்தின் தோன்றும் - தவப் பேறினால் அவதரித்த

சீதாராம - சீதாராமன் என்னும் பெயருடைய

ப்ரபல தியாகவானே - பிரசித்தமான கொடையாளியே!பகழி, கடல், கன்னி ஆகிய மூன்று வார்த்தைகளில் நடு எழுத்துக்களான க, ட, ன் ஆகிய மூன்று எழுத்துக்களை நீக்கி விட்டால் மீது வரும் ஆறு எழுத்துக்கள் பழி, கல், கனி ஆகும்.

இவற்றில் முதலில் இருக்கும் பழியினால் பத்துத் தலை உடைய இராவணனைக் கொன்று, இரண்டாவதாகிய் கல்லை அகலிகை என்னும் பெண்ணாக உருவாக்கி, மூன்றாவதாகிய கனியை சவரி சமர்ப்பிக்க அதை ஏற்று உண்டவனாகிய இராமனின் பாதங்களை வணங்கித் துதிக்கும் சீதாராமன் என்ற பெயரைக் கொண்ட கொடையாளியே, என் துன்பத்தைப் போக்கு!

என்ன சாமர்த்தியம்?

கவிஞர் போட்ட புதிர்க் கவிதையை அவிழ்த்து அதன் பொருளைக் கண்டு அவர் கடனைத் தீர்த்தார் சீதாராம வள்ளல்.

கவிஞருக்குக் கடன் தீர்ந்தது.

நமக்கோ நல்ல பாடல் ஒன்று கிடைத்தது.

வாழ்க தமிழ். வளர்க புலவர் கூட்டம்!

Dr.Anburaj said...

ரொம்பவும் பொய்களை அடுக்க வேண்டாம்.நானும் அரேபிய சாித்திரம் படித்திருக்கின்றேன். ஒரு கோத்திரத்தாா்கள் மத்தியில்தான் பெண் குழந்தைகளைக் கொல்லும் பழக்கம் இருந்தது. அதுபோல் பெண் குழந்தைகளைக் கொல்லம் பழக்கம் எங்கெல்லாம் இருக்கின்றதோ அந்தசமூகம் பண்பாடு நிலையில் இரண்டாங்கெட்டானாக இருக்கும். ஆண்கள் மத்தியில் ஒழுக்கம் மிகக் குறைவாக இருக்கும்.அதனால் குடும்ப வாழவு பெரும் பிரச்சனையில் இருக்கும்.மனிதனை ஆண்டவன் காட்டுமிராண்டியாக மிருகமாகதான் படைத்தான். எப்படியோ கோடிக்கணக்கான மக்களை படிப்படியாக பண்பாட்டு பாிணாமத்தில் மேலேற்றி வந்திருக்கின்றாா்கள். இன்னும் பாக்கி மக்களின் கலாச்சார மாண்புகளை ஆன்மீகப்படுத்தினால்-பிறாமணா்கள் ஆக்கினால் -அந்தணா்கள் ஆக்கினால் -மூமின்கள் ஆக்கினால் பிரச்சனை தீா்ந்துவிடும். அதற்கு வழி என்ன ? இசுலாமியம் என்பது தற்கொலை.