Followers

Wednesday, October 04, 2017

காந்தியார் பிறந்த நாளில்....! காமராசர் நினைவு நாளில்....!!


காந்தியார் பிறந்த நாளில்....! காமராசர் நினைவு நாளில்....!!

காந்தியார் பிறந்த குஜராத் மண்ணிலேயே தாழ்த்தப்பட்டோர் மீசை வைத்துக் கொள்ளக் கூடாது என்றும், நெய்ப் போட்டு சாப்பிடக் கூடாது என்றும் கூறி அவர்களைத் தாக்கும் கொடுமை நடக்கிறதே, - இதுதான் 70 ஆண்டு சுதந்திரத்தின் இலட்சணமா? சிந்திக்க வேண்டாமா? என்று சிந்தனைப் பொறி பறக்கும் வினாவை எழுப்பியுள்ளார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள். அதுவும் காந்தியார் பிறந்த நாள், காமராசர் நினைவு நாளில் இது குறித்து சிந்திக்க வேண்டாமா? என்றும் கேட்டுள்ளார். அறிக்கை வருமாறு:

தேசபிதா என்று அழைக்கப்பட்ட காந்தியாரின் பிறந்த நாளில் அவர் பிறந்த மண்ணான குஜராத் - மாநிலத்திலிருந்துதான் பிரதமரும் வந்து நாட்டை ஆண்டு கொண்டுள்ளார் - கடந்த 3 ஆண்டுகளாக!

காந்தியார் பிறந்த மண்ணில் கொடூரமா?

தீண்டாமையை மட்டுமே ஒழிக்கச் சொல்லி, ஜாதி வர்ணாஸ்ரமம் மிக நல்லது என்று டாக்டர் அம்பேத்கரிடமும்பெரியாரிடமும் வாதாடிய அவர் பிறந்த குஜராத்தில் சுதந்திரம் சுயராஜ்ஜியம் ஜனநாயகம் உள்ள மண்ணில் உழைக்கும் வர்க்கமான தலித்துகள் என்று அழைக்கப்படும் தாழ்த்தப்பட்ட சகோதரர்களின் நிலை - 70 ஆண்டு கால (சு)தந்திரத்திற்குப் பின்னரும் என்ன நிலைமை?

இன்றைய டைம்ஸ் ஆப் இந்தியா ஆங்கில நாளேட்டில்   13ஆம் பக்கத்தில் வந்துள்ள அருவருக்கத் தக்க, ஒரு செய்தி.

தாழ்த்தப்பட்டவர் மீசை வைத்துக் கொள்ளக் கூடாதாம்!

குஜராத்தின் ஆனந்த் மாவட்டத்தில் போர்சத் தாலுகா பதரனியா கிராமப் பகுதிகளில் இன்னமும் தாழ்த்தப்பட்ட - தலித் இளைஞர்கள் மீசை வைத்துக் கொள்ளக் கூடாதாம்! மீசை வைத்த இளைஞர்களுக்குத் தண்டனை! அவர்களுக்கு முகச் சவரம் செய்த முடி திருத்தும் பார்பர்களுக்கும் தண்டனை, அடி, உதை, கொலையிலும் முடிந்துள்ளது.

அது மட்டுமல்ல; ஒரு ஹிந்து மதத் திருவிழா கர்ப்பா  என்பது; அதை அருகில் இருந்து பார்த்தமைக்காக, தாழ்த்தப்பட்ட - தலித் இளை ஞர்களுக்கு அடி, உதை - தலையைச் சுவற்றில் முட்டிய தால் மருத்துவமனையில் இறந்துள்ளார் அவ்விளைஞர்!

என்னே காட்டுமிராண்டிதனமான கொடுமை!

டாக்டர் அம்பேத்கரின் தொலைநோக்கு!

தீண்டாமை ஒழிக்கப்பட்டு விட்டது என்று 70 ஆண்டுகளாக இந்திய அரசியல் சட்டம் கூறுகிறது என்றாலும் 100 ஆண்டுகள் ஆனாலும் இந்து மதம் உள்ள இந்த நாட்டில் தீண்டாமை ஒழிக்கப்படவே முடியாது! முடியவே முடியாது, என்று டாக்டர் அம்பேத்கர் கூறினார்! - எத்தகைய தொலைநோக்கு, அனுபவப் பூர்வமான அறிவிப்பு!

எந்த காந்தியாரை மதவெறி, பார்ப்பனீயம் - ஆரியம் கொன்றதோ, அதே மதவெறிப் பாம்பு இன்று மகுடம் சூட்டிக் கொண்டு படமெடுத்தாடுகிறதே! இதுதான் சுயராஜ்யமா?

காமராசரைப் படுகொலை செய்ய முயற்சிக்கவில்லையா?

இந்திரா காந்தி மதவெறிக்குப் பலியானார்!

காமராசரை மதவெறி (பசுவதைத் தடுப்பு என்ற பெயரால்) ஆர்.எஸ்.எஸ். சாமியார்கள் நிர்வாணமாகப் பட்டப் பகலில் 1966 நவம்பரில் அகில இந்திய காங்கிரசு கட்சியின் தலைவரான அவரது வீட்டுக்குத் தீவைத்து, அவரை கொலை செய்ய முயற்சிக்கவில்லையா?

இன்று அவர்களது சிலைகளுக்கு மாலை.

ஆனால் அவரது சீலங்களுக்கு (கொள்கைகளுக்கு) வேட்டு - அதுவும் அவர் பிறந்த மண்ணான குஜராத்  - இதைவிட தலை குனிவு வெட்கக் கேடு வேறு உண்டா?

மனித உரிமை ஆணையம் என்ன செய்கிறது? அதே குஜராத்தில் நடப்பதைப் பார்த்துக் கொண்டு இருப்பது ஏன்?

அது மட்டுமல்ல, தங்கள் வீட்டுத் திருமண விருந்தில் நெய் போட்டுச் சாப்பிட்டதற்காக உயர் ஜாதித் திமிர் பிடித்தவர்கள், அவர்களைக் கட்டி வைத்து அடித்துக் கொன்றுள்ளனர்!

பசுப் பாதுகாப்பு என்ற பெயரில் உனா கிராம தலித் இளைஞர்கள் நிர்வாணமாக்கிய பிறகு படுகொலை  - என்னே அநாகரிகம்! இது! (ஆதாரம்: 2.9.2017 - The Economic & Political Weekly) 70 ஆண்டுகால சுயராஜ்யத்தில் செவ்வாய்க்கிரகம் கூடப் போக முடிகிறது; ஆனால் அவன் கட்டிய கோயிலில் அவன் அடித்து வைத்த கடவுள் சிலை அருகில் - கர்ப்பகிரகத்திற்குள் -கால் வைக்க முடியவில்லை; அவன் ஆகமங்களை முறையே படித்து தகுதி பெற்ற பின்பும் கூட இந்நிலை என்பது எதைக் காட்டுகிறது?

துக்க நாள் என்ற தந்தை பெரியார் சொன்னாரே!

இச்சுதந்திரம் உண்மை சுதந்திரமா?

மனிதத்தை மதிக்காத சமூகம் ஜாதியை - தீண்டாமையை - பெண்ணடிமையை உள்ளடக்கிய பிறவி பேதத்தைப் பாதுகாக்கும் சமூகத்தை எத்தனை ஆண்டு காலம் சகிப்பது?

இளைஞர்களே, சிந்தியுங்கள்! தலைவர்களைப் படங்களாகப் பார்த்து மாலை அணிவிப்பதை சடங்குகளாக்கும் நிலை எவ்வளவு காலம் தொடருவது? வெட்கப்பட வேண்டாமா? தந்தை பெரியார் கூறியது துக்க நாள் என்பது எத்தகைய தொலைநோக்கு - புரிந்து கொள்க! 

கி. வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்
சென்னை        

2-10-2017           

7 comments:

Dr.Anburaj said...

வீரமணி ஒரு கோழை. எத்தன்.மானமில்லாதவன்.

ஹிந்து காந்திஜி! ஹிந்துத்வம் வாழ வழி காட்டியவர்

ஹிந்து காந்திஜி!


புனிதமான தினம் அக்டோபர் இரண்டாம் தேதி.அண்ணல் அவதரித்த திருநாள்.

அவரைக் கொண்டாடும் விதமாக எழுத முற்படும் போது வந்த தலைப்பு தான் ஹிந்து காந்திஜி!இந்தத் தலைப்பையே செகுலரிஸ்டுகள் விரும்பமாட்டார்கள்.

மாறாக கிறிஸ்துவ காந்திஜி என்றோ அல்லது இஸ்லாமிய காந்திஜி என்றோ தலைப்புக் கொடுத்திருந்தால் இமயமலை ரேஞ்சுக்கு என்னைப் பாராட்டுவார்கள்.

காந்திஜியின் வழியில் நடக்க விரும்புவதால் பாராட்டுக்கு பக்குவப்படாமல் உண்மையை எழுதத் துணிவேன்.

அதற்கு உகந்த தலைப்பு இது தான். ஹிந்து காந்திஜி!

சபர்மதி சிறையில் காந்திஜி இருந்த சமயம்.

ஒரு நாள் தி மான்செஸ்டர் கார்டியன் என்ற பத்திரிகையிலிருந்து அதன் பிரதிநிதி ஒருவர் 1922ஆம் ஆண்டு மார்ச் 18ஆம் தேதிக்கு முன்னால் காந்திஜியைப் பேட்டி காண வந்தார்.

அந்தப் பேட்டியை மதராஸிலிருந்து வெளி வரும் ஆங்கிலப் பத்திரிகையான தி ஹிந்து 1922ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியிட்டது.

ஒத்துழையாமை இயக்கம் என்பது கிறிஸ்துவின் உபதேசத்திற்கு முரணானது என்று பத்திரிகையாளர் காந்திஜியிடம் கூறினார். அதற்கு காந்திஜி, “ நான் ஒரு கிறிஸ்தவன் அல்ல; ஆகவே கிறிஸ்தவ கொள்கைகளுக்கு ஏற்றபடி எனது செயல்களை நியாயப்படுத்த வேண்டிய அவசியம் எனக்கு இல்லை” என்று முகத்தில் அடித்தாற்போல் பதில் கூறினார்3

தன்னை இந்தியாவின் நீண்ட கால நண்பர் என்று கூறிக் கொண்ட ஒரு அமெரிக்கப் பெண்மணி, “ஹிந்து சமயத்தைப் பற்றி உங்களுடைய விளக்கத்தை நீங்கள் கொடுத்து ஹிந்து சமயத்தையும் ஏசுநாதரின் உப்தேசங்களையும் ஒப்பிட்டுக் கூறுவீர்களா?” என்று வேண்டிக் கொண்டார்.
20-̀10-1927 யங் இந்தியா இதழில் அவரது கடிதத்தையும் தன் பதிலையும் காந்திஜி வெளியிட்டார்.

விரிவான அந்த பதில் ஹிந்துவாக தான் இருப்பதற்கான காரணம் என்ற காந்திஜியின் நிலைப்பாட்டை விளக்கும் அற்புத பதிலாக அமைந்தது.

ஆனால் இன்றைய செகுலரிஸ்டுகள் காந்திஜியைத் தங்களின் கபடப் போர்வைக்குள் சுருட்டப் பார்ப்பதால் அதையெல்லாம் பற்றிப் பேசுவதில்லை; வெளியிடுவதில்லை.

அவரது பதிலின் ஒரு பகுதி:

“பரம்பரையின் செல்வாக்கில் எனக்கு நம்பிக்கை உண்டு. எனவே, நான் ஓர் ஹிந்து குடும்பத்தில் பிறந்ததால், நான் ஹிந்துவாக இருந்து வருகிறேன்.

எனக்குத் தெரிந்த எல்லா சமயங்களுக்குள்ளும் ஹிநது சமயம் ஒன்று தான் மிகவும் சகிப்புத்தன்மை வாய்ந்தது என்பதை நான் அறிந்து கொண்டிருக்கிறேன்.

அதில் கண்மூடித்தனமான பிடிவாதத்திற்கு இடமில்லை. இது தான் என் மனத்தை மிகவும் கவர்ந்திருக்கிறது.

அதில் தான் அஹிம்சை நடைமுறையிலும் அனுசரிக்கப்படுகிறது. (ஜைன மதம் அல்லது புத்த மதத்தை ஹிந்து சமயத்திலிருந்து வேறானதாக நான் கருதவில்லை)

ஹிந்து சமயம் பசுவை காப்பது, ஜீவ காருண்ய மலர்ச்சிக்கே அடிப்படையாகும். எல்லா உயிர்களும் ஒன்று என்பதையும், எனவே எல்லா உயிர்களும் புனிதமானவை என்பதையும் அது செயலில் காட்டுவதாக இருக்கிறது.

அந்த நம்பிக்கையின் நேரடியான பலனே, மறு ஜன்மத்தில் உள்ள மகத்தான நம்பிக்கையாகும்.

மேலும் சத்தியத்தை இடைவிடாது தேடியதன் அற்புதமான பலனாகவே, வர்ணாசிரம தருமம் கிடைத்தது.

ஹிந்து சமயத்தில் நான் இருந்து வருவதற்கான காரணமான சிறந்த அம்சங்கள் என்று எனக்குத் தோன்றியதையே இங்கே மிகவும் சுருக்கமாகக் குறிப்பிட்டிருக்கிறேன்.

1937ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இரண்டாம் தேதி போலந்திலிருந்து தத்துவ பேராசிரியரான க்ரென்ஸ்கி காந்திஜியை வந்து சந்தித்தார்.

அனைவரும் படிக்க வேண்டிய பேட்டி இது.

முழுவதையும் தர இடம் இல்லை என்பதால் சில முக்கியப் பகுதிகளை மட்டும் இங்கு காணலாம்:

Dr.Anburaj said...

Krzenski : Catholicism is the only true religion

Gandhiji : Do you therefore say that other religions are untrue?

Krzenski : If others are convinced that their religions are true they are saved.

Gandhiji : Therefore you will say that everyone would be saved even through untruth.

Krzenski: But I have studied all religions and have found that mine is the only true religion.

Gandhiji : But so have others studied other religions. What about them?

Krzenski : I have examined the arguments in favour of other religions.

Gandhiji : But it is an intellectual examination. You require different scales to weigh spiritual truth…. My submission is that your position is arrogant. But I suggest you a better position. Accept all religions as equal, for all have the same root and the same laws of growth.Professeor switched to a next question.


Gandhiji : It is no use trying to fight these forces without giving up the idea of conversion, which I assure you is the deadliest poison that ever sapped the fountain of truth.மதமாற்றம் செய்பவா்கள் ஆபத்தான விஷம் போன்றவா்கள். உண்மையை நாசம் செய்பவா்கள் இவா்கள் என்றாா் காந்திஜி.மதமாற்றம் என்பது கொடிய விஷம்

மதமாற்றம் என்பது கொடிய விஷம் என்ற காந்திஜியின் கருத்து செவிடன் காதில் ஊதிய சங்கு போலத் தான் ஆயிற்று பல கத்தோலிக்க பிஷப்புகளுக்கு.

காந்திஜியை “அறுவடை” செய்தால் ஒட்டு மொத்த இந்தியாவையுமே அறுவடை செய்தது போலத் தானே!

அதை நம்பி இந்த போலந்து புரபஸர் மட்டும் வரவில்லை.

ஸ்டான்லி ஜோன்ஸ் உள்ளிட்ட பிரபல பாதிரிகள் அவரை நோக்கிப் படை எடுத்து வந்தன.

ஆனால் ஏமாந்தே போயின.அனைத்தையும் அன்பர்கள் விரிவாக முழுவதுமாகப் படிக்க வேண்டும்.

Dr.Anburaj said...

போலந்து மாணவன் ஒருவன் காந்திஜியின் போட்டோ ஒன்றை எடுத்து வந்தான். அவரிடம் அதில் கையெழுத்திட வேண்டினான்.

கத்தோலிக்க பாதிரிமார்கள் நடத்தும் பள்ளி ஒன்று இருக்கிறது.

உங்கள் கையெழுத்திட்ட இந்த போட்டோவை விற்று அதில் வரும் பணத்தை அவர்களிடம் கொடுத்து விடுவேன் என்றான அந்த மாணவன்.

“ஆ, அப்படியா சேதி! இதில் கையெழுத்திட்டு பாதிரிகளின் மதமாற்ற வேலைக்கு நான் உதவுவேன் என்று நீ எதிர்பார்க்கிறாயா?” என்று கூறியவாறே போட்டோவை அந்த மாணவனிடமே திருப்பிக் கொடுத்தார் காந்திஜி.

மஹாதேவ தேசாய் தனது டயரிக் குறிப்பில் இந்தச் சம்பவத்தை விரிவாகக் குறிப்பிடுகிறார்.

காந்திஜிக்கு பாதிரிகளின் அந்தரங்க எண்ணமும் தெரியும்;ஜிஹாதிகளின் உள் நோக்கமும் புரியும்.

அவர் தெளிவான ஹிந்துவாகவே வாழ விரும்பினார்.

ஏனெனில் ஒரு ஹிந்துவுக்கு யாரும் பகை இல்லை. அவனுக்கு அனைவரும் சமமே.

ஆனால் ஒரு கிறிஸ்துவனுக்கோ அவனுக்கு முன்னால் மற்றவர் சமம் இல்லை. அவன் ஏசுவுக்குத் தன்னை ஒப்புக் கொடுக்க வேண்டும்.

ஒரு இஸ்லாமியருக்கு அடுத்தவர் யாரானாலும் காஃபிர் தான்!

ஹிந்து மதம் வாழ்ந்தால் உலகில் அனைவரும் வாழலாம். ஆனால் இஸ்லாமோ அல்லது கிறிஸ்தவமோ வாழ்ந்தால் ஏனையது இருக்கக் கூடாது.

காந்திஜி அனைவரும் வாழ வேண்டுமென்று விரும்பினார்; அந்த நல்லெண்ண வேள்வியில் தன்னை ஆகுதி ஆக்கினார்.

இன்றைய போலி செகுலரிஸ்டுகளும், மதவாதிகளும் அவரை மறக்கடிக்கவே முயல்வர்.

அதைத் தோற்கடிக்க ஹிந்து காந்திஜியைப் போற்றுவோம். உண்மையான ஹிந்துவாகவே என்றும் இருப்போம்.

Dr.Anburaj said...

இயற்கையில் கிடைப்பதில் மிகவும் கடினமானது வைரமே. வைரத்தை வைரத்தால் மட்டுமே அறுக்க முடியும்” - அறிவியல் தகவல்

இயற்கை நமக்கு அளிக்கும் செல்வத்தில் தங்கத்திற்கு அடுத்தபடியாக அனைவரும் விரும்புவது வைரத்தையே. இதில் மதம், ஜாதி, மொழி, நாடு, இனம், பால் என்ற பாகுபாடே இல்லை.

அனைவரும் விரும்பும் ஜொலிக்கும் வைரத்தைக் கண்டு அறிவியல் கூட வியக்கிறது.

வைரம் பல பில்லியன் ( ஒரு பில்லியன் என்றால் நூறு கோடி) ஆண்டுகள் பழமையானவை. சில சமயம் 300 கோடி ஆண்டுகள் பழமையான வைரங்கள் கிடைக்கின்றன.

நூறு மைல் ஆழத்தில் பூமியில் புதைந்து கிடைக்கும் வைரம் எரிமலை வெடிப்புகளினால் மேலே வருகிறது.

வைரத்தில் இருப்பது ஒரே ஒரு பொருள் தான் - கார்பன் தான் அது. நூறு சதவிகிதம் கார்பன்!!

பூமியின் கீழே உள்ள அதீத வெப்பத்தினாலும் அழுத்தத்தினாலும் கார்பன் அணுக்கள் தனித்தன்மையினால் ஒன்றிணைகின்றன. அதிசயமான வைரமாக ஆகின்றன.

அடமாஸ் (adamas) என்ற கிரேக்க வார்த்தையிலிருந்து உருவான ஆங்கில வார்த்தை தான் டயமண்ட். இதன் பொருள் அழிக்க முடியாதது, ஜெயிக்க முடியாதது என்பதாகும். வைரத்தை முதன் முதலில் உலகில் கொண்டிருந்த ஒரே நாடு இந்தியா தான்.

கிறிஸ்துவுக்கு முன் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரேயே வைரத்தை இந்திய மக்கள் அணிந்திருந்தனர். தாங்கள் வணங்கும் தெய்வச் சிலைகளிலும் அதை அணிவித்திருந்தனர்.

வைரத்தை அணியாத பெரிய மன்னனே கிடையாது. ஆடைக்கும் மேலாக வைரத்தை மன்னர்கள் மதித்து அதை அணிந்து வந்தனர். அரசவைகளில் எந்த அந்தஸ்து உள்ளவர் எப்படிப்பட்ட நவரத்ன மணியை எந்த விதத்தில் பதித்து அணிய வேண்டும் என்பதற்கு கடுமையான விதி முறைகள் இருந்தன.

வைரத்தைப் பற்றி அக்னி புராணம் உள்ளிட்ட பல நூல்கள் பல அரிய, இரகசியமான கருத்துக்களைத் தெரிவிக்கின்றன.

இந்திய வைரங்களை உலகினர் போட்டி போட்டுக் கொண்டு வாங்கினர். வைர நாடு என்றே இந்தியா அழைக்கப்பட்டது. வெனிஸ் நகரிலும் ஐரோப்பாவில் பல நகரங்களிலும் இந்திய வைரங்களை விற்கும் வைரச் சந்தைகள் இருந்தன.

1725ஆம் ஆண்டு தான் பிரேஜிலில் ஒரு வைரச் சுரங்கம் கண்டு பிடிக்கப்பட்டது.

ஆயிரத்தி எண்ணூறுகளில் தான் தென் ஆப்பிரிக்காவில் வைரம் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இப்போது கனடா, போட்ஸ்வானா, நமீபியா, ரஷியா உள்ளிட்ட நாடுகளிலும் வைரம் கிடைக்கிறது.

உலக வைரங்களில் பெரிய வைரம் தென் ஆப்பிரிக்காவில் எடுக்கப்பட்ட கல்லினன் வைரம் தான். இதன் எடை 3106 காரட், (ஒரு காரட் என்பது 0.2 கிராம்). இது எட்வர்ட் மன்னனுக்கு அளிக்கப்பட்டது. பின்னர் இது ஒன்பது பெரிய துண்டுகளாகவும் நூறு சிறிய துண்டுகளாகவும் வெட்டப்பட்டது. மூன்று பெரிய துண்டுகளை டவர் அஃப் லண்டனில் உள்ள கண்காட்சியில் காணலாம்.

ஆனால் இந்த வைரங்களில் எல்லாம் மிகச் சிறந்த வைரமாக இந்தியர்களின் உரிமைச் சொத்தாகக் கருதப்படுவது கோஹினூர் வைரம் தான்.

அதன் கதையே விசித்திரமானது; சுவையுடன் சோகம் கலந்த ஒன்று.

கோஹினூர் வைரம் இந்தியாவின் பரம்பரைச் சொத்து. அது இன்று இங்கிலாந்தில் இருக்கிறது.

வெள்ளையர் அடித்த கொள்ளையில் கோஹினூரும் ஒன்று. அதை மீட்டு இந்தியாவிற்குக் கொண்டு வர வேண்டும் என்று நீண்ட காலமாகப் பெரும் முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது.

Dr.Anburaj said...

கோஹினூர் என்றால் பாரசீக மொழியில் ஒளி மலை என்று பொருள்.

இது எவ்வளவு பழமையானது என்பது யாருக்கும் தெரியாது.

இதன் பழைய காலப் பெயர் ஸ்மயந்தக மணி.சம்ஸ்கிருத நூல்கள் பலவற்றிலும் இதன் புகழ் மற்றும் அருமை பெருமைகள் குறிப்பிடப்பட்டுள்ளன. பகவான் கிருஷ்ணர் உள்ளிட்டோரால் இந்த மணி மதிக்கப்பட்டது என்பது பரம்பரையாக வழங்கி வரும் ஐதீகம்.

அத்துடன் இந்த கோஹினூருடன் கூடவே ஒரு சாபமும் உண்டு என்று நம்பப்படுகிறது.

ஆண்களிடம் இது இருந்தால் அது அவர்களுக்கு ஆபத்தையே தரும். பெண்கள் இதை அணியலாம். இது தான் சாபம்.

இதன் பழைய கால எடை 793 கிராம். இன்றோ வெட்டப்பட்டு வெட்டப்பட்டு சுமார் 105 கிராமாகச் சுருங்கி விட்டது.

காகதீய வம்சம் இந்தியாவில் ஆட்சி புரிந்த போது ஆந்திர பிரதேச்த்தில் கோல்கொண்டா பிரதேசத்தில் இது மீண்டும் கிடைத்ததாக ஒரு வரலாறும் உண்டு.

மத்திய ஆசியாவிலிருந்து கைபர் கண்வாய் (இன்றைய ஆப்கானிஸ்தானுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே உள்ளது இது) வழியே இந்தியாவினுள் 1526ஆம் ஆண்டு நுழைந்த பாபர் முகலாய சாம்ராஜ்யத்தை நிறுவினார். அதிலிருந்து சுமார் 300 ஆண்டுகள் இந்த முகலாய ஆட்சி தொடர்ந்தது.

முகலாய அரசரான ஷாஜஹான் 1628ஆம் ஆண்டு தனது சிம்மாசனத்தில் வைரங்களைப் பதித்தார். இதைச் செய்ய சுமார் ஏழு ஆண்டுகள் பிடித்தது.

இதன் விலையோ தாஜ்மஹாலுக்கு ஆன செலவைப் போல நான்கு ம்டங்கு அதிகம்! தாஜ்மஹால் கட்டப்பட்டு வந்த அதே காலகட்டத்தில் தான் இந்த சிம்மாசனமும் உருவாகிக் கொண்டிருந்தது. இந்தச் செய்தியை அரசவை குறிப்புகளை எழுதி வந்த அஹ்மத் ஷா லாகூர் எழுதி வைத்துள்ளார்.Dr.Anburaj said...

72 வயதில் 26 வயத மணியம்மை என்ற வளா்ப்பு மகளை மணந்த அதிமகா பண்பாடு படைத்தவா் கிழவன் ஈவேரா ஒரு அசிங்கம்.

Dr.Anburaj said...


Follow the Spirit of the Scriptures, Not the Words – “Study the words, no doubt, but look behind them to the thought they indicate; And having found it, throw the words away, as chaff when you have sifted out the grain.” – Hinduism

வேதங்களைப் படியுங்கள்.வாா்த்தைகளுக்கு பின் உள்ள அா்த்தங்களை உணா்வுகளைப் புாிந்து கொள்ளுங்கள். வாா்த்தைகள் முக்கியம் அல்ல. பின்னணியில் உள்ள அா்தங்கள்தான் முக்கியம். வாா்த்தைகள் பதா் போன்றவை. புடைத்து தள்ள வேண்டும் பதா்களை.தானியங்கள்தான் முக்கியம்.
இந்துமதம்