Followers

Monday, October 09, 2017

யூதர்களும் நம் நாட்டு பிராமணர்களும் ஒரே குலத்தை சேர்ந்தவர்களா?சில வருடங்களுக்கு முன்பு பதிந்த பதிவு. அதனை மீள் பதிவு செய்கிறேன்.


எகிப்தியர்கள் ஒரு காலத்தில் இனத்தால் யூதர்கள். தற்போது இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டுள்ளனர். என்னோடு அலுவலகத்தில் ஒன்றாக வேலை செய்யும் எகிப்தியர்களின் தோற்றமானது நம்ம ஊர் பிராமணர்கள் அச்சு அசலாக உரித்து வைத்திருக்கும். 

அரபு மொழி பேசுபவர்களிலேயே எகிப்தியர்களை மற்ற அரபுகளுக்கு பிடிக்காது. காரணம் தாங்கள் பேசும் அரபு மொழிதான் ஒரிஜினல் என்பார்கள்: மற்ற அரபுகளை விட எகிப்தியர்களான நாங்கள் தான் சிறந்தவர்கள் என்பார்கள்: தாங்கள் முன்னுக்கு வர கூட இருக்கும் பலரையும் கீழே தள்ள தயங்க மாட்டார்கள்: அலுவலக வேலைகளையே தேடிப் பிடிப்பர். அறிவில் தாங்கள் தான் சிறந்தவர்கள் என்ற மமதை இன்றும் இருக்கும். 

இந்த காரணங்களால் சவுதி, துபாய், குவைத் அரபுகளுக்கு எகிப்திய அரபுகளை சுத்தமாக பிடிக்காது.

முதன் முதலாக வேலைக்காக நான் அலுவலகத்தில் நுழைந்த போது எனக்கு சீனியராக ஒரு எகிப்திய அக்கவுண்டண்ட் இருந்தார். ஆனால் எனது முதலாளிக்கு என்னை மேலே கொண்டு வர வேண்டும் என்ற எண்ணம். எனவே அலுவலக டெலிபோன்கள் நான் தான் எடுக்க வேண்டும். அலுவலகத்தின் முக்கிய சாவிகள் என்னிடம் தாம் இருக்கும். பணம் சம்பந்தமான அனைத்து வேலைகளுக்கும் கண்டிப்பாக எனது கையெழுத்தும் இருக்க வேண்டும் என்று எனது ஓனரின் கட்டளை. இது காலித் என்ற அந்த எகிப்தியருக்கு கோபத்தை உண்டு பண்ணியது. எனக்கு பல டார்ச்சர்களை கொடுக்க ஆரம்பித்தார். ஒரு முறை கைகலப்பே ஏற்படும் நிலை வந்தது. 

இதை நான் சொல்லக் காரணம் எகிப்தியரின் தான்தான் அறிவில் சிறந்தவன் என்ற மமதையே இது போன்ற செயல்களுக்கு காரணம். நம் ஊர் பிராமணர்களுக்கும் இது பொருந்தி வரும். ஒரு இந்து மத சகோதரர் எனது வாதங்களை உண்மைப்படுத்துவது போல் பல தகவல்களைப் பகிர்ந்தார். நம் ஊர் பிராமணர்கள் எங்கிருந்து வந்து நம் நாட்டில் குடியேறினர் என்பதை மிக அழகாக விவரிக்கிறார். பதிவு சற்று நீளமாக இருந்தாலும் படித்துப்பாருங்கள். சுவாரஸ்யமாக இருக்கும்.

1) மோசே முனிவன் மலையேறிப்போய் பத்துக் கட்டளையுடன் வருவதற்குள் ஒரு தங்கக் கன்றுக்குட்டியை பிரதிஷ்ட்டைசெய்து அதை உருவ வழிபாடு செய்த விலக்கப்பட்டகோத்திரத்தினைச் சேர்ந்தவர்களும், பின்னர் மோசேவால் துரத்தப்பட்டு கைபர் போலன் வழியாக வந்து வேதகால மதத்தினை உருவாக்கியவர்களின் வழித்தோன்றலல்லவா, ..... விட்டகுறை தொட்டகுறையாக, பாசம் இருக்கும்தானே?


2) அந்த தங்கக் கன்றுக்குட்டிதான், காமதேனுப் பசுவாக வளர்ந்து பரிணமித்தது. கருவரைக்குள் செல்ல ஆரான் கோத்திரத்துக்கு மட்டுமே அனுமதியுண்டு. அப்படி உள்ளே சென்ற ஜக்கரியா, உள்ளே சென்றபின் தான் மயங்கிவிட்டால் இதைப் பிடித்து இழுங்கள் என்று சொல்லிவிட்டு உள்ளே போவான். அவன் மார்பின் குறுக்கே கட்டப்பட்டிருக்கும்கயிற்றில்தான் அந்தக் கயறு இணைக்கப்பட்டிருக்கும்! அதாவது, “மார்பின் குறுக்கே கயறு அணிந்தவர்கள் மட்டுமேகருவரைக்குள் செல்ல முடியும்! அந்த ஜக்கரியா, இயேசுவுக்கே ஞானஸ்தானம் அளித்த யோவான்ஸ்தானகனின் தந்தை. தான் ஆடாவிட்டாலும் அரவிந்தனின் சதையாடுமல்லவா?


3) அடுத்த ஜென்மாவில் ஏன் யூதனாகப் பிறக்க வேண்டும், திரு அரவிந்தன்? நீங்கள் இந்தப் பிறவியிலேயே யூதர்தான்! ரெண்டு பக்கம் தோரா ஓதிவிட்டு, Israel's Law of return ஐப் பயன்படுத்தி, ஜெருசலேம் சென்று Jewish Quarter ல் செட்டிலாகி விடுங்கள்! வருடத்திற்கு மூன்று மாதம் அவர்களே பயிற்சியளித்து, யூஸி சப் மெஷின் கன்களும் கொடுப்பார்கள்! ஆசைதீர பாலஸ்தீனியர்களை நோக்கிச் சுடலாம்!


4) அரவிந்தன், உங்கள் விபூதி எப்படி வந்தது தெரியுமா? ஆதிகால யூதர்கள் கொழுத்த கிடாயினை பலியிட்டு, பலிபீடத்தில் அவைகளைப் பொசுக்கி இறைவனுக்கு அவியளித்தபிறகு, “நெற்றி நிலத்தில்பட விழுந்து வணங்குவார்கள்சுற்றிலும் தெரித்த சாம்பல், நெற்றியில் படுமல்லவா? பலிபீடம் போய் வந்தவன் எனும் செறுக்கை ஊருக்குள் பறைசாற்றிட, நெத்தியில் திருநீறு அடையாளம் வந்தது! நம்புங்கள் அரவிந்தன், நீங்கள் இப்போதே யூதர்தான்! இஸ்லாமிய எதிர்ப்பு என்பது, ஒரு கூடுதல் தகுதிதானே? smile emoticon


5) அவியிடுதலையும், விலங்குகளை பலியிடுதலையும் வேதகால ஹிந்துக்கள் தங்களுடன் கொண்டுவந்தனர். இது வெகுகாலம் நீடித்தது. வேதங்களே சாட்சி. இதைக் கெடுத்தவர், புத்தர். புத்தரின் அஹிம்சாவாதம் மக்களிடையே பெறும் வரவேற்பினைப் பார்த்த ஹிந்துக்கள், விலங்கு பலியினை தவிர்த்தார்கள். அதோடு சேர்ந்து, “வேள்வியின் நாயகர்களாகிய பிராமணர்களுக்கு அளிக்கப்பட்ட சிறப்பு மாமிஸ உறுப்புகளும் காணாமல் போனது. என்ன இருந்தாலும் முன்னோர்களின் பததியைவிட்டுவிடக்கூடாதல்லவா? அதற்காக...


6) விலங்கு பலிக்கு மாற்றாக, ஒரு குறியீடாக, “ஒரு சாஸ்திரத்திற்காகதேங்காய் உடைக்கப்பட்டது! **பின்னமான ஆட்டை யூதன் வெட்ட மாட்டான்! குடுமி போன தேங்காயை அர்ச்சகர் உடைக்க மாட்டார்! **ஆட்டை உரித்ததும், (கிருமி நாசினியாக) மஞ்சள் பூசப்படும். தேங்காய் உடைபட்டதும், மஞ்சள் பூசப்படும்! **ஆட்டை பலியிட்டதும் ஒரு கால் உடைக்கப்பட்டு அதன் வாயில் வைக்கப்படும். தலை, பூசாரிக்கு! தேங்காயை உடைத்ததும் அதன் குடுமி உரிக்கப்பட்டு அந்தப் போர்ஷனை (மூடியை) அர்ச்சகர் எடுத்துக்கொள்வார்! **வெட்டுப்பட்ட ஆட்டின் தலையை ஒரு கையிலும், உடைபட்ட தேங்காயின் இரு கண் ஒரு வாய் மூடியைமறு கையிலும் வைத்துப் பாருங்கள்? இரு புத்த முகங்கள், உங்களைப் பார்த்துச் சிரிக்கும்! அரவிந்தன், நீங்கள் இந்தப் பிறவியிலேயே யூத வாரிசுதான்


7) உலக இனங்களிலேயே கோத்திரங்கள் வாயிலாக தம்மைப் பிரித்து அடையாளப்படுத்தியஇரு இனங்கள் எவையெவை? எனக்குத் தெரியவில்லை, நீங்கள் சொல்லுங்கள் அரவிந்தன்? பனிரெண்டு யூதக் கோத்திரங்களில் தம்மில் கரைந்து மறைந்த எட்டுக் கோத்திரங்களை வரலாற்றில்மட்டும் வைத்துக்கொண்டு, இப்போது நான்கு கோத்திரங்களை மட்டும் பேரளவிற்கு வைத்துக்கொண்டிருப்பவர்கள் யூதர்கள். யூதர்களையும், ஹிந்துக்களையும் தவிர (குறிப்பாக பிராமணர்கள்) இந்த பேருலகில், “கோத்திரங்கலைஇன்னமும் வைத்துக்கொண்டிருப்பவர்கள் யார்? அரவிந்தன், நீங்களும், நானும், கோபாலனும் விலக்கப்பட்ட, கரைந்துபோன, வலசை போய்விட்ட (Diaspora) ஒரு கோத்திரத்தின் யூதராக இருக்க வாய்ப்புள்ளது! smile emoticon அய்யோ பாவம்,


8) இந்த மாபெறும் உலகில், ஆண்பிள்ளை வயசுக்கு வந்துவிட்டதாகச் சொல்லி (உடற்கூறுகளால் அல்ல, வயது, சாதகம் பார்த்து) உறவினர்களை அழைத்து, விழாக்கொண்டாடும் இரண்டே இரண்டு இனங்கள் எவை? எனக்குத் தெரிந்து Bar Mitzwa (Please google for details) கொண்டாடும் யூதர்களும், பூணூல் பண்டிகையை (யூத ஜக்கரியா பூசாரியின் குறுக்குக் கயிர்) கொண்டாடும் பிராமணர்களும் மட்டுமே! பார்மிட்ஸ்வா எனும் யூதப் பண்டிகை, ஆண் பிள்ளைகள் 12, 13 வயதானபோது உறவினர்களை அழைத்து மத ரீதியாகக்கொண்டாடப்படும் ஒரு பண்டிகை. பர்த்டே பார்ட்டிபோல நண்பர்களை அழைப்பதில்லை. பூணூல் கல்யாணத்திலும் நண்பர்களுக்கு அழைப்பு ரொம்ப சொச்சம்தான். பார்மிட்ஸ்வா பற்றி, ஹெரால்ட் ராபின்ஸின் (இவர் ஒரு யூதர்) A stone for Danny Fisher ல் அருமையாகச் சொல்லியிருப்பார்,


9) மோஸே ராஜ வம்சம், மரபல்லாத வழியில் பிறந்தவன். கர்ணன், ராஜ வம்சம், மரபல்லாத வழியில் பிறந்தவன். மோஸேவைக் கொல்வதில் ராஜகுமாரிக்கு விருப்பமில்லை, ஒரு பெட்டியில் வைத்து ஆற்றில் விட்டாள். கர்ணனைக் கொல்வதில் ராஜகுமாரிக்கு விருப்பமில்லை, ஒரு பெட்டியில் வைத்து ஆற்றில் விட்டாள். மோஸே, புறசாதிகளோடு சேர்ந்துகொண்டு துஷ்டனாக ஆனான். கர்ணன், புறசாதிகளோடு சேர்ந்துகொண்டு துஷ்டனாக ஆனான். மோஸே, சேனாதிபதியாக நின்று தான் பிறந்த யூத இனத்தைவழிநடத்தினான். கர்ணன், சேனாதிபதியாக நின்று தான் பிறந்த ஷத்திரியஇனத்தை வழி நடத்தினான். மோஸே போர்க்களத்தில் பின்னர் லெஜண்டாக பரிணமிக்கப்போகிறபல அதிசயங்களைச் செய்தான். கர்ணன், போர்க்களத்தில், அதேபோல் அதிசயங்களை நிகழ்த்தினான். கதை ஒன்றே! களம் இரண்டு! என் பாட்டனின் நாடாகிய இஸ்ரேலே! உனக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்! (காந்தி, இஸ்ரேல் மேண்டேட்டில் இந்தியாவை எதிர்த்து ஓட்டுப்போடச் சொன்னார். எனவே, ஒரு இந்தியனாக, அரசியல் ரீதியாக நான் காந்தியின் பக்கமே)


10) ”ஈஸா எனும் அடிமரத்திலிருந்து ஒரு கிளை துளிர்த்துத் தழைக்கும். அந்நாளின் ஈஸாவின் வேருக்காக சாதிகள் தேடி விசாரிப்பார்கள்என்று இயேசுவின் வருகையை முன்னறிவித்த ஏசாயா தீர்கதரிசியும், “ராமாவிலே சத்தம், ராகேல் தன் பிள்ளைகளுக்காக அழுது, அவைகள் இல்லாமையால் மன ஆறுதல் இல்லாமலிருக்கிறாள்என்று முன்னறிவித்த இன்னொரு தீர்கதரிசியாகிய எரேமியாவும், பலப்பல இடங்களில், பழைய ஏற்பாட்டில் இப்படிச் சொல்லியிருக்கிறார்கள். உங்கள் (விக்கிரஹ ஆராதனை செய்யும் விலக்கப்பட்ட கோத்திரத்தார்) அமாவாஸைகளும், நாள் (குறித்த) திருநாட்களும் எனக்கு அருவருப்பு என்று கர்த்தர் (இயேசு அல்ல! அவர் பிதாவே என்றழைத்த ஜெஹோவா எனும் ஏக இறைவன்) சொல்கிறார்இவ்விருவர் தவிர பல்வேறு பழைய ஏற்பாட்டின் யூத தீர்கதரிசிகளும் தூபங்கட்டுதலைஇழிவாகப் பார்க்கிறார்கள். 1) அமாவாசை வழிபாடு 2) குறித்த திருநாட்கள் (அதிகளவில், அநேகமாக வாரந்தோரும்) 3) தூபங்கட்டுதல் (தீபாராதனை) இன்னமும் வைத்துக்கொண்டிருக்கும் மதம் எது?


11) ஜஸ்டிஸ் கட்சி - திக - திமுக - அதிமுக - மதிமுக என்று பிரிந்துகொண்டே செல்வது, மானுட இயல்பு. பெறும்பாலும் கொள்கையை கட்டுடைக்க நினைப்பவர்களும், அதிகாரம், வாய்ப்புக் கிடைக்காதவர்களும் சேர்ந்து வெர்ட்டிகலாக கட்சியை உடைத்து வெளியேறுவதுதான் வரலாறு. **எரேமியாவும், ஏசாயாவும் ஆதிப் பழங்குடி மனப்பான்மைகலைக் கட்டுடைத்தார்கள். தீர்கதரிசனங்கள் (விஷன்ஸ்) முன்மொழியப்பட்டன. **மோஸே பத்துக் கட்டலைகளை இயற்றி மேலும் கட்டுடைத்தார். (எகிப்தைவிட்டு) வெளியேறினார். **விக்கிரஹ ஆராதனை, சில கோத்திரத்தாருக்கு இர்ரெஸிஸ்டிபிளாக, இனிப்பானதாக இருந்தது. பிரிந்து போனார்கள். **வானத்தைப் பார்க்காதே, நாள் நட்சத்திரம் குறிக்காதே என்றார் மோஸஸ். வான சாஸ்திர அறிவியல் மனது, கட்டுக்கடங்காமல், கட்டுடைத்தது! **வான சாஸ்திரமும், விக்கிரஹ ஆராதனையும், பசு வழிபாடும், என்ணிலடங்கா திருவிழாக்களும் வேண்டுமென்று ஆசைப்பட்ட சில குறுங்குழுக்கள், ஆநிரைகளை ஓட்டிக்கொண்டு வெளியேறின! எங்கே சென்றன? யாருக்குத் தெரியும்?


------------------------------------------------

அவை வேறு எங்கும் செல்லவில்லை... ஆநிரைகளை ஓட்டிக் கொண்டு கைபர் கணவாய் வழியாக இந்தியாவில் வந்து அமர்ந்து கொண்டன. இங்கு அமர்ந்ததோடு அல்லாமல் இந்நாட்டு மண்ணின் மைந்தர்களை பாகிஸ்தானுக்கு போ என்று வேறு கூப்பாடு போடுகின்றன. :-) 


இறைவனையும் எங்களுக்கு அருளப்பட்ட வேதத்தையும் ஆப்ரஹாம், இஸ்மவேல், இஸ்ஹாக், யாகூப், மற்றும் அவரது வழித் தோன்றல்களுக்கு அருளப்பட்டதையும் மோசேவுக்கும் ஏசுவுக்கும் வழங்கப்பட்டதையும் ஏனைய இறைத் தூதர்களுக்கு தமது இறைவனிடமிருந்து வழங்கப்பட்டதையும் நம்பினோம். அவர்களுக்கிடையே பாகுபாடு காட்ட மாட்டோம். அவனுக்கே நாங்கள் கட்டுப்பட்டவர்கள்' என்றும் கூறுங்கள்.

குர்ஆன் 2:136

மத நல்லிணக்கத்திற்கு இதை விட சிறந்த ஒரு வேத வசனம் வேண்டுமா? மேலே பதிந்த பல சம்பவங்களை உண்மைப் படுத்துகிறது இந்த குர்ஆனிய வசனம்! 

No comments: