Followers

Wednesday, October 11, 2017

இறப்பு எந்த நேரத்திலும் நமக்கு வரலாம்!

இறப்பு எந்த நேரத்திலும் நமக்கு வரலாம்!

புனித மெக்கா நகரில் உள்ள ஒரு பள்ளியின் இமாம் தொழ வைத்து முடித்து சுருண்டு விழுகிறார். உடன் அவரது உயிர் பிரிகிறது. இறப்பு எந்த நேரமும் நம்மை நோக்கி வந்து கொண்டிருக்கும். இதனை உணர்த்துகிறது இந்த காணொளி!

ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுகித்தே ஆகவேண்டும்; அன்றியும் - இறுதித் தீர்ப்பு நாளில் தான், உங்கள் செய்கைகளுக்குரிய பிரதி பலன்கள் முழுமையாகக் கொடுக்கப்படும்;. எனவே எவர் நரக நெருப்பிலிருந்து பாதுகாக்கப்பட்டுச் சுவர்க்கத்தில் பிரவேசிக்குமாறு செய்யப்படுகிறாரோ. அவர் நிச்சயமாக வெற்றியடைந்து விட்டார்;. இவ்வுலக வாழ்க்கை மயக்கத்தை அளிக்கவல்ல அற்ப இன்பப் பொருளேயன்றி வேறில்லை.


(சூரத் ஆல் இம்ரான் - 185)


https://www.facebook.com/nazeersuvanappiriyan/videos/830724453775164/?lst=100005128510716%3A100005128510716%3A1507789028

10 comments:

Dr.Anburaj said...


இறப்பு இல்லாத நாளும் இல்லை.பிறப்பு இல்லாத நாளும் இல்லை. நான் தினசாி கண்ணால் பாா்த்துக்கொண்டிருக்கும் அன்றாட நிகழ்ச்சியை போய் ஏதோ பொிய கண்டுபிடிப்பு போல் பதிவு செய்திருப்பது வேடிக்கையாக உள்ளது. குரான் வசனத்தை என் மேற்கோள் காட்டவில்லை ? சொா்க்கம் -நரகம் கிடையாது.அது ஒரு அண்டப்புளுகு.

Dr.Anburaj said...


இந்து இயக்கங்களுகக்கு மகத்தான வெற்றி - கேரளத்தில் குஜராத்தில் பிகாாில்

தமிழ்நாட்டில் பல சிறு தெய்வ கோயில்களிலும் குலசாமி கோயில்களிலும் பிராம்மணரல்லாதோர் தான் பூசாரிகளாக இருக்கின்றனர், பன்னெடுங்காலமாக. அதுவும் சில சமூகங்களின் குலதெய்வ கோயில்களில் அந்த சாதிகளையே சேராத வண்ணார், குயவர், விஸ்வகர்மா போன்ற சமூகத்தை சேர்ந்தவர்கள் கூட பூசாரிகளாக இருப்பதுண்டு. பல கோயில்களில் தாழ்த்தப்பட்ட வள்ளுவர் சமூகத்தினர் பூசாரிகளாக இருக்கின்றனர். இதைத் தவிர தேனி மாவட்டத்தின் பிறமலை கள்ளர் சமூக கோயில்கள், மறவர் சமூகங்களுக்கான கோயில்கள் ஆகியவற்றில் அந்த சாதியினரும் வட தமிழ்நாட்டின் மாரியம்மன், காளியம்மன், திரௌபதி அம்மன் ஆலயங்களில் வன்னியர்களும், துளுவ மற்றும் சோழிய வேளாளர்களும் பூசகர்களாக இருக்கின்றனர். பல மலைப்பழங்குடிகளின் கோயில்களில் குல மூப்பன் தான் பூசாரி.

ஆகம விதிப்படி அமைந்த பெருதெய்வ கோயில்களை எடுத்து கொண்டால் கூட ஆதிசைவர் அல்லது சிவாச்சாரியார் என்று அழைக்கப்படுபவர்கள் மட்டுமே சிவன் கோயில்களில் மூலவருக்கு பூஜை செய்ய முடியும். இதற்காகவே ஆண்டாண்டு காலமாய் அவர்கள் பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறார்கள். மற்ற ஸ்மார்த்த பிராமணர்கள் கூட மூலவருக்கு பூஜை செய்ய முடியாது; அவர்கள் பரிவார தெய்வங்களுக்கு மட்டுமே பூஜை செய்ய முடியும். தில்லை நடராஜர் கோயிலில் தீக்ஷதர்கள் மட்டுமே மூலவருக்கு பூஜை செய்வார்கள். என் எண்ணம் என்னவென்றால் சோழ மண்டலத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழமை மிக்க பல கோயில்கள் ஒருகால பூஜைக்கும் வழி இல்லாமல் இருக்கிறது. அந்த கோயில்களுக்கு சென்று பூஜை செய்ய விருப்பமிருந்தால் அதற்கான சைவ வைணவ பூஜை முறைகளில் முறையான பயிற்சியை பெற்று அனைத்து சாதியினரும் பூசை செய்யலாம். அதனால் இந்த கோயில்களும் புத்துணர்வு பெறும்.

திருவல்லா வளஞ்சவட்டம் மணப்புறம் சிவன் கோயிலில் பூசாரியாக நியமிக்கப்பட்டிருக்கும் 22 வயது யதுகிருஷ்ணா. இவர் தலித் சமூகத்தைச் சார்ந்தவர்.

பாஜகவும், ஐக்கிய ஜனதாதளமும் ஆண்ட பீகார் மாநிலத்தில் 2007ஆம் ஆண்டே பெருமை வாய்ந்த பல நூற்றாண்டுகள் பழமை மிக்க கோயில்களில் தாழ்த்தப்பட்ட பட்டியல் சாதியினர் பூசகர்களாக வந்து விட்டனர்.
இன்று இடதுசாரிகள் ஆளும் கேரளாவில் புதிதாக அதிசயம் ஒன்றும் நடக்கவில்லை. வேத வேள்விகள், சாஸ்திர விதிப்படி கர்ம காரியங்கள் செய்பவர்களாக மட்டுமே அந்தணர்கள் இருந்தார்கள். அவர்கள் கோயில் பூஜை செய்த வரலாறு ஒன்றும் நீண்ட நெடுங்காலமாக இல்லை. சோழர்கள் காலத்தில் ஆகம முறைப்படி சிவாலயங்களும் மற்ற பெருதெய்வ ஆலயங்களும் மாற்றப்பட்டபோது பிராமணர்கள் பூஜை செய்யும் இந்த முறை கொண்டுவரப்பட்டு கடைபிடிக்கப்பட்டிருக்கலாம். அவ்வளவு தான்.இந்தியா முழுக்கவே இடைக்காலத்தில் தான் இந்த முறைகள் பின்பற்றப்பட்டிருக்க வேண்டும் அதற்கு காரணம் அந்நிய ஆட்சிகளில் வேத,வைதீக காரியங்கள் குறைந்து போனதால் அதை ஈடுகட்டுவதற்காக இருக்கலாம்.

Dr.Anburaj said...

அனைத்து சாதியினருக்கும் வேதக் கல்வி அளிக்கும் ‘தந்திர வித்யா பீடம்’ பள்ளியை

நிறுவியவர் மறைந்த மூத்த ஆர்.எஸ்.எஸ். தலைவர் பி. மாதவ். 1983ம் ஆண்டிலேயே

கேரளத்தில் விசால ஹிந்து சம்மேளனம் நடைபெற்ற போது, அதன் தொடக்க பூஜையை

செய்தவர் ஈழவர் சமூகத்தைச் சேர்ந்த பூசகர். அப்போது இந்தச்செய்தி மிகப்பெரிய

அதிர்வலைகளை ஏற்படுத்தியது.பல அறிவுஜீவிகளுக்கு இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் என்ன நடந்தது, நடந்துகொண்டிருக்கிறது என்பதே தெரியவில்லை. இப்போது தான் சமூக ஊடகங்கள் வழியாக மெல்ல உலகத்தை பார்க்கிறார்கள். பல பேர் இப்போது தான் குழந்தைகள் போல தவழவே ஆரம்பித்திருக்கிறார்கள். வட இந்தியாவின் சாதிய பிரிவினைமிக்க மாநிலங்களில் எல்லாம் தலித்துகள் முதல்வர்களாகவும், அமைச்சர்களாகவும், பூசகர்களாகவும் ஆகிவிட்டனர்.

Dr.Anburaj said...

குஜராத்தில் நரேந்திர மோதி முதல்வராக இருந்தபோது அனைத்து சாதியினரும் வேத மந்திரங்களையும், பூஜைகளையும், திருமணம் உள்ளிட்ட சடங்குகளுக்கான மந்திரங்களையும் பயிலும் வகையிலான கல்வி நிலையங்கள் மாநில அரசின் உதவியுடன் உருவாக்கப் பட்டு, சிறப்பாக இயங்கி வருகின்றன. இவற்றில் மனிதக் கழிவை அகற்றும் பணிகளில் ஈடுபட்டிருந்த தலித் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களும் பயிற்றுவிக்கப் பட்டனர். ஆகவே இது போன்ற வளா்ச்சியை உருவாக்க இந்து சமய சீா்திருத்த செம்மல்கள் பெரும் தியாகம் செய்துள்ளாா்கள்.அனைவருக்கும் முறையான சமய கல்வியை அளித்தால் பிறாமணா்கள் என்ற சாதி இருக்காது.மற்ற சாதியோடு ஐக்கியமாகிவிடும்.
இதை உணராது பிறாமணா்கள் எதிா்ப்பு என்று சுவனப்பிாியன் கூட சல்லி அடிக்கின்றாா்.அம்பிமாா்கள் என்ற கறிக்கடையா நடத்துகின்றாா்கள்.முஸ்லீம்களுக்கு போட்டியாக.

Dr.Anburaj said...

திருவல்லா வளஞ்சவட்டம் மணப்புறம் சிவன் கோயிலில் பூசாரியாக நியமிக்கப்பட்ட பின்னர் பக்தர்களால் வரவேற்கப்பட்டு ஆலயத்திற்குள் நுழைந்து முதல்மணியோசையை எழுப்பும் முதல் தலித்-புலையா் சாதியைச் சோ்ந்த - பூசகர் யதுகிருஷ்ணா]

கடவுள் மறுப்பு கொள்கையில் பெருமிதம் கொள்ளும் கேரளமுதல்வருக்கு இதில் துளி அளவும் பங்கில்லை.

அய்யன்காளி,நாராயணகுரு போன்ற பெரியவர்களின் அயராத உழைப்புக்கு கிடைத்த பயனல்லவா?.அதுதான் உண்மை.நாராயணகுரு தொடங்கிவைத்த புரட்சியின் அடுத்தபடி. ,இயல்பான பரிணாமம் என்றே இதை எண்ணுகிறேன்.கேரளம் முழுக்க ஈழவர்கள் பூசை செய்யும் தொன்மையான மரபுள்ள பல பேராலயங்கள் இன்றுள்ளன.இது சாத்தியமானது எப்படி என நாம் பார்க்கவேண்டும். நாராயணகுரு தன் இயக்கத்தைத் தொடங்கியபோதே ஈழவர்களுக்குரிய வேதகல்வியை, வேள்விப்பயிற்சியை ஆரம்பித்திருந்தார். இன்று நான்காம் தலைமுறையாக அந்த மரபு தொடர்கிறது. கேரளம் முழுக்க பல பிராமணரல்லாத வேதவிற்பன்னர்கள் இன்று உள்ளனர். வேதபாடசாலைகளும் உள்ளன.

அதுவும் அந்த இளைஞர் தனது 12 வயது முதல் பத்து வருடங்களாக அனிருத்தன் தாந்திரி அவர்களிடம் தாந்த்ரீகம் பயின்று தேர்வில் நான்காவதாக தேர்ச்சி பெற்று நியமனத்தை பெற்றிருக்கிறார்.இவரின் குருவும் பிறப்பால் அல்ல ஒருவனின் நற்செயலால்தான் பிராமணனாக கருதப்படுகிறான் என்று சரியாக கூறியிருக்கிறார்.இந்த இளைஞரும் இதை ஒரு பணியென்று கருதாமல் பக்தியுடனும்,அர்பணிப்புணர்வுடனும் கோயில் சடங்குகளை செய்யப்போவதாக கூறியுள்ளார்!.
Dr.Anburaj said...

உதாரணமாக பரவூர் ஸ்ரீதரன் தந்திரிகளைச் சுட்டிக்காட்டலாம். ஸ்ரீதரன் தந்திரிகள் கெடாமங்கலம் களவம்பாற வீட்டில் மாமன் வைத்தியருக்கும் எடவனக்காடு கடயந்தரவீட்டில் பார்வதியம்மாவுக்கும் மகனாக 1925ல் பிறந்தார். அடிப்படைக் கல்விக்குப்பின்னர் நாராயணகுருவின் இயக்கத்தைச் சேர்ந்த நம்பூதிரிகளிடமிருந்தே வேதங்களையும் சம்ஸ்கிருதத்தையும் தந்திரவிதிகளையும் கற்றுத்தேர்ந்தார். சோதிடம், புரோகிதச்சடங்குகள், லயச்சடங்குகள் செய்வதில் பெருமதிப்புக்குரியவராக கருதப்பட்டார்

ஸ்ரீதரன் தந்திரிகள் இருநூற்று எட்டு புதுஆலயங்களில் [தேவப்பிரதிஷ்ட்டை] செய்திருக்கிறார். ஐம்பதாண்டுகளாக கேரளத்தின் முதன்மையான பேராலயங்களில் தந்திரியாகவும் தலைமைத்தந்திரியாகவும் பணியாற்றியிருக்கிறார். தேவயக்ஞபத்ததி, பித்ருகர்மவிதி, குருசிஷ்யசம்வாதம் உட்பட கேரளத்தில் பயிலப்படும் முதன்மையான தந்திரநெறி சார்ந்த இருபதுக்கும் மேற்பட்ட நூல்களின் ஆசிரியர். 2011ல் மறைந்தார்.

அவருடைய ஸ்ரீநாராயண தாந்த்ரிக வித்யாலயம்

தலித்துக்கள் உட்பட அனைவருக்கும் அக்கல்வியை வழங்குகிறது.

அவருடைய மைந்தர் பரவூர் ராகேஷ் தந்திரிகள் இன்று பெரும்புகழ்கொண்ட தாந்திரிக, வேத ஆசிரியராக அறியப்படுகிறார். பரவூர் ராகேஷ் தந்திரிகள் சபரிமலையிலும் தந்திரியாக முன்னரே பணியாற்றியிருக்கிறார் இவ்வாறுதான் பூசகர்களுக்குரிய கல்வி அனைவரையும் சென்றடைந்தது. எந்தக்காரணத்திற்காக பிராமணர் என்னும் தனிவகுப்பினர் பூசைகளைச் செய்யவேண்டுமென மரபில் வகுக்கப்பட்டதோ அந்தக்காரணம் இன்று அழிந்துவிட்டது, உண்மையில் நேர்எதிராகவே ஆகிவிட்டது. ஆகவே அனைத்துச்சாதியினரிடமிருந்தும் தகுதியும் நம்பிக்கையும் உள்ளவர்கள் அர்ச்சகர்களாக வருவதே நல்லது. எவர் எதிர்த்தாலும் எதிர்காலம் அதுவே. ஆலயப்பிரவேசத்தை அன்று எதிர்த்தவர்களின் நிலையில் இன்று சிலர் இருக்கலாம், ஆனால் காலம் அவர்களைக் கடந்துசெல்லும்.ஆனால் தமிழகத்தில் ஆலயத்தை வெறுக்கக் கற்றுத்தரும் அரசியல் தரப்பினரிடமிருந்து இந்த சீர்திருத்தங்கள் வரக்கூடாது. அவர்களுக்கு அதற்கான தகுதி இல்லை. அவர்கள் வெறுப்பையே உருவாக்க முடியும். ஆலயங்களை அழிப்பதைப்பற்றிப் பேசியபடி, இந்துமதம் அழியவேண்டும் என வாதிட்டபடி இதைப்பற்றிப் பேசுபவர்கள் உண்மையில் இந்த தேவையான மாற்றத்தை தோற்கடிக்கிறார்கள். இந்துமதம் வாழவேண்டும். அது அறச்சார்பும் மானுடநேயமும் கொண்டிருக்கவேண்டும் என நம்பும் தரப்பிலிருந்தே மாற்றத்திற்கான குரல்கள் எழவேண்டும்கடைசியாக ஒன்று. உண்மையிலேயே பிராமணர்கள் பூசைசெய்யும் ஆலயங்களில் மட்டுமே ஞானமும் பக்தியும் உண்டு என நம்புபவர்கள் என்ன செய்வது? அவர்கள் தங்களுக்குரிய ஆலயங்களை உருவாக்கிக் கொள்ளவேண்டியதுதான். பேராலயங்கள் மன்னர்களால் உருவாக்கப்பட்டவை. ஆகவே அவை இந்துக்கள் அனைவருக்கும் உரியவை. அவை ஜனநாயக காலத்திற்கேற்ப மாறியாகவேண்டும்.சீர்திருத்தங்கள் நிகழ இரு அடிப்படைகள் தேவை. ஒன்று கேரளம்போல, முறையான வேதக்கல்வியும் பூசைப்பயிற்சியும் அளிக்கும் அமைப்புகளும் மரபுகளும். இரண்டாவதாக அவற்றைச் சரிவர நோக்கி தேர்ந்தெடுக்கும் நேர்மையான நோக்கமுள்ள அமைப்பு. வடக்குபரவூர் மூத்தகுந்நம் ஸ்ரீ குருதேவ தந்த்ர வித்யா பீடத்தின் மாணவர்தான் முதல்முறையாக தலித் பூசகராக பதயேற்ற யதுகிருஷ்ணன்.அக்குருகுலத்தில் இருந்து மூன்று தலித் மாணவர்கள் அர்ச்சகர்களாக இப்போது நியமிக்கப்பட்டுள்ளனர்.

யர் கிருஷணின் ஆசிரியர் தெக்கேக்காட்டு கே. கே. அனிருத்தன் தந்திரி புகழ்பெற்ற சம்ஸ்கிருத அறிஞர், வேதபண்டிதர், தாந்திரிகநெறி தேர்ந்தவர். யதுகிருஷ்ணன் பதவி ஏற்கும் ஒளிக்காட்சியில் அவருடைய அடக்கமும் அறிவும் வெளிப்படுகிறது. ஆசிரியர் நேரில் வந்திருந்து வாழ்த்துகிறார். ஊரார் அவரை வணங்க அவர் குருவின் கால்களை தொட்டு வணங்கி ஆலயத்திற்குள் நுழைகிறார். https://youtu.be/-yzDbC5YFMc

Dr.Anburaj said...

பட்டினத்தாரும் நம்மாழ்வாரும் பாடியது:

‘முடி மன்னர், பிடி சாம்பல் ஆவர்’
நம் வாழ்வில் காணா சமரச இடம்

சுடுகாட்டிலோ, இடு காட்டிலோதான் நாம் அனைவரும் வித்தியாசமின்றி சந்திக்கிறோம்

ரம்பையின் காதல் என்ற தமிழ் திரைப்படத்தில் ஒரு அருமையான பாடல்:–

சமரசம் உலாவும் இடமே நம் வாழ்வில் காணா

சமரசம் உலாவும் இடமே நம் வாழ்வில் காணா

சமரசம் உலாவும் இடமே.

ஜாதியில் மேலோர் என்றும் தாழ்ந்தவர் தீயோரென்றும் பேதமில்லாது

எல்லோரும் முடிவில் சேர்ந்திடும் காடு

தொல்லையின்றினே தூங்கிடும் வீடு

உலகினிலே இது தான் நம் வாழ்வில் காணா

சமரசம் உலாவும் இடமே நம் வாழ்வில் காணா

சமரசம் உலாவும் இடமே.

ஆண்டி எங்கே அரசனும் எங்கே அறிஞன் எங்கே அசடனும் எங்கே

ஆவி போன பின் கூடுவார் இங்கே ஆகையினால் இது தான் நம் வாழ்வில் காணா

சமரசம் உலாவும் இடமே.
இதோ பட்டினத்தார் பாடல்:--முடிசார்ந்த மன்னரும் மற்றுமுள்ளோரும் முடிவில் ஒரு
பிடி சாம்பராய் வெந்து மண்ணவதுங் கண்டு பின்னும் இந்தப்
படிசார்ந்த வாழ்வை நினைப்பதல்லால் பொன்னின் அம்பலவர்
அடிசார்ந்து நாம் உய்யவேண்டும் என்றே அறிவாரில்லையே.

பொருள் மிகவும் எளிது:

பெரிய வைர, ரத்தின, தங்க கிரீடங்களை (மணி முடி) தாங்கி பாரையே ஆண்ட அரசர்களும் இறுதில் இறந்த பின்னர் எரிக்கப்பட்டு ஒரு கைப்பிடி சாம்பல் ஆகிவிடுவர். இதைப் பார்த்த பின்னரும், பலரும் போகும் வழிக்குப் புண்ணியம் சேர்க்காமல், மேலும் மேலுமாசைகளைப் பெருக்கி வாழ மக்கள் விரும்புகின்றனர். திருத் தில்லை அம்பலத்தில் ஆடும் இறைவனின் அடிகளை நாடும் நாட்டம் வரவில்லையே!

Dr.Anburaj said...

இதோ நம்மாழ்வார் பாசுரம்:

அடிசேர் முடியினர் ஆகி அரசர்கள் தாம் தொழ

இடிசேர் முரசங்கள் முற்றத்து இயம்ப இருந்தவர்

பொடிசேர் துகளாய்ப் போவர்கள் ஆதலில் நொக்கெனக்

கடிசேர் துழாய் முடிக்கண்ணன் கழல்கள் நினைமினோ

--திருவாய் மொழி, திவ்வியப் பிரபந்த பாடல் எண் 3009பொருள்:-பேரரசர்கள் ஒரு சமயம். மற்ற சிற்றரசர்களின் முடிகள் தங்கள் காலில் படும்படி (காலில் விழுந்து வணங்கும்போது) ஆட்சி புரிந்தனர். இடி போன்ற முரசங்கள் ஒலிக்கும்படி சபை வீற்றிருந்தனர். ஆனால் அவர்களே பின்னொரு நாளில் இவை அழியும்படி, போரில் தோற்று பொடியாக, துகளாக ஆனார்கள். ஆகவே மணம் பொருந்திய துளசி மாலையை அணிந்த கண்ணன் திருவடிகளை நினை மனமே; இப்போதே நினை மனமே.

ஆக நம்மாழ்வாரும் பட்டினத்தாரும் பேசும் பெரிய மன்னர்கள் தகுதி நமக்கு இல்லை. ஆனால் அவர்களுகே அந்தக் கதி என்றால் ஊர் பேர் தெரியாத நமக்கு எந்த கதியோ?

இறைவன் சந்நிதியில் மட்டுமே நாம் அனைவரும் சமம்.

இறப்பை இந்துசமயம் எப்படி அணுகுகின்றது பாருங்கள்.இப்படி எல்லாம் அற்புதமான அறிவாளிகளை விட்டு விட்டு அரேபியாவில் பிறந்த கைநாட்டுகளை எல்லாம் ....போற்றி அரேபிய அடிமையாக வாழ்வது நியாயமா ?

Dr.Anburaj said...விவேகானந்தர் எதிலெல்லாம் பயங்கள் இருக்கிறது என்றும் துறவில் தான் பயமே இல்லை என்றும் கூறியிருக்கின்றாா்.

ஆனால் எல்லோரும் ஓர் இரவில் துறவியாகி பயத்தை வென்று நிர்பயத்துவம் எய்தி சிரிக்க முடியாதே! சம்சார வாழ்க்கை நமக்கு பணிக்கப்பட்டிருக்கிறது. அதில் பயணித்தாகவேண்டிய கட்டாயமும் இருக்கிறது. இந்நிலையில் பயத்தைப் போக்க என்ன செய்ய வேண்டும்?

நம்மைப் போன்றவர்கள் பயத்தை ஒரு உந்து சக்தியாகவே பார்க்க வேண்டும். எதிலெல்லாம் நாம் பயப்படுகிறோமோ அதிலிருந்து தான் விடுதலை அடைகிறோம். சாமானிய மனிதன் முதலில் உணர்வு விலங்குகளிலிருந்து விடுதலை அடைய வேண்டும். விடுதலை அடைந்தவனே ஆனந்தத்தை அனுபவிப்பான்.

பயமே இல்லை என்று நடிப்பவனைவிட பயத்தால் உந்தப்பட்டு வீரிட்டு எழுந்து விடுதலை அடைந்தவனே உலகை வெல்வான். ஆனந்தத்தை அனுபவிப்பான். ஆகவே பயத்தை ஒரு உந்து சக்தியாக பயன்படுத்துங்கள். பயத்தை படிக்கட்டாக பயன்படுத்துங்கள். பயந்து தெளியுங்கள். பயமே ஜெயம் என்பீர்கள்!

இறப்பின் மீது பயம் கொள்வீர்
ஞானத்திற்கு அதுவே உந்து சக்தி!

வறுமையின் மீது பயம் கொள்வீர்
உழைப்பிற்கு அதுவே உந்து சக்தி!

வயோதிகம் மீது பயம் கொள்வீர்
வாலிபத்திற்கு அதுவே உந்து சக்தி!

தோல்வியின் மீது பயம் கொள்வீர்
வெற்றிக்கு அதுவே உந்து சக்தி!

நோயின் மீது பயம் கொள்வீர்
உடற்பயிற்சிக்கு அதுவே உந்து சக்தி!

வன்முறை மீது பயம் கொள்வீர்
அன்பிற்கு அதுவே உந்து சக்தி!

இயற்கையின் மீது பயம் கொள்வீர்
இறைதேடலுக்கு அதுவே உந்து சக்தி!

காலத்தின் மீது பயம் கொள்வீர்
வேகத்திற்கு அதுவே உந்து சக்தி!

மறுமையின் மீது பயம் கொள்வீர்
புண்ணியம் தேட அதுவே உந்து சக்தி!

துயரங்கள் மீது பயம் கொள்வீர்
விடுதலைக்கு அதுவே உந்து சக்தி!

பயத்தாலே புண்ணியவான் ஆனான் ரத்னாகரன். கொலை, கொள்ளையில் ஈடுபட்டேனும் பொருள் ஈட்டி பெற்றோரையும் குடும்பத்தையும் காத்துவந்தான். பாவங்கள் பல செய்து வந்தான்.

ஒருமுறை நாரத முனிவர் ஒரு காட்டின் வழியாக வந்துகொண்டிருந்தார். அவரை வழிமறித்தான் ரத்னாகரன். அவரிடமிருந்த பொருட்களை கேட்டான். உடனே நாரத முனிவர், "நீ யாருக்காக இவற்றை கொள்ளையடிக்கிறாய்?" என்றார். என் பெற்றோர், மனைவி, மக்களைக் காப்பாற்ற என்றான் ரத்னாகரன்.

"சரி, நீ செய்து கொண்டிருக்கும் பாவங்கள் எவ்வளவு பெரியது தெரியுமா? மரணத்திற்கு பின்னால் மறுமையின் வாழ்வில் நீ அதனால் என்னென்ன துன்பங்கள் அனுபவிப்பாய் என்பது உனக்குத் தெரியுமா?" என்றார்.

ரத்னாகரனுக்கு மறுமையைப் பற்றி ஒரு பயம் உண்டானது. நாரதர் தொடர்ந்தார் "உன் வருமானத்திலிருந்து கிடைக்கும் லாபத்தை ஏற்றுக் கொள்ளும் உன் குடும்பத்தார், நீ செய்யும் கொலை, கொள்ளைகளுக்கான பாவத் தையும் ஏற்றுக் கொள்வதுதானே நியாயம்?" என்றார். இதற்கு ரத்னாகரன் 'ஆம்' என்றான். அப்படியானால் இதற்கு விடை தெரிந்து கொண்டு வா. நீ வரும் வரை நான் இங்கேயே நிற்கிறேன்," என்றார்.

ரத்னாகரன் பெற்றோரை பார்க்கச் சென்றான். வீட்டிற்கு சென்றதும், "என் வருமானத்தில் மகிழ்ச் சியை அனுபவிக்கும் நீங்கள், எனது பாவங்களையும் பங் கிட்டுக் கொள்வீர்களா?" என குடும்பத்தாரிடம் கேட்டான்.

அவனது பெற்றோர், "பெற்றவர்களை காப்பாற்றுவது மகனுடைய கடமை. அவன் செய்யும் தொழிலில் உள்ள பாவ, புண்ணியங்களுக்கு அவனே பொறுப்பாவான்" என்றனர். அவனது மனைவியும், மகனும் இதே பதிலை கூறினர்.

ரத்னாகரன் கலக்கமுற்றான். அத்தனை பாவங்களுக்கும் நான் மட்டுமே பொறுப்பாவேனா என்று பயந்தான். அதனால் உண்டாகப்போகும் விளைவுகளை எண்ணி நடுங்கத் துவங்கினான். பாவங்களின் அழுத்தம் அவனை வாட்டியது.

மீண்டும் நாரதரை சந்திக்க வந்தான். 'இந்த பாவங்களிலிருந்து விடுபட எனக்கு உபாயம் சொல்லுங்கள்' என்றான்.

நாரதர் ராமநாமத்தை உச்சரிக்கச் சொன்னார். பாவங்களின் மீது பயம் கொண்டவன் ஓரிடத்தில் அமர்ந்து தொடர்ந்து ராம நாமத்தை உச்சரித்தான்.

அதை சொல்லிக் கொண்டே ஆழ்ந்த தியானத்தில் ஆழ்ந்து விட்டான். பல ஆண்டுகள் கடந்தன. அவன் உடலைச் சுற்றி "வால் மீகம்" வளர ஆரம்பித்தது. வால்மீகம்' என்றால் புற்று என பொருள்படும். ஒரு காலகட்டத்தில் இறைவன் அவனுக்கு அருள்பாலித்தார்.

அவன் புற்றிலிருந்து வெளிப் பட்டதால் "வால்மீகி" என அழைக்கப்பட்டான்.

இந்த மாபெரும் கொள்ளைக்காரனே பிற்காலத்தில் ராமாயணம் என்னும் மகாகாவியத்தை படைத்தான். இன்றும் இறவாப் புகழுடன் வாழ்கிறான்.

மறுமையின் மீதிருந்த பயமே ரத்னாகரனின் உந்து சக்தியானது. அவன் வால்மீகியாக மாற அதுவே தூண்டுகோலானது.

ஆக நம்மைப் போன்று துறவுக்கு போக முடியாத சாமானியர்களுக்கு வாழ்க்கையின் பயணத்தைக் கடக்க அந்தராத்மாவின் உந்து சக்தியே அதிகம் தேவை. எனவே பயப்படுங்கள். அதே வேகத்துடன் பயத்தை வெல்லுங்கள்.

பயத்தை வெல்வோம், விவேகானந்தர் ஆவோம்.

Dr.Anburaj said...

பயங்கரவாதத்திற்கு அடிப்படையாக அமையும் குர்ஆன் வசனங்கள் சில :

2:216. (நம்பிக்கையாளர்களே!) போர்கொலை செய்வது உங்களுக்கு வெறுப்பாய் இருந்தும் (உங்களையும் உங்கள் மார்க்கத்தையும் காப்பதற்காக) அது உங்கள் மீது கடமையாக்கப்பட்டிருக்கின்றது. ஒன்று உங்களுக்கு மிக நன்மையாக இருந்தும் அதனை நீங்கள் வெறுக்கக்கூடும். ஒன்று உங்களுக்குத் தீங்காக இருந்தும் அதனை நீங்கள் விரும்பக்கூடும். (அவை உங்களுக்கு நன்மை அளிக்குமா தீமையளிக்குமா என்பதை) அல்லாஹ்தான் அறிவான்; நீங்கள் அறியமாட்டீர்கள்.

5:33. கொல்லப்படுவது, அல்லது சிலுவையில் அறையப்படுவது, அல்லது மாறுகால், மாறுகை வெட்டப்படுவது, அல்லது நாடுகடத்தப்படுவது ஆகியவையே அல்லாஹ்வுடனும், அவனது தூதருடனும் போர்கொலை செய்து பூமியில் குழப்பம் செய்ய முயற்சிப்போருக்குரிய தண்டனை. இது அவர்களுக்கு இவ்வுலகில் ஏற்படும் இழிவாகும். அவர்களுக்கு மறுமையில் கடும் வேதனை உள்ளது.

4:77. "உங்கள் கைகளை (போர்கொலை செய்யாமல்) தடுத்துக் கொள்ளுங்கள்! தொழுகையை நிலைநாட்டுங்கள்! ஸகாத் கொடுங்கள்!'' என்று கூறப்பட்டோரை நீர் அறியவில்லையா? அவர்களுக்குப் போர்கொலை கடமையாக்கப்பட்ட போது அவர்களில் ஒரு சாரார் அல்லாஹ்வுக்கு அஞ்சுவது போல் அல்லது அதை விடக் கடுமையாக மனிதர்களுக்கு அஞ்சுகின்றனர். "எங்கள் இறைவா! எங்களுக்கு ஏன் போர்கொலை செய்வதைக் கடமையாக்கினாய்? சிறிது காலம் எங்களுக்கு அவகாசம் தந்திருக்கக் கூடாதா'' எனவும் கூறுகின்றனர். "இவ்வுலகின் வசதி குறைவு தான். (இறைவனை) அஞ்சுவோருக்கு மறுமையே சிறந்தது. அணுவளவும் நீங்கள் அநீதி இழைக்கப்பட மாட்டீர்கள்'' எனக் கூறுவீராக!

4:74. மறுமை(வாழ்க்கை)க்காக இவ்வுலக வாழ்க்கையைத் துறப்பவர்கள் அல்லாஹ்வின் பாதையில் போர்கொலை செய்யட்டும். எவரேனும் அல்லாஹ்வின் பாதையில் போர்கொலை புரிந்து வெட்டப்பட்டாலும் அல்லது வெற்றி பெற்றாலும் நாம் அவர்களுக்கு அதிசீக்கிரத்தில் மகத்தான கூலியைக் கொடுப்போம்.

(கவனிக்க : அல்லாஹ்விற்காக கொலை செய்து அதனால் ஒருவர் கொலை தண்டனையோ அல்லது வேறு எந்த தண்டனையோ பெற்றாலும் அல்லது பழிக்குப்பழியாக கொலை செய்யப்பட்டு உயிர்துறப்பதாலும் அதிசீக்கிரத்தில் சொர்க்கம் உண்டு.)

4:76. (ஆகவே, இத்தகைய சமயத்தில்) உண்மை நம்பிக்கையாளர்கள் அல்லாஹ்வின் வழியில் (அவசியம்) போர்கொலை புரிவார்கள். நிராகரிப்பவர்களோ (இவர்களுக்கு எதிராக) ஷைத்தானுடைய வழியில்தான் போர்கொலை புரிவார்கள். ஆகவே, ஷைத்தானுடைய நண்பர்களை நீங்கள் போர்கொலை புரியுங்கள். (அவர்களின் தொகை அதிகமாக இருக்கின்றதே என்று தயங்காதீர்கள்.) நிச்சயமாக ஷைத்தானுடைய சூழ்ச்சி மிகவும் பலவீனமானதே!

4:84. (நபியே!) நீங்கள் அல்லாஹ்வுடைய பாதையில் போர்கொலை புரியுங்கள். நீங்கள் உங்களைத் தவிர (மற்றெவரையும் போர்கொலைக்குச் செல்லும்படி) நிர்ப்பந்திப்பதற்கில்லை. (ஆயினும்,) நம்பிக்கையாளர்களை (போர்கொலைச் செல்ல) தூண்டுங்கள். நிராகரிப்பவர்களின் எதிர்ப்பை அல்லாஹ் தடுத்துவிடுவான். (ஏனென்றால்) அல்லாஹ் போர்கொலை செய்வதில் மிக வல்லவனாகவும், தண்டிப்பதில் மிகக் கடுமையானவனாகவும் இருக்கின்றான்.

4:89. (முஃமின்களே!) அவர்கள் நிராகரிப்பதைப் போல் நீங்களும் நிராகரிப்போராகி நீங்களும் (இவ்வகையில்) அவர்களுக்கு சமமாகி விடுவதையே அவர்கள் விரும்புகிறார்கள்; ஆகவே, அவர்கள் அல்லாஹ்வின் பாதையில் (தம் இருப்பிடங்களை விட்டு வெளியே)புறப்படும் வரையில் அவர்களிலிருந்து எவரையும் நண்பர்களாக நீங்கள் எடுத்துக் கொள்ளாதீர்கள்; (அல்லாஹ்வின் பாதையில் வெளிப்பட வேண்டுமென்ற கட்டளையை) அவர்கள் புறக்கணித்துவிட்டால் அவர்களை எங்கு கண்டாலும் (கைதியாகப்) பிடித்துக் கொள்ளுங்கள்; (தப்பியோட முயல்வோரைக்) கொல்லுங்கள் - அவர்களிலிருந்து எவரையும் நண்பர்களாகவோ, உதவியாளர்களாகவோ எடுத்துக் கொள்ளாதீர்கள்.

8:12. (நபியே!) உங்களது இறைவன் மலக்குகளை நோக்கி "நிச்சயமாக நான் உங்களுடன் இருக்கிறேன். ஆகவே நீங்கள் நம்பிக்கையாளர்களை உறுதிப்படுத்துங்கள்; (என்று கட்டளையிட்டு) நிராகரிப்பவர்களுடைய உள்ளங்களில் நாம் திகிலை உண்டு பண்ணுவோம் (என்று கூறி, நம்பிக்கையாளர்களை நோக்கி) நீங்கள் அவர்களுடைய பிடரிகளின் மேல் வெட்டுங்கள். அவர்களை கணுக்கணுவாகத் துண்டித்து விடுங்கள்" என்று அறிவித்ததை நினைத்துப் பாருங்கள்.