Followers

Monday, January 15, 2018

எச்.ராஜா மீது வழக்கறிஞர்கள் போலீஸில் புகார்.

எச்.ராஜா மீது வழக்கறிஞர்கள் போலீஸில் புகார்.

#நானும்_இந்துதான்"
ஆனால் எச்.ராஜா மிகவும் கேவலமாகப் பேசிவருகிறார்.!

மற்ற இயக்கத்தவர் மற்ற மதத்தினரைக் கேவலமாகவும் இந்திய இறையாண்மைக்கு எதிராகவும், தரக் குறைவாக பொது மேடையில் பேசிவரும் ஹெச்.ராஜாவால், தமிழகத்தில் கலவரம் மூண்டு, சட்டம் ஒழுங்கு பாதிக்கும் சூழல் உள்ளது.

நாங்களும் இந்துக்கள்தான். ஆனால், இவரோ இந்து மதத்தின் அத்தாரிட்டி போல நினைத்துக்கொண்டு மிகவும் கேவலமாகவும் மோசமாகவும் பேசிவருகிறார்.

மதம்,மொழி, இனம் இவைகளுக்கிடையே பிரிவினையைத் தூண்டி கலவரத்தை உண்டாக்கும் அளவுக்கு செயல்பட்டுக்கொண்டிருக்கும் ஹெச்.ராஜா மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கறிஞர் சீனிவாசன் தலைமையில் 20வழக்கறிஞர்கள் திருவண்ணாமலை போலீஸில் புகார் அளித்துள்ளனர்.!

#இதுவே_தமிழ்நாடு
இந்து சகோதரர்களையும் இந்துத்துவா வெறி பிடித்தவர்களையும் தெளிவாக பிரித்து வைத்துள்ள எங்களது அழகிய மாநிலம்.!




2 comments:

Dr.Anburaj said...

நான் ஒரு ஹிந்து கவிஞர் கண்ணதாசன் நான் ஒரு ஹிந்து.

ஹிந்து என்பதில் நான் பெருமைப்படுகிறேன்.

நான் எல்லா மதத்தினரையும் மனமார நேசிக்கிறேன். ஆனால் ஹிந்துவாகவே வாழ விரும்புகிறேன்.

நான் கடவுளை நம்புகிறேன். அவனைக் காட்டியவனைப் போற்றுகிறேன். அந்தக் கடவுளைக் கல்லிலும் கருத்திலும் கண்டு வணங்குகிறேன்.

ஆன்மா இறைவனோடு ஒன்றி விடும் போது அமைதி ஹிருதயத்தை ஆட்சி செய்கிறது.

நாணயம் சத்தியம், தர்மம் இவற்றின் மீது நம்பிக்கை பிறக்கிறது.

நேரான வாழ்க்கையை ஹிருதயம் அவாவுகிறது.பாவங்களைக் கண்டு அஞ்சுகிறது.குறிப்பாக, ஒரு ஹிந்துவுக்குத் தன் அமைப்பின் மூலம் கிடைக்கும் நிம்மதி வேறு யாருக்கும் கிடைப்பதில்லை.கடைசி நாத்திகனையும் அது ஆத்திகன் என்றே அரவணைத்துக் கொள்கிறது.
‘என்னைத் திட்டுகிறவன் தான் அடிக்கடி என்னை நினைத்துக் கொள்கிறான். எனவே அவன் தான் முதல் பக்தன்” என்பது இறைவனின் வாக்கு.

Dr.Anburaj said...

ஹிந்து மதத்தைப் போல் சகிப்புத் தன்மை வாய்ந்த மதம் உலகில் வேறு எங்கும் இல்லை.

நீ பிள்ளையாரை உடைக்கலாம். பெருமாள் நாமத்தை அழிக்கலாம்.மதச் சின்னங்களைக் கேலி செய்யலாம். எதை செய்தாலும் ஹிந்து சகித்துக் கொள்ளுகிறான்.
ஏதோ பரம்பரையாகவே பகுத்தறிவாளனாகப் பிறப்பது போல் எண்ணி கொண்டு பாத்திரத்தை நிரப்புவதற்காகவே சாத்திரத்தைக் கேலி செய்யும் பகுத்தறிவுத் தந்தைகள் இஸ்லாத்தின் மீதோ, கிறிஸ்தவத்தின் மீதோ கை வைக்கட்டும் பார்க்கலாம்?
கடந்த நாற்பது வருடங்களில் ஒரு நாளாவது அதற்கான துணிவு ஏற்பட்டதாகத் தெரியவில்லையே!பாவப்பட்ட ஹிந்து மதத்தை மட்டுமே தாக்கித் தாக்கி அதை நம்புகிற அப்பாவிகளிடம் ரேட்டு வாங்கிச் சொத்து சேர்க்கும் ‘பெரிய’ மனிதர்களைத் தான் நான் பார்த்திருக்கிறேன்.
அவர்கள் பேசும் நாத்திக வாதம் அவர்கள் ‘குடும்பம் நடத்தும் வியாபாரம்’ என்பதை அறியாமல் வாழ்க்கையையே இழந்து நிற்கும் பல பேரை நான் அறிவேன்.

பருவ காலத்தில் சருமத்தின் அழகு மினுமினுப்பதைப் போல, ஆரம்ப காலத்தில் இந்த நாத்திக வாதம் மிகவும் கவர்ச்சிகரமாகவே இருந்தது.

நடிகையின் ‘மேக்-அப்பை’க் கண்டு ஏமாறுகிற சராசரி மனிதனைப் போல், அன்று இந்த வார்த்தை கேட்டு ஏமாந்தவர்களில் நானும் ஒருவன்.
அந்தக் கவர்ச்சி எனக்குக் குறுகிய காலக் கவர்ச்சியாகவே இருந்தது இறைவனின் கருணையே.

என்னை அடிமை கொண்ட கண்ணனும் ராமனும் இன்று சந்திர மண்டலத்துக்குப் பயணம் போகும் அமெரிக்காவையே அடிமை கொண்டு, ஆன்மீக வெறியில் திளைக்க வைத்திருக்கிறார்கள்.

அமெரிக்காவை விடவா ஈரோடு பகுத்தறிவில் முன்னேறி விட்டது!
வேண்டுமானால் ‘பணத்தறிவில்’ முன்னேறி விட்டது என்று சொல்லலாம்.
உலகத்தில் நாத்திகம் பேசியவன் தோற்றதாக வரலாறு உண்டே தவிர வென்றதாக இல்லை.
இதை உலகமெங்கும் இறைவன் நிரூபித்துக் கொண்டிருக்கிறான்.
இந்த நாலரைக் கோடி மக்களில் நீங்கள் சலித்து எடுத்தாலும் நாலாயிரம் நாத்திகர்களைக் கூடக் காண முடியாது.

பழைய நாத்திகர்களை எல்லாம் நான் பழனியிலும் திருப்பதியிலும் சந்தித்துக் கொண்டிருக்கிறேன்.

சித்தம் பொய் சொன்னாலும் வேதம் பொய் சொல்வதில்லை. சித்தாந்தம் தவறக்கூடும்; வேதாந்தம் தவறாது.

நமது மூதாதையர்கள் மாபெரும் மேதைகள். தெய்வ நம்பிக்கையின் மீதே சகல நியாயங்களையும் நிர்மாணம் செய்தார்கள்.
மனிதர்களின் எழுத்துக்களும் கருத்துக்களும் தோற்றுப் போன இடத்தில் தெய்வ நியாயமே தீபம் போல் எரிகிறது.

வெள்ளைக்காரனை நாம் விரட்டியது பாதி தூரம் தான். மீதி தூரம் அவனை விரட்டியது தெய்வமே.

அன்று பாரதப் போரை முன்னின்று நடத்திய கண்ணன், நமது பாரதப் போரையும் மறைந்து நின்று நடத்தினான்.

தேர்தல் வைப்பதும் வைக்காததும் ஒருவர் கையிலேயே இருந்த போது அவர் தேர்தலை நடத்துவானேன்? தோற்றும் போய் ஒதுங்குவானேன்?

மனிதன் வெளியில் நின்று விளையாடுகிறான். தெய்வம் மறைந்து நின்று விளையாடுகிறது! தெய்வத்தை நம்புகிறவன் தோற்றாலும் ஜெயிக்கிறான். நம்பாதவன் ஜெயித்தாலும் தோற்கிறான்.இயக்கத்தின் கர்த்தா இறைவன். கருவி மனிதன்..

என் வீடு, என் வாசல், என் தோட்டம், எனக்கு வரும் கூட்டம், எனக்கு வரும் ஓட்டு, நான் அமரும் பதவி என்றெல்லாம் சிந்திப்பவனும் பேசுபவனும் மடையர்கள்!

நீ ஏறுகிறாய் என்றால் ‘இறைவன் ஏற்றி விட்டுப் பார்க்கிறான்’ என்று பொருள். இறங்குகிறாய் என்றால் ‘சிந்திக்க வைக்கிறான்’ என்று பொருள்.

உனது பெருமை கடவுளின் மகிமை. உனது சிறுமை கடவுள் உனக்குத் தரும் அடக்கம்.

நோக்கம் உன்னுடையது. ஆக்கம் அவனுடையது.

பகவான் சொன்னபடி, ‘மனிதன் மரத்திலிருந்து விழும் இலை. அது தண்ணீரில் விழுந்தால் கொஞ்ச நாட்கள் மிதக்கும். மாலையில் கட்டப்பட்டால் சாமியின் கழுத்துக்குப் போகும். அதிலும் சிக்காமல் இருந்தால் காற்றடிக்கும் திசையெல்லாம் அலையும். நெருப்பில் விழுந்தால் சாம்பலாகும்.’

‘எதிலே விழுவது’ என்பது இலையின் விருப்பத்தைப் பொறுத்ததல்ல.

படித்து முடித்து விட்டீர்களா?

இந்த நல்- எண்ணங்களுக்கு கர்த்தா கண்ணதாசன். கண்ணதாசனின் நல்லெண்ண தாசன் நான்.

நீங்களும் தான் என்பது எனக்குப் புரிகிறது.


Tamil and Vedas