Followers

Tuesday, January 23, 2018

தமிழ்த்தாய் வாழ்த்துக்கு விஜயேந்திரர் மரியாதை செய்யவில்லை!

தமிழ்த்தாய் வாழ்த்துக்கு விஜயேந்திரர் மரியாதை செய்யவில்லை!

நேற்று சென்னையில் ஹரிஹர சர்மா ராஜாவின் தந்தை எழுதிய சமஸ்கிரத தமிழ் அகராதி புத்தகம் கவர்னர் தலைமையில் வெளியிடப்பட்டது. இவ்விழாவில் கலந்து கொண்ட காஞ்சி சங்கராச்சாரி இளையவர் தமிழ் தாய் வாழ்த்துக்கு எழுந்து மரியாதை செய்யவில்லை. ஆனால் தேசிய கீதத்துக்கு எழுந்து மரியாதை செய்தார். ஒருக்கால் தமிழ்த்தாய் வாழ்த்துக்குப் பதிலாக சமஸ்கிரத தாய் வாழ்த்து பாடியிருந்தால் எழுந்து மரியாதை செய்திருப்பாரோ?


தமிழ் மொழி ஆரியர்களுக்கு அந்நிய மொழி என்பதற்கு இந்நிகழ்வும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.


9 comments:

Dr.Anburaj said...


இயற்கைக்கு ஊறு விளைவிக்காதீர்கள்

இயற்கை தன்னைத் தானே காத்துக் கொள்ளும் வல்லமை படைத்தது. மனிதன் அதன் செயல்பாட்டில் குறுக்கிடாமல் இருந்தாலே போதும். அது வளமான பூமியை மனிதர்களுக்கும், பறவைகளுக்கும், விலங்குகளுக்கும் அளிக்கும்.

அமெரிக்க விஞ்ஞானக் கழகத் தலைவரான க்ரெசி மாரிசன் இறைவன் இருக்கிறானா, இல்லையா என்று ஆராயப் புகுந்தார். தனது ஆய்வின் முடிவில் இறைவன் இருக்கிறான் என்பதற்கு அவர் ஏழு காரணங்களை உலகினர் முன் வைத்தார். அதில் ஒன்று இயற்கையின் ஒப்பற்ற சமன்பாட்டுத் தத்துவம்.

இயற்கையில் காணும் ஒப்பற்ற சிக்கன அமைப்பைச் சற்று உற்றுக் கவனித்தபோது அது எல்லயற்ற, பரந்த ஒரு பேரறிவினால் இயக்கப்படுவதையும் அதில் முன்யோசனையும் அதற்குத் தகுந்த ஏற்பாடுகளும் இருப்பதையும் அவர் கண்டார்.

சில ஆண்டுகளுக்கு முன்னால் ஆஸ்திரேலியாவில் ஓரிடத்தில் சப்பாத்திக் கள்ளி வெகு விரைவில் பரவி பயிர்களுக்கும், மக்களுக்கும் துன்பம் தந்தது. விஞ்ஞானிகள் உலகம் முழுவதும் தேடி சப்பாத்திக் கள்ளியை மட்டும் தின்று வாழும் ஒரு வகைப் பூச்சி இனத்தைக் கண்டுபிடித்து வந்து ஆஸ்திரேலியாவில் விட்டார்கள். அவை அந்த விரும்பத்தகாத செடியை அழித்தன. சிக்கலும் தீர்ந்தது.

இது போன்று தாவரம் மற்றும் விலங்குக் கூட்டங்களிடையே இயற்கைக் கட்டுப்பாடுகளும் தடைகளும் தானே அமைந்துள்ளன. வேகமாகப் பெருக்கமடையும் பூச்சிகள், பிராணிகள் இவற்றின் உடலிலேயே அவற்றின் உருவையோ அல்லது வலிமையையோ கட்டுப்படுத்தும் அமைப்புகள் இருப்பதால் தான் மனிதன் இன்றும் வாழ முடிகிறது.

ஆக இந்த இயற்கை விதியை மனதிலே பதித்துக் கொள்ளாமல் பல்வேறு காரணங்களுக்காக இயற்கை அன்னை பாதுகாத்து வரும் யானை, சிங்கம், புலி, மான் போன்ற விலங்குகளை வேட்டையாடுவதும், அரிய பறவை இனங்களை உணவுக்காகவும் இதர காரணங்களுக்காகவும் வேட்டையாடு சுற்றுப்புறச் சூழ்நிலையை அழித்து விரும்பத்தகாத விளைவுகளை ஏற்படுத்தும்.

இதை மனதில் கொண்டு வாழ்வோமாக!

Dr.Anburaj said...

2 பழமொழிக் கதைகள்


(தமிழ் வாழ்க! தமிழை வளர்க்க நீங்கள் என்ன செய்யலாம்? மற்றவர்கள் எழுதியதை, அதை எழுதியவர் பெயரையும் அது வெளியான பிளாக் அல்லது பத்திரிக்கையின் பெயரையும் நீக்காமல் வெளியிடலாம்; இதனால் தமிழ் ஆர்வலர் பெருகுவர்; அதிகம் எழுதுவர்; ஸரஸ்வதி தேவியின் பரிபூரண கடாக்ஷம் உங்கள் மீதும் குடும்பத்தின் மீதும் பொழியும்; தமிழ் வாழும்!)



காஞ்சீபுரம் பற்றி இரண்டு பழமொழிகள் உண்டு; அவைகளின் பின்னால் சிறு கதைகளும் உண்டு.



ஒரு ஏழை, வேலை தேடி அலைந்து திரிந்தான் ; வேலை ஒன்றும் கிடைக்கவில்லை. பசி வயிற்றைக் கிள்ளியது. செங்கல்பட்டில் ஒரு வீட்டின் திண்ணையில் உடகார்ந்து புலம்பிக் கொண்டிருந்தான். அந்த வீட்டுக் கிழவி, எதேச்சையாக வெளியே வந்தாள். இவன் நிலையைக் கண்டு சோறு போட்டாள். இவன் தன் கதைகளை எல்லாம் சொன்னவுடன் அந்தப் பாட்டி சொன்னாள்,

"அட அசடே! காஞ்சிக்குப் போனால் காலாட்டிப் பிழைக்கலாமே; இதைக் கேட்டதே இல்லையா?” என்றாள்.

அப்படியா பாட்டி? இதோ உடனே புறப்படுகிறேன் என்று அவள், அன்னம் இட்டதற்கு நன்றி தெரிவித்துவிட்டு, வழி நடந்தான்.

வழியில் ஆங்காங்கே தங்கி அன்ன சத்திரங்களில் கிடைத்ததை உண்டு சின்னாட்களில் காஞ்சீபுரத்தை அடைந்தான். ஒரு வீட்டின் திண்ணையில் உட்கார்ந்தான். கால்களை ஆட்டத் துவங்கினான். யாரும் வேலை தருவதாகத் தெரியவில்லை. எல்லோரும் அவனை வேடிக்கைப் பார்த்துவிட்டு, இந்தப் பைத்தியம் எதற்காக இப்படிக் காலாட்டுகிறது என்று முனுமுனுத்துவிட்டுப் போயினர்.



இவன் நீண்ட நேரம் ஆகியும் ஒரு பலனும் கிடைக்கவில்லையே என்ற ஆதங்கத்தில் மிகவும் வேகமாகக் காலாட்டினான். எதேச்சையாக அந்த வீட்டுக் கிழவி வெளியே வந்தாள். இவன் காலாட்டுவதைப் பார்த்துவிட்டு,

“அப்பனே! ஏன் இப்படி நீண்ட நேரமாக காலாட்டி வருகிறாய்? என்ன காரணம்? காலில் நோவா?வலியா?” என்றனள்.



“பாட்டி! உன்னைப் போலவே ஒரு பாட்டியைக் கண்டேன். எனக்கு வேலை கிடைக்கவிலை என்றேன். அவள் தான் சொன்னாள், 'காஞ்சிக்குப் போனால், காலாட்டிப் பிழைக்கலாம்” என்று.

அவளுக்கு அதைக் கேட்டு சிரிப்பே வந்துவிட்டது.

“அட மக்கு! காஞ்சீ புரம் பட்டு சேலைகளுக்கும் மற்ற நெசவு சேலைகளுக்கும் பிரசித்தியான இடம். செசவுத் தொழில் செய்வோர் ஒவ்வொரு வீட்டிலும் தறி இருக்கும். அதில் ஆடவர், பெண்டீர் ஆகிய அனைவரும் தறியில் உட்கார்ந்து வேலை செய்வர். தறி நெசவில் காலாட்டி இயந்திரங்களை இயக்குவர். இப்படி புடவை நெய்வதையே ‘காலாட்டிப் பிழைக்கலாம்’ என்று சொல்லுவர்” என்றாள்.

உடனே அவனும் அவளுக்கு நன்றி சொல்லிவிட்டு நெசவு வேலையில் அமர்ந்தனன்.

Dr.Anburaj said...

இராமானுஜாசார்யார் கருணையே உருவாகக் கொண்ட பெரும் வைஷ்ணவ ஆசார்யர்.

எல்லோருக்கும் அருள் பாலிப்பவர்.

ஒரு சமயம் அவர் திருக்கோளூர் என்னும் புனிதப் பதியில் எழுந்தருளியிருந்தார்.

பக்தர்கள் திரளாக வந்து அவரை வணங்கி அவர் அருளைப் பெற்ற வண்ணம் இருந்தனர்.

அவர் அங்கிருப்பதைக் கேட்ட பலரும் திருக்கோளூர் நோக்கி வந்த வண்ணம் இருந்தனர்.

அப்போது ஒரு மாதரசி அந்த ஊரிலிருந்து கிளம்பப் போவதாகக் கூறினாள்.

அதைக் கேட்ட பலரும் வியந்தனர். அனைவரும் இங்கு வரும் போது நீங்கள் அயலூர் செல்லலாமா என்று அவர்கள் கேட்டனர்.

மாதரசியோ பிடிவாதமாக அங்கிருந்து செல்லப் போவதாக கூறினாள்.

உடனே அவளை ஆசார்யரிடம் அழைத்துச் சென்று விஷயத்தைக் கூறினர்.
கருணையே உருவான ஆசார்யர் அவளைப் புன்முறுவலோடு நோக்கினார். அவளது உயர்ந்த ஆன்ம நாட்டம் அவருக்குப் புரிந்தது. அவளது உயரிய ஆன்மிக பக்குவமும் அவருக்குத்த் தெரிந்து விட்டது.

அவரது முகக்குறிப்பு ‘சொல்’ என்றது.

மாதரசி, “ நான் திருக்கோளூரை விட்டுச் செல்லப் போகிறேன்” என்றாள்.

ஆசார்யர் கனிவோடு அவளை நோக்கி, “ திண்ணமென்னிளமான் புகுமூர் திருக்கோளூரே! அனைவரும் வந்து சேரும் இந்த புனிதத் தலத்தை விட்டு ஏன் வெளியே போக உத்தேசம்?” என்று வினவினார்.

Dr.Anburaj said...

அதற்கு அந்த மாதரசி பதில் அளித்தார் இப்படி:-

அழைத்து வருகிறேன் என்றேனோ அக்ரூரரைப் போலே,

அகமொழிந்து விட்டேனோ விதுரரைப் போலே,

தாய்க் கோலம் செய்தேனோ அநசூயையைப் போலே,

தந்தை எங்கே என்றேனோ துருவனைப் போலே,

மூன்று எழுத்து உரைத்தேனோ க்ஷத்ரபந்துவைப் போலே,

முதலடியைப் பெற்றேனோ அகலிகையைப் போலே,

அடையாளம் சொன்னேனோ கபந்தனைப் போலே,

அந்தரங்கம் சொன்னேனோ திரிசடையைப் போலே,

‘அவன் தெய்வம்’ என்றேனோ மண்டோதரியைப் போலே,

‘அகம் வேத்மி’ என்றேனோ விசுவாமித்திரரைப் போலே

‘அநு யாத்ரம்’ செய்தேனோ அணிலங்களைப் போலே,

அவல் பொரியை ஈந்தேனோ குசேலரைப் போலே,

ஆயுதங்கள் ஈந்தேனோ அகத்தியரைப் போலே,

கொண்டு திரிந்தேனோ திருவடியைப் போலே,

‘அனுப்பி வையும்’ என்றேனோ வசிஷ்டரைப் போலே,

மண் மலரை இட்டேனோ குருவநம்பியைப் போலே,

‘மூலம்’ என்றழைத்தேனோ கஜராஜனைப் போலே,

வைத்த இடத்து இருந்தேனோ பரதனைப் போலே,

வழியடிமை செய்தேனோ இலக்குவனைப் போலே,

அக்கரைக்கே விட்டேனோ குகப்பெருமாள் போலே,

இக்கரைக்கே சென்றேனோ விபீடணனைப் போலே,

இனியதொன்று வைத்தேனோ சபரியைப் போலே,

இங்குமுண்டு என்றேனோ பிரகலாதனைப் போலே,

இங்கில்லை என்றேனோ ததிபாண்டனைப் போலே,

காட்டுக்குப் போனேனோ பெருமாளைப் போலே,

கண்டு வந்தேனென்றேனோ திருவடியைப் போலே,

இரு கையும் விட்டேனோ திரௌபதையைப் போலே,

அனுகூலஞ் சொன்னேனோ மாலியவானைப் போலே,

தசமுகனைச் செற்றேனோ பிராட்டியைப் போலே,

தெய்வத்தைப் பெற்றேனோ தேவகியைப் போலே,
இப்படி நீண்டு சென்றது அவளது பட்டியல்! 81 பேரைச் சொல்லி அவள் முடித்தாள்.



பின்னர் இராமானுஜாசார்யரை நோக்கி அவள் பணிவுடன் கேட்டாள்: “ இப்படிப்பட்ட உயர்ந்தோர் வாழும் ஊர் அல்லவா திருக்கோளூர். இங்கிருக்க இப்படிப்பட்ட தகுதியல்லவோ வேண்டும். எனக்கு ஒன்று கூட இல்லையே! ஆகவே தான் நான் வெளியூர் செல்லப் போகிறேன்” என்றாள் அவள்.

இப்படி ஒரு பெரும் ஆன்ம ஞானப் பட்டியலை அறிந்து அதைத் தான் அடைய வேண்டும் என்ற அவாவுவது ஒன்றே பெரும் தகுதி அன்றோ - திருக்கோளூரில் வசிக்க!

அது போதாதா என்ன?



ஆசார்யரின் கருணை வெள்ளம் அவள் மீது பொங்கி வழிந்தது.

புன்முறுவல் பூத்தார்.

“இவ்விடத்திலேயே இரு” என்று மட்டும் சொன்னார்.

அவர் சொன்ன வார்த்தையின் பொருளை உணர்ந்து கொண்ட அந்த மாதரசி அவரது அனுக்ரஹத்தைப் பெற்றதைப் பெரும் பேறாக எண்ணினாள்.

திருக்கோளூரிலேயே தங்கி விட்டாள்.

Dr.Anburaj said...

சென்னை நிகழ்ச்சியின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டபோது ஸ்ரீ விஜயேந்திர ஸ்வாமிகள் அமர்ந்திருந்தது முற்றிலும் இயல்பான, எந்தவிதத்திலும் இங்கிதக் குறைவில்லாத செயல் என்பதே இப்போது எனது முடிவு. அதற்கான ஆதாரங்களைக் கீழே தருகிறேன்.

சுவாமிகள் கலந்து கொள்ளும் எல்லா பொது நிகழ்ச்சிகளிலும் தொடக்கத்தில் கடவுள் வாழ்த்து (prayer) சம்ஸ்கிருதத்தில் இருக்கும். அப்போது சபை முழுவதும் எழுந்து நிற்கும். ஆனால் சுவாமிகள் கண்மூடி தனது ஆசனத்தில் அமர்ந்து தான் இருப்பார், எழுந்து நிற்கமாட்டார். ப்ரேயர் முடிந்ததும் அனைவரும் அமர்வார்கள். இதுவே பற்பல வருடங்களாக இருந்து வரும் முறை. இது ஏறக்குறைய ஒரு involuntary action போல நடக்கும் ஒன்று. உதாரணத்திற்கு இரண்டு வீடியோக்களைக் கீழே தருகிறேன். இவை இரண்டுமே SCSMV பல்கலைக் கழக பட்டமளிப்பு விழா என்ற வகையிலான *பொது* நிகழ்ச்சிகள். இவற்றில் பேராசிரியர்கள், கல்வித் துறை அதிகாரிகள், மாணவர்கள், பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டுள்ளனர்.

Dr.Anburaj said...

இவற்றில் நிகழ்ச்சித் தொடக்கத்தில் ப்ரேயர் பாடல்களாக ‘கணானாம் த்வா கணபதிம்…’ ‘ப்ரணோ தேவீ சரஸ்வதீ…’ ‘பத்ரம் கர்ணேபி:.. ‘ ஆகிய புனிதமான வேத மந்திரங்கள் பாடப் படுகின்றன. மேடையிலுள்ள அதிகாரிகள், பார்வையாளர்கள் உட்பட ஒட்டுமொத்த அரங்கமும் எழுந்து நிற்கிறது. சுவாமிகள் அமர்ந்து தான் இருக்கிறார். இதில் யாருக்கும் எந்தப் பிரசினையும் இல்லை.

சர்ச்சைக்கு உள்ளாகியுள்ள குறிப்பிட்ட நிகழ்ச்சியில் என்ன நடந்திருக்கிறது? ஆரம்பத்தில் ஒரு தமிழ்ப்பாடல் வருகிறது. எல்லாரும் எழுந்து நிற்கிறார்கள். சரி,

சம்ஸ்க்ருத சுலோகங்களுக்குப் பதிலாக தமிழில் உள்ள தெய்வபக்திப் பாடல் ஒன்றைப் பாடுகிறார்கள் என்று தானே சுவாமிகள் நினைத்திருப்பார்? வழக்கம் போலவே அமர்ந்திருந்து தானும் அந்தத் தருணத்தில் தெய்வ சிந்தனையில் இணைந்திருக்கிறார். இதுதான் நடந்திருக்கிறது.

“நீராரும்” என்ற இந்தப் பாடல் தமிழ்நாடு அரசினுடைய அதிகாரபூர்வ வாழ்த்து என்பது அவரது நினைவில் இருந்திருக்க வாய்ப்பே இல்லை (வேதபாடசாலைகளிலும் குருகுலங்களிலுமே அவர் அதிகம் பயின்றிருக்கிறாரே அன்றி தமிழ்நாட்டின் ரெகுலர் பள்ளிகளில் அல்ல என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்). எனவே அவையினர் *அதற்காகத் தான்* எழுந்து நிற்கிறார்கள் என்று அவர் கருதுவதற்கும், தானும் எழுந்து நிற்க வேண்டும் என்று அவர் எண்ணுவதற்கும் எந்த முகாந்திரமும் இல்லை.

Dr.Anburaj said...

ஆனால், ஜனகணமன விஷயம் வேறு, அது ஒரு “அரசாங்க சமாசாரம்” என்பது சன்னியாசிகள் உட்பட அனைவருக்கும் தெரிந்த தகவல். அதனால் உடனடியாக எழுந்து நின்று விட்டார். இது தான் விஷயம்.

தமிழ்த்தாய் வாழ்த்திற்கு அவர் எழுந்து நிற்காதது அவமரியாதையால் அல்ல. மற்ற நிகழ்ச்சிகளில் பாடப்படும் வேத மந்திரங்களைக் கொண்ட சம்ஸ்கிருத கடவுள் வாழ்த்துக்களைப் போல இதுவும் தமிழில் உள்ள ஒரு வாழ்த்து என்று கருதியதால் தான் என்பது வெள்ளிடை மலை. உண்மையில் தமிழ்த்தாய் வாழ்த்திற்கு அரசாங்கம் கொடுத்திருப்பதை விட உயர்ந்த ஸ்தானத்தைத் தான் சுவாமிகள் கொடுத்திருக்கிறார். மடம் மன்னிப்பு கேட்கவேண்டும் என்று எழுதப்பட்ட ஸ்வராஜ்யா ஆங்கிலக் கட்டுரை அவசரத்திலும் விஷயத்தை சரியாக ஆராய்ந்து பார்க்காமலும் எழுதப்பட்டிருக்கிறது.

காஞ்சி மடம் இந்த விஷயம் குறித்து தெரிவிக்க வேண்டியது வருத்தமும் அல்ல, மன்னிப்பும் அல்ல,

Dr.Anburaj said...

மேலும், இந்துமதத்தின் பொதுவான மற்றும் சன்னியாச நடைமுறைகளின்படி நின்றால் மரியாதை, உட்கார்ந்தால் அப்படியல்ல என்பதெல்லாம் கிடையாது – அது நாம் நமது பொதுநிகழ்ச்சிகளில் வலிந்து ஏற்றுக்கொண்ட ஒரு மேற்கத்திய / கிறிஸ்தவ நடைமுறை மட்டுமே. இந்துமத நிகழ்ச்சிகளில் புனிதமான பல மந்திரங்களை உட்கார்ந்து கொண்டு தான் ஓதுகிறார்கள்.

தமிழ்த்தாய் என்ற கருத்தாக்கமும் சரி, தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலும் சரி, முற்றிலும் இந்துமதம், இந்துப் பண்பாடு சார்ந்தவை. உண்மையில் கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள், மார்க்சியர்கள் ஆகியோருக்குத் தான் அவர்களது மத நம்பிக்கைகளுக்கு எதிரான அந்தப் பாடலைக் குறித்து ஆட்சேபங்களும் எதிர்ப்புணர்வும் இருக்குமே தவிர இந்துக்களுக்கு அல்ல.

Dr.Anburaj said...

Thanks.for additional information www tamilhindu.com