Followers

Tuesday, January 09, 2018

மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்....

மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்....

 தன் தாயைக் கவனிக்காமல் மனைவிக்காக எதை வேண்டுமானாலும் செய்யும் ஆணை ஒருபோதும் நான் நம்ப மாட்டேன் - சவூதியில் தன் கணவனிடமிருந்து விவாகரத்து கோரிய ஒரு பெண்ணின் வினோத வழக்கு!

கணவன் : நான் உனக்காக என் குடும்பத்தையே பிரிந்தேனே. உன் விருப்பங்கள் எல்லாவற்றையும் நீ கேட்காமலே தேடித் தேடி நிறைவேற்றினேனே. என்ன குறை வைத்தேன் உனக்கு? என்னை விவாகரத்து செய்வதற்கான ஒரே ஒரு நியாயமான காரணமேனும் கூற முடியுமா?

நீதிபதி : இவர் கூறுவது உண்மையா? இவர் உங்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளில் ஏதேனும் குறை வைத்தாரா?

மனைவி : இல்லை, அவர் எனக்குச் செய்ய வேண்டிய கடமைகள் எதிலும் எக்குறையும் வைக்கவில்லை. அவர் கூறுவது அனைத்துமே உண்மை. நான் விரும்பிய இடங்களுக்கெல்லாம் அவர் அழைத்து சென்றார். விரும்பியதெல்லாம் வாங்கித் தந்தார். அவர் கூறுவது எதையுமே நான் மறுக்கவில்லை.

அவரிடமிருந்து விவாகரத்து கோருவதற்கான காரணமும் அதுவே.

ஒரு பெண்ணுக்காகப் பெற்றத் தாயைவிட்டு விடும் ஒரு ஆணை எப்படி நம்பமுடியும்? இவர் நாளை வேறொரு பெண்ணுக்காக என்னையும் விட்டுவிட மாட்டார் என்பதற்கு என்ன உத்தரவாதம்? தன் தாயைக் கவனிக்காமல் மனைவிக்காக எதை வேண்டுமானாலும் செய்யும் ஆணை ஒருபோதும் நான் நம்ப மாட்டேன். எனவேதான் இவரிடமிருந்து எனக்கு விவாகரத்து வேண்டுமென கோருகிறேன்.

நீதிபதி : உங்கள் எண்ணத்தை மதிக்கிறேன். அவரிடமிருந்து திருமணத்தின்போது பெற்ற வரதட்சணையைத் திரும்பக் கொடுக்க நீங்கள் தயாரா?

மனைவி : நான் தயாராக இருக்கிறேன்.

நீதிபதி : மிக நியாயமான காரணம் பெண் தரப்பிலிருந்து வைக்கப்பட்டதை ஆண் தரப்பு மறுக்காமல் ஒத்துக்கொண்டக் காரணத்தால் இவர்கள் இருவருக்குமிடையிலான திருமண ஒப்பந்தத்தை ரத்து செய்து தீர்ப்பளிக்கிறேன்.

முஹம்மது நபி வாக்கு: செல்வத்திலேயே சிறந்த செல்வமென்பது, நல்வழியில் நடக்க கணவனுக்கு உதவும் மனைவி.

மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்....

B Positive A Rahuman


1 comment:

Dr.Anburaj said...


Highly foolish woman.This is no reason for divorce.

Let her accomodates her aunt.As a lovable hunband,he would obey her. What prevented her from supporting her aunt. What a fun and absurd reasoning.

There is something more than what is shown to the world/what meets our eye.