Followers

Wednesday, January 24, 2018

விஜயேந்திரருக்கு எதிராக தலைவர்கள் கருத்து!

விஜயேந்திரருக்கு எதிராக தலைவர்கள் கருத்து!

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி: ஆளுநர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டபோது விஜயேந்திரர் எழுந்து நிற்காமல் தேசியகீதம் பாடப்பட்டபோது மட்டும் எழுந்து நின்றுள்ளார். தள்ளாத வயதிலும் கடவுள் மறுப்பாளரான பெரியார் பொது நிகழ்ச்சிகளில் கடவுள் வாழ்த்து பாடப்பட்டபோது எழுந்து நின்று அவை நாகரிகத்தை காப்பாற்றினார். நடந்த தவறுக்கு சங்கர மடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.

பாமக நிறுவனர் ராமதாஸ்: தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும்போது அனைவரும் எழுந்து நிற்பதுதான் மரபும் மரியாதையும் ஆகும். இதிலிருந்து யாருக்கும் விலக்களிக்க முடியாது. நடந்த நிகழ்வுக்கு விஜயேந்திரர் வருத்தம் தெரிவிக்க வேண்டும்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ: தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டபோது விஜயேந்திரர் எழுந்து நிற்காதது தமிழையும் தமிழர்களையும் அவமானப்படுத்தும் செயலாகும். கடவுள் மறுப்பாளரான பெரியார் கூட தான் பங்கேற்ற நிகழ்ச்சிகளில் கடவுள் வாழ்த்து பாடப்பட்டபோது எழுந்து நின்றிருக்கிறார். நடந்த தவறுக்கு விஜயேந்திரர் வருத்தம் தெரிவிப்பார் என நம்புகிறேன்.

கவிஞர் வைரமுத்து: தேசிய கீதம் என்பது தாய்நாட்டை மதிப்பது. தமிழ்த்தாய் வாழ்த்து என்பது தாய்மொழியை மதிப்பது. இரண்டும் சம அளவில் மதிக்கப்படவேண்டியவை.

பழ கருப்பையா: உண்மையான ஆன்மீக வாதி என்றால் அது வள்ளலார்தான். கொலை குற்றம் சாட்டப்பட்டு பிணையில் வெளி வந்த சங்கர மடத்து சாமியார்கள் எவ்வாறு சாமியார்களாக முடியும்? தமிழை நீச பாஷையாக கருதும் விஜயேந்திரர் இந்த நாட்டை விட்டே வெளியேற வேண்டும்.

பாரதிராஜா: தமிழ் நாட்டில் வந்து குடியமர்ந்து கொண்டு, தமிழக மக்களின் பணத்தில் சாப்பிட்டுக் கொண்டு தமிழை நீச பாஷை என்று ஒதுக்குவதற்கு என்ன நெஞ்சழுத்தம் வேண்டும். இதே கேரளா கர்நாடகாவில் நடந்திருந்தால் நிலைமையே வேறு. தமிழப! இனியும் நீ உறங்கினால் உனது இனமும், உனது மொழியும் உனது நாடும் மாற்றாரால் அழிக்கப்படுவது உறுதி. விழித்துக் கொள். பொங்கி எழு

2 comments:

Dr.Anburaj said...


சுவனப்பிரியனுக்கு எனது கடிதங்களை வெளியிடும் தைரியம் நேர்மை யில்லை.அரேபிய அடிமை.பார்பன வெறுப்பு என்ற பெயரில் இந்து அழிப்பு அரசியல் நடத்தும் தாங்களிடம் என்ன எதிர்பார்க்க முடியும்.

A.Anburaj Anantha said...

தமிழ் நாட்டில் வந்து குடியமர்ந்து கொண்டு, தமிழக மக்களின் பணத்தில் சாப்பிட்டுக் கொண்டு தமிழை நீச பாஷை என்று ஒதுக்குவதற்கு என்ன நெஞ்சழுத்தம் வேண்டும். இதே கேரளா கர்நாடகாவில் நடந்திருந்தால் நிலைமையே வேறு. தமிழப! இனியும் நீ உறங்கினால் உனது இனமும், உனது மொழியும் உனது நாடும் மாற்றாரால் அழிக்கப்படுவது உறுதி. விழித்துக் கொள். பொங்கி எழு
------------------
தமிழா்களை காபீர்கள் என்று இழிவு செய்யும் காலிகள் கூட்டத்திற்கு இது பொருந்தும்.