Followers

Sunday, August 09, 2020

அபுல் கலாம் ஆசாத் - அப்துல் கலாம் ஒரு ஒப்பீடு

 அபுல் கலாம் ஆசாத் - அப்துல் கலாம் ஒரு ஒப்பீடு

அபுல் கலாம் ஆசாத் இந்திய விடுதலைக்காக பாடுபட்டார். நேரு, காந்தி, படேல் போன்ற தலைவர்களோடு சரி சமமாக அமர்ந்து அரசியல் செய்தார். பாகிஸ்தான் பிரிந்து சென்றால் இரு நாட்டுக்குமே இழப்பு என்று ஜின்னாவிடம் கடைசி வரை போராடினார். இந்துக்கள், முஸ்லிம்கள், கிருத்தவர்கள் என்று அனைவரையும் அன்போடு அரவணைத்தார். சுதந்திர இந்தியாவின் கல்வி மந்திரியாக பணிபுரிந்து கல்வித் துறையில் பல புரட்சிகளை செய்தார். அரேபிய வம்சாவளியில் வந்திருந்தாலும் இந்திய மண்ணுக்காக உழைத்து இந்திய மண்ணிலேயே இறந்தார்.

அதே நேரம் தனது வணக்க வழிபாடுகளில் எந்த சமரசமும் செய்து கொள்ளவில்லை. தர்ஹா வழிபாட்டை எதிர்த்தார். இறைவனுக்கு இணை வைக்கும் எதனையும் அவர் தனது வாழ்நாளில் செய்ததில்லை. ஐந்து நேரமும் தொழக் கூடியவராக இருந்தார். தனது தாய் நாட்டையும், தனது மார்க்கத்தையும் குழப்பிக் கொள்ளாமல் இரண்டையும் சிறப்பாக செய்து ஈருலக பயனையும் பெற்றுக் கொண்டார்.

அடுத்து நம்ம அப்துல் கலாமுக்கு வருவோம். அப்துல் கலாமும் இந்தியாவுக்காக உழைத்தார். ராக்கெட் தொழில் நுட்பம் மேலோங்க பல அரிய கண்டு பிடிப்புகளை நாட்டுக்கு அர்ப்பணித்தார். நாடெங்கும் மரங்களை வளர்க்க பிரியப்பட்டார். ஜனாதியாகவும் பணி புரிந்தார். குழந்தைகளை நேசித்தார். அனைத்து மத மக்களையும் அன்போடு பார்த்தார். இதிலெல்லாம் எந்த தவறையும் அவர் செய்யவில்லை.

அதே நேரம் ஒரு இஸ்லாமியராக அவரால் பரிணமிக்க முடியவில்லை. தான் மேலும் பல முன்னேற்றங்களை அடைய வேண்டுமானால் மற்ற மத சடங்குகளையும் தனது வாழ்நாளில் கொண்டு வர வேண்டும் என்று தவறாக கணித்து விட்டார். ஒரு உண்மையான முஸ்லிமாக வாழ்ந்து தனது திறமையினால் இன்னும் பல சாதனைகளை செய்திருக்கலாம். இந்து மத சடங்குகளை இவர் செய்யப் போய்தான் இவருக்கு ஜனாதிபதி பதவியையும் வாஜ்பாய் கொடுத்தார் என்பதையும் நாம் மறந்து விடக் கூடாது.

ஒரு சிறந்த இந்தியனாகவும் ஒரு சிறந்த முஸ்லிமாகவும் வாழ்ந்த அபுல் கலாம் ஆசாத்தைப் போல் அப்துல் கலாம் தனது வாழ்வை அமைத்துக் கொண்டிருக்க வேண்டும். அவ்வாறு இல்லாமல் அற்ப உலக சுகங்களுக்காக தனது இறைக் கொள்கையை விட்டுக் கொடுத்தது நம்மைப் போன்றவர்களுக்கு வருத்தமே. இறைவன் அவரது பாவங்களை மன்னித்து நல் அமல்களை முன்னிறுத்தி அவரை நல்லோர்கள் கூட்டத்தில் சேர்ப்பானாக!

“எவன் மறுமையின் பயிரை விரும்புகிறானோ, அவனுடைய பயிரை விளைச்சலை நாம் அவனுக்காக அதிகப்படுத்துகிறோம். எவன் இம்மையின் பயிரை மட்டும் விரும்புகிறானோ, நாம் அவனுக்கு அதிலிருந்து ஓரளவு கொடுக்கின்றோம். எனினும், அவனுக்கு மறுமையில் யாதொரு பங்குமில்லை.”

அல்குர்ஆன் 42:20.





1 comment:

Dr.Anburaj said...


அரேபிய வல்லாதிக்க கருத்துக்களை ஏற்காத முஸ்லீம் பாட்டையா திரு. அப்துல் கலாம்.

இந்தியாவின் தாய் நாட்டின் கலாச்சார பாரம்பரியங்களை விழுமியங்களை ஏற்றுக்கொண்ட முஸ்லீம் பாட்டையா திரு. அப்துல் கலாம்.

இந்திய அஸ்திவாரத்தில் தன்னை முழுமையாக இணைத்துக் கொண்டவா் பாட்டையா அப்துல் கலாம்.
இந்திய முஸ்லீம்கள் எப்படி வாழ வேண்டும் என்பதற்கு உதாரணபுருஷா் முஸ்லீம் பாட்டையா அப்துல் கலாம்.
-----------------------------------------------------------------------------