Followers

Tuesday, August 25, 2020

ஜாகிர் நாயக்கை மேலும் பிரபலப்படுத்துகிறார்கள்.

 ஜாகிர் நாயக்கை மேலும் பிரபலப்படுத்துகிறார்கள்.

சென்னை ராயபுரத்தில் ஒரு தொழிலதிபரின் மகள் லண்டனில் படித்து வருகிறார். அங்கு படித்து வரும் வங்க தேசத்தை சேர்ந்த நஃபீஸ் என்பவரோடு பழக்கம் ஏற்பட்டுள்ளது. அது காதலாக மாறியுள்ளது. முடிவில் அந்த பெண் இஸ்லாமிய மதத்தையும் ஏற்றுக் கொண்டுள்ளார். இதனால் அதிர்ந்து போன அவரது பெற்றோர் காவல் துறையில் புகார் செய்துள்ளனர்.

இது வரை ஓகே.... ஆனால் அதன் பிறகுதான் விளையாட்டு ஆரம்பமாகிறது. பெண்ணை காதலித்த நஃபீஸ் என்ற இளைஞன் ஜாகிர் நாயக்கின் ஆதரவாளனாம். எனவே நஃபீஸ், நஃபீஸின் தந்தை, மற்றும் ஜாகிர் நாயக்கின் மேலும் வழக்கு பதிந்துள்ளது என்ஐஏ.இதை படிக்கும் எவருமே இதில் உள்ள பாசிச எண்ணத்தை விளங்கிக் கொள்வர். ஒருவரை கட்டாயமாக எந்த காலத்திலும் மத மாற்றம் செய்ய முடியாது. அதற்கு இஸ்லாமும் அனுமதிக்கவில்லை. இதன் மூலம் தமிழகத்தில் முஸ்லிம்களின் மேல் ஒருவித வெறுப்பை ஏற்படுத்த முயற்சிக்கிறது என்ஐஏ.

லண்டன் போன்ற நகரங்களில் படிக்க செல்லும் பெண்கள் இவ்வாறு காதல் வலையில் வீழ்ந்து மதமும் மாறுவது சர்வ சாதாரணம். இதற்கும் மலேசியாவில் வசிக்கும் ஜாகிர் நாயக்குக்கும் என்ன சம்பந்தம்? மஹாராஸ்ட்ர அரசு ஜாகிர் நாயக் மேல் இருந்த வழக்குகள் அனைத்தும் ஜோடிக்கப்பட்டவை என்று வழக்குகளை வாபஸ் பெற்றுக் கொண்டது. இதனால் கடுப்பான இந்துத்வாவாதிகள் இந்த வழக்கில் அவரை கோர்த்து விடப் பார்க்கிறார்கள். என்னதான் ஆட்சி அதிகாரம் இருந்தாலும் முடிவில் உண்மைதான் வெல்லும். இதனை இந்துத்வாவாதிகளும், மோடிக்களும், அமித்ஸாக்களும் விரைவிலேயே புரிந்து கொள்வர்.

-------------------------------------------------

இஸ்லாமிய மார்க்கத்தில் எவ்வகையான நிர்ப்பந்தமுமில்லை; வழிகேட்டிலிருந்து நேர்வழி முற்றிலும் பிரிந்து தெளிவாகிவிட்டது; ஆகையால், எவர் வழி கெடுப்பவற்றை நிராகரித்து அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்கிறாரோ அவர் அறுந்து விடாத கெட்டியான கயிற்றை நிச்சயமாகப் பற்றிக் கொண்டார் - அல்லாஹ் யாவற்றையும் செவியுறுவோனாகவும் நன்கறிவோனாகவும் இருக்கின்றான்.

அல்குர்ஆன்: 2:256

மேலும், உம் இறைவன் நாடியிருந்தால், பூமியிலுள்ள யாவருமே இறை நம்பிக்கை கொண்டிருப்பார்கள்; எனவே, மனிதர்கள் யாவரும் நம்பிக்கை கொண்டோராக ஆகிவிடவேண்டுமென்று அவர்களை நீர் கட்டாயப்படுத்த முடியுமா?

அல்குர்ஆன்: 10:99

உங்களுக்கு உங்களுடைய மார்க்கம்; எனக்கு என்னுடைய மார்க்கம்.”

அல்குர்ஆன்:109:6




2 comments:

Dr.Anburaj said...

முஸ்லீம் நாடுகளில் முஸ“லீம்கள் யாரும்மதம்மாற முடியாது.

இந்தியாவில் ஏன் அப்படி ஒரு சட்டத்தை அமுல்படுத்த வில்லை.இந்துவாக பிறந்த யாரும் மதம் மாற முடியாது என்ற சட்டம் விரைவில் வரும். மலரும்.

Dr.Anburaj said...


அந்த பெண்ணை விடுவிக்க பணம் கேட்டுள்ளார்கள்.

அதுதான் பிரச்சனையானது. தற்சமயம் இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமை நடத்துகிறது.
-------------------------
தேசிய புலனாய்வு முகமை என்றாலே சு...ன் க்கு எட்டிக்காய். கேரள தங்கம் கடத்தில் சம்பந்தப்பட்டவர்கள் அனைவரும் பிஜேபி காரர்கள் என்றாா்.

பிடிபட்டு விசாரணை வளையத்திற்குள் இருப்பவர்களில் அதிக பேர்கள் முஸ்லீம்கள்.