Followers

Saturday, August 08, 2020

கோழிக்கோடு ஏர் இந்தியா விமானம்....

 கோழிக்கோடு ஏர் இந்தியா விமானம்....

நேற்றிரவு துபாயில் இருந்து கோழிக்கோடு வந்த ஏர் இந்தியா விமானம் ஒன்று தரையிறங்கும் போது திடீரென விபத்துக்குள்ளானதில் இதுவரை 19க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளதாகவும் மேலும் பலர் காயமடைந்துள்ளதாகவும் வெளிவந்த செய்தி நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது

இந்த நிலையில் இந்த விபத்து குறித்த தகவல்கள் ஒரு பக்கம் வருத்தத்தை அளித்தாலும் இன்னொரு பக்கம் இந்த விபத்தால் வெளிப்பட்டுள்ள மனிதநேயம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முதல் கட்டமாக விபத்தில் காயமடைந்தவர்களுக்கு ரத்தம் தேவை என்ற தகவல் சமூக வலைதளங்களில் வெளியானது. இதனை அடுத்து நள்ளிரவு என்றும் பாராமல் நள்ளிரவு 12 மணிக்கும், 1 மணிக்கும் ரத்த தானம் கொடுக்க கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்தவர்கள் ரத்ததான முகாமில் வரிசையில் நின்றனர். இது குறித்த புகைப்படங்கள் வெளியாகி மனித நேயம் இன்னும் நீர்த்துபோகவில்லை என்பதற்கு உதாரணமாக உள்ளது

மேலும் ஏர் இந்தியா விமானங்கள் மிகவும் பழையனவாகி விட்டது. மற்ற உலக நாட்டு விமானங்களோடு ஒப்பிடும்போது ஏர் இந்தியாவின் சேவை படுமோசம் என்று சொல்லலாம். கிளம்பும் போதும் இறங்கும் போதும் தட தட என்ற சப்தத்தோடு பயணிகள் அனைவரையும் பயத்தில் ஆழ்த்தும் ஏர் இந்தியா. இதனை நானும் உணர்ந்துள்ளேன். ஏர் லங்கா, சவுதியா, ஓமான், கல்ஃப் விமானங்களோடு ஒப்பிட்டால் இந்தியா கடைசி இடத்தில்தான் இருக்கும். பணம் கட்டி மக்கள் பயணிக்கும் ஒரு துறையை இந்திய அரசு நவீனபடுத்த வேண்டாமா?

பொது சிவில் சட்டம், சிஏஏ, காஷ்மீர், ராமர் கோவில் என்று ஒன்றுக்கும் உதவாத திட்டங்களுக்கு ஒதுக்கும் நிதியை இது போன்ற மக்கள் உயிர் சார்ந்த திட்டங்களுக்கு ஒதுக்கி மக்களின் உயிரை அரசு காப்பாற்றட்டும்.

விபத்தில் உயிரிழந்த அனைவரின் குடும்பத்துக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்கள்.






1 comment:

Dr.Anburaj said...

நல்ல வேளை விமானம் தீ பிடிக்கவில்லை. பிடித்திருந்தால் உயிா்ச் சேதம் அதிகமாக இருக்கும். யாரும் தப்ப முடியாது.

ஏா் இந்தியாவை பாழாக்கியவன் காங்கிரஸ் மடையர்கள். ஏா் இந்தியாவை தனியாருக்கு விற்று

விட வேண்டும் என்றால் ”வாங்க ஆளில்லை”. நிலைமை அவ்வளவு மோசம்.

இந்திய விமானப்படைக்கு ரபேல் விமானங்களை வாங்க பேச்சு வார்த்தை முடித்தவன் காங்கிரஸ்காரன். அமைச்சா் அந்தோணிதான். ஆனால் விமானம் வாங்க பணம் இல்லையென்று அறிவித்து ராணுவத்தையும் பாழாக்கினார்கள்.

கமிஷன் , கள்ள கணக்கு, கொள்ளை என்பதுதான் காங்கிரஸ்காரன் கொள்கை. நாடு சீரழிந்தது அதனால்தான்.