பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் அழகிய உரை!
'ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்..... ஏக இறைவனான அல்லாஹ் முஸ்லிம்களுக்கு மாத்திரம் சொந்தமானவல்ல.... உலக மக்கள் அனைவருக்கும் பொதுவானவன். நபிகள் நாயகம் அவர்கள் முஸ்லிம்களுக்கு மாத்திரம் சொந்தமானவரல்ல.... அகில உலக மக்களுக்கும் இறைத் தூதராக அனுப்பப்பட்டவர்கள்.'
'நமது நாட்டில் உள்ள சிறுபான்மை மக்களை காக்க வேண்டியது பெரும்பான்மை மக்களின் கடமையாகும். அவர்களின் அச்சத்தை போக்கி சமூகத்தில் இரண்டற கலக்க வைக்க வேண்டிய பொறுப்பு நமக்கு உள்ளது.'
'எனக்கு ஒரு விஷயம் கவலை அளிக்கிறது. சில இடங்களில் ஹிந்து பெண்களை கட்டாயப்படுத்தி இஸ்லாம் மதத்தை ஏற்கச் சொல்லி வற்புறுத்தப்படுவதாக கேள்விப்படுகிறேன். இது யார் கற்றுக் கொடுத்த இஸ்லாம்?
குர்ஆனில் இறைவன் 'உங்கள் மார்க்கம் உங்களுக்கு எங்கள் மார்க்கம் எங்களுக்கு: மார்க்கத்தில் நிர்பந்தம் இல்லை'
என்று கூறுகிறான்.
'மற்றொரு இடத்தில் 'நபியே! உனது வேலை மார்க்கத்தை சொல்வதுதான். அவர்களுக்கு நேர் வழி காட்டுவதும் காட்டாமல் இருப்பதும் எனது வேலை. அதற்காக நீர் சிரமப்படவோ கவலைப் படவோ வேண்டாம்' என்கிறான். இறைத் தூதருக்கே அந்த நிலை என்கிறபோது நாமெல்லாம் எங்கே?'
'அனைத்து பாகிஸ்தானிகளுக்கும் ஒன்று சொல்லிக் கொள்கிறேன். நம் நாட்டில் வசிக்கும் ஹிந்து,
கிருத்தவ, சீக்கிய, பவுத்த மக்களை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டியது முஸ்லிம்களாகிய நமது கடமை. இதனை மறந்து விட வேண்டாம்'
என்ன ஒரு அழகிய பேச்சு! பல மதத்தவர்கள் வாழும் நாட்டில் தவறாக ஒரு சிலர் வழி நடத்தப்பட்டால் அந்த மக்களை தலைவன் கண்டிக்க வேண்டும். ஆனால் மதசார்பற்ற நாடு என்று பெருமை பேசும் நமது நாட்டின் நிலை என்ன?
பிரதமரும் உள்துறை மந்திரியும் திட்டமிட்டு கலவரங்களை தூண்டி விடுவதும், முஸ்லிம்களின் சொத்துக்களை சூரையாடுவதும்,
முஸ்லிம் இளைஞர்களை கும்பலாக கோழைத்தனமாக தாக்குவதும் தொடர் கதையாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்தாவது சம்பந்தப்பட்டவர்கள் தங்களின் நிலையை மாற்றிக் கொள்ளட்டும்.