Followers

Showing posts with label இரும்பு. Show all posts
Showing posts with label இரும்பு. Show all posts

Sunday, January 18, 2015

இரும்பு பற்றி மேலும் சில புதிய தகவல்கள்!

இரும்பு பற்றி சில புதிய தகவல்கள்!

'இரும்பையும் நாமே இறக்கினோம். அதில் மனிதர்களுக்கு பெரும் பயன்பாடுகளும் மிக்க வலிமைகளும் உண்டு' -குர்ஆன் 57:25

மேற்கண்ட இந்த வசனம் மிகச்சிறந்த ஒரு அறிவியல் உண்மையை நமக்கு கூறிக் கொண்டிருக்கிறது. ஆகாயத்திலிருந்து மழைநீர் பொழிவதாக நாம் பார்த்திருப்போம். இரும்பு வானத்திலிருந்து பொழிவதை நாம் பார்த்ததில்லை. ஆனால் திருக்குர்ஆன் ஏழாம் நூற்றாண்டிலேயே ஆகாயத்திலிருந்து இரும்பு மழை பொழிவதைக் கூறிக் கொண்டிருக்கிறது. பூமியின் மீது விண்கற்கள் வந்து விழுவதை நாம் அடிக்கடி பத்திரிக்கை வாயிலாக படித்திருப்போம்.

நாம் படத்தில் பார்க்கும் இந்த இரும்பானது மெக்ஸிகோவில் கண்டெடுக்கப்பட்டது. வானிலிருந்து பூமிக்கு இறங்கிய இந்த இரும்பானது உலகின் மிகப் பழமையானதாக கருதப்படுகிறது. இந்த விண்கற்களின் பெரும் பகுதி இரும்பும் சிலிக்கனும் ஆகும்.
சிலிக்கன் என்ற பெயரையோ, அப்படி ஒரு உலோகம் இருப்பது பற்றியோ முகமது நபி காலத்தில் தெரிந்திராத போதிலும் அந்த மக்கள் இரும்பின் தேவையைப் பற்றி நிறைய அறிந்தே வைத்திருந்தார்கள். இரும்பு என்பது பூமியிலிருந்து கிடைக்கக் கூடிய ஒரு தாதுப் பொருள் என்பது நமக்கு தெரியும். தாதுப் பொருட்கள் என்பது பூமியின் கட்டுமானப் பொருட்களே! எனவே பூமி படைக்கப்பட்டபோது இரும்பும் அதோடு சேர்ந்து இறைவனால் படைக்கப்பட்டாகி விட்டது. ஆனால் விண்ணிலிருந்து வரும் விண்கற்களில் உள்ள இரும்புக்கும் நாம் பயன்படுத்தும் இரும்புக்கும் சில வித்தியாசங்கள் இருக்கிறது.

நமது முன்னோர்கள் பயன்படுத்தி வந்த உலோகங்களை விஞ்ஞானிகள் சோதனைக்கு உட்படுத்தினார்கள். அந்த மக்களின் உலோகங்களில் கசடுகளான கோபால்டு, சிலிக்கன் போன்றவை இருப்பது கண்டு விஞ்ஞானிகள் ஆச்சரியம் அடைந்தனர். ஏனெனில் நாம் பயன்படுத்தும் சாதாரண இரும்புகளில் இந்த கசடுகள் சேர வாய்ப்பில்லை. விண்ணில் இருந்து விழுந்த கற்களைக் கொண்டே அந்த மக்கள் உலோகங்களை செய்திருப்பது ஆராய்ச்சியில் தெரிய வந்தது. எனவேதான் இறைவன் நாம் விண்ணிலிருந்து இறக்கினோம். அதில் மனிதர்களுக்கு பெரும் பயன்பாடும் மிக்க வலிமைகளும் உண்டு எனக் கூறுகிறான்.
இரும்பினால் பெரும் பயன்பாடுகள் மனிதனுக்கு உள்ளது என்று இறைவன் குறிப்பிட்டு ஏன் சொல்ல வேண்டும் என்பதை இனி பார்ப்போம்.

உலகின் மிகப் பிரபலமான உயிரியல் ஆய்வாளர் மைக்கேல் டென்டன் (Michael denton) தனது நூலான 'இயற்கையின் விதி' (natures destiny) என்ற நூலில் பின் வருமாறு கூறுகிறார்:

“இந்த உலகம் இரும்பில்லாமல் இயங்க முடியாது. இரும்பு இல்லாமல் காற்று மண்டலத்தின் செயல்பாடுகள் நடைபெறாது: இரும்பு இல்லாமல் புவியீர்ப்பு விசை செயல்பட முடியாது. புவியீர்ப்பு விசை கோள்களுக்குள் இல்லை என்றால் ஒட்டு மொத்த உலகமும் அழிந்து விடும். இரும்பு இல்லை என்றால் ஓசோன் படலமும் இல்லை. ஓசோன் படலம் இல்லை என்றால் மனிதன் பூமியில் வாழ சாத்தியமும் இல்லை.”

“மனித உடலின் ரத்தத்தில் உள்ள ஹீமோ குளோபின் இல்லை என்றால் மனிதனின் வாழ்வும் இல்லை. இந்த ஹீமோ குளோபின் முழுக்க உற்பத்தியாவது இரும்பிலிருந்தே.(ரத்த சோகை நோய் ஏற்படுவது ஹீமோ குளோபின் குறைவதால்தான்) ஆக சுருக்கமாக சொல்லப் போனால் இரும்பு இல்லை என்றால் இந்த உலகமே இல்லை. அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது இந்த இரும்பு.”

இந்த வார்த்தைகளானது உலகம் போற்றக் கூடிய ஒரு உயிரியல் அறிஞரின் வார்த்தைகளாகும். இந்த உண்மைகள் எல்லாம் இருபதாம் நுற்றாண்டின் ஆரம்ப காலங்களில்தான் கண்டு பிடிக்கப்படுகின்றன. ஆனால் இந்த இரும்பின் அருமையை குர்ஆன் மிகவும் சர்வ சாதாரணமாக சொல்லிச் செல்கிறது. எழுதப் படிக்கத் தெரியாத ஒரு நபர் தனது சொந்த கற்பனையினால் 1400 ஆண்டுகளுக்கு முன் இவ்வாறு கூற முடியுமா என்று சிந்திக்க நாம் கடமை பட்டுள்ளோம். இந்த குர்ஆன் நம்மைப் படைத்த இறைவனின் வார்த்தைகள் தான் என்பது இது பொன்ற வசனங்களின் மூலம் மேலும் உறுதியாகிறது.

தகவல் உதவி:
ஹாருன் யஹ்யா வலைத் தளம்
மைக்கேல் டென்டனின் 'இயற்கையின் விதி'

Monday, May 26, 2014

இரும்பை பற்றி குர்ஆன் கூறுவதென்ன? ஒரு மீள் பதிவு!

இந்த பதிவை படிக்கும் முன் ஒரு விளக்கம். குர்ஆன் ஒரு அறிவியல் புத்தகம் அல்ல. அது மனிதன் எவ்வாறு தனது வாழ்வை அமைத்துக் கொள்ள வேண்டும் என்ற அறிவுரை அடங்கிய வேதம். இது இறைவனிடம் இருந்துதான் வந்ததா? அல்லது முகமது நபி தனது கற்பனையில் குர்ஆனைக் கொடுத்தாரா என்பதுதான் நமக்கு முன் உள்ள கேள்வி. முஸ்லிம்களை பொறுத்த வரையில் ஒரு பிரச்னையும் இல்லை. குர்ஆன் இறைவனின் வார்த்தைதான் என்பதில் எந்த சந்தேகமும் அவர்களிடத்தில் கிடையாது. மற்ற மதத்தவர் இந்த குர்ஆன் இறைவன் வாக்காக இருக்க முடியாது என்ற வாதத்தை வைக்கின்றனர். எனவே அந்த வாதத்தை எதிர் கொள்ள முஸ்லிம்களும் இது இறைவேதம்தான் என்பதை நிரூபிக்க சில அறிவியல் ஆதாரங்களை தர வேண்டிய நிர்பந்தம் உண்டாகிறது. அந்த வகையில் முன்பு கடலுக்கடியில் உள்ள இருள்களைப் பார்த்தோம். இந்த பதிவில் இரும்பைப் பற்றி குர்ஆன் என்ன சொல்கிறது. அதற்கு அறிவியல் அறிஞர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.

நமது தூதர்களைத் தெளிவான சான்றுகளுடன் அனுப்பினோம். அவர்களுடன் வேதத்தையும் மக்கள் நீதியை நிலை நாட்ட தராசையும் அருளினோம். இரும்பையும் இறக்கினோம். அதில் கடுமையான ஆற்றலும் மக்களுக்குப் பயன்களும் உள்ளன.
-குர்ஆன் 57:25

மேற்கண்ட இந்த வசனம் மிகச்சிறந்த ஒரு அறிவியல் உண்மையை நமக்கு கூறிக் கொண்டிருக்கிறது. ஆகாயத்திலிருந்து மழைநீர் பொழிவதாக நாம் பார்த்திருப்போம். இரும்பு வானத்திலிருந்து பொழிவதை நாம் பார்த்ததில்லை. ஆனால் திருக்குர்ஆன் ஏழாம் நூற்றாண்டிலேயே ஆகாயத்திலிருந்து இரும்பு மழை பொழிவதைக் கூறிக் கொண்டிருக்கிறது. பூமியின் மீது விண்கற்கள் வந்து விழுவதை நாம் அடிக்கடி பத்திரிக்கை வாயிலாக படித்திருப்போம்.

இந்த விண்கற்களின் பெரும் பகுதி இரும்பும் சிலிக்கனும் ஆகும். சிலிக்கன் என்ற பெயரையோ, அப்படி ஒரு உலோகம் இருப்பது பற்றியோ முகமது நபி காலத்தில் தெரிந்திராத போதிலும் அந்த மக்கள் இரும்பின் தேவையைப் பற்றி நிறைய அறிந்தே வைத்திருந்தார்கள். இரும்பு என்பது பூமியிலிருந்து கிடைக்கக் கூடிய ஒரு தாதுப் பொருள் என்பது நமக்கு தெரியும். தாதுப் பொருட்கள் என்பது பூமியின் கட்டுமானப் பொருட்களே! எனவே பூமி படைக்கப்பட்டபோது இரும்பும் அதோடு சேர்ந்து இறைவனால் படைக்கப்பட்டாகி விட்டது.அப்படி பூமி படைக்கப்படும் போது இரும்பு எவ்வாறு பூமியின் கட்டுமானத்தில் வந்திருக்க முடியும் என்பதை இந்த காணொளி விளக்குகிறது.

விண்ணிலிருந்து வரும் விண்கற்களில் உள்ள இரும்புக்கும் நாம் பயன்படுத்தும் இரும்புக்கும் சில வித்தியாசங்கள் இருக்கிறது.

நமது முன்னோர்கள் பயன்படுத்தி வந்த உலோகங்களை விஞ்ஞானிகள் சோதனைக்கு உட்படுத்தினார்கள். அந்த மக்களின் உலோகங்களில் கசடுகளான கோபால்டு, சிலிக்கன் போன்றவை இருப்பது கண்டு விஞ்ஞானிகள் ஆச்சரியம் அடைந்தனர். ஏனெனில் நாம் பயன்படுத்தும் சாதாரண இரும்புகளில் இந்த கசடுகள் சேர வாய்ப்பில்லை. விண்ணில் இருந்து விழுந்த கற்களைக் கொண்டே அந்த மக்கள் உலோகங்களை செய்திருப்பது ஆராய்ச்சியில் தெரிய வந்தது. எனவேதான் இறைவன் நாம் விண்ணிலிருந்து இறக்கினோம். அதில் மனிதர்களுக்கு பெரும் பயன்பாடும் மிக்க வலிமைகளும் உண்டு எனக் கூறுகிறான்.

http://www.encyclopedia-of-meteorites.com/collection.aspx?id=2637

என்சைக்ளோபீடியாவின் இந்த பக்கத்துக்கு சென்று வானிலிருந்து விழுந்த இரும்பு துண்டுகளை நாடு வாரியாக படங்களோடு பாருங்கள். சில காணொளிகளும் நம்மை ஆச்சரியப்படுத்தும்.

'இரும்பில் மக்களுக்கு பயன்கள் உண்டு' என்ற இந்த வார்த்தையை ஒட்டி நாம் சிறிது ஆராய்வோம். நமது மருத்துவ உலகம் மனிதனுக்கு இரும்புச் சத்து எந்த வகையில் உபயோகமாக உள்ளது என்பதை பட்டியலிடுகிறது. அதை இனி பார்ப்போம்:

இயற்கையில் அபரிமிதமாக கிடைக்கும் இரும்புச் சத்து உடலின் நலத்திற்கு மிக அவசியமாகும். பெரும்பான்மையான புரதங்கள், என்சைம்கள் போன்றவற்றிற்கு இரும்புச் சத்து ஒரு இன்றியமையாத மூலப்பொருள். ஆக்ஸிஜன் ஒரு இடத்திலிருந்து இன்னோர் இடத்திற்கு உடலில் எடுத்து செல்ல இரும்புச் சத்து அவசியம். செல்கள் மேலும் பெருக, வளார்ச்சி அடைய இரும்பு முக்கியமான மூலப்பொருள். இரும்புச் சத்து குறைவால் போதிய ஆக்ஸிஜன் இல்லாமல் தளர்ச்சியும், வேலை செய்ய திறமை இல்லாமை போன்றவையும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவும் ஏற்படும். அதே சமயத்தில் இரும்புச் சத்து அதிகமானால் விஷமாகி இறக்கவும் நேரிடலாம்.

உடலில் 3ல் 2 பகுதி இரும்புச் சத்து ஹீமோக்லோபின் ஆக இரத்த சிவப்பணுக்களில் இருக்கிறது.இவை ஆக்சிஜனை திசுக்களுக்கு எடுத்து செல்லும். அதேபோல தசைகளில் உள்ள மையோ க்ளொபின் என்பது ஆக்சிஜனை தசைகளுக்கு மாற்றும். இவற்றிலும் இரும்பு சத்து உண்டு.

இரும்பை உறிஞ்ச தேவையான புரதத்திலும் இரும்புச் சத்து உள்ளது. அதேபோல அதிக இரும்பை சேகரித்து வைக்க உதவும் என்சைம்களில் இரும்பு இருக்கிறது. ஹீம், ஹீம் அல்லாத வகை என இரண்டு வகைகளில் இரும்பு உடலில் இருக்கிறது. இது பெரும்பாலும் புலால் உணவில் கிடைக்கும். பருப்பு வகைகளில் இருக்கும் இரும்பு ஹீம் அல்லாத வகையில் இருக்கிறது. குழந்தைகளுக்காக கிடைக்கும் பாலில் சேர்க்க படும் இரும்புச் சத்து இந்த வகையை சேர்ந்ததே.

உலக சுகாதார மையம் இரும்புச் சத்தின் குறைவால் வரும் நோய்கள்தான் உலகில் உண்ணும் பழக்கத்தால் வரும் நோய்களில் முதன்மையானவை என்று கூறுகிறார்கள். உலகின் 80% மக்கள் இரும்பு குறைவாக கொண்டவர்கள் அதில் 30% மக்கள் இரும்பு குறைவதால் வரும் இரத்த சோகை கொண்டவர்கள் எனக் கூறுகிறார்கள்.

………Iron is an essential element for most life on Earth, including human beings. Most of the human body's iron is contained in red blood cells……
- http://en.wikipedia.org/wiki/Human_iron_metabolism

Without the iron atom, there would be no carbon-based life in the cosmos; no supernovae, no heating of the primitive earth, no atmosphere or hydrosphere. There would be no protective magnetic field, no Van Allen radiation belts, no ozone layer, no metal to make hemoglobin [in human blood], no metal to tame the reactivity of oxygen, and no oxidative metabolism.
-Nature’s Destiny, the well-known microbiologist Michael Denton emphasizes the importance of iron.

அமெரிக்க நாசா நிறுவனத்தில் புரபசராக வேலை செய்யும் விஞ்ஞானி ஆம்ஸ்ட்ராங் சிறந்த அறிவியல் அறிஞர். the National Aeronautics and Space Administration என்ற நிறுவனத்தில் மிகப் பிரபல்யமானவர். 'வானியலைப் பற்றி குர்ஆன் என்ன கூறுகிறது?' என்று பல ஆராய்ச்சிகளை செய்துள்ளார். உலகில் உள்ள அனைத்து திட பொருட்களும் எவ்வாறு உருவாகியிருக்க முடியும் என்ற முடிவுகளையும் அறிந்து வைத்துள்ளார். மேலும் இரும்பை உருவாக்கும் முறையை விஞ்ஞானிகள் சமீப காலங்களில்தான் கண்டு பிடித்தனர். இரும்பின் அடிப்படை உருவாக்கத்தை பெற போதிய சக்தியற்று இருந்தோம். அதாவது இரும்பை உருவாக்கும் ஒரு அணுவை உற்பத்தி செய்ய போதிய சக்தியை இந்த பிரபஞ்சம் பெற்றிருக்கவில்லை என்கிறது அறிவியல் முடிவுகள். எனவே இந்த இரும்பானது வேறு ஒரு கிரகத்திலிருந்து நமது பூமிக்கு வந்திருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வருகின்றனர் நமது விஞ்ஞானிகள்..

அதிலும் நமது பிரபஞ்சத்திலிருந்து இரும்பு வந்திருக்க முடியும் என்ற நம்பிக்கையையும் விஞ்ஞானிகள் ஏறத்தாழ கைகழுவி விட்டனர். நமது சூரியனை விட மிகப் பெரும் ஒரு நட்சத்திரத்திலிருந்து இந்த இரும்பானது வந்திருக்கலாம் என்ற ரீதியில் ஆராய்ச்சிகள் தற்போது நடந்து வருகிறது. சில நூறு மில்லியன் டிகிரி செல்சியஸ் அளவில் உள்ள வெப்பத்துடன் கூடிய ஒரு நட்சத்திமாக அது இருக்கலாம் என்பது இவர்களின் கணிப்பு. இரும்பின் அடர்த்தி குறிப்பிட்ட நட்சத்திரத்தில் அதிகரிக்கும் போது வெடித்து சிதறி வால் நட்சத்திரங்களாக பூமியை நோக்கி வந்திருக்கலாம். அது வானுலக விசையாக இருக்கலாம் என்ற முடிவுக்கும் வருகின்றனர் விஞ்ஞானிகள்.

“இரும்பையும் இறக்கினோம்”

அதிலும் கூட தனிமங்களாக இல்லாமல் முழு இரும்பாகவே இந்த பூமிக்கு வந்திருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வருகின்றனர் விஞ்ஞானிகள். இனி குர்ஆனுடைய வசனத்தைப் பார்ப்போம். 'இரும்பையும் இறக்கினோம்: அதில் பல உபயோகங்கள் மனித குலத்துக்கு உள்ளது' என்ற வசனத்தை நாம் சிந்தித்தோமானோல் தற்கால அறிவியல் முடிவோடு குர்ஆன் ஒத்து செல்வதை எண்ணி பிரமிக்கிறோம். வேறு எத்தனையோ பொருள்கள் அனைத்தும் பூமியிலேயே நமக்கு கிடைத்துக் கொண்டிருக்க அதை எல்லாம் குர்ஆன் சொல்லாமல் இரும்பை மட்டும் தனித்து சொல்வதால் அதுவும் தற்கால அறிவியலோடு முற்றிலும் ஒத்து போவதால் இது இறை வேதம்தான் என்பது மேலும் உறுதியாகிறது.

பண்டைய எகிப்தியர்களும் இரும்பை 'சொர்க்கத்தின் உலோகம்' என்று குறிப்புகள் எழுதியுள்ளது கிடைக்கப் பெறுகிறது. குர்ஆனுக்கு முந்தய இறை வேதங்களிலும் இந்த செய்தி சொல்லப் பட்டிருக்க வேண்டும். எனவேதான் பண்டைய எகிப்தியர்களுக்கும் இந்த உண்மை தெரிந்திருக்கிறது. பண்டைய எகிப்துக்கு மோசே என்ற இறைத் தூதர் வந்ததும் அவருக்கு கொடுக்கப்பட்ட வேதம் தோரா என்பதும் நமக்கு முன்பே தெரியும்.

'இது அகிலத்தாருக்கு அறிவுரை தவிர வேறில்லை. சிறிது காலத்திற்கு பிறகு இதனுடைய செய்தியை அறிந்து கொள்வீர்கள்.'

-குர்ஆன் 38:87,88

ஆம். இந்த குர்ஆன் மனிதன் தனது வாழ்வை எவ்வாறு அமைத்துக் கொண்டால் வெற்றி பெறுவான் என்பதை விளக்கும் ஒரு வேதம். வெறுமனே மரியாதை செய்கிறோம் என்று கண்களில் ஒத்திக் கொள்வதை விட அதன் மொழிபெயர்ப்பை வாசித்து இறைவன் நம்மோடு என்ன பேசுகிறான் என்பதை ஒவ்வொரு மனிதனும் விளங்க வேண்டும் என்பதற்காகத்தான் குர்ஆனை அருளியதாக இறைவன் கூறகிறான். இந்த குர்ஆனில் சொல்லப்பட்டிருக்கும் பல உண்மைகள முகமது நபி காலத்திய மக்களுக்கு விளங்கா விட்டாலும் பின்னால் வரக் கூடிய அறிவார்ந்த சமூகம் விளங்கிக் கொள்ள பல அத்தாட்சிகள் இதில் இருக்கிறது என்பதையும் இறைவன் குறிப்பிடுகிறான்.

References
1.↑ Kathryn A. Bard - Encyclopedia of the archaeology of ancient Egypt (P. 526) - Routledge; Ill edition, May 14, 1999, ISBN 978-0415185899
2.↑ Kate Melville - Sun's Iron Core May Be Cause Of Solar Flares - Science a Go Go, November 3, 2003
3.Harun yahya.com
4.wikipedia
5. http://www.encyclopedia-of-meteorites.com/collection.aspx?id=2637

Wednesday, October 02, 2013

மோடியும் மஹாத்மா காந்தியும் சந்தித்துக் கொண்டால்....

என்னைக் கொன்று விட்டு

எனக்கே மாலையா!

குஜராத்தை குதறி விட்டு

நாட்டுக்கே சவாலா!

என்கவுண்டர் செய்து விட்டு

எங்கும் எகத்தாளமா!

இத்தனையும் செய்து விட்டு பிரதமர் கனவா..

வெட்கம என்ற ஒன்று உண்டா உனக்கு...

இதே சுப்ரீம் கோர்ட் உன்னை

நீரோ வுக்கு ஒப்பிடவில்லையா!

ரஷீத் மசூதும் லல்லு பிரசாத்தும்

இன்று சிறைக் கொட்டகையில்!

எனது நாட்டு சட்டம் தாமதமானாலும்

என்றாவது கொடியவர்களை பிடித்து விடும்...

கொடியவனே! நீயும் உனது கூட்டமும்

இதே சிறைக் கொட்டகையில்

அடைபடும் நாள்தான் எனக்கு ஜெயந்தி!

அது வரை என் அருகில் வராதே!

நீ எனக்கு போடுவது மாலையா!

அல்லது தூக்கு கயிறா! மறக்காமல்

சொல்லி விடு உடனே! ஏனெனில்

எனது தாய் நாட்டுக்காக

இரு முறை என்னால் சாக முடியாது....

Thursday, April 18, 2013

'புதிய ஜனநாயகம்' பத்திரிக்கையில் மோடி சம்பந்தமாக......

மோடிக்கு அமெரிக்க விசா மறுக்கப்பட்டதைக் குறித்து புதிய ஜனநாயகம் இதழில் 2005ம் ஆண்டு வெளி வந்த கட்டுரை.

“மதச் சுதந்திர உரிமைகளை நேரடியாகவோ மறைமுகமாகவோ மீறும் எந்தவொரு அந்நிய நாட்டு அதிகாரிக்கும் விசாவினை (நுழைவுச் சீட்டு) மறுக்கலாம்” என்ற அமெரிக்க சட்டத்தின்படி குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு வழங்கியிருந்த வர்த்தக சுற்றுலா விசாவினை அமெரிக்கா ரத்து செய்திருக்கிறது.

“மோடியின் அமெரிக்க பயணம் அரசுமுறை பயணம் அல்ல. அதனால் அவருக்கு அரசுமுறை விசாவும் வழங்க முடியாது” என மறுத்துவிட்டது அமெரிக்க அரசு.

குஜராத்தில் கொத்துக் கொத்தாக முசுலீம்கள் கொல்லப்பட்டுக் கொண்டிருந்த பொழுது விசுவ இந்து பரிசத்தின் குஜராத் மாநிலத் தலைவர் கேசவ்ராம் காசிராம் சாஸ்திரி “ஆம். நாங்கள் திட்டமிட்டுத்தான் கலவரம் நடத்தினோம்” எனப் பகிரங்கமாகவே பேட்டி கொடுத்தார். இந்த இனப்படுகொலையின் தளபதி நரேந்திர மோடிதான் என்பதை கலவரத்துக்குப் பின் கோவாவில் நடந்த பா.ஜ.க.வின் உயர்மட்டக் கூட்டம் மறைமுகமாக ஒப்புக் கொண்டிருக்கிறது. இவை மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நம் கண் முன் நடந்தவை.

இந்த சமீபத்திய வரலாற்று உண்மைகளை முசுலீம் பிணங்களோடு போட்டுப் புதைத்துவிட்டு “எந்த நிரூபணமும் இல்லாமல் அரசியல் கட்சிகளும் மத்திய அரசும் அதன் அமைச்சர்களும் பத்திரிகை உலகமும் நரேந்திர மோடிக்கு குஜராத் கலவரங்களைப் பின் நின்று நடத்தி அந்தக் கொலைகளுக்குக் காரணமானவர் என்ற முத்திரையைக் குத்தி விட்டன… அமெரிக்காவிற்கு இந்த முத்திரை பயன்பட்டது…. அமெரிக்க நடவடிக்கை கண்டிக்கத் தகுந்தது” எனப் பொய்யைக் கக்கி மோடிக்கு வக்காலத்து வாங்குகிறார் துக்ளக் “சோ”.

ஆர்.எஸ்.எஸ். பா.ஜ.க. கும்பலோ இன்னும் ஒருபடி மேலே போய் மோடிக்கு விசா மறுக்கப்பட்டதை “இந்திய அரசியல் சாசனத்திற்கும் இந்திய மக்களுக்கும் நேர்ந்துவிட்ட அவமானமாகவும்; இந்திய நாட்டிற்கு ஏற்பட்ட இழுக்காகவும்” ஊதிப் பெருக்குகிறது.

பா.ஜ.க. கூட்டணி ஆட்சியில் இராணுவ மந்திரியாக இருந்த ஜார்ஜ் பெர்ணான்டசு அமெரிக்க விமான நிலையம் ஒன்றில் “சோதனை” என்ற பெயரில் துகில் உரியப்பட்டார். ஒரு கிறித்தவ இந்திய அமைச்சருக்கு நேர்ந்த அவமானத்தை இந்திய அரசியல் சாசனத்திற்கு நேர்ந்த அவமானமாக பா.ஜ.க. அரசு கருதவில்லை. மாறாக “அது அமெரிக்காவின் சட்டம்” என்று சொல்லி அவமானத்தைச் சகித்துக் கொண்டார்கள்.

உலக வர்த்தக மையக் கட்டிடங்கள் தகர்க்கப்பட்ட பின் இந்தியா உள்ளிட்ட சில ஏழை ஆசிய கண்டத்து நாடுகளில் இருந்து அமெரிக்காவிற்குச் செல்லும் அனைவரும் தங்களின் கைரேகைகளை அமெரிக்க அதிகாரிகளிடம் பதிவு செய்ய வேண்டும் என்ற சட்டத்தை அமெரிக்கா கொண்டு வந்தது. இரவு நேரத்தில் சந்தேகத்தில் பிடித்துக் கொள்ளும் நபர்களின் கைரேகைகளை போலீசார் பதிவு செய்து கொள்கிறார்களே அதற்கும் அமெரிக்காவின் சட்டத்திற்கும் பெரிய வேறுபாடு எதுவும் கிடையாது.

இந்திய நாட்டு மக்கள் ஒவ்வொருவரையும் தீவிரவாதியாகச் சந்தேகிக்கும் இந்தச் சட்டத்தை பா.ஜ.க. அவமானமாகப் பார்க்கவில்லை. ஆனால் இந்துமத பயங்கரவாதி மோடிக்கு விசா மறுக்கப்பட்டதை அரசியல் சாசனத்தின் அவமானமாக ஒப்பிடுகிறது. அப்படியென்றால் மோடி என்ற கேடியைக் காப்பாற்றுவதுதான் அரசியல் சாசனத்தின் வேலையா?

இந்தக் கேள்விக்கு பா.ஜ.க. மட்டுமல்ல மதச்சார்பற்ற காங்கிரசும் கூட “ஆம்” என்று தான் பதில் அளிக்கிறது. “மோடி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்; குஜராத் மாநிலத்தின் முதல் மந்திரி; குஜராத் கலவரங்களுக்காக அவர் எந்தவொரு இந்திய நீதிமன்றத்தாலும் தண்டிக்கப்படவில்லை; எனவே அவருக்கு விசா மறுக்கப்பட்டதை அமெரிக்கா மறுபரிசீலனை செய்ய வேண்டும்” என இந்திய அரசின் சார்பாகவே அமெரிக்காவிடம் வேண்டுகிறார்கள்.

2000 முசுலீம்களைக் கொன்ற மோடி சட்டப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் என்பது இந்திய அரசியல் சாசனத்தின் ஓட்டாண்டித்தனத்தைத் தான் காட்டுகிறது.

“இந்து என்பது மதமல்ல; அது ஒரு வாழ்க்கை முறை” என உச்சநீதி மன்றம் ஒரு தீர்ப்பில் சொல்லியிருக்கிறது. இதைத்தான் பா.ஜ.க. இந்துத்துவா என்கிறது.

ராமர் கோவில் கட்டுவதற்காகச் செதுக்கப்பட்ட தூண்களை பாபர் மசூதி வளாகத்தில் வைத்துப் பூசை செய்ய வேண்டும் என ஆர்.எஸ்.எஸ். ஆர்ப்பாட்டம் செய்தபொழுது உச்சநீதி மன்றம் அப்பூசையைத் தடை செய்யவில்லை. மாறாக வளாகத்திற்கு வெளியே பூசை நடத்திக் கொள்ளுங்கள் என்ற சந்தை ஏற்படுத்திக் கொடுத்தது. இப்படி பலவிதங்களில் ஆர்.எஸ்.எஸ்.க்கு அனுசரணையாக நடந்து கொள்ளும் நீதிமன்றங்கள் மோடியைத் தண்டிக்க வேண்டும் என்றால் சூரியன் மேற்கேதான் உதிக்க வேண்டும். மோடி தண்டிக்கப்படாமல் இருப்பதுதான் அவமானமேயொழிய அவருக்கு அமெரிக்கா விசா மறுக்கப்பட்டிருப்பது அவமானத்திற்குரியதல்ல! ···

“சவூதி அரேபியா ஈரானில் எல்லாம் மதசார்பு ஆட்சி நடக்கிறது. பாகிஸ்தான் வங்காள தேசத்தில் சிறுபான்மை இந்துக்கள் கொல்லப்படுகிறார்கள். அந்நாடுகளைச் சேர்ந்த அமைச்சர்களுக்கு விசாவை மறுக்காத அமெரிக்கா மோடிக்கு மட்டும் மறுத்திருக்கிறது” என அமெரிக்காவின் இரட்டை வேடத்தை பா.ஜ.க. அம்பலப்படுத்துகிறது.

அமெரிக்காவின் இந்த இரட்டைவேடத்தினால் பா.ஜ.க.வும்தான் பலன் அடைந்திருக்கிறது. கொசோவாவில் முசுலீம்கள் படுகொலை செய்யப்பட்டதைச் சாக்காக வைத்து யுகோஸ்லாவியா நாட்டின் மீது அமெரிக்கா போரே தொடுத்தது. அதே அமெரிக்கா குஜராத்தில் முசுலீம்கள் படுகொலை செய்யப்பட்ட பொழுது அதைக் கண்டித்து ஒரு அறிக்கைகூட விடவில்லை. இதற்குக் காரணம் குஜராத் கலவரம் நடந்தபொழுது ஆட்சியில் இருந்த வாஜ்பாயி அரசுக்கும் ஜார்ஜ் புஷ்ஷூக்கும் இடையே இருந்த நெருக்கம்தான்.

அமெரிக்காவில் உண்டியலைக் குலுக்கி வசூலிக்கப்பட்ட டாலர்கள் குஜராத் கலவரத்திற்குப் பயன்படுத்தப்பட்டன என்பதை பல்வேறு அமைப்புகள் அம்பலப்படுத்தியுள்ளன. ஆனாலும் விசுவ இந்து பரிசத் அமெரிக்காவில் உண்டியல் குலுக்குவதை இன்று வரை புஷ் தடை செய்யவில்லை.

“சுதந்திரத்துக்கு” முன்னும் பின்னும் ஆர்.எஸ்.எஸ். கும்பல் நூற்றுக்கணக்கான மதவெறிக் கலவரங்களை நடத்தியிருக்கிறது. மதச் சுதந்திரத்துக்கே வேட்டு வைக்கும் மதமாற்றத் தடைச் சட்டம் இந்தியா முழுவதும் கொண்டு வரப்பட வேண்டும் என்பதுதான் ஆர்.எஸ்.எஸ்.இன் கொள்கை. இதன்படி பார்த்தால் ஆர்.எஸ்.எஸ். பரிவாரங்களைச் சேர்ந்த அனைவருக்குமே “விசா” மறுக்கப்பட வேண்டும். ஆனால் அமெரிக்காவோ மோடிக்கு மட்டும் விசாவை மறுத்துவிட்டு எங்களுக்கும் பா.ஜ.க.விற்கும் இடையே நல்ல உறவு இருப்பதாக அறிக்கை விடுகிறது.

இந்தியாவின் அத்வானி இசுரேலின் ஏரியல் ஷரோன் போன்ற மதவெறி பிடித்த அரசியல் தலைவர்களுக்குக் கூட “விசா” வழங்கி வரும் அமெரிக்கா கம்யூனிஸ்டுகள் இடது சாரி முற்போக்கு சிந்தனை கொண்டவர்களுக்கு “விசா” வழங்க மறுப்பதை அரசியல் தந்திரமாகவே கடைப்பிடித்து வருகிறது. அமெரிக்காவின் இந்த இரட்டை வேடத்தைப் பற்றி பா.ஜ.க. என்றைக்காவது வாயைத் திறந்ததுண்டா?

அமெரிக்காவின் நலன்களுக்கு அனுசரணையாக நடந்து கொள்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மதச் சர்வாதிகாரியாக இருந்தாலும் அவர்களுக்கு விசா வழங்க எந்தத் தடையும் இல்லை என அமெரிக்க சட்டமே கூறுகிறது. அதனால்தான் அத்வானி வாஜ்பாயி வகையறாக்களின் விசா ரத்து செய்யப்படவில்லை. மோடியின் விசா ரத்து செய்யப்பட்டிருப்பது ஒரு விதி விலக்கு. நமது நாட்டு நீதிமன்றங்கள் மனித உரிமைகளை மீறிய போலீசு அதிகாரிகளை அதிசயமாகத் தண்டிப்பது போல! ···

ஈராக் ஆக்கிரமிப்பு அபு கிரைப் சிறைச்சாலை சித்திரவதைகள் இவற்றைக் காட்டி மனித உரிமை பற்றிப் பேச அமெரிக்காவுக்குத் தகுதியில்லை என வாதாடுகிறது ஆர்.எஸ்.எஸ். கும்பல். ஈயத்தைப் பார்த்து பித்தளை இளித்த கதைதான் இது.

இந்திய மக்களின் சட்டபூர்வ மனித உரிமைகள் அனைத்தையும் பறிப்பதற்காகவே “பொடா” என்ற கருப்புச் சட்டத்தைக் கொண்டு வந்தவர்கள் பா.ஜ. கட்சியினர். மனித உரிமைப் போராளிகள் இச்சட்டத்தை எதிர்த்த பொழுது அமெரிக்காவிலும் இது போன்ற சட்டம் பேட்ரியாட் சட்டம் கொண்டு வந்திருப்பதாகக் கூறி நியாயப்படுத்தினார்கள்.

இது மட்டுமின்றி ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா போர் தொடுக்கத் திட்டம் போட்ட பொழுது தீவிரவாதத்துக்கு எதிரான போரில் தன்னை இளைய பங்காளியாகச் சேர்த்துக் கொள்ள வேண்டும் என பா.ஜ.க. கூட்டணி ஆட்சி மன்றாடியது.

அமெரிக்கா ஈராக்கை ஆக்கிரமித்த பின் அமெரிக்காவின் தயவில் இந்தியத் தரகு முதலாளிகளுக்கு வியாபார ஒப்பந்தம் வாங்கித் தருவதற்காக “அமெரிக்காவுக்கு உதவ ஈராக்கிற்கு இந்தியப் படைகளை அனுப்புவதாக” புஷ்ஷிடம் வாக்குறுதி கொடுத்தார் அத்வானி. உள்நாட்டு எதிர்ப்பின் காரணமாக படைகளை அனுப்ப முடியாமல் போனதால் முன்னாள் இராணுவ வீரர்களைக் கூலிப் படைகளாக ஏற்றுமதி செய்ய பா.ஜ.க. கூட்டணி ஆட்சி அனுமதித்தது.

இப்படி அமெரிக்காவின் உலக மேலாதிக்கத்திற்கு அடியாளாக வேலை செய்ய விருப்பம் கொண்ட இந்து மதவெறிக் கும்பல் “மனித உரிமைகளை மீறிய அமெரிக்க அதிகாரிகளுக்கு இந்தியா விசாவை மறுத்தால் என்னவாகும்?” எனச் சவால் விடுகிறது.

ஒருவேளை அப்படி நடந்து விடுகிறது எனக் கற்பனை செய்து கொள்வோம். பிறகு அந்நிய நிதி மூலதனத்தையும் தொழில்நுட்பத்தையும் பெறுவதற்கு இந்தியா எந்த நாட்டிடம் கையேந்தி நிற்க முடியும்?

1994இல் நடந்த மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலின் பொழுது அமெரிக்க என்ரான் நிறுவனத்தை அரபிக் கடலில் தூக்கியெறிவோம் எனச் சவடால் அடித்தது பா.ஜ.க. ஆனால் அந்தத் தேர்தலில் வென்று ஆட்சியைப் பிடித்தபின் என்ரானின் இரண்டாவது மின்திட்டத்திற்கும் சேர்த்தே அனுமதி கொடுத்தது.

வாஜ்பாயின் ஆட்சியில் அணுகுண்டு வெடித்த பொழுது அமெரிக்கா இந்தியா மீது அணு ஆராய்ச்சி சம்மந்தமான பொருளாதாரத் தடைகளை விதித்தது. அந்நியப் பொருட்கள் இறக்குமதிக்கு இந்தியாவில் உள்ள தடைகளை நீக்கி விடுகிறோம் என அமெரிக்காவோடு பேரம் நடத்திதான் பொருளாதாரத் தடையை நீக்கச் செய்தது வாஜ்பாயி அரசு. இதுதான் பா.ஜ.க.வின் கடந்தகால அமெரிக்க எதிர்ப்பு வீர வரலாறு!

மோடிக்கு விசா வழங்கப்பட்டதை எதிர்த்து அகமதாபாத் நகரில் நடந்த பேரணியில் “நமது நாட்டின் சட்டம் இப்படி இருக்க வேண்டும்; நமது நாட்டின் பாடநூல்கள் இப்படி இருக்க வேண்டும் என அமெரிக்கா கட்டளையிடுவதா?” என்று கொதிப்போடு பேசினாராம் மோடி. பா.ஜ.க. இந்தப் பேரணிக்கு “சுயமரியாதை பேரணி” எனப் பெயரிட்டிருந்தது.

அமெரிக்கா உத்திரவு போட்டு காப்புரிமைச் சட்டம் திருத்தப்பட்ட பொழுது; அமெரிக்கா உத்திரவு போட்டு தொழிலாளர் நலச் சட்டங்கள் திருத்தப்பட்டபொழுது பா.ஜ.க.வின் சுயமரியாதை எங்கே ஒளிந்து கொண்டிருந்தது?

“குஜராத்தில் நடந்த கலவரம் இந்தியாவின் உள்நாட்டு விவகாரம். அதில் தலையிட்டுத் தீர்ப்புச் சொல்ல அமெரிக்காவிற்கு அதிகாரம் கிடையாது” என பா.ஜ.க.வோடு சேர்ந்து கொண்டு காங்கிரசும் தர்க்க நியாயம் பேசுகிறது.

இந்திரா காந்தியின் அவசரநிலை காட்டாட்சியை முடிவுக்குக் கொண்டு வர அமெரிக்கா தலையிட்டதை ஆர்.எஸ்.எஸ். கும்பல் வரவேற்றிருக்கிறது. கார்கில் போரை முடிவுக்குக் கொண்டுவர கிளிண்டனோடு இரகசியப் பேச்சு வார்த்தை நடத்தினார் வாஜ்பாயி. இவையெல்லாம் சர்வதேசப் பிரச்சினைகளா?

இந்த உள்நாட்டு அளவுகோலை ஈராக் நாட்டிற்கும் ஆப்கானிஸ்தானுக்கும் பிரயோகித்தால் அமெரிக்கப் படைகளை அந்நாடுகளில் இருந்து வெளியேறச் சொல்ல வேண்டும். அந்த நாணயம் காங்கிரசு பா.ஜ.க. விடம் உண்டா?

அமெரிக்கா சதாமை சர்வாதிகாரி எனக் குற்றம் சாட்டியபொழுது “அதை ஈராக் மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும்; அதில் அமெரிக்கா தலையிடக் கூடாது” என மோடியோ அத்வானியோ எதிர்த்துப் பேசியதுண்டா? மாறாக “சதாமை நீங்கள் தண்டிக்க விரும்பினால் ஐ.நா.வின் ஒப்புதலோடு தண்டியுங்கள்” என்றுதான் அமெரிக்காவிடம் மன்றாடினார்கள்.

இன்றுள்ள உலகச் சூழலில் சில பிரச்சினைகளை உள்நாட்டு பிரச்சினைகள் என ஒதுக்கி விட முடியாது. தென்னப்பிரிக்காவில் நடந்த வெள்ளை இனவெறி அரசு கருப்பின மக்களுக்கு எதிராக நிறவெறிக் கொள்கையைக் கடைப்பிடித்த பொழுது அந்நாட்டை உலக நாடுகள் கண்டித்ததோடு அந்நாட்டோடு வர்த்தக அரசியல் உறவுகள் வைத்துக் கொள்ளாமல் புறக்கணித்தன. பாலஸ்தீன மக்களுக்குச் சொந்தமான பூமியை முழுமையாக ஆக்கிரமித்துக் கொள்ளும் நோக்கத்தோடு இசுரேல் கட்டிவரும் சுவரை இடித்துத் தள்ள வேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்திரவிட்டுள்ளது. போஸ்னியாவிலும் கொசாவாவிலும் முசுலீம்களை இனப்படுகொலை செய்த யுகோஸ்லாவியாவின் முன்னாள் அதிபர் அந்தக் குற்றங்களுக்காக சர்வதேச நீதிமன்றத்தால் விசாரிக்கப்படுகிறார்.

குஜராத்தில் நடந்த இனப்படுகொலை கூட சர்வதேச நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட வேண்டிய அளவிற்குக் கொடூரமானவைதான். இந்த இனப்படுகொலையின் தளபதியான மோடியை இந்தியச் சட்டங்கள் தண்டிக்க மறுக்கும் பொழுது அவனைத் தண்டிக்கக் கோரும் உரிமையை அமெரிக்க அரசிற்கு (அதனின் இரட்டை வேடம் காரணமாக) வேண்டுமானால் மறுக்கலாம். ஆனால் உலக மக்கள் அப்படிக் கோருவதைத் தடுக்கும் உரிமை யாருக்கும் கிடையாது. இன்று போர் குற்றவாளி ஜார்ஜ் புஷ்ஷைத் தண்டிக்கக் கோரி போராடும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மக்கள் நாளை மோடியையும் தண்டிக்கக் கோரி போராடினால் அதை நாம் வரவேற்கத்தான் வேண்டும்.

- முத்து

Friday, March 30, 2012

ராடாரின் பயன்களைப் பற்றி சற்று ஆராய்வோமா!

'தாவூதுக்கு நம் அருளை வழங்கினோம்.'மலைகளே! பறவைகளே! அவருடன் சேர்ந்து துதியுங்கள்' எனக் கூறினோம். போர்க் கவசங்களைச் செய்வீராக! அவற்றின் வளையங்களை ஒழுங்குபடுத்துவீராக!' எனக் கூறி அவருக்கு இரும்பை மென்மையாக்கினோம்.'
-குர்ஆன் 34:10,11

'அதை சுலைமானுக்கு விளங்க வைத்தோம். இருவருக்குமே அதிகாரத்தையும் கல்வியையும் வழங்கினோம். பறவைகளையும் மலைகளையும் தாவூதுக்கு வசப்படுத்திக் கொடுத்தோம். அவை இறைவனைத் துதித்தன. நாம் எதையும் செய்யக் கூடியவராவோம்'

-குர்ஆன் 21:79

'சுலைமானுக்கு காற்றை வசப்படுத்திக் கொடுத்தோம். அவரது கட்டளைப்படி அவர் நினைத்தவாறு பணிந்து அது சென்றது'

-குர்ஆன் 38:36

மேலே உள்ள வசனங்கள் இறைத் தூதர் சுலைமானுக்கும் இறைத் தூதர் தாவூதுக்கும் இறைவன் கொடுத்த சில சிறப்பியல்புகளை சொல்லிக் காட்டப்படுகிறது. இந்த வசனங்கள் நாம் தற்போது உபயோகத்தில் பயன்படுத்திக் கொண்டிருக்கும் மின் காந்த அலைகளின் முக்கியத்துவத்தை உணர்த்துவதாகப் படுகிறது. இது பற்றிய முழு உண்மையை இறைவனே அறிந்தவன். சூரா 34:10 ல் உபயோகப்படுத்தப்பட்டுள்ள 'அவ்விபி' என்ற அரபு வார்த்தையானது “திரும்பப் பெறப்படும் ஒலி” என்ற அர்த்தத்தைக் கொடுக்கும். இது தற்போது நமது பயன்பாட்டில் உள்ள ரேடாரின் தொழில் நுட்பத்தை ஒத்திருக்கிறது.

ரேடாரின் இயக்கம் என்பது ஒலி பிரதிபலிப்புக்கு நெருங்கிய தொடர்புடையது. உதாரணத்துக்கு ஒருவர் ஒரு பள்ளத்தாக்கிலோ அல்லது ஒரு குகையிலோ நின்று கொண்டு வேகமாக சப்தமிட்டால் அவருடைய ஒலியே அவருக்கு பிரதிபலிப்பாக திரும்ப வருவதை உணருவார். (படம் 1) (மனிதர்கள் உணர்ந்து கொள்ள இது மனிதக் காதல் அல்ல..அல்ல.. அதையும் தாண்டி புனிதமானது...புனிதமானது....:-)) இதிலிருந்து காற்றில் நமது ஒலியானது எவ்வாறு பயணிக்கிறது. எவ்வளவு தூரம் பயணிக்கிறது என்பதை துல்லியமாகக் கணக்கிட முடியும்.

ரேடாரின் தொழில் நுட்பத்தில் மின் காந்த அலைகளின் தொழில் நுட்பம் பயன்படுத்தப்படுவதாக நாம் முன்பு பார்த்தோம். ஒலியானது மைக்ரோவேவ் அதிர்வெண் சிக்னல்களால் உமிழப்பட்டு அவை திருப்பி அனுப்பப்படுகிறது. இத்தகைய சமிக்ஞைகளை நாம் எகோ(echo) என்கிறோம். ரேடார் சாதனமானது ஒளியின் அளவையும் அவற்றின் தூரத்தையும் கணக்கிட்டு எதிரொலிக்கும் வேலையை செய்து தருகிறது. (படம் 2)

ரேடாரின் அதிர்வெண்கள் உபயோகத்துக்குத் தக்கவாறு மாறுபடும் நோக்கில் அமைக்கப்பட்டுள்ளது. மின் காந்த ஆற்றல் வானொலி தொலைக்காட்சி என்று நமது தேவைக்குத் தக்கவாறு ரேடாரின் அதிர்வெண்களும் மாறுபடும். (படம் 2).

எகோவாக பிரதிபலிக்கும் ஒலிகள் எண்களாக மாற்றப்பட்டு ரேடார் ரிசீவர் மூலமாக டேட்டாவாக சேமிக்கப்படுகிறது. (படம் 3)

முடிவாக இந்த டேட்டாக்கள் படங்களாக மாற்றப்படுகிறது. (படம் 4)

குர்ஆன் 34:10ல் அரபி மொழியின் வினைச் சொல் 'அலென்னா' என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. அதன் அர்த்தமானது 'இணக்கமானதாக நாம் மாற்றுவோம்' என்ற பொருளில் வரும். குர்ஆனில் இங்கு தேர்ந்தெடுத்து இந்த வார்த்தையை இறைவன் பயன்படுத்தியிருக்கிறான். அதாவது கடினத் தன்மை உடைய இரும்பை இலகுவானதாக மாற்றித் தருகிறான். ரேடார் தொழில் நுட்பத்தில் மென்மைப்படுத்தப்பட்ட இரும்பையே நாம் உபயோகப்படுத்துகிறோம். (படம் 5)

“அவர் நினைத்தவாறு பணிந்து அது சென்றது'” என்று இறைத் தூதர் சாலமன் காற்றுக்கு கட்டளையிட்டது மின் காந்த சமிஞ்கைகளின் உதவியால் இருக்கலாம். இறைவனே இதன் முழு உண்மையையும் அறிந்தவன்.

ரேடாரின் உபயோகத்தை இன்று நாம் நிதர்சனமாக பார்த்து வருகிறோம். கோள்களின் அமைப்பு, பூமியின் அமைப்பு, ஒரு நாட்டின் அமைப்பு, ஒரு ஊரின் ஏன் ஒரு வீட்டின் அமைப்பையையே இன்று ரேடாரின் உதவி கொண்டு துல்லியமாக கணக்கிட்டு விடுகிறோம்.

'பின்னர் வானம் புகையாக இருந்தபோது அதை ஒழுங்குப் படுத்த நாடினான். விரும்பியோ விரும்பாமலோ நீங்கள் கட்டப்பட்டு நடக்க வேண்டும் என்று அதற்கும் பூமிக்கும் கட்டளையிட்டான். விரும்பியே கட்டுப்பட்டோம் என்று அவை கூறின.'
-குர்ஆன் 41:11,12

இது போன்ற வசனங்களை எல்லாம் நாம் பார்க்கும் போது எப்படி காற்றும், பூமியும் மலைகளும், பேச முடியும் என்ற கேள்வி எழலாம். இறைவனுடைய ஆற்றல் எப்படிப்பட்டது என்றோ அல்லது அவனது ஆற்றல் எதை எல்லாம் உள்ளடக்கியது என்றோ நம்மால் ஒருக்காலும் விளங்க முடியாததாகும். அவன் அனைத்து சார்பியல் நிலைகளையும் ஒப்பீடுகளையும் கடந்து தமக்குத் தாமே சம்பூரணமானவன். எனவே அவனது அறிவாற்றலுக்கு முன்னால் உயிருள்ளவை உயிரற்றவை என்ற பாகுபாடு கிடையாது.

மனிதர்களாகிய நாம் கூட உயிரற்ற பொருட்களுடன் கருத்துப் பரிமாற்றம் செய்வதைப் பார்க்கலாம். உதாரணத்திற்கு விண்வெளிக்கு செலுத்தப்படும் ராக்கெட்டை எடுத்துக் கொள்வோம். அதை விண்ணில் செலுத்தவதற்கும் அது விண்வெளியில் செய்யப்படக் கூடிய வேலைகளையும் நாம் பூமியில் இருந்து கொண்டே கட்டளைகளை அதற்கு பிறப்பிக்கிறோம். அவைகள் நமது கட்டளைகளை உடன் நிறைவேற்றுகின்றன. (சம்பள உயர்வு கேட்பதில்லை: வேலை நிறுத்தமும் செய்வதில்லை.:-)) இயக்கத்தில் சில குறைபாடுகள் இருந்தால் அதையும் சரி செய்ய சொல்லி அவை சமிக்ஞை தருகிறது. பொறியாளர்கள் சரி செய்தவுடன். அவை தங்களின் வேலைகளை சரி வர செய்கின்றன. இந்த பொருட்களுடன் நாம் உரையாட மனித மொழிகளை உபயோகிக்காமல் மின் அணு மொழியில் இயந்திரங்களோடு உரையாடுவதால் அவற்றின் வேலைகளை நம்மால் வாங்க முடிகிறது. எனவே உயிரற்ற பொருட்கள் விளங்கும் மொழியில் நமது பரிமாற்றம் இருந்தால் அத்தகைய அறிவு நமக்கு கொடுக்கப்பட்டிருந்தால் எவற்றுடனும் நம்மால் சம்பாஷனை நடத்த முடியும் என்று அறிகிறோம். அற்பனான மனிதன் ராக்கெட்டுகளோடு உரையாடும் போது நம்மை படைத்த இறைவன் மலைகளோடும், காற்றோடும் நதிகளோடும் உரையாட கருத்துப் பரிமாற்றம் செய்ய வல்லமை உடையவனே என்றும் நாம் நம்புகிறோம்.

1 http://rst.gsfc.nasa.gov/Sect8/Sect8_1.html
2 http://tr.wikipedia.org/wiki/Radar
3 http://tpub.com/neets/book11/46.htm
4 http://southport.jpl.nasa.gov/cdrom/sirced03/cdrom/DOCUMENT/
HTML/TEACHERS/MODULE02/MOD2SECB.HTM
5 http://physics.bu.edu/~duffy/PY106/MagMaterials.html

Monday, January 30, 2012

இரும்பின் அருமையை நாம் உணர்ந்தோமா?

இந்த பதிவை படிக்கும் முன் ஒரு விளக்கம். குர்ஆன் ஒரு அறிவியல் புத்தகம் அல்ல. அது மனிதன் எவ்வாறு தனது வாழ்வை அமைத்துக் கொள்ள வேண்டும் என்ற அறிவுரை அடங்கிய வேதம். இது இறைவனிடம் இருந்துதான் வந்ததா? அல்லது முகமது நபி தனது கற்பனையில் குர்ஆனைக் கொடுத்தாரா என்பதுதான் நமக்கு முன் உள்ள கேள்வி. முஸ்லிம்களை பொறுத்த வரையில் ஒரு பிரச்னையும் இல்லை. குர்ஆன் இறைவனின் வார்த்தைதான் என்பதில் எந்த சந்தேகமும் அவர்களிடத்தில் கிடையாது. மற்ற மதத்தவர் இந்த குர்ஆன் இறைவன் வாக்காக இருக்க முடியாது என்ற வாதத்தை வைக்கின்றனர். எனவே அந்த வாதத்தை எதிர் கொள்ள முஸ்லிம்களும் இது இறைவேதம்தான் என்பதை நிரூபிக்க சில அறிவியல் ஆதாரங்களை தர வேண்டிய நிர்பந்தம் உண்டாகிறது. அந்த வகையில் முன்பு கடலுக்கடியில் உள்ள இருள்களைப் பார்த்தோம். இந்த பதிவில் இரும்பைப் பற்றி குர்ஆன் என்ன சொல்கிறது. அதற்கு அறிவியல் அறிஞர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.

நமது தூதர்களைத் தெளிவான சான்றுகளுடன் அனுப்பினோம். அவர்களுடன் வேதத்தையும் மக்கள் நீதியை நிலை நாட்ட தராசையும் அருளினோம். இரும்பையும் இறக்கினோம். அதில் கடுமையான ஆற்றலும் மக்களுக்குப் பயன்களும் உள்ளன.
-குர்ஆன் 57:25

மேற்கண்ட இந்த வசனம் மிகச்சிறந்த ஒரு அறிவியல் உண்மையை நமக்கு கூறிக் கொண்டிருக்கிறது. ஆகாயத்திலிருந்து மழைநீர் பொழிவதாக நாம் பார்த்திருப்போம். இரும்பு வானத்திலிருந்து பொழிவதை நாம் பார்த்ததில்லை. ஆனால் திருக்குர்ஆன் ஏழாம் நூற்றாண்டிலேயே ஆகாயத்திலிருந்து இரும்பு மழை பொழிவதைக் கூறிக் கொண்டிருக்கிறது. பூமியின் மீது விண்கற்கள் வந்து விழுவதை நாம் அடிக்கடி பத்திரிக்கை வாயிலாக படித்திருப்போம்.

இந்த விண்கற்களின் பெரும் பகுதி இரும்பும் சிலிக்கனும் ஆகும்.
சிலிக்கன் என்ற பெயரையோ, அப்படி ஒரு உலோகம் இருப்பது பற்றியோ முகமது நபி காலத்தில் தெரிந்திராத போதிலும் அந்த மக்கள் இரும்பின் தேவையைப் பற்றி நிறைய அறிந்தே வைத்திருந்தார்கள். இரும்பு என்பது பூமியிலிருந்து கிடைக்கக் கூடிய ஒரு தாதுப் பொருள் என்பது நமக்கு தெரியும். தாதுப் பொருட்கள் என்பது பூமியின் கட்டுமானப் பொருட்களே! எனவே பூமி படைக்கப்பட்டபோது இரும்பும் அதோடு சேர்ந்து இறைவனால் படைக்கப்பட்டாகி விட்டது.அப்படி பூமி படைக்கப்படும் போது இரும்பு எவ்வாறு பூமியின் கட்டுமானத்தில் வந்திருக்க முடியும் என்பதை இந்த காணொளி விளக்குகிறது.