இரும்பு பற்றி சில புதிய தகவல்கள்!
'இரும்பையும் நாமே இறக்கினோம். அதில் மனிதர்களுக்கு பெரும் பயன்பாடுகளும் மிக்க வலிமைகளும் உண்டு' -குர்ஆன் 57:25
மேற்கண்ட இந்த வசனம் மிகச்சிறந்த ஒரு அறிவியல் உண்மையை நமக்கு கூறிக் கொண்டிருக்கிறது. ஆகாயத்திலிருந்து மழைநீர் பொழிவதாக நாம் பார்த்திருப்போம். இரும்பு வானத்திலிருந்து பொழிவதை நாம் பார்த்ததில்லை. ஆனால் திருக்குர்ஆன் ஏழாம் நூற்றாண்டிலேயே ஆகாயத்திலிருந்து இரும்பு மழை பொழிவதைக் கூறிக் கொண்டிருக்கிறது. பூமியின் மீது விண்கற்கள் வந்து விழுவதை நாம் அடிக்கடி பத்திரிக்கை வாயிலாக படித்திருப்போம்.
நாம் படத்தில் பார்க்கும் இந்த இரும்பானது மெக்ஸிகோவில் கண்டெடுக்கப்பட்டது. வானிலிருந்து பூமிக்கு இறங்கிய இந்த இரும்பானது உலகின் மிகப் பழமையானதாக கருதப்படுகிறது. இந்த விண்கற்களின் பெரும் பகுதி இரும்பும் சிலிக்கனும் ஆகும்.
சிலிக்கன் என்ற பெயரையோ, அப்படி ஒரு உலோகம் இருப்பது பற்றியோ முகமது நபி காலத்தில் தெரிந்திராத போதிலும் அந்த மக்கள் இரும்பின் தேவையைப் பற்றி நிறைய அறிந்தே வைத்திருந்தார்கள். இரும்பு என்பது பூமியிலிருந்து கிடைக்கக் கூடிய ஒரு தாதுப் பொருள் என்பது நமக்கு தெரியும். தாதுப் பொருட்கள் என்பது பூமியின் கட்டுமானப் பொருட்களே! எனவே பூமி படைக்கப்பட்டபோது இரும்பும் அதோடு சேர்ந்து இறைவனால் படைக்கப்பட்டாகி விட்டது. ஆனால் விண்ணிலிருந்து வரும் விண்கற்களில் உள்ள இரும்புக்கும் நாம் பயன்படுத்தும் இரும்புக்கும் சில வித்தியாசங்கள் இருக்கிறது.
நமது முன்னோர்கள் பயன்படுத்தி வந்த உலோகங்களை விஞ்ஞானிகள் சோதனைக்கு உட்படுத்தினார்கள். அந்த மக்களின் உலோகங்களில் கசடுகளான கோபால்டு, சிலிக்கன் போன்றவை இருப்பது கண்டு விஞ்ஞானிகள் ஆச்சரியம் அடைந்தனர். ஏனெனில் நாம் பயன்படுத்தும் சாதாரண இரும்புகளில் இந்த கசடுகள் சேர வாய்ப்பில்லை. விண்ணில் இருந்து விழுந்த கற்களைக் கொண்டே அந்த மக்கள் உலோகங்களை செய்திருப்பது ஆராய்ச்சியில் தெரிய வந்தது. எனவேதான் இறைவன் நாம் விண்ணிலிருந்து இறக்கினோம். அதில் மனிதர்களுக்கு பெரும் பயன்பாடும் மிக்க வலிமைகளும் உண்டு எனக் கூறுகிறான்.
இரும்பினால் பெரும் பயன்பாடுகள் மனிதனுக்கு உள்ளது என்று இறைவன் குறிப்பிட்டு ஏன் சொல்ல வேண்டும் என்பதை இனி பார்ப்போம்.
உலகின் மிகப் பிரபலமான உயிரியல் ஆய்வாளர் மைக்கேல் டென்டன் (Michael denton) தனது நூலான 'இயற்கையின் விதி' (natures destiny) என்ற நூலில் பின் வருமாறு கூறுகிறார்:
“இந்த உலகம் இரும்பில்லாமல் இயங்க முடியாது. இரும்பு இல்லாமல் காற்று மண்டலத்தின் செயல்பாடுகள் நடைபெறாது: இரும்பு இல்லாமல் புவியீர்ப்பு விசை செயல்பட முடியாது. புவியீர்ப்பு விசை கோள்களுக்குள் இல்லை என்றால் ஒட்டு மொத்த உலகமும் அழிந்து விடும். இரும்பு இல்லை என்றால் ஓசோன் படலமும் இல்லை. ஓசோன் படலம் இல்லை என்றால் மனிதன் பூமியில் வாழ சாத்தியமும் இல்லை.”
“மனித உடலின் ரத்தத்தில் உள்ள ஹீமோ குளோபின் இல்லை என்றால் மனிதனின் வாழ்வும் இல்லை. இந்த ஹீமோ குளோபின் முழுக்க உற்பத்தியாவது இரும்பிலிருந்தே.(ரத்த சோகை நோய் ஏற்படுவது ஹீமோ குளோபின் குறைவதால்தான்) ஆக சுருக்கமாக சொல்லப் போனால் இரும்பு இல்லை என்றால் இந்த உலகமே இல்லை. அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது இந்த இரும்பு.”
இந்த வார்த்தைகளானது உலகம் போற்றக் கூடிய ஒரு உயிரியல் அறிஞரின் வார்த்தைகளாகும். இந்த உண்மைகள் எல்லாம் இருபதாம் நுற்றாண்டின் ஆரம்ப காலங்களில்தான் கண்டு பிடிக்கப்படுகின்றன. ஆனால் இந்த இரும்பின் அருமையை குர்ஆன் மிகவும் சர்வ சாதாரணமாக சொல்லிச் செல்கிறது. எழுதப் படிக்கத் தெரியாத ஒரு நபர் தனது சொந்த கற்பனையினால் 1400 ஆண்டுகளுக்கு முன் இவ்வாறு கூற முடியுமா என்று சிந்திக்க நாம் கடமை பட்டுள்ளோம். இந்த குர்ஆன் நம்மைப் படைத்த இறைவனின் வார்த்தைகள் தான் என்பது இது பொன்ற வசனங்களின் மூலம் மேலும் உறுதியாகிறது.
தகவல் உதவி:
ஹாருன் யஹ்யா வலைத் தளம்
மைக்கேல் டென்டனின் 'இயற்கையின் விதி'
1 comment:
இந்து மதத்தின்படி பூமியில் தங்கம் வெள்ளி தோன்றிய உண்மை.
பண்டிதர் இஞ்சிக்கொல்லை, ஆர் சிவராம சாஸ்திரியார் அவர்களால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட “பாகவத தமிழ் வசனம்” என்னும் புத்தகத்தில் 8வது ஸ்கந்தம் 12வது அத்தியாயத்தில் “பரமசிவன் விஷ்ணுவின் மோகினி ரூபத்தைப் பார்க்க விரும்பியது” என்ற தலைப்பில் எழுதியிருப்பதை அப்படியே கூறுகிறேன்.
” மகாவிஷ்ணு மோகினி வேஷங்கொண்டு அசுரர்களை மோகிக்குபடிச் செய்து தேவர்களுக்கு அமிர்தத்தை கொடுத்தார் என்ற செய்தியைக் கேள்விப்பட்ட பரமசிவன் கைலாயத்திலிருந்து பார்வதியுடன் விஷ்ணுவிடம் வந்தார்.
சிவன், மகாவிஷ்ணுவின் மோகினி வடிவத்தைப் பார்க்க விரும்பி மோகினி வடிவை மீண்டும் எடுக்கும்படி மகாவிஷ்ணுவை வேண்டினார்.
அதைக் கேட்ட மகாவிஷ்ணு “அது அசுரர்களை ஏமாற்ற எடுத்த வேஷமானதால், அதைக் காண்பவர்களை மோகிக்கச் செய்யும் மன்மதனை அதிகப்படுத்தும் காமுகர்கள்தான் அதை தோத்திரம் செய்வார்கள்” என்று சொல்லி மறைந்து, ஒரு நந்தவனத்தில் பந்தாடிக் கொண்டிருக்கும் அழகிய பெண்ணாகத் தோன்றினார்.
சிவனும்,பார்வதியும் நான்கு புறமும் விஷ்ணுவைத் தேடிப் பார்த்துக் காணாமையால் நந்தவனத்திற்குச் சென்றனர். அங்கு ஒரு பெண் விளையாடிக் கொண்டிருப்பதைப் பார்த்தனர். சிவன் புத்தி கலங்கி பார்வதியும், சிவகணங்களும் பக்கத்தில் இருப்பதைக்கூட நினைக்காமல் அவள் மீது மோகங்கொண்டார்.
மோகினி வேஷத்துடன் இருந்த பெண் பந்தடிக்கும் கவனத்தில் தனது ஆடையை (சேலையை) நழுவவிட்டாள். அதைப்பார்த்த பரமசிவனுக்குக் காமம் அதிகரித்துவிட்டது. பார்வதி பார்க்கிறாளே என்ற வெட்கங்கூட இல்லாமல் மோகினிக்கு அருகில் சென்றார் சிவன்.
மோகினி ஒரு மரத்தடியில் மறைந்து கொண்டாள். சிவன் ஓடோடி அவளைப் பிடித்தான். அவள் திமிறக்கொண்டு வேகமாக ஓடினாள்.
சிவன் வேகமாக ஓடி அவள் மயிரைப் பிடித்து இழுத்து இரு கைகளால் ஆலிங்கணம் செய்துகொண்டு பலவந்தம் செய்தான்.
அவள் அவிழ்ந்த தலைமயிருடன் ஆடையின்றி சிவனிடமிருந்து நழுவி ஓட்ட்மெடுத்தாள்.
சிவன் புத்தியிழந்து, காமங்கொண்ட ஆண் யாணையின் விந்து கீழே சிந்துவதுபோல், தன்னுடைய விந்தை நிலத்தில் சிந்தவிட்டுக்கொண்டே பின்னே ஓடினான்.
சிவனுக்கு விந்து வெளிப்பட்டவுடன், மோகினி வடிவில் இருந்த மகாவிஷ்ணு மறைந்தார். சிவன் ஏமாந்துவிட்டான்.
சிவனின் இந்திரியம் நிலத்தில் எங்கெங்கு விழுந்ததோ அந்த இடமெல்லாம் தங்கம், வெள்ளி விளையும் சுரங்கங்கள் ஆகிவிட்டனவாம்!
அந்த விந்து எங்கெங்கு காடுகளிலும், மலைகளிலும், நதிகளிலும், குளங்களிலும் விழுந்ததோ அங்கெல்லாம் சிவனின் சன்னித்தனம் விளங்குகிறது. மகரிஷிகளும், தேவர்களும் அங்கு விளங்குகிறார்களாம்!
Post a Comment