Followers

Wednesday, October 02, 2013

மோடியும் மஹாத்மா காந்தியும் சந்தித்துக் கொண்டால்....



என்னைக் கொன்று விட்டு

எனக்கே மாலையா!

குஜராத்தை குதறி விட்டு

நாட்டுக்கே சவாலா!

என்கவுண்டர் செய்து விட்டு

எங்கும் எகத்தாளமா!

இத்தனையும் செய்து விட்டு பிரதமர் கனவா..

வெட்கம என்ற ஒன்று உண்டா உனக்கு...



இதே சுப்ரீம் கோர்ட் உன்னை

நீரோ வுக்கு ஒப்பிடவில்லையா!

ரஷீத் மசூதும் லல்லு பிரசாத்தும்

இன்று சிறைக் கொட்டகையில்!

எனது நாட்டு சட்டம் தாமதமானாலும்

என்றாவது கொடியவர்களை பிடித்து விடும்...

கொடியவனே! நீயும் உனது கூட்டமும்

இதே சிறைக் கொட்டகையில்

அடைபடும் நாள்தான் எனக்கு ஜெயந்தி!

அது வரை என் அருகில் வராதே!

நீ எனக்கு போடுவது மாலையா!

அல்லது தூக்கு கயிறா! மறக்காமல்

சொல்லி விடு உடனே! ஏனெனில்

எனது தாய் நாட்டுக்காக

இரு முறை என்னால் சாக முடியாது....

3 comments:

Anonymous said...

அத்வானியும் நானும் சட்டைகிழியும் அளவிற்கு அடித்துக்கொள்வோம். அதில் மற்றகட்சிகள் தலையிடகூடாது. ஆனால் ராகுல் காந்திக்கும் மன்மோகன் சிங்கிற்கும் இடையே ஏதாவது பிரச்சனை என்றால் ராகுலை மன்னிப்பு கேட்க சொல்வோம்.

இவண்,
நவீன அரசியல பவர்ஸ்டார் "கேடி " பேரவை....

நன்றி:ஜெஹபர் சாதிக்

Anonymous said...

padathai parthal Gandhikku malai poduvathu pol illaiye kaluthai nerippathu pola irukkirathu.

Anonymous said...

‘’ ஆர்.எஸ்.எஸ் காரர்கள் பற்றி எனக்குத் தெரியும். அவர்களுக்கு ஒரு கொள்கையுண்டு. பிரிட்டிஷார், பேஷ்வா பார்ப்பனர்களிடமிருந்து தான் ஆட்சியைப் பிடித்தனர். எனவே, பிரிட்டிஷார் இந்தியாவை விட்டு வெளியேறும் போது ஆட்சி மீண்டும் பேஷ்வா பார்ப்பனர்களிடம் திருப்பித் தரப்பட வேண்டும் என்பதே அவர்களின் கொள்கை. ஆனால் பேஷ்வா பார்ப்பனர் ராஜ்ஜியம் அமைப்பதாகக் கூறி, மக்கள் ஆதரவைப் பெற முடியாது. எனவே தான் அவர்கள் ஏற்கனவே கூறி வந்த முழக்கங்களை மாற்றிக் கொண்டு ‘’பார்ப்பன ராஜ்ஜியம்’’ என்பதற்கு பதிலாக ‘’இந்து ராஷ்டிரம்’’ என்று சொல்ல ஆரம்பித்தனர்..!’’

மறைந்த சோசலிஸ்ட் தலைவர் ராஜ் நாராயணன்,
சண்டே வார ஏடு. ஜூன் 2, 1979.