

சத்தீஸ்கர் மாநிலத்தின் பஸ்தார் மாவட்ட ஆட்சியர் அமித் கட்டாரியாவுக்கு அம்மாநில அரசு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
மே, 9-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி சத்தீஸ்கர் மாநிலத்துக்கு பயணம் மேற்கொண்டார், அப்போது பஸ்தார் மாவட்டம் சென்ற பிரதமரை வரவேற்ற மாவட்ட ஆட்சியர் அமித் கட்டாரியா, முறையான உடைகளை அணியாமலும், கூலிங் கிளாஸ் அணிந்து கொண்டே பிரதமருக்கு கை கொடுத்து வரவேற்றதாகவும் சத்தீஸ்கர் மாநில அரசு அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அந்த நோட்டீஸில், “பஸ்தார் மாவட்ட ஆட்சியராக நீங்கள் அன்று பிரதமரை ஜக்தால்பூரில் வரவேற்றீர்கள். ஆனால், நீங்கள் முறையான உடைகளை அணியவில்லை என்பதை அரசு கவனத்தில் கொண்டதோடு, கூலிங் கிளாஸ் அணிந்தபடியே அவரை வரவேற்றுள்ளீர்கள்.
எனவே, இத்தகைய தவறான அணுகுமுறையை இனி கடைபிடிக்க வேண்டாம் என்று மாநில அரசு உங்களை எச்சரிக்கிறது. நீங்கள் செய்தது அரசு ஊழியருக்குரிய நடத்தை விதிகளுக்கு புறம்பாக அமைந்துள்ளது.
அரசு ஊழியர்கள், குறிப்பாக சேவைத்துறையில் பணியாற்றுபவர்கள் நேர்மையையும், கடமை உணர்வையும் பராமரிப்பது அவசியம்” என்று அந்த நோட்டீஸில் கூறப்பட்டுள்ளது.
இது குறித்து கட்டாரியாவை தொடர்பு கொள்ள தி இந்து (ஆங்கிலம்) முயன்ற போது அவர் பதில் அளிக்கவில்லை.
தமிழ் இந்து நாளிதழ்
15-05-2015
மோடியை பொருத்தவரை ஐந்து ஆண்டு ஆட்சிக்கு பிறகு எந்த அதிகாரமும் அற்றவராக இருப்பார். வசிக்கும் வீட்டையும் காலி செய்ய வேண்டும். சந்தர்ப்ப வசத்தால் பிரதமரானவர்.
ஆனால் ஒரு மாவட்ட ஆட்சியர் சிரமமான ஐஏஎஸ் தேர்வு எழுதி பல திறமைகளுக்கு பிறகு மாவட்ட ஆட்சியராக பொருப்பு கொடுக்கப்படுபவர். ஓய்வு காலம் வரை அதே அதிகார வேலையில் தனது பணியை தொடருபவர். இவ்வாறிருக்க எந்த வகையில் மோடிக்கு அந்த மாவட்ட ஆட்சியர் தகுதியில் குறைந்து விட்டார். கூலிங் கிளாஸ் அணிவது அவ்வளவு பெரிய தவறா?
கூத்தாடி சல்மான் கான் என்னவொரு திமிரில் அமர்ந்து சாப்பிடுவதை பாருங்கள். ஒரு கூத்தாடிக்கு கொடுக்கும் மதிப்பையாவது படித்த மாவட்ட கலெக்டருக்கு கொடுக்கக் கூடாதா?
கோமாளிகளின் ஆட்சி.... வேறு என்ன சொல்ல....
No comments:
Post a Comment