Followers

Sunday, November 04, 2012

தீபாவளி இலக்கு 125 கோடி! தமிழக அரசின் முன்னேற்றம்!

தீபாவளி இலக்கு 125 கோடி! தமிழக அரசின் முன்னேற்றம்!



அரசை எதற்கெடுத்தாலும் குறை சொல்லி வருகிறோம். மின்சார பற்றாகுறையை பற்றி குறை படாத தமிழர்களே இல்லை எனலாம். அதை எல்லாம் சரி கட்டும் விதமாக தடையற்ற சாராயத்தை தனது மக்களுக்கு தந்து ஒரு அரசு செய்ய வேண்டிய கடமையை எவ்வளவு அழகாக செய்கிறது பார்த்தீர்களா? தீபாவளிப் பண்டிகைக்கு 125 கோடி இலக்கு வைத்திருக்கிறார்களாம்.


(ஐரோப்பிய குடிகாரன்)

கடந்த, 2003ல், 3,250 கோடியாக இருந்த மது விற்பனை, 2011 - 12ம் நிதி ஆண்டில், 20 ஆயிரத்து 180 கோடியாக உயர்ந்தது. நடப்பு, 2012 - 13ம் நிதியாண்டுக்கு, 23 ஆயிரம் கோடியாக இலக்கு நிர்ணயிக்கப் பட்டுள்ளது. இந்த இலக்கை பூர்த்தி செய்யும் வகையில், அ.தி.மு.க., அரசு பொறுப்பேற்ற, ஒன்றரை ஆண்டுகளில், மூன்று முறை மதுபானங்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. எவ்வளவு ஏற்றினாலும் நாங்கள் குடிப்பதில் மட்டும் எந்த குறையும் வைக்க மாட்டோம் என்று தளராத உறுதியோடு அரசுக்கு வருமானத்தை மேலும் மேலும் அதிகரிக்கின்றனர் குடிகாரர்கள். தங்களின் உடலையும் இழந்து தங்கள் குடும்பத்தையும் நிர்க்கதியில் விடும் இவர்கள் திருந்துவது எப்போது? இதற்கு அரசு துணை போகலாமா?

"டாஸ்மாக்' கடைகளின் தினசரி விற்பனை, 72.25 கோடியாகவும், ஞாயிறு, விசேஷ தினங்களில் விற்பனை, 85 கோடியாகவும் உள்ளது. செப்டம்பர், 10ம் தேதி, "டாஸ்மாக்' மதுபானங்களின் விலை உயர்த்தப்பட்டது.இந்த உயர்வுக்கு பின், "டாஸ்மாக்' விற்பனையில் உயர்வு ஏற்படும் என, எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அக்டோபர் மாத மது விற்பனை, எதிர்பார்க்கப்பட்ட, 2,250 கோடிக்குப் பதில், 2,000கோடியாக சரிந்துள்ளது. அடடா...வருமானம் போச்சே...என்ன செய்வது?

இதை சரிக்கட்ட, மதுபான கடைகளுக்கு, தற்போது 40 சதவீத கூடுதல் சரக்குகள் அனுப்பப்பட்டு வருகிறது. தமிழகத்தில் செயல்படும், 14 "டாஸ்மாக்' குடோன்களிலும் சரக்குகளை இறக்க முடியாமல், ஒவ்வொரு குடோன்களிலும், 50க்கும் மேற்பட்ட லாரிகள் காத்து நிற்கின்றனவாம்.

கடைகளின் விற்பனையை கருத்தில் கொண்டு, ஒவ்வொரு கடைக்கும், 30 முதல், 40 சதவீதம் வரையில் அதிகமாக சரக்குகள் அனுப்பி வைக்கப்படுகின்றன. இதனால், கடைகள், பார்கள் சரக்கு பெட்டிகளால் நிரம்பி வழிகின்றன. ஒரு அரசு செய்யும் செயலா இது? குடியினால் வரும் இந்த பணத்தை வைத்து 10 வகைக்கும் மேலாக குழந்தைகளுக்கு சத்துணவு போடப் போகிறதாம் அம்மா! தகப்பனை படுகுழியில் தள்ளி விட்டு குழந்தைக்கு சத்துணவு கொடுத்து என்ன புண்ணியம்? இவ்வாறு இலக்கு வைத்ததனால் இனி அதிகாரிகள் வீடு வீடாக 'சாராயம் வாங்கல்லயோ சாராயம்' என்று கூவினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

சாராயத்தை திறந்து விட்ட கலைஞர்: அந்த சாராயத்தை லாபகராமாக மாற்றி பீடு நடை போடும் அதிமுக: அந்த சாராயத்தையே உள்ளே இறக்கி விட்டு பொது இடத்துக்கு வரும் கேப்டன்: என்று எவருமே இந்த விஷயத்தில் சளைத்தவரில்லை என்பதை பறை சாற்றுகின்றனர். இதற்கு மக்கள்தான் ஏதாவது ஒரு தீர்க்கமான முடிவை எடுக்க வேண்டும்.

மதுரை அரசு மருத்துவமனை மதுபோதை மறுவாழ்வு மையத்தில், 2011ம் ஆண்டில் 273 பேர் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டனர். இந்தாண்டு ஆகஸ்ட் வரை, 204 பேர் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்தாண்டை விட, இந்த ஆண்டு அதிகம். இதுதவிர தினமும் 50 பேர் வெளிநோயாளிகளாக சிகிச்சை பெறுகின்றனர். இதுதான் நம்மை ஆளும் அரசுகளால் கண்ட பலன்!

------------------------------------------------------------


ஒரு பக்கம் கட்டற்ற சாராயம்: மறு பக்கம் தடையற்ற சினிமா:

இறைவா!.....தமிழகத்தை நீ தான் காப்பாற்ற வேண்டும்.

-------------------------------------------

14 comments:

T.Thenmathuran said...

அப்படியே எப்படி சாராயம் விக்காம அரசாங்கத்தை நடத்துறதுன்னு மோடியிட்ட கேட்டுச் சொல்றது தானே...நான் லலித் மோடியச் சொல்லல...:)

ராஜகிரி ஹாஜா மைதீன் (அபு நிஹான்) said...

அண்ணே ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி ஆளவே ஆள் இல்லாத கட்சின்னு எல்லா கட்சியையும் காச்சி எடுத்துருக்கீங்க :)

Unknown said...

சலாம் சகோ.சுவனப்பிரியன்

போச்சி..குடியப்பத்தி பதிவு போட்டுட்டீங்க !!! இனி மறுபடியும் பதிவுலகத்தில சண்டை நடக்க போகுது..

என்னது ரஜினி காந்தியா...??? காந்திக்கும் ரஜினிக்கும் ஒரு ஒற்றுமையாவது காட்ட முடியுமா ???

ஏன் இல்ல ..ஒரே ஒரு ஒற்றுமை மட்டும் உண்டு...ரெண்டு பேருக்குமே தலைக்கு மேல முடி கெடையாது...மற்றபடி ,

காந்தி மகாத்மா !!!
ரஜினி மகா மோசமான ஆத்மா.!!!

நன்றி !!!

suvanappiriyan said...

சகோ ஹாஜாமைதீன்!

//அண்ணே ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி ஆளவே ஆள் இல்லாத கட்சின்னு எல்லா கட்சியையும் காச்சி எடுத்துருக்கீங்க :)//

எல்லாமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்.

suvanappiriyan said...

திரு தேன் மதுரன்!

//அப்படியே எப்படி சாராயம் விக்காம அரசாங்கத்தை நடத்துறதுன்னு மோடியிட்ட கேட்டுச் சொல்றது தானே...நான் லலித் மோடியச் சொல்லல...:)//

நீங்களும் இந்த நாட்டு பிரஜைதானே! நீங்க ஐடியா கொடுக்கறது.....

suvanappiriyan said...

சலாம் சகோ நாகூர் மீரான்!

//போச்சி..குடியப்பத்தி பதிவு போட்டுட்டீங்க !!! இனி மறுபடியும் பதிவுலகத்தில சண்டை நடக்க போகுது..//

யாரையும் பெயர் குறிப்பிடாமல் சமூக அக்கறையில் எழுந்த பதிவு இது. எனவே இதில் பிரச்னை வர வாய்ப்பில்லை.

///ஏன் இல்ல ..ஒரே ஒரு ஒற்றுமை மட்டும் உண்டு...ரெண்டு பேருக்குமே தலைக்கு மேல முடி கெடையாது...மற்றபடி ,///

ஹா..ஹா...


suvanappiriyan said...

திரு ராபின்சன்!

//தங்கள் அருமையான பதிவுகளை தமிழன் திரட்டியிலும் (www.tamiln.org) இணையுங்கள்.//

முயற்சிக்கிறேன் நண்பரே!

NKS.ஹாஜா மைதீன் said...

ஒரு அரசு இதற்கு எல்லாமா இலக்கு நிர்ணயிக்கும்...தூ.....

suvanappiriyan said...

சகோ ஹாஜா மைதீன்!

//ஒரு அரசு இதற்கு எல்லாமா இலக்கு நிர்ணயிக்கும்...தூ.....//

வருங்காலத்தில் தங்களின் இலக்கை அடைய அதிகாரிகள் சாராய பாட்டில்களை வீடுகள் தோறும் வந்து விநியோகித்தாலும் ஆச்சிரியப்படுவதற்கிலலை.

UNMAIKAL said...

மின்வெட்டு.. ஜெயலலிதாவிடம் ராமதாஸ் கேட்கும் 10 'நச்' கேள்விகள்!

Updated: Monday, November 5, 2012, 15:18 [IST]

சென்னை: தமிழகத்தில் நிலவும் கடும் மின் பற்றாக்குறை குறித்து முதல்வர் ஜெயலலிதாவுக்கு 10 கேள்விகளை கேட்டுள்ளார் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்.

மேலும் தமிழ்நாட்டில் நிலவும் மின்வெட்டை ஆட்சிக்கு வந்த 3 மாதங்களில் போக்குவதாக ஒரு போதும் கூறவில்லை என்று மறுக்கும் ஜெயலலிதா, அவ்வாறு கூறியதை ஆதாரங்களுடன் நிரூபித்தால் அரசியலில் இந்து விலகத் தயாரா? என்றும் கேட்டுள்ளார்.

ராமதாஸ் கேட்டுள்ள 10 கேள்விகள் இதோ...

மின்வெட்டு நீங்குவதற்கு பதில் அதிகரித்திருக்கிறதே ஏன்?

1. தமிழக சட்டப்பேரவையில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் பேசிய முதல்வர், 2011ம் ஆண்டு ஜூலை மாதம் முதல் தமிழ்நாட்டில் அறிவிக்கபடாத மின்வெட்டே இருக்காது என்றும், சென்னை தவிர்த்த பிற மாவட்டங்களில் மின்வெட்டு நேரம் 2 மணியாக குறைக்கப்படும் என்றார்.

ஆனால் தற்போது ஒன்றரை ஆண்டாகி விட்ட நிலையில் அறிவிக்கப்படாத மின்வெட்டு நீங்குவதற்கு பதில் அதிகரித்திருக்கிறதே ஏன்?

ஒரு மெகாவாட் கூட கூடுதலாக உற்பத்தி செய்யப்படவில்லையே ஏன்?

2. 2012ம் ஆண்டு பிப்ரவரி மாதம் சட்டபேரவையில் பேசிய முதல்வர், 2012ம் ஆண்டு அக்டோபர் மாதத்திற்குள் 5 மின்திட்டங்கள் செயல்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டு 2,550 மெகாவாட் மின்சாரம் கூடுதலாக உற்பத்தி செய்யப்பட்டு மின்தடை நீக்கப்படும் என்று கூறினார்.

ஆனால் இன்று வரை ஒரு மெகாவாட் மின்சாரம் கூட கூடுதலாக உற்பத்தி செய்யப்படவில்லையே ஏன்?

முன்னுக்குபின் முரணாக பேசுவது ஏன்?

3. மின் திட்டங்கள் செயல்படுவது குறித்து முதல்வர் முன்னுக்குபின் முரணாக பேசுவது ஏன்?

4. மேட்டூர் அனல் மின்திட்டத்தின் பணிகள் முடிவடைந்துவிட்டதால் கடந்த மார்ச் மாதம் மின் உற்பத்தி தொடங்கப்படும் என்று ஏற்கனவே உறுதி அளித்திருந்த முதல்வர், இப்போது அடுத்த மாதம் தான் அங்கு உற்பத்தி தொடங்கும் என்று கூறுவது ஏன்?

ஜெயலலிதாவால் நிரூபிக்க முடியுமா?

5. தமிழ்நாட்டில் அறிவிக்கப்படாத மின்வெட்டை நடைமுறைப்படுத்தக் கூடாது.

இருக்கும் மின்சாரத்தை அனைத்து மாவட்டங்களுக்கும் சமமாக பகிர்ந்து அளிக்க வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்றம் ஆணையிட்டும் அதை செயல்படுத்த மறுப்பது ஏன்?

6. தமிழ்நாட்டில் சிறுதொழிற்சாலைகள் நிறைந்த பகுதிகளில் தொடர்ச்சியாக குறைந்தது 4 மணி நேரம் மின்சாரமும், காவிரி பாசன மாவட்டங்களில் விவசாயத்துக்கு தினமும் 12 மணி நேரம் வரை மின்சாரம் வழங்கப்படுவதாக கூறியிருக்கும் முதல்வரால் அதனை நிரூபிக்க முடியுமா?

58 கடிதம் எழுதிய ஜெ. மின் பிரச்சனைக்கு ஒரு கடிதமும் எழுதாதது ஏன்?

7. சிறு தொழிற்சாலைகளுக்கு 4 மணி நேரம் தொடர்ச்சியாக மின்சாரம் வழங்குவதை சாதனையாக கூறும் முதலமைச்சர் பன்னாட்டு நிறுவனங்களுக்கு தொடர்ச்சியாக எத்தனை மணி நேரம் மின்சாரம் வழக்கபடுகிறது என்பதை வெளிப்படையாக அறிவிக்கத் தயாரா?

8. தமிழ்நாட்டில் செயல்பட்டுவரும் மின்நிலையங்களுக்கு தேவையான நிலக்கரியை மத்திய அரசு வழங்குவதில்லை என்று குற்றம்சாட்டும் முதல்வர்,

இதை சரிசெய்ய எடுத்த நடவடிக்கைகள் என்ன?

பிரதமருக்கு இதுவரை 58 முறை கடிதம் எழுதியுள்ள முதலமைச்சர் இந்த பிரச்சனைக்காக இதுவரை ஒரு கடிதம் கூட எழுதாதது ஏன்?

ஜெயலலிதா அரசியலில் இருந்து விலகத் தயாரா?

9. மின்திட்டங்களை செயல்படுத்துவதிலும், மின்சாரத்தை தமிழகத்திற்கு கொண்டு வருவதிலும் மத்திய அரசு தமிழகத்தை வஞ்சிப்பதாக கூறும் ஜெயலலிதா, தமிழகத்திலுள்ள அரசியல் கட்சிகளையும், மக்களையும் திரட்டி தமிழகத்தின் உரிமைகளைப் பெறுவதற்காக மத்திய அரசை எதிர்த்து போராட்டம் நடத்தாதது ஏன்?

10. தமிழ்நாட்டில் நிலவும் மின்வெட்டை ஆட்சிக்கு வந்த 3 மாதங்களில் போக்குவதாக ஒரு போதும் கூறவில்லை என்று மறுக்கும் முதலமைச்சர், அவ்வாறு கூறியதை ஆதாரங்களுடன் நிரூபித்தால் அரசியலில் இந்து விலகத் தயாரா?.

SOURCE: THATSTAMIL

suvanappiriyan said...

சகோ உண்மைகள்!

10 கேள்விகளை பகிர்ந்திருக்கிறீர்கள். இதற்கெல்லாம் ஆளும் கட்சியிடம் இருந்து பதில் வரும் என்று ராமதாஸே எதிர்பார்க்க மாட்டார். இருந்தாலும் மக்கள் தெரிந்து கொள்ளட்டும் என்ற ரீதியில் தாங்கள் பகிர்ந்துள்ளீர்கள்.

வருகைக்கும் கருத்தை பதிந்தமைக்கும் நன்றி!

suvanappiriyan said...

Kalaiy Arasan
Yesterday 8:33 PM - Limited

//இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி தற்பொழுது பின்னடைவை சந்தித்து வருகின்றது. சனத்தொகையில் நாற்பது வயதுக்கும் குறைவான இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இவர்களுக்காக அரசு கோடிக்கணக்கான வேலை வாய்ப்புகளை உருவாக்கித் தர வேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ளது. உயர்கல்வி கற்றால் வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கை போய்விட்டது. வேலையற்ற பட்டதாரிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. இந்தியாவில் யாரும் தன்னை வேலையற்றவர் என்று பதிந்து கொள்வதில்லை. இளைஞர்கள் பெற்றோரின் வீட்டில் தங்கியிருந்து கொண்டே, கிடைக்கும் சில்லறை வேலைகளை செய்து கொண்டிருக்கின்றனர். இதனால், அரசு உத்தியோகபூர்வமாக காட்டும் கணக்கை விட அதிகளவு மக்கள் வேலை வாய்ப்பில்லாமல் இருக்கின்றனர். கிரீஸ், ஸ்பெயின் போன்ற நாடுகளில் நடப்பதைப் போன்ற போராட்டங்கள், இந்தியாவில் நடக்கும் காலம் வெகுதூரத்தில் இல்லை. எனக்கும் விலை கூடிய பாவனைப் பொருள் வேண்டும் என்ற ஆசையில் ஆரம்பிக்கும் சிறு களவு, லண்டன் கலவரம் போன்று கடைகளை உடைத்து சூறையாடும் அளவுக்கு செல்லலாம். இந்தியா ஒரு நேர வெடிகுண்டின் மேல் அமர்ந்திருக்கிறது.//

(De Groene Amsterdammer, Nummer 44/31-10-2012)

suvanappiriyan said...

பங்களாதேசை சேர்ந்த ஒருவர் மக்காவின் தெருவை கூட்டி சுத்தம் செய்துவரும் நகராட்சியில் கூலி வேலையை செய்து வந்துள்ளார். சில தினங்களுக்கு முன் அவ்வாறு ரோட்டில் நின்று சுத்தம் செய்து கொண்டிருக்கும் போது, இஹ்ராம் அணிந்த நிலையில் உள்ள முதியவர் ஒருவர், திடீரெண்டு தன்னை கட்டி ஆரத்தழுவி தன்னை மன்னித்துவிடும்படி கண்ணீர்விட்டு அழுததை கண்ட அந்த கூலித் தொழிலாளி அதிர்ந்தேவிட்டார்...! ஆம். அதற்கான காரணம் அந்த முதியவர் வேறு யாரும் அல்ல..! தன் உடன் பிறந்த சகோதரர்தான் அந்த முதியவர்.


கடந்த ஐந்து வருடங்களுக்கு முன் தமக்கிடையே ஏற்பட்ட சொத்து தகராறில், தன் தம்பிக்கு சேரவேண்டிய பங்கினை தராமலும், பங்கை கேட்கும் போதெல்லாம் தன்னை சிறைக்கு தள்ளிய அந்த கொடூர சகோதரர்தான், தற்போது புனித மக்காநகரில் தன்னை கட்டித்தழுவி மன்னிக்கும்படி மன்றாடிய அந்த முதியவர் ஆவார்.

மேலும் இந்த இரு சகோதரர்கள் ஒன்றும் பொருளாதாரத்தில் சாதாரண நிலையில் உள்ளவர்களும் அல்ல. பொருளாதாரத்தில் மிக வலிமையான குடும்பத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள். இவர்களின் கைவசம் இருக்கும் ரொக்கம் மட்டுமே இந்திய ரூபாயில் சுமார் 25 கோடிக்கும் மேல். இது அல்லாமல் பல சொத்துக்களுக்கும் சொந்தக்காரர்கள் ஆவார்கள். இப்படிப்பட்ட நிலையில் வாழ்ந்த இந்த இளைய சகோதரர்தான் இன்று மக்கா நகரில் சில நூறு ரியால் சம்பளத்திற்காக தெருக்களை கூட்டி சுத்தம் செய்யும் தொழிலை செய்து வந்துள்ளார். தன் மூத்த சகோதரர் தனக்கு செய்த தவறினால் சவூதி சென்று பிழைப்பு நடத்தி வந்துள்ளார்.

கடந்த ஐந்து வருடத்திற்கு முன், மூத்த சகோதரர் தன்தம்பிக்கு, தான் செய்த தவறை நினைத்து வருந்தி தன் தம்பியை தேடி பல இடங்களுக்கும் அலைந்துள்ளார். காண்போரிடம் எல்லாம் தன் தம்பியை கண்டுபிடித்து தந்தால் தக்க சன்மானம் வழங்குவதாகவும் தெரிவுத்துள்ளார். இந்த நிலையில், இந்த வருடம் புனித ஹஜ் சென்றபோதுதான் மக்கா நகரின் தெருவில் ஏதேச்சையாக தன் சகோதரரை கண்டு ஆரத்தழுவி உள்ளார். தன்னை மன்னிக்கும்படியும் மன்றாடியுள்ளார். தற்போது தான் புற்று நோயால் (கேன்சர்) அவதிபடுவதாகவும், இன்னும் எத்தனை காலம் இந்த உலகில் தான் வாழப்போகிரேனோ தெரியவில்லை என்றும், உடனே ஊருக்கு திரும்பும்படியும், தன் தம்பிக்கு சேரவேண்டிய அனைத்து பங்கினையும் தருவதாகவும் உறுதியளித்துள்ளார்.

தம்பியும் தன் சகோதரர் தனக்கு செய்த அனைத்து பாவங்களையும் மன்னித்து விட்டதாகவும், சகோதரருடன் ஊருக்கு திரும்பவும் சம்மதித்துள்ளார். மேலும் தனக்கு தம் சகோதரர் செய்த அனைத்து தீமைகளையும் மன்னித்துவிட்டு ஊர் சென்று புதுவாழ்வு தொடங்க உள்ளதாகவும், தான் எப்போதும் ஏழைகளிடமும், தேவை உள்ளோரிடமும் இரக்கம் காட்டுவதாகவும், அவர்களுக்கு உதவி செய்யப் போவதாகவும், கடந்த ஐந்து ஆண்டுகளில் ஏழ்மை என்றால் என்ன என்ற பாடத்தை தான் கற்றுக்கொண்டதாகவும், கோடிஸ்வரனாக இருந்து குப்பை பொறுக்கி தற்போது மீண்டும் கோடிஸ்வரனாக மாறியுள்ள அந்த சகோதரர் கூறியுள்ளார்.

பொறுமையாளர்களுடன் அல்லாஹ் இருக்கின்றான் என்ற வசனத்திற்கு இந்த நிகழ்வை ஆதாரமாகவும், தான் செய்த நல்ல அமல்கள் மட்டுமே தன் மரணத்திற்கு பின் வரும் தாங்கள் சேர்த்து வைத்த சொத்துக்கள் அல்ல என்ற உண்மையையும் பிரிந்த அந்த சகோதரர்களை இணைத்து வைத்து அல்லாஹ் இந்த ஹஜ்ஜின் மூலம் நிலைநாட்டியுள்ளான்.

ஏற்றுக்கொள்ளப்பட்ட ஹஜ்ஜின் மூலம் அன்று பிறந்த பாலகன் போல் தான் திருப்ப வேண்டும் என்று மூத்த சகோதரரின் நினைப்பிற்கும், தனக்கு அநீதி இழைக்கப்பட்ட காரணத்தினால் கடும் வெயிலில் நின்று தெரு கூட்டி பிழைத்தாலும், மன்னிப்பைவிட இந்த உலகில் சிறந்த பண்பு வேறொன்றும் இல்லை என்ற இளைய சகோதரரின் நடத்தைக்கும் அல்லாஹ் அவர்களுக்கு சிறந்த வாழ்வை தர நாமும் துவா செய்வோம்.

இந்த நிகழ்வுமூலம் பல முஸ்லிம் சகோதர்களுக்கு நல்ல படிப்பினையுண்டு.


ஆக்கம் அதிரை முஜீப்.

http://adiraixpress.blogspot.com/2012/11/blog-post_2251.html

UNMAIKAL said...

முஸ்லிம்கள் மீது ஏவப்படும் அரச பயங்கரவாதம் :

"சென்னை" முதல் "டெல்லி" வரை ஒலிக்கும் குரல்கள்


NOV5, குறிவைக்கப்படும் முஸ்லிம் சமூககத்துக்கு நீதி கேட்டு, சென்னையிலும் மதுரையிலும் "பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா" மாநாடுகளை நடத்திய அதேவேளையில்,

நேற்று டெல்லியில் "POLITICS OF TERROR : TARGETING MUSLIM YOUTH" என்ற தலைப்பில் கன்வென்ஷன் நடத்தப்பட்டது.

சென்னையில் "பாப்புலர் ஃப்ரண்ட்" நடத்திய பிரம்மாண்டமான மாநாட்டில் பங்கேற்று திருமாவளவன் எம்.பி., மற்றும் பல தலைவர்களும், முஸ்லிம்களுக்கெதிரான அரச பயங்கரவாதத்தை கண்டித்தனர்.

அதேபோல, டெல்லியில் "PEOPLE CAMPAIGN AGANST POLITICS OF TERROR" (PCPT) அமைப்பின் சார்பாக மாநிலங்களவை உறுப்பினர், முஹம்மத் அதீப் தலைமையில் நடத்தப்பட்ட கருத்தரங்கத்தில்,

லாலு பிரசாத் யாதவ், ராம் விலாஸ் பாஸ்வான், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஏ.பி.பரதன், மார்க்சிஸ்ட் கட்சியின் பிரகாஷ் காரத் என, பல தலைவர்களும்,

முஸ்லிம்களுக்கெதிராக நாட்டில் நிகழ்த்தப்படும் அநியாயங்களை - அரச பயங்கரவாதங்களை தோலுரித்துக்காட்டினர்.

லாலு பிரசாத் யாதவ் பேசும்போது:முஸ்லிமாக பிறப்பது தவறா? முஸ்லிமாக வாழ்வது பாவகாரியமா? ஆட்சியாளர்கள் என்ன நினைக்கிறார்கள்?
முஸ்லிம் இளைஞர்களை வருடக்கணக்கில் சிறையில் அடைத்து சித்திரவதை செய்தால் கேட்க நாதியில்லை என நினைக்கிறார்களா?
என அடுக்கடுக்கான கேள்விக்கணைகளை தொடுத்த லாலு, முஸ்லிம்களின் ஆதரவில்லாமல் எவராலும் ஆட்சிக்கு வரமுடியாது என்றார்.

மேலும், முஸ்லிம்களின் நலன் சார்ந்த எத்தகைய போராட்டத்துக்கும் தனது ஆதரவு உண்டு என்றார்.

ராம்விலாஸ் பாஸ்வான்:"சிமி" அமைப்பின் மீது தடை விதிக்கும்போது ஆர்.எஸ்.எஸ். மற்றும் ஹிந்துத்துவ தீவிரவாத அமைப்புக்கள் மீது கருணைப்பார்வை செலுத்துவது ஏன்? எனக்கேள்வி எழுப்பினார்.

மேலும், சர்வதேச அளவில் முஸ்லிம்களை பயங்கரவாதிகளாக சித்தரிக்கும் சூழ்ச்சி நடப்பதாக சொன்ன அவர், இந்தியாவை பொறுத்தவரை, மத சார்பற்ற சக்திகள் ஒன்றுபட்டு இந்த பிரச்சாரத்தை எதிர்க்கவேண்டும் என்றார்.

பிரகாஷ் காரத்: பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என சொல்லிக்கொண்டு, முஸ்லிம் இளைஞர்களை குறிவைத்து கைது செய்வது "பாரபட்சமான செயல்" என போலீஸ் மீது குற்றம் சாட்டிய காரத் "UNLAWFUL ACTIVITIES PREVENTION ACT" (UAPA) சட்டம் முஸ்லிம்களுக்கு எதிராக தவறாக பயன்படுத்துவதாக கூறினார்.

நாடாளுமன்ற உறுப்பினர் முஹம்மத் அதீப்: ஒரு தேசத்தில் ஆண்டுக்கணக்கில் நீதிமன்றங்கள் நியாயமான தீர்ப்புக்கள் வழங்காமலும், காவல்துறை செய்யும் அநியாயங்களை கண்டுக்கொள்ளாமல், அரசுகள், குருடாகவும் -செவிடாகவும் செயல்பட்டால், அந்த நாட்டின் இறுதி முடிவு எங்கே போய் முடியும்?

முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ள கொடுமைகளுக்கு யார் நீதி வழங்குவது? எனக்கேட்ட அவர், நாட்டிலுள்ள நியாயவான்கள் சிந்திக்க வேண்டும் என்றார்.

ஏ.பி.பரதன்: அநீதிகளுக்கு எதிரான இந்த போராட்டம் எளிதானதல்ல, சிறைபட்டுள்ள அப்பாவிகளின் விடுதலைக்காக சி.பி.ஐ. கட்சி, தனது "வழக்கறிஞர் பிரிவு" மூலம் சட்ட ரீதியான உதவி செய்யும் என்றார்.

காங்கிரஸ் கட்சியின் மணிசங்கர் அய்யர்: குற்றவாளிகளை தண்டிப்பதில் தவறில்லை; ஆனால் அப்பாவிகளை சிறையிலடைப்பதை ஏற்க முடியாது எனக்கூறிய அவர், முஸ்லிம்கள் குறிவைக்கப்படுது தொடர்பாக, உள்துறை அமைச்சரை விரைவில் சந்தித்து பேசவிருப்பதாக சொன்னார்.

இந்த தேசம் "காந்திய வழியில் செல்வதாக இருந்தால் அரசியல் சாசன சட்டத்தை மதித்து அனைத்து குடிமக்களும் மரியாதையுடன் நடத்தப்பட வேண்டும்"
நீதி வழங்க முடியாதவர்களுக்கு, ஆட்சிக்கட்டிலில் அமரும் தார்மீக உரிமை இல்லை என்றார்,அவர்.

சிறுபான்மை கமிஷன் தலைவர் வஜாஹத் ஹபீபுல்லாஹ்:
போலீஸ் துறையை சீரமைக்க வேண்டும், அப்பாவிகளை வழக்குகளில் சிக்கவைக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை வேண்டும் என்றார்.

மேலும், இந்திய தேசத்தில் ஒரு சமுதாயம் குறிவைத்து தாக்கப்படுவது "தேசிய அவமானம்" என்றார்.


கூட்டத்தில் நீதியரசர், ஏ.எம்.அஹ்மதி, கம்யூனிஸ்ட் கட்சியின் டி.ராஜா உள்ளிட்ட பிரமுகர்கள் பலரும் கலந்துக்கொண்டு, அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசித்தனர்.

>>>
படம் காண்க‌
<<<


SOURCE: http://www.maruppu.in/all-medias/43-maruppu-news/596--qq-qq-