Followers

Saturday, November 17, 2012

பெண்கள் கல்வி கற்க சென்றால் அபராதம் விதிப்பது முறையா?


பெண்கள் கல்வி கற்க சென்றால் அபராதம் விதிப்பது முறையா?

இன்று பெண் கல்வி மிக முக்கியமாக பார்க்கப்படுகிறது. முன்பெல்லாம் பெண்களுக்கு கல்வி எதந்கு என்று ஒதுக்கப்பட்டார்கள். ஆனால் இன்று பெண்கள் அனைத்து துறைகளிலும் முன்னேறி ஆண்களுக்கு நாங்கள் சளைத்தவர்கள் அல்ல என்று காண்பித்துக் கொண்டிருக்கிறார்கள். நாடு சுதந்திரம் அடைந்ததற்கு பிறகு கல்வியை ஒதுக்கியதால் நாம் எந்த அளவு சிரமங்களை இன்று வரை சுமந்து வருகிறோம் என்பதை அறியாதவர்கள் அல்ல நாம். அரசு வேலைகளில் இஸ்லாமியர்கள் அமராததால் இந்தியா முழுக்க பல வகைகளிலும் அலைக்கழிக்கப்படுகிறோம். சமூகத்தைக் கெடுத்துக் கொண்டிருக்கும் கேடு கெட்ட கூத்தாடிகள் கூட நம்மை தீவிரவாதிகள் என்று சினிமா எடுத்து காசு பண்ணும் அளவுக்கு துணிந்து விட்டார்கள். இதற்கெல்லாம் காரணம் நாம் கல்வியை இழந்ததும் அரசு வேலைகளை உதறியதும்தான்.

அறிந்தோரும், அறியாதோரும் சமமாவார்களா? நல்லுபதேசம் பெறுவோரெல்லாம் அறிவுடையோரே (அல்குர்ஆன் 39:9)


(அரபு நாடான அமீரகத்தில் ரெயில்வேயில் ஓட்டுனராக பணிபுரியும் மர்யம் அல் ஸஃபர்.)

கல்வி கற்பது என்பது ஒவ்வொரு ஆண், பெண் இருவர் மீதுள்ள கட்டாயக் கடமையாகும். கல்வியானது ஒரு மனிதனை அறிவுடையவனாகவும், பண்பாடுள்ளவனாகவும், ஒழுக்கமுடையனாகவும் மாற்றுகிறது. மனிதனின் அறிவுக்கண்ணைத் திறப்பதோடு சொத்துக்களிலெல்லாம் மிகச் சிறந்த சொத்தாகவும் கருதப்படுகிறது. நாம் கற்கக்கூடிய கல்வி இவ்வுலகிற்கு மட்டுமின்றி மறுமைக்கும் பயன்தரக்கூடியதாக இருக்க வேண்டும்.

இஸ்லாத்திற்கு முன்பு பண்டைய அரேபியர்களிடத்தில் பெண்கள் இழிப்பொருளாகவும், சொத்துரிமைப் பெற தகுதியற்றவர்களாகவும், பெண்களும் அவர்களின் சொத்துக்களாகவும் இருந்த நிலையில், இஸ்லாம் இக்கொடிய நிலையை தரைமட்டமாக்கி பெண்களுக்கு உரிமைகளையும், சலுகைகளையும் வாரி வழங்கியது. இன்று கல்வி கற்பதில் மிகவும் பின்தங்கியிருப்பவர்கள் யாரென்றுப் பார்த்தால் பெரும்பாலும் முஸ்லிம்களாகத்தான் இருக்கிறார்கள் அதிலும் குறிப்பாக பெண்கள் கல்வி கற்பதில் மிக மிக பின் தங்கியிருக்கிறார்கள், இல்லை பின் தள்ளப்பட்டு இருக்கிறார்கள் என்பதே உண்மை. காரணம் கல்வியைப் பற்றிய சரியான அடிப்படையறிவு இல்லாததினால்தான்.
இஸ்லாம் ஒரு போதும் பெண்களைக் கல்வி கற்க வேண்டாமென்று தடை போடவில்லை. அந்நிய ஆண்களும், அந்நிய பெண்களும் இரண்டறக் கலந்து விடக்கூடாது என்பதுதான் இஸ்லாமிய சட்டமே தவிர கல்வி கற்கக் கூடாது என்றோ, தொழில் செய்யக்கூடாது என்றோ இஸ்லாம் ஒருபோதும் கூறவில்லை. மாறாக கல்வி கற்க வேண்டும் என்று ஆர்வமூட்டுகிறது


(ஒலிம்பிக் போட்டியில் வெற்றி பெற்றவுடன் இறைவனுக்கு நன்றி செலுத்தும் பஹ்ரைனின் அல் கஸ்ரா.)

ஒருமுறை ஒரு பெண் நபி அவர்களிடம் வந்து எப்போதும் உங்களை சுற்றி ஆண்களே இருக்கிறார்கள் அதனால் எங்களால் உங்களை நெருங்கி வந்து மார்க்கத்தில் எங்களுக்கு தோன்ற கூடிய சந்தேகத்தை கேட்க முடிய வில்லை என சொன்னதும் நபி அவர்கள் அவர்களுக்கு என்று வாரத்தில் ஒரு நாளை ஒதுக்கினார்கள் என்று வரலாறுகளில் பார்க்கிறோம்.ஜனாதிபதி அலீ அவர்களது சந்ததியில் வந்த நஃபீஸா எனும் பெண் ஹதீஸ் கலையில் தேர்ச்சி பெற்றிருந்தார்..அவரின் போதனை வகுப்புகளில் இமாம் ஷாபிஈ அவர்களும் கலந்து கொண்டு அறிவை பெற்றுள்ளார்.

பாக்தாத்தில் வாழ்ந்த ஷெய்கா சுஹதா அவர்கள் இலக்கியம் அணியிலக்கணம் ,கவிதை,போன்றவற்றில் தேர்ச்சி பெற்று திகழ்ந்தார்.

பதினெட்டாம் நூற்றாண்டில் நைஜீரியாவில் ஒரு மிகபெரும் கல்வி புரட்சி ஏற்பட காரணமான முஸ்லிம் பெண்களுக்கு தன் வாழ்க்கையை அசத்தலான முன்னுதாரணமாக்கிய நானா அஸ்மா என்ற முஸ்லிமும் ஒரு பெண்மணிதான்.

இவை எல்லாம் சிறந்த உதாரணங்களாக நாம் சொல்ல முடியும்.

பெண் என்பவள் ஒரு குடும்பத்தில் மிக முக்கிய பங்கு வகிக்கிறாள். குறிப்பாக, தன்னுடைய குழந்தையின் அறிவு வளர்ச்சிக்கும் பண்பாட்டிற்கும் அடித்தளம் இடுபவளே பெண்ணாகிய தாய்தான். ஒரு குழந்தை முதலில் அறிமுகம் ஆவது தன் தாயாரிடம்தான் அந்தக் குழந்தைக்கு இரண்டு வருடங்கள் பாலூட்டுவதுடன் இறைபக்தியையும், நல்லொழுக்கத்தையும் சேர்த்தே ஊட்டுகிறாள்.

எனவே ஒவ்வொரு ஆண் பெண்ணுக்கும் முதல் பள்ளிக்கூடமாகவும் பாலகப்பருவ ஆசிரியையாகவும் திகழ்பவள் தாயாகிய பெண்தான். அந்தத் தாய்க்கு நல்ல அறிவும், கேள்வி ஞானமும் இருந்தால்தான் அவளிடம் பாடம் கற்கும் குழந்தைகளுக்கும் கிடைக்கும் என்பதைத்தான் "தாயைப் போல பிள்ளை நூலைப்போல சேலை" என்கிறார்கள். ஆகவே, அவளுக்கு கல்வியறிவும் கேள்வி ஞானமும் வேண்டுமென்றால் கல்வி மிக அவசியமாக இருக்கிறது.

ஆனால் இதை எல்லாம் புரிந்து கொள்ளாமல் சில ஊர்களில் ஊர்க் கட்டுப்பாடு என்று வயதுக்கு வந்த பெண்களை பள்ளிக்கு அனுப்பினால் அபராதம் விதிக்கிறார்களாம். அவர்களின் நோக்கம் பெண் குழந்தைகள் கெட்டு விடக் கூடாது என்று இருந்தாலும் அதற்கு இது தீர்வு அல்ல. ஆணும் பெண்ணும் தனித்தனியே பயிலும் எத்தனையோ கல்விக் கூடங்கள் உள்ளது. அருகில் அவ்வாறு இல்லா விட்டால் செல்வந்தர்கள் சேர்ந்து ஒரு கலாலூரியை ஆரம்பிக்க வேண்டியதுதானே. ஒவ்வொரு கிராமத்திலும் எத்தனையோ செல்வந்தர்கள் இருக்கிறார்களே! அரசும் உதவி செய்ய தயாராக இருக்கும் போது என்ன சிக்கல் உங்களுக்கு. ஆர்வத்தில் படிக்கச் செல்லும் பெண்ணை தடுத்து அவருக்கு அபராதமும் விதிப்பது இஸ்லாமிய நடைமுறை அல்ல. நான் படித்த செய்தி உண்மையாக இருந்தால் டிஎன்டிஜே, தமுமுக போன்ற அமைப்புகள் அந்த கிராமத்துக்கு சென்று அந்த பெண்ணின் படிப்பு இஸ்லாமிய அடிப்படையில் தொடர ஆவண செய்ய வேண்டும்.

கல்வி கற்கச் செல்லும் பெண்களும் தங்களின் பொருப்பை உணர்ந்து கவனமாக நடந்து கொள்ள வேண்டும். சினிமாக்களை பார்த்து கண்டவன் பின்னால் சுற்றி தங்களது மானத்தையும் வாழ்வையும் இழந்து குடும்பத்தாராலும் ஒதுக்கப்பட்ட பல சம்பவங்களை தினமும் பத்திரிக்கையில் படிக்கிறோம். இதனால் எந்த நோக்கத்திற்காக பெற்றோர்கள் கல்லூரிக்கு அனுப்புகிறார்களோ அந்த நோக்கமே சிதைந்து விடுகிறது. இந்த காதல் என்ற மாயையால் தர்மபுரியில் அந்த பெண்ணின் தகப்பன் அவமானம் தாங்காமல் தற்கொலை செய்து கொண்டு அதன் காரணமாக 300 குடிசைகள் எரிந்து சாம்பலானதை சில நாட்களுக்கு முன்பு பார்த்தோம். காதல் தோல்வியினால் தினமும் தற்கொலைகளை பத்திரிக்கைகளில் படித்து வருகிறோம். ஒரு பெண் தவறினால் அந்த குடும்பத்தின் அஸ்திவாரமே ஆட்டம் கண்டு விடும். எனவே இஸ்லாமிய நடைமுறைகளுக்கு பங்கம் வராமல் உலக கல்வியை இஸ்லாமிய பெண்கள் கற்று தங்களின் அறிவை பெருக்கிக் கொள்வார்களாக!

--------------------------------------------------

புதுக் கோட்டையில் ஒரு கிராமத்தில் நடந்த சம்பவத்தை அப்படியே தருகிறேன்.

புதுக்கோட்டை: மணல்மேல்குடி அருகே பூப்பெய்த பிறகு பெண்களின் படிப்பை நிறுத்த வேண்டும் என்று ஜமாஅத் வற்புறுத்தியதன்பேரில் 9வது வகுப்பு மாணவியின் படிப்பு பாதியிலேயே நின்றுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பி.ஆர். பட்டனத்தைச் சேர்ந்த நல்ல முகமது- ஹாஜிரம்மாள் தம்பதியின் மகள் ஜனுபா பேகம் (16).

ஹாஜிரம்மாள் புதுக்கோட்டை கலெக்டர் மனோகரனிடம் சமீபத்தில் ஒரு மனு அளித்துள்ளார். அதில், ஜனுபா மணல்மேல்குடியில் உள்ள அரசு பெண்கள் உயர் நிலைப்பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தாள். இந்நிலையில் அவர் பள்ளிப் படிப்பை உடனே நிறுத்த வேண்டும் என்று கடந்த ஆகஸ்ட் மாத இறுதி முதல் பி.ஆர். பட்டினம் ஜமாஅத்தார் வற்புறுத்தினர் என்று அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு கூறுகையில்,
பூப்பெய்த பிறகு எந்த பெண்ணும் படிக்கக் கூடாது என்று ஜமாஅத்தார் எங்களை மிரட்டினர். அவர்களின் மிரட்டலையும் மீறி நான் என் மகளை பள்ளிக்கு அனுப்பி வைத்தேன். இதனால் அவர்கள் ஆத்திரமடைந்து எங்களை பள்ளிவாசலுக்கு இழுத்துச் சென்றனர். எனது கணவர், மகள் மற்றும் என்னை தாக்கியதுடன் பள்ளிப் பையையும் பறித்துக் கொண்டனர். எனது மகளின் டி.சியை அவர்களிடம் கொடுக்காவிட்டால் எங்கள் குடும்பத்தை ஊரை விட்டு ஒதுக்கிவிடுவோம் என்று எனது கணவரை எச்சரித்தனர்.

அதன் பிறகு செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் டி.சியை வாங்கிய பிறகு ஊருக்குள் வந்தால் போதும் என்று ஜமாஅத் உறுப்பினர்கள் எனது கணவரிடம் தெரிவித்துள்ளனர். அதில் இருந்து எனது கணவர் ஊருக்குள் வரவில்லை. அவர் எங்கு இருக்கிறார் என்றும் தெரியவில்லை. அவர் இல்லாமல் நாங்கள் பணக் கஷ்டத்தால் பல நாட்கள் பட்டினி கிடந்தோம். அதன் பிறகு நான் வீட்டு வேலைக்கு சென்றேன் என்றார்.

இதற்கிடையே பூப்பெய்த பெண்ணை விதிகளை மீறி பள்ளிக்கு அனுப்பியதற்காக ஜமாஅத்தைச் சேர்ந்த எம்.எஸ். நஜிமுத்தீன் என்பவர் ஹாஜிரம்மாள் குடும்பத்திற்கு ரூ.15,000 அபராதம் விதித்தார். ஹாஜிரம்மாள் வீட்டுக்கு அருகில் வசி்ப்பவர் ஒருவர் அபராதத்தைக் கட்ட பணம் கொடுத்து உதவியுள்ளார். பின்னர் தனக்கு உதவிய நபருக்கு அந்த பணத்தை அவர் திருப்பிக் கொடுத்துள்ளார். பி.ஆர்.பட்டினத்தில் 20க்கும் மேற்பட்ட குடும்பங்களிலும் ஜமாஅத்தால் இதே பிரச்சனை உள்ளது என்று ஹாஜிரம்மாள் தெரிவித்தார்.

ஹாஜிரம்மாளின் மனுவை கலெக்டர் அலுவலகம் தலைமை கல்வி அதிகாரிக்கு அனுப்ப அவர் அதை எஸ்.பிக்கு அனுப்பி வைத்துள்ளார் என்று கூறப்பட்டது. ஆனால் எஸ்.பி. அலுவலகத்திற்கு அந்த மனு வரவில்லை என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இது சட்ட ஒழுங்கு பிரச்சனை என்பதால் அந்த மனு கலெக்டர் அலுவலகத்திற்கே திருப்பி அனுப்பி வைக்கப்பட்டது என்று தலைமை கல்வி அதிகாரி என். அருள் முருகன் தெரிவித்துள்ளார்.

-http://tamil.oneindia.in/news/2012/11/15/tamilnadu-daughter-forced-drop-of-school-education-164700.html

மூட்டைப் பூச்சிக்கு பயந்து கொண்டு வீட்டை கொளுத்துவோமா! மாட்டோம். எனவே வயதுக்கு வந்த பெண்கள் தனியே பெண்கள் மட்டுமே படிக்கக் கூடிய பள்ளி கல்லூரிகளில் சேர்ந்து தங்களின் கல்வி அறிவை பெருக்கிக் கொள்வார்களாக!

30 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

பெண்கள் படித்தாலொழிய இந்த சமுதாயம் முழுமையாக முன்னேறுவதற்கு வாய்ப்பு மிகவும் குறைவு...

ஹுஸைனம்மா said...

அந்த ஊரில் இஸ்லாமிய இயக்கஙக்ள் செயல்படுகின்றனவா? அவை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையா?

UNMAIKAL said...

பெண்கள் உலகக் கல்வியை கற்பது பற்றி இஸ்லாம் என்ன சொல்கிறது?

இஸ்லாமிய மார்க்கம், கல்வியின் சிறப்பைப் பற்றிப் பேசும் போது ஆண்கள், பெண்கள் என்று பிரித்துப் பேசவில்லை.

பொதுவாகவே பேசுகிறது.

திருக்குர்ஆனில் கூறப்படும் கட்டளைகள் உபதேசங்கள் பொதுவாக ஆண்களுக்கும் பெண்களுக்கும் பொதுவானவை.

கல்வியாளர்களுக்கு ஏராளமான சிறப்புகள் இருப்பதாக குர்ஆன் கூறுகிறது.

يَرْفَعْ اللَّهُ الَّذِينَ آمَنُوا مِنْكُمْ وَالَّذِينَ أُوتُوا الْعِلْمَ دَرَجَاتٍ وَاللَّهُ بِمَا تَعْمَلُونَ خَبِيرٌ(11)58

உங்களில் நம்பிக்கை கொண்டோருக்கும், கல்வி வழங்கப்பட்டோருக்கும் அல்லாஹ் பல தகுதிகளை உயர்த்துவான். நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன்.
அல்குர்ஆன் (58 : 11)

يُؤْتِي الْحِكْمَةَ مَنْ يَشَاءُ وَمَنْ يُؤْتَ الْحِكْمَةَ فَقَدْ أُوتِيَ خَيْرًا كَثِيرًا وَمَا يَذَّكَّرُ إِلَّا أُوْلُوا الْأَلْبَابِ(269)2

தான் நாடியோருக்கு ஞானத்தை (அல்லாஹ்) வழங்குகிறான். ஞானம் வழங்கப்பட்டவர் ஏராளமான நன்மைகள் வழங்கப்பட்டு விட்டார். அறிவுடையோரைத் தவிர (யாரும்) சிந்திப்பதில்லை.
அல்குர்ஆன் (2 : 269)

மேலும் அடிமைகள் நிறைந்த அந்தக் காலத்தில், அடிமைப் பெண்களுக்கும் கூட நபி (ஸல்) அவர்கள் கல்வி கற்றுக் கொடுக்க ஆர்வமூட்டியுள்ளார்கள்.

"மூன்று மனிதர்களுக்கு (அல்லாஹ்விடத்தில்) இரண்டு விதக் கூலிகள் உண்டு.

ஒருவர் வேதத்தையுடையவர்களில் உள்ளவர். இவர் தமது (சமூகத்திற்கு அனுப்பப்பட்ட) தூதரையும் முஹம்மதையும் நம்பியவர்.

மற்றொருவர் தமது இறைவனுக்குச் செய்ய வேண்டிய கடமைகளையும் தமது எஜமானனுக்குச் செய்ய வேண்டிய கடமைகளையும் நிறைவேற்றும் அடிமை.

மூன்றாமவர் தம்மிடத்தில் உள்ள ஒரு அடிமைப் பெண்ணுக்கு ஒழுக்கப் பயிற்சி அளித்து,

அந்தப் பயிற்சியை அழகுறச் செய்து,

அவளுக்குக் கல்வியைக் கற்பித்து,
அதை அழகுறக் கற்றுத் தந்து பின்னர் அவளை அடிமையிலிருந்து விடுவித்து கொண்டவர்.

இம்மூவருக்கும் இரண்டு விதக் கூலிகள் உண்டு'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூமூஸா (ரலி)
நூல்: புகாரீ (97)

இது போன்ற செய்திகள் மூலம், நபிகளார் பெண்களை எழுதப் படிக்க ஆர்வமூட்டிருக்கிறார்கள் என்பதையும் அதை ஆட்சேபணை செய்யவில்லை என்பதையும் நாம் அறிந்து கொள்ளலாம்.

மேலும் கல்வி இல்லாத காரணத்தால் தான் இன்று பெண்கள் பரவலாக ஏமாற்றப்படுகிறார்கள்.

படிப்பு அவர்களிடம் இருக்குமானால் அதன் மூலம் அவர்கள் எச்சரிக்கையாக இருப்பதற்கு உதவும்.

மேலும் மார்க்க விஷயங்களை அறிந்து கொள்வதற்கும் இவை பேருதவியாக இருக்கும்.

எனவே பெண்கள் கல்வி கற்பதை இஸ்லாம் தடை செய்யவில்லை!

மாறாக ஆர்வமூட்டவே செய்கிறது.

ஆனால் இஸ்லாமிய நெறிமுறைகளை மீறாத வகையிலும் நமது உயிருக்கும் மானத்துக்கும் உலை வைக்காமல் கல்வி கிடைக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்வது அவசியமாகும்.

கண்ணை விற்று சித்திரம் வாங்குவதில் எந்தப் பயனும் இல்லை.


THANKS TO : MUGAVAI KHAN.

UNMAIKAL said...

உடலுக்கு திரையிட சொன்னதே தவிர
அறிவிற்கு திரையிட சொல்லவில்லை ..


• இஸ்லாத்தில் பெண்கள் வேலைக்கு செல்ல தடையில்லை.

• அப்படி வேலைக்கு சென்று சம்பாதித்தாலும் அதை குடும்பத்திற்கு செலவழிக்க வேண்டிய கடமை அவர்களுக்கு கிடையாது.

• இஸ்லாத்தில் பெண்கள் வெளியே செல்ல தடையில்லை.

• இஸ்லாத்தில் பெண்கள் கல்வி கற்க தடையில்லை.

• இஸ்லாத்தில் பெண்கள் விளையாட்டில் பங்குகொள்ள தடையில்லை.

• இஸ்லாத்தில் பெண்கள் கணவனை தேர்ந்தெடுக்க தடையில்லை

"கல்வி கற்பது முஸ்லிமான ஆண், பெண் அனைவருக்கும் கட்டாயக் கடமையாகும்" (அல்- ஹதீஸ், புகாரி)
==============================
இஸ்லாமிய பெண்ணுரிமைக்காக போராடும் என் மாற்றுமத சகோதரர்களின் அன்பான கவனத்திற்கு!!!!

பெண்களும் கட்டாயம் கல்வி கற்க வேண்டுமாம்..!!! :( என்ன ஒரு ஆணாதிக்கம் பார்த்தீங்களா?? :( இதை எல்லாம் கேட்டு நீங்க பொங்கி எழணும்!!!

பொதுவாக இங்கு அனைவரும் கேட்கும் கேள்வி ஏன் உங்கள் மதத்தில் பெண்களை அதிகம் படிக்க வைக்க மாட்டேன் என்று சொல்கின்றீர்கள்?

உங்கள் மார்க்கம் உங்களை படிக்க வேண்டாம் என சொல்கிறதா..?

இது ஒருவகையில் உங்களை அடிமை படுத்துவது போல் தானே?? என்பது..!

இந்த கேள்வியை எதிர் கொள்ளாதவர்களே இருக்க முடியாது என்றே தோன்றுகிறது..!

உண்மையில் இஸ்லாத்தில் அப்படி பட்ட கருத்து சொல்ல பட்டு இருக்கிறதா என்றால் இல்லை இல்லை என்ற ஆணித்தரமான பதிலை தான் நாம் தர வேண்டி இருக்கிறது ..

மேலும் படிக்க சொடுக்குங்கள்.>>>>
இஸ்லாமிய பெண்களுக்கு கல்வி அவசியமா என்ன? - ஆயிஷா பேகம்
<<<<

.

suvanappiriyan said...

திரு தனபாலன்!

//பெண்கள் படித்தாலொழிய இந்த சமுதாயம் முழுமையாக முன்னேறுவதற்கு வாய்ப்பு மிகவும் குறைவு...//

இதை சில சமுதாய தலைவர்கள் உணராதது மிகவும் வருத்தத்திற்குரியது. நிலைமை கண்டிப்பாக மாறும்.

suvanappiriyan said...

சகோ ஹூசைனம்மா!

//அந்த ஊரில் இஸ்லாமிய இயக்கஙக்ள் செயல்படுகின்றனவா? அவை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையா?//

சமுதாய இயக்கங்கள் இதற்கு நல்ல ஒரு தீர்வு கண்டு அந்த சகோதரியின் படிப்பு தொடர ஆவண செய்ய வேண்டும்.

suvanappiriyan said...

சகோ உண்மைகள்!

//மூன்று மனிதர்களுக்கு (அல்லாஹ்விடத்தில்) இரண்டு விதக் கூலிகள் உண்டு.

ஒருவர் வேதத்தையுடையவர்களில் உள்ளவர். இவர் தமது (சமூகத்திற்கு அனுப்பப்பட்ட) தூதரையும் முஹம்மதையும் நம்பியவர்.

மற்றொருவர் தமது இறைவனுக்குச் செய்ய வேண்டிய கடமைகளையும் தமது எஜமானனுக்குச் செய்ய வேண்டிய கடமைகளையும் நிறைவேற்றும் அடிமை.

மூன்றாமவர் தம்மிடத்தில் உள்ள ஒரு அடிமைப் பெண்ணுக்கு ஒழுக்கப் பயிற்சி அளித்து,

அந்தப் பயிற்சியை அழகுறச் செய்து,

அவளுக்குக் கல்வியைக் கற்பித்து,
அதை அழகுறக் கற்றுத் தந்து பின்னர் அவளை அடிமையிலிருந்து விடுவித்து கொண்டவர்.

இம்மூவருக்கும் இரண்டு விதக் கூலிகள் உண்டு'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூமூஸா (ரலி)
நூல்: புகாரீ (97)//

அழகிய குர்ஆன் வசனங்களையும் நபி மொழிகளையும் பகிர்ந்தமைக்கு நன்றி!

Unknown said...

சலாம் சகோ.சுவனப்பிரியன்

நல்லதொரு பதிவு..எதனடிப்படையில் என்றால்

//வயதுக்கு வந்த பெண்கள் தனியே பெண்கள் மட்டுமே படிக்கக் கூடிய பள்ளி கல்லூரிகளில் சேர்ந்து தங்களின் கல்வி அறிவை பெருக்கிக் கொள்வார்களாக!//

பெண்களுக்கு கல்வி வேண்டும் என்று கூக்குரல் இடாமல் அது பெண்களுக்கான பாட சாலையில் அமைய வேண்டும் என்று வழி கூறியதற்கு ...ஆம் நாம் இரண்டு தினங்களுக்கு முன்பு கேள்வி பட்டோம்..நாமக்கல் மாவட்டத்தில் ஒரே வருடத்தில் 170 இஸ்லாமிய பெண்கள் வேற்று ஆணுக்காக மதம் மாற்றப்பட்டுள்ளார்கள்.. வேதனையான செய்தி..இதெல்லாம் எதுவால் நடந்தது பெண்களின் ஒழுக்கமின்மை என்றாலும் அதற்க்கு வாய்ப்பாக அமைந்தது கல்வி எனும் கேடயம்...

இப்போதைய கல்வி சூழல் பெண்களின் ஒழுக்கத்திற்கு வேட்டு வைப்பதாகவே உள்ளது.. மிகவும் கனத்த இதயத்துடன் இதை நாம் ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும்...

முஸ்லிம் பெண்களை காதலித்து கற்பமாக்குவதர்க்கு என்றே ஆர் எஸ் எஸ் போன்ற சங்க்பரிவார கும்பல்கள் முனைப்பு காட்டுவதும் நாம் அறிந்த விடயமே..!!! அவர்கள் காதலித்து நடித்து அவர்கள் வேலை முடிந்ததும் துரத்தி விடப்படுவோர் கடைசியில் செல்லும் இடம் விபச்சாரம் ...இதற்க்கு எண்ணற்ற சான்றுகள் உள்ளன

இத்தகைய சூழலில் கற்பா..கல்வியா என்று வரும்போது நிச்சயம் கற்ப்பு ஒழுக்கத்தை தான் நாம் தேர்ந்தடுக்க வேண்டும்....

ஆயினும் இந்நேரத்தில் ஒரு ஆண் மகனாகிய என்னுடைய கடமை எப்படி இருக்கவேண்டும் என்றால் .. பெண்கள் வீதியில் விற்கப்படும் கருவாடு அல்ல..அவர்கள் வைரங்கள், பாதுகாக்கப்பட வேண்டியவர்கள்..அவர்கள் பாதுகாப்புக்கு செய்யவேண்டிய அணைத்து வேலைகளும் செய்வது எமது கடமை..அதில் ஒன்று அவர்களுக்கு பாதுகாப்பான கல்வி வழங்குவது..தனியான பெண்கள் கல்லூரி அமைப்பது ..அதில் அணைத்து மத பெண்களுக்கும் இடமளித்து ஆண் பெண் கலப்பு எனும் சமுதாய ஒழுக்க கேடு ஏற்படாமல் தடை ஏற்படுத்துவது ...

இதைப்போல துளியும் அறிவில்லாத ஜமாஅத் நிர்வாகிகளை களைவது ...

எல்லாவற்றிற்கும் மேலாக இஸ்லாமிய சிந்தனையை ஏற்படுத்துவது தான் நம் தலையாய கடமையாக உள்ளது..!!! இது ஒன்று ஏற்பட்டாலே 75 சதவித நம் கடமைகள் முடிந்து விடும்..

நன்றியுடன்
நாகூர் மீரான்

suvanappiriyan said...

சகோ நாகூர் மீரான்!

//முஸ்லிம் பெண்களை காதலித்து கற்பமாக்குவதர்க்கு என்றே ஆர் எஸ் எஸ் போன்ற சங்க்பரிவார கும்பல்கள் முனைப்பு காட்டுவதும் நாம் அறிந்த விடயமே..!!! அவர்கள் காதலித்து நடித்து அவர்கள் வேலை முடிந்ததும் துரத்தி விடப்படுவோர் கடைசியில் செல்லும் இடம் விபச்சாரம் ...இதற்க்கு எண்ணற்ற சான்றுகள் உள்ளன //

மிகவும் வருந்தத்தக்க செய்தி. நம் கிராமங்களில் உள்ள நில பிரபுக்கள் 'என்னிடம் இத்தனை வேலி நிலம் இருக்கிறது' என்று வீண் பெருமை பேசிக் கொண்டிருக்காமல் பெண்களுக்கான கல்லூரிகளை மாவட்டம் தோறும் உண்டாக்க வேண்டும். அல்லது குறைந்த பட்சம் வசதியற்ற ஏழை மாணவிகளுக்கு பெண்கள் கல்லூரிக்கு தினமும் சென்று வர இலவச வாகனங்களை விட வேண்டும. பெண்களுக்கு கல்வி தேவை. அந்த கல்வி பெண்மைக்கும் நமது மார்க்கத்துக்கும் பாதுகாப்பானதாக இருக்க வேண்டும்.

UNMAIKAL said...

பால்தாக்கரே மறைந்து விட்டாராம்!

அவரை கைது செய்யாமல் கைபிசைந்து கொண்டிருந்த கால்துறையினர்..

அவரை சட்டத்தின் பிடியில் இருந்து தப்பவைத்துக் கொண்டிருந்த நீதித்துறையினர்..

அவரின் பயங்கரவாதங்களை மூடிமறைத்த ஊடகத்துறையினர்..

அவருக்கு பயந்து நடவடிக்கைகளை மேற்கொள்ளாத காங்கிரஸ் ஆட்சியினர்..


அனைவருக்கும் எமது கண்டனங்கள்!

மும்பை கலவரத்தில் கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கான முஸ்லிம்களின் வாரிசுகள்..

மும்பையிலிருந்து விரட்டப்பட்ட பல்லாயிரக்கணக்கான வடமாநிலத்தவர்கள்..

மும்பையில் அச்சத்தின் பிடியிலேயே வாழ்ந்து கொண்டிருக்கும் லட்சக்கணக்கான உழைக்கும் மக்கள்..

மும்பைக்குள் நுழையவே தயங்கிக் கொண்டிருக்கும் கோடிக்கணக்கான மராட்டியர் அல்லாதவர்கள்..

அனைவருக்கும் எமது வாழ்த்துக்கள்!

ஆளூர் ஷாநவாஸ்

UNMAIKAL said...

நான் இந்து இல்ல;

நான் இப்ப பள்ளனும் இல்ல

ஜாதிய ஒழிச்சுக்கட்டிய முகம்மது பிலால்!


முகம்மது பிலால் வியாழன், 06 செப்டம்பர் 2012 23:39

நான் 6.12.1992 அன்று பாபர் மசூதி இடிக்கப்பட்ட நாளன்று, அம்பேத்கர் நினைவு நாளில் சென்னை அசோக் நகர் பள்ளி வாசலில் 1000 பேருடன் இஸ்லாம் தழுவினேன். அதில் 300 பேர் தாழ்த்தப்பட்டவர்கள்.

இதற்கு முன்பே 1981 இல் தென் மாவட்டங்களில் கொடிக்கால் ஷேக் அப்துல்லா போன்றோரின் தலைமையில், மிகப்பெரிய மதமாற்றம் மீனாட்சிபுரத்தில் நடந்தது என்பது பலருக்கும் தெரியும்.

குறிப்பாக, பள்ளர்கள் அதிகமாக இஸ்லாம் தழுவினார்கள்.

பொதுவாக தங்களுக்கு நடக்கிற பிரச்சனைகளுக்கு எதிராகப் போராடுகிற, எதிர்க்கிற, எதிர்த்துத் தாக்குகிற குணம் பள்ளர்களுக்கு உண்டு. வேடிக்கை பாத்துக்கிட்டு இருக்க மாட்டாங்க. இயல்பாகவே அப்படி ஒரு குணம்.

அந்த குணங்களுக்கு ஏற்றதாகக்கூட இஸ்லாத்தை தழுவியிருக்கலாம்.

மதமாற்றத்தில் ஈடுபடுகிற பலருக்கும் பல நோக்கங்கள் இருக்கும்.

ஒருத்தர் நான் இந்து இல்லன்னு சொல்லி மதம் மாறுவார். இன்னொருத்தர் சாதிக் கொடுமைகள் இருக்கு, அதனால மதம் மாறுகிறோம்னு சொல்லுவார். இன்னும் சிலர் சலுகைக்காக மதம் மாறுகிறோம்னு சொல்லுவாங்க.

ஆனா, மதமாற்றத்தில் நான் முன் வைத்த கருத்து – "பிறவி இழிவு நீங்க வேண்டும்' பொறக்கும்போது பள்ளனா பொறந்திட்டேன்.

என் பிள்ளைகளும் பள்ளர்களாகப் பிறக்கணும்னு என்ன அவசியம் வேண்டியிருக்கு.

இத யார் தீர்மானிக்கிறது?

நான் பள்ளனா பொறந்திட்டேன்.

என்னுடைய அடுத்த தலைமுறை பள்ளனா பொறக்கக்கூடாது
அதுக்கு உடனடித் தீர்வு இஸ்லாம்.


இப்ப என் பேரனுங்கள பள்ளன்னு கூப்பாடு போட்டு சொன்னாலும் யாரும் நம்பப் போறதில்ல.

அவன் யாருன்னு ஜமாத்துக்கும் தெரியும், மக்களுக்கும் தெரியும். ஒரு தலைமுறை மாறிடுச்சு. பையன கொடுத்தோம், பெண் எடுத்தோம்.

இந்த மாதிரியான மாற்றம் நம்முடைய பிறவியிலேயே ஏற்படுணும்னா, அதுக்கு ஒரே தீர்வு இஸ்லாம்தான்.

மதம் மாறுவது என்கிற நிலையில் நீங்க பவுத்தரா, கிறித்துவரா மாறுவது ரொம்ப சுலபம்.

அது யாரையும் இந்த சமூகத்துல பாதிக்காது.

மதம் மாறுகிறவர்கிட்டேயும் மாற்றத்த கண்டுபிடிக்க முடியாது.

வேணும்னா கூட்டம் போட்டு சொல்லிக்கலாம்.

ஆனா, நீங்க இஸ்லாம் மாறுவது என்பது மதமாற்றம் மட்டுமல்ல,

உன்னுடைய சமூகத்துல உன்ன அடிமைப்படுத்துகிற கலாச்சாரத்திலிருந்தும் மாறுகிறோம்.


இந்தத் தலைமுறைக்கு அது போதும்.

மறந்தும் இந்த மதத்தோட எந்தத் தன்மையும் உன்னை பாதிக்காது.

இத பவுத்தத்தில இருந்து உன்னால சொல்ல முடியாது; கிறித்துவரா இருந்தும் சொல்ல முடியாது.

இரண்டிலும் இந்து மதம் நம்மள இழி பிறவியா நடத்துற எல்லா விசயமும் அதுக்குள்ள இருக்குது.

பள்ளர்கள் எப்பவோ இஸ்லாம் மதத்தைத் தழுவிவிட்டார்கள் என்று சொல்ல முடியும்.

12 ஆம் நூற்றாண்டில் தென் மாவட்டத்தில் ஒருத்தர்கூட தலித் இஸ்லாமியர் இல்லை.

இந்தக் காலகட்டத்தில்தான் நாகர்மலை, சமணர்மலை, யானைமலை போன்ற பகுதிகளை சைவர்கள் கைப்பற்றுகிறார்கள்.

மிகப்பெரிய சைவப் போராட்டம் நடக்கிறது.

சைவம் எப்படி சமணத்தை வீழ்த்தியதோ, அதைப் போலவே சைவத்தை வீழ்த்த வேண்டும்;

சைவத்தை வீழ்த்த வேண்டுமானால், அதை எதிர்க்கின்ற, வீழ்த்துகின்ற சக்தியுடைய ஒன்றோடு கூட்டுச் சேர வேண்டும்.

சமணத்தையோ, பவுத்தத்தையோ கூட்டு சேர்க்க முடியாது.

அதுதான் வீழ்ந்து கிடக்குதே.

அப்ப அதை எதிர்க்கிற மதமாக இருந்தது இஸ்லாம்தான்.

இந்த மோதலில் செத்துக் கொண்டிருந்தவர்கள் நம்முடைய முன்னோர்கள்தான்.

அதனால் அவர்கள் இஸ்லாம் மாறி இருக்கலாம்.

நான் இருக்கிற சோழவந்தான் பகுதி முழுவதும் சைவ மதம் அட்டூழியம் பண்ணிய இடம்.

இன்னைக்கும் அந்த பாதிப்பு இருக்குது.

அது யாருக்கும் தெரியல.

எனக்கு பள்ளர் – பறையர்னு பிரிச்சுப் பார்க்கத் தெரியல.

என்னுடைய அதிக காலம் வடக்கேதான் கழிஞ்சது.

தந்தை சிவராஜ்தான் தலைவர். பிரச்சனைகள் வடக்கே ஒரு மாதிரியா இருக்கலாம், தெற்கே ஒரு மாதிரியா இருக்கலாம்.

பவுத்தத்தில் கிறித்துவத்தில் சில நல்லதுக இருக்கலாம். சலுகைகள் கிடைக்கலாம். அது, அவரவர் தேவையைப் பொருத்தது.

நான் இஸ்லாமியரா இருக்கிறேன்.

ஏற்கனவே இந்த சமூகம் என் பாட்டன், பாட்டிய பேசின இழிந்த நிலையை இப்ப எங்கிட்ட பேச முடியாது.

அதுதான் எனக்குக் கிடைச்ச விடுதலையா பார்க்கிறேன்.

நான் இந்து இல்ல;

நான் இப்ப பள்ளனும் இல்ல;

ஜாதிய ஒழிச்சுக்கட்டிய முகம்மது பிலால்!


நேர்காணல் : அன்பு செல்வம்

SOURCE: http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=21050&Itemid=139

Seeni said...

nalla thakavalkal...

Anonymous said...

அஸ்ஸலாமு அலைக்கும் சகோ சுவனப்பிரியன்.

மிக அருமையான பதிவு.இந்த பிரச்னையை நல்ல முறையில் கையாண்டு இருக்கிறீர்கள்.

சகோ நாகூர் மீரானின் பின்னூட்டத்தினை வழிமொழிகிறேன்
kalam.

suvanappiriyan said...

சகோ கலாம்!

//மிக அருமையான பதிவு.இந்த பிரச்னையை நல்ல முறையில் கையாண்டு இருக்கிறீர்கள்.

சகோ நாகூர் மீரானின் பின்னூட்டத்தினை வழிமொழிகிறேன்//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

suvanappiriyan said...

சகோ சீனி!

//nalla thakavalkal...//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

வவ்வால் said...

சு.பி.சுவாமிகள்,

பெண் கல்விக்கு குரல் கொடுத்திருப்பது நல்ல விடயம், பாராட்டுக்கள்.

ஆனாலும் அதிலும் உங்கள் பழமைவாத நச்சுக்கருத்தினை புகுத்துகிறீர்கள், அதாவது ஆணும் ,பெண்ணும் ஒன்றாக கல்வி பயின்றாலே ஒழுக்க கேடுக்கு ஆளாவார்கள் என சொல்வது ஒட்டு மொத்தமாக அனைத்து பெண்களையும் , ஆண்களையும் இழிவுப்படுத்துவது அல்லவா.

அப்படியானால் ஆண் ,பெண் ஒன்றாக கல்வி கற்கும் சூழலை விரும்புவர்கள் எல்லாம் ஒழுக்க கேட்டினை ஆதரிப்பவர்களா?


ஒரு சில சம்பவங்கள் நடப்பதை வைத்து ஒட்டு மொத்தமாக சொல்வதை நீங்கள் ஆதரிப்பீர்களானால், குண்டு வெடிப்பு சம்பவங்களில் பெரும்பாலும் அடிபடும் மதம் என்பதால் திரைப்படங்களில் தீவிரவாதிகளை சித்தரிக்கும் போது எளிதில் புரிய வைக்க அப்படி செய்கிறோம் என திரைத்துறையினர் சொன்னால் ஏற்றுக்கொள்வீர்களா?

அப்போ மட்டும் எதிர்ப்பு?

இஸ்லாமிய மானவிக்கு கல்வி கற்றால் அபராதம் என நடந்த சம்பவத்தினையே ஒரு திரைப்படத்தில் காட்சிப்படுத்தினாலும் நீங்கள் எதிர்ப்பீர்கள், ஆனால் நடந்த சம்பவத்தினை தானே பதிவு செய்கிறார்கள் என ஏற்றுக்கொள்ள மாட்டீர்கள் , இது என்ன வகையான நியாயம் ?

R.Puratchimani said...


ஐயா வணக்கம், இப்பதிவை மையமாக வைத்து நான் எழுதிய பதிவு ஒன்று உங்கள் பார்வைக்கு
http://kelviyumnaaneypathilumnaaney.blogspot.in/2012/11/blog-post_18.html
நன்றி

suvanappiriyan said...

திரு வவ்வால்!

//ஆனாலும் அதிலும் உங்கள் பழமைவாத நச்சுக்கருத்தினை புகுத்துகிறீர்கள், அதாவது ஆணும் ,பெண்ணும் ஒன்றாக கல்வி பயின்றாலே ஒழுக்க கேடுக்கு ஆளாவார்கள் என சொல்வது ஒட்டு மொத்தமாக அனைத்து பெண்களையும் , ஆண்களையும் இழிவுப்படுத்துவது அல்லவா.//


பெங்களூரு: காதலனுடன் வந்து கொண்டிருந்த, பெங்களூரு பல்கலை, சட்டக் கல்லூரி மாணவி, எட்டு பேர் கும்பலால் கடத்தப்பட்டு, பல்கலை வளாகத்திலேயே கற்பழிக்கப்பட்ட சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரு பல்கலையில், இரண்டாம் ஆண்டு சட்டப் படிப்பு படித்து வரும் மாணவி மணீஷா, 21, உண்மையான பெயரை போலீசார் வெளியிடவில்லை.

நேபாளத்தை சேர்ந்த இவர், தன் காதலன் நிர்மல் குமாருடன், கடந்த சனியன்று இரவு, 9:30 மணியளவில், காரில் பல்கலை வளாகத்தில் உள்ள, விடுதிக்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, பல்கலை நிர்வாக கட்டடம் அருகே, எட்டு பேர் கும்பல், அவர்களின் காரை வழி மறித்தது. காரிலிருந்து இறங்கிய நிர்மல் குமாரை தாக்கிய கும்பல், மாணவியை மிரட்டி, புதருக்குள் இழுத்து சென்றது. உடன், அப்பகுதியில் நின்றிருந்த, ஊர்காவல் படையினரிடம், நிர்மல் குமார் தகவல் தெரிவித்தார். அவர்கள், அடர்ந்த புதர் பகுதிக்குள், மாணவியை தேடத் துவங்கினர். ஒரு மணி நேரத்துக்கு பின், பல்கலை வளாக அடர்ந்த புதர் பகுதியிலிருந்து துணிகள் கிழிந்த நிலையில், மாணவி தனிமையில் வருவதை கண்டு திடுக்கிட்டனர்.

மாணவி கூறுகையில், ""எட்டு பேர் கும்பல், என்னிடமிருந்த மொபைல் போனை பறித்ததோடு, என்னை கற்பழித்தது,'' என்றார். இதையடுத்து, நிர்மல்குமார், பெங்களூரு ஞானபாரதி போலீஸ் ஸ்ஷேனில் புகார் செய்தார்.
-http://www.dinamalar.com/News_Detail.asp?Id=566543

இது ஒரு சம்பவம் மட்டும் அல்ல. தினமும் பத்pரிக்கைகளில் நாம் படிப்பது. இதற்கு காரணம் காதல், ஆண் பெண் சேர்ந்து படித்தல். இதை மறுக்க முடியுமா? எல்லோரும் உத்தமர்களாக இருந்து விட முடியாது. இதில் பாதிக்கப்படுவது அதிகமாக பெண்ள் தான். ஆணும் பெண்ணும் தனியே படிப்பதால் அறிவு வளர்ச்சியில் என்ன குறைவு வந்து விடும் என்று நினைக்கிறீர்கள்?

//ஒரு சில சம்பவங்கள் நடப்பதை வைத்து ஒட்டு மொத்தமாக சொல்வதை நீங்கள் ஆதரிப்பீர்களானால், குண்டு வெடிப்பு சம்பவங்களில் பெரும்பாலும் அடிபடும் மதம் என்பதால் திரைப்படங்களில் தீவிரவாதிகளை சித்தரிக்கும் போது எளிதில் புரிய வைக்க அப்படி செய்கிறோம் என திரைத்துறையினர் சொன்னால் ஏற்றுக்கொள்வீர்களா? //

தவறு செய்பவர்களை தாராளமாக படங்களில் காட்டட்டும். இந்துத்வா செய்த எத்தனையோ கொலைகள் கொள்ளைகள் டெகல்கா மூலம் அப்பட்டமாக வெளியில் வந்ததே? ஏன் அதைப் பற்றி ஒருவரும் படம் எடுக்கவில்லை.? ஹேமந்த் கர்கரே துப்பறிந்து அனைத்து சாமியார்களையும் உள்ளே தள்ளினாரே? அதற்கு முன் முஸ்லிம்களை அல்லவா கைது பண்ணினார்கள்? அதை ஏன் படமாக எடுக்கவில்லை. பால் தாக்கரே செய்யாத அட்டூழியமா? இவர்கள் செய்த கொலைகளை வைத்து நுற்றுக் கணக்கான படங்கள் தயாரிக்கலாம். ஏன் எடுக்கவில்லை. எடுததால் மறு நாள் முருகதாஸை கர்கரேயை தூக்கியது போல் தூக்கி விடுவார்கள். :-)

//இஸ்லாமிய மானவிக்கு கல்வி கற்றால் அபராதம் என நடந்த சம்பவத்தினையே ஒரு திரைப்படத்தில் காட்சிப்படுத்தினாலும் நீங்கள் எதிர்ப்பீர்கள், ஆனால் நடந்த சம்பவத்தினை தானே பதிவு செய்கிறார்கள் என ஏற்றுக்கொள்ள மாட்டீர்கள் , இது என்ன வகையான நியாயம் ?//

அதே போல் வன்னிய பெண்ணை இழுத்துக் கொண்டு ஓடியதால் 300 குடிசைகள் சாம்பலாக்கப்பட்டதை சாதியை குறிப்பிட்டு ஒரு படத்தை எடுத்து விட்டு பிறகு இஸ்லாத்தை நோக்கி வரட்டும்.

வவ்வால் said...

சு.பி.சுவாமிகள்,

//அதை ஏன் படமாக எடுக்கவில்லை. பால் தாக்கரே செய்யாத அட்டூழியமா? இவர்கள் செய்த கொலைகளை வைத்து நுற்றுக் கணக்கான படங்கள் தயாரிக்கலாம். ஏன் எடுக்கவில்லை. எடுததால் மறு நாள் முருகதாஸை கர்கரேயை தூக்கியது போல் தூக்கி விடுவார்கள். :-)//

ஒருத்தர் இதை தான் படமாக எடுக்க வேண்டும் என யாரும் சொல்ல முடியாது, அது ஒரு வியாபாரம், பெரும்பான்மை பார்த்தால் தான் போட்ட முதலீட்டை எடுக்க முடியும், எனவே அப்படி எடுக்கிறார்கள்.

இதற்கு காரணம் மக்களே, நீங்கள் சொன்னது போல எடுத்தால் படம் ஓடும் என தெரிந்தால் எடுப்பார்கள்.

இதை எல்லாம் நாம் சொல்ல முடியாது, பிடித்தால் பாருங்கள் ,பிடிக்கவில்லை என்றால் புறக்கணியுங்கள், ஆனால் அப்படி எடு ,இப்படி எடு என சொல்ல முடியாதே ,நீங்கள் சொன்னது போல எடுத்து படம் ஓடவில்லை எனில் நீங்கள் போட்ட பணம் முழுவதையும் வட்டியுடன் திருப்பி தருவீர்களா?

அப்படி எனில் நீங்களே ஒரு படம் எடுக்கலாமே :-))

ஆனால் கல்வி கற்பது என்பது ஒவ்வொருவரின் தேவைக்காக, வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் காண கல்வி கற்க வேன்டும், அதில் இருபாலர் சேர்ந்து படித்தால் கெட்டுப்போவார்கள் என படிக்காமல் இருந்தால் யாருக்கு நஷ்டம் என நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

இஸ்லாமிய பெண்கள் பலரும் இருபாலர் பள்ளி,கல்லூரி என படித்து சகஜமாக வாழ்ந்து கொண்டும் இருக்கும் போது ஒரு சில சம்பவங்களை மட்டும் நீங்கள் உதாரணம் காட்டுவது ஏன்?

ஒன்றாக சேர்ந்து படித்த அனைவரும் கெட்டுவிட்டார்கள் என எப்படி தெரியும் உங்களுக்கு?

அரபு தேசத்தில் வேலைக்கு வரும் பெண்களை பாலியல் தொல்லை செய்கிறார்கள் சிலர் என்பதால் ஒட்டு மொத்த அரபியர்களும் காமவெறியர்கள் என சொன்னால் ஏற்றுக்கொள்வீர்களா?

அப்போ மட்டும் அப்படி செய்பவர்கள் உண்மையான இஸ்லாமியர்கள் இல்லை என்பீர்களே :-))

அதே போல ஒன்றாக சேர்ந்து படிப்பவர்கள் யாரேனும் முறை தவறிப்போனால் அவர்கள் உண்மையான இஸ்லாமியர் இல்லை என சொல்லிவிட்டு எளிதாக எடுத்துக்கொள்ளுங்களேன் :-))

ஆண்,பெண் ஒன்றாக படிக்கும் போது காதல் வயப்படுவது ஒரு சதவீதம் கூட இருக்காது, மீதி 99% அப்படி எல்லாம் செய்யாமல் படித்துவிட்டு வேலைக்கு போய் உங்கள் எதிர்ப்பார்ப்பு படி ஒழுக்கமாகவே இருக்கிறார்கள், ஏன் 99% மக்களை பார்க்காமல் ஒரு சதவீதத்தினை நினைத்து பயப்படுகிறீர்கள்?

சிந்திக்க மாட்டீர்களா!!!

suvanappiriyan said...

//ஒருத்தர் இதை தான் படமாக எடுக்க வேண்டும் என யாரும் சொல்ல முடியாது, அது ஒரு வியாபாரம், பெரும்பான்மை பார்த்தால் தான் போட்ட முதலீட்டை எடுக்க முடியும், எனவே அப்படி எடுக்கிறார்கள்.//

இந்த கூத்தாடிகள் தங்களின் மனைவி மக்கள் சந்தோஷமாக இருக்கவும் பணம் சம்பாதிக்கவும் முஸ்லிம் சமூகம்தான் கிடைத்ததா? இப்படி ஒரு சமூகத்தை பொய்யான பிம்பத்தை காட்டித்தான் தங்கள் வயிறை வளர்க்க வேண்டுமா? இதற்கு தனது மனைவியை விபசாரத்திற்கு விட்டால் இதை விட அதிக பணம் சம்பாதிக்கலாம். அதையும் முயற்சிக்கலாமே. இந்த கேடு கெட்டவர்கள் அதையும் செய்வார்கள்.

//ஆண்,பெண் ஒன்றாக படிக்கும் போது காதல் வயப்படுவது ஒரு சதவீதம் கூட இருக்காது, மீதி 99% அப்படி எல்லாம் செய்யாமல் படித்துவிட்டு வேலைக்கு போய் உங்கள் எதிர்ப்பார்ப்பு படி ஒழுக்கமாகவே இருக்கிறார்கள், ஏன் 99% மக்களை பார்க்காமல் ஒரு சதவீதத்தினை நினைத்து பயப்படுகிறீர்கள்?//

வேறு மார்க்கம் இல்லை என்றால் கட்டாயத்துக்கு படித்தே ஆக வேண்டும். ஆனால் ஆண்கள் தனியாகவும் பெண்கள் தனியாகவும் படிக்க சகல வசதிகளும் இருக்கும் போது தெரிந்தே ஏன் சிக்கலில் மாட்ட வேண்டும் என்பதே என் கேள்வி.

நீங்களும் சிந்திக்க மாட்டீர்களா?

R.Puratchimani said...

ஐயா சுவனம்,
ஆண் பெண் காதல் போல இப்பொழுது பெண்ணும் பெண்ணும் கூட காதலிப்பது சில இடங்களில் அதிகமாகிறதாம் எனவே பெண்களை வீட்டுக்குள்ளே வைத்து பூட்டிவிடுவோமா?

suvanappiriyan said...

//ஆண் பெண் காதல் போல இப்பொழுது பெண்ணும் பெண்ணும் கூட காதலிப்பது சில இடங்களில் அதிகமாகிறதாம் எனவே பெண்களை வீட்டுக்குள்ளே வைத்து பூட்டிவிடுவோமா? //

ஓரின ஈர்ப்பு என்பது வெகு சொற்பமே. ஐந்து சதவீதம் கூட தேற மாட்டார்கள். அவர்களை சமாளிப்பது பெரிய காரியம் அல்ல. ஆனால் ஆணும் பெண்ணும் ஈர்ப்பு எனபது 90 சதவீதமான மக்களிடம் இயற்கையாகவே உருவானது. எனவே இதற்கு கட்டாயம் சில தடுப்புகள் தேவை. தவினால் பாதிக்கப்படுவது பெண்ணினமே.

R.Puratchimani said...

//ஓரின ஈர்ப்பு என்பது வெகு சொற்பமே. ஐந்து சதவீதம் கூட தேற மாட்டார்கள். அவர்களை சமாளிப்பது பெரிய காரியம் அல்ல.//
எப்படி சமாளிப்பது ஏதாவது யோசனை?

வவ்வால் said...

சு.பி.சுவாமிகள்,

//ஆனால் ஆண்கள் தனியாகவும் பெண்கள் தனியாகவும் படிக்க சகல வசதிகளும் இருக்கும் போது//

உண்மையில் அப்படி சகல வசதிகளும் இருக்கிறது, பெண்களுக்கு என தனி கல்வி நிலையங்கள் போதுமான அளவில் இருக்கிறது என நீங்கள் நினைக்கிறீர்களா?

தாராளமாக தனியாக படிக்க வையுங்கள் :-))

நாட்டு நிலவரமே தெரியாத ஒரு மூடருடன் இம்புட்டு நேரம் பேசிக்கிட்டு இருந்திருக்கேனே :-))

பொதுவாக அனைத்து மாணவர்களுக்கும் கல்வி அளிக்க கூட தேவையான எண்ணிக்கையில் பள்ளிகள் இல்லை.

இன்று அரசு பள்ளிகளின் எண்ணிக்கையை விட தனியார் பள்ளிகளின் எண்ணிக்கை தான் அதிகம், அதில் எத்தனை பள்ளிக்கூடங்கள் பெண்களுக்கு மட்டும் என இருக்கிறது?

கிருத்துவ மிஷனரிகளை தவிர வேறு யாரும் தனியார் பெண்கள் பள்ளிக்கூடம் நடத்தவில்லை. தெரிந்தால் சொல்லுங்கள்.

மற்றபடி பெண்கள் பள்ளியை நடத்துவது அரசு மட்டுமே,அவையும் எல்லா ஊரிலும் இருக்காது.

சரி பெண்கள் கல்லூரி மொத்தம் எத்தனை தேறும்,அதுவும் சொற்பமே, பெண்கள் மட்டும் பயிலும் மருத்துவக்கல்லூரி இருக்கிறதா?

பொறியியல் கல்லூரிகள் வெகுசிலவே பெண்களுக்கு உள்ளது.

பெண்கள் மட்டும் பயிலும் கல்வி நிலையம் வெகு சொற்பமாக இருக்கும் போது எப்படி அனைது வசதியும் பெண்கள் பயில இருக்குன்னு சொல்கிறீர்கள்?

சிந்திக்க மாட்டீர்களா :-))

சரி பெண்கள் மட்டும் பயிலும் கல்வி கூடங்கள் கண்டுப்பிடிச்சு படிக்க வச்சாலும் ,பெண்கள் மட்டுமே வேலை செய்யும் இடம் தேடி வேலைக்கு போகணும், பின்னர் பெண்கள் மட்டுமே பயணிக்கும் பேருந்து, ரயில், விமானம் எல்லாம் வேண்டுமே ,இருக்கா :-))

suvanappiriyan said...

திரு வவ்வால்!

//நாட்டு நிலவரமே தெரியாத ஒரு மூடருடன் இம்புட்டு நேரம் பேசிக்கிட்டு இருந்திருக்கேனே :-))//

பாலூட்டியின் பெயரை வைத்திருப்பதால் மூடத்தனமாகத்தானே சிந்திக்க தெரியும். என்னை மூடன் என்று சொல்லும் முன்பு உம்முடைய முகத்தை முதலில் கண்ணாடியில் பார்த்துக் கொள்ளவும்.( நிதான நிலையில் இருக்கும் போது பார்க்கவும்.) :-)

//கிருத்துவ மிஷனரிகளை தவிர வேறு யாரும் தனியார் பெண்கள் பள்ளிக்கூடம் நடத்தவில்லை. தெரிந்தால் சொல்லுங்கள்.//

அதனால்தான் செல்வந்தர்கள் அதிகம் பெண்கள் கல்லூரிகளை உருவாக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறேன். எங்கள் கிராமத்தில் 12 ஆம் வகுப்பு வரை பெண்கள் மட்டுமே படிக்கும் பள்ளியை உருவாக்கியுள்ளனர். இதனால் பல இந்து பெண்களும் எந்த பயமும் இன்றி படிக்க வந்து கொண்டிருக்கின்றனர்.

பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று சூழல் வரும்போது அஞ்சல் வழியில் கல்வி கற்கலாம். அல்லது ஹாஸ்டலில் தங்க வைக்காமல் தினமும் வீட்டுக்கு வந்து விடுவது போன்ற ஏற்பாடுகளை செய்து கொள்வதில் எந்த சிரமும் இருக்காது. பெண்களின் பாதுகாப்பை துறந்து மேல் படிப்பு படித்து எதை சாதிக்க போகிறார்கள்?

பெண்களுக்கு தனி கல்லூரிகள் மாவட்டம் தோறும் அமைக்க அரசுக்கு பிரஷர் கொடுக்க வேண்டும்.

//பொறியியல் கல்லூரிகள் வெகுசிலவே பெண்களுக்கு உள்ளது.//

எங்கள் கிராமத்தில் ஒரு முஸ்லிம் பெண் பொறியியல் படிப்பு படித்து விட்டு குடும்ப தலைவியாக சமைத்து போட்டுக் கொண்டு இருக்கிறது. :-) படிப்பை தேர்ந்தெடுக்கும் போதே பெண்களின் உடல் நிலைக்கு ஏற்றவாறு தோதான படிப்பாக தேர்ந்தெடுக்க வேண்டும்.

suvanappiriyan said...

//எப்படி சமாளிப்பது ஏதாவது யோசனை?//

பெரும்பான்மையினர் ஒன்று சேரும்போது தான் எந்த தவறான செயல்பாடும் அரங்கேறுகிறது. வகுப்பில் இரண்டு பேர் இருந்து ஒட்டு மொத்த மாணவிகளையும் வழி கெடுக்க முடியாது. அதிலும் சிறு வயதிலிருந்தே குர்ஆன் போதனையில் வளர்ந்த பெண் தவறான வாழ்வை தேர்ந்தெடுக்க அவ்வளவு லேசில் துணிய மாட்டாள்.

ஆனால் ஆணும் பெண்ணும் சேர்ந்திருக்கும் போது இந்த ஈர்ப்பு இயற்கையாகவே வந்து விடும். போதாதற்கு இவர்களை கெடுக்க கூத்தாடிகளும் தினம் ஒரு படமாக வெளியிட்டு வருகின்றனர்.

Unknown said...

திரு சுவானம் இஸ்லாமிய பெண்கள் பாதுகாப்பாக இருக்க ஒரே ஒரு வழிதான் உள்ளது. ஒன்று செய்யுங்கள் உங்கள் கூட்டம் மொத்தத்தையும் அலேக்காக அரேபிய தேசத்திற்கோ , பாகிஸ்தான் , பங்களாதேஷ் போன்ற உங்களது ஆதர்ச இஸ்லாமிய தேசங்களுக்கோ கூட்டி சென்று நிம்மதியாக வாழுங்களேன்.. யார் உங்களை தடுக்கப் போகிறார்கள்?

Anonymous said...

ஐயா வாடிவேலு நீங்களும்,உங்களைபோன்றவர்களும் நேபாளம் சென்றால் இந்தியாவில் உள்ள அனைத்து பெண்களும் பாதுகாப்பாக இருப்பார்கள்.எப்போ போகப்போகிறீர்கள்?

Unknown said...

அய்யா அனானி நான் ஒன்றும் தாய்நாட்டில் இருந்து கொண்டே அரேபியாவைப் பாருங்கள் , பாகிஸ்தானைப் பாருங்கள் அங்கு வடிவது போல் தேனும் பாலும் வடியவில்லையே, இந்தியா இன்னும் இஸ்லாமிய நாடாகவில்லையே என்று கண்ணீர் வடிக்கவில்லை. எனவே என் நாட்டை விட்டு நான் போக மாட்டேன். உலகின் எந்த இஸ்லாமிய தேசத்தை விடவும் எனது நாட்டில் இஸ்லாமியர்கள் சுதந்திரமாக இருக்கிறார்கள் என்பதில் பெருமை கொள்கிறேன். இந்துமதத்தைப் பற்றி பெருமையும் இஸ்லாமைப் பற்றி தூற்றியும் ஒரு வலைத்தளம் என்னால் அரேபியாவிலேயோ அல்லது பாகிஸ்தாநிலேயோ என்னால் நடத்திவிட முடியுமா. பொது இடத்தில் என்னை தூக்கிலிட்டு விடுவார்களே.

Unknown said...

அய்யா அனானி நான் ஒன்றும் தாய்நாட்டில் இருந்து கொண்டே அரேபியாவைப் பாருங்கள் , பாகிஸ்தானைப் பாருங்கள் அங்கு வடிவது போல் தேனும் பாலும் வடியவில்லையே, இந்தியா இன்னும் இஸ்லாமிய நாடாகவில்லையே என்று கண்ணீர் வடிக்கவில்லை. எனவே என் நாட்டை விட்டு நான் போக மாட்டேன். உலகின் எந்த இஸ்லாமிய தேசத்தை விடவும் எனது நாட்டில் இஸ்லாமியர்கள் சுதந்திரமாக இருக்கிறார்கள் என்பதில் பெருமை கொள்கிறேன். இந்துமதத்தைப் பற்றி பெருமையும் இஸ்லாமைப் பற்றி தூற்றியும் ஒரு வலைத்தளம் என்னால் அரேபியாவிலேயோ அல்லது பாகிஸ்தாநிலேயோ என்னால் நடத்திவிட முடியுமா. பொது இடத்தில் என்னை தூக்கிலிட்டு விடுவார்களே.