Followers

Wednesday, November 07, 2012

ஏழு அடுக்குகள் பற்றிய சில உண்மைகள்!

ஏழு அடுக்குகள் பற்றிய சில உண்மைகள்!

பழைய கிரேக்க கண்டு பிடிப்புகளின் படி பூமியின் விட்டத்தின் அளவு 12750 கிலோ மீட்டர் என்று தோராயமாக குறிப்பிட்டுள்ளனர். 20 ஆம் நூற்றாண்டில்தான் பூமியைப் பற்றிய ஆராய்ச்சிகள் அதிகரித்து மேலும் பல உண்மைகள் தெரிய வந்தன. பூமியின் மத்திய கோட்டிலிருந்து நீளம் சுமார் 40,030.2 கிலோமீட்டர் (24,873.6 மைல்) என்று தற்போதுதான் கண்டு பிடித்துள்ளார்கள்.

ஒரு முட்டை எவ்வாறு கட்டமைக்கப்பட்டுள்ளதோ அத்தகைய கட்டமைப்பில் பூமியின் கட்டுமானம் சீர் செய்யப்பட்டுள்ளது. பூமியை மூன்று பெரும் பிரிவாக பிரித்து அவற்றில் சிறு பிரிவுகளும் சேர்ந்து மொத்தம் ஏழு பிரிவுகளாக விஞ்ஞானிகள் பிரிக்கின்றனர். சில விஞ்ஞானிகள் பூமியை ஐந்து பாகமாகவும் பிரித்து ஆய்வு செய்து வருகின்றனர். இந்த பிரிவுகள் ஒவ்வொன்றிலும் அதன் அடர்த்தி வித்தியாசப்படுகிறது.

பூமியின் உள் அமைப்பை நேரிடையான கருவி கொண்டு மனிதனால் இன்று வரை ஆய்வு செய்ய முடியவில்லை.! மாறாக பூமிக்குள் எப்போதாவது ஏற்படும் பூகம்ப நடுக்கத்தின் அதிர்ச்சி அலைகளே (Earthquake Shock Waves) பூமியின் உள்ளமைப்பை மறைமுகமாக நமக்கு அறிவிக்கின்றன ! மனிதரின் நேரிடை அறிவு பூமியின் மேற்தட்டை 5 மைல் (8 கி.மீ.) ஆழத் துளையிட்டுக் கண்டறிந்தவையே ! நிலவையும், செவ்வாய்க் கோளையும் தெரிந்துள்ள அளவு மனிதன் பூமிக்குக் கீழ் 20 மைல் (33 கி.மீ) ஆழத்தில் உள்ள அமைப்பை அறியக் கூடிய நேரிடைக் கருவிகளை இதுவரை கண்டு பிடிக்கவில்லை.!

பூமியின் மேல் ஓடும், இடைப் பகுதியும், நடுப்பகுதியும் அடர்த்தியில் மிகுந்த வித்தியாசப் படுகிறது. அதே போன்று கடல்கள் மலைகள் உள்ள பகுதிகளிலும் இந்த அடர்த்தியானது இடத்துக்குத் தக்கவாறு மாறுபடுகிறது. பூமியின் கீழ் ஐந்து கிலோ மீட்டரில் உள்ள அடர்த்தியும், 30 கிலோ மீட்டரில் உள்ள அடர்த்தியும், 100 கிலோ மீட்டர் ஆழத்திலும் உள்ள அடர்த்தியிலும் பல வித்தியாசங்களைக் காண முடிகிறது. 2900 கிலோ மீட்டர் ஆழத்தில் வெப்பத்தினால் ஆன அடுக்குகள் சூழப்பட்டுள்ளன. லார்வா போன்ற நெருப்புக் குழம்புகளை எல்லாம் நாம் பார்த்திருப்போம்.http://en.wikipedia.org/wiki/Structure_of_the_Earth

பூமியின் மேல் ஓடுகளானது இரும்பு, மெக்னீஷியம், கால்சியம் போன்ற தனிமங்களால் நிரப்பப்பட்டுள்ளது. கீழே செல்ல செல்ல அடர்த்தி அதிகரிப்பினால் வெப்பமயமானதாக மாறி விடுகின்றது. மனிதன் வாழ்வதற்கு தகுதியாக மேல் பரப்பை குளிராக்கி கீழ் பரப்பை வெப்பமாக்கி அதிலும் மனிதனுக்கு பல நன்மைகளை இறைவன் வழங்கிக் கொண்டிருக்கிறான்.

விஞ்ஞானிகளுக்கு இன்றும் விடுவிக்க முடியாத ஒரு பெரும் புதிராக இருந்து வருவது பூகோளத்தின் கொந்தளிக்கும் விந்தையான உட்புற அமைப்பு ! ஆழமாய்த் துளையிட்டுப் பூமியின் மையத்தைக் கண்ணாலும், கருவியாலும் நோக்க முடியாது ! பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு பூமி பிறந்த காலம் முதல் தொடர்ந்து உருமாறிக் கொண்டே வருகிறது.

இதுவரை மனிதன் முதல் வானத்தைத்தான் பார்த்திருக்கிறான். மற்ற ஆறு வானங்கள் மனிதனால் நெருங்க முடியாத தொலைவில் உள்ளது. ஆனால் அதன் அமைப்பு பூமியின் ஏழு அடுக்குகளைப் போன்று அமைந்துள்ளதாக குர்ஆனின் வசனத்திலிருந்து அறிகிறோம். மேல் வானத்தைப் பற்றிய ஆராய்ச்சி நமக்கு தற்போது தேவையில்லை என்றாலும் ஒரு தகவலுக்காக தெரிந்து கொள்வோம்.

வானங்களை ஏழு அடுக்குகளாக படைத்ததாக இறைவன் இங்கு கூறுகிறான். மற்றொரு வசனத்தில் வானத்தை போன்று பூமியையும் ஏழு அடுக்குகளாக படைத்திருப்பதாக குர்ஆன் கூறுகிறது. இன்றைய அறிவியல் கண்டுபிடிப்புகள் ஆச்சரியமாக பூமியின் உள் கட்டமைப்பு ஏழு அடுக்குகள் என்று கூறுகிறது. இதனை இந்த படம் சிறப்பாக விளக்குவதைப் பார்க்கலாம்.'அவனே ஏழு வானங்களை அடுக்கடுக்காகப் படைத்தான். அளவற்ற அருளாளனின் படைப்பில் எந்த முரண்பாடுகளையும் நீர் காண மாட்டீர். மீண்டும் பார்ப்பீராக! ஏதேனும் குறையைக் காண்கிறீரா?'

-குர்ஆன் 67:3

'அல்லாஹ் ஒவ்வொரு பொருளின் மீதும் ஆற்றலுடையவன் என்பதையும் நீங்கள் அறிந்து கொள்வதற்காக அலலாஹ்வே ஏழு வானங்களையும் பூமியில் அது போன்றதையும் படைத்தான். அவற்றிற்கிடையே கட்டளைகள் இறங்குகின்றன.'

-குர்ஆன் 65:12

"அவற்றிற்கிடையே கட்டளைகள் இறங்குகின்றன"

உயிரற்ற பொருட்களுக்கு கட்டளைகள் எவ்வாறு இறங்குகின்றன என்ற கேள்வி நமக்கு எழுவது இயல்பே! இறைவனுடைய ஆற்றல் எப்படிப்பட்டது என்றோ அல்லது அவனது ஆற்றல் எதை எல்லாம் உள்ளடக்கியது என்றோ நம்மால் ஒருக்காலும் விளங்க முடியாததாகும். அவன் அனைத்து சார்பியல் நிலைகளையும் ஒப்பீடுகளையும் கடந்து தமக்குத் தாமே சம்பூரணமானவன். எனவே அவனது அறிவாற்றலுக்கு முன்னால் உயிருள்ளவை உயிரற்றவை என்ற பாகுபாடு கிடையாது.

காய்ந்து இறந்து விட்டதாக நினைக்கும் ஒரு விதையை பல வருடங்களுக்குப் பிறகும் மண்ணில் போட்டு கொஞ்சம் தண்ணீரையும் ஊற்றினால் பூமியை பிளந்து கொண்டு செடி வெளி வருவதைப் பார்க்கிறோம். இது எவ்வாறு நிகழ்கிறது? அந்த மண்ணுக்கு இந்த கட்டளையை அளித்தது யார்? என்ற கேள்வி வருகிறதல்லவா?

மனிதர்களாகிய நாம் கூட உயிரற்ற பொருட்களுடன் கருத்துப் பரிமாற்றம் செய்வதைப் பார்க்கலாம். உதாரணத்திற்கு விண்வெளிக்கு செலுத்தப்படும் ராக்கெட்டை எடுத்துக் கொள்வோம். அதை விண்ணில் செலுத்தவதற்கும் அது விண்வெளியில் செய்யப்படக் கூடிய வேலைகளையும் நாம் பூமியில் இருந்து கொண்டே கட்டளைகளை அதற்கு பிறப்பிக்கிறோம். அவைகள் நமது கட்டளைகளை உடன் நிறைவேற்றுகின்றன. (சம்பள உயர்வு கேட்பதில்லை: வேலை நிறுத்தமும் செய்வதில்லை.:-)) இயக்கத்தில் சில குறைபாடுகள் இருந்தால் அதையும் சரி செய்ய சொல்லி அவை சமிக்ஞை தருகிறது. பொறியாளர்கள் சரி செய்தவுடன். அவை தங்களின் வேலைகளை சரி வர செய்கின்றன. இந்த பொருட்களுடன் நாம் உரையாட மனித மொழிகளை உபயோகிக்காமல் மின் அணு மொழியில் இயந்திரங்களோடு உரையாடுவதால் அவற்றின் வேலைகளை நம்மால் வாங்க முடிகிறது. எனவே உயிரற்ற பொருட்கள் விளங்கும் மொழியில் நமது பரிமாற்றம் இருந்தால் அத்தகைய அறிவு நமக்கு கொடுக்கப்பட்டிருந்தால் எவற்றுடனும் நம்மால் சம்பாஷனை நடத்த முடியும் என்று அறிகிறோம். அற்பனான மனிதன் ராக்கெட்டுகளோடு உரையாடும் போது நம்மை படைத்த இறைவன் மலைகளோடும், காற்றோடும் நதிகளோடும் மண்களோடும் உரையாட கருத்துப் பரிமாற்றம் செய்ய வல்லமை உடையவனே என்றும் நாம் நம்புவோம்.

-------------------------------------------------------

இந்து மத புராணங்களில் ஒன்றான ஸ்ரீமத் பாகவதம் இந்த பூமியானது ஏழு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளதாக கூறுகிறது.

This earth planet is divided into seven dvīpas by seven oceans, and the central dvīpa, called Jambūdvīpa, is divided into nine varṣas, or parts, by eight huge mountains. Bhārata-varṣa is one of the above-mentioned nine varṣas, and Ketumāla is also described as one of the above varṣas. It is said that in Ketumāla varṣa, women are the most beautiful. This varṣa was conquered by Arjuna also. A description of this part of the world is available in the Mahābhārata (Sabhā 28.6).

உலக மக்கள் அனைவருக்கும் இறைவன் வேதங்களை அருளியதாக கூறுகிறான். அந்த மாற்றப்படாத வேதங்களில் சொல்லப்பட்ட செய்திகளை உள்வாங்கி இது போன்ற புராணங்களில் ஆங்காங்கே கோடிட்டுக் காட்டியுள்ளனர் இதனை இயற்றியவர்கள்.

ஆய்வுக்கு உதவிய தளங்கள்:

/wiki/This_earth_planet_is_divided_into_seven_dvipas_by_seven_oceans,_and_the_central_dvipa,_called_Jambudvipa,_is_divided_into_nine_varsas,_or_parts,_by_eight_huge_mountains._Bharata-varsa_is_one_of_the_above-mentioned_nine_varsas

http://vaniquotes.org

http://en.wikipedia.org/wiki/Structure_of_the_Earth

http://pubs.usgs.gov/gip/dynamic/inside.html


14 comments:

UNMAIKAL said...

அன்றே திரு குரானில் கூறப்பட்டிருக்கும் இன்றைய விஞ்ஞான கண்டுபிடிப்புகள். !!!

சொடுக்கி >>>> இன்றைய விஞ்ஞான கண்டுபிடிப்புகள் குரானில் 1400 வருடங்களுக்கு முன்பே அழுத்தமாக கூறப்பட்டிருக்கிறது. <<<<<< கேளுங்க‌ள்.

.
.

Kiruththikan Yogaraja said...

கீழே செல்ல செல்ல அடர்த்தி அதிகரிப்பினால் வெப்பமயமானதாக மாறி விடுகின்றது//தவறான கூற்று.அடர்த்தி அதிகரிப்பதால் வெப்பமாவது உண்மையானால் இரசத்தை என்னவென்று கூறுவீர்கள்.10 மீட்டருக்கு இரசத்தை ஊற்றிவிட்டு அடியில் சென்ஸரை வைத்து உருவாகும் வெப்பத்தில் இருந்து சுலபமாக மின்னைத்தயாரித்துவிடலாம்.அத்துடன் பிக் பாங்க் தியரியின் படி நமது பிர்ஞ்சம் தோன்றியது வெடிப்படைந்ததுகள் குளிர்வடைந்தன.அவ்வாறு குளிர்வடந்ததன்காரணமாக வெளிப்புறம் குளிர்வாக இருக்கின்றது.

Easy (EZ) Editorial Calendar said...

இதுவரை எங்கேயும் கேட்டிறாதவை......பகிர்வுக்கு மிக்க நன்றி......

Did you get a chance to check the website www.ezedcal.com/ta to manage editorial calendar easily for your blog and show your editorial calendar in your blog easily (optional)
Thanks & Regards
Malar

UNMAIKAL said...

கலப்புத் திருமணத்தால் தர்மபுரியில் பற்றி எரிந்த தலித் கிராமம்

Updated: Thursday, November 8, 2012, 10:14 [IST]

தர்மபுரி: தருமபுரி அருகே இருவேறு பிரிவைச் சேர்ந்தவர்கள் காதல் திருமணம் செய்து கொண்டதால் ஒரு கிராமமே பற்றி எரிந்துள்ளது.

இதனால் தர்மபுரி மாவட்டத்தில் பதற்றம் உருவாகியுள்ளது.

தர்மபுரி மாவட்டம் செல்லம்பட்டியைச் சேர்ந்தவர் திவ்யா. இவர் வன்னியர் இனத்தைச் சேர்ந்தவர்.

இவர் நத்தம் காலணியைச் சேர்ந்த இளவரசனை காதலித்தார்.

இளவரசன் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்பதால் பெண் வீட்டார் இதை ஏற்றுக்கொள்ளவில்லை.

எனவே, திவ்யா வீட்டை விட்டு ஓடிவிட்டார்.

இதனால் திவ்யாவின் தந்தை நாகராஜ், இளவரசன் வீட்டுக்கு சென்று தன் மகளை தன்னுடன் அனுப்பிவிடுமாறு கேட்டுள்ளார்.

அதற்கு மறுத்துவிட்ட இளவரசன், திவ்யா இப்போது என் மனைவி இனி அவள் என்னுடன்தான் இருப்பாள் என்று உறுதியாக கூறிவிட்டார்.

இதனால் மனமுடைந்த நாகராஜ் உறவினர்கள் தன்னை கேலி செய்வார்கள் என்று அஞ்சி புதன்கிழமையன்று தற்கொலை செய்துகொண்டார்.

இதனையடுத்து செல்லம்பட்டியைச் சேர்ந்தவர்கள் நாகராஜின் உடலை வைத்துக்கொண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தீ வைத்து எரித்தனர்

அதே ஆத்திரத்தோடு, நத்தம் காலணி குடியிருப்புக்குள் புகுந்து வீடுகளையும், பொருட்களையும் அடித்து நொறுக்கி, குடிசைகளுக்கு தீ வைத்தனர்.

இதில் குடியிருப்புகள் மொத்தமும் எரிந்து சாம்பலானது.

அந்த பகுதியில் இருந்த மரங்களை வெட்டி சாய்த்த நபர்கள், நத்தம் காலணியில் இருந்த இருசக்கர, நான்குசக்கர வாகனங்களையும் தீவைத்து எரித்தனர்.

ஊருக்குள் தீயணைப்புத் துறையோ போலீஸாரோ, வருவாய்த் துறையினரோ பத்திரிகையாளர்களோ செல்ல முடியாத நிலை உள்ளது.

இதனால் அந்தப் பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தீ வைத்தவர்கள் கைது

இதனிடையே குடிசைகளுக்கு தீவைத்த கலவரக்காரர்கள் 90 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தீவிபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தலா 5 ஆயிரம் ரூபாய் வழங்க மாவட்ட ஆட்சியர் லில்லி உத்தரவிட்டுள்ளார்.

http://tamil.oneindia.in/news/2012/11/08/tamilnadu-love-torches-village-164351.html

நாகூர் மீரான் said...

சலாம் சகோ.சுவனப்பிரியன்

அடுத்தடுத்த அருமையான பதிவுகள்..மாஷா அல்லாஹ் !!!

படிப்பதற்கே ஆர்வமாக உள்ளது..இதைப்போன்று இன்னும் அதிகமாக உங்களை போன்றோரிடமிருந்து எதிர்பார்க்கிறோம்..!!!


(பின்குறிப்பு : சில திராணி இல்லாதவர்கள் அவர்களுக்குள்ளேயே பேசி கொள்வதற்கு ப்ளாக் வைத்துள்ளனர் ...மொபைல் ஈமெயில் எதுக்கு இருக்குன்னே தெரியல!!!..அவர்களைப்போல் சுவனப்பிரியன் இல்லாமல் எதிர்கருத்து கொண்டவர்களின் நியாயமான கேள்வியை நீக்காமல், பதிலளிப்பதை எண்ணி மகிழ்ச்சி அடைகிறேன்...)


நன்றி !!!

சுவனப் பிரியன் said...

திரு கிருத்திகேயன் யோக ராஜா!

//தவறான கூற்று.அடர்த்தி அதிகரிப்பதால் வெப்பமாவது உண்மையானால் இரசத்தை என்னவென்று கூறுவீர்கள்.10 மீட்டருக்கு இரசத்தை ஊற்றிவிட்டு அடியில் சென்ஸரை வைத்து உருவாகும் வெப்பத்தில் இருந்து சுலபமாக மின்னைத்தயாரித்துவிடலாம்.//

பூமிக்கு அடியில் லார்வா எனும் நெருப்புக் குழம்பு உண்டானதன் காரணம் என்னவென்று சொல்ல முடியுமா? பூமியில் உள்ள சில்லுகள் ஒன்றோடொன்று மோதி தோன்றும் நெருப்பு குழம்புகள் தான் எரிமலையாக வெளி வருகின்றன. இவை பூமிக்கு அடியில் செல்ல செல்ல குளிர்ந்து சுற்றுப் புறத்தை அடர்த்தி மிக்கதாகவும் வெப்பமயமானதாகவும் மாற்றி விடுவதாகத்தான் அறிஞர்களின் கூற்று உள்ளது.

பிக் பேங் தியரி மூலம் சிதறுண்ட கோள்கள் அனைத்தும் மேல்புறம் மட்டுமே குளிர்வடைந்துள்ளது. உட்புறம் தாங்க முடியாத வெப்பத்தினால் இன்றும் சூழப்பட்டுள்ளது. எனவே தான் மனிதனால் 20 கிலோ மீட்டர் தூரம் வரை கூட உள்ளே சென்று ஆய்வு செய்ய முடியவில்லை. அங்குள்ள வெப்பம் அனைத்து பொருட்களையும் கருகச் செய்து விடும்.

சுவனப் பிரியன் said...

சகோ உண்மைகள்!

//அன்றே திரு குரானில் கூறப்பட்டிருக்கும் இன்றைய விஞ்ஞான கண்டுபிடிப்புகள்.//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

சுவனப் பிரியன் said...

Easy (EZ) Editorial Calendar!

//இதுவரை எங்கேயும் கேட்டிறாதவை......பகிர்வுக்கு மிக்க நன்றி......//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

சுவனப் பிரியன் said...

சகோ நாகூர் மீரான்!

//படிப்பதற்கே ஆர்வமாக உள்ளது..இதைப்போன்று இன்னும் அதிகமாக உங்களை போன்றோரிடமிருந்து எதிர்பார்க்கிறோம்..!!!//

நேரம் கிடைக்கும் போது அவ்வப்போது மேலும் பல தகவல்களை தர முயற்சிக்கிறேன்.

ராவணன் said...

அண்ணாச்சி...சிவனின் அடியையும் முடியையும் இதுவரை யாரும் கண்டது கிடையாது.

ராவணன் said...

அண்ணாச்சி...மேலே ஏழு உலகம், கீழே ஏழு உலகம்...சரிதான் நம்ம ஆளுக சொன்னது.

இதுக்கு அரேபியா போகனுமா?

ராவணன் said...

நம்ம ஏக இறைவன் முனியாண்டிசாமி ரொம்பப் பெரியவன் அண்ணாச்சி.

நாகூர் மீரான் said...

உத்தமர்,மகான்.. ஸ்ரீஸ்ரீஸ்ரீ ராவணன்,

//அண்ணாச்சி...சிவனின் அடியையும் முடியையும் இதுவரை யாரும் கண்டது கிடையாது.//

சிவனை பார்த்தவங்களுக்கு அடியையும் முடியையும் (படிப்பவர்கள் ஏதேதோ நினைப்பீர்களாயின் கம்பனி பொறுப்பு அல்ல.. ) பார்க்க முடியலையாம்..

கண்ணுல என்ன ப்ராபளம் !!!

//அண்ணாச்சி...மேலே ஏழு உலகம், கீழே ஏழு உலகம்...சரிதான் நம்ம ஆளுக சொன்னது.//

உங்கள் ஆளுக எல்லாத்தையும் சொல்லிடாங்களா...!!!

என்ன சொன்னாங்க... புரோட்டாவுக்கு சைடிஸ் ஏழு,அதை முனியாண்டி சாமிட்ட கேளு... அப்டின்னு வென சொல்லி இருப்பாங்க !!!

//நம்ம ஏக இறைவன் முனியாண்டிசாமி ரொம்பப் பெரியவன் அண்ணாச்சி.//

ஓஹோ..!!! அதனாலதான் உங்க முனியாண்டி சாமிய நீங்களே காலால மிதிச்சின்களோ ...!!

யாருய்யா ராவணன் அப்டிங்கற மகான்..!!! அவர பார்க்கனும்னு எனக்கு ஆசையா இருக்கு..!!! உங்கள்ள யார்க்காவது அந்த ஆசை இருக்கா...???

Kiruththikan Yogaraja said...

பூமிக்கு அடியில் லார்வா எனும் நெருப்புக் குழம்பு உண்டானதன் காரணம் என்னவென்று சொல்ல முடியுமா? பூமியில் உள்ள சில்லுகள் ஒன்றோடொன்று மோதி தோன்றும் நெருப்பு குழம்புகள் தான் எரிமலையாக வெளி வருகின்றன. இவை பூமிக்கு அடியில் செல்ல செல்ல குளிர்ந்து சுற்றுப் புறத்தை அடர்த்தி மிக்கதாகவும் வெப்பமயமானதாகவும் மாற்றி விடுவதாகத்தான் அறிஞர்களின் கூற்று உள்ளது. ///

பிக் பாங்க் நடைபெறும்போது ஆதியில் இருந்த துகள் ஐஸ் கட்டிகளாக வெடித்துச்சிதறவில்லை..லாவா போல் எரிமலைக்குளம்பாக,சக்தியாக ,ஓளியாக பலவாறு சிதறியது..எமது பிரபஞ்ச எல்லையில் அதிக இன்பிறா ரெட் ஒளி இருப்பது இதற்கு ஆதாரம்.

லாவாபோல் அதிக வெப்பனிலையுடன் எரிந்துகொண்டிருந்தவை குளிந்தபோது கிரகங்கள் தோன்றின.அவற்றுள் உள்ள அதிக வெப்பனிலைக்கும் ஸ்பேஸிற்கும் இடையேயான வெப்பனிலைப்படித்திறன் மிக அதிகம்(வெப்ப நிலை வித்தியாசம்)அண்ணளவாக 0 ற்கும் 6000,7000(அல்லது அதற்குமேல்)இடையிலான வெப்பனிலை வித்தியாசம் இருக்கும்.இதனால் வெப்பம் மிக அதிகமாக இழக்கப்படும்.வெப்பம் கதிர் வீசலாகவே இழக்கப்படும்.கதிர்வீசல் வெப்ப இழப்பு சூழலுடன் தொடுகையுற்றுள்ள பொருளின் பரப்பளவில் தங்கி இருக்கும்.காரணம் பரப்பினூடாக வெப்பம் இழக்கப்படுவதால்.எனவே மேற்பக்கம் வெப்பனிலையைவிரைவாக இழந்துவிடும் உட்பாகத்தை விட.சிம்பிள் உதாரணம் பொரொத்தவடை தொடும்போது அவ்வளவு சூடாக இருக்காது ஆனால் கடித்தவுடன் பல்லுப்பறந்துவிடுமளவிற்கு இருக்கும்.சேம் ரீசன் தான் பூமியின் உள்ளே லாவா வெப்ப நிலையுடன் இருக்க காரணம்....ஒரு வேளை எதிர்காலத்தில் மனிதன் துளையிட்டு உள்ளே இருக்கும் லாவாவை பரிசோதனை செய்யமுயன்றால் அனைவரும் அழிந்துவிடுவோம்..காரணம் உள்ளே இருக்கும் அமுக்கம் மிக மிக அதிகம் இவைதான் சுனாமியையும் வரவழைக்கின்றன(நிலக் கீழ் எரிமலைகள்)ஆகவே துளையிட்டால் தோன்றும் வேகவிசை/உந்தம்.மொமெண்டம் காரணமாக பூமி தனது சுற்றல் பாதையில் இருந்து மாறவும் தனது சாய்ந்துள்ள அச்சு மாறவும் வாய்ப்புள்ளது