Followers

Thursday, November 29, 2012

நிறுத்தல் அளவைகளில் மறைந்திருக்கும் சூட்சுமம்!



இன்று நாம் உலகம் முழுக்க நிறுத்தல் அளவைகளை அளவிடுகிறோம். முன்பெல்லாம் பொருள்களை அளவிடுவதற்கு ராத்தல்(பவுண்டு) எனும் அளவை பரவலாக பயன்படுத்தினோம். 7680 கோதுமை மணிகளின் எடை ஒரு பவுண்டு என்று முன்பு கணக்கிடப்பட்டது. தற்போது நாம் கிலோ கிராம் என்ற அளவையை பரவலாக பயன்படுத்துகிறோம். இதை வைத்து ஒரு சோதனையை தற்போது செய்து பார்ப்போம்.

ஒரே அளவுடைய இரண்டு கண்ணாடி ஜாடிகளை எடுத்துக் கொள்வோம். ஒரு ஜாடியில் உப்பை நிரப்பிக் கொள்வோம். மற்றொரு ஜாடியில் சிறு சிறு இரும்பு துண்டுகளை போட்டு நிரப்புவோம். தற்போது சாதாரணமாக நாம் பயன்படுத்தும் ஒரு தராசை எடுத்து இரண்டு ஜாடிகளையும் ஒரு சேர எடை போடுவோம். என்ன நடக்கும்? இரும்பு உள்ள ஜாடி கீழேயும் உப்பு உள்ள ஜாடி மேலேயும் காட்டும். ஏனெனில் உப்பை விட இரும்பின் பொருண்மை அல்லது அடர்த்தி அதிகமானதால் இரும்பு வைத்த ஜாடி கீழே இறங்கியுள்ளது என்று சொல்வோம். ஒரு வகையில் இந்த பதில் சரியானாலும் மற்றொரு வகையில் தவறாகும். ஏனெனில் பொருண்மையும் எடையும் ஒன்று எனும் தவறான பொருள் இந்த பதிலில் அடங்கியுள்ளது. ஆனால் எடையும் பொருண்மையும் வேறு வேறு ஆகும்.

இதனை நாம் நன்கு விளங்கிக் கொள்ள மற்றொரு சோதனையை செய்து பார்ப்போம். நாம் முன்பு எடை போட்ட உப்பையும், இரும்பையும் அதே தராசோடு விண்வெளிக்கு எடுத்துச் செல்வதாகக் கொள்வோம்.. பூமியில் நாம் பார்த்தது போன்று இரண்டு ஜாடிகளையும் தராசில் வைத்து முன்பு பார்த்தது போல் எடை பார்க்க முயற்சிப்போம். தற்போது தராசில் எந்த சலனமும் இல்லாமல் இருப்பதை பார்க்கலாம். உப்பு உள்ள பகுதியின் தட்டில் நாம் கை வைத்து கீழே அழுத்துகிறோம். இப்போது கையை எடுத்தாலும் உப்பு உள்ள பகுதி மேலே வராது. என்ன ஆனது நமது தராசுக்கு? உப்பின் பொருண்மை இங்கு இரும்பை விட கூடி விட்டதா? அதுவும் இல்லை.

இங்கு எடை பார்க்கும் கருவியில் எந்த பிரச்னையும் இல்லை. பொருண்மையும் எடையும் ஒன்று என்று முன்பு நாம் நினைத்தது தவறு என்று இந்த சோதனை நிரூபிக்கிறது. எடை என்பது இடத்திற்கு இடம் மாறுவதைப் போன்று பொருண்மை மாறுவது இல்லை. பொருண்மைதான் ஒரு பொருளின் எடைக்கு முக்கிய காரணம் என்று சொன்னால் பூமியில் காட்டிய அதே எடையை விண்வெளியிலும் காட்ட வேண்டும். ஆனால் காட்டவில்லை. இதிலிருந்து ஒரு பொருளின் எடைக்கு அதன் பொருண்மை காரணமல்ல என்பதை விளங்கிக் கொண்டோம்.

அப்படி என்றால் எடை என்பதற்கான வரை விலக்கணம் என்ன என்று இனி பார்ப்போம். அறிவியல் எடைக்கு கூறும் இலக்கணமாவது 'ஈர்ப்பாற்றலின் இழு விசை' (weight is the pull of Gravitation) என்கிறது. அதாவது பூமியின் ஈர்ப்பு விசையின் அடிப்படையிலேயே எடை தீர்மானிக்கப்படுவதாக அறிவியல் கூறுகிறது.

மேற்கண்ட விளக்கத்திலிருந்து பூமியில் ஒரு பொருளை நாம் எடை போடும் போது அப்பொருளின் மீது செயல்படும் பூமியின் ஈர்ப்பு விசையையே நாம் எடை போடுகிறோம் என்பது தெளிவாகும். இந்த புவியீர்ப்பு விசை இல்லை என்றால் நாம் சாதாரணமாக ஒரு தராசில் ஒரு பொருளை எடை போட முடியாது என்று விளங்குகிறோம்.

இது பற்றி குர்ஆன் என்ன கூறுகிறது என்பதை இனி பார்ப்போம்.

'அவன் வானத்தை உயர்த்தினான்: நீங்கள் நீதி தவறி விடக் கூடாது என்பதற்காக தராசை நிலை நாட்டினான். நிச்சயமாக எடையை நிலை நாட்டுங்கள். எடையைக் குறைத்து விடாதீர்கள்.'
-குர்ஆன் 55:7-9


இந்த வசனம் நமக்கு மிகத் தெளிவாக ஒரு செய்தியை சொல்லுகிறது. அதாவது மனித குலம் தங்களின் எடைகளை சரியாக நிறுப்பதற்காக இறைவனால் பூமியில் இந்த ஈர்ப்பு விசை ஏற்படுத்தப் பட்டுள்ளது. பூமியின் சுழற்சியில் இருந்து இந்த பூமி பாதுகாப்பாக இருப்பது வரை இந்த ஈர்ப்பு விசையானது மனித குலத்துக்கு மிகப் பெரும் பங்காற்றி வருகிறது.புவி ஈர்ப்பு விசையின் பயன்களில் இதுவும் ஒன்று. நம்மை படைத்த இறைவனின் பெருங் கருணைகளில் நமக்காக இந்த ஈர்ப்பு சக்தியை இந்த பூமிக்கு வழங்கியதும் ஒன்று. இறைவனை மறுக்கும் நாத்திகர்களுக்கு இந்த வசனமும் பூமியில் தராசு நிலை நிறுத்தப் பட்டிருப்பதும் சிறந்த பதிலைச் சொல்லிக் கொண்டிருக்கிறது.

இனி இந்த புவியீர்ப்பு விசை எவ்வாறு உருவாகிறது என்று பார்ப்போம்.

புவியின் காந்த சக்தி அளவிடமுடியாதது. வடக்கிலும் தெற்கிலும் ஒரு துருவங்கள் கொண்டு பூமியின் எல்லா இடங்களையும் இந்த சக்தி ஆக்ரமித்துள்ளது. இந்த காந்த சக்தியின் காரணம் என்ன? பூமியில் தேங்கிக்கிடக்கும் தீக்குழம்பில் இரும்பு, நிக்கல் போன்ற உலோகங்கள் திரவ நிலையில் உள்ளன.

இவை ஒரு வித மின் அதிர்வுகளை, பூமியின் சுழலும் தன்மையால் ஏற்படுத்திக்கொண்டு இருக்கின்றன. பூமியின் படிமங்களில் இருகிய நிலையில் உள்ள இரும்பு, நிக்கல் போன்ற உலோகங்கள் இந்த மின் அதிர்வுகளை காந்த சக்தியாக மாற்றி பூமியை ஒரு காந்த கல்லாக நிலை நிறுத்துகின்றன.

இந்த காந்த சக்தி மிக முக்கிய நன்மைகளை நம் பூமிக்கு அளிக்கிறது. உதாரணமாக சூரியனிடம் இருந்து வெளிப்பட்டு, நம் பூமியை தாக்கும் எத்தனையோ மின் அதிர்வுகளையும் ஒளி காற்றை போன்ற பல சக்திகளையும், பூமியின் காந்த அலைகள் எதிர் கொண்டு நம்மை வந்து அடையாமல் திருப்பிவிடுகின்றன (reflecting).

இந்த எதிர்ப்பையும் மீறி சில அதிர்வுகள் பூமியின் வட, தென் துருவங்களை வந்து அடைந்து, சில மாற்றங்களை செய்து கொண்டு தான் இருக்கின்றன. ஆனால் பூமிக்கு காந்த சக்தி இல்லையென்றால் சூரியனின் பல கதிர்களால் கடும் விளைவுகள் ஏற்பட்டு, பூமியில் உயிர் வாழ முடியாத சூழ்நிலை ஏற்பட்டுவிடும்.

மழை காலத்தில் கூட சில பகுதிகள் மழை பெய்வதும், சில இடங்களில் தூறல் கூட போடாமல் போவதும், இந்த காந்த சக்தி ஒரு சில இடங்களில் அதிகமாகவும், ஒரு சில இடங்களில் அடர்த்தி குறைவாக இருப்பதும் ஒரு முக்கிய காரணமாகும்.

நம்மை படைத்த இறைவன் நம் மீது உள்ள கருணையினால் நாம் கேட்காத பல வசதிகளை தினமும் தந்து கொண்டிருக்கிறான். கடவுளை மறுப்பவருக்கும் அளவில்லாது அள்ளிக் கொடுக்கிறான். பூமியில் வாழும் காலம் முழுவதும் மற்றவர்களை துன்புறுத்தியே அதில் இன்பம் காணும் பலரையும் சந்தோஷத்துடனேயே வைத்துள்ளான். அவனது கருணைக்கு ஈடு இணை ஏது?

டிஸகி: புது வருடம் பிறக்க நாள் நெருங்குவதால் எனக்கு வேலைகளும் அதிகமாகி விட்டது. அந்த ஷோ ரூமில் கணக்கெடுப்பு, இந்த ஷோரூமில் கணக்கெடுப்பு என்று படுத்துகிறார்கள். (வேறெதுக்கு சம்பளம் குடுக்கிறான்?) என்று நீங்கள் கேட்பதும் விளங்குகிறது.:-) வவ்வால், சார்வாகன், இக்பால் செல்வன், ராவணன், தங்கமணி, போன்றவர்களோடு கருத்து மோதல் செய்யாமல் இருந்தது கொஞ்சம் போராகவும் இருந்தது. இனி வேலையை அனுசரித்து அவ்வப்போது தலையை காட்டுகிறேன். :-)


9 comments:

Nasar said...

அஸ்ஸலாம் அலைக்கும் ...பாய்
" அவன் வானத்தை உயர்த்தினான் "

எதற்காக உயர்த்தினான் ??
பூமியில் காந்த சக்தி [பூவியிர்ப்பு] அதிகமாக இருக்கவேண்டும் என்பதற்கா ?? இந்த வரி எனக்கு சரியாக புரியல ...விளக்கம் தரவும் .
இறைவன் எந்த ஒரு படைப்பையும் வீணாக படைக்கவில்லை அதேபோல "அவன் " செயலும் கூட ....
அவன் வானத்தை காரணமில்லாமல் உயர்த்திருக்கமாட்டான் என்றே நினைக்கிறேன் அப்போ ஏன் உயர்த்தணும் ??!!!
பாய் , நீங்க சரியான அறிவியல் பூர்வமான பதில் கொடுக்கணும் ,
ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் ....

suvanappiriyan said...

வஅலைக்கும் சலாம் சகோ நாசர்!

//" அவன் வானத்தை உயர்த்தினான் "

எதற்காக உயர்த்தினான் ??
பூமியில் காந்த சக்தி [பூவியிர்ப்பு] அதிகமாக இருக்கவேண்டும் என்பதற்கா ?? இந்த வரி எனக்கு சரியாக புரியல ...விளக்கம் தரவும் .//

பெரு வெடிப்பு கொள்கையை நாம் நன்கு அறிவோம். அது சொல்வது என்ன? கோடிக் கணக்கான வருடங்களுக்கு முன் ஆகாயம் சின்னஞ் சிறு உருவத்துடன் காலக்சிகள் மிக நெருக்கமாகவும் இருந்தன. நட்சத்திரங்களும் நமது பூமிக்கு மிக நெருக்கமாக இருந்ததாகவே அறிவியல் கூறுகிறது. மேலும் இப்பேரண்டத்தின் விரிவாக்க ஆற்றலின் தொடர்சியாகவே வானமும் வானகப் பொருட்களும் உயர்ந்து சென்றுள்ளன என்கின்றனர் அறிவியல் அறிஞர்கள். அறிவியல் அறிஞர் ஹாக்கிங் இந்த உண்மைகளை எல்லாம் தனது புத்தகத்தில் விரிவாக கூறியுள்ளார்.

இன்றைய அறிஞர்கள் எதைச் சொல்கிறார்களோ அதனையே 'வானத்தை உயர்த்தினோம்' என்று குர்ஆனும் கூறுகிறது. இவ்வாறு பூமிக்கு சம அளவில் சூரியனிலிருந்து மற்ற கோள்களையும் கச்சிதமாக பொருத்தியிருப்பதை பார்த்து ஆச்சரியப்படுகிறோம். நம்மைப் போன்ற மனிதர்களையும் மற்ற உயிரினங்களையும் இந்த பூமியில் வாழ வைக்க வேண்டும் என்ற முன்னேற்பாட்டினாலேயே இத்தனை காரியங்களும் நடந்துள்ளன. இறைவனின் வல்லமையை உணர்த்தும் வசனங்கள் இவை.

suvanappiriyan said...

//கவிஞர் அப்துல் ரகுமான், இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் போன்றோர் தர்ஹா வணக்கம் புரிபவர்கள்//

இஸ்லாத்தை சரியாக விளங்காததனால் இது போன்ற குளறுபடிகள். சவுதியில் மற்றும் அனைத்து அரபு நாடுகளிலும் எந்த தர்ஹாவையும் பார்க்க முடியாது. இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் போன்ற இந்து மக்களோடு இணைந்து வாழும் நாடுகளில் மாத்திரமே தர்ஹாவை பார்க்க முடியும். எனவே இஸ்லாத்தை சரியாக விளங்காமல் தவறான வழியில் இருக்கும் இந்த அன்பர்களை அன்பாக சொலில புரிய வைக்க வேண்டும்.

suvanappiriyan said...

புனை பெயரில்!

//எங்கே தனது போதனைகளை அவர் ஆராய்ந்தால் இது பூமி தட்டை எனும் போன்ற தத்துவம் என்றாகி விடுமோ என்று.//

பூமி தட்டை என்று குர்ஆனில் எங்கு சொல்லப்பட்டிருக்கிறது? ஆதாரம் தர முடியுமா? சும்மா அடித்து விடக் கூடாது.

//இந்தியாவில் இருப்பவர்கள் முஸ்லீம்களே இல்லை… அவர்கள், இந்துமதத்தில் பிரிவினையால் மனம் நிலை பாதிக்கப்பட்டவர்களே…//

திலிபனாக இருந்து ஏ.ஆர்.ரஹ்மானாக மாறியுள்ளவரிடம் போய் சொல்லிப் பாருங்கள். பெரிய லெக்சரே நடத்துவார் :-)

//எங்கே ஒரு மஸ்கட் அல்லது ஜித்தா முஸ்லீம் வீட்டில் பெண்ணோ பிள்ளையோ மணமுடிக்கட்டும்.//

இப்பொழுதும் திருமணம் நடந்து வருகிறதே! கேரள மற்றும் பாகிஸ்தானிய முஸ்லிம்கள் திருமணம் முடித்து சவுதி குடியுரிமையும் பெற்றிருக்கிறார்களே! அந்த பெண்கள் கேட்கும் மஹர் தொகையை கொடுக்க வசதியிருந்து முஸ்லிமாகவும் இருந்தால் நீங்கள் கூட பெண் எடுக்கலாம். :-)

suvanappiriyan said...

புனை பெயரில்!

//பின்லாடன் மட்டும் இருந்திருந்தால் , சிரித்து சிரித்தே செத்திருப்பான்…//

அந்த லிஸடில் மோடியையும், அத்வானியையும், சாது பிரக்யாசிங்கையும், புரோகித்தையும், பால் தாக்கரேயையும் சேர்த்துக் கொள்ளவும். :-)

என்னைப் பொருத்த வரையில் இஸ்லாம் எனக்கு குழப்பமற்ற நிம்மதியான வாழ்வை தந்துள்ளது. பின் லாடன் அமெரிக்காவால் கொம்பு சீவி விடப்பட்டவன். அதன் பலனை அமெரிக்காவும் நன்றாக அனுபவித்தது.

ராவணன் said...

அண்ணாச்சி எனக்கு ஒங்க மீது கோவம்...

ஏன்னு கேளுங்க அண்ணாச்சி...

இந்த உலகின் ஒரே இறைவனான நம்ம முனியாண்டி சாமியின் உண்மை பக்தனான ஒங்களுடன் எனக்கு எப்படி கருத்து மோதல் வரும்?

suvanappiriyan said...

ராவணன்!

//இந்த உலகின் ஒரே இறைவனான நம்ம முனியாண்டி சாமியின் உண்மை பக்தனான ஒங்களுடன் எனக்கு எப்படி கருத்து மோதல் வரும்?//

உருவம் கொடுக்காமல் அல்லாஹ், கர்த்தர்,இறைவன், என்று எந்த பெயரை வைத்தும் அழைத்துக் கொள்ளுங்கள். ஆனால் அந்த இறைவனின் உருவம் இன்னது என்று தெரியாமல் நீங்களாக கற்பனையாக ஒரு உருவத்தை தராதீர்கள்.

Anonymous said...

அஸ்ஸாமில் ஒரே ஒரு "வங்கதேசத்தவர்" கூட இல்லை என, அஸ்ஸாம் மாநில முதல்வர் "தருண் ககோய்" தெரிவித்துள்ளார்.

டெல்லியில் உள்ள அஸ்ஸாம் பவனில் நேற்று (29/11) செய்தியாளர்களை சந்தித்த அஸ்ஸாம் முதல்வர், மாநிலத்தில் பல்வேறு ஆய்வுகள் மற்றும் சோதனைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையிலும், ஒரே ஒரு வங்கதேசத்தவர் கூட கண்டு பிடிக்கப்படவில்லை, என தெரிவித்தார்.

மேலும், கலவரத்தில் கொல்லப்பட்டவர்களில் ஒருவர் கூட "அந்நிய நாட்டவர் அல்ல" என தெரிவித்த அவர், பாதுகாப்பு முகாம்களில் தஞ்சமடைந்த 4,85,921 நபர்களும் சொந்த நாட்டு குடிமக்கள் தான் என்றார்.

இதில், வங்கதேசத்தவர் என்ற பேச்சுக்கே இடமில்லை என்றார்.

மற்றொரு கேள்விக்கு பதிலளித்த முதல்வர், அஸ்ஸாம் மாநிலத்தின் எல்லைகள் 97% வேலி அமைக்கப்பட்டு "பங்களாதேஷ் குடியேற்றக்காரர்கள்" உள்ளே நுழையாதவாறு பாதுகாப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

மொத்தமுள்ள எல்லைப்பகுதிகளான, 224 கி.மீ.ல் 218 கி.மீ.அளவுக்கு வேலியமைக்கப்பட்டுள்ளதாகவும் "காலம் கடந்து" புள்ளி விவரங்களை தருகிறார்,முதல்வர்.

வங்கதேச குடியேற்றக்காரர்கள் என "பொய் பரப்புரை"களை செய்து, முஸ்லிம்களை கொத்து கொத்தாக கொலை செய்து, சவக்குழிகளில் தள்ளிவிட்டு சாவகாசமாக செய்திகளை வெளியிடுவதால் என்ன பயன்?

இறையாண்மையை பற்றி வாய்க்கிழிய பேசும் அரசுகள் "போடோக்களிடம் உள்ள ஆயதங்களை" கைப்பற்ற முடியாத - ஆண்மையற்ற அரசுகளாக இருப்பதால், எம் சொந்தங்கள் அடிக்கடி செத்து மடியும் நிலை உள்ளது.

உண்மைகள் வெளிச்சத்துக்கு வரும்போது, முஸ்லிம்களின் நெஞ்சம் பதைக்கிறது; இரத்தம் கொதிக்கிறது.

http://maruppu.in/all-medias/43-maruppu-news/646-2012-11-30-04-11-26

suvanappiriyan said...

புனை பெயரில்!

//உடல் நலம் சரியாச்சு என்றதால் மதம் மாறியவர் அவர். தத்துவங்களால் அல்ல. அப்படியெனில், உடல் நலம் சரியானவர்கள் “அப்போலோ ஹாஸ்பிடல் மதம்” “மியாட் ஹாஸ்பிட்டல் மதம்” “அல் சௌதி கிளினிக் மதம்” என்று ஆஸ்பத்திரி பெயரில் மதங்களும், டாக்டர் தேவ தூதுவர்களாகவும் தான் இருப்பர். அதுவும் போக, அவர் என்ன இந்துவாகவா மாறியிருக்கார், சுதந்திரமாக கருத்துச் சொல்ல… “தந்திரமாக” கூட தப்பிக்க முடியாத லேப்ரந்த்ல் அல்லாவா மாட்டிக் கொண்டுள்ளார். பரிதாபம் விடுங்கள் அவரை.//

உடல் நிலை சரியானவுடன் திரும்பவும் பழைய மதத்துக்கே திரும்பி விட வேண்டியதுதானே! அவரை யாரும் கட்டாயப்படுத்தவில்லையே! பல தலைமுறைகளாக ஒருவர் இஸ்லாத்தில் காட்டும் ஈடுபாட்டை விட அதிகமாகவல்லவா காட்டுகிறார்? படத்தின் ஆரம்ப பூஜைகளுக்கு இவர் வருவதில்லை. ஏனெனில் அங்கு விக்ரக ஆராதனை இருப்பதால் தவிர்ந்து கொள்கிறார். ஒரு முறை மெக்காவில் கஃபாவின் உள் மெய் மறந்து தொழுகையில் ஈடுபட்டிருந்ததை நேரிலேயே பார்த்தேன். காலை தொழுகை தவறி விடக் கூடாது என்பதற்காக ரெகார்டிங் அதிகமாக இரவு எட்டிலிருந்து விடி காலை 3 மணி வரை வைத்துக் கொள்கிறார். மேலும் மேலும் இவரது ஈடுபாடு அதிகரிக்கிறதே ஒழிய குறையவில்லை.

//அவருக்கு வேராக, கருவாக , உருவாக இருந்தது இந்து மதமே… அது பாலவனத்தில் போய் ஓயாஸிஸில் ஆட்டம் போட்டாலும் குடித்த தாய்ப் பால் இந்துமதத்தினுடையதே…//

எனது மூதாதையர்களும் அந்த வழியில் வந்தவர்களே! இரண்டு தலைமுறைக்கு முன்னால் எனது உறவினர்களும் ராமசாமியாகவோ ராகவனாகவோ இருந்திருக்கலாம்.

//சுய சிந்தனை மழுங்கடிக்கப்பட்டதால் தான் எந்த விஞ்ஞான கண்டுபிடிப்புகளும் பாலவன தேசத்தில் நடப்பதில்லை.//

"நவீன அறிவியலின் இருதயத்தில் இருக்கக்கூடிய சொற்களான அல்ஜீப்ரா (Algebra), அல்கோரிதம் (Algorithm), அல்கலி (Alkali) எல்லாம் அரபியில் இருந்து வந்தவைதான், இவைகள் அவர்களது கலாச்சாரம் எந்த அளவு சிறந்திருந்தது என்பதை உணர்த்துகின்றன. அல்ஜீப்ரா இல்லாமல் நவீன கணிதமோ இயற்பியலோ இல்லை, அல்கோரிதம் இல்லாமல் கணிப்பொறிகள் இல்லை மற்றும் அல்கலி இல்லாமல் வேதியியல் இல்லை" --- BBC

அறிவியலில் இஸ்லாமிய அறிஞர்களின் பங்களிப்பு மட்டும் இல்லையென்றால் இன்றைய ஐரோப்பா அறிவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத்தில் முதன்மையாக விளங்கியிருக்க முடியுமா என்பது எனக்கு தெளிவாகவில்லை --- Mathematician Keith Devlin, Executive Director, center for the study of language and Information at Stanley University.

மேலும் விபரங்கள் அறிய...

http://www.ethirkkural.com/2010/03/blog-post_04.html