Followers

Thursday, November 22, 2012

இந்து முஸ்லிம் கலவரம் ஏன்? -மார்க்கண்டேய கட்ஜூ

மார்கண்டேய கட்ஜு எழுதி தி ஹிந்துவில் அக்டோபர் 11 அன்று வெளியான Rid our body politic of communal poison என்னும் கட்டுரையை அவருடைய அனுமதி பெற்று தமிழில் மொழிபெயர்த்திருப்பவர் மருதன். இனி அவருடைய கட்டுரை தமிழில்...

இன்று இந்தியாவில் பல இந்துக்களும் முஸ்லிம்களும் வகுப்புவாதம் என்னும் விஷக்கிருமியால் தாக்கப்பட்டிருக்கிறார்கள். 1857ம் ஆண்டுக்கு முன்பு, அநேகமாக இந்தியர்களிடம் வகுப்புவாதக் கண்ணோட்டம் இருந்திருக்கவில்லை என்றே சொல்லலாம். முஸ்லிம்களின் ஈத் பெருநாள் கொண்டாட்டங்களில் இந்துக்கள் பங்கேற்றிருக்கிறார்கள். தீபாவளி, ஹோலி விழாக்களில் முஸ்லிம்கள் கலந்துகொண்டிருக்கிறார்கள். இருவரும் சகோதரர், சகோதரிகளாக ஒன்றாக வாழ்ந்திருக்கிறார்கள்.

150 ஆண்டுகளில் நிலைமை ஏன் மாறிப்போனது? இந்தியாவின் இரு முக்கிய மதத்தினருக்கு இடையில் நம்பிக்கையின்மை பரவியிருப்பதற்கு என்ன காரணம்? இன்று, முஸ்லிம்கள் இந்துக்களின் இல்லங்களில் வாடகைக்கு வீடு கிடைக்க மிகவும் சிரமப்படுகிறார்கள். இந்தியாவில் எங்காவது குண்டு வெடித்தால், சம்பந்தப்பட்ட குற்றவாளிகளைக் கைது செய்யத் திறனற்ற காவல்துறையினர் (அறிவியல்பூர்வமாக விசாரணை மேற்கொள்வதற்கான பயிற்சிகள் அவர்களுக்கு இல்லை), அரை டஜன் முஸ்லிம்களைக் கைது செய்து பிரச்னைக்குத் ‘தீர்வு’ கண்டுவிடுகிறார்கள். இவ்வாறு கைதானவர்களில் பலர் சிறையில் பல ஆண்டுகளைக் கழித்தபிறகு கடைசியில் அப்பாவிகள் என்று தீர்ப்பளிக்கப்படுகிறார்கள்.

இதன் விளைவாக, முஸ்லிம்கள் இந்தியாவில் அந்நியப்பட்டு கிடக்கிறார்கள். ஆனால் பாகிஸ்தானில், நிலைமை இதைவிட மோசம். அங்கே சிறுபான்மையினர் தீவிரவாதிகளிடமும் மதவாதிகளிடமும் சிக்கிக்கொண்டிருக்கின்றனர்.

எப்போது தோன்றியது?

1857 இந்திய வரலாற்றில் ஒரு முக்கியமான ஆண்டு. 1857க்கு முன்பு இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் வகுப்புவாத மோதல்கள் ஏற்பட்டதில்லை. ஒருவருக்கு ஒருவர் உதவி செய்து ஒன்றாகவே வாழ்ந்தனர். சில கருத்துவேறுபாடுகள் இருந்தன. ஆனால், இரு சகோதரர்களுக்கும் இரு சகோதரிகளுக்கும் இடையில்கூட இப்படிப்பட்ட வேறுபாடுகள் எழுவது உண்டு அல்லவா?

இந்தியாவை ஆக்கிரமிக்க வந்த முஸ்லிம்கள் பல கோயில்களை உடைத்தது உண்மை. ஆனால் அவர்களுடைய வழி வந்த முஸ்லிம் தலைவர்கள் கிட்டத்தட்ட அனைவரும் வகுப்பு ஒற்றுமையைக் கடைப்பிடித்தனர். ஒருவகையில், தங்கள் நலனுக்காகத்தான் அவர்கள் இதைச் செய்தனர். காரணம், அவர்கள் ஆட்சி செய்யவேண்டியவர்களில் பெரும்பாலானோர் இந்துக்கள். இந்து கோயில்களை உடைத்தால் உடனே கலவரம் வெடிக்கும் என்று அவர்களுக்குத் தெரியும். ஒருவரும் கலவரத்தை விரும்பவில்லை. முகலாயர்கள், ஆவாத் நவாபுகள், ஆர்காட் முர்ஷிதாபாத், திப்பு சுல்தான், ஹைதரபாத் நிஜாம் என்று ஒருவர் பாக்கியில்லாமல் அனைவரும் மத ஒற்றுமையை வளர்ப்பவர்களாகத்தான் இருந்தார்கள்.

1857ல் முதல் சுதந்தரப் போர் வெடித்தபோது, இந்துக்களும் முஸ்லிம்களும் ஒன்றாகவே பிரிட்டனை எதிர்த்தனர். கலகத்தை அடக்கியபிறகு, பிரிட்டிஷார் ஒரு முடிவுக்கு வந்தனர். இந்தியாவைக் கட்டுக்குள் வைத்திருக்கவேண்டுமானால் அதற்கு ஒரே வழி, பிரித்து ஆள்வதுதான். சர் சார்லஸ் வுட், (இந்திய செகரட்டரி ஆஃப் ஸ்டேட்) வைஸ்ராய் லார்ட் எல்ஜின் என்பவருக்கு 1862ல் எழுதிய குறிப்பு இது. ‘இந்தியாவில் நாம் அதிகாரத்தைத் தக்க வைத்திருப்பதற்குக் காரணம் ஒருவருக்கு எதிரான இன்னொருவரை நிறுத்தி மோதவிட்டதுதான். இதை நாம் தொடர்ந்து செய்தாகவேண்டும். ஒரே மாதிரியான உணர்வை அவர்கள் பெற்றுவிடாமல் இருப்பதற்கு என்னென்ன செய்யவேண்டுமோ அனைத்தையும் செய்யுங்கள்.’

பிரித்து ஆளவேண்டும்!

ஜனவரி 14, 1887 அன்று விஸ்கவுண்ட் க்ராஸ் (செகரட்டரி ஆஃப் ஸ்டேட்) கவர்னர் ஜெனரல் டுஃப்பரின் என்பவருக்கு இவ்வாறு எழுதுகிறார். ‘மத ரீதியிலான இப்படிப்பட்ட பிளவு நமக்குச் சாதகமாக இருக்கும். இந்தியக் கல்விமுறை குறித்தும் பாடப் புத்தகங்கள் குறித்துமான உங்கள் விசாரணை கமிட்டியின் மூலம் சில நன்மைகளை அடையலாம் என்று எதிர்பார்க்கிறேன்.’

ஜார்ஜ் ஹாமில்டன் (செகரட்டரி ஆஃப் ஸ்டேட்) கவர்னர் ஜெனரல் கர்சனுக்கு இவ்வாறு எழுதினார். ‘இந்தியாவை நாம் ஆள்வதற்குத் தடையாக இருப்பது மேற்கத்திய சிந்தனைகளின் தாக்கம்தான்… படித்த இந்தியர்களை இரு பிரிவுகளாக (இந்துக்கள், முஸ்லிம்கள்) பிரிக்கமுடிந்தால் நம் பிடியை உறுதிபடுத்திக்கொள்ளமுடியும். இந்த இரு பிரிவினருக்கும் இடையிலான வேறுபாடுகள் அதிகரிக்கும்படியாக நம் பாடப்புத்தகங்களை நாம் திட்டமிட வேண்டும்.’

இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் பகைமை ஏற்படவேண்டுமென்றே இப்படிப்பட்ட திட்டங்கள் 1857க்குப் பிறகு தீட்டப்பட்டன. பல்வேறு வழிகளில் இது அவர்களுக்குச் சாத்தியப்பட்டது.

மதத் தலைவர்களுக்கு லஞ்சம் : பிரிட்டிஷ் கலெக்டர் ரகசியமாக ஒரு பண்டிட்ஜியைச் சந்தித்து, பணம் கொடுத்து முஸ்லிம்களுக்கு எதிராகப் பேசச் சொல்வார். அதே போல் ரகசியமாக ஒரு மௌல்வியைச் சந்தித்து பணம் கொடுத்து இந்துக்களுக்கு எதிராக அவரைப் பேச வைப்பார்.

மறைக்கப்பட்ட வரலாறு : தொடக்கத்தில் இஸ்லாமிய ஆக்கிரமிப்பாளர்கள் பல இந்து கோயில்களை இடித்தது உண்மை. ஆனால், பிற்காலத்தில் வந்த கிட்டத்தட்ட அனைவரும் (அக்பர் போன்றவர்கள்) இந்து கோயில்களுக்கு தொடர்ச்சியாக மானியங்கள் அளித்தும் தீபாவளி போன்ற இந்துப் பண்டிகைகளில் கலந்துகொண்டும் மத ஒற்றுமையை வளர்த்தனர். ஆனால் நம் குழந்தைகளுக்கு இந்த இரண்டாவது பாகம் கற்றுக்கொடுக்கப்படுவதில்லை. கஜினி முகமது சோமநாதர் கோயிலை உடைத்தார் என்றுதான் அவர்கள் வரலாற்றில் கற்கிறார்களே தவிர, திப்பு சுல்தான் போன்றவர்கள் இந்து விழாக்களில் பங்கேற்றார்கள் என்பதைக் கற்பதில்லை.

தூண்டிவிடப்பட்ட மோதல்கள் : வகுப்புவாத மோதல்கள் அனைத்தும் 1857க்குப் பிறகே உருவாகின. பள்ளிவாசலில் முஸ்லிம்கள் தொழுகை நடத்தும்போது இசை வாத்தியங்களை ஒலிக்கவிடுவது, இந்து விக்கிரகங்களை உடைப்பது என்று மத உணர்வுகளைத் தூண்டிவிடும்படியான செயல்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.

1909ல் அமல்படுத்தப்பட்ட மிண்டோ மார்லி சீர் திருத்தம், மதவாத அடிப்படையில் தனித் தொகுதி முறையைக் கொண்டுவந்தது. இந்துக்களையும் முஸ்லிம்களையும் பிரித்தாள்வதற்காக மேற் கொள்ளப்பட்ட ஓர் அரசியல் நடவடிக்கை இது.

இப்படி வகுப்புவாதம் என்னும் நஞ்சு தொடர்ச்சியாக பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால் நம் சமூகத்தில் புகுத்தப்பட்டது. 1947ல் பிரிவினை ஏற்படும்வரை இந்தச் செயல்பாடு தொடர்ந்தது. இப்போதும்கூட மத வெறுப்பை வளர்த்துவிட்டு குளிர் காய்பவர்கள் நம்மிடையே இருக்கத்தான் செய்கிறார்கள்.

ஒவ்வொருமுறை குண்டு வெடிக்கும்போதும் தொலைக்காட்சி சானல்கள் என்ன சொல்கின்றன? இந்திய முஜாஹிதின் அல்லது JeM அல்லது HUJI என்று ஏதாவதொரு அமைப்பு இந்தச் சம்பவத்துக்குப் பொறுப்பேற்றுக்கொண்டதாக எஸ்எம்எஸ் வந்திருக்கிறது என்று குறிப்பிடுகிறார்கள். ஒரு ஈமெயிலையோ எஸ்எம்எஸ்சையோ எந்தவொரு விஷமியும் யாருக்கும் அனுப்பிவைக்கமுடியும் அல்லவா? ஆனால், இதை மறுநாளே டிவியில் சொல்வதன்மூலம் எப்படிப்பட்ட தாக்கத்தை இவர்கள் ஏற்படுத்துகிறார்கள் தெரியுமா? அனைத்து முஸ்லிம்களும் தீவிரவாதிகள், குண்டு வீசுபவர்கள் என்று இந்துக்கள் எடுத்துக்கொள்கிறார்கள். உண்மை என்னவென்றால், 99 சதவிகித மக்கள், அவர்கள் எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி, அமைதியையும் நன்மையையுமே விரும்புகிறார்கள்.

பாபர் மஸ்ஜித், ராம் ஜென்மபூமி கிளர்ச்சியின்போது, மீடியாவில் ஒரு பிரிவினர் (குறிப்பாக இந்தி அச்சு ஊடகம்) கர சேவகர்கள் போலவே செயல்பட்டதை மறக்கமுடியுமா?

பெங்களூரு பதட்டம்

‘அசாமில் நீங்கள் முஸ்லிம்களைக் கொன்றிருக்கிறீர்கள் எனவே இங்கிருந்து உடனடியாக வெளியேறுங்கள். இல்லாவிட்டால் நீங்கள் அழிக்கப்படுவீர்கள்.’ பெங்களூரு மற்றும் பிற இடங்களில் வசிக்கும் வடகிழக்கு இந்தியர்களுக்குச் சமீபத்தில் இப்படிப்பட்ட எஸ்எம்எஸ் செய்திகள் அனுப்பப்பட்டன. எதிர்பார்த்ததைப் போலவே, இது பதட்டத்தை ஏற்படுத்தியது. பெங்களூரு முஸ்லிம்களுக்கு இந்த விஷயம், தெரியவந்ததும் அவர்கள் வடகிழக்கு இந்தியர்களுக்கு உடனடியாக விருந்து தயார் செய்தார்கள். யாரோ சிலரின் தவறான வதந்திகளை நம்பாதீர்கள், முஸ்லிம்களாகிய நாங்கள் உங்களுக்கு எதிரிகள் அல்லர் என்றும் தெரியப்படுத்தினார்கள்.

இத்தகைய இழிவான வழிமுறைகளைச் சிலர் கையாள்வதை இந்தியர்கள் உணரவேண்டிய தருணமிது. சமூகத்தில் உள்ள அனைத்துப் பிரிவினரையும் ஒன்றுபோல் மதித்து நடப்பதுதான். மாமன்னர் அக்பர் காட்டிய வழி இது. அவர் அனைத்து மக்களையும் ஒன்றுபோல் மதித்தார். அக்பர், அசோகர் போன்ற உயர்ந்த ஆட்சியாளர்களை உலகம் இதுவரை கண்டதில்லை. (Hinsa Virodhak Sangh Vs. Mirzapur Moti Kuresh Jamat குறித்த என் தீர்ப்பை இணையத்தில் பார்க்கலாம்.)

1947ல் இந்தியா சுதந்தரம் அடைந்தபோது, அதீதமான மத விருப்பங்கள் கொழுந்துவிட்டு எரிந்தன. பாகிஸ்தான் தன்னைத் தானே ஓர் இஸ்லாமிய நாடாக அறிவித்துக்கொண்டது போல் இந்தியாவை இந்து நாடாக அறிவிக்கவேண்டும் என்று நேருவுக்கும் அவருடன் இருந்தவர்களுக்கும் அப்போது அதிக அழுத்தம் கொடுக்கப்பட்டிருக்கும். ஆனால், நம் தலைவர்கள் இந்தக் கோரிக்கைக்கு செவி சாய்க்கவில்லை. இந்தியா இந்து நாடு அல்ல அது மதச்சார்பற்ற நாடு என்பதில் அவர்கள் உறுதியாக இருந்தனர். அதனால்தான், ஒவ்வொரு அம்சத்திலும் நம் அண்டை நாடான பாகிஸ்தானைக் காட்டிலும் நாம் மேலான நிலையில் இருக்கிறோம்.

மதச்சார்பின்மை என்பதன் பொருள் ஒருவர் தனது மதத்தைப் பின்பற்றக்கூடாது என்பதல்ல. மதச்சார்பின்மை என்பதன் பொருள், மதம் ஒவ்வொருவருடைய தனிப்பட்ட விவகாரம் என்பதாகும். மதத்துக்கும் அரசுக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை என்பதாகும். அரசுக்கு மதம் கிடையாது என்பதாகும். என்னைப் பொருத்தவரை, இந்தியா ஒன்றுபட்டு இருப்பதற்கும் வளர்ச்சியை நோக்கி நடைபோடுவதற்கும் ஒரே மார்க்கம், மதச்சார்பின்மையைப் பின்பற்றுவதுதான்.

(கட்டுரையாளர், சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகவும், உச்சநீதிமன்றத்தின் நீதிபதியாகவும் இருந்தவர். தற்சமயம், இந்திய பிரஸ் கவுன்சில் தலைவராக இருக்கிறார்).

http://www.thehindu.com/opinion/lead/rid-our-body-politic-of-communal-poison/article3985402.ece

15 comments:

UNMAIKAL said...

அப்துல் நாஸர் மஃதனிக்கு ஜாமீன் இல்லை! –

தொடரும் அநீதி!


23 Nov 2012 Karnataka High Court denies bail to Maudany again

பெங்களூர்:அப்துல் நாஸர் மஃதனியின் ஜாமீன் மனுவை கர்நாடகா நீதிமன்றம் மீண்டும் தள்ளுபடிச் செய்துள்ளது.

சிகிட்சைக்காக ஜாமீன் அனுமதிக்கவேண்டும் என்று கோரி ஜாமீன் மனு அளிக்கப்பட்டிருந்தது.

ஆனால், போலீஸ் பாதுகாப்புடன் மஃதனிக்கு சொந்த செலவில் சிகிட்சை பெற்றுக் கொள்ளலாம் என்று கூறிய நீதிமன்றம் சிகிட்சை வேளையில் குடும்ப உறுப்பினர்களை அனுமதிக்க மறுத்துவிட்டது.

கோவைக் குண்டுவெடிப்பு வழக்கில் அநியாயமாக கைது செய்யப்பட்டு ஒன்பது ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார் மஃதனி.

பின்னர் நிரபராதி என்று விடுவிக்கப்பட்டார்.

ஆனால், விரைவிலேயே அவர் பெங்களூர் தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் மீண்டும் அநியாயமாக கைது செய்யப்பட்டு கர்நாடகா மாநிலம் பரப்பனா சிறையில் அடைக்கப்பட்டார்.

நீரழிவு உள்ளிட்ட நோய்களால் அவதிப்படும் மஃதனிக்கு ஒரு கண்ணின் பார்வை பறிபோனது.

ஒரு காலை இழந்துள்ள மஃதனி நோய்களால் அவதிப்படும் வேளையில் அவரது சிகிட்சைக் குறித்து கர்நாடகா போலீஸ் அலட்சியம் காட்டி வருகிறது.

இந்நிலையில் மஃதனிக்கு சிகிட்சை அளிக்க ஜாமீன் அனுமதிக்க கோரி கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

ஆனால், அவருக்கு இரக்கம் காண்பிக்காத நீதிமன்றம் ஜாமீன் அளிக்க மறுத்துவிட்டது.

SOURCE: http://www.thoothuonline.com/karnataka-high-court-denies-bail-to-maudany-again/

Anonymous said...

உசிலம்பட்டி: முன்விரோதம் காரணமாக இரு போலீசாரிடையே மோதல் ஏற்பட்டது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியில் போலீசாக இருக்கும் சிவனாண்டி சீட்டு விளையாடியதை உளவுத்துறை போலீசாக பணிபுரியும் அறிவழகன் புகார் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதேபோல் அறிவழகன், ஆற்றில் மணல் அள்ளியதை சிவனாண்டி போலீசாருக்கு புகார் தெரிவித்ததார். இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இதனால் இருவருக்குமிடையே முன்விரோதம் ஏற்பட்டது. இந்நிலையில் இன்று காலை, அறிவழகன் மனைவி, சிவனாண்டியையும், அவரது குடும்பத்தினரையும் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் இரு தரப்பினருக்குமிடையே மோதல் ஏற்பட்டது. தகவல் அறிந்த போலீசார், இரு தரப்பினரையும் போலீஸ் ஸ்டேசனுக்கு அழைத்து சென்று, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

-பத்திரிக்கை செய்தி

23-11-2012

suvanappiriyan said...

சகோ உண்மைகள்!

//இந்நிலையில் மஃதனிக்கு சிகிட்சை அளிக்க ஜாமீன் அனுமதிக்க கோரி கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

ஆனால், அவருக்கு இரக்கம் காண்பிக்காத நீதிமன்றம் ஜாமீன் அளிக்க மறுத்துவிட்டது.//

உடல் நிலையை கருத்தில் கொண்டு அவரை விடுவிக்கலாம். பகிர்வுக்கு நன்றி!

husain said...

ghkkl

husain said...

ungal kudirai addiyayam parti

husain said...

அஸ்ஸலாமு அழைக்கும் ஜி நீங்கள் எழுதிய குதிரை சம்பந்தமான கட்டுரை அருமை ,வல்ஆதியாத்தி சூராவை உடனே மனப்பாடம் பண்ணிவிட்டேன் ,எல்லா புகழும் அல்லாஹ் வுக்கே

suvanappiriyan said...

சலாம் சகோ ஹூசைன்!

//அஸ்ஸலாமு அழைக்கும் ஜி நீங்கள் எழுதிய குதிரை சம்பந்தமான கட்டுரை அருமை ,வல்ஆதியாத்தி சூராவை உடனே மனப்பாடம் பண்ணிவிட்டேன் ,எல்லா புகழும் அல்லாஹ் வுக்கே//

எல்லா புகழும் இறைவனுக்கே!

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

Anonymous said...

K A V Y A says:
November 22, 2012 at 3:41 am

எவருமே பொதுவாக முசுலீம்கள் என்று ஒட்டு மொத்த சமுதாயத்தைச் சொல்லக்கூடாது. நிராத் சவுத்ரியோ எவராகவிருந்தாலும் தவறான நடத்தை.

ஒரு சில சீக்கியர்கள் இந்திராவை சுட்டதனால் ஒட்டு மொத்த சீக்கிய சமூகத்தினர் மீது 1984 தில்லியில் தாக்குதல் நடந்தது.

முகலாயர்கள் கோயில்களை இடித்திருந்தால், இன்று அதை எவரேனும் சரியென்றால், அவர்களைக்கண்டுபிடித்துச் சொல்ல வேண்டும். ஒட்டுமொத்தமாக முசுலிம்கள் அனைவருமே காரணம் என்பது ஒரு கொலைபாதகச்செயல்.

நேற்றைய கசாப் தூக்கிலிடப்பட்டதற்கும் நிறைய முசுலீம் மும்பாய் பொதுமக்கள் வரவேற்றிருக்கிறார்கள். தமிழ்நாடு முசுலிம் அமைப்பு இன்று வரவேற்றிருக்கிறது.

ஒரு பைத்தியக்காரக்குமபல் மஜூதியெலேறி உடைத்ததற்கு அவர்கள்தான் காரணம். எல்லா இந்துமக்களும் இல்லை. அப்படி உண்டு என்று எவரேனும் சொன்னால் என் பதில் தங்கமணிக்குக்கொடுத்ததே.

மலர்மன்னன், கிருஸ்ணகுமார், தங்கமணி போன்றோரின் கொளகையை ஒட்டுமொத்த இந்துசமூகம் ஏற்றுக்கொண்டதாக இல்லை. அவர்கள் கற்பனை பண்ணலாம். அப்படி ஏற்றுக்கொண்டிருந்தால், இன்று இந்து அமைப்பு ஒன்று ஆட்சிபீடத்திலே ஏறி, இந்தியாவை தியாக்கிரசியாக்கி விட்டிருக்கலாமே?

மன்னர்கள் கோயிலை இடித்து மஜூதி கட்டினார்கள் என்றால், அவை திரும்பத்தரப்படவேண்டும்ன்றால், நீதிமன்றத்தில் வழக்குப்போட்டு ஆதாரங்களைக்காட்டி வெற்றிபெறுங்கள். அதுவே சரி. மாறாக மசூதிலேறி உடைப்பது ரவுடித்தனம்.

முசுலிம் மக்கள் அனைவரின் மேல் வெறுப்பைத்தூண்டும் வண்ணம் எழுதுவது மர்யாதா புருஷோத்தம் ஸ்ரீ ராமசந்திர மூர்த்தி ஏற்றுக்கொள்ள மாட்டார். அவர் எல்லாருக்கும் தெய்வம். வடநாட்டு இசுலாமியர்களிடம் பேசிப்பாருங்கள். அவர்கள் எப்படி இராமரை மதிக்கிறார்கள் என்று தெரியும்.

நீங்கள் நாங்கள் இந்துக்கள் என்றாலும் அவர் நியாயத்தைத்தான் பார்ப்பார். அதன்படி அப்பாவி மக்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதே அவர் நினைப்பார். இல்லாவிட்டால் அவர் தெய்வமில்லை.

Anonymous said...

K A V Y A says:
November 21, 2012 at 3:20 am

இந்த சர்ச்சை தேவையில்லை. இம்மசூதி இடிக்கப்பட்டு அதன் பின்னர் என்னென்னவோ நடந்தும் விவாதங்கள் மேடை மேடையாக ஏறியும் நீதிமன்ற வழக்குகளும் பின்னர் தீர்ப்புக்களும் வந்து விட்டன. இப்போது இச்சர்ச்சை ஏன்? என்பதுதான் என் கேள்வி. 1909 க‌ட்டுரையை மொழிபெய‌ர்த்து விவாத‌ம் ப‌ண்ணிய‌தைப்போல‌.

ஆயிர‌மாயிர‌மாண்டுக‌ளுக்கு முன் ம‌ன்ன‌ர்க‌ள் செய்த‌ த‌வறுக‌ளுக்காக‌ இன்று வாழும் ம‌க்க‌ள் வாழ்க்கையைச் சிதைப்ப‌து ச‌ரியென்றால், எல்லாருக்கும் ஒரு முன்னோர் உண்டு; அவ‌ர்க‌ள் செய்த‌ த‌வ‌றுக‌ளை இன்றும் ச‌மூக‌ம் வேத‌னையுட‌ன் அனுப‌வித்துக்கொண்டிருக்கிற‌து. அத‌ற்காக‌ இன்று வாழும் அவ‌ர்க‌ள் ச‌ந்த‌திக‌ளைக் குற்ற‌ம் சொல்ல‌லாமா?

நிராத் சவுத்ரி, ‘முசுலீம்கள்” என்று பொத்தாம் பொதுவாக எழுதியது தவறு. முசுலீம் மன்னர்கள் என்றுதான் எழதியிருக்க வேண்டும். Whoever desecrates the places of worship of other ppl, should be condemned whether they were Muhghal kings, or the lumpen elements who climbed on the Babri Masdij and vandalised it. Saying that it is not a Mosque but only a grave wont wash the crime clean coz the Muslims respected it in different ways and to demolish it is to mock at their way of life. Absolutely wrong and inhuman ! Rather, it is anti-Hindu practice as I already stressed.

Nirad Chaudhry condemned India, Indian way of life and Indians in General. He left India and took British citizenship, from there he wrote a lot about India in bad words. But as usual with such persons, they are neither here nor there. He is nostalgic for the Hindu way of life about which he is panygeric. Bengalis are known for patriotism and love of India. He is India hater – an exception.

He lives in a country where the Hindus cant cremate their dead as the State bars it legally on the grounds of pollution. He praises the country.

What a shame !

suvanappiriyan said...

1867ல் காசியிலுள்ள இந்துத்தலைவர்கள் உருது மொழிக்கெதிராக கிளர்ச்சியில் ஏடுபட்டனர்.1875ல்’இந்தியா இந்துக்களுக்கே’என்ற கோஷத்துடன் சுவாமி தயானந்த சரஸ்வதி என்பவரால் ஆர்ய சமாஜ் என்ற இயக்கம் தோற்றுவிக்கப்பட்டது.இதன் முக்கிய நோக்கம் இஸ்லாத்தையும்.கிறிஸ்துவ மதத்தையும் எதிர்ப்பதே.

1890ல் “முஸ்லிம்கள் அந்நியர்கள்”என்க் கூறிக் கொண்டிருந்த பாலகங்காதர திலகர்.முஸ்லிம்கள் குர்பானி கொடுப்பதை எதிர்த்து பசு பாதுகாப்பு இயக்கத்தைத் துவக்கினர்.

1882ல் பங்கிம் சந்திர சாட்டர்ஜி ‘ஆனந்த மடம்’எனும் பெயரில் ஒரு நாவல் வெளியிட்டார்.அதில்தான் வந்தே மாதரம் என்ற கீதம் வருகிறது.அதில் இந்தியாவை ‘காளி’என்ற கடவுளுக்கு ஒப்பிட்டு அந்த காளி துஷ்டர்களை ஒழிக்கச் சொல்கிறாள் எனும் கருத்தின் அடிப்படையில் எழுதப்பட்ட நூல் முஸ்லிம்களுக்கு எதிராக தனது துவேஷத்தை வெளிப்படுத்தியது.

இவையெல்லாம் முஸ்லிம்களின் மனதில் ஒரு வகையான பய உணர்ச்சியை ஏற்படுத்தின.அது பின்னாளில் இரு சாரரிடையே நிரந்தரப் பகையாக மாறியாது.

காங்கிரஸும் முஸ்லிம்லீக்கும்
இந்நிலையில்,1885ல் தேசிய காங்கிரஸ் தோன்றியது.அதன் முன்னோடி தலைவர்களில் பெரும்பாலோர் முஸ்லிம் எதிர்ப்பாளர்களே,அவர்கள் முஸ்லிம்களின் அச்சத்தைப் போக்க எவ்விதநடவடிக்கையும் எடுக்கவில்லை.

ஆங்கிலேயர் தூவிய வேற்றுமை விஷ வித்துகளுக்கு பலியான இந்துமதத் தலைவர்கள் சுதந்திர போராட்டத்தை இந்து மறுமலர்ச்சி எனும் அடிப்படையில் நடத்த விரும்பினர்.முஸ்லிம்களை அரவணைத்துச் செல்வதற்குப் பதிலாக அவர்களை ஒதுக்கிவிட்டு தங்களின் சுதந்திரப் போராட்டத்தை நடத்த விரும்பினர்.விளைவு?1906ம் ஆண்டு அகில இந்திய முஸ்லிம் லீக்.சர்.ஆகாகான் அவர்கள் முயற்சியால் தோற்றுவிக்கப்பட்டது.

முஸ்லீம் லீக் ஏன் தோன்றியது?என்பதன் காரணத்தை R.P.Dutt இப்படி குறிப்பிடுகிறார்.
“தீவிரவாத தேசிய இந்துத் தலைவர்கள் தங்களின் போராட்டத்தை இந்துமத அடிப்படியில் நடத்த விரும்பினர்.இந்துமத மறுமலர்ச்சி மூலமே தேசிய விழுப்புணர்ச்சி ஏற்படுத்தப்பட்டதாகக் காட்ட விரும்பினர்.எனவே அவர்கள் தேசிய நீரோட்டத்தில் முஸ்லிம்கள் கலந்துவிடாமல் இருக்க முயற்சித்தனர்.அதன் விளைவே 1906ல் முஸ்லிம்லீக் தோன்றியது”.
(Quoted in R.A.Deasai’s social background of Indian Nationalism)

Most members of the congress made a serious error refusing to admit the existence and validity of muslim nationalism.
முஸ்லிம்களின் தேசிய உணர்வுகளின் அவசியத்தையும் நிலைபாட்டையும் மறுத்ததின் மூலம் பெரும்பாலான காங்கிரஸ் உறுப்பினர்கள் மோசமான தவறினைச் செய்தனர்.

(A short History of India and Pakistan by t.Walter Wall Bank)(U.S.A.)1965.

முஸ்லிம்லீக் தோன்றினாலும் முஸ்லிம்களில் பலர் காங்கிரஸிலும் லீக்கிலும் இருந்தனர்.மவ்லானா அலி சகோதரர்கள் காங்கிரஸை பெரிதும் நம்பினர்.
பிரிவினைப் பிரச்சாரம் யார் துவக்கியது?

இந்தியப் பிரிவினை தவிர்க்க முடியாமல் போனதற்கு 1920க்கும் 1940க்குமிடையே நடைபெற்ற பல நிகழ்ச்சிகளே காரணம்.இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் தனித்தனி நாடு எனும் திட்டத்தை முதன் முதலில் கூறியவர்கள் இந்து தீவிரவாதிகள் தாம்.

இன்று இந்திய பிரிவினைக்கு முஸ்லிம்கள் தான் காரணம் எனப் பிரச்சாரம் செய்வோர் 1920க்கும் 1940க்குமிடையே நடைப்பெற்ற நிகழ்ச்சிகளையும் பேச்சுக்களையும் ஒரு முறை ஆராய்ந்து பார்க்கட்டும்.

இந்நாட்டைவிட்டும் வெளியேறிவிடுங்கள்;அல்லது இங்கு இரண்டாம் தர பிரஜையாக இருக்க சம்மதியுங்கள் எனும் கோஷம் முஸ்லிம்களை நோக்கி பகிரங்கமாகப்போடப்பட்டது.
“முஸ்லிம்களுக்கும்.இந்துக்களுக்கும் தனித்தனி நாடு எனும் சிந்தனை லாலா லஜ்பத்ராயின் மூளையில்தான் முதன் முதலில் உதித்தது”என அவரிடம் ஆறு ஆண்டுகள் அந்தரங்கச் செயலாளராக இருந்தவரும் காந்திஜியின் நெருங்கிய சகாவுமான பண்டிட்சுந்தர்லால்.’ரேடியன்ஸ்’ வார இதழில் (13-6-87)ஒரு கட்டுரையில் குறிப்பிடுகிறார்.

suvanappiriyan said...

திரு தங்கமணி!

//ஜின்னா போன்றவர்களின் முரட்டுத்தனத்தையும் வன்முறையையும் பார்த்துவிட்டுத்தான் ராஜாஜி அவர்கள் தனிநாடு என்று போனால் போகட்டும் என்று காந்தியிடம் கூறினார்.
இந்த லட்சணத்தில் யார் திண்ணையில் வந்து வரலாறு பாடம் எடுக்கப்போகிறார்கல் என்று நினைத்துகொண்டு இப்படி முஸ்லீம்களை அப்பாவிகளாகவும் இந்துக்களை சதிகாரர்களாகவும் காட்ட இஸ்லாமிய வழியில் ஒரு முயற்சி!//
கல்கத்தாவிலிருந்து வெளிவந்த “டோர்பீன்”என்ற பத்திரிக்கை 1867ம் ஆண்டு ஜூலை 14ந்தேதி இதழில் எழுதியிருந்த ஒரு கட்டுரையின் ஒரு பகுதி அன்றைய முஸ்லிம்களின் அவலநிலையை வெளிப்படுத்தும்.

“பெரியதும் சிறியதுமான எல்லா அலுவல்களும் நாளடைவில் முஸ்லிம்களிடமிருந்து பறிக்கப்பட்டு இதர மதத்தினரிடம் குறிப்பாக இந்துக்களுக்குக் கொடுக்கப்பட்டன.ஆட்சியாளர் தனது குடிமக்களில் எல்லா வகுப்பாளரையும் ஒரே விதமாகப் பாவிக்கக் கடமைப்பட்டுள்ளனர்.அவ்வாறிருக்க முஸ்லிம்களை அரசாங்க பதவிகளிலிருந்து அகற்றி விடுவதற்குத் தங்களின் கெஜட்டுகளிலிருந்து முஸ்லிம்களைப் பகிரங்கமாக நீக்கிவிட்டிருந்தது.சமீபத்தில் சுந்தர் பான்ஸ் காரியாலயத்தில் சில இடங்கள் காலியாயின.இதைப்பற்றிக் கமிஷனர்,அரசாங்கக் கெஜட்டில் வெளியிட்ட விளம்பரத்தில் அவ்வேலைகள் இந்துக்களைத் தவிர வேறெவருக்கும் தரபடமாட்டாதென அறிவித்திருந்தனர்.முஸ்லிம்கள் அரசாங்க வேலைகளுக்குத் தகுதியானவர்களாக இருப்பினும் அரசாங்க அறிக்கையில் அவர்களைப் புறக்கணித்தே வைக்கப்பட்டிருந்தது.இவ்வளவு தாழ்ந்த நிலைமைக்கு முஸ்லிம்கள் ஆக்கப்பட்டனர்.”
மேற்கண்டவாறு ஆட்சியாளர்கள் செய்த திட்டமிட்டச் சதியின் விளைவாக இந்துக்களின் மீது முஸ்லிம்களுக்கு ஒரு வகையான பொறாமையும்,முஸ்லிம்களைவிடத் தாங்கள் சக்தி வாய்ந்தவர்கள் என்னும் மனோபாவம் இந்துக்களுக்கும் வளர ஆரம்பித்தன.
’1917 முதலே வி.டி.சாவர்க்கர் இந்து ராஷ்ட்ரா கொள்கையை தெளிவாகவே பேசி வந்தார். அவர் இந்துக்களை அதிகாரத்தைக் கைப்பற்றி இந்து ராஜ்ஜியத்திங்கான அடிப்படைகளை அமையுங்கள் என ஆலோசனை வழங்கினார். அவர் சொன்னார்: இந்தியா என்பது ஒற்றை தேசமல்ல. இந்தியாவில் இரண்டு தேசங்கள் உள்ளன. ஒன்று இந்து தேசம். இன்னொன்று முஸ்லிம் தேசம். இன்னும் முஸ்லிம்களுக்கு இந்தியாவில் சிறுபான்மையினர் என்ற அளவில் அல்லாமல் எந்த வொரு அதிகாரமும் இல்லை.’
R.N.AGARWAL QUOTED IN THE DIALOGUEBETWEEN HINDUS AND MUSLIMS.
வீர சவர்க்காரின் கூற்றை கவனியுங்கள். இந்தியா ஒற்றை தேசமல்ல. அதோடு முஸ்லிம்களுக்கு இந்த நாட்டில் என்ன அந்தஸ்து கொடுக்க வேண்டும் என்று 1917 லேயே முடிவெடுத்து அதற்கான காய்களை நகர்த்த ஆரம்பிக்கிறார்.

‘பாகிஸ்தான் இயக்கத்தின் உண்மையான ஆதரவு எங்கிருந்து வந்தது என்பதை ஆராயும் போது அதிகாரம் தங்கள் கைகளில் வந்த போது தங்கள் நடத்தைகளால் முஸ்லிம் மனங்களில் மிகப் பெரிய அவ நம்பிக்கையை ஏற்படுத்திய காங்கிரஸிடமிருந்துதான் என்பது தெளிவுபடத் தெரியும்’

மிகப் பரந்த எண்ணமுள்ள சிமன்லால் ஸிட்டர்டு தனது (RECOLLECTION AND REFLECTION) என்ற நூலின் CONGRESS PARENTAGE OF PARTITION என்ற அத்தியாயத்தில் பக்கம் 414ல் விவரிக்கிறார்.

‘திரு ஜின்னா அவர்களும் அன்று மாநில சுயாட்சியையே கேட்டார்கள். அதனை எற்றுக் கொண்டிருந்தால் பாகிஸ்தான் தோன்றியே இருக்காது’

கலைஞர் மு. கருணாநிதி, டைம்ஸ் ஆஃப் இந்தியா, பாட்னா, (3-2-1996) பக்கம் 6

எனவே முதலில் ஜின்னாவுக்கு நாட்டை பிரிக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை. அவரை கேட்கும் அளவுக்கு தள்ளியது காங்கிரஸ் காரர்கள் தான் என்பது இதன் மூலம் தெரிகிறது. மேலும் ஜின்னாவைப் பற்றி உயர்ந்த அபிப்ராயம் இல்லை என்பதை முன்பே கூறி விட்டேன்.

//1946இல் தனது பாகிஸ்தான் கோரிக்கைக்காக இந்துக்களை ஜின்னா படுகொலை செய்ய ஆணையிடுகிறார். அதுதான் டைரக்ட் ஆக்‌ஷன் டே.//

இதற்கு ஆதாரத்தை சமர்ப்பிக்க முடியுமா? இந்த செய்தி புதிதாக இருக்கிறதே?

suvanappiriyan said...

குர்தகி மட சங்கராச்சாரியார்,இந்தியா இந்துக்களுக்கே சொந்தமானது.முஸ்லிம்கள் இங்கு விருந்தினர்களே.அவர்கள் விருந்தாளியைப்போலவே நடந்து கொள்ள வேண்டுமென்று முஸ்லிம்களை எச்சரித்தார்.
அகில இந்திய சிவில் சர்வீஸில் உறுப்பினராக இருந்த ஹர்தயால்,A Joint Hindu-Muslim state is Sheer Nonsense “இந்து-முஸ்லிம் இணைந்த ஒரு நாடு என்பது முழு முட்டாள்தனம்”என உரத்துச் சொன்னார்.
1923ல் வாரணாசியில் பண்டிட் மதன்மோகன் மாளவியா தலைமையில் இந்துமகாசபை புதுப்பிக்கப்பட்டது.இந்தத் தீவிரவாத இயக்கத்தின் கொள்கை முஸ்லிம்களை மீண்டும் இந்துவாக மாற்றல்,இந்துக்களுக்குப் போர் பயிற்சிதரல்.அதன் முக்கிய குறிக்கோள் இந்தியா இந்துக்களுக்கே வேறு யாருக்கும் அதில் உரிமை இல்லை என்பதே.இந்த இயக்கம் தொடங்கப்பட்ட பின் வகுப்புக் கலவரங்கள் அதிகமாயின இஸ்லாத்தையும் முஹம்மது நபி (ஸல்) அவர்களையும் இழிவுபடுத்தும் முயற்சிகள் நடைபெற்றன.1924ல் லாஹூரில் ரங்கிலா ராஜா (கெட்ட நடத்தையுள்ள ராஜா)என்ற நூல் ஒன்று வெளியிடப்பட்டது.அதில் இஸ்லாமியர்கள் போற்றும் முஹம்மது நபி அவர்களைத் தரக்குறைவாக விமர்சிக்கப்பட்டது.
முஸ்லிம்களின் நிலை
இவ்விதம் இந்துமதத் தலைவகளில் பலர் இந்தியாவின் பிரிவினையைப் பற்றி 1917லிருந்து பேசிக் கொண்டிருக்கும் பொழுது முஸ்லிம் தலைவர்களின் நிலை என்னவாக இருந்தது?
இன்று இந்தியாவைத் துண்டாடியதாக அதிகம் குறை சொல்லப்படும் முஹம்மது அலி ஜின்னா சாஹிப் அவர்கள் முதலில் இரு நாடு எனும் திட்டத்தைக் கடுமையாக எதிர்த்தார்.1906ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட முஸ்லிம்லீக்கில் அவர் 1936ல் தான் அதிகாரப் பூர்வமாக இணைந்தார்.அதுவரை அவர் இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் பாலமாக இருந்தார்.’The Ambassadur Hindu-Muslim Unity’என்று சரோஜினி நாயுடுவால் பாராட்டப்பட்டவர்.1993ல் லண்டனில் மாணவராக இருந்த ரஹ்மத் அலி என்பவர் பாகிஸ்தான் என்ற ஒரு நாட்டைப் பற்றிக் குறிப்பிட்ட பொழுது ‘An Impossible Dream’நடைப்பெற இயலா கனவு’என்றார் ஜின்னா
1906ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட முஸ்லிம்லீக் 1940ம் ஆண்டுவரை தனி நாடு கோரிக்கையை வலியுறுத்தவில்லை.1945,1946ல்தான் பாகிஸ்தான் கோரிக்கை வலுப்பெற்றது.
ஜின்னா ஏன் கேட்டார் தனி நாடு?
தனி நாடு கோரிக்கையைப் பற்றி சிந்திக்காத ஜின்னா சாஹிப் பின் பிடிவாதமாக தனிநாடு கேட்டது ஏன்?1937க்குப் பின் ஆட்சிப் பொறுப்பை எற்ற காங்கிரஸ்தான் காரணம் என்கிறார் சர்.சிம்மன்லால் சிடால்வாட்.லிபர்ல் பார்டியின் தலைவரும் 1930ம் ஆண்டு நடைபெற்ற வட்டமேஜை “மாநட்டில் கலந்து கொண்டவருமான சிடால்வாட்,தனது Recollection and Reflection என்ற நூலில் ,Congress Parentage of Partition” என்ற தலைப்பின் கீழ் எழுதுகிறார்:
“பாகிஸ்தான் இயக்கத்திற்கு மூலதரம் காங்கிரஸ்தான்.அது 1935-ம் ஆண்டுச் சட்டப்படி ஆட்சிக்கு வந்தபொழுது நடந்துகொண்ட முறைகள் முஸ்லிம் சமுதாயத்தின் மனதில் சந்தேகத்தினை ஏற்படுத்தியது.முஸ்லிம்களின் முறையான கோரிக்கைகளைக் கூட அது நிறைவேற்றவில்லை”என்கிறார்.
வட்டமேசை மாநாட்டில் மாகாண மந்திரிச் சபைகளில் சிறுபான்மைப் பிரதிநிதிகளையும் சேர்த்து கொள்வதென ஒப்புக்கொள்ளப்பட்டிருந்தது.ஆனால் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த மாகாணங்களில், லீகின் உறுப்பினர் பதவியை விட்டு விலகி காங்கிரஸ் உறுப்பினராக ஆனாலே தவிர மந்திரிப் பதவி இல்லை என காங்கிரஸ் கூறிவிட்டது.இதனை முஸ்லிம்கள் எதிர்த்தனர்.இதனைப் பற்றி டாக்டர்.அம்பேத்கர் குறிப்பிடும் பொழுது:”காங்கிரஸ் அனுசரித்த போக்கு விதிக்கு நேர்மாறானது.நாட்டின் இதர கட்சிகளையெல்லாம் நிர்முலமாக்கி காங்கிரஸை நாட்டின் ஒரே அரசியல் கட்சியாகச் செய்வதற்கே இந்த முறை கையாளப்பட்டது.ஒரு ஏகாதிபத்திய,யதேச்சதிகார அரசாங்கத்தை நிறுவ செய்யப்படும் இம் முயற்சியை ஹிந்துக்கள் ஒருக்கால் வரவேற்கலாம்.ஆனால் இது சுதந்திர மக்கள் என்ற முறையில் முஸ்லிம்களை அரசியலில் சாகடிப்பதாகும்”எனக் கண்டித்துக் கூறுகிறார்.
(quoted in A Short History of India and Pakistan)

suvanappiriyan said...

காங்கிரஸ் ஆட்சியில் இருந்த இரண்டு ஆண்டுகால ஆட்சியில் முஸ்லிம்கள் விரும்பாத பல நிகழ்ச்சிகள் நடைபெற்றன.அரசாங்க மொழியாக ஹிந்தி மட்டுமே உபயோகிக்கப்பட்டது.உருது புறக்கணிக்கப்பட்டது.முஸ்லிம் கல்வி நிறுவனங்கள் அலட்சியம் செய்யப்பட்டன.தங்கள் நபியைப் பற்றியோ கலிபாக்களைப் பற்றியோ மற்றும் இஸ்லாம் சம்பந்தமான விஷயங்களோ பாடத் திட்டத்தில் சேர்க்கப்படவில்லை.தங்களின் கலச்சாரம் ஒரே அடியாக அழிந்து விடுமோ என முஸ்லிம்கள் அச்சப்பட்டனர்.(Sir Regined Coupland.The Indiyan Problem)

இவ்வாறு காங்கிரஸ் நடந்து கொண்ட முறைகளைக் கண்ட ஜின்னா சாஹிப் பூரண சுயாட்சி கிடைக்காத ஒரு நாட்டில் இடைக்கால ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் காங்கிரஸ் இவ்வளவு அநீதி இழைத்தால் பரிபூரண சுயாட்சிப் பெற்று ஆட்சிக்கு வந்தால் என்னவாகும் என எண்ணியே தனிநாடு தீர்மானத்தை 1940ல் ஆதரித்தார்.எனினும் அதனைத் தீவிரமாக வற்புறுத்தவில்லை.
நேருவின் பேட்டியால் நிலை மாறியது

ஒன்றுபட்ட இந்தியாவில் மாகாண சுயாட்சி என்ற அடிப்படையில் மாகாணங்களைப் பிரிக்கலாம் என 1946ம் ஆண்டு மே மாதம் 16ந்தேதி வெளியிடப்பட்ட கேபினட் தூதுக்குழுவின் முடிவினை ஜூன் மாதம் 6ந்தேதி கூடிய முஸ்லிம் லீக் கவுன்ஸில் ஜின்னா சாஹிபின் ஆலோசனையின்படி ஏற்றுக்கொண்டது.1940ல் அக்கட்சி இயற்றிய தனி நாடு கோரிக்கையைகைவிட தயாரானது.ஆனால் ஜூலை 10ந்தேதி நேரு அவர்கள் கேபினட் குழுவின் முடிவை மாற்ற காங்கிரஸுக்கு உரிமை உண்டு என்ற ரீதியில் அளித்த பேட்டி நிலைமையை மோசாமாக்கியது.”அடிக்கடி தன் நிலையை மாற்றிக் கொள்ளும் காங்கிரஸை நம்பத் தயாராக இல்லை.தனி நாடுதான் தீர்வு”என முடிவாக ஜின்னா கூறிவிட்டார்.

“நேருவின் பேட்டி இந்தியாவின் சரித்திரத்தையே மாற்றி விட்டது”என மவ்லானா அபுல்கலாம் ஆஜாத் தனது India Wins Freedom என்ற நூலில் குறிப்பிடுகிறார்.

மேற்குறிப்பிட்ட நிகழ்ச்சிகளிலிருந்து ஜின்னா சாஹிபும் முஸ்லிம்லீக்கும் முஸ்லிம்களும் பிரிவினையை நிர்ப்பந்த சூழ் நிலையில் தான் கேட்டார்கள் என்பது விளங்கும்.

R.S.S.ஐ நோக்கி ஒரு கேள்வி?

இன்று இந்தியாவைத் தூண்டிய பாவிகள் என முஸ்லிம்களைக் குற்றஞ்சாட்டிப் பிரச்சாரம் செய்யும் R.S.S.அன்று என்ன செய்தது?இந்தியாவைப் பிரிக்க வேண்டும் என இந்து மகாசபையினர் பேசினார்களே;பிரிக்கலாம் என இராஜாஜி அவர்கள் ஆலோசனை வழங்கினாரே;பிரிக்கவே கூடாது என பிடிவாதம் செய்த காந்தியை வல்லபாய்படேல் சமாதனாப் படுத்திச் சம்மதிக்க வைத்தாரே;இவ்வளவு நிகழ்ச்சிகள் நடந்த பொழுது R.S.S. என்ன செய்தது?இன்று பாரதமாதாவைத் துண்டாடிய பாவிகள் என நீலிக்கண்ணீர் வடிப்போர் அன்று பிரிவினைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தனரா?மாநாடுகள் நடத்திக் கண்டனத் தீர்மானம் போட்டார்களா?இல்லையே!ஏன்?

முஸ்லிம்லீக்கை ஜின்னாசாஹிபை காயிதேமில்லத்தை முஸ்லிம்களைப் பிரிவினை வாதிகள் எனச் சாடுவோர் பிரிவினைக்கு முதலில் வித்திட்ட லஜ்பத்ராயை, பண்டிட் மாளவியாவை, ஆதரித்த இராஜாஜியை, பட்டேலை பிரிவினைவாதிகள் எனச் சொல்லுவது இல்லையே?ஏன்?

இந்தியா பிளவுபட்டாலும் பரவாயில்லை முஸ்லிம்களை இந்நாட்டை விட்டும் விரட்டிவிட வேண்டும் என்ற தணியாத ஆசையால் அதனை ஏற்றுக்கொண்டனர்:விரும்பினர் R.S.S.காரர்கள்.ஆனால் அவர்கள் விரும்பியது போல் இந்திய முஸ்லிம்கள் ஒட்டுமொத்தமாக இந்நாட்டை விட்டும் சென்று விடவில்லை.இந்நாட்டிலே பிறந்து இந்நாட்டிலே வளர்ந்து இந்நாட்டின் வளர்சிக்கும் வளத்திற்கும் பாடுபட்ட முஸ்லிம்கள் எப்படி போவார்கள்?அவர்களை விரட்ட யாருக்கும் எவ்வித குரோத உணர்வே R.S.S.க்காரர்கள் ஒன்றுமே அறியாத அப்பாவிகள் போல் கபட வேடமிட்டு புலம்புகின்றனர்.

சற்று சிந்தியுங்கள்!

மேற்குறிப்பிட்ட ஆதாரப் பூர்வமான நிகழ்ச்சித்தொகுப்புகளிலிருந்து நாம் என்ன புரிகிறோம்?

பிரிட்டிஷ் ஆட்சிக்கு முன் முஸ்லிம்களின் ஆட்சியில் வகுப்புக் கலவரம் நடக்கவில்லை.
இந்து-முஸ்லிம் கருத்து வேற்றுமையும்-குரோதமும் பிரிட்டிஷரால் திட்டமிடடு ஏற்படுத்தப்பட்டவை.
முஸ்லிம்கள் இந்நாட்டைப் பிரிக்க முதலில் விரும்பவோ,திட்டமிடவோ இல்லை.

இந்து தீவிரவாதிகளும் அடிக்கடித்தன்நிலையை மாற்றிக் கொண்ட காங்கிரஸுமே இந்தியப் பிரிவினைக்கு முதல் காரணம்.

http://niduronline.com/?p=2347

ராவணன் said...

அண்ணாச்சி...எக்கச்சக்கமா குட்டிகளைப் போட்டு நாட்டை நாறடிக்கும் பன்னிகளை அடித்து தின்பது பாவமா அண்ணாச்சி?

ராவணன் said...

அண்ணாச்சி தமிழ்மணம் இல்லாவிட்டால் என்ன? நாம் தனியாக பீஜேமணம் என்று ஆரம்பிப்போம்.