Followers

Sunday, November 18, 2012

கரீம் அப்துல் ஜப்பாருக்கு சிலை வடித்தது சரியாகுமா?

கரீம் அப்துல் ஜப்பாருக்கு சிலை வடித்தது சரியாகுமா?


கரீம் அப்துல் ஜப்பார்: லாஸ் ஏஞ்சல்ஸில் இவரது கூடைப் பந்து சாதனைகளை பாராட்டி(16-11-2012) வெண்கலச் சிலையை நிறுவியுள்ளனர். 16 அடி உயரமுள்ள இந்த சிலை மிக கம்பீரமாக காட்சியளிக்கிறது. 38387 பாயிண்டுகள் என்பிஏ கிளப்புக்காக எடுத்த சாதனையை இன்று வரை யாரும் முறியடிக்கவில்லை என்பதற்காக இந்த கௌரவத்தை அளித்திருக்கின்றனர். இவரது உயரம் 7 அடி இரண்டு இன்ஞ். கூடைப் பந்து விளையாட ஏற்ற உயரம்தான். :-).



ப்ரூஸ்லீயோடு சண்டையிடும் கரீம் அப்துல் ஜப்பார்.....

மனித நேய பணிகள் பல செய்து மேலும் சாதனை புரிந்ததனால் பல்வேறு விருதுகளை முன்பே வாங்கியுள்ளார். பல புத்தகங்களும் எழுதியுள்ளார். டாகுமெண்டரி படங்களிலும் நடித்துள்ளார். கவுரவிப்பதற்கு ஏற்ற நபர் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. .



ஆனால் இவரை கவுரவப்படுத்த சிலை திறந்ததுதான் நமக்கு வருத்தம். ஏனெனில் சமூகத்தில் மரியாதையாகப் பார்க்கப்படும் ஒரு நபரை இவ்வாறு சிலை வடிக்க ஆரம்பித்தால் சில காலத்துக்கு பிறகு அந்த சிலையையே வணங்க ஆரம்பித்து விடுவர். இது உலகம் முழுவதும் நாம் பார்த்து வருபவை. நமது நாட்டிலும் இத்தனை கடவுள்கள் வரக் காரணமே மன்னர்களையும் மத பிரசாரகர்களையும் ஊர் பெரியவர்களையும் சிலைகளாக வடித்தமையே! தந்தை பெரியாரையே இன்று மாலை மரியாதை செய்ய ஆரம்பித்து விட்டோம். இது எங்கு போய் முடியுமோ தெரியவில்லை. எனவே இது ஒரு தவறான முன்னுதாரணம். ஃபெர்ணாண்டஸ் லூயிஸாக பிறந்த இவர் 1968 ல் இஸ்லாத்தை தனது வாழ்வியலாக ஏற்றுக் கொண்டார். ஒரு முஸ்லிமாக இருந்து கொண்டு இதை எவ்வாறு அப்துல் கரீம் ஆதரித்தார் என்பது ஆச்சரியமாக இருக்கிறது. இதற்கு செலவு செய்த பணத்தை அமெரிக்காவில் ஏழைகளாக உள்ள எத்தனையோ குடும்பங்களுக்கு செலவு செய்திருக்கலாம். அந்த மக்களும் வாழ்த்தியிருப்பர். அல்லது ஒரு டிரஸ்ட் ஆரம்பித்து ஏழை குழந்தைகளின் படிப்புக்கு உதவியிருக்கலாம்..

படித்தவர்கள் அதிகம் உள்ள நாடுகளிலும் இது போன்ற செயல்கள் நடைபெறுவது வருத்தத்திற்குரியது.



---------------------------------------------------------

தான் இஸ்லாத்தை ஏற்றததற்கான காரணத்தை கீழே விவரிக்கிறார் கரீம் அப்துல் ஜப்பார். தனது மன மாற்றத்துக்கு முக்கிய காரணமாக மால்கம் எக்ஸ்ஸைக் குறிப்பிடுகிறார்..இந்த தலைமுறையில் தான் மதம் மாறியுள்ளார். அதற்குள் 'இஸ்லாம் எங்களுக்கு' 'எங்களின் இஸ்லாம்' என்று சொந்தம் கொண்டாடுகிறார். யூத, கிறித்தவ தூதர்களையும் நாங்கள் சம அளவில் மதிக்கிறோம் என்று ஏதோ பல தலைமுறைகளாக இஸ்லாத்திலேயே ஊறித் திளைத்தவர் போல் பதிலளிக்கிறார். இஸ்லாம் ஒரு சாதாரண மனிதனை எப்படி எல்லாம் மாற்றி விடுகிறது!

[Growing up in America,] I eventually found that . . .emotionally, spiritually, I could not afford to be a racist. As I got older, I gradually got past believing that black was either the best or the worst. It just was. The black man who had the most profound influence on me was Malcolm X. I had read "Muhammad Speaks", the Black Muslim newspaper, but even in the early sixties, their brand of racism was unacceptable to me. It held the identical hostility as white racism, and for all my anger and resent meant, I understood that rage can do very little to change anything. It’s just a continual negative spiral that feeds on itself, and who needs that?

. . .Malcolm X was different. He’d made a trip to Mecca, and realized that Islam embraced people of all color. He was assassinated in 1965, and though I didn’t know much about him then, his death hit hard because I knew he was talking about black pride, about self-help and lifting ourselves up. And I liked his attitude of non-subservience.

. . .Malcolm X’s autobiography came out in 1966, when I was a freshman at UCLA, and I read it right before my nineteenth birthday. It made a bigger impression on me than any book I had ever read, turning me around totally. I started to look at things differently, instead of accepting the mainstream viewpoint.

. . .[Malcolm] opened the door for real cooperation between the races, not just the superficial, paternalistic thing. He was talking about real people doing real things, black pride and Islam. I just grabbed on to it. And I have never looked back.

SG: When you embraced Islam, was it difficult for other people to come to terms with that? Did that create a distance between you and others?

KA: For the most part it was. I didn’t try to make it hard on people; I did not have a chip on my shoulder. I just wanted people understand I was Muslim, and that’s what I felt was the best thing for me. If they could accept that I could accept them. I didn’t...it wasn’t like if you’re going to become my friend you have to become Muslim also. No, that was not it. I respect people’s choices just as I hope they respect my choices.

SG: What happens to a person when they take on another name, another persona if you like? How much did you change?

KA: For me it made me more tolerant because I had to learn to understand differences. You know I was different, people didn’t oftentimes understand exactly where I was coming from; certainly after 9/11 I’ve had to like explain myself and...

SG: Was there a backlash against people like yourself? Did you feel that at all?

KA: I didn’t feel like necessarily a backlash, but I certainly felt that a number of people might have questioned my loyalty, or questioned where I was at, but I continue to be a patriotic American...

SG: For a lot of black Americans, converting to Islam was an intensely political decision as well. Was it the same for you?

KA: That was not part of my journey. My choosing Islam was not a political statement; it was a spiritual statement. What I learned about the Bible and the Qur’an made me see that the Qur’an was the next revelation from the Supreme Being - and I chose to interpret that and follow that. I don’t think it had anything to do with trying to pigeon hole anyone, and deny them the ability to practice as they saw fit. The Quran tells us that Jews, Christians, and Muslims: Muslims are supposed to treat all of them the same way because we all believe in the same prophets and heaven and hell would be the same for all of us. And that’s what it’s supposed to be about.

http://www.islamreligion.com/articles/446/

http://kareemabduljabbar.com/






11 comments:

mohamed said...

சலாம் சகோ சுவனப்பிரியன்,
மாஷா அல்லாஹ் அருமையான பதிவு.ஜஜாகல்லாஹ் ஹைர்

mohamed said...
This comment has been removed by the author.
UNMAIKAL said...

PART 1. சிலைகளும் இல்லாமல்; சின்னங்களும் இல்லாமல் இஸ்லாம் பரவுகின்றதே! இது ஆச்சயரியமில்லையா?

ஒரு மதம் (மார்க்கம்) தானாக பரவுகின்றது, வளருகின்றது என்றால் நீங்கள் நம்புவீர்களா?

ஆம் அந்த அதிசயத்தை உலகம் பார்த்துக் கொண்டிருக்கின்றது.

இஸ்லாத்தை பரப்புவதற்கு உலகளவில் ஒரு அமைப்பு இல்லை.
ஒரு இயக்கம் இல்லை.

ஆனாலும் அது பரவுகின்றது வளருகின்றது.

இஸ்லாத்தை எதிர்த்தால் பெரிய பெரிய வல்லரசுகளின் ஆதரவும் பாதுகாப்பும் கிடைக்கின்றது.

அதற்கு உதாரணம் சல்மான் ருஷ்டி, தஸ்லீமா நஸ்ரீன்.

ஒரு முஸ்லிம் விரைவில் கோடீஸ்வரன ஆக வேண்டுமா?

அவன் வேறொன்றும் செய்ய வேண்டியதில்லை.

திருக்குர்ஆன் சரியில்லை என்று அவன் ஏதாவது உளறினாலோ, கிறுக்கினாலோ போதும்; உடனே அவனுக்கு உலகில் பெயரும் புகழும் கிடைக்கும்.

ஒரே இரவில் அவனை ஓர் ஒரு சிறந்த அறிஞன், மிகப்பெரிய சிந்தனையாளன், புரட்சி எழுத்தாளான் என்றெல்லாம் அவனுக்கு பட்டங்கள் வந்து சேர்ந்துவிடும்.

எல்லா பத்திரிகைகளும் பத்தி பத்தியாக செய்திகள் வெளியிடும்.

அப்பாவி முஸ்லிம்கள் உணர்ச்சி வசப்பட்டு கொதித்தெழுவார்கள்.
துப்பாக்கி சூடுகளுக்குப் பழியாகி பிணமாவார்கள்.

இஸ்லாத்தை விமர்சித்த அந்த பெயர் தாங்கி முஸ்லிமுக்கு இன்னும் அதிக முக்கியத்துவம் கிடைத்துவிடும்.

ஒரு சிலர் ஆத்திரப்பட்டு கொலை மிரட்டல்கள் விடுவார்கள். உடனே அவனுக்கு பாஸ்போர்ர்ட் இல்லாமலேயே உலகப் பயனம் மேற்கொள்ளும் தகுதி கிடைத்துவிடும்.

அவனுக்காக அடைக்கலம் தர பெரிய பெரிய நாடுகள் முன் வருவார்கள்.

வல்லரசுகளின் அதிபர்கள் எல்லாம் அவனுக்கு விருந்துகளும், விருதுகளும் தந்து கெளரவிப்பார்கள்.

முஸ்லிம்களுக்கு சகிப்புத்தன்மை இல்லை; விமர்சனங்களை தாங்கிக்கொள்ளும் மனோபக்குவம் இல்லை; கருத்து சுதந்திரம் இல்லை; முஸ்லிம்கள் என்றாலே அது ஒரு வெறிப் பிடித்த கூட்டம்; தீவிரவாத கூட்டம் என்றெல்லாம் உலக அரங்கில் பிரச்சாரம் முடுக்கிவிடப்படும்.

இஸ்லாத்தை எதிர்ப்பதுதான் கெளரவமான செயல் என்பதை நிலை நாட்டத்தான் இத்தனை ஆதரவுகள் தரப்படுகின்றன.

இஸ்லாத்தை முஸ்லிம்களே எதிர்க்க வேண்டும் என்று சில முஸ்லிம் அதிருப்தியாளர்களை தூண்டத்தான் இத்தனை வஞ்சக நாடகங்களும் நடத்தப்படுகின்றன.

ஆக அனைத்து மீடியாக்களும் ஒன்று சேர்ந்து அல்லும் பகலும் பிரச்சாரம் செய்கின்றன.

ஆனாலும் இஸ்லாம் தேய்பிறையாக மாறாமல் வளர் பிறையாக மின்னுகிறது.

இஸ்லாத்தை கடுமையாக எதிர்க்கும் நாடுகளிலேயே அவர்களின் எதிர்ப்பைப் பொருட்படுத்தாமல் இஸ்லாம் வளருகின்றது.

எதிர்ப்புகள் வளர வளர, அப்படி இஸ்லாத்தில் என்னதான் குறைகள் இருக்கின்றன; நாமும் பார்ப்போமே என்று, இன்று இஸ்லாத்தை ஆராய முன் வருகிறார்கள். அவர்களுடை மனக்கண்கள் திறக்கின்றன.

உலகில் இப்படி மனித குலத்தை ஒருங்கிணைக்கும் மார்க்கம் ஒன்று இருக்கின்றதா? அடடா இதுவரை எங்களுக்கு தெரியாமல் போய்விட்டதே என்று அங்கலாய்க்கிறார்கள்.

ஒரு தூய்மையான மார்க்கத்தைப் பற்றி தெரிந்து கொள்ளாமல் இருந்தோமே என்று வருத்தப்படுகிறார்கள்.

உண்மை என்னவென்று தெரிந்த பிறகு உடனே அதை அரவணைத்துக் கொள்கிறார்கள்.

இன்று இஸ்லாத்தை எதிர்க்கின்ற அனைத்து சக்திகளும் தங்களுக்கு தெரியாமல் இஸ்லாம் வளர்வதற்கு காரணமாக இருக்கின்றார்கள்.

எதிர்ப்புகளையும், எதிர்ப்பாளர்களையும் வைத்தே இஸ்லாம் பரவுகின்றதென்றால் இது ஒரு அதிசயமல்லவா?

பத்திரிகைகள், சினிமா தொலைக்காட்சி, இசை இவை இல்லாமல் இன்று உலகில் எதுவும் பரவ முடியாது.

இது இன்றைய உலக நிலை.

மற்ற மதங்கள் அழகான பெண்களைக் காட்டி சீரியல் நாடகங்களையும் நடத்தி பட்டி மன்றங்களையும், திருவிளாக்களையும், தெருக்கூத்துகளையும் காட்டி இசையுடன் சேர்ந்த பாடல்களை பாடி பத்திரிகைகளில் விளம்பரம் செய்து தங்கள் மதங்களை வளர்க்க முயற்சிக்கின்றன.

ஆனால் இத்தனைக்குப் பிறகும் இவைகளைப் பார்த்து மக்கள் கூட்டம் கூட்டமாக அந்த மதத்தில் இணைந்ததாக செய்திகளை நாளிதல்களில் பார்க்க முடிகிறதா?

ஒரு மதம் பரவ வேண்டுமானால் சிலைகள் அவசியம் வேண்டும்.

மதச் சின்னங்களைப் பரப்ப வேண்டும்.

இவையில்லாமல் எந்த மதத்தையும் பரப்ப முடியாது.

ஆனால் சிலைகளும் இல்லாமல்; சின்னங்களும் இல்லாமல் இஸ்லாம் பரவுகின்றதே!

இது ஆச்சரியமில்லையா?

CONTINUED …

UNMAIKAL said...

PART 2. சிலைகளும் இல்லாமல்; சின்னங்களும் இல்லாமல் இஸ்லாம் பரவுகின்றதே! இது ஆச்சரியமில்லையா?

இன்றைய பிரச்சார சாதனங்களுக்கு மூலதனமே பெண்கள்தான்.

விளம்பரத்தின் திறவுகோலும் தோற்று வாயுமாக இருக்கின்ற பெண்ணின் கவர்ச்சியான உடலமைப்பிற்குத் திரைப்போட்டு மூடிவிட்டு இஸ்லாம் வளருகின்றதே...

இசை கூத்துக்கு இங்கே இடமேயில்லை.

மனிதன் விரும்பும் மனம்போல் வாழ இஸ்லாத்தில் சுதந்திரம் இல்லை.

மனம்போன போக்கில் ஒரு முஸ்லிம் வாழ முடியாது, இங்கு கட்டுப்பாடுகள் அதிகம்.

மக்கள் விரும்பும் விபச்சாரம், சூதாட்டம், மதுபானம், வட்டி இந்த நான்கையும் அறவே தடுப்பது இஸ்லாம் ஆனாலும் இஸ்லாம் வளருகின்றதே.

முஸ்லிம்களிடம் வல்லரசுகள் இல்லை.

ஐ.நா சபையில் ஆதிக்கம் இல்லை.
ஒருங்கிணைப்பு இல்லை.

எங்கே பார்த்தாலும் முஸ்லிம்கள் தம் வீடுகளிலிருந்து துரத்தப்படுகிறார்கள், முஸ்லிம் என்று சொன்னாலேயே ஆபத்து வலிய வருகின்றது.

ஆனாலும் இஸ்லாம் வளருகின்றதே.

முஸ்லிம்களின் கடவுளோ கண்களுக்குத் தெரியாது. அவர்களுடைய தலைவரின் (இறைத்தூதர்) படம் கூட அவர்கள் பார்த்ததில்லை.

முஸ்லிம்கள் தொழுவதற்கு கைகால் கழுவ வேண்டும். சிறு நீர் கழித்தாலும் சுத்தம் செய்து கொள்ள வேண்டும். குளிப்பு கடமையானால் (முழுக்கு) குளித்து விட்டுத்தான் இறை ஆலயத்திற்குள் நுழைய வேண்டும்.

தினந்தோறும் ஐந்து வேளை கட்டாயம் தொழ வேண்டும்.
இத்தனை சிரமங்கள், இத்தனை கஷ்டங்கள் இருப்பினும் இஸ்லாம் பரவுகின்றதே.


தர்மம் செய்துதான் தீரவேண்டும் என்று எந்த மதத்திலும் கட்டாயமில்லை.

ஆனால் வசதி படைத்த ஒவ்வொரு முஸ்லிமும் வருடா வருடம் ரூபாய்க்கு இரண்டரை சதவீதம் தன்னுடைய சம்பாத்தியத்திலிருந்து ஏழைகளுக்குக் கொடுத்தே தீர வேண்டும்.

இந்த சுமையையும் ஒரு முஸ்லிம் ஏற்றுத்தான் ஆகவேண்டும்.

இஸ்லாத்தில் குற்றங்களுக்கு தண்டனை மிக கடுமையானவை. ஆனாலும் இஸ்லாம் பரவுகின்றதே!

இது எப்படி சாத்தியமாகின்றது?

இறைவன் தன்னுடைய திருமறையில் இப்படி கூறுகின்றான்;

يُرِيدُونَ لِيُطْفِؤُوا نُورَ اللَّهِ بِأَفْوَاهِهِمْ وَاللَّهُ مُتِمُّ نُورِهِ وَلَوْ كَرِهَ الْكَافِرُونَ

"அவர்கள் அல்லாஹ்வின் ஒளியை தம் வாய்களைக் கொண்டு (ஊதி) அணைத்து விட நாடுகின்றனர். ஆனால் காஃபிர்கள் வெறுத்த போதிலும் அல்லாஹ் தன் ஒளியை பூரணமாக்கியே வைப்பான். (61:8)

உலகில் உள்ள மதங்கள் கடவுளுக்காக அல்லாமல், மதங்களுக்கே கடவுளை பயன்படுத்துகின்றன.

கடவுளின் சட்டங்கள், கடவுளின் ஆட்சி வரவேண்டும் என்று கடவுளுக்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணிப்பவர்கள் முஸ்லிம்கள் மட்டும்தான்.

மாற்று மதத்தினர் தங்கள் விருப்பங்கள் நிறைவேறுவதற்காகத்தான் கடவுளை வணங்குகிறார்களே தவிர, கடவுளின் விருப்பங்கள் நிறைவேற அவர்கள் ஆசைப்படுவதில்லை.

கடவுளை தங்கள் இனத்திற்கும் மதத்திற்கும் சொந்தமாக்க முயற்சி செய்கின்றார்களே தவிர, கடவுளை எல்லோருக்கும் பொதுவாக்க அவர்கள் விரும்புவதில்லை.

Universal god என்ற பரந்த நோக்கை குறுகிய மனப்பான்மையோடு, கடவுளையே சிறுமைப்படுத்த முயல்கின்றார்களே தவிர, இவர்கள் கூறும் மதங்களால் கடவுளுக்குப் பெருமையில்லை.

மனித குலத்திற்காக மதம் சேவையாற்ற வேண்டுமே தவிர, மதங்களுக்காக மனித குலத்தைக் கூறு போடக்கூடாது.

ஆக உண்மையான கடவுள் நம்பிக்கை உடையவர்கள் இஸ்லாத்தைத் தழுவுவதை தவிர வேறு வழி கிடையாது.

இஸ்லாம் ஒன்றுதான் கடவுளை பெருமைப்படுத்தும் மதமாக (மார்க்கமாக) இருக்கின்றது.
அது மட்டும்தான் தனக்காக வாழாமல் கடவுளுக்காக வாழ கற்றுத் தருகின்றது.

கடவுளை அடைய அது ஒன்றுதான் வழியாய் இருக்கின்றது.
போலிப் பொருள்களுக்குத்தான் போலியான விளம்பரங்கள் தேவை. - ரபீக் அஹமத்.

SOURCE: http://www.readislam.net/miracle.htm

suvanappiriyan said...

சலாம் சகோ முஹம்மத்!

//மாஷா அல்லாஹ் அருமையான பதிவு.ஜஜாகல்லாஹ் ஹைர்//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

suvanappiriyan said...

சகோ உண்மைகள்!

//கடவுளை அடைய அது ஒன்றுதான் வழியாய் இருக்கின்றது.
போலிப் பொருள்களுக்குத்தான் போலியான விளம்பரங்கள் தேவை. - ரபீக் அஹமத்.//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

kk said...

ஒரு நபரை இவ்வாறு சிலை வடிக்க ஆரம்பித்தால் சில காலத்துக்கு பிறகு அந்த சிலையையே வணங்க ஆரம்பித்து விடுவர். இது உலகம் முழுவதும் நாம் பார்த்து வருபவை.///சுவனப்பிரியன் அவர்களே சிலையைக்கணடதும் மாலைபோட்டுக்கும்பிட நமது நாட்டவர்கள் என்று நினைத்துவிட்டீர்களா? ஆபிரகாம் லிங்கன் தொடக்கம் பலரது சிலைகள் அங்கு வெறும் நினைவுச்சின்னங்களாகத்தான் இருக்கின்றன.இதே போன்ற ஒரு காரணத்திற்காக நமது நாட்டில் சிலை வைத்தால் கவலைப்படலாம் அங்கு சிலைவைத்தால் அது அன்றைக்கு மட்டுமே விஸேஸமாக நோக்கப்படும் மற்றபடி அது அனாதைச்சிலைதான்

suvanappiriyan said...

திரு கிருத்திகன் யோகராஜா!

//சுவனப்பிரியன் அவர்களே சிலையைக்கணடதும் மாலைபோட்டுக்கும்பிட நமது நாட்டவர்கள் என்று நினைத்துவிட்டீர்களா? ஆபிரகாம் லிங்கன் தொடக்கம் பலரது சிலைகள் அங்கு வெறும் நினைவுச்சின்னங்களாகத்தான் இருக்கின்றன.இதே போன்ற ஒரு காரணத்திற்காக நமது நாட்டில் சிலை வைத்தால் கவலைப்படலாம் அங்கு சிலைவைத்தால் அது அன்றைக்கு மட்டுமே விஸேஸமாக நோக்கப்படும் மற்றபடி அது அனாதைச்சிலைதான் //

தற்போது அப்படி ஒரு நிலை என்றாலும் பிற்காலத்தில் எப்படி மாற்றங்கள் வரும் என்று சொல்ல முடியாதே! நமது நாட்டிலும் 3000, 4000 வருடங்களுக்கு முன்பு ஆன்மீகம் மிக உயரிய கருத்துக்களை கொண்டிருந்தது. பின்னால் வந்த ஆரிய படையெடுப்பினால்தான் சிலைகளை வணங்கும் பழக்கம் ஏற்பட்டது. அதுபோல் அங்கும் நடக்கலாம். மேலும் இஸ்லாம் இவ்வாறு மனிதர்களை சிலைகளாக வடிப்பதை தடுக்கவும் செய்கிறது.

Nasar said...

சில பதிவர்கள் தங்களுக்கு பதிவு எழுத மேட்டர் கிடைக்கவில்லையே என்று ஏங்கிக்கொண்டு இருக்கிறார்கள் இந்த சிலை பற்றிய பதிவுக்கு எதிர் பதிவுகள் நிச்சயமாக வரும் அட்லிஸ்ட் கனேடிய பதிவர் எதிர் குத்து போடுவார் பாருங்க .....நீங்க நாக் அவுட்
அப்துல் ஜப்பார் வெகு காலத்துக்கு முன்பே முஸ்லிம் ஆயிட்டார் ..
இப்போ அவருக்காக சிலை வைக்கிறாங்க என்றால் ஏதோ வில்லங்கம்
இருக்கிறது ....இவரைவிடEVER GREEN பாக்சர் முஹம்மத் அலி புகழ் வாய்ந்தவர் ஆச்சே ,அலிக்கு சிலையில்லை ஆனால் அப்துல் ஜப்பாருக்கு சிலையா ?!
மத பிரகாரம் சிலை தேவையில்லை அதிலும் ஒரு முஸ்லிம் பெயரிலேயே சிலையா ...!!!!

suvanappiriyan said...

சகோ நாசர்!

//அப்துல் ஜப்பார் வெகு காலத்துக்கு முன்பே முஸ்லிம் ஆயிட்டார் ..
இப்போ அவருக்காக சிலை வைக்கிறாங்க என்றால் ஏதோ வில்லங்கம்
இருக்கிறது ....இவரைவிடEVER GREEN பாக்சர் முஹம்மத் அலி புகழ் வாய்ந்தவர் ஆச்சே ,அலிக்கு சிலையில்லை ஆனால் அப்துல் ஜப்பாருக்கு சிலையா ?!
மத பிரகாரம் சிலை தேவையில்லை அதிலும் ஒரு முஸ்லிம் பெயரிலேயே சிலையா ...!!!!//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

UNMAIKAL said...

“நாம் வாழ்வது ஜனநாயக நாட்டில்,

பாசிச சர்வாதிகார நாட்டில் அல்ல!”

– மார்க்கண்டேய கட்ஜு

20 Nov 2012 Justice Katju condemns girl's arrest for Facebook post, fires strong second email to Prithviraj Chavan

மும்பை:ஹிந்துத்துவா சிவசேனா தலைவர் பால்தாக்கரேவின் மறைவிற்காக நடத்தப்பட்ட முழுஅடைப்பிற்கு,

சமூக வலைத்தளமான ஃபேஸ்புக்கில் கருத்து எழுதிய பெண் கைது செய்யப்பட்டதை கண்டித்து மஹாராஷ்டிரா முதல்வருக்கு பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியாவின் தலைவர் மார்க்கண்டேய கட்ஜு எச்சரிக்கை கடிதம் எழுதியுள்ளார்.

மஹராஷ்டிரா முதல்வர் சவாணுக்கு கட்ஜூ அனுப்பியுள்ள கடிதத்தில்;

“மத உணர்வுகளை புண்படுத்தியதாக அந்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஒரு பந்த்துக்கு எதிராக கருத்து தெரிவித்தால், அது மத உணர்வை புண்படுத்துவதாக கூறுவது என்பது என்னைப் பொறுத்த வரையில் மோசமானது.

அரசியல் சாசனத்தின் 19(1) ஆவது பிரிவு, கருத்து சுதந்திரம் அடிப்படை உரிமை என்பதை உறுதிப்படுத்துகிறது.

நாம் ஜனநாயக நாட்டில் வாழ்ந்துகொண்டிருக்கிறோமே தவிர, பாசிச சர்வாதிகார நாட்டில் அல்ல.

அரசியல் சாசனத்தின் 341 மற்றும் 342 ஆகிய பிரிவுகளின் படி பார்த்தால்,

உண்மையில் இந்த கைதே ஒரு கிரிமினல் செயலாக தோன்றுகிறது.

தவறாக ஒருவரை கைது செய்வதோ அல்லது ஒருவரை குற்றம் புரிந்ததாக தவறாக சேர்ப்பதோ குற்றமாகும்.

எனவே குறிப்பிட்ட அப்பெண்னை கைது செய்த காவல்துறை மற்றும் கைது செய்ய உத்தரவிட்ட காவல்துறை அதிகாரி ஆகியோர் எவ்வளவு உயரிய பொறுப்பில் இருந்தாலும் அவர்களை உடனடியாக சஸ்பெண்ட் செய்து,

கைது செய்வதோடு,

அவர்கள் மீது கிரிமினல் வழக்குப் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இதை செய்ய தவறினால்,

அரசியல் சாசனப்படி பதவிப் பிரமாணம் எடுத்த நீங்கள்,

உங்கள் மாநிலத்தை நீங்கள் ஜனநாயக முறையில் நடத்த இயலாத நிலையில் உள்ளீர்கள் என்ற எண்ணத்திற்கு நான் வர நேரிடும்.

அதன் பின்னர் அதன் சட்ட விளைவுகளையும் நீங்கள் சந்திக்க நேரிடும்” என அக்கடிதத்தில் கூறியுள்ளார்.

இதனிடையே இந்த கைதுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதை தொடர்ந்து, அந்த பெண்கள் இருவரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

முன்னதாக பால்தாக்கரே மறைவை தொடர்ந்து மும்பை நகரில் முற்றிலும் முழு அடைப்பு நிலை காணப்பட்டது.

இதனை விமர்சித்து சமூக வலைத்தளமான ஃபேஸ்புக்கில், “தாக்கரே போன்றவர்கள் தினமும் பிறக்கிறார்கள், இறக்கிறார்கள் அதற்காக பந்த் நடத்த வேண்டுமா?” என்று கருத்து பதிந்த பெண்ணும், அதற்கு ‘லைக்’ போட்ட பெண்ணும் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டுள்ள இருவர் மீதும் மத உணர்வுகளை புண்படுத்தியது மற்றும் தகவல் தொழில் நுட்ப சட்டம் 2000 ஆகிய பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

குறிப்பிட்ட அந்த பெண் தனது கருத்தை வாபஸ் பெற்றுக்கொண்டு, மன்னிப்புக் கோரியபோதிலும், சிவசேனா பயங்கரவாதிகள் அந்த பெண்ணின் உறவினர் நடத்தி வரும் மருத்துவமனையை அடித்து நொறுக்கி உள்ளனர்.

http://www.thoothuonline.com/katju-blasts-arrest-of-women-who-commented-on-fb/