Followers

Friday, November 23, 2012

எனது முதல் காவல் நிலைய அனுபவம்!


எனது முதல் காவல் நிலைய அனுபவம்!

போன வருடம் எங்கள் ஊர் காவல் நிலையத்துக்கு போகும் ஒரு அவசிய தேவை ஏற்பட்டது. எஸஐ யிடமிருந்து பையன் படிப்பின் ஆவணங்கள் சம்பந்தமாக ஒரு கையெழுத்து வாங்க வேண்டும். எனவே இது வரை காவல் நிலையத்துக்கு செல்லாத நான் முதன் முதலாக காவல் நிலையத்துக்குள் பிரவேசித்தேன். முன்னால் அமர்ந்திருந்த எழுத்தரிடம் 'எஸ்ஐ எப்பொழுது வருவார்?' என்று கேட்டேன். 'இன்னும் அரை மணி நேரத்தில் வந்து விடுவார்' என்று சொன்னார். அதுவரை நேரம் போக வேண்டுமே? எனவே காவல் நிலையத்துக்கு வெளியே மர நிழலில் உள்ள பெஞ்சில் சற்று அமர்ந்தேன். பக்கத்தில் இந்த பக்கம் ஒரு 15 பேர். அந்த பக்கம் ஒரு 10 பேர் கும்பலாக நின்று காரசாரமான விவாதத்தில் ஈடுபட்டிருந்தனர். அரசியல் கட்சிகள் சம்பந்தமாக ஏதும் தகராறோ என்று நினைத்தேன். என்ன பேசிக் கொள்கிறார்கள் என்று நானும் எனது காதை கூர்மையாக்கி கேட்கத் தொடங்கினேன்.

'மாப்ள...நீ ஒன்னும் கவலைப்படாதே! இன்னைக்கி ரெண்ட்ல ஒன்னு பார்த்திடுவம்'

'என்ன தைரியம்யா அவனுக்கு...கடை பூந்து அடிக்கிறான்யா..'

'இப்படியே உட்டோம்னா நாம சேலை கட்டிக்க வேண்டியதுதான்'

அதற்குள் இரு சக்கர வாகனமான புல்லட்டில் முரட்டு மீசை தடியான உடம்போடு ஒரு 55 வயது மதிக்கத்தக்க ஒருவர் அந்த கும்பலில் வந்து இறங்கினார். இவர்கள் கிராமத்தின் நாட்டாமை என்பது பேச்சிலேயே தெரிந்தது.

'ராமையா! என்னய்யா ஆச்சு. என் வேலை எல்லாம் போட்டுட்டு இப்போ வந்திருக்கேன்.'

'ஐயா.. வாங்க...நம்ம வெத்தல பொட்டி மகன் சுப்ரமணியன தெரியுங்களா?'

'ஆமாம்..குடிச்சு புட்டு உருண்டு கெடப்பானே அவனா'

'அவனேதாங்க ஐயா! நேத்து சாயங்காலம் நம்ம மருதமுத்து சாராய கடையில போய் சாராயம் கேட்டுருக்கான். ஏற்கெனவே 200 ரூபா அவன் பாக்கி தரணுமாம். பழைய பாக்கியை கொடுத்தா சாராயம் தர்றேன்டு சொல்லியிருக்கான். இதுல தகராறு முத்திபோயி மருதமுத்துவை நல்லா அடிச்சுட்டான். அடிச்ச அடியில நிறைய ரத்தமும் வந்துடுச்சு. அதான் அவன்மேல் மருத முத்து கேஸ் குடுத்துருக்கான். இன்ஸ்பெக்டர் வர்றதுக்காக காத்துகிட்டு இருக்கோம்.'

'இந்த அடிதடி சமாசாரத்தை எல்லாம் ஏன்யா ஸ்டேஷன் வரைக்கும் கொண்டு வர்றீங்க. நம்ம கிராமத்துலேயே பேசி முடிச்சிருக்குலாம்ல...சரி சரி...எஸ்ஐ வந்தவுடன் கேஸை வாபஸ் வாங்கிட்டு ஊர் வந்து சேருங்க எங்கே சுப்ரமணியன்?'

'சுப்ரமணி! ஐயா கூப்புட்றாருல.....'

'ஐயா...சொல்லுங்க!'

'ஏலேய்! எண்டா இப்படி ஊர் பேரை கெடுத்துகிட்டு அலையிறீங்க...அடிச்ச அடியிலே செத்து கித்து தொலைஞ்சிறுந்தான்னா வாழ்க்கை பூரா கம்பி எண்ணனும் தெரியுமல...'

'ஏதோ தெரியாம நடந்து போச்சுங்கண்ணா! இனிமே கவனமா இருக்குறேன்'

ஊர் நாடடாமை கொஞ்சம் விரைப்போடு மருத முத்துவிடமும் பேசி விட்டு இரு சக்கர வாகனத்தை ஸ்டார்ட் செய்து கிளம்பினார். இது போன்ற வசனங்களை எல்லாம் சினிமாவில் பார்த்த எனக்கு இப்படி ஒரு அருமையான நேரிடையான காட்சியை காணும் வாய்ப்பும் கிட்டியது. இரு தரப்பும் நாட்டாமை போன வுடன் திரும்பவும் இரு பிரிவாக பிரிந்து பல ரகசியங்களை பேசிக் கொண்டிருந்தனர். இதை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த எனக்கு சற்று களைப்பு ஏற்பட அருகில் இருக்கும் தேனீர் கடையில் ஒரு டீயை வாங்கி குடித்து விட்டு எஸ்ஐயின் வரவுக்காக நானும் காத்திருந்தேன்.

தட தட என்ற சத்தத்தோடு புல்லட் காவல் நிலையத்தின் உள்ளே புகுந்தது. எஸஐ வந்து விட்டார். வந்தவர் நேரே தனது அறைக்கு சென்று விட்டார். தூரத்திலிருந்து பார்த்துக் கொண்டே நானும் உள்ளே நுழைந்தேன். எழுத்தர் என்னை முதலில் உள்ளே போகச் சொன்னார். எஸஐ அறையில் நுழைந்தேன். நுழைந்தவுடன் அதிர்ச்சி அடைந்தேன். நான் எதிர்பார்த்தது வீரப்பனை யொத்த மீசையோடு வயிறு சரிந்து முரட்டு சுபாவத்தோடு கூடிய ஒரு எஸ்ஐயை. ஆனால் அங்கு அமர்ந்திருந்ததோ 30 வயது மதிக்கத்தக்க ஒரு அழகிய பெண். அந்த பெண்ணின் முகத்துக்கும் அந்த உடைக்கும் கொஞ்சமும் ஒட்ட வில்லை. 'உனக்கு ஏம்மா இந்த வேண்டாத வேலை' என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டு 'குட்மார்னிங் மேடம்' என்று சொல்லிக் கொண்டே உள்ளே நுழைந்தேன்.

'வாங்க! உட்காருங்க! என்ன விஷயம்' என்று கேட்கவும் நான் கொண்டு வந்த பேப்பர்களை கொடுத்தேன். படித்துக் கொண்டு இருந்தவர் வெளியில் ஏகமாக சத்தம் வரவே 'அங்கே என்னய்யா சத்தம்?' என்று எஸ்ஐ கேட்டார்.

'அடி தடி கேசும்மா! கிராமமே திரண்டு வந்துருக்கானுங்க'

'இவனுங்களுக்கு வேற வேலையே இல்லை. வரச் சொல்லு எல்லாரையும்'

எழுத்தர் போய் 'அம்மா கூப்பிடுராங்க! எல்லாரும் வாங்கய்யா?' என்றார். சொன்னவுடன் திபு திபு வென்று 10 பேர் உள்ளே நுழைந்தனர். ஏற்கெனவே அது சின்ன அறை. முழு அறையும் ஓரளவு நிரம்பி விட்டது.

'என்னய்யா தகராறு?' அதிகார தொனியில் எஸ்ஐயின் குரலிலும் ஒரு மாற்றம் தென்பட்டது. அதில் உள்ள ஒரு வயதானவர் 'அம்மா! சுப்ரமணிங்கற பய குடி போதையில மருதமுத்துங்கறவன அடிச்சுட்டாங்க. மருத முத்து கேஸ் குடுத்துருக்கான. அதான் ஐயா இன்னைக்கி வந்து உங்களை பார்க்க சொன்னாரு'

'அடி தடி கேசு. உங்க ஊர்ல ஏன்யா இப்படி தினமும் ஏதாவது ஒரு கேஸை கொண்டு வர்றீங்க...உருப்புட்ற ஐடியா ஏதும் இல்லையா' என்று சொல்லிக் கொண்டேமூக்கைப் பொத்திக் கொண்டார்.

'ம்...ஹூம்....சாராய நெடி. யார்யா சாராயம் குடிச்சிறுக்கிறது. தண்ணி அடிச்சுட்டு ஸ்டேஷனுக்கே வர்றீங்களோ! தண்ணி அடிச்சவனை முதல்ல வெளியில அனுப்பு' என்றார் சற்று கோபத்தோடு. அந்த கும்பலில் இருந்து இரண்டு பேர் தாங்களாகவே வெளியேறினர்.

பையனின் பேப்பர்களை பார்த்தவர் 'இப்போ இந்த சாராய கேசால கொஞ்சம் பிஸியாக இருக்கிறேன். நீங்க நாளைக்கு காலையில வாங்க பாய்! ரெடி பண்ணி தர்றேன்' என்றார். பேப்பர்களை பார்த்து நான் முஸ்லிம் என்பதை உணர்ந்து கொண்டார்.

'ஓகே மேடம்! அப்போ நான் வர்றேன்'!

'வாங்க'

அடி தடி கும்பலிடம் விசாரணை ஆரம்பமானது. அவர்களில் எவரையுமே அந்த மேடம் உட்கார சொல்லவில்லை. அவரை விட வயதில் மூத்தவர்களையும் அந்தம்மா ஒருமையிலேயே பேசியது எனக்கு என்னவோ போல் இருந்தது. இந்த உழைக்கும் மக்களை அரசு அதிகாரிகள் ஏன் இவ்வாறு நடத்துகிறார்கள். என்னிடம் மிகவும் பணிவோடும் மரியாதையோடும் பேசிய அந்த எஸ்ஐ இவர்களிடம் ஏன் தனது பேசும் தொனியையே மாற்றிக் கொள்கிறார்.

அந்த மக்களும் அழுக்கு படிந்த உடை. செருப்பில்லாத கால். வெத்தலை சுண்ணாம்பால் காவி ஏறிய உதடுகள் சாராய நெடி என்று தங்களை மாற்றிக் கொள்ளாமலேயே இன்னும் இருக்கிறார்கள். இது எதிர் தரப்பார்களை மிக அலட்சியமாகவும் அருவருப்பாகவும் பார்க்க வைக்கத் தூண்டுகிறது. இந்த இருபதாம் நூற்றாண்டிலும் இந்த மண்ணுக்கு சொந்தக்காரர்கள் தங்களின் பெருமை மற்றும் உரிமைகளை அறியாது குடியிலும் கூத்திலும் காலத்தைக் கழித்துக் கொண்டிருக்கிறார்களே என்று வருத்தமோடு எனது ஊரை நோக்கி பயணப்பட்டேன்.

18 comments:

UNMAIKAL said...

ஆர்ட்டிஸ்ட். கார்ட்டூனிஸ்ட் என்பதால்தான் பால்தாக்கரேவுக்கு அரசு மரியாதை: மகா. முதல்வர் விளக்கம்<

Published: Saturday, November 24, 2012, 12:00 [IST]
Posted by: Mathi

மும்பை: மறைந்த சிவசேனா தலைவர் பால்தாக்கரேவுக்கு அரசியல்வாதி என்பதற்காக அரசு மரியாதை கொடுக்கவில்லை..

ஆர்ட்டிஸ்... கார்ட்டூனிஸ்ட் என்ற அடிப்படையில் அரசு மரியாதை கொடுக்கப்பட்டது என்று மகாராஷ்டிரா முதல்வர் பிரித்விராஜ் சவாண் கூறியுள்ளார்.

டெஹல்கா ஏட்டுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:

பால்தாக்கரே உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட வேண்டும் என்று காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் வேண்டுகோள் விடுத்தனர்.

அவர் ஒரு அரசியல்வாதி என்பதற்காக அல்ல. ஆனால் அவர் ஒரு ஆர்ட்டிஸ்ட் நல்ல கார்ட்டூனிஸ்ட். அந்த ஒரு காரணத்துக்காக மட்டுமே பால்தாக்கரேவுக்கு அரசு மரியாதை கொடுக்கப்பட்டது. இதே போன்ற பல கலைஞர்கள், எழுத்தாளர்களுக்கு அரசு மரியாதை கொடுக்கப்பட்டிருக்கிறது.


பால்தாக்கரேவின் மரணம் சிவசேனாவுக்கு பெரும் இழப்பு. சிவசேனா மற்றும் பாஜகவில் இது பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். அக்கட்சிகளின் உறுப்பினர் ராஜ்தாக்கரேவின் மகாராஷ்டிரா நவநிர்மான் சேனாவில் இணைவர். சிவசேனாவின் வாக்குகள் பிரியும்.

பால்தாக்கரே மறைவையொட்டி ஃபேஸ்புக்கில் முழு அடைப்புக்கு எதிராக கருத்து தெரிவித்த பெண்களின் உறவினர் மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்காக அக்குடும்பத்தினரிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டேன்.

இது தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு அனுப்பிய ஃபேக்ஸ் கிடைத்தது. அதற்கு பதிலளித்துவிட்டோம் என்று கூறியுள்ளார்.

SOURCE:http://tamil.oneindia.in/news/2012/11/24/india-thackeray-got-state-funeral-largely-165142.html

UNMAIKAL said...

முதியோருக்கு பென்ஷன் பெற்றுத்தர சென்ற தலித் பஞ்சாயத்து தலைவியின் கணவருக்கு அடி உதை

Published: Saturday, November 24, 2012, 12:14 [IST]
Posted by: Vadivel

புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் முதியவர்கள் சிலருக்கு ஓய்வூதியம் பெற்றுத்தர வி.ஏ.ஓ. அலுவலகத்திற்கு சென்ற தலித் பஞ்சாயத்து தலைவியின் கணவருக்கு அடி உதை விழுந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி பஞ்சாயத்து யூனியனுக்கு உட்பட்டது கரு.வடதெரு பஞ்சாயத்து.

இதன் தலைவராக தலித் சமூகத்தைச் சேர்ந்த கலைமணி உள்ளார். அவர் தலித் என்பதால் அவருக்கு ஒத்துழைப்பு கொடுக்க அப்பகுதியைச் சேர்ந்த சிலர் மறுத்து வருகிறார்கள்.

குடியரசு தின விழாவின் போது பஞ்சாயத்து அலுவலகம் முன்பு அவர் தேசிய கொடி ஏற்ற தடை விதிக்கப்பட்டது.

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் அவரது கணவர் அண்ணாத்துரை அதே பகுதியைச் சேர்ந்த முதியவர்கள் சிலருக்கு ஓய்வூதியம் பெற்றுத் தர வாணக்கன்காடு வி.ஏ.ஓ.அலுவலகத்துக்கு சென்றார்.

அங்கு அவரை சிலர் அடித்து உதைத்துள்ளனர்.

இதில் படுகாயமடைந்த அண்ணாத்துரை புதுக்கோட்டை அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைகாக சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

இந்த சம்பவத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் அண்ணாத்துரை மீதான தாக்குதல் குறித்து ஆதிதிராவிடர் நல ஆணைய ஆராய்ச்சி அலுவலர் சந்திரபிரபா, விசாரணை அதிகாரி லிஸ்டர் ஆகியோர் நேற்று நேரில் சென்று விசாரணை நடத்தினர்.

இதனையடுத்து அண்ணாத்துரையை தாக்கியவர்களை பாராபட்சம் இன்றி கைது செய்ய வேண்டும் என சிபிஎம் கோரிக்கை விடுத்துள்ளது.

http://tamil.oneindia.in/news/2012/11/24/tamilnadu-dalit-panchayat-president-s-hubby-assaulted-165144.html

UNMAIKAL said...

திருப்பூரில் மது குடிக்காதே என்று கண்டித்த மனைவி மீது தீ வைத்த கணவர்

Published: Saturday, November 24, 2012, 12:04 [IST]
Posted by: Siva


திருப்பூர்: மது குடிக்க வேண்டாம் என்று கண்டித்த மனைவியின் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்த கணவனை போலீசார் தேடி வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள குண்டத்தைச் சேர்ந்தவர் சின்னத்தம்பி(32). தாராபுரத்தில் கட்டிட மேஸ்திரியாக உள்ளார். குடிப்பழக்கம் உள்ளவர்.

அவரது மனைவி பிரியா(22). அவர்களுக்கு பவித்ரா என்ற மகளும், சுதர்சன் என்ற மகனும் உள்ளனர். கடந்த 3 மாதங்களாக சின்னத்தம்பி அளவுக்கு அதிகமாக குடிக்க ஆரம்பித்தார்.

குடிபோதையில் வீட்டுக்கு வந்து மனைவியுடம் தகராறு செய்வார்.

மது குடிக்க வேண்டாம் என்று பிரியா எவ்வளோ சொல்லியும் அதை அவர் கேட்கவில்லை.

இந்நிலையில் நேற்று காலை கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த சின்னத்தம்பி நாற்காலியில் உட்கார்ந்திருந்த பிரியா மீது வீட்டில் இருந்த மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்துவிட்டு குழந்தைகளுடன் அங்கிருந்து ஓடிவிட்டார்.

உடல் முழுவதும் தீப்பிடித்ததில் பிரியா அலறினார். அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு தாராபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பிறகு குற்றவியல் நீதிபதி ஸ்ரீராமஜெயம் பிரியாவிடம் மரண வாக்குமூலம் வாங்கினார். பின்னர் பிரியா மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

மனைவியை எரித்துக் கொல்ல முயன்ற சின்னத்தம்பி மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

http://tamil.oneindia.in/news/2012/11/24/tamilnadu-man-sets-fire-on-wife-urging-him-stop-165143.html

suvanappiriyan said...

மௌலானா மௌதூதி( ரஹ் )அவர்களிடம் கேட்கப்பட்ட கேள்வி

உலகில் எத்தனையோ மனிதர்கள் இருக்கிறார்கள் எத்தனையோ மொழி பேசுகிறார்கள் எத்தனையோ கவலைகளை முறையிடுகிறார்கள் அத்த
னையும் ஒரு இறைவன் எப்படி செவியேற்க முடியும் அத்தனை படைப்புகளையும் ஒரு இறைவன் எப்படி வழிநடத்தமுடியும் என்று மௌலானா மௌதூதி
( ரஹ் )அவர்களிடம் ஒருவர் கேள்வி கேட்டார்

அதற்கு அவர் அளித்த பதில் கார் ஓட்டக்கூடிய டிரைவரை நன்றாக கவனியுங்கள் கண் ரோட்டைப்பார்க்கிறது கை ஸ்டேரிங்கை வளைக்கிறது ஒரு கால் வேகத்தை கூட்டுகிறது மறு கால் வேகத்தை கட்டுப்படுத்த தயார் நிலையில் இருக்கிறது நாவு நண்பரிடம் பேசிக்கொன்டிரிக்கிறது காது ரேடியோவிலிருந்து வரக்கூடிய இசையை ரசிக்கிறது இத்தனைக்கும் மத்தியில் மனமோ மனைவி மாலையில் நேரத்திலே வரச்சொன்னதை எண்ணுகிறது அற்பத்துளியில் படைக்கப்பட்ட மனிதனே ஒரு நேரத்தில் இத்தனை வேளை செய்யும் பொழுது அவனையும் படைத்து அகிலம் அதில் உள்ளவற்றையும் படைத்த இறைவனால் ஏன் முடியாது என்று பதிலளித்தார்

Unknown said...

சலாம் சகோ.சுவனப்பிரியன்

ம்ம்ம்..இப்போது சொந்த கதையும் எழுத ஆரம்பித்து விட்டீர்களே ..!!!

//இது வரை காவல் நிலையத்துக்கு செல்லாத நான் முதன் முதலாக காவல் நிலையத்துக்குள் பிரவேசித்தேன்//

இதுக்கு முன்பு பாஸ்போர்ட் சம்பந்தமாக போலிஸ் ஸ்டேஷன் சென்றது இல்லையா..??? விடமாட்டார்களே நம் காவல் துறையினர்..அவர்களுக்கு கப்பம் கட்ட வேண்டியதை எப்படி விடுவர்.?ஹி..ஹி..

//இதை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த எனக்கு சற்று களைப்பு ஏற்பட அருகில் இருக்கும் தேனீர் கடையில் ஒரு டீயை வாங்கி குடித்து விட்டு //

பார்த்ததுக்கே களைப்பா..???

//அங்கு அமர்ந்திருந்ததோ 30 வயது மதிக்கத்தக்க ஒரு அழகிய பெண். //

No comments...


நன்றி !!!

Unknown said...

ஏ.ஆர் ரஹ்மானின் அறிவின்மையும் , அதை குதூகலித்து எழுதும் தினமலமும் :

தினமலர் செய்தி...

**************************

ஏ.ஆர்.ரகுமானின் அம்மா வணக்கம்! :


ஓசைப்படாமல் "வந்தே மாதரம்" போன்று ஒரு பக்கா ஆல்பம் ஒன்றை தயாரித்துக் கொண்டிருக்கிறார் இசைப் புயல் ஏ.ஆர்.ரகுமான். "மா துஜே சலாம்" என்பது ஆல்பத்தின் பெயர். தமிழில் "அம்மாவுக்கு வணக்கம்" என்று பொருள். தாய் மண்ணே வணக்கம் போன்று இது தாய் வணக்கம். அம்மாவின் பாசத்தையும், தியாகத்தையும் சொல்லும் 6 பாடல்கள் அடங்கிய ஆல்பம். ரகுமான் பாடி நடித்தும் வருகிறாராம். உலகில் உள்ள அம்மாக்கள் அனைவருக்கும் ஒரே குணம் என்பதுதான் ஆல்பத்தின் கரு. இதற்காக உலகம் முழுவதும் உள்ள அம்மாக்களை படம் பிடித்து வருகிறது ரகுமான் டீம்.
முதலில் இந்தியிலும் பிறகு தமிழிலும் வெளியிட திட்டமிட்டிருக்கிறார். தமிழ் ஆல்பத்துக்கான பாடல்களை வைரமுத்து எழுதுவார் என்று தெரிகிறது. வந்தே மாதரம் ஆல்பம் சுதந்திர போராட்ட காலத்தில் வந்திருந்தால் இந்தியாவுக்கு 50 வருடத்துக்கு முன்பே சுதந்திரம் கிடைத்திருக்கும் என்று சிலாகித்தார்கள். ரகுமானின் அம்மா ஆல்பம் முன்பே வந்திருந்தால் பல லட்சம் அம்மாக்களின் கவலைகள் தீர்ந்திருக்கும் என்ற பாராட்டுக்கள் ரகுமானுக்கு குவியலாம்.
எல்லா புகழும் (ரகுமானின்) அம்மாவுக்கே...

************************

UNMAIKAL said...

நோயாளிகள் குணமடைய மதுரை அரசு மருத்துவமனையில் யாகம் நடத்தியதை எப்படி குறை சொல்லலாம்?:

இந்து முன்னணி


Published: Saturday, November 24, 2012, 15:34 [IST]
Posted by: Siva

மதுரை: மதுரை அரசு மருத்துவமனையில் டெங்கு நோயாளிகள் குணம் பெற யாகம் நடத்தியதை குறை கூறக் கூடாது என்று இந்து முன்னணி செயற்குழு உறுப்பினர் ஹரி ஆதிசேஷன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

மதுரை பெரிய மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெறும் நோயாளிகள் விரைவில் நலம் பெறவும், நீண்ட ஆயுள் பெறவும் தன்வந்திரி யாகம் நடத்தப்பட்டது.

இந்த யாகம் நடத்துவது முட்டாள் தனம் என்றும், யாகம் நடத்திய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மதுரை மாவட்ட கலெக்டர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இந்த கருத்துக்கு இந்து முன்னணி கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.

இந்த செயல் மக்களின் நம்பிக்கையில் தலையிடும் செயலாகும்.

மக்களின் நம்பிக்கையை கேலி செய்வது தவறான அணுகுமுறையாகும்.

மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தவே யாகம் நடத்தப்படுகிறது.

அரசு அலுவலங்களில் பூஜை செய்வதும, யாகம் செய்வதும் வழக்கமான ஒன்று தான்.

அரசு திட்டங்கள் தொடங்கும் போதும், செயல்படுத்தப்படும் போதும் பூஜை, சடங்குகள் செய்வது நடைமுறையில் உள்ள ஒன்று.

அதே போன்று மருத்துவமனைகளில், சிறைகளில் ஜெபம் நடத்த அனுமதிக்கப்படுவதில்லையா?

எனவே மதச் சார்பற்ற தன்மை என்ற பெயரில் அதை தடுக்க முயல்வது பெரும்பான்மை மக்களின் மத உணர்வுகளை தடுப்பது ஆகும்.

எனவே தமிழக முதல்வர் இதில் உடனே தலையிட்டு தகுந்த அறிவுரை வழங்க வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

SOURCE: http://tamil.oneindia.in/news/2012/11/24/tamilnadu-yagam-performed-madurai-govt-hospital-165157.html

suvanappiriyan said...

சகோ உண்மைகள்!

//மனைவியை எரித்துக் கொல்ல முயன்ற சின்னத்தம்பி மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.//

கள்ளுக் கடையை திறந்து விட்டு அதன் வருமானத்தை பெருக்க அதிகாரிகளை வாட்டி வதைக்கும் அரசு தான் இதற்கு பதில் சொல்ல வேண்டும்.

suvanappiriyan said...

சகோ நாகூர் மீரான்!

//இதுக்கு முன்பு பாஸ்போர்ட் சம்பந்தமாக போலிஸ் ஸ்டேஷன் சென்றது இல்லையா..??? விடமாட்டார்களே நம் காவல் துறையினர்..அவர்களுக்கு கப்பம் கட்ட வேண்டியதை எப்படி விடுவர்.?ஹி..ஹி..//

இதற்கெல்லாம் வீட்டுக்கே வந்து காவல் துறையினர் வந்து விசாரித்து சென்று விடுவர். எனவே காவல் நிலையம் நாம் செல்ல வேண்டிய அவசியம் இருக்காது.

//பார்த்ததுக்கே களைப்பா..???//

களைப்பு வந்தது இரண்டு குரூப்பும் போட்டுக் கொண்ட சண்டையினால்... :-)

//ஓசைப்படாமல் "வந்தே மாதரம்" போன்று ஒரு பக்கா ஆல்பம் ஒன்றை தயாரித்துக் கொண்டிருக்கிறார் இசைப் புயல் ஏ.ஆர்.ரகுமான். "மா துஜே சலாம்" என்பது ஆல்பத்தின் பெயர். தமிழில் "அம்மாவுக்கு வணக்கம்" என்று பொருள். //

தாய்க்கு மரியாதை செய்வதை இஸ்லாம் தடை செய்யவில்லை. ஊக்குவிக்கிறது. அதற்காக அந்த தாயை வணங்குவதை இஸ்லாம் தடை செய்கிறது. வஹாபியத்தை (தவ்ஹீதை) ஏற்கும் வரை ரஹ்மானிடம் இது போன்ற தவறுகள் அவ்வப்போது வந்து கொண்டேயிருக்கும்.



suvanappiriyan said...

சைவ உணவை தேர்ந்தெடுப்பதும் அசைவ உணவை தேர்ந்தெடுப்பதும் அவரவர் விருப்பத்தை பொருத்தது. சைவ உணவை உண்பவர்கள் மட்டுமே உயர்ந்தவர்கள், புனிதர்கள் அசைவ உணவை உண்பவர்கள் புனித மற்றவர்கள் என்ற நிலைப்பாடு தவறானது. இதனாலேயே மாட்டுக் கறியை பிரியமாக சாப்பிடும் தலித்துகளை திண்டத்தகாதவர்கள் என்று சமூகத்தில் இந்து மதத்தினரால் ஒதுக்கப்பட்டனர். இந்த நிலைப்பாடு தவறு.

ஒரு மனிதன் உடல் உழைப்பில் அதிகம் கவனம் செலுததுபவனுக்கு புரதச் சத்து அதிகம தேவைப்படும். அந்த நேரம் அவனுக்கு குறைந்த விலையில் கிடைக்கும் ஆட்டையோ மாட்டையோ சாப்பிடுவது அவனது உடலைப் பொருத்த வரை நல்லது. வியர்வை சிந்தாத அலுவலக வேலை பார்ப்பவர்களுக்கு காய் கறி உணவே போதுமானதாக இருக்கலாம்.

Anonymous said...

சில நாட்களுக்கு முன்னர் வேலூரில் பாஜக மருத்துவர் அணித்தலைவர் அரவிந்த் ரெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதற்கு காரணம், அந்த பகுதியில் பாஜக வளர்வதை பொறுக்காத இஸ்லாமிய அமைப்புகள் தான் என்று இந்துத்துவ அமைப்புகள் களம் இறங்கி ஆர்ப்பாட்டம் அது இதுவென்று நடத்தி கூச்சல் இட்டன. தமிழ்ஹிந்து தளம் இதுக்குறித்து செய்தி வெளியிட்டு தன் வெறியை காட்டிக்கொண்டது.

இப்போது இந்த வழக்கு தொடர்பாக இரண்டு கூலிப்படையை சேர்ந்த ஆறு பேர் கை செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் ஒருவர் கூட அரேபிய பெயரை தாங்கியவர் கிடையாது. மேலும் இதற்கு பின்னணியில் வசூல்ராஜா என்ற ரவுடி சிறையில் இருந்தவாரே இந்த கூலிப்படைகளை இயக்கியுள்ளான் என்பதையும் சன் நியூஸ் சேனல் தெரிவித்துள்ளது.

இதுக்குறித்து பார்க்க http://www.dinakaran.com/Latest_Detail.asp?Nid=31744

Anonymous said...

ஜடாயு on November 21, 2012 at 9:10 pm

வால்மீகி ராமாயணத்தில் பல இடங்களில் ராம லட்சுமணர்கள் மாமிச உணவு உண்டது குறித்து வருகிற,து. சித்திரகூட பர்ணசாலை கட்டி முடித்ததும், கருப்பு மானை லட்சுமணன் வேட்டையாடி வர, அதைக் கொண்டு ஸ்ரீராமன் பலிச்சடங்கு செய்வதாகவே வருகிறது. சொல் விளையாட்டுக்கள் மூலம் இவற்றுக்கு வேறு அர்த்தங்கள் கற்பிப்பது பொருளற்றது. சமீபத்தில் சிறந்த ராமாயண அறிஞரும் யோக ஆசாரியருமான டாக்டர் ரங்கன் ஜி (கிருஷ்ணப்ரேமி சுவாமிகளின் குமாரர்) அவர்கள் செய்த வால்மீகி ராமாயணத்தின் புதிய ஆங்கில மொழிபெயர்ப்பைப் பார்க்க நேர்ந்தது. அதில் அவர் ஒரு விரிவான முன்னுரையும் எழுதியிருக்கிறார். அந்த முன்னுரையிலும் இதைச் சுட்டியிருக்கிறார். அக்காலத்திய உணவுப் பழக்கத்தின் படி ராமன் உணவுண்டதாக வால்மீகி எழுதியிருக்கிறார்; இதனால் “அறத்தின் திருவுருவம் ராமன்” என்ற கருத்தாக்கம் சிறிதும் குறைபடாது என்றும் விளக்கியிருக்கிறார்.

கம்பனது காலத்தில் புலால் மறுத்தல் என்பது கட்டாயமான தவ நெறியாக ஆகி விட்டிருந்ததால், அதற்கேற்றவாறு குகன் கொணர்ந்த தேனையும் மீனையும் ராமன் “யாமும் உண்டனம் அன்றே” என்று அருள் செய்வதாக கம்பன் எழுதியிருக்கிறான்.

சம்பிரதாயவாதிகளுக்கு இக்கருத்து ஏற்க முடியாதிருக்கலாம். ஆனால் இதை இவ்வாறு நாம் புரிந்து கொண்டு விளக்குவதே நீண்ட கால நோக்கில் சரியான அணுகுமுறை என்று நான் கருதுகிறேன். காரணம்? சில பத்தாண்டுகள் முன்பு கூட, வால்மீகி ராமாயண மொழிபெயர்ப்பை நேரடியாக படிக்கும் வாய்ப்பு என்பது மிக அரிதாகவே இருந்தது. பெரும்பாலான மக்கள் கதாகாலட்சேபம், உபன்யாசங்கள் மூலமே அதை அறிந்தனர். எனவே, சொற்பொழிவாளரது கருத்துக்களால் வடிகட்டப் பட்டே அது மக்களை வந்தடைந்தது. ஆனால், இன்று அப்படியல்ல, வால்மீகி ராமாயணம் அதன் அனைத்து பாஷ்யங்களுடன், ஆங்கில மொழிபெயர்ப்புடன் முழுமையாக இணையத்தில் கிடைக்கிறது. தேடல் உள்ள ஒருவர் உடனடியாக அதை எடுத்துப் படித்து விட முடியும். காலங்காலமாக பூட்டி வைக்கப் பட்டிருந்த அறிவுத் துறைகளின் கதவுகளை இணையமும் தொழில்நுட்பமும் தகர்த்து விட்டன என்பதையாவது இங்கு வந்து நீட்டி முழக்கும் ஆசாரவாதிகள் (orthodox people) புரிந்து கொள்ளட்டும்.

suvanappiriyan said...

வவ்வால்!

//அரெபி மட்டுமே தெரிந்த அல்லாவும்,. சமஸ்கிருதம் மட்டுமே தெரிந்த மஹாவிஷ்ணு, சிவன் எல்லாம் எப்படி தமிழனுக்கு கடவுளாக முடியும்?//

'எந்த ஒரு தூதரையும் அவர் தமது சமுதாயத்திற்கு விளக்கிக் கூறுவதற்காக அச்சமுதாயத்தின் மொழியிலேயே அனுப்பினோம்'
-குர்ஆன் 14:4

இதன் மூலம் உலக மொழிகள் அனைத்திற்கும் வேதமும் வந்துள்ளது. தூதர்களும் வந்துள்ளனர். அனைத்து மூல மொழிகளையும் கற்றுக் கொடுத்தது இறைவனே என்பதை அறியலாம்.

Unknown said...

மாஷா அல்லாஹ் ...! ஓசியா நாட்டமை படம் பாத்து இருக்கீங்க ... நிஜத்தில் !!! ...

ராவணன் said...

பன்னிக்கறி சாப்பிடுவது மட்டும் எப்படி அண்ணாச்சி தப்பாகும். தலித் சமூகத்தினர் பன்னிக்கறியும் சாப்பிடுவார்கள்.

ராவணன் said...

அண்ணாச்சி....தமிழ்மணத்திலிருந்து தூக்கிவிட்டார்களா?

அங்க ஒங்களப் பாக்கமுடியல...

ராவணன் said...

நமக்கு எதுக்கு அண்ணாச்சி தமிழ்மணம்....அரேபிய மணம் மட்டும் போதாதா?

ராவணன் said...

உலகின் ஒரே கடவுளான நம்ம முனியாண்டி சாமி ஒங்கள கைவிடமாட்டார் அண்ணாச்சி.