Followers

Sunday, November 11, 2012

தீபாவளியால் எனக்குள் ஏற்பட்ட விபத்து!



(பையன் மனதுக்குள்)

'ஹா...ஹா... செலவுக்கு பணம் தர மாட்டேண்டியா! அதான் உரல்ல வெங்காய வெடியை போட்டேன்.'

------------------------------------------------------

தீபாவளி வருவது இந்து மக்களுக்காக! ஆனால் எங்கள் கிராமத்தில் முன்பெல்லாம் 100 ரூபாயிலிருந்து 1000 ரூபாய் வரை பட்டாசுகளை ஒன்றாக சேர்ந்து வாங்கி வந்து வெடிப்பது வழக்கம். எங்களுக்கு எந்த நரகாசுரன் செத்தான் என்று இன்று வரை விளங்கவில்லை. பெரியவர்கள் 'காசை இப்படி கரியாக்குறீங்களேடா' எனறு சொன்னாலும் எவரும் காதில் வாங்குவது இல்லை. அப்போது எனக்கு 13 வயது இருக்கும் என்று நினைக்கிறேன். இரண்டு பெட்டிகள் நிறைய பட்டாசுகளை வாங்கி இரவு நேரமானதும் வெடிக்க ஆயத்தமானோம். மத்தாப்பு, சங்கு சக்கரம், சுர்வானம், அணுகுண்டு என்று நண்பர்களோடு சேர்ந்து வெடிகளை வெடித்துக் கொண்டிருந்தேன்.

உள்ளதிலேயே மிகப் பெரிய சுர்வாணம் ஒன்று இடையில் வந்தது. அதனை கீழே வைத்து பேப்பரினால் பற்ற வைக்க முயற்சித்தோம். என்ன காரணத்தினாலோ அது பற்றவில்லை. பல முறை முயற்சித்தேன்.

'டேய்! கையில எடுத்து நேரிடையா பத்த வைடா'

பின்னாலிருந்து நண்பன் உசுப்பி விடவும் அதனை கையில் எடுத்து நேரிடையாக அதன் முனையை விளக்கில் காட்ட ஆரம்பித்தேன். வழக்கமாக உடன் பற்றிக் கொண்டு பூப்போல கொட்ட ஆரம்பித்து விடும். ஆனால் ஐந்து நிமிடம் ஆகியும் அது பற்ற வில்லை.

'
"நமத்து போயிருக்கோண்டா! இன்னும் கொஞ்சம் நேரம் காட்டு"

நண்பனின் பேச்சை தட்ட முடியாமல் இன்னும் கொஞ்சம் நேரம் காட்டினேன்.

'படார்'

பயங்கர சத்தத்துடன் சுர்வாணம் வெடித்து சிதறியது. அந்த இடமே ஒரே கருகிய நாற்றம். விளக்கும் அணைந்து விட்டது. சிறிது நேரத்துக்கு பிறகுதான் என் கையை பார்த்தேன். இப்பொழுதுதான் வலி தெரிய ஆரம்பித்தது. வலது கை முழுவதும் வெந்து விட்டது. வலி என்றால் உயிர் போகும் வலி. பெரியவர்கள் யாரும் பக்கத்தில் இல்லை. இங்கும் அங்கும் கத்திக் கொண்டே வீட்டுக்குள் ஓடினேன். ஓடிய வேகத்தில் வாளியில் இருந்த தண்ணீரில் கையை விட்டேன். அதற்குள் விஷயம் தெரிந்து கூட்டம் கூடி விட்டது. வலி பொறுக்க முடியாமல் கத்த தொடங்கினேன்.

உடனே வீட்டுக்கு பக்கத்தில் இருக்கும் தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டேன். அங்கு அதை விட வலி உயிர் போனது. மருத்துவர் மருந்துகளை வைத்து பெரிதான ஒரு கட்டை போட்டார். அந்த கட்டோடு கிட்டத்தட்ட ஒரு மாதம் மிகவும் சிரமப் பட்டேன்.

இதை நான் இங்கு பதிய காரணம் நாளை தீபாவளி. எனவே சிறுவர்களில் இருந்து பெரியவர்கள் வரை இதில் மிக கவனமாக இருக்க வேண்டும். நேற்று கூட பட்டாசு கடையில் ஏற்பட்ட தீவிபத்தில் 12 வயது மதிக்கத்தக்க சிறுவன் இறந்துள்ளான். இந்த தீபாவளிக்கு பட்டாசு வெடிக்கும் பழக்கமே பிற்காலத்தில் ஏற்பட்டது. மொகலாய மன்னர் பாபரின் காலத்தில் தான் இது போன்று சிறப்பான பண்டிகை நாட்களில் பட்டாசு வெடிக்கும் பழக்கம் ஏறபட்டது. அதற்கு முன்பு தீபாவளி தினத்தன்று பட்டாசு வெடிப்பது இந்தியர்களின் பழக்கமாக இருந்ததில்லை. இடையில் வந்த பழக்கத்தை சமூக நலன் கருதி படிப்படியாக விட்டு விடலாமே!

-----------------------------------------------------------

கூந்தன்குளத்தில் உள்ள பறவைகள் சரணாலயத்தில் உள்ள பறவைகளுக்கு சிரமம் ஏற்படும் என்பதால் இக்கிராம மக்கள் பட்டாசு வெடிப்பதில்லை.

இதேபோல சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள கொல்லுகுடிப்பட்டி கிராமத்திலும் கடந்த 40 வருடமாக மக்கள் பட்டாசு வெடிப்பதில்லை. இந்த கிராமத்தில் தீபாவளி சீசனின்போது பெருமளவில் வெளிநாட்டுப் பறவைகள் வரும். இதனால் இந்த சமயத்தில் பட்டாசு வெடித்தால் அது பறவைகளுக்கு இடையூறாக இருக்கும் என்பதால் பட்டாசு வெடிப்பதில்லை.

அதேபோல சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே ஊனத்தூர் கிராமத்திலும் தீபாவளிக்கு யாரும் பட்டாசு வெடிப்பதில்லை. இங்குள்ள மணி அம்மன் கோவிலைச் சுற்றிலும் நிறைய மரங்கள் உள்ளன. இங்கு கடந்த பல வருடங்களாக ஆயிரக்கணக்கான வவ்வால்கள் வசித்து வருகின்றன.

இந்த வவ்வால்களை மிகவும் கவனமாக பார்த்துக் கொள்கின்றனர் இப்பகுதி மக்கள். வவ்வால்களை யாராவது வேட்டையாட வந்தால் துரத்தி விடுகின்றனர்.
இந்த வவ்வால்களுக்கு இடையூறாக இருக்கும் என்பதால், யாரும் இந்த கிராமத்தில் பட்டாசு வெடிப்பதில்லை. தீபாவளி என்றில்லை எந்த விசேஷமாக இருந்தாலும் யாரும் பட்டாசு வெடிப்பதில்லை.

------------------------------------------------------

தீபாவளியன்று வளி மண்டலம் அதிக அளவில் மாசு அடையும் வாய்ப்பு உள்ளது என்று மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் எச்சரித்துள்ளது.தீபாவளிக்கு முன்னரும், பின்னரும் நகரில் மாசு அளவை கணக்கிட மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் முடிவு செய்தது.

அதன்படி எய்ம்ஸ், லஜ்பத் நகர், கன்னாட் பிளேஸ், மயூர் விகார், கமலா நகர், பிதம்புரா, கிழக்கு அர்ஜூன் நகர், தில்ஷான் கார்டன், பிரகதி மைதானம் ஆகிய 9 இடங்களில் கண்காணிப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டன.

இதுகுறித்து மாசு கட்டுப்பாட்டு வாரிய செயலாளர் ஜே.எஸ்.கம் யோத்ரா கூறுகையில், வளி மண்டலத்தில் காற்றின் அளவு மற்றும் சத்தத்தின் அளவுகள் பதிவு எடுக்கப்பட்டுள்ளன. இதேபோன்று இந்த 9 இடங்களிலும் தீபாவளி அன்று வாயுக்கள், சத்தத்தின் அளவுகள் பதிவு செய்யப்படும்.

கார்பன் மோனாக்ஸைடு, சல்பர் டை ஆக்ஸைடு, நைட்ரோஜன் டையாக்ஸைடு உள்ளிட்ட காற்றை மாசுபடுத்தும் கரியமில வாயுக்களின் அளவு அதிகரித்துள்ளாதா என்பது கண்டறியப் படும். இதுதவிர காற்று மாசு, சத்தத்தின் அளவு குறித்து ஆய்வு செய்யும்படி மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியங்கள், மாசுக் கட்டுப்பாட்டு கமிட்டிகளும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.

தீபாவளி வரை தொடர்ந்து இந்த அளவீடுகள் பதிவு செய்யப்படும். பெருநகரங்களில் காற்று மாசுபடுவதைத் தடுக்கும் வகையில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த கண்காணிப்பு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

தீபாவளியையொட்டி பட்டாசு வெடிப்ப தால் ஏற்படும் மாசு அளவு எவ்வளவு என்பது தெரிவிக்கப்படும். காற்று மாசுபடுவதை கட்டுப்படுத்தும் நோக்கில் கணக்கிடப்படுகிறது. தற்போதைய தட்பவெப்பநிலை (குறைந்த வெப்பம்) நீடித்தால் தீபாவளியன்று வளி மண்டலம் கடுமையாக மாசுபடும் வாய்ப்பு உள்ளது என்றார். எனவே பட்டாசு வெடிப்பதை இந்த பண்டிகை நாளில் முடிந்த வரை குறைத்துக் கொள்ள முயற்சிப்போம்.

நண்பர்கள் அனைவருக்கும் வாழ்வில் இன்று போல் என்றும் மகிழ்ச்சி பூத்துக் குலுங்க பிரார்த்திக்கிறேன்.

10 comments:

UNMAIKAL said...

தீபாவளிக்கு ரூ.120 கோடி மதுவை விற்றே ஆக வேண்டும்..

கடைகளை நெருக்கும் டாஸ்மாக்!


சென்னை: தீபாவளிக்கு ரூ. 120 கோடி அளவுக்கு மது விற்பனை அளவை நிர்ணயித்துள்ள டாஸ்மாக் நிர்வாகம்,

இதுதொடர்பாக கடை விற்பனையாளர்களை கடுமையாக நெருக்கி வருவதாக விற்பனையாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

மக்கள் எக்கேடு கெட்டுப் போனால் என்ன,

எங்களுக்கு வருவாய்தான் தேவை, பணம் தான் தேவை என்று டாஸ்மாக் மூலம் அரசு வருவாயை,

மக்கள் பணத்தை அள்ளிக் குவித்துக் கொண்டிருக்கிறது ஆண்டுதோறும்.

வருடத்திற்கு வருடம் டாஸ்மாக் மது விற்பனை மூலம் கிடைக்கும் வருமானம் அதிகரித்தபடியேதான் உள்ளது.

2011-12ம் ஆண்டு ரூ. 18,000 கோடி வருவாய் கிடைத்தது.

2012-13ல் இது ரூ. 22,000 ஆக அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாம்.


இந்த நிலையில் தீபாவளி போன்ற பண்டிகையின்போது பெருமளவில் வருமானம் கிடைக்கும்.

கடந்த தீபாவளியன்று ரூ. 90 கோடிக்கு மது விற்பனையானது.

இந்த ஆண்டு விலை உயர்வு காரணமாக ரூ. 120 கோடிக்கு இலக்கு நிர்ணயித்துள்ளதாம் டாஸ்மாக் நிர்வாகம்.

இதை உறுதி செய்யும் வகையில் கடைகள் தோறும் மது வகைகளை குவித்து வைக்க உத்தரவிடப்பட்டுள்ளதாம்.

மேலும் ஆர்டர்கள் வரும்போது கொடவுன்களிலிருந்து கடைகளுக்கு மது பெட்டிகளைக் கொண்டு செல்ல வாகனங்களையும் தயார் நிலையில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளதாம்.

அத்தோடு நில்லாமல் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் இந்த அளவுக்கு விற்பனை செய்தேயாக வேண்டும் என்று இலக்கு வகுத்துக் கொடுத்துள்ளனராம்.

கண்டிப்பாக இந்த அளவை எட்ட வேண்டும் என்றும் கட்டாயப்படுத்தி கூறி வருகின்றனராம்.

இதனால் ஒவ்வொரு கடைக்கும் இவ்வளவு விற்றாக வேண்டும் என்று விற்பனையாளர்களுக்கு நெருக்கடி கொடுக்கப்பட்டு வருகிறதாம்.

இதனால் கடைக்காரர்கள் கடும் அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது.

SOURCE: http://tamil.oneindia.in/news/2012/11/12/tamilnadu-tasmac-targets-rs-120-sales-on-diwali-day-164547.html

UNMAIKAL said...

ராம்ஜெத்மலானியின் "நாக்கை அறுப்பவருக்கு" ரூ.11லட்சம் பரிசு : ஹிந்து இயக்கம் அறிவிப்பு!

Sunday, 11 November 2012 13:32 MARUPPU மீடியா செய்திகள்


NOV10, ராமாயணத்தின் நாயகனான "ராமர்" ஒரு மோசமான கணவராக இருந்தவர், என பிரபல வழக்கறிஞரும் பா.ஜ.க.வின் மாநிலங்களவை எம்.பி.யுமான ராம்ஜெத்மலானி கூறியிருந்தார்.

சில மீனவர்கள் சொன்னார்கள் என்பதற்காக, தாலி கட்டிய மனைவியை "வனவாசம்" அனுப்பிய கணவர் ராமர்.

எனக்கு அவரை சுத்தமாக பிடிக்காது.

ராமர் தான் இப்படி என்றால், அவரது தம்பி "லட்சுமணன்" இன்னும் மோசம்,என்று ராம்ஜெத்மலானி குறிப்பிட்டிருந்தார்.

இதைத்தொடர்ந்து,

லூதியானாவில் செயல்படும் "ஸ்ரீ ஹிந்து நியாயி கவுன்சில்" என்ற ஹிந்து அமைப்பு,

ராம்ஜெத்மலானியின் நாக்கை அறுப்பவருக்கு ரூ.11 லட்சம் பரிசு அறிவித்துள்ளது.

மேலும், அவரை பா.ஜ.க.விலிருந்து உடனே நீக்கவேண்டும், என பாஜக மேலிடத்தை அந்த அமைப்பு கேட்டுக்கொண்டது.

ராம்ஜெத்மலானி மீது நடவடிக்கை எடுக்க மறுக்கும் பட்சத்தில்,

தீபாவளிக்குப்பிறகு ராஜெத்மலாணியை எதிர்த்தும் பாஜகவை எதிர்த்தும் போராட்டங்கள் நடத்தப்படும், என்றும் அறிவித்துள்ளனர்.

இதற்கிடையில், ராமரை குறித்த தனது கருத்தில் உறுதியாக உள்ளதாக தெரிவித்துள்ள ராமஜெத் மலானி,

எனது பார்வையில் கெட்டவராக இருந்த ராமர், தொடர்ந்து தவரானராகவே உள்ளார், எனக்கூறிய அவர், ராமரின் பிறப்பு குறித்தும் சந்தேகம் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும், ராமரை குறித்த தனது கருத்துக்களுக்கு வருத்தம் தெரிவிக்கும் பேச்சுக்கே இடமில்லை என்றார்,ராமஜெத்மலானி.


http://www.maruppu.in/all-medias/43-maruppu-news/604--q-q-11-

suvanappiriyan said...

சகோ உண்மைகள்!

//சென்னை: தீபாவளிக்கு ரூ. 120 கோடி அளவுக்கு மது விற்பனை அளவை நிர்ணயித்துள்ள டாஸ்மாக் நிர்வாகம்,

இதுதொடர்பாக கடை விற்பனையாளர்களை கடுமையாக நெருக்கி வருவதாக விற்பனையாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.//

சபாஷ்!

இனி வீடு வீடாக 'சாராயம் வாங்கலயா' என்று கேட்காததுதான் குறை. இந்த ஆட்சியில் அதுவும் நடக்கலாம்.

Seeni said...

unmaikal!

appadiyaa....!

ராவணன் said...

இப்படித்தான் அண்ணாச்சி சிலர் உசுப்பி விடுவார்கள்.

வெடி வைக்க நினைத்தால் கை மட்டுமல்ல..தலைகூட போய்விடும்.

வெடிவைக்க நினைப்பவர்களுக்கு இது ஒரு எச்சரிக்கைப் பதிவு.

நம்ம ஏக இறைவன் முனியாண்டிசாமி
சும்மா பாத்துட்டு போய்விடுவானா?

suvanappiriyan said...

கோவி கண்ணன்!

//அப்பறம் பெரியார் சொன்னார் அண்ண்ணா சொன்னார் என்று சொல்லிக் கொண்டு வராதீர்கள், அவர்கள் காலத்தில் அல்கொய்தா மற்றும் அல் உம்மா , முஜாஹிதின் கோரமுகங்களை அவர்கள் பார்ததில்லை என்பதும் உண்மை தான் என்பதை ஏன் நீங்கள் நினைத்துப் பார்ப்பதே இல்லை. //

அடடா...மேலும் தவறான புரிதல்.

இந்தியன் முஜாஹிதீன் என்ற ஒரு அமைப்பே இநிதியாவில் கிடையாது என்பது எத்தனை பேருக்கு தெரியும்? எங்கு குண்டு வெடிப்பு நடந்தாலும் முதல் போன் இந்தியன் முஜாஹிதிடம் இருந்து வரும். இவை எல்லாம் நமது உளவுத் துறை செட்டப் செய்த நாடகங்கள். முன்பு ஆயிஷா என்ற ஒரு பெண் வெடிகுண்டை வயிற்றில் கற்றி கொண்டு வீடு வீடாக வருவதாக படித்ததை நாம் மறந்திருக்க மாட்டோம். அந்த பெண் சில மாதங்கள் முன்பு எந்த தவறும் செய்யவில்லை என்று 20 வருடங்கள் கழித்து விடுதலையாக்கப்பட்டுள்ளார். அவர் செய்த குற்றம் இந்து மதத்தை துறந்து இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டது ஒன்றுதான். அந்த சகோதரியின் கடந்து போன 20 வருடத்தை யார் திருப்பி கொடுப்பது.

இந்து மக்கள் இஸ்லாத்தை தழுவுவதை தடுப்பதற்கு மேல் சாதியினர் அரசு வேலை பார்க்கும் தனது இந்துத்வ ஆட்களின் துணையோடு செய்த பல செட்டப்புகள் ஒவ்வொன்றாக தற்போது அவிழ்ந்து வருகின்றது. ஏனெனில் வாதங்களை வைத்து அவர்களால் இஸ்லாத்தை கீழிறக்க முடியாது. எனவே தான் இது போன்ற பொய்யான தகவல்களை தினமும் பத்திரிக்கைகள் காவல் துறையினர் மூலம் பரப்பி இஸ்லர்தை கலங்கப் படுத்துகின்றனர். இதன் மூலம் இஸ்லாத்தின் வளர்ச்சியை தடுத்து விடலாம் என்பது அவர்கள் எண்ணம். ஆனால் வழக்கம் போல் தோல்வியையே தழுவி வருகின்றனர். இர்ஷத் ஜஹான் என்ற இள வயது மங்கை மோடியின் தூண்டுதலில் சுட்டு கொல்லப்பட்டது நமக்கு தெரியும். தற்போது அநத சம்பவத்தின் உண்மையும் வெளி உலகத்துக்கு வந்திருக்கிறது. உண்மையை ரொம்ப நாள் தூங்க வைக்க முடியாது கண்ணன்.

நம்பள்கி said...

This is what I like with you, and the following is what I look for in any of your post...!

Relentlessly propagating ..

[[இந்த தீபாவளிக்கு பட்டாசு வெடிக்கும் பழக்கமே பிற்காலத்தில் ஏற்பட்டது. மொகலாய மன்னர் பாபரின் காலத்தில் தான் இது போன்று சிறப்பான பண்டிகை நாட்களில் பட்டாசு வெடிக்கும் பழக்கம் ஏறபட்டது. அதற்கு முன்பு தீபாவளி தினத்தன்று பட்டாசு வெடிப்பது இந்தியர்களின் பழக்கமாக இருந்ததில்லை]]

suvanappiriyan said...

திரு நம்பள்கி!

//This is what I like with you, and the following is what I look for in any of your post...!

Relentlessly propagating ..//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

suvanappiriyan said...

சகோ சார்வாகன்!

//இப்போது மூம்ன் அல்லாத ஒரு ஆண், மூமின் பெண்ணை ,மூமின்கள் பெரும்பானமியாக் வாழும் இடட்தில் திருமண‌ம் செய்தால் பிரச்சினையே வராது என சு.பி சொல்கிறாரா? இங்கு அந்தப் பெண் மதம் மாறிவிடுகிறாள்,அல்லது அந்த காஃபிர் ஆண் மதம் முஸ்லிம் ஆக மாறவில்லை.

பிரச்சினை வராது என சொல்வாரா?//

எங்கள் கிராமத்திலும் ஒரு பெண் இவ்வாறு ஒரு இந்துவை இழுத்துக் கொண்டு ஓடியது. பெரும்பான்மையாக உள்ள நாங்கள் படை திரட்டிக் கொண்டு அவர்களின் குடில்களை அழிக்கவில்லை. சில காலம் கழித்து அந்த பையனையும் இஸ்லாத்தில் இணைத்து எங்கள் கிராமத்து அந்த பெண் அழைத்து வந்தது பழைய கதை.

ஒரு காதலுக்காக ஒரு கிராமத்தையே அழிப்பதும் கொள்ளையடிப்பதும் எந்த ஊர் நியாயம்? உங்களைப் போன்றவர்களின் சப்போர்ட் இருப்பதால்தான் இவ்வளவு தைரியமாக அவர்களை ஊர் புகுந்து அடிக்கச் சொல்கிறது.

//மத வியாபாரத்திற்கு இது தருணம் அல்ல!!!//

நீங்களோ கண்ணனோ இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டால் எனக்கு மாத சம்பளத்தில் 2000 ரூபாய் சேர்த்து கிடைத்து விடப் போவதில்லை. :-) உழைத்தால்தான் எனக்கும் காசு.

பார்ப்பான் செய்த சூழ்ச்சி என்று காலத்துக்கும் அவர்கள் மேல் பழியை போட்டுக் கொண்டு காலத்தை விரயமாக்குவதற்கு பதில் இஸ்லாத்தை ஏற்று அவர்களை வெட்கித் தலை குனிய வைக்க வேண்டும் என்றுதான் சொல்கிறேன்.

ஒரு முறை ஜூனியர் விகடன் ராமநாதபுரத்தில் மதம் மாறிய ஒரு தலித் இளைஞனை பேட்டி எடுத்தனர்.

'நீங்கள் எல்லோரும் மதம் மாறிட்டீங்களே! இனி சமத்துவம் கிடைச்சுருமா?'

'என்னை விட சின்ன பசங்கலெல்லாம் முன்பு என்னை 'டேய் சரவணா' என்று தான் அழைப்பர். இன்று 'ரஹீம் பாய்' என்று எல்லோராலும் அழைக்கப்படுகிறேன். இது ஒன்று போதும் எனக்கு'

என்று சொன்னவுடன் எனது கண்களே கலங்கி விட்டது. எந்த அளவு மனதால் காயப்பட்டிருந்தால் அந்த இளைஞனிடமிருந்து இப்படி ஒரு வார்த்தை வந்திருக்கும். அந்த இளைஞனின் இடத்தில் இருந்து பாருங்கள் சார்வாகன்.

திண்டுக்கல் தனபாலன் said...

வலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு வருகை… Follower ஆகி விட்டேன்… தொடர்கிறேன்...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/11/blog-post_13.html) சென்று பார்க்கவும்... நன்றி...