Followers

Friday, December 28, 2012

குஜராத்தை விட பீகார் முன்னிலை: திட்ட கமிஷன்!

இந்தியாவிலேயே வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கும் மாநிலம் குஜராத் என்றும் அதுவும் மோடியின் தலைமையில் மிகப் பெரிய புரட்சி என்றும் பத்திரிக்கைகள் ஓயாமல் கூவி வருகின்றன. மோடியை அப்படியே தூக்கி பிரதமர் பதவியில்அமர்த்திவிட்டால் இந்தியா ஒரேயடியாக முன்னேறிவிடும் என்றொரு மாயை உருவாக்கப்பட்டு வருகின்றது. ஆனால் உண்மையோ வேறு விதமாக உள்ளது. மோடியை விட நிதிஷ் குமார் பீகாரை குஜராத்தை விட சிறப்பு மிக்க மாநிலமாக மாற்றியுள்ளார் என்ற புள்ளி விபரத்தை இங்கு பார்ப்போம்.



திட்ட கமிஷன் வெளியிட்டுள்ள புள்ளி விவரம் ஒன்றில் தெரிவிக்கப் பட்டுள்ளதாவது:கடந்த, 2001 - 2005ம் ஆண்டுகளில், 2.9 சதவீத பொருளாதார வளர்ச்சியுடன், மிகவும் பின்தங்கிய மாநிலமாக விளங்கிய பீகார், 2006 - 2010ம் ஆண்டுகளில், 10.9 சதவீத வளர்ச்சியை அடைந்துள்ளது. இதன் மூலம், வேகமாக வளர்ச்சி அடைந்த மாநிலங்களில், பீகார் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

அதே நேரத்தில், 2001 - 2005ம் ஆண்டுகளில், மிக வேகமாக வளர்ச்சி அடைந்த மாநிலமாக, 11 சதவீத பொருளாதார வளர்ச்சி பெற்றிருந்த குஜராத், 2006 - 2010ம் ஆண்டுகளில், வீழ்ச்சி அடைந்து, 9.3 சதவீத பொருளாதார வளர்ச்சியை மட்டுமே பெற்றது. மேலும், அந்த கால கட்டத்தில், வேகமாக வளர்ச்சி அடைந்த, சத்தீஸ்கர், அரியானா, மகாராஷ்டிரா மற்றும் ஒடிசா மாநிலங்களை விட, குஜராத் பின்தங்கி இருந்தது.அது மட்டுமின்றி, 2006 - 2010ல், வளர்ச்சி அடைந்த, 17 மாநிலங்களில், குஜராத் மட்டும் தான், பொருளாதார வீழ்ச்சி அடைந்த மாநிலம் என்பதும் குறிப்பிடத்தக்கது.இவ்வாறு, அந்த புள்ளி விவரம் தெரிவிக்கிறது.

--------------------------------------------------------

மார்க்கண்டேய கட்ஜூ தனது அறிக்கையில் கூறும் போது....

குஜராத்தில் மக்களின் வாழ்க்கை தரம் உயர்ந்து இருக்கிறதா அல்லது இல்லையா என்பதனை நாம் பார்க்க வேண்டும். குஜராத் இந்தியாவின் மற்ற மாநிலங்களை விட மக்களின் வாழ்க்கை தரத்தில் மிகவும் பின் தங்கி உள்ளது. நிலைமை இவ்வாறிருக்க, “குஜராத் மிளிர்கிறது” என்று மக்கள் மத்தியில் ஒரு மாய தோற்றத்தை ஏற்படுத்தி அதில் மோடி வெற்றி பெற்று விட்டார்.

2002 ஆம் ஆண்டு முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை தவிர்த்து வேறு என்ன சாதனை புரிந்து உள்ளார். பட்டியல் இதோ,.

குஜராத்தில் உள்ள குழந்தைகளின் ஊட்டச்சத்து பற்றாக்குறை 48%. இது மிகவும் ஏழ்மையான சோமாலியா நாட்டை விட அதிகம். சோமாலியாவில் வெறும் 33% மட்டுமே. இது குறித்து மோடி கருத்து தெரிவிக்கையில், குஜராத்தில் உள்ள பெண்கள் அனைவரும் உடல் குண்டாகி விடும் என்ற அச்சத்தில் பால் சாப்பிடுவதில்லை . எனவே தான் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைவாக உள்ளது என கூறுகிறார். இவையனைத்தும் முட்டாள்தனமான வாதமாகும். குஜராத் குழந்தைகள் தொழிற்சாலைகள், சாலைகள் மின்சாரத்தையா உண்ண முடியும்?

குஜராத்தில் குழந்தை இறப்பு விகிதம் 1000க்கு 48 ஆக உள்ளது. இந்த மோசமான பட்டியலில் குஜராத் இந்திய அளவில் 10ஆவது இடத்தில் உள்ளது.

குஜராத்தில் வயது வந்த ஆண்களில் மூன்றில் ஒரு பகுதியினரின் உடல் நிறை குறியீட்டு எண்(BMI) 18.5 க்கு கீழே உள்ளனர். இதில் குஜராத் இந்திய அளவில் 7வது இடம் பெற்றுள்ளது.

பேறுகால இறப்பு விகிதம் மற்ற மாநிலங்களை குஜராத்தில் தான் அதிகமாக உள்ளது.

குஜராத்தின் கல்வி, பொது சுகாதாரம், வருவாய் இந்தியாவின் மற்ற 8 மாநிலங்களை விட பின் தங்கி உள்ளது. அதாவது குஜராத் 9ஆவது இடத்தில உள்ளது.

குஜராத்தின் கிராமப்புறத்தில் 51% மக்கள் வறுமையில் வாடுகின்றனர். இதில் 57% எஸ்.சி, 49% எஸ்.டி , மற்றும் 42% பொதுப்பிரிவினர் உள்ளனர்.

மோடி குஜராத்தில், பெரும் தொழிற்சாலைகளுக்கு மலிவான மின்சாரம் மற்றும் நிலங்களை தந்ததில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. குஜராத்தில் அதிகமான வறுமை, மிகவும் குறைந்த அளவு மனித மேம்பாடு இவையே மிகைத்து நிற்கின்றன. அரசுக்கு நேரடி வருமானம் பெறுவது குறித்த நடவடிக்கைகளில் குஜராத் அரசு அதிகமான கவனம் செலுத்துகின்றது. ஆனால் அதையெல்லாம் தூக்கி சாப்பிடுகின்ற அளவில் குஜராத்தில் வறுமை தாண்டவமாடுகின்றது. மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்கு எந்த விதமான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை என்பதே நிதர்சனம்.

இந்த உண்மையை கண்டிப்பாக ஒருநாள் குஜராத் மக்கள் உணர்வார்கள்,

என தனது கட்டுரையிலே மார்கண்டேய கட்ஜு குறிப்பிட்டு உள்ளார்.

உண்மை நிலவரம் இவ்வாறு இருக்க நமது பத்திரிக்கைகள் ஏன் இது போன்ற பொய்களை வலிந்து மக்கள் மத்தியில் திணித்து வருகின்றதோ தெரியவில்லை. தினமலர், தினமணி போன்ற இந்துத்வா ஆதரவு பத்திரிக்கைகளுக்கு ஒரு ஆசை இருக்கிறது. அதாவது மோடி பிரமராகி விட்டால் இந்துத்வாவுக்கு உள்ள முட்டுக் கட்டைகள் நீக்கப்படும். இந்து மதம் எழுச்சியுறும் என்று அந்த பத்திரிக்கைகள் நினைக்கலாம். ஆனால் நிலைமை வேறாக மாறும்.

மோடி பிரதமராகி இந்துத்வாவுக்கு வழி விட்டால் வர்ணாசிரமம் திரும்பவும் சபையேறும். பார்பனர்களுக்கு பழைய அங்கீகாரம் கொடுக்கப்படும். பிறபடுத்தப்பட்ட மக்கள் பழைய சூத்திரர்களுக்கு எந்த நிலையோ அந்த நிலையை அடைவர். இதனால் வெகுண்டெழும் அவர்கள் இந்து மதத்தை துறந்து இஸ்லாம் போன்ற மதங்களை நோக்கி நகர்வார்கள். எனவே இந்து மதம் எழுச்சியுறும் என்ற கனவு வேண்டுமானால் அவாள் கண்டு கொண்டிருக்கலாம். உண்மை நிலையே வேறு....

--------------------------------------------------

28 Dec 2012 Samjhauta accused also involved in Jammu blast

புதுடெல்லி:ஜம்மு-கஷ்மீரில் நிகழ்ந்த குண்டுவெடிப்புகளிலும் ஹிந்துத்துவா தீவிரவாதிகளுக்கு பங்கிருப்பது தெரியவந்துள்ளது.

முதல் மலேகான், சம்ஜோதா எக்ஸ்பிரஸ், மக்கா மஸ்ஜித், அஜ்மீர் தர்கா, 2-வது மலேகான் உள்ளிட்ட குண்டுவெடிப்புகளில் தொடர்புடைய,

அண்மையில் என்.ஐ.ஏவால் கைது செய்யப்பட்ட ஹிந்துத்துவா தீவிரவாதிகள் இதனை தெரிவித்துள்ளனர்.

ஹிந்துத்துவா தீவிரவாத குழுக்கள் குண்டுவெடிப்புகளை நடத்தி விட்டு முஸ்லிம்கள் மீது பழியை சுமத்தும் பல்வேறு குண்டுவெடிப்பு சம்பவங்களில் உண்மை வெளிவந்துகொண்டிருக்கிறது.

2004 வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகைக்குப் பிறகு ஜம்மு கஷ்மீரில் உள்ள பீர்மித்தா அஹ்லே ஹதீஸ் மஸ்ஜிதில் திரண்டவர்கள் மீது வெளியே இருந்து க்ரேனேடை வீசியவர்கள் தங்களின் குழுவைச் சார்ந்தவர்கள் தாம் என்பதை ஹிந்துத்துவா தீவிரவாதிகள் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவத்தில் க்ரேனேடு வெடித்து 2 பேர் பலியானார்கள். ஏராளமானோருக்கு காயம் ஏற்பட்டது.

தெஹ்ரீக்குல் முஜாஹிதீன் என்ற அமைப்பு இச்சம்பவத்திற்கு காரணம் என்று அன்று போலீஸ் கூறியது.

இவ்வழக்கு தொடர்பான விசாரணை அறிக்கையை ஜம்மு-கஷ்மீர் போலீசாரிடம் என்.ஐ.ஏ கேட்டுள்ளது.

விசாரணை அறிக்கையில் ஹிந்துத்துவா தீவிரவாதிகள் குறித்து ஏதேனும் விபரங்கள் கூறப்பட்டுள்ளனவா? என்பதை ஆராயவே இந்த அறிக்கை கேட்கப்பட்டுள்ளது.

சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ரெயிலில் குண்டுவைத்த ராஜேந்தர் சவுத்ரி அண்மையில் மத்தியபிரதேச மாநிலம் உஜ்ஜையினில் இருந்து கைது செய்யப்பட்டான்.

இந்தியாவில் நடந்த பல்வேறு குண்டுவெடிப்புகளில் தொடர்புடைய ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரக் சுனில் ஜோஷி கொலை, பேராசிரியர் எஸ்.ஏ.ஆர் ஜிலானியை கொல்ல முயன்றது உள்ளிட்ட வழக்குகளில் தொடர்பிருப்பதை முந்தைய தினங்களில் என்.ஐ.ஏவிடம் சவுத்ரி வாக்குமூலம் அளித்திருந்தான்.

SOURCE: http://www.thoothuonline.com/samjhauta-accused-also-involved-in-jammu-blast/

காங்கிரஸ் ஆட்சியிலேயே இத்தனை படு பாதக செயலை செய்பவர்கள் இந்துத்வா மத்தியில் அமர்ந்தால் இன்னும் என்னவெல்லாம் செய்வார்கள் என்பதற்கு இந்த சம்பமே நல்ல உதாரணம்.

டிஸ்கி: டில்லி மாணவி சிகிச்சை பலனின்றி இறந்த செய்தி மிக அதிர்ச்சிக்குள்ளாக்கியது. மாணவியை பிரிந்து வாடும் அவரது குடும்பத்துக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.

23 comments:

mohamed said...

சலாம் சகோ சுவனப்பிரியன்,

நரபலி மோடி தலைமையில் குஜராத்தில் நடைபெற்ற முஸ்லிம்களுக்கு எதிரான இனபடுகொலை இந்திய வரலாற்றில் அது ஒரு மறக்க முடியாத கருப்பு நாள்.அந்த இனப் படுகொலை மோடிக்கு இன்று வரை கொலைகாரப் பட்டதையே கொடுத்து வருகிரது.அந்த இனப் படுகொலையை மக்களிடமிருந்து மறக்கடித்து விட வேண்டும் என்ற முயற்சி தான் இந்த குஜராத் வளர்சியடைதுள்ளது என்ற புலுகலை மக்களிடம் விதைத்து வருகிறது இந்த காவி ஊடகங்கள்.என்னதான் அவர்கள் உண்மையை மறைக்க துடித்தாலும் ஒரு போதும் பொய் வெற்றியடையாது.

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

குஜராத்தையும் மோடியையும் அவ்வப்போது புகழும் புதிய தலைமுறை டிவியும் இனி அடக்கி வாசிக்க வேண்டியதுதான்.

Unknown said...

இல்லாத உண்மையை எல்லாம் கண்டுபிடிக்கிறீங்க பாருங்க. அங்கதான் நீங்க நிக்குறீங்க

suvanappiriyan said...

சலாம் சகோ முஹம்மத்!

//இனப் படுகொலையை மக்களிடமிருந்து மறக்கடித்து விட வேண்டும் என்ற முயற்சி தான் இந்த குஜராத் வளர்சியடைதுள்ளது என்ற புலுகலை மக்களிடம் விதைத்து வருகிறது இந்த காவி ஊடகங்கள்.என்னதான் அவர்கள் உண்மையை மறைக்க துடித்தாலும் ஒரு போதும் பொய் வெற்றியடையாது.//

சரியாகச் சொன்னீர்கள். இன்னும் எத்தனை காலத்துக்குத்தான் மோடியின் தவறுகளை மூடி வைக்கிறார்கள் என்று பார்ப்போம். உண்மை என்றாவது ஒருநாள் அவரை கண்டிப்பாக பிடிக்கும். அதுவரை பொறுப்போம்.

suvanappiriyan said...

சகோ முஹம்மத் ஆஷிக்!

//குஜராத்தையும் மோடியையும் அவ்வப்போது புகழும் புதிய தலைமுறை டிவியும் இனி அடக்கி வாசிக்க வேண்டியதுதான்.//

பீகார் பின் தங்கிய மாநிலம். அதனை சிறந்த நிலைக்கு கொண்டு வருபவர்தான் திறமை சாலி.

குஜராத் ஏற்கெனவே முன்னேறிய மாநிலம். மோடிக்கு முன்பே அது ஒரு தொழில் நகரமாக இருந்தது. அந்த வளர்ச்சியே தற்போது சிறிது மேம்பட்டுள்ளது. மோடி இல்லாமல் வேறு ஒருவர் மத சார்பற்ற முறையில் ஆட்சி நடத்தியிருந்தால் இன்றுள்ளதை விட சிறந்த இடத்தை குஜராத் பெற்றிருக்கும்.

suvanappiriyan said...

ஜெய்சங்கர்!

//இல்லாத உண்மையை எல்லாம் கண்டுபிடிக்கிறீங்க பாருங்க. அங்கதான் நீங்க நிக்குறீங்க//

மோடி பிரதமரானால் நான் சொன்னவைகள் நடக்குமா! நடக்காதா!

ஜெயலலிதா ஆட்சியில் அமர்ந்தவுடனேயே இந்த ஆட்டம் போடும் நீங்கள் இன்னும் மோடியை பிரதமராக்கினால்(அது நடைபெறாது என்பது தெரிந்தது) என்னவெல்லாம் செய்வீர்கள் என்பது நடு நிலையாளர்களுக்கு நன்றாகவே தெரியும்.

UNMAIKAL said...

குஜராத் :

ஓட்டுப்பதிவின்போது "துப்பாக்கிச்சூடு" நடத்தி வெற்றி பெற்ற "பாஜக. எம்.எல்.ஏ" கைது!



Saturday, 29 December 2012 06:55 MARUPPU மீடியா - மறுப்பு செய்திகள்


DEC29, குஜராத்தில் தேர்தல் நாளன்று 8 ரவுண்டு துப்பாக்கிச்சூடு நடத்தி, வன்முறையால் மக்களை அச்சுறுத்தி, வெற்றி பெற்ற "சஹேரா" தொகுதி எம்.எல்.ஏ. "ஜெட்டாபாய் பர்வாட்" நேற்று (28/12) கைது செய்யப்பட்டார்.

குஜராத் "தேர்தல் வன்முறை வெறியாட்டங்கள்" குறித்து எந்த மீடியாவும் வாய் திறக்காத நிலையில், இதுபோன்ற பிரச்சினைகள் தற்போது வெளிவரத்துவங்கியுள்ளது.

தேர்தல் நாளன்று துப்பாக்கிச்சூடு நடத்தி, வன்முறையில் ஈடுபட்டு வெற்றி பெற்ற ஜெட்டாபாய், அன்றே தலைமறைவாகி விட்டார்.

தலைமறைவு குற்றவாளியான "நரேந்திரமோடி"யின் நண்பர் ஜெட்டா பாயின் "முன்ஜாமீன்" மனுவை மாவட்ட நீதிமன்றம் தள்ளுபடி செய்ததையடுத்து, நேற்று பா.ஜ.க. எம்.எல்.ஏ. "ஜெட்டாபாய் பர்வாட்" கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்டுள்ள பாஜக எம்.எல்.ஏ. இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

"சஹேரா" தொகுதி வன்முறை தொடர்பான இந்த வழக்கில், எம்.எல்.ஏ.உடன் மேலும் 9 குண்டர்கள் தேடப்பட்டு வருகிறார்கள், என்பதும் குறிப்பிடத்தக்கது.

SOURCE:http://www.maruppu.in/all-medias/43-maruppu-news/696--qq-q-q-

UNMAIKAL said...

குஜராத் எம்.எல்.ஏக்களில் 57 பேர் கிரிமினல்கள் :

"எலெக்ஷன் வாட்ச்" ஜெகதீப் சோக்கர் தகவல்!


Tuesday, 25 December 2012 10:54 MARUPPU மீடியா - மறுப்பு செய்திகள்


DEC25, குஜராத் சட்டசபைக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 182 எம்.எல்.ஏக்களில் 57 பேர் மீது கொலை, கற்பழிப்பு, கொலை முயற்சி, போன்ற "கிரிமினல்" வழக்குகள் நிலுவையில் உள்ளதாக "குஜராத் எலக்ஷன் வாட்ச்" அமைப்பின் பேராசிரியர் ஜெகதீப் சோக்கர் தெரிவித்தார்.

இதுகுறித்து, ஜெகதீப் சோக்கர் கூறியதாவது:

மொத்தம் உள்ள 182 எம்.எல்.ஏக்களில் 57 பேர் மீது கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன.

24 பேர் மீது கொலை, கற்பழிப்பு, கொலை முயற்சி என தீவிரமான வழக்குகள் உள்ளன.

பா.ஜ.க.வின் சங்கர் செளத்ரி, ஜேத்தா பர்வத், அமீத் ஷா ஆகியோர் மீது மிகவும் தீவிரமான வழக்குகள் உள்ளன.

பர்வத் மீது கற்பழிப்பு வழக்கு நிலுவையில் உள்ளது.

இந்த வழக்கு இவர் முன்பு "போலீஸ் கான்ஸ்டபிளாக இருந்தபோது" 1998ம் ஆண்டு தொடரப்பட்டதாகும்.

வாசவா எம்.எல்.ஏ. மீது கொள்ளை, கொலை, கொலை முயற்சி என 15 வழக்குகள் உள்ளன.

அமீத் ஷா மீது, சோராபுதீன் - அவரது மனைவி கெளசர் பீ, துள்சிராம் பிரஜாபதி ஆகியோரை போலி என்கவுண்டரில் கொன்றதாக வழக்கு உள்ளது.

கடந்த சட்டசபையில் 26 சதவீத "கிரிமினல்கள்" உறுப்பினர்களாக இருந்தனர்.

இந்த முறை இது 31 சதவீதமாக உயர்ந்துள்ளது.

SOURCE: http://www.maruppu.in/all-medias/43-maruppu-news/692--57-q-q-

suvanappiriyan said...

சகோ உண்மைகள்!

//DEC29, குஜராத்தில் தேர்தல் நாளன்று 8 ரவுண்டு துப்பாக்கிச்சூடு நடத்தி, வன்முறையால் மக்களை அச்சுறுத்தி, வெற்றி பெற்ற "சஹேரா" தொகுதி எம்.எல்.ஏ. "ஜெட்டாபாய் பர்வாட்" நேற்று (28/12) கைது செய்யப்பட்டார்.//

அடப் பாவிகளா...தேர்தலில் வெற்றி பெற எதையும் செய்ய தயங்காதவர்கள் இந்த பொறுக்கிகள். தலைவன் எவ்வவழியோ அதன் வழியே எம்எல்ஏவும்.

suvanappiriyan said...

ஸ்டீபன் ராஜ்!

//கோத்ரா ரயில் எரிப்பு நூறுக்கும் மேற்பட்ட இந்து யாத்ரீகர்கள் கோத்ரா என்ற ரயில் நிலையத்தில் ஆயிரக்கணக்கான முஸ்லீம்களால் எரித்து கொல்லப்பட்டார்கள். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பல முஸ்லீம்கள் தண்டனை வழங்கப்பட்டுள்ளார்கள்.//

பொய்களை அரங்கேற்ற வேண்டாம். அரசு அதிகாரி சஞ்சீவ் பட்டின் வாக்கு மூலத்தையும் கோத்ரா ரயில் எரிந்தது ஒரு விபத்து என்பதையும் விளக்கமாக பார்க்கவும்.

இதில், குஜராத் மாநில உளவுத்துறையில் டி.எஸ்.பி.,யாக பணியாற்றிய சஞ்சீவ் பட் இந்த வழக்கு தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் அளித்த மனுவில், மோடி தொடர்பு பற்றி தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

"கடந்த 2002ம் ஆண்டு முதல்வர் மோடி, கோத்ரா சம்பவத்திற்கு பின், சட்டம் ஒழுங்கு நிலைமை குறித்து நடத்திய கூட்டத்தில் பங்கேற்றேன். போலீஸ் அதிகாரிகளிடம் பேசிய மோடி, "கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தால், இந்துக்களிடையே கொந்தளிப்பான சூழ்நிலை நிலவுகிறது. இத்தகைய சம்பவம் இனி நிகழாதவாறு, முஸ்லிம்களுக்கு பாடம் கற்பிக்க நினைக்கின்றனர். அவர்களது கோபத்திற்கு தடை விதிக்காமல் கண்டும் காணாததுபோல் இருக்கும்படி கேட்டுக்கொண்டார்' என்று அந்த மனுவில், சஞ்சீவ் பட் தெரிவித்துள்ளார்.
http://www.dinamalar.com/News_Detail.asp?id=229594

குஜராத் மாநிலத் தடய அறிவியல் துறை கூட இது ஒரு திட்டமிட்ட தீவைப்பு என்று ஏற்றுக் கொள்ளவில்லை. அத்துறையைச் சேர்ந்த அதிகாரிகள் இச்சம்பவம் பற்றி அளித்த இரண்டு அறிக்கைகளுள் முதலாவது அறிக்கை, "தீப்பற்றிய விதம், அது பரவிய முறை, எரிந்த தன்மை இவற்றை ஆராய்ந்து பார்க்கும்போது, உள்ளுக்குள் இருந்துதான் தீயைப் பற்ற வைத்திருக்க முடியும்" எனக் குறிப்பிட்டுள்ளது.

இரண்டாவது அறிக்கை, "ரயில் வண்டியின் ஜன்னல் தரைமட்டத்தில் இருந்து சுமார் 7 அடி உயரம் உள்ளது. எனவே, வெளியில் இருந்து எரிபொருளை ரயிலுக்குள் ஊற்ற முடியாது. எரிபொருள் திரவம் வெளியில் இருந்து ஊற்றப்பட்டிருந்தால், பெட்டியின் வெளியில் இருக்கும் அடிப்பாகமும் எரிந்திருக்கும். ஆனால், அடிப்பாகம் எரியாததால், எரிபொருள் வெளியே இருந்து ஊற்றப்படவில்லை என்பது உறுதி" எனக் குறிப்பிட்டது.

இதுவொருபுறமிருக்க, "முசுலீம் தீவிரவாதிகள்" பெட்ரோல் வாங்கியதாகச் சொல்லப்பட்ட பெட்ரோல் நிலையத்தைச் சேர்ந்த பிரபாத் சிங் மற்றும் ரஞ்சித் சிங் என்ற இரு ஊழியர்கள், "தங்களிடமிருந்து பெட்ரோல் வாங்கப்படவில்லை" என ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

S6 பெட்டி தீக்கிரையானதைப் பற்றி விசாரிக்க ரயில்வே அமைச்சகத்தால் நியமிக்கப்பட்ட பானர்ஜி கமிசன், தனது இடைக்கால அறிக்கையில், "அரி பிரசாத் ஜோஷி என்ற பயணி பெட்டியின் பின்பக்கம் வழியாக இருக்கை எண் 72 அருகில் இருந்து வெளியே இறங்கியிருக்கிறார். இருக்கை எண் 72 அருகே உள்ள ரயிலின் தரை தளத்தில் பெட்ரோல் வீசப்பட்டு அதன் காரணமாகத் தீ பற்றியிருந்தால், அந்தப் பகுதியில் இருந்து ஜோஷி உயிர் தப்பியிருக்க முடியாது" எனக் குறிப்பிட்டுள்ளது.

பானர்ஜி கமிசன் விசாரணைக்கு உதவி புரிந்த துனுராய், பேரா. தினேஷ் மோகன் என்ற இரு தொழில்நுட்ப வல்லுனர்கள், "S6 மற்றும் S7க்கு இடையே உள்ள இணைப்பு இரும்புச் சுவரால் ஆனது மட்டுமன்று; இது, "நியோபிரீன் ரப்பர்" என்ற பொருளால் நிரப்பப்பட்டது. எனவே, இதனை உடைப்பதோ வெட்டி வழி ஏற்படுத்துவதோ சற்றும் இயலாத காரியமாகும்" எனச் சான்று அளித்துள்ளனர்.

எனவே எதையும் எழுதுவதற்கு முன்பு உண்மையை உள் வாங்கி எழுதவும்.

Unknown said...

சுவனப்பிரியன் புதுசு புதுசா கண்டுபிடிப்பாடு ஸ்டீபன்

Unknown said...

//மோடி பிரதமரானால் நான் சொன்னவைகள் நடக்குமா! நடக்காதா!
//

மோடி பிரதமர் ஆனால் கசாப்பை ஆதரிக்கிறவர்களை பாகிஸ்தானுக்கு அனுப்பனும்

UNMAIKAL said...

12 வயது மகளை தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்த தந்தைக்கு 8 ஆண்டு சிறை

Posted by: Chakra Published: Saturday, December 29, 2012, 12:51 [IST]

டெல்லி: 12 வயது மகளை தொடர்ந்து பல மாதங்களாக பாலியல் பலாத்காரம் செய்து வந்த 70 வயது நபருக்கு 8 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

டெல்லியைச் சேர்ந்த மான்சிங் தாப்பா என்பவர் மீது கடந்த 2011ம் ஆண்டு பலாத்காரம் செய்யப்பட்ட மகளும் அவளது 10 வயது தங்கையும் போலீசில் புகார் செய்தனர்.

இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு டெல்லி கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

சிறுமிகளின் வாக்கு மூலத்தின் அடிப்படையில் அவருக்கு 8 ஆண்டு சிறை தண்டனை வழங்கி கூடுதல் செஷன்ஸ் நீதிபதி சஞ்சய் கார்க் உத்தரவிட்டார்.

அந்த சிறுமியின் தாயார், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னர் இறந்து விட்டார். ஆனால், குடிபோதையில் தேவைப்படும் போதெல்லாம் பெற்ற தந்தையே தன்னை பலவந்தமாக கற்பழித்ததாகவும் அந்த சிறுமி வாக்குமூலம் அளித்தார்.

ஆனால், தனக்கு 70 வயது ஆகிவிட்டதால் நான் ஆண்மையிழந்துவிட்டேன், இதனால் என்னால் கற்பழிப்பு போன்ற செயல்களில் ஈடுபட முடியாது என்று மான்சிங் வாதிட்டார்.

மேலும் எனது மகள் தனது காதலனை திருமணம் செய்து கொள்வதை நான் ஏற்றுக் கொள்ள மறுத்தேன்.

இதனால், என் மீதுள்ள ஆத்திரத்தில் என்னை பழி வாங்க எனது மகள் போலீசில் பொய் புகார் அளித்தார் என்றார்.

ஆனால், தாப்பாவின் இந்த பொய்யான வாதத்தை நீதிபதி ஏற்றுக் கொள்ள மறுத்து விட்டார்.

Read more at: http://tamil.oneindia.in/news/2012/12/29/india-man-jailed-8-yrs-raping-daughter-167051.html

UNMAIKAL said...

கர்நாடகத்தில் இளம் பெண்ணை 9 நாட்கள் பலாத்காரம் செய்த 7 பேர் கைது; மேலும் 4 பேருக்கு வலை

Posted by: Chakra Published: Saturday, December 29, 2012, 13:13 [IST]

ஹாசன்: கர்நாடகத்தில் இளம் தலித் பெண்ணை 9 நாட்கள் தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்த 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

ஹாசன் மாவட்டம் ஆலூரைச் சேர்ந்த 15 வயதான தலித் பெண்ணுக்கு துணிக் கடையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி அவரது உறவினரான புட்டா என்பவன் கடந்த 19ம் தேதி அழைத்துச் சென்றார்.

அவனும் அவனது நண்பனான ராஜா என்பவனும் அந்தப் பெண்ணை கட்டாயா ஹோப்ளி என்ற இடத்தில் ஒரு காட்டுப் பகுதியில் வைத்து பலாத்காரம் செய்துள்ளனர்.

பின்னர் அந்தப் பெண்ணை ஹாசன் பஸ் நிலையத்தில் விட்டுவிட்டுச் சென்றுவிட்டனர். அழுதபடியே அருகே இருந்த மொபைல்போன் கடையில் தனது போனை ரீசார்ஜ் செய்யச் சென்ற அந்தப் பெண்ணிடம் கடைக்கார வாலிபனான தயானந்த் என்பவன் விவரம் கேட்டுள்ளான்.

தனக்கு நேர்ந்த கொடுமையை அவனிடம் அந்தப் பெண் கூறியதும், தனது நண்பர்களான மது, திலீப், சின்னு, மோகன், சேகர் ஆகிய 5 பேரை வரவழைத்துள்ளான்.

உனக்கு உதவி செய்கிறோம் என்று கூறி இந்த 6 பேரும் அந்தப் பெண்ணை சினிமா தியேட்டருக்கும், பின்னர் லாட்ஜுக்கும் கொண்டு சென்று பல நாட்கள் வைத்திருந்து கற்பழித்துள்ளனர்.

அவர்களிடம் இருந்து ஒரு வழியாகத் தப்பித்த அந்தப் பெண் ஒரு பெண்கள் அமைப்பை நாடி தனக்கு நேர்ந்த கொடுமையை விளக்கியுள்ளார்.

இதையடுத்து போலீசாருக்கு தகவல் தரப்பட்டது. 3 தனிப்படை போலீசார் குற்றவாளிகள் 7 பேரையும் கைது செய்துள்ளனர்.

இதில் 2 பேர் கல்லூரி மாணவர்கள், 3 பேர் ஆட்டோ டிரைவர்கள். இவர்கள் அனைவருமே 18 முதல் 25 வயதுக்கு உட்பட்டவர்கள்.

இதில் தொடர்புடைய ராஜா உள்ளிட்ட 4 பேரும் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று மாவட்ட எஸ்.பி. அமித் சிங் கூறியுள்ளார்.

இந்தப் பெண்ணுக்கும் கைது செய்யப்பட்ட நபர்களுக்கும் மருத்துவ பரிசோதனை நடத்தப்படவுள்ளது. குற்றவாளிகள் அனைவருக்கும் மிகக் கடுமையான, மற்ற குற்றவாளிகளுக்கு ஒரு உதாரணமாக இருக்கும் வகையிலான தண்டனை வழங்க வேண்டும் என்று முன்னாள் முதல்வரும் ஹாசன் தொகுதி எம்.பியுமான தேவ கெளடா கோரிக்கை விடுத்துள்ளார்.

Read more at: http://tamil.oneindia.in/news/2012/12/29/india-minor-gang-raped-hassan-nine-days-167053.html

UNMAIKAL said...

தமிழ்நாட்டில் மட்டும் என்ன வாழ்கிறது?

நாளும் பெண்கள் மீதான வன்கொடுமை அரங்கேற்றம்!


வேலூர், டிச. 29- தூத்துக்குடி மாவட்டம், திருவை குண்டத்தில் 13 வயது சிறுமி புனிதா வன்புணர்ச்சி செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட ஈரம் காய்வதற்குள் தமிழகத்தில் ஜெயலலிதா ஆட்சியில் 8 வயது சிறுமி கற்பழித்து கொலை செய்யப்பட்ட மற்றொரு சம்பவம் வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் நடந்திருக்கின்றது.

அ.தி.மு.க. ஆட்சியில் தூத்துக்குடி, நாகை, விருத்தாசலம், சிதம்பரம் என காமுகர்களின் களியாட்டத்தில் தமிழகம் திளைத்திருக்கிறது.

அடுத்து என்ன நடக்குமோ என்று தாய்மார்கள், பெற்றோர்கள் செய்வதறியாது தவித்திருக்கிறார்கள்.

டெல்லியில் 23 வயது மருத்துவ மாணவி பேருந்தினுள் 6 கயவர்களால் சின்னாபின்னமாக்கப்பட்டு தற்போது சிங்கப்பூர் மருத்துவமனையில் உயிர் இழந்தார் என்பது வேதனை!

இச்சம்பவத்தை இந்தியாவில் அனைத்து மாநில பத்திரிகைகளும், பெரும் தலைப்பிட்டு செய்திகள் வெளியிட்டு வருகின்றன.

அதேபோல் தமிழகத்திலும் அனைத்து நாளேடுகளும், ஊடகங்களும் இச்செய்திக்கு முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டு வருகின்றன.

ஆனால் தமிழகத்தில், தினமும் ஒரு வன் கொடுமை - கொலை நடக்கிறது என்று சொல்லக் கூடிய அளவிற்கு,

கடந்த வெள்ளிக்கிழமை அன்று தூத்துக்குடி மாவட்டம், திருவைகுண்டத்தில் 7 ஆம் வகுப்பு படிக்கும் 13 வயது மாணவி - சிறுமி - பள்ளிக்குச் செல்லும் வழியில் மனித மிருகத்தால் வேட்டையாடப்பட்டு, சின்னாபின்னமாகி - கொலை செய்யப்பட்டார்.

இந்த பரிதாப சம்பவத்தை தமிழகத்தில் எத்தனை ஊடகங்கள், பத்திரிகைகள் வெளியிட்டுள்ளன என்றால் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில்தான் இருக்கின்றது.

சிறுமி புனிதாவின் மரணத்திற்கு அ.தி.மு.க. அரசு பதில் சொல்லியே ஆக வேண்டும்.

அச்சம்பவத்தின் ஈரம் காய்வதற்குள், கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அருகே இளம் பெண் ஒருவர், தான் மணக்க இருக்கும் முறைப் பையனுடன் மணிமுத்தாறு ஆற்றங்கரை ஓரத்தில் அமர்ந்து பேசிக் கொண்டு இருந்தபொழுது, 6 பேர் அப்பெண்னை வன்புணர்ச்சி செய்தனர்.

இதேபோல் நாகையில் வேலைக்குச் சென்று திரும்பிய இளம் பெண் விமலா கெடுக்கப்பட்டு கொலை செய்து ரயிலில் பிணத்தை வீசி எறிந்து உள்ளனர்.

மேலும் சிதம்பரம் மஞ்சகுப்பம் கிராமத்தில் 21 வயது இளம் பெண் சந்தியா பாலியல் பலத்காரத்திற்குள்ளாகி படுகொலை செய்யப்பட்டு இருப்பதோடு
நேற்று தூத்துக்குடியில் 27 வயது பெண் மழைக்காக ஒரு வீட்டில் ஒதுங்கிய பொழுது பாலியல் வன்கொடுமைக்காளாகியுள்ளார்.

இச்சம்பவங்களில் இருந்து தமிழகம் மீள்வதற்குள் மற்றொரு சம்பவம் தமிழக மக்களின் நெஞ்சை குலுக்கியுள்ளது.

ஆனால் தமிழக முதலமைச்சரோ இச்சம்பவங்கள் எதுவும் நடக்காததைப் போலவே நடந்து கொண்டு வருகிறார்.

காயத்ரி என்ற 9 வயதே கொண்ட சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

சிறுமி காயத்திரியை தூக்கிச் சென்று குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த சமூக விரோதிகளை காவல் துறை கைது செய்யாமல் மூடி மறைக்க நினைக்கிறது.

SOURCE: http://www.viduthalai.in/page-8/51776.html

suvanappiriyan said...

ஸ்டீபன் ராஜ்!

இது போன்ற பல வீடியோக்கள் நீக்கப்பட்டுள்ளன.//
யாரோ சேமித்து வைத்துள்ள ஒரு வீடியோ இங்கே இருக்கிறது.
https://www.youtube.com/watch?feature=player_embedded&v=TXOpUvd7DO0#!//

நீங்கள் கொடுத்த இந்த லிங்கில் என்ன பேசுகிறார். உங்களுக்கு முதலில் உருது தெரியுமா என்று தெரியவில்லை.

'அஸ்ஸாமில் உள்ள முஸ்லிம்கள் வெளிநாட்டுகாரர்கள் என்றால் அத்வானியே நீ எந்த நாட்டிலிருந்து வந்தாய்? இந்துஸ்தான் எங்கள் நாடு. இங்கேயே பிறந்தோம். இங்கேயே வளர்ந்தோம். இங்கேயே இறப்போம. குஜராத்தில் முஸ்லிம்கள் கொல்லப்படுகிறார்கள். அஸ்ஸாமில் கொல்லப்படுகிறார்கள். முழு இந்துஸ்தானத்திலும் முஸ்லிம்கள் கொல்லப்படுகிறார்கள். நமது அரசோ வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது....' என்ற ரீதியில்தானே அந்த பேச்சு செல்கிறது. நீங்கள் குறிப்பிட்ட வன்முறைப் பேச்சு எதையும் அந்த காணொளியில் காண முடியவில்லையே! இந்திய நாட்டை விரும்பி பொதுக் கூட்டத்தில் பேசும் ஒருவரின் மேல் எத்தகைய அபாண்டத்தை நெஞ்சறிந்து சுமத்துகிறீர்கள்.!

ஏன் இப்படி கிறித்தவ பெயரில் ஒளிந்து கொண்டு விஷத்தை கக்க வேண்டும். இதனால் உங்களுக்கு என்ன லாபம். நாட்டை இது நாள் வரை ரண களமாக்கி ருசித்தது பத்தாதா? இன்னுமா மனித ரத்தம் வேண்டும். இறைவனுக்கு பயந்து கொள்ளுங்கள். அது தான் தற்போது என்னால் சொல்ல முடிந்தது.

Anonymous said...

ஐயா.. உங்களது எழுத்தின் வெற்றியே எதிர் கருத்துக்கொண்ட... இல்லை இல்லை, முஸ்லிம்களாகிய உங்களையே எதிரியாக நினைக்கும் ஜெய்சங்கர் போன்றவர்களை உங்களது வாசகராக்கி தொடர்ந்து கருத்து எழுதும்படி செய்தது தான். ஜெய்சங்கரையும் பாராட்ட வேண்டும் தொடர்ந்து உங்களது பதிவுகளை மெனக்கெட்டு படித்து அவரது எண்ணத்தை பதிந்து விட்டு செல்கிறாரே. இவரும் இல்லாட்டி போரடித்து விடும்.

suvanappiriyan said...

//மோடி பிரதமர் ஆனால் கசாப்பை ஆதரிக்கிறவர்களை பாகிஸ்தானுக்கு அனுப்பனும் //

அத்வானியின் சொந்த நாட்டுக்கா!

UNMAIKAL said...

நமது நாட்டில் 54 நொடிக்கு ஒரு கற்பழிப்பு நடைபெறுகின்றதாம்,

பெண்கள் அவமானத்திற்க்கு உள்ளாகுவது 26 நிமிடத்திற்க்கு ஒரு சம்பவம் என தரவு கூறுகின்றது.


கற்பழிப்புக்கு முதல் இடத்தில் நிற்கும் அமெரிக்காவில் 93,934 வழக்குகள் பதிவாகும் போது இந்தியாவில் 18,359 வழக்குகள் மட்டுமே பதிவாகின்றது என்றதும் நம் நாட்டில் கற்பழிப்பு குறைவு என்பதல்ல.

சட்டத்தால் நீதி கிடைக்கும் என நம்புவர்கள், தனக்கு நடந்த அநீதியை எதிர் கொள்ள துணிபவர்கள் இவ்வளவு பேர் மட்டுமே என்று தான் எடுத்து கொள்ளவேண்டும்.

தெற்கு ஆப்பிரிக்கா நாடுகளில் 45 ஆயிரத்திற்க்கு மேல் வழக்கு பதிவாகும் போது ஜெர்மனியில் 8,133 தாய்லான்றில் 5060 கேஸுகள் என பின்னுக்கு வரிசை பிடிக்கின்றது.

சுருங்க சொன்னால் வளர்ந்த நாடுகள், வளரும் நாடுகள், படிப்பறிவான நாடுகள் என்ற பாகுபாடில்லாது பெண்களுக்கு எதிராக குற்றம் புரிவதில் எல்லா நாடுகள் நிலையும் மோசமாகத் தான் உள்ளது என காண்கின்றோம்.

source:internet.

UNMAIKAL said...

.
.

இங்கு சொடுக்கி >>>> இந்திய மயமான நாத்திக வாதமும் பாதிக்கப்படாத இஸ்லாமும் <<<< படிக்கவும்

..

ராவணன் said...

அண்ணாச்சி...

திட்டக்கமிசன் என்பது உங்கள் அன்னை..இத்தாலிய கிறித்துவ அன்னையின் எடுபிடிகள்.

உங்கள் அன்னையின் மனமறிந்து செய்திகளை வெளியில் விடுவார்கள்.

ராவணன் said...

குண்டுவைக்கும் கொலைகாரர்களுக்கு உதவுவதில் குஜராத்தைவிட பீகார் முன்னிலைதான்.

ராவணன் said...

மோடியைத் தவறானவராக சித்தரிக்க நினைக்கும் எத்தர்கள்
(பிராமணர்கள்,முஸ்லீம்கள்,கிருத்துவர்கள்) ஒருபோதும் வெற்றிபெறமுடியாது.