
மன்னர் அப்துல்லா 500 படுக்கை வசதிகளுடன் கூடிய புதிய மருத்துவ மனையை வரும் ஏப்ரல் 28 ந்தேதி திறந்து வைக்கிறார். இந்த மருத்துவ மனைக்கு முகமது பின் அப்துல் அஜீஸ் என்று பெயரிடப்பட்டுள்ளது. இம் மருத்துவ மனையைக் கட்டி முடிக்க 455 மில்லியன் ரியால் செலவு பிடித்துள்ளது. 120000 ஸ்கொயர் மீட்டர் பரப்பளவில் மருத்துவமனை விஸ்தாரமாக உலகத் தரத்தில் கட்டப்பட்டுள்ளது.
ஐந்து அடுக்கு மாடி வசதிகளைக் கொண்ட இந்த மருத்துவ மனையில் 15 ஆபரேஷன் தியேட்டர்கள் உள்ளன. ரேடியாலஜி யூனிட், மம்மோக்ராம் ஸ்கிரீன் செக்ஷன், தீப்புண்களுக்கான விசேஷ பிரிவு, இரத்த வங்கி, பிஸியோதெரபி பிரிவு, அவசர சிகிச்சைக்காக 102 படுக்கைகள் கொண்ட தனி பிரிவு, என்று அனைத்து வசதிகளையும் ஒரு சேராக கட்டிமுடித்துள்ளனர். அமெரிக்க மருத்துவ மனைகளின் மாதிரியைக் கொண்டு இந்த புதிய மருத்துவ மனை வடிவமைக்கப்பட்டுள்ளது.
மருத்துவ மனையின் கீழ்ப் பகுதி அலுவலகங்கள், மருத்துவ குறிப்புகள் அடங்கிய அறை, நூலகம், ரேடியாலஜி பிரிவு, குழந்கைள் பிரிவு, உடலுறவு சம்பந்தப்பட்ட நோய்களுக்கான பிரிவு, பல் மருத்துவம், நீரிழிவு, சிறுநீரக, தோல் நோய் மற்றும் சிறுநீரக நோய்கள் என்று தனித் தனி பிரிவுகளாக பிரிக்கப்பட்டு செயல்பட தயார் நிலையில் உள்ளது.
இவ்வளவு சிறப்பு வாய்ந்த ஒரு மருத்துவ மனையை திறக்க மன்னர் அப்துல்லா வருவதால் வழிகள் அடைக்கப்படாது. வழி நெடுக தோரணங்கள் இல்லை. 'வாழ்க ஒழிக' கோஷம் இல்லை. இதனை அறிவுறுத்த பல லட்சம் செலவில் பொதுக் கூட்டம் ஏற்பாடு செய்யப்படவில்லை. மன்னர் வருவதும தெரியாது: அவர் திறந்து வைத்து விட்டு போவதும் தெரியாது. அவர் காருக்கு முன்னால் மூன்று நான்கு கார்களும் பின்னால் மூன்று நான்கு கார்களும் ஒரே கருப்பு நிற கலரில் பாதுகாப்புக்காக செல்லும். இதைத்தவிர வேறு படாடோபங்கள் எதையும் என்னால் காண முடியவில்லை.
அதே நேரம் நம் தாய் தமிழ் மண்ணில் இத்தகைய ஒரு மருத்துவ மனை திறந்து வைக்கப்பட்டால் ஆளும் கட்சியினர் பண்ணும் கூத்துக்கள் எந்த அளவு சாமான்ய மனிதனை பாடாய்ப்படுத்தும் என்பதை இந்த செயதியை படிக்கும் போது நினைத்துக் கொண்டேன்.
உடனே அம்மா விசுவாசிகளான ரத்தத்தின் ரத்தங்கள் என்மேல் கோபப்பட வேண்டாம். நம்ம தாத்தா கலைஞர் திறந்து வைத்தாலும் உடன் பிறப்புகளும் இதே அடாவடியைத்தான் செய்யப் போகின்றனர்.. நாம் எல்லாவற்றிற்கும் பழகிக் கொண்டு விட்டோம். வேறு வழியில்லை..... :-)
தகவல் உதவி: அரப் நியூஸ்
---------------------------------------------------------
இந்தியாவில், தலித் மக்களுக்கு எதிரான சாதி அடக்குமுறையை கண்டிக்கும் தீர்மானம், ஐரோப்பிய பாராளுமன்றத்தில் ஏகமனதாக நிறைவேற்றப் பட்டது. தலித் ஒடுக்குமுறைக்கு எதிராக, இந்திய அரசை கண்டிக்கும் தீர்மானம் நிறைவேற்றப் பட்டமை, ஐரோப்பிய பாராளுமன்ற வரலாற்றில் இதுவே முதல் தடவையாகும். தீர்மானத்தையொட்டி நடந்த விவாதத்தில், "மனித உரிமைகள் சம்பந்தமான சட்டங்களை பொருட்படுத்தாமைக்காக", இந்திய அரசு கடுமையாக கண்டிக்கப்பட்டது. தமிழ்நாடு மாநிலத்தில், தலித் மக்களின் கிராமங்கள் தாக்கப்பட்டு, 1500 பேர் வீடிழந்த சம்பவம், இந்த தீர்மானத்தில் முக்கியமாகக் குறிப்பிடப் பட்டுள்ளது. ஹரியானா மாநிலத்தில், தலித் பெண்கள், உயர்சாதி காடையர்களினால் பாலியல் வல்லுறவுக்குள்ளான கொடுமைகளும் இந்த தீர்மானத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது. இந்தியாவில் தலித் மக்களுக்கு எதிராக நடக்கும், இது போன்ற அக்கிரமங்களையும், அநீதியையும், இனியும் ஐரோப்பிய ஒன்றியம் பார்த்துக் கொண்டிருக்கப் போவதில்லை என்பதை இந்திய அரசுக்கு எச்சரிக்கும் வண்ணம், அந்த தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப் பட்டது.
ஐரோப்பிய பாராளுமன்றத்தில், இந்தியாவுக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை முழுமையாக இங்கே வாசிக்கலாம்:
European Parliament resolution of 13 December 2012 on caste discrimination in India
http://www.europarl.europa.eu/sides/getDoc.do?type=TA&language=EN&reference=P7-TA-2012-512
Thanks Kalaiy Arasan
1 comment:
ரியாத்தில் ஒருமருத்துவமனை என்ற விசயம் ஒரு கட்டுரையாக வெளியிடும் அளவிற்கு முக்கியமானதா ? அரபி கொட்டாவி விட்டால் கூட கட்டுரை எழுதுவீர்களா ? தமிழ்நாட்டில் இதைவிட சிறந்த மருத்துவமனைகள் நிறைய உள்ளது. சத்திய சாய்பாபா அனந்தப்புரில் அற்புதமான ஒரு இலவச மருத்துவமனையை நடத்தி வருகிறார். அறிவீர்களா ஐயா! என் இப்படி அரேபிய அடிமைகளாக அடிமைகளாக ..........களாக ......களாக இருக்கின்றீர்கள்.
Post a Comment