Followers

Tuesday, April 09, 2013

கற்கை நன்றே! கற்கை நன்றே! பிச்சை புகினும்.....கற்கை நன்றே! கற்கை நன்றே! பிச்சை புகினும்.....

கற்கை நன்றே! கற்கை நன்றே! பிச்சை புகினும் கற்கை நன்றே! என்று நமது பழமொழி நமக்கு அறிவுறுத்துகிறது. இதனை நாம் உணர்ந்து கொண்டோமோ இல்லையோ சவுதி அரேபிய மக்கள் தங்களின் கல்வியறிவை வளர்த்துக் கொள்ள வயது வித்தியாசம் பாராமல் கல்விச் சாலையை நோக்கி வர ஆரம்பித்துள்ளனர்.

முன்பு படிப்பில் அதிகம் ஆர்வம் இல்லாமலேயே இருந்தனர். அந்த அளவு கணக்கின்றி செல்வம் குவிந்திருந்ததும் ஒரு காரணம். தற்போது தேவையற்ற பல உதவிகளை அரசு நிறுத்தி விட்டபடியால் வேலை செய்யும் கட்டாயத்துக்கு இந்த மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். எந்த வேலைக்கு சென்றாலும் குறைந்தபட்ச கல்வி அறிவாவது தேவைப்படுகிறது. எழுத்தறிவின்மையைப் போக்க சவுதி அரசும் பல முயற்சிகளை எடுத்து வருகிறது. ஆண்களை விட பெண்களே பள்ளிக்குச் செல்வதில் முன்னணியில் உள்ளனர். முதியோர் கல்வியின் இயக்குனர் டாக்டர் யூசுஃப் அல் ஆரிஃப் தனது அறிக்கையில் "அரசு மிகவும் எங்களுக்கு உதவி வருவதால் முதியோர் கல்வியில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளோம். பல புதிய முறைகளை கல்வித் திட்டத்தில் புகுத்தி அனைவருக்கும் கல்வியை எட்ட துணை புரிந்திருக்கிறோம்" என்கிறார்.

மெக்கா நகரத்தின் முதியோர் பெண்கள் கல்வியின் இயக்குனர் நூரா அல் ஷேக் கூறும் போது 'எமது நாட்டில் கல்வியறிவின்மையை முழுவதுமாக போக்க மிகக் கடுமையாக உழைக்கிறோம். தற்போதய அரசும் சமூக ஆர்வலர்களும், செல்வந்தர்களும் எங்களின் இந்த இலக்கை அடைய மிகவும் உறுதுணையாக இருக்கின்றனர். நெடுந்தூர குக்கிராமங்களுக்கு சென்று வருடத்தில் மூன்று மாதம் முதியோர்களுக்கு கல்வியை போதிக்கிறோம். முன்பு பெண்களை விட ஆண்களே கல்வி கற்பதில் முன்னணியில் இருந்தனர். இடைவிடாத பிரசாரத்திற்கு பிறகு தற்போது ஆண்களும் பெண்களும் கல்வி கற்பதில் ஓரளவு சம நிலைக்கு வந்துள்ளனர். இந்த மாற்றம் எங்களுக்கு மிகுந்த உற்சாகத்தைத் தருகிறது' என்கிறார்.

பல தெய்வ வணக்கம் புரிபர்களாகவும், நாடோடிகளாகவும் ஒட்டகம் மேய்த்துக் கொண்டும் பல சாதிகளாக பிரிந்தும் தங்களுக்குள் பகைமை கொண்டிருந்த ஒரு சமூகத்துக்கு இஸ்லாம் என்ற அழகிய வழிமுறை கிடைத்தது. அந்த வழி முறையை சரியாக கொண்டு செல்ல இந்த மக்களுக்கு சிறந்த அரசும், சிறந்த தலைமையும் இன்று வரை கிட்டி வருகிறது. நூறு சதவீதம் படித்த மக்களாக மாற நாமும் இவர்களை வாழ்த்துவோம்.

நம் நாட்டிலும் இஸ்லாமிய சமூகம் படிப்பின் அருமையை அறியாமல் அறியாமையில் உழன்று கொண்டிருக்கிறது. ஒவ்வொரு ஊரிலும் செல்வந்தர்கள் தாங்களாகவே முன் வந்து முதியோர் கல்விக்கு உரிய உதவிகளை வழங்க முன் வர வேண்டும். கல்வி கற்பது ஒவ்வொரு இஸ்லாமியனுக்கும் முக்கிய கடமையாக இஸ்லாம் வகுத்து தந்துள்ளது. மதரஸா கல்விகளில் பல மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும். ஆங்கிலம், கணிணி, அறிவியல் என்று அனைத்து துறைகளையும் இந்த மதரஸாக்கள் தொட வேண்டும். பழம் பெருமைகள் பேசுவதை நமது மார்க்க அறிஞர்கள் தூரமாக்கி இன்றைய இளைஞர்களின் சிறந்த வருங்காலத்துக்கு உரிய கல்வி முறையை உண்டாக்க முயற்ச்சிக்க வேண்டும்.

தற்போது இஸ்லாமிய பெண்களும் அதிக ஆர்வத்தோடு கல்லூரி வரை செல்வதை தமிழகம் தோறும் பார்க்க முடிகிறது. கல்லூரி படிப்பை முடிந்த வரை ஆண்களையும் பெண்களையும் தனித் தனியாக கல்வி பயில நாம் ஆவண செய்ய வேண்டும். குர்ஆன் கூறும் சட்டதிட்டங்களுக்கு பங்கம் வராமல் உலக கல்வியை இஸ்லாமிய ஆண்களும் பெண்களும் அதிகமதிகம் பெற்று சிறந்த சமுதாய பரிணமிக்க அந்த ஏக இறையை பிரார்த்திக்கிறேன்.

கல்வியின் அவசியத்தை உணர்த்தும் முகமது நபி அவர்களின் பொன் மொழிகள்.

‘கல்வியைத் தேடுவது ஒவ்வொரு முஸ்லிம்களின் மீதும் கடமையாகும்’ என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபுதர் (ரலி) நூல்கள்: அபுதாவூத், திர்மதீ, இப்னுமாஜா, இப்னு ஹிப்பான்.)

கல்வியை தேடும் வழியில் ஒருவன் நடந்தால் அவனுக்கு அல்லாஹ் சுவர்க்கத்திற்கு செல்லும் வழியாக அதை ஆக்குகின்றான். மலக்குகள்(வானவர்கள்), கல்வியை தேடுபவனை திருப்தியுற்று தங்களின் இறக்கைகளை தாழ்த்துகின்றனர். ஒருவர் கல்வியை எடுத்துக்கொண்டால் அவர் மாபெரும் பாக்கியத்தை எடுத்துக்கொண்டவராவார் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஹதீஸ் சுருக்கம். அறிவிப்பவர்: அபுதர்(ரலி) நூல்கள்: அபுதாவூத், திர்மதீ, இப்னுமாஜா, இப்னு ஹிப்பான்.)

நபி(ஸல்) கூறினார்கள், அறிஞர்களை மட்டம் தட்டவோ, அறிவிலிகளிடம் பெருமையடிக்கவோ, மக்களின் கவனத்தை தன்பக்கம் ஈர்க்கவோ கல்வியை ஒருவன் தேடினால் அவனை அல்லாஹ் நரகில் நுழையச் செய்வான். (அறிவிப்பவர்: கஃப் இப்னு மாலிக்(ரலி) நூல்கள்: திர்மிதீ, ஹாகிம், பைஹகீ)

யா அல்லாஹ்! பயன் இல்லாத கல்வியை விட்டும், இறையச்சமில்லாத இதயத்தை விட்டும், போதுமாக்கிக் கொள்ளாத உள்ளத்தை விட்டும், ஏற்கப்படாத பிராத்தனையை விட்டும் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன் என்று நபி(ஸல்) அவர்கள் கூறுபவர்களாக இருந்துள்ளார்கள். (அறிவிப்பவர்: ஸைது இப்னு அர்ஹம்(ரலி) நூல்: முஸ்லிம், திர்மிதீ, நஸயீ)

6 comments:

jaisankar jaganathan said...

நண்பரே நல்ல தகவல். நல்லா படிச்சு பெரிய ஆளா ஆனாத்தானே நிறைய பாம் வைக்க முடியும். முந்தி மாதிரி இப்போவெல்லாம் வாள் கொண்டு வெட்ட முடியாதே

சுவனப் பிரியன் said...

//நண்பரே நல்ல தகவல். நல்லா படிச்சு பெரிய ஆளா ஆனாத்தானே நிறைய பாம் வைக்க முடியும். முந்தி மாதிரி இப்போவெல்லாம் வாள் கொண்டு வெட்ட முடியாதே //

கவலை வேண்டாம். இஸ்லாமியர்கள் படித்து அரசு வேலைகளில் அமர்ந்தால் முதலில் களையெடுப்பது உங்களை போன்ற சிறுபான்மை இந்துத்வா புல்லுருவிகளைத்தான். இந்த நாட்டை 3 சதவீதமே இருந்து கொண்டு முன்னேற விடாமல் தடுத்துக் கொண்டிருக்கும் உங்களைப் போன்றோர்களின் உண்மை முகத்தை பெரும்பான்மை இந்து மக்களுக்குதெரிவிக்க வேண்டியதும் எங்களின் தலையாய கடமை. பெரியார் ஓரளவு தனது கடமையை செய்து விட்டு சென்றுள்ளார். அவர் விட்ட இடத்தை நிரப்ப இஸ்லாமியர்கள் தயாராகவே உள்ளனர்.

சுவனப் பிரியன் said...

//நண்பரே நல்ல தகவல். நல்லா படிச்சு பெரிய ஆளா ஆனாத்தானே நிறைய பாம் வைக்க முடியும். முந்தி மாதிரி இப்போவெல்லாம் வாள் கொண்டு வெட்ட முடியாதே //


சைவ மத நாயன்மார்களான சம்பந்தரும், சுந்தரரும், திருநாவுக்கரசரும் கட்டாய மதமாற்றத்திலும், இனப்படுகொலையிலும் ஈடுபட்டவர்கள். தமிழ் பேசும் பௌத்தர்களையும், சமணர்களையும் கழுவேற்றிக் கொன்ற கதைகளை தேவாரங்களிலும் பாடி வைத்துள்ளனர். இந்தக் கொடுமைகள் எல்லாம் பல்லவர் காலத்தில் நடந்தேறின.

காவிக்கொடுமை ஆயிரம் ஆண்டுகள் பழமை ஆனது.தமிழகத்தில் கி மு 300 ல் இருந்த தமிழ் மதம்,வடக்கே இருந்து வந்த ஆசீவக மதம்,ஜைன மதம்,பவுத்த மதம்,இவைகளை அழித்து வைதீக மதம்.(பார்ப்பன மதம்) தற்போது இதற்கு இந்து மதம் என்று பெயர்.இந்த மதத்தின் உண்மையான அங்கத்தினர்கள் பார்ப்பனர்களே,மற்றவர்கள் ஒப்புக்கு சப்பாணி.காவி வெறி அன்றும் தலை விரித்தாடி தமிழர் மதம்,சமணர்கள்,பவுத்தர்கள் ஆசீவகர்கள் ஜைனர்கள் அழிக்கப்பட்டனர்.அன்று 6000 சமணர்களும் பவுத்தர்களும் (இன்று ஆறு லட்சத்துக்கு சமம்) அழிக்கப்பட்டனர்.இது காவியின் பயங்கரம் தானே.அன்றே வைதீக மதம் தன்னுடைய குள்ள நரித்தனத்தால் ஒவ்வொரு மதத்தை அழித்தது.முதலில்,ஆசீவக மதம், பின்பு சமணர்/பவுத்தர்களை ஒழித்து,தமிழர்களை மூளை மழுங்க செய்து இந்துவாக்கியது.அன்றே தேர்தல் கூட்டணி வைத்து, தான் காயப்படாமல் மற்றவர்களை அழித்தது.இவைகள் காவியின் வேலைகளே.தமிழர் ஆலயங்களை வசப்படுத்தி செத்த மொழியில் பூசை செய்து அவமானப்படுத்துவது கூட காவி பயங்கரம் தான்.ஆதலால் காவி பயங்கரம் இன்று தோன்றியதல்ல,கி மு 300 ல் ஆரம்பித்தது ,தொடர்கிறது.

duraicool said...

அள்ள அள்ள குறையாமல் எண்ணெய் வளம் இருக்கு. மார்க்க கல்வி என்னும் சிறந்த கல்வி போதுமே சாமி.

சுவனப் பிரியன் said...

//அள்ள அள்ள குறையாமல் எண்ணெய் வளம் இருக்கு. மார்க்க கல்வி என்னும் சிறந்த கல்வி போதுமே சாமி. //

உலக கல்வி, மார்க்க சல்வி என்று இஸ்லாம் கல்வியை பிரிக்கவில்லை. முகமது நபி அன்று நாட்டின் அதிபதியாகவும, இறைத் தூராகவும் ஒரே நேரத்தில் பணியாற்றியுள்ளார். மேலும் தற்போது தமிழகத்தில மதரஸாக்களின் கல்வித்தரம் மிகவும் தரம் தாழ்ந்து இருக்கிறது. உலக கல்விக்கு இணையாக மத்ரஸா கல்வியையும் மாற்றாத வரை இஸ்லாமியர்களுக்கு இன்னல்கள் தொடர்ந்த வண்ணமே இருக்கும்.

Anonymous said...

ராஜ்கோட், ஏப்ரல் 10:-

குஜராத் மாநிலத்தில் வறட்சியினால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள தலித் இன மக்கள் தங்களின் குடிநீர் தேவைக்காக அன்றாடம் அல்லல்பட்டு வருகின்றனர். மாநிலத்தின் முதல்வர் நரேந்திர மோடி உயர் இன மக்களின் பிரதிநிதியாக மட்டுமே செயல்படுகின்றார் என்பது இவர்களின் ஆதங்கமாக இருக்கின்றது.

இங்குள்ள சௌராஷ்டிரா மாவட்டத்தில் உள்ள சித்தாலியா, கட்வாவாடி, கணேசரா, பரிவாலா, ஜீவபூர், நாணி லக்காவதி, கொதி, பரவாலா மற்றும் தேவதாரி ஆகிய பத்து கிராமங்கள் வறட்சியினால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன.

இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட தலித் குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன. இவர்களை ஊருக்குப் பொதுவான குடிநீர் தொட்டிகளில் தண்ணீர் பிடிக்க மற்ற சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மீறி அருகே சென்றால் தலித் மக்களை சாதியைச் சொல்லி விமர்சிக்கிறார்கள். எனவே கொதிக்கும் வெயிலில் அப்பெண்கள் 3 கிமீட்டருக்கும் மேல் நடந்து சென்று தண்ணீர் பிடித்து வருகின்றனர்.

இந்தக் கஷ்டத்தையும், அவமதிப்பையும் பொறுத்துக்கொள்ள முடியாமல் இம்மக்கள் அம்மாவட்ட இணை ஆணையரிடம் சென்று முறையிட்டனர். ஆனால், அதற்காக அவர்கள் மிரட்டப்பட்டனர். கீழ்சாதியில் பிறந்ததற்காக நாங்கள் தாகத்துடன் இருக்கமுடியுமா? என்று தலித் பெண்ணான ஜெயா மக்வானா கோபத்துடன் கூறுகிறார்.

ஆணையரிடம் முறையிட்ட பின்னர், நர்மதை நதி நீர் ஐந்து நாட்களுக்கு ஒருமுறை இவர்களின் கிராமங்களுக்கு விநியோகிக்கப்படுகின்றது. ஆனால், அளவு குறைவாக உள்ளதால் இதுவும் இவர்களுக்கு போதுமானதாக இல்லை.

http://www.maalaimalar.com/2013/04/10150331/Dalit-peoples-affect-for-drink.html