Followers

Saturday, April 13, 2013

ஸ்வீடனில் பாங்கு சொல்ல அனுமதி கிடைத்துள்ளது!

ஸ்வீடனில் பாங்கு சொல்ல அனுமதி கிடைத்துள்ளது!நாத்திகர்களால் ஆத்திகர்களின் பல வழிபாட்டு தலங்கள் முன்பு ஆக்கிரமிக்கப்பட்டன. அவை நூலகங்களாகவும் அரசு அலுவலகங்களாகவும் மாற்றப்பட்டன. நாத்திகத்தில் மன அமைதி கிடைக்காத பலர் இன்று ஆத்திகத்தின் கதவை தட்ட ஆரம்பித்துள்ளனர். ஸ்வீடனில் உள்ள ஃபித்ஜா மசூதியில் இனி வரும் காலங்களில் வெள்ளிக் கிழமைகளில் ஒலி பெருக்கி மூலம் அதான்(தொழுகைக்கான அழைப்பு) கொடுத்துக் கொள்ளலாம் என்ற அனுமதி கிடைத்துள்ளது. இனி பள்ளியின் மினாராக்களில் பாங்கின் அழைப்பொலி அந்த அழகிய நகரை அலங்கரிக்கும்.

'நான் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளேன். பாங்கு சொல்ல அனுமதி கிடைத்ததற்கு இறைவனுக்கு நன்றி கூறிக் கொள்கிறேன்' என்கிறார் போத்கிர்கா முனிசிபாலிடியின் இஸ்லாமிய அமைப்பின் தலைவர் இஸ்மாயில். மதியம் 12 லிருந்து ஒரு மணிக்குள் ஒலி பெருக்கி மூலம் தொழுகைக்கான அழைப்பைக் கொடுத்துக் கொள்ளலாம் என்று காவல் துறை அனுமதி வழங்கியுள்ளது. மெல்ல இந்த அனுமதியானது முன்பு நாத்திகர்களால் பூட்டப்பட்ட பல மசூதிகளுக்கும் பரவும் என்று எதிர்பார்க்கலாம். ஏனெனில் அந்த அளவு இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வதில் ஸ்பெயின் மக்கள் ஆர்வமுடன் உள்ளனர்.

எல்லாப் புகழும் இறைவனுக்கே!

தகவல் உதவி: சவுதி கெஜட்.

-----------------------------------------------------

பொருளாதாரத்திலும் நாகரிகத்திலும் வளர்ந்து வரும் ஐரோப்பிய நாடுகள் இஸ்லாத்தை இரு கரம் நீட்டி வரவேற்கின்றன. ஆனால் நமது நாட்டில் வழிபாடு நடத்தி வந்த பள்ளியில் இரவோடு இரவாக ராமர் சிலைகளை வைத்து அதற்கு ஆயிரம் பொய்களை சொல்லி நாட்டில் ரத்தக் களரியை உண்டு பண்ணி ஒரு பள்ளி வாசலையே தரை மட்டமாக்கியுள்ளது ஒரு கும்பல். சட்டமும் குற்றவாளிகளை தண்டிக்காமல் வேடிக்கை பார்ததுக் கொண்டுள்ளது.
இதுதான் நம் பாரத தேசத்தின் மத சார்பற்ற கொள்கை!

--------------------------------------------------------கூட்டுக் குடும்ப வாழ்க்கை

சென்னையிலிருந்து பாரிஸ் நகரத்திற்கு விமானத்தில் சென்று கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக விமானம் ரோம் நகர விமான தளத்தில் தரை இறங்கியது, அதில் எனக்கு மட்டும் அங்கு ஒரு நாள் தங்குவதற்கும் ரோம் நகரத்திற்குள் செல்லவும் தற்கால அனுமதித் தாள் (Temporary visa)கொடுத்ததோடு, ரோம் நகர விமான தளத்தில் வேலை செய்யும் ஒரு அதிகாரி நான் தங்குவதற்கு வசதி செய்துக் கொடுக்க தனது காரில் அழைத்துக் கொண்டு போனார்.

நான் அவருடன் பேசிக் கொண்டிருப்பதனை அவர் விரும்பியதால் 'விடுதிக்குப் பிறகு போகலாம் அதற்குள் ரோம் நகரத்தினை உங்களுக்கு காட்ட விரும்புகின்றேன்' எனக் கூறி தொடர்ந்தார் .அப்பொழுது அவர் சொன்ன வார்த்தை என்னை மிகவும் கவர்ந்தது . நான் இந்தியா (பம்பாய் ,சென்னை) ,மலேசியா,சிலோன் மற்றும் பல நாடுகளில் எனது பணியை செய்துள்ளேன் ஆனால் சென்னை,மலேசியா மற்றும் சிலோன் நாடுகளில் பணி செய்த காலங்கள் எனக்கு மிகவும் மன நிறைவைத் தந்தது அதற்கு முக்கிய காரணம் அங்கு குடும்ப வாழ்க்கை சிறப்பாக உள்ளது அதிலும் முஸ்லிம்கள் மார்க்கத்தை பேணுவதில் மிகவும் அக்கறையுடன் இருப்பதுடன் குடும்ப உறவையும் சிறப்பாக அமைத்துக் கொள்கின்றார்கள்' என பெருமிதத்துடன் சொல்லி விட்டு மேலும் தொடர்ந்தார்.

'ஆனால் அந்த குடும்ப வாழ்க்கையை அதிலும் கூட்டுக் குடும்ப வாழ்க்கையை வளர்ந்த மேலை நாடுகளில் பார்க்க முடியாது.அந்த நாடுகளில் ஒரு சில ஆண்டுகள் நாங்கள் வாழ்ந்தபோது எனக்கும் எனது மனைவிக்கும் இடையே ஒரு பிடித்தம் உண்டாகியது' என்று மகிழ்வோடு சொன்னார். 'இதனை எனது மனைவி பலரிடம் சொல்லி பெருமையடைகின்றாள். அத்துடன் தனது வாரிசுகளுக்கு அந்த நாட்டிலிருந்துதான் திருமண தொடர்பு ஏற்படுத்திக் கொள்ளவும் விரும்புகின்றாள்' என அவர் சொன்னபோது நான் ஒரு இஸ்லாமியனாகவும்,தமிழனாகவும் மற்றும் இந்தியனாகவும் இருப்பதற்கு மிகவும் மகிழ்ந்து போனேன். என்னை இந்தியாவில் அதிலும் தமிழ்நாட்டில் பிறக்க வைத்தமைக்கும் இறைவனுக்கு நன்றி சொன்னேன். இந்த குடும்ப உறவின் நேசம் தொடர நாம் முயல்வோம்.

http://www.facebook.com/nidurali

4 comments:

Anonymous said...

இந்தியனாகவும் இருப்பதற்கு மிகவும் மகிழ்ந்து போனேன். என்னை இந்தியாவில் அதிலும் தமிழ்நாட்டில் பிறக்க வைத்தமைக்கும் இறைவனுக்கு நன்றி சொன்னேன். பரவாயில்லையே

சுவனப் பிரியன் said...

//இந்தியனாகவும் இருப்பதற்கு மிகவும் மகிழ்ந்து போனேன். என்னை இந்தியாவில் அதிலும் தமிழ்நாட்டில் பிறக்க வைத்தமைக்கும் இறைவனுக்கு நன்றி சொன்னேன். பரவாயில்லையே//

இஸ்லாமியர்கள் தனது தாய் நாட்டின் மீதும் தாய் மொழியின் மீதும், தனது இனத்தின் மீதும் பற்று வைத்துள்ளதை சிலர் ஆச்சரியமாக பார்த்து வருகின்றனர். வாழ்வு முறையை நான் இஸ்லாமாக கொண்டிருப்பதால் நான் தமிழன் என்ற கோட்டிலிருந்து வெளியேறி விட்டதாக அர்த்தம் இல்லை. இது பலராலும் தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. மொழிப் பற்று, நாட்டுப் பற்று, இனப்பற்று என்பது ஒருவன் ரத்தத்திலேயே ஊறி வீடும் ஒன்று. ஆனால் அதுவே வெறியாக மாறி விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

Anonymous said...

”அம்மா..! பஜ்ஜியில ஒரே எண்ணை..!”

“உஷ்.........! சத்தமா சொல்லாதலே..! அமெரிக்காகாரன் இங்கயிம் வந்துருவான்..!”

BY..ஹன்ஸா காஷ்யப்.

Anonymous said...

57:24. "எவர்கள் உலோபித்தனம் செய்து உலோபித்தனம் செய்யுமாறு மனிதர்களையும் ஏவுகிறார்களோ; எவர் (அல்லாஹ்வின் கட்டளைகளைப்) புறக்கணிக்கிறாரோ - (இவர்களே நஷ்டவாளிகள்) நிச்சயமாக அல்லாஹ் (எவரிடமும்) தேவையற்றவன். புகழ் மிக்கவன்!"..

'உங்கள் தண்ணீர் வற்றி விட்டால் ஊறி வரும் நீரை உங்களுக்குக் கொண்டு வருபவன் யார் என்பதற்குப் பதில் சொல்லுங்கள்!' எனக் கேட்பீராக! ( 67 : 30)

'தற்பெருமை' பற்றி இஸ்லாம் சொல்வது என்னவென்றால்...

யாருடைய உள்ளத்தில் அணு அளவு தற்பெருமை இருக்கின்றதோ அவர் சொர்க்கத்தில் நுழைய மாட்டார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ''தமது ஆடை அழகாக இருக்க வேண்டும், தமது காலணி அழகாக இருக்க வேண்டுமென ஒருவர் விரும்புகிறார். (இதுவும் தற்பெருமையில்) சேருமா?'' என்று அப்போது ஒரு மனிதர் கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ''அல்லாஹ் அழகானவன். அழகயே அவன் விரும்புகிறான். தற்பெருமை என்பது (ஆணவத்தோடு) உண்மையை மறுப்பதும் மக்களைக் கேவலமாக மதிப்பதும் தான்'' என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி­),
நூல்: முஸ்லி­ம் 147.