Followers

Thursday, April 25, 2013

குமரி, கோவையில் மீண்டும் தலை தூக்கும் இந்துத்வா!

தமிழகம் என்றும் போல அமைதியாக மத கலவரம் இன்றி சமீபகாலம் வரை சென்று வந்துள்ளது. ஆனால் சமீபத்திய குமரி மாவட்ட கலவர சூழல் பலரையும் கவலைப்பட வைத்துள்ளது. தற்போது பாராளுமன்ற தேர்தல் நெருங்குவதால் பாஜக எப்படியாவது ஒரு எம்பி சீட்டாவது பெற்றுவிட வேண்டும் என்ற நோக்கில் காய்களை நகர்த்த ஆரம்பித்துள்ளது. இதற்காக இவர்கள் எதையும் செய்ய துணிவார்கள். எனவே இஸ்லாமிய இளைஞர்கள் இவர்களின் சூழ்ச்சியில் விழுந்து விடாமல் மிகக் கவனமாக இருக்க வேண்டும். ஒரு சில முஸ்லிம் அப்பாவிகளை மூளை சலவை செய்து அவர்கள் கையாலேயே எங்காவது வன்முறைகளை கட்டவிழ்த்து விட இந்துத்வாவினர் சதிகளை அரங்கேற்றுவர். இது போன்று யாராவது உங்களை அணுகினால் உடன் காவல்துறைக்கு தெரியப்படுத்துங்கள். அல்லது தவ்ஹீத் ஜமாத், தமுமுக போன்ற அமைப்புகளை உடன் தொடர்பு கொண்டு சதி வேலைகளை முறியடிக்க வேண்டும். காலா காலமாக அண்ணன் தம்பிகளாக பழகி வரும் நம்மை பிரிக்க இவர்களுக்கு இடம் தந்து விடக் கூடாது.

குமரி மாவடடத்தில் நடந்த நிகழ்வுகளை வினவு தளத்திலிருந்து இனி பார்ப்போம்....

எம்.ஆர்.காந்தி பாஜகவின் மாநிலத் தலைவராக இருக்கும் பொன். இராதாகிருஷ்ணனால் ஓரங்கட்டப்பட்டவர். இது வரை நடந்த பாராளுமன்றத் தேர்தல்களில் நாகர்கோவில் தொகுதியில் பொன். ராதாகிருஷ்ணனே போட்டியிட்டுள்ளார். ஒரு முறை தவிர்த்து மற்ற அனைத்து சந்தர்ப்பங்களிலும் பா.ஜ.கவின் மதவெறி அரசியல் தந்திரம் அங்கு பலிக்கவில்லை. கடந்த சட்டமன்ற தேர்தலிலும் பொன். ராதாகிருஷ்ணன் நாகர்கோவில் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்ட போது எம் ஆர் காந்தி ஆதரவாளர்கள் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். பொன். ராதாகிருஷ்ணனுக்கு எதிராக நாகர்கோவில் வீதியெங்கும் போஸ்டர்கள் முளைத்தன.

பாராளுமன்ற தேர்தலை மிக அணுக்கமாக அனைத்து கட்சிகளும் உணரும் நிலையில், எம்.ஆர். காந்தியை 2014ல் நாகர்கோவில் பாராளுமன்றத் தொகுதியில் பா.ஜ.க சார்பாக போட்டியிட வைக்க அவரது ஆதரவாளர்கள் முயற்சிகளை மேற்கொண்டு வந்தனர். காங்கிரஸ் — திமுக கூட்டணி உடைந்துள்ள நிலையில் தமது வெற்றி எளிதாக இருக்கும் என்று இந்து மதவெறி கூட்டத்தின் அனைத்து தரப்பும் நாக்கில் எச்சில் ஒழுகக் காத்திருக்கின்றன. இந்த சூழ்நிலையில் தான் எம்.ஆர். காந்தியை அங்ககீனப்படுத்தும் இந்த முயற்சி அரங்கேறி உள்ளது.

வழக்கம் போல முஸ்லிம்கள் மீதோ அல்லது குமரி மாவட்டத்தில் பெரும்பான்மையாக இருக்கும் கிறிஸ்தவர்கள் மீதோ, இல்லை முசுலீம்கள் மீதோ பழியை போட்டு ஆர்.எஸ்.எஸ் கும்பல் தப்பிக்க அனுமதிக்கக் கூடாது. உட்கட்சி மோதல் அரசியலில் தான் தி.மு.க.வின் தா. கிருட்டிணன் காலை நடை சென்ற போது கொல்லப்பட்டார். எம்.ஆர். காந்தி தாக்குதல் சம்பவமும் தா.கிருட்டிணன் கொலைச் சம்பவத்தையே பெரிதும் ஒத்திருக்கிறது.

எம் ஆர் காந்தி தாக்கப்பட்டதை வைத்து பாரதீய ஜனதா கட்சி 22-ம் தேதி திங்கள் கிழமை குமரி மாவட்டம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடத்தியது. முழு அடைப்பு போராட்டத்தை ஒட்டி ஞாயிறு மாலையும், திங்கள் காலையிலும் பஸ்கள் மீது பாஜ குண்டர்கள் கல்வீச்சு நடத்தினர். மாவட்டம் முழுவதும் 50 பஸ்கள் உடைக்கப்பட்டன. அரசு பஸ்கள் மட்டுமின்றி தனியார் பஸ்கள், கல்லூரி பஸ்களும், வேன்களும் கல்வீச்சில் சேதம் அடைந்தன. குளச்சல் அருகே பஸ் மீது கல் வீசப்பட்டதில், டிரைவர் ராபர்ட் கிங்ஸ்லி என்பவர் படுகாயம் அடைந்தார்.

வழக்கம் போல எரியும் தீயில் குளிர் காய்வதற்கு தயாராகி விட்டனர் பாஜ கட்சியினர். தமிழக பா.ஜ. தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், “தமிழகத்தில் மீண்டும் பயங்கரவாதம் தலை தூக்கி இருக்கிறது என்பதற்கு எடுத்துக்காட்டாகத்தான் எம்.ஆர்.காந்தி மர்ம கும்பலால் தாக்கப்பட்டுள்ளார்” என்று கூறியுள்ளார். பா.ஜ. தேசிய கட்டுப்பாட்டுக் குழு உறுப்பினர் இல.கணேசன் “நன்கு திட்டமிட்டு இந்த தாக்குதலை நடத்தி இருக்கிறார்கள். மத பின்னணி இருப்பதாக நாங்கள் சந்தேகிக்கிறோம்’ என்கிறார்.

குமரி மாவட்டத்தில் கடந்த 40 ஆண்டுகளாக மத பயங்கரவாதத்தை உரம் போட்டு வளர்த்து வரும் இந்துத்துவா கும்பல் 2014 நாடாளுமன்ற தேர்தலில் அதை வாக்குகளாக அறுவடை செய்யத் தயாராகிறது. சச்சரவுகளை ஊதிப் பெருக்கி, வன்முறை சம்பவங்களை உற்பத்தி செய்து, கலவரங்களை தூண்டி விட்டு இந்துக்களின் மனதிலும் சிறுபான்மை மதங்களைச் சேர்ந்தவர்கள் மனதிலும் அச்சத்தை உருவாக்கும் வேலையை செய்து வருகிறது.

இதே போல கோவை மாவட்டத்திலும் கோவையை ஒட்டிய குன்னூர் பகுதிகளிலும் வன்முறை சம்பவங்களையும் தாக்குதல்களையும் அரங்கேற்றி வருகின்றன இந்துத்துவ அமைப்புகள். கோவையில் முஸ்லீம் மக்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளில் தகராறு செய்வது, முஸ்லீம்கள் மீது வெறுப்பை உமிழும் பிரசுரங்களை வெளியிட்டு வினியோகிப்பது, கோவில்கள் மீது தாக்குதல்கள் நடத்தியதாக பொய் பிரச்சாரம் செய்வது, விநாயகர் ஊர்வலம் மூலம் பதட்டத்தை உருவாக்குவது என்று பல ஆண்டுகளாக நாடு முழுவதும் செய்து தேர்ந்த உத்திகளை பயன்படுத்தி வருகின்றனர்.

http://www.vinavu.com/2013/04/23/mrgandhi-attacked-bjp-schemes/

காந்தி தாக்கப்பட்டால் தாக்கியவர்களை கைது செய்ய காவல்துறைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். அதை விடுத்து அரசு பேரூந்துகளை உடைப்பதும் கடைகளை அடித்து நொறுக்குவதும் காந்தியை தாக்கியவர்களை என்ன செய்து விடும்? ஆக இவர்களின் நோக்கம் இந்துக்களை அச்சப்பட வைத்து ஓட்டு அறுவடை செய்வதே... தேசபக்திக்கு முழு உரிமை கொண்டாடும் பாஜகவின் லட்சணம் இதுதான். பெரும் பான்மை இந்து மக்களும் இவர்கள் விஷயத்தில் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இனி இந்த கொலைகார கும்பல் இதுவரை செய்து வரும் அநியாயங்களை சற்றே அசை போடுவோம்.

ஹேமந்த் கார்கரே என்ற நேர்மையான போலீஸ் அதிகாரியால், மிருகபலமான எதிர்ப்புகளைக் கடந்து, காவி தரித்த ஒரு சாமியாரிணி, ஒரு சாமியார், ஒரு ராணுவ அதிகாரி, உட்பட்ட ஆர்.எஸ்.எஸ் மற்றும் பஜ்ரங்தள் சேவகர்கள் உண்மையான குற்றவாளிகளாகக நாட்டிற்கு அடையாளம் காட்டப்பட்டார்கள். ஹேமந்த் கார்கரேயின் படுகொலை இன்னும் ஒரு புரியாத புதிராகத் தொடர்கிறது. இந்திய முஸ்லிம் சமூகத்தின்மேல் சுமத்தப்பட இருந்த மற்றுமொரு சதி!

மே 18, 2007 வியாழக்கிழமை. சரித்திரப்புகழ் வாய்ந்த சார்மினார் கோபுரத்திலிருந்து கூப்பிடு தூரமுள்ள மக்கா மஸ்ஜித் பள்ளிவாசலுக்குள் சக்திவாய்ந்த பைப் குண்டு வெடித்து பதினான்கு பேர் ஸ்தலத்திலேயே இறந்தார்கள். தொடர்ந்து, வழக்கம் போலவே அதுவரைக் கேள்விப்பட்டிராத இஸ்லாமியப் பெயர் தாங்கி இயக்கங்களின் பெயர்கள் ஊடகங்களில் அல்லோல கல்லோலப்படுகின்றன. முஸ்லிம் இளைஞர்கள் சுற்றி வளைக்கப்பட்டுச் சிறைகளிலடைக்கப்பட்டு கொடுமைப் படுத்தப்படுகிறார்கள். எண்ணெய்க்கு வேண்டி உலகத்தை முட்டாளாக்கிய ஜார்ஜ் புஷ்ஷின் 'பேரழிவு' ஆயுதங்கள் போல, வெடிமருந்துகளும் ஜிஹாதி பிரசுரங்களும் கண்டெடுக்கப்பட்டதாக ஊடகங்கள் ஊளையிட்டன. அத்தனையும் இட்டுக் கட்டப்பட்ட பொய்ப்பிரச்சாரங்கள் என்பது பின்னாட்களில் எவ்வித ஐயமும் இன்றி நிரூபணம் ஆனது

மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு வழக்கில் கொடூரமாகச் சித்திரவதை செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்ட முஸ்லிம் இளைஞருள் ஒருவனின் பணிவிடையால் மனம் திருந்திய சுவாமி அசீமானந்தா என்பவர் மாஜிஸ்டிரெட்டின் முன்பாக, தான் உட்பட சங் பரிவாரக் கும்பலின் விசுவாசிகள் யார் யாரெல்லாம் எப்படித் திட்டமிட்டு எங்கெல்லாம் குண்டு வெடிக்கச் செய்தோம் என்று அம்பலப் படுத்தினார். தேவேந்திரகுப்தா, லோகேஷ் ஷர்மா, சந்தீப் டாங்கே, ராமச்சந்திர கல்சங்ரா, சுனில் ஜோஷி, நாபகுமார் சர்க்கார், ப்ரத் பாய், ராஜேந்திர சவுதிரி, தேஜாரம் ஆகிய காவித் தீவிரவாதிகள் உண்மையான குற்றவாளிகளாக தேசியப் புலனாய்வு ஏஜென்சியால் அறிவிக்கப்பட்டார்கள்.

நடத்தியது காவி பயங்கரவாதிகள்!

பிப்ரவரி 18, 2007. சம்ஜௌதா எக்ஸ்பிரஸ் - இல் அதே பார்முலாவிலான குண்டு
வெடித்து 65 பேர் கொல்லப்பட்டனர். வழக்கம்போல புதியரக இஸ்லாமிய இயக்கங்களின் பெயர்களைச் சுட்டி விரல் நீட்டப்பட்டது. முஸ்லிம் இளைஞர்களைக் கைது செய்து சிறையிலடைத்துவிட்டு, பின்னர் புலன் விசாரணை செய்ததில் மேற்சொன்ன சுவாமி அசீமானந்தாதான் இந்தக் குண்டுவெடிப்பின் மூளை என்பதற்கான ஆதாரம் தங்களிடம் இருப்பதாக தேசியப் புலனாய்வு ஏஜென்சி டிசம்பர் 30, 2010 அன்று தெரிவித்தது. இந்த வழக்கில் தேடப்பட்டுவரும் காவிக்கும்பலின் இரு குற்றவாளிகளின் இருப்பிடத்தைப் பற்றி துப்புகொடுப்பவருக்கு 10 இலட்சம் இந்திய ரூபாய் பரிசறிவித்தது.

நடத்தியது காவி பயங்கரவாதிகள்!

ஜனவரி 24, 2008. தமிழ்நாடு தென்காசி ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்திலும், தென்காசி பஸ்நிலையத்திலும் பைப் வெடிகுண்டு வெடிக்கிறது. உடனேயே குண்டுவைத்த 'முஸ்லிம் தீவிரவாதிகளை'க் கைது செய்யவேண்டும் என்று சங்க் பரிவாரம் ஊர்வலம் நடத்தி குற்றவாளிகளை ஊகிக்க வைக்கிறது. மற்ற மாநிலம் போலல்லாமல், அன்றைய போலீஸ் அதிகாரி டி.ஐ.ஜி கண்ணப்பன், தன் சொந்த அலுவலகத்துக்குக் குண்டு வைத்து, அந்தப் பழியை பழைய கோட்சே தந்திரத்தைப் பயன்படுத்தி முஸ்லிம்கள்மேல் போட முயன்ற காவிக் கும்பலைச் சேர்ந்த 3 பேரைக்குற்றவாளிகள் என்று கைது செய்கிறார்.

நடத்தியது காவி பயங்கரவாதிகள்!

பிப்ரவரி 21, 2013. ஹைதராபாத்தின் தில்சுக் நகரின் சந்தைத் தெருவில் இரண்டு குண்டுகள் வெடித்தன 17 பேர் கொல்லப்பட்டனர். குண்டுகள் வெடிக்கும்போது மட்டுமே பிரசவிக்கப்படும் இந்தியன் முஜாஹிதீனின் பெயர் மின்னாத தொலைக்காட்சி சேனலில்லை. வழக்கமான வழக்கப்படி, முஸ்லிம் இளைஞர்கள் கைது செய்யப் பட்டிருக்கிறார்கள். இப்போதும் வழக்கம்போல "அஜ்மல் கசாப், அப்சல் குரு தூக்கிலிடப்பட்டதைத் தொடர்ந்து எதிர்வினை வரும் என்று எதிர்பார்த்தோம்” என 'புலனாய்வு' எந்தத் திசையில் பயணிக்க வேண்டும் என்று காவிக்கும்பல் பாதை காட்டியிருக்கிறது.

இப்படி இந்தியா சுதந்திரம் பெற்றது முதல் முஸ்லிம்களின் மீது திட்டமிட்டே பரப்பப்படும்
சதிவேலைகளுள் கண்ணுக்குத் தெரிந்தது கொஞ்சமே. இந்தக் கண்ணோட்டத்தில், "நாடாளுமன்றத் தாக்குதலின் உண்மைக் குற்றவாளிகள் யாரெனத் தெரியாமலேயே போய்விட்டது" என்கிறார் அருந்ததிராய். இந்தியன் முஜாஹிதீன் என்பது, சங்க் பரிவாரக் கும்பலான ஊடகத்துறையின் செல்லப்பிள்ளை என்கிறார் நீதிபதி மார்கண்டேய கட்ஜு. இந்த நாட்டின் சுதந்திரத்திற்கு வித்திட்ட ஒரு சமுதாயத்தின்மீது திட்டமிட்டே நடத்தப்படும் சதியை அம்பலப் படுத்துவதும் முறியடிப்பதும் நம் சமுதாயத்தின் கடமையாகும்.

எங்கு எந்த அசம்பாவிதம் நடந்தாலும் சட்டத்தை நாமே கையில் எடுக்காமல் உடன் காவல்துறையை நாடுவோம். உண்மை குற்றவாளிகள் நமது சொந்தங்களெ ஆனாலும் சட்டத்தின் முன் ஒப்படைப்போம். தனி ஆட்களாக போராடாமல் தவ்ஹீத் ஜமாத், தமுமுக போன்ற அமைப்புகளின் உதவியோடு சட்டத்தை அணுகுவோம். நியாயத்தின் பக்கம் நிற்போம். உண்மையே முடிவில் வெல்லும்.

12 comments:

Anonymous said...

மரக்காணத்தில் நேற்று நடந்த கலவரத்தால் நண்பகலில் இருந்தே இசிஆர் சாலையில் போக்குவரத்து கடும் பாதிப்புக்குள்ளானது. புதுச்சேரியில் இருந்து மரக்காணத்தை கடந்து மாமல்லபுரம், சென்னை உள்ளிட்ட இடங்களுக்கு செல்ல வேண்டிய அனைத்து வாகனங்களையும் புதுச்சேரி ராஜிவ்காந்தி சிக்னல் அருகிலேயே போலீசார் மறித்து திண்டிவனம் பைபாஸ் பாதையில் திருப்பி விட்டனர். ஏராளமான பாமகவினர் புதுவையிலேயே முகாமிட்டுள்ளனர். மாநாட்டில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் வந்துள்ளதால், அவர்கள் திரும்பிச் செல்லும்போது அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.


300 வாகனங்கள் உடைப்பு

சித்திரை திருவிழாவுக்கு சென்ற பாமகவினர், புதுச்சேரி எல்லையான முள்ளோடை, காலாப்பட்டு கனகசெட்டிக்குளம் பகுதியில் குடித்து விட்டு சாலையிலேயே பாட்டில்களை உடைத்து கூச்சலிட்டனர். மேலும், அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களுடன் தகராறு செய்தனர். இது குறித்து பாகூர், காலாப்பட்டு போலீசுக்கு தகவல் அளிக்கப்பட்டது. உடனே, பாகூர், காலாப்பட்டு பகுதி மது கடைகளுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

இதற்கிடையே சாலையோர ஓட்டல் உள்ளிட்ட கடைகளில் பொருட்களை வாங்கிக்கொண்டு பணம் கொடுக்காமல் ரகளையில் ஈடுபட்டதால் இசிஆரில் பெரும்பாலான கடைகள் மூடப்பட்டன. பஸ்கள் மற்றும் ஆட்டோக்கள் இயங்கவில்லை. கோட்டக்குப்பத்தில் உள்ள கடைகளுக்கு சென்று சாப்பிட்டு விட்டு பணம் தராமல் சென்ற தகராறு முற்றி மோதல் ஏற்பட்டது. குப்பத்தில் இருந்தவர்கள் ஒன்று திரண்டு, சுமார் 300 வாகனங்களை அடித்து நொறுக்கினர்.

http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=47724

UNMAIKAL said...

அரசின், பத்திரிக்கைகளின் அதிர்ச்சியான விஷவண்ட‌வாளங்கள்.

பத்திரிக்கைகளும் போலீஸாரும் இதை கேடுகெட்ட விஷமத்தனமாக‌ இந்திய முஸ்லீம்களுக்கு எதிராக‌ சதி வலை பிண்ணி எவ்வாறு ஈரை பேனாக்கி பேனை பெருமாளாக்கி அப்பாவிகளை இல்லாத பயங்கரவாதிகளாக உருவகப்படுத்தி நாட்டில் இனக்கலவரங்களை உருவாக்க கங்கணம் கட்டி கொண்டு திரிகின்றன என்பது வெட்ட வெளிச்சம்.


CLICK >>>> இந்திய முஸ்லீம்களுக்கு எதிராக‌ அரசின், பத்திரிக்கைகளின் சதி வலை <<< TO READ.

jaisankar jaganathan said...

சுவனம்,
இஸ்லாம் என்ற தவறான மதம் ஒரு நாள் குமரியிலிருந்து மட்டுமல்லாமல் உலகத்தை விட்டே ஓடும். இஸ்லாமிய பேஷன் முடிஞ்சு போச்சு

Anonymous said...

பூனை கண்ணை மூடிக்கிட்டு பூலோகம் இருன்டு போச்சுன்னு சொல்லிச்சாம். ஏம்பா ஜொய்சங்கரா கண்ணை தொறந்து உலகத்தைப் பாருப்பா.

Anonymous said...

சகோ ஜெய், இறைவன் நாடினால் நீங்களும் இஸ்லாத்தைப்பற்றி அறிந்து தூய இஸ்லாத்தை மற்றவர்களுக்கும் எத்தி வைக்கும் காலம் மிக விரைவில் வரும்.

Anonymous said...


http://elections.com.pk/contents.php?i=9

http://en.wikipedia.org/wiki/Pakistani_general_election,_2013

பாகிஸ்தானில் அடுத்த மாதம் (11/05/13) நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில், ஹிந்துக்களுக்கு கணிசமான தொகுதிகளை "ரிசர்வ்" தொகுதிகளாக அறிவிக்கப்பட்டு, அங்கு முஸ்லிம்கள் போட்டியிடவே முடியாத அளவுக்கு ஹிந்துக்களுக்கு அரசியல் அதிகாரத்தில் பங்கு கொடுத்துள்ளது, பாகிஸ்தான் அரசு.

மொத்தமுள்ள 342 நாடாளுமன்ற (National Assembly) தொகுதிகளில், 10 தொகுதிகள் ஹிந்துக்களுக்கு ஒதுக்கப் பட்டுள்ளது.

மாகாண வாரியாக நடை பெறும் (PROVINCIAL ASSEMBLIES) சட்டமன்றத் தேர்தல்களிலும் "ஹிந்து ரிசர்வ்" தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

இது தவிர, 104 உறுப்பினர்களை கொண்ட "செனட் சபை"யிலும் 10 ஹிந்துக்கள் இடம் பெறும் வகையில், பாகிஸ்தானின் அரசியல் சாசனத்தின் 18வது பிரிவில் திருத்தம் கொண்டு வரப்பட்டு, நீதிமன்றமும் அதனை அங்கீகரித்து விட்டது.

மேலும், பாகிஸ்தானின் 1975 ம் வருடத்திய தேர்தல் சட்டத்தின் 51வது பிரிவிலும் திருத்தம் செய்யப்பட்டு விட்டது.

4 மாகாணங்களில் உள்ள மொத்த சட்டசபை தொகுதிகள்: 577., அதில் "ஹிந்து ரிசர்வ்" தொகுதிகளின் எண்ணிக்கை 23

பஞ்சாப் மாகாணத்தில் 8, சிந்துவில் 9, NWFP-ல் (பெஷாவர்) 3, பலூசிஸ்தானில் 3 என, மொத்தம் 23 தொகுதிகளில் முஸ்லிம்கள் போட்டியிடவே முடியாது.

jaisankar jaganathan said...

//சகோ ஜெய், இறைவன் நாடினால் நீங்களும் இஸ்லாத்தைப்பற்றி அறிந்து தூய இஸ்லாத்தை மற்றவர்களுக்கும் எத்தி வைக்கும் காலம் மிக விரைவில் வரும்.//

சாரி,
எனக்கு கேங் ரேப்ல இண்டரஸ்ட் இல்லை

சுவனப் பிரியன் said...

//எனக்கு கேங் ரேப்ல இண்டரஸ்ட் இல்லை //

மோடி தலைமையில் குஜராத்தில் பண்ணிய கேங் ரேப்பை சொல்கிறீர்களா?

Anonymous said...

சுவனம் இதுக்கு பதில் சொல்லுங்களேன்......ஜிகாத்பார்ப்போம்

Anonymous said...

சுவனம் இதுக்கு பதில் சொல்லுங்களேன்......ஜிகாத்சுவனம்

Anonymous said...

உந்த காவிப் பன்னாடைக் கூட்டத்துக்கு இத விட்டா வேற வேலையே கிடையாது.”மக்கள் சேவை மகேசன் சேவை” என்கிறது இந்து மதம்.இதில் மக்கள் என்பது உலக மக்களே ஒழிய இந்துக்கள் கிடையாது.ஆனா நம்ம காவிப் பார்டிய பொறுத்த வரை கொலைய தான் மக்கள் சேவை எண்டு நினைச்சிடிருக்காங்க போல

jaisankar jaganathan said...

அன்பு சுவனப்பிரியன்,
தங்களுக்கு வேலைப்பளு அதிகம் போல. விரைவில் புதிய பதிவு போட வாழ்த்துக்கள்