Followers

Thursday, April 11, 2013

போலியோ ஒழிப்புக்கு 30 மில்லியன் டாலர்!

போலியோ ஒழிப்புக்கு 30 மில்லியன் டாலர்!'வலீத் பின் தலால் அறக்கட்டளையின்' தலைவர் இளவரசர் வலீத் பின் தலால் உலக மக்களிடமிருந்து போலியோவை முற்றிலுமாக ஒழித்துக் கட்ட தனது பங்காக 30 மில்லியன் டாலரை நன்கொடையாக தர முன் வந்துள்ளார். இந்த நல்ல முயற்சியை மைக்ரோ சாஃப்ட் நிறுவனர் பில்கேட்ஸோடு இணைந்து செயல்படுத்த இளவரசர் முன் வந்துள்ளார். இதற்கான ஒப்பந்தத்தில் இளவரசர் வலீத் பின் தலாலும், பில்கேட்ஸூம் கையெழுத்திட்டனர்.

'முன்னேற்றத்தைக் கொண்டாடுவோம்: உயிர்களைக் காப்போம்' என்ற உறுதி மொழியோடு இந்த அமைப்பானது வரும் ஏப்ரல் 24 ந்தேதி அபுதாபியில் ஒரு கருத்தரங்கை ஏற்பாடு செய்துள்ளது. ஐநா செயலாளர் பான்கிமூனும் இந்த கருத்தரங்கில் கலந்து கொள்கிறார். இந்த கருத்தரங்கில் உலக தலைவர்கள், நன்கொடையாளர்கள் என்று பலரும் கலந்து கொள்கின்றனர். 2013 லிருந்து 2018 க்குள் உலகில் போலியோவை முற்றிலுமாக ஒழித்துக் கட்ட வேண்டும் என்பது இம்மாநாட்டின் நோக்கங்களில் ஒன்று.

நம் நாட்டு அரசியல்வாதிகளின் கோடிக்கணக்கான டாலர்கள் சுவிஸ் வங்கியில் எவருக்கும் பயனளிக்காமல் உறங்கிக் கொண்டிருக்கிறது. கொள்ளையடித்த அந்த பணங்களை எல்லாம் இது போன்ற நல்ல காரியத்துக்கு பயன்படுத்தினால் செய்த தவறுகளுக்கு பிராயச்சித்தமாவது கிடைக்கும். பெரிதாக ஒன்றும் செய்து விட வேண்டாம. இந்திய மக்கள் அனைவருக்கும் கழிவறை இல்லாத வீடுகளுக்கு இலவசமாக கழிவறை கட்டிக் கொடுத்தாலே போதுமானது. என்னங்க....நான் சொல்றது சரிதானே!

ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் நைஜீரியா ஆகிய நாடுகளில் கடுமையாகப் பரவும் ஒரு நோயாகவே போலியோ இருக்கிறது. நம் நாட்டிலும் சுகாதார குறைபாடுகளினால் இந்நோய் பரவும் அபாயம் அதிகமாகவே உள்ளது. அத்துடன் போலியோ ஒழிக்கப்பட்டு விட்டதாக அறிவிக்கப்பட்ட சில நாடுகளிலும் அது மீண்டும் பரவியுள்ளது.போர் காரணமாகவும், தொற்று நோய் தடுப்பு மருந்துகள் மீது போதுமான நம்பிக்கை இல்லாமை காரணமாகவும் சில நாடுகளில் மிகச் சிறிய அளவிலான குழந்தைகளுக்கு மாத்திரமே போலியோ தடுப்பு மருந்து கொடுக்கப்பட்டுள்ளது.போலியோவை ஒழிப்பதற்கான உலக முயற்சி தோல்வியடையுமானால், அந்த நோய் மீண்டும் உலக அளவில் பரவும் நிலை உருவாகும்.எனவே போலியோ பாதிப்பிற்குள்ளாகி இருக்கும் அனைத்து நாடுகளும், தமது நாட்டு குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு மருந்தை கட்டாயமாக கொடுக்க வேண்டும் என்று உலக சுகாதார நிறுவன அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.போலியோ பாதிப்புக்குள்ளான சிறுவர்கள்: சிறுமியர்:கழிவறை கட்டுவதை விட செல் போன்களை வாங்குவதில்தான் நமது மக்கள் ஆர்வமாக உள்ளனர் என்று நமது மத்திய மந்திரியே வருத்தப்படும் அளவுக்குத்தான் நமது நாட்டின் நிலைமை இருக்கிறது. செல் போன்களை பிறகு வாங்கிக் கொள்வோம்: முதலில் ஒவ்வொரு வீட்டுக்கும் சுகாதாரமான கழிவறை வசதிகளை ஏற்படுத்தி விட்டு பிறகு வித விதமான செல்போன்களால் நமது பேச்சுக்களை தொடர்வோம். :-)
-------------------------------------------

போலியோ (இளம்பிள்ளை வாதம்)

போலியோ நோய்தொற்று முழு உடலையும் பாதிக்கக்கூடியது. ஆனாலும் இந்நோய் எப்போதும் நரம்புகள் மற்றும் தசைகளை பாதிக்கிறது.

காரணங்கள்

வைரஸ் நோய் தொற்றினால் போலியோ ஏற்படுகிறது மனிதனின் மலம் மற்றும் கழிவுகளில் போலியோ வைரஸ் காணப்படும். இவ்வைரஸினால் மாசுபட்ட உணவுகளை உட்கொள்ளும் போது போலியோ பரவுகிறது. மனித மலம் கழிவுகள் மூலம் மாசுபட்ட குடிதண்ணீர் அல்லது கிணறு/குளங்கள்/ஏரிகள் போன்றவற்றில் நீரில் நீந்தும் போதோ, குளிக்கும் போதோ அல்லது குடிக்கும் போதோ போலியோ வளர்ந்த பிள்ளைகள் மற்றும் வாலிபர்களைகளிடம் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. பெரும்பாலான நேரங்களில், இவ்வகை வைரஸ் மலத்திலிருந்து வாய் வழியாகவே ஒரு நபரிடமிருந்து மற்ற நபருக்கு பரவுகிறது.

இவ்வகை வைரஸ் மூக்கு அல்லது வாய் வழியாக நுழைந்து, பின்னர் குடல் பகுதியை சென்றடைகிறது. குடல் செல்களில் எண்ணிக்கையில் பெருக்கம் அடைகின்றது. பின்னர் இவ்வைரஸ்கள் மலத்தின் மூலம் வெளியேற்றப்படுகிறது (சில வாரங்களில்). இவ்வாறு வாழ்க்கை சுழற்சியை புதுப்பித்து, முழு சமுதாயத்திற்கும் ஆபத்தினை விளைவிக்கிறது.

டாக்டர் பெஞ்சமின் சாண்ட்லர் என்பவர் ஒரு ஊட்டச்சத்து நிபுணர். இவர் போலியோ நோய் பற்றி பல ஆய்வுகள் செய்தார். 1951 இல் இவர் தன்னுடைய ஆய்வு முடிவுகளை வெளியிட்டார். அதில் போலியோ நோயை தூண்டுவதற்கு கீழ்க்காணும் மூன்று முக்கிய காரணங்களை கூறுகிறார்.

1. தட்ப வெப்பம்: வெயில் காலத்தில்தான் போலியோ நோய் பரவுகிறது. அதிக அளவில் சர்க்கரை உட்கொள்வதாலும் போலியோ தடுப்பு மருந்து கொடுத்த பின்பும் போலியோ நோய் அதிகம் பரவுகிறது. வெயில்காலத்தில் நீச்சல் குளத்தில் நீர் குளிர்ந்திருப்பதும் குழந்தைகளை குளிர்ந்த புல் தரையில் அமர வைப்பதும் கூட போலியோ நோய்த்தாக்கம் ஏற்படுவதற்கான காரணங்களாகும்.

2. உடற்பயிற்சி: அளவான அல்லது தீவிரமான உடற்பயிற்சி.

3. தாகம் : குளிர்பானங்கள் பருகுவது, ஐஸ்க்ரீம் மற்றும் இனிப்பு பானங்கள் பருகுவது, சர்க்கரை அளவு குறைவதால் உடல் திசுக்களில் ஏற்படும் மாற்றம்.

சர்க்கரையை உணவில் அதிகமாக சேர்த்துக் கொண்ட நாடுகளில் எல்லாம் போலியோ நோய் பரவி வந்தபோது சர்க்கரையை மிகவும் குறைந்த அளவில் சேர்த்துக்கொண்ட நாடுகளில் இந்நோய்த் தொற்று சுத்தமாக இல்லாதிருந்தது. எவ்வளவுக்கெவ்வளவு உணவில் சர்க்கரையை அதிகமாகச் சேர்த்துக் கொண்டார்களோ அவ்வளவுக்கவ்வளவு நோய்த்தொற்றும் அதிகமாக இருந்தது என்கிறார் டாக்டர் சாண்ட்லர்.

அமெரிக்காவில் போலியோ நோய்த்தடுப்பு நடவடிக்கையாக போலியோ தடுப்பு மருந்து பரவலாக கொடுக்கப்பட்டதன் விளைவாக போலியோ நோயாளிகளின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக உயர்ந்தது. 1954இல் 273 ஆக இருந்த எண்ணிக்கை தடுப்பு மருந்து கொடுத்ததன் விளைவாக 1955இல் 2027 ஆக உயர்ந்தது. அதாவது 642 சதவீதம் உயர்ந்தது. தி பெடரல் சென்டர்பார் டிஸ்ஸீஸ் கண்ட்ரோல் என்னும் அமைப்பு அமெரிக்காவில் இன்று போலியோ நோய்த்தொற்று இருப்பதற்கான முக்கிய காரணம் உயிருள்ள போலியோ நோய்க்கிருமிகளை நோய்த் தடுப்பு மருந்தாக பயன்படுத்தியதுதான் என்று கூறுகிறது. 1973ஆம் ஆண்டிற்கும் 1983ஆம் ஆண்டிற்கும் இடைப்பட்ட காலத்தில் அமெரிக்காவில் போலியோவினால் பாதிக்கப்பட்டவர்களில் 87 சதவீதம் பேர்கள் போலியோ தடுப்பு மருந்து எடுத்துக்கொண்டவர்கள். மிகவும் சமீபத்தில் மேற்கொண்ட ஆய்வின்படி 1979 ஆம் ஆண்டிற்கு பிறகு போலியோவினால் தாக்கப்பட்ட அனைவருமே (இரண்டு பேர்களைத் தவிர) தடுப்பு மருந்து எடுத்துக் கொண்டவர்கள்தான். (ஆதாரம் : ஹோமியோபதி லின்க்ஸ் -பிப்ரவரி 2003).

மேற்கண்ட ஆதாரபூர்வமான விஷயங்களை கருத்தில் கொண்டு கீழ்க்காணும் நடவடிக்கைகளை இந்திய அரசாங்கம் உடனடியாக எடுக்கவேண்டும்.

நம் நாட்டில் போலியோ நோய்த்தடுப்பு நடவடிக்கையாக ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து ஒரே நாளில் நாடு முழுவதும் கொடுக்கப்பட்டு வருகிறது. போலியோ தடுப்பு மருந்து கொடுப்பதால் போலியோ நோய்த்தொற்று ஏற்பட வாய்ப்புள்ளதா என்பதை விரைவில் கண்டறியவேண்டும். வாய்ப்புள்ளது என்பது உறுதி செய்யப்பட்டால் போலியோ தடுப்பு மருந்து கொடுப்பதை உடனடியாக நிறுத்தவேண்டும்.

மக்களிடையே விழிப்புணர்ச்சி ஏற்படுத்தும் வகையில் “உணவில் சர்க்கரையின் அளவை வெகுவாக குறைத்துக் கொள்ளவேண்டும் என்பதையும் வைட்டமின் ‘சி’ மிகுந்த உணவை தினமும் தவறாது எடுத்துக் கொள்ளவேண்டும்” என்பதையும் வானொலி மற்றும் தொலைக்காட்சியின் வாயிலாக பிரச்சாரம் செய்யவேண்டும்.

- நன்றி : அப்ரோச் ஹோமியோ நண்பன் - அக்-2003


போலியோ பரவ மேலும் சில காரணங்கள்:

சிறுபிள்ளைகளுக்கு போலியோ ஏற்படும் அதிக ஆபத்து உள்ளது. கழிவறைகளில் மலம் கழிக்கும் பழக்கம் கற்றறியாத பிள்ளைகளை குறிப்பாக பாதிக்கிறது. போலியோ தடுப்பு ஊசி எடுத்துக் கொள்ளாத பெரியவர்கள். இந்நோய் கண்ட நபரின் மலத்தின் மேல் மொய்க்கும் ஈக்கள் உண்ணும் உணவின் மேல் உட்கார்ந்து உணவை மாசுபடச் செய்யும் சூழல் உள்ள பகுதிகள். இந்நோய்க் கிருமியுள்ள குடிதண்ணீர் (கழிவு நீர் தேங்கியுள்ள பகுதிக்கு அருகாமையில்). எய்ட்ஸ் மற்றும் புற்றுநோய் போன்றவை ஏற்பட்டு உடலின் நோய் எதிர்ப்பு தன்மை குறைந்து காணப்படும் போது. சுகாதாரமாக நமது சுற்றுப்புறத்தை வைத்துக் கொண்டாலே ஓரளவு இந்நோயைக் கட்டுப்படுத்தி விடலாம.

'நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்'11 comments:

jaisankar jaganathan said...

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்
உண்மை. தமிழ்கத்தில் போலியோவை ஒழிச்சுட்டாங்கன்னு படிச்சேனே

சுவனப் பிரியன் said...

//தமிழ்கத்தில் போலியோவை ஒழிச்சுட்டாங்கன்னு படிச்சேனே //

முழுதாக ஒழிக்கப்பட்ட நாடுகளிலும் சுகாதார சீர்கேட்டால் திரும்பவும் போலீயோ பரவுவதாக படித்தேனே!

Anonymous said...

இறைவன் மனிதர்களை படைக்கும்போதே போலியோ இல்லாமல் படைக்க முடியாதா? போலியோ கிருமிகளையும் படைக்க வேண்டயிருககு அத அழிக்க வழியையும் கண்டுபிடிக்க வேண்டியிருக்கு. பாவம் இறைவன்.

சுவனப் பிரியன் said...

//இறைவன் மனிதர்களை படைக்கும்போதே போலியோ இல்லாமல் படைக்க முடியாதா? போலியோ கிருமிகளையும் படைக்க வேண்டயிருககு அத அழிக்க வழியையும் கண்டுபிடிக்க வேண்டியிருக்கு. பாவம் இறைவன். //

எல்லோரையும் நல்லவர்களாகவே இறைவனால் படைக்க முடியாதா? சொர்க்கம் நரகம் எதற்கு? என்றும் கேட்கலாம். மனிதனின் கேள்விக்கு எல்லை ஏது?

நம் நாட்டில் வருடா வருடம் பரீட்சை எதற்கு. எல்லோரையும் பாஸாக்கி விடலாமே என்றும் கூட கேட்பீர்கள். :-)

Jenil said...

//நம் நாட்டில் வருடா வருடம் பரீட்சை எதற்கு. எல்லோரையும் பாஸாக்கி விடலாமே என்றும் கூட கேட்பீர்கள். :-)
//

This is a nonsense comparison most of the religious people ask... We exams because we need to prepare the young generation to the WORLD which is NOT under our control..For example hunger is NOT in our control so we need to train the young generation in agriculture... But the so called GOD is all powerful if he really loves people he would have created them without sin and without problems but he is a f**king sadist.. He creates the WORLD with misseries and introduce people who have emotions and make them suffer and enjoys this from sitting in Arsh...He makes small kids infected with Polio and enjoys the scene of their suffering... What difference does he makes from Chenkiz Khan who also had the similar character..... The point is there can't be any GOD if there is one then he is the biggest f**king sadist...

Jenil said...

//நம் நாட்டில் வருடா வருடம் பரீட்சை எதற்கு. எல்லோரையும் பாஸாக்கி விடலாமே என்றும் கூட கேட்பீர்கள். :-)
//

This is a nonsense comparison most of the religious people ask... We exams because we need to prepare the young generation to the WORLD which is NOT under our control..For example hunger is NOT in our control so we need to train the young generation in agriculture... But the so called GOD is all powerful if he really loves people he would have created them without sin and without problems but he is a f**king sadist.. He creates the WORLD with misseries and introduce people who have emotions and make them suffer and enjoys this from sitting in Arsh...He makes small kids infected with Polio and enjoys the scene of their suffering... What difference does he makes from Chenkiz Khan who also had the similar character..... The point is there can't be any GOD if there is one then he is the biggest f**king sadist...

சிராஜ் said...

ரொம்ப நல்ல விஷயம்...

இதற்காக தலால் அவர்களையும், பில்கேட்ஸ் அவர்களையும் மனம் திறந்து பாராட்டலாம்....

சுவனப் பிரியன் said...

அகமதாபாத்: குஜராத் மாநிலத்தில் நிலவி வரும் குடிநீர் பற்றாக்‌குறையை எதிர்க்கட்சிகள் பிரதானப்படுத்துவதால் மாநில அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. மாநிலத்தில் உள்ள 10 மாவட்டங்களை சேர்ந்த 3 ஆயிரத்து 918 கிராமங்கள் முற்றிலும் குடிநீ்ர் பற்றாக்குறையால் தவித்து வருகிறது. மாநிலத்தின் சவுராஸ்டிரா மகேந்திராமஸ்ரூ, உட்பட்ட சில பகுதிகளி்ல் கடுமையான குடிநீர் பஞ்‌சம் நிலவுவதால் மக்கள் போராட தயாராக உள்ளதாக
கூறப்படுகிறது. மேலும் 2014-ல் நடைபெற உள்ள பார்லி‌மெண்ட்டிற்கான தேர்தல் பிரசாரத்தில் இதனை பிரதானப்படுத்த முயற்சித்து வருகிறது காங்கிரஸ் கட்சி. இதன் ஒரு பகுதியாக மாநில காங்கிரஸ் சட்டசபை தலைவர் சங்கர்சிங் வகேலா, மாநில தலைவர் அர்ஜூன் மோத்வாடியா, மாநில பொறுப்பாளர் மோகன பிரகாஷ் ஆகியோரை கொண்ட பேரணி நடத்த முடிவு செய்துள்ளது.

http://www.dinamalar.com/news_detail.asp?id=689153

Anonymous said...

வருடாவருடம் பரீட்சை வைப்பவர்கள் மாணவர்களை படைத்தவர்கள் அல்லர். தகுதியான மாணவர்களை தரப்படுத்தும் பொறுப்பில் இருப்பவர்கள். நீங்கள் கூறும் இறைவன் உலகம் எல்லாம் படைத்தவன். எலலாவற்றையும் இயக்கி கொண்டிருப்பவன். அவன் ஏன் போலியோ கிருமியை படைக்க வேண்டும். மனிதர்களின் கேள்விகளுக்கு உண்மையை ஆழ்ந்து தேடினால் விடையுண்டு. உங்களைப்போல் இறைவன் இவன்தான் அவன் மனிதர்களை அவன் சொல்படி நடக்க கட்டளையிடுகிறான் அப்படி நடந்தால் சொர்க்கம் தருவான் என்ற என்ற ஒற்றை நம்பிக்கை மதவாதிகளால் பதில் கூற முடியாது.

சுவனப் பிரியன் said...

பிறப்பு, திருமணம், இறப்பு போன்ற அடிப்படை மனித நிகழ்வுகளில் ஏதாவது ஒரு மதத்தின் அடிப்படையிலேயே தங்களை வழி நடத்திக்கொள்கின்றனர். அப்படி இல்லை என ஒரு நாத்திகர் சொல்வாரானால் பிறப்பு முதல் இறப்பு வரையிலான தனது வாழ்க்கை முறை எந்த கொள்கை அடிப்படையில் அமைந்திருக்கிறது என பொதுவில் கூறப்பட்டும்.

உள்ளூர் முதல் உலக வர்த்தக மையம் வரை ஏற்படும் பிரச்சனைகளுக்கு சமூகத்தையும், அச்சமூகம் சார்ந்திருக்கும் மதத்தையும் குறை கூறி முக நூல் பக்கத்திலும், தளங்களிலும் தம் எண்ணங்களுக்கு எழுத்து வர்ணம் அடிக்கும் நாத்திகர்கள், அதற்கான தீர்வாக தாம் கொண்ட கொள்கை என்ன சொல்கிறது.. என்பதை பதிவு செய்தார்களா..? தினம் தினம் நடைமுறை வாழ்வில் நாம் காணும் ஆயிரமாயிரம் பிரச்சனைகளுக்கான நிரந்தர தீர்வு நாத்திக கொள்கையில் (?) மட்டுமே சாத்தியம் என்றாவது பகிரங்கப்படுத்துவார்களா..?

தம் நிலை குறித்து எங்கும் விவாதிக்க முற்படாமல், எதிர் தரப்பை மட்டுமே விமர்சித்து, விவாதிக்க முற்படுவதே நாத்திகத்தின் "லாவக போக்கு". இனி வரும் காலங்களிலாவது நாத்திகர்கள் தங்கள் கொள்கை கோட்பாடுகளை தெளிவாக பிரகடனப்படுத்தட்டும். அது எப்படி மனித வாழ்க்கை முழுவதற்கும் ஏற்புடையது என்பதை விளக்கி கட்டுரை எழுதட்டும். எதிர் கருத்துக்கள் இருந்தால் அதுக்குறித்து விவாதிக்க அழைப்பு விடட்டும். அப்போது உடைந்து போகும், பகுத்தறிவு முலாம் பூசப்பட்ட பானைகள்...

தனிமனித வாழ்வியல் கொள்கைகளையும், சமுகத்திற்கான சமமான கோட்பாடுகளையும் கொண்டிராத நாத்திகத்தை இனியாவது பகுத்தறிவோடு யாரும் முடிச்சிடாதீர்கள். இல்லையேல் பகுத்தறிவு என்பதற்கு அகராதியில் பொருள் மாற்றம் செய்ய வேண்டி வரும்.

http://www.naanmuslim.com/2013/04/blog-post.html

இங்கு பின்னூட்டமிட்டிருக்கும் நாத்திக அன்பர்கள் இந்த பதிவையும் முழுமையாக படிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

பிறகு நேரம் கிடைக்கும் போது விரிவாக பேசுவோம்.

Anonymous said...

படிச்சுட்டேன். அப்படியே காப்பி பண்ணி போட்டுருக்கீங்க. நீங்கள்வழக்கமா எதிர்கொள்ளும் நாத்திகன் நான் இல்லை.நடைமுறை வாழ்வில் அந்தந்த இடம், காலம், சூழ்நிலைக்கேற்ப ஏற்பட்ட பழக்க வழக்கஙகளை மதங்கள் சுவீகரித்துக்கொள்கின்றன. நிற்க, மதங்களை படைத்தவன் மனிதன்.கடவுள் அல்ல அவனுக்கு அது தேவையுமில்லை,தப்பித்தவறி மனிதர்களை வணங்கிவிட்டால் தண்டித்துவிடமாட்டான்.மனிதர்களுக்குத்தான் தன்னை மதிக்காதவனை அழிக்கத்துடிககும் கெட்ட குணம் இருக்கும். இறைவன் என்ற ஒருவன் இருந்தால் அவனுக்கு அப்படிப்பட்ட குணம் இருக்காது என்று உணருங்கள்.நன்றாக அவரவர்கள் மதப்படி வணங்குங்கள். வணங்காதர்வர்களுக்கு நரகம் என்று சொல்லாதீர்கள்.தேவன், சாத்தான், அரக்கன், ஆதாம், ஏவாள்,அவதாரங்கள்,சொர்கம்,நரகம் போன்றவை எல்லாம் அக்கால மனிதர்களின் அறிவு நிலைக்கேற்ப நீதிக்காக சொல்லப்பட்ட கதைகள் என்று உணருங்கள். சக மனிதரை அன்பு செய்வோம். கடவுளை உள்ளே தேடுவோம்.