Followers

Tuesday, April 23, 2013

ஈ.வெ.ராமசாமி பெரியார் ஒரு வஹாபியா?

ஈ.வெ.ராமசாமி பெரியார் ஒரு வஹாபியா?



'எங்க ஆளுங்க மாரியம்மனுக்கு தேர் இழுத்தா, உங்க ஆளுங்க நாகூர் பாவாவுக்கு கூடு இழுக்கிறீங்க...அட வெங்காயங்களா...நீங்க எல்லாரும் எப்பய்யா திருந்தப் போறீங்க....'

----------------------------------------------------------------

என்னைப் போன்ற ஆட்கள் நாகூர் சந்தனக் கூடு இழுக்காதீங்கப்பா, தர்ஹாவுக்கு போகாதீங்கப்பா, பல தெய்வ வணக்கத்தை விடுங்கப்பா, தட்டு தாயத்து என்று மூடப் பழக்கங்களிலிருந்து விடுபடுங்கப்பா, சாதி ஏற்றத் தாழ்வு கிடையாதுப்பா, சாதிகளே கிடையாதுப்பா,மாரியம்மன் திருவிழா மாதிரி அல்லா சாமி பண்டிகை எல்லாம் கொண்டாடாதீங்கப்பா, பெண்ணிடம் வரதட்சணை வாங்காதீங்கப்பா, பெண் குழந்தையை வறுமைக்கு பயந்து ஸ்கேன் பண்ணி அழிக்காதீங்கப்பா, சகோதர மதத்தவர்களோடு அன்போடும் பாசத்தோடும் பழகுங்கப்பா என்று பதிவு எழுதினால் எங்களை வஹாபிகள் என்று பலரும் குறை கூறுகினறனர். இன்று நாங்கள் என்ன சொல்கிறோமோ அதைத்தான் 80 வருடங்களுக்கு முன்பு பெரியாரும் சொல்லியிருக்கிறார். சந்தனக் கூடு எடுப்பதை அன்றே மிகக் கடுமையாக எதிர்த்திருக்கிறார். தேவையில்லாத விருந்துகளுக்கு செலவு பண்ணும் பணத்தை ஏழை மாணவ மாணவிகளின் கல்வி செலவுக்கு பயன்படுத்தச் சொல்லி முஸ்லிம்களுக்கு அறிவுறுத்துகிறார். எல்லா பாவத்தையும தெரிந்தே செய்து விட்டு மக்காவுக்கு போனா எல்லாமே சரியாகி விடும் என்ற தவறான எண்ணத்தில் இருக்கும் பல முஸ்லிம்களை சாடுகிறார். வசதியில்லாத பலர் கடன் வாங்கிக் கொண்டு மக்காவுக்கு செல்வது தேவையில்லாதது என்று அறிவுறுத்துகிறார். அதுவும் முஸ்லிம்களுக்கு மத்தியில் ஒரு மீலாது மேடையிலேயே கண்டிக்கிறார். பெரியாருக்கு தெரிந்த இஸ்லாம் கூட இன்று பல தலைமுறைகளாக இஸ்லாத்தில் இருக்கும் பலருக்கு தெரிவதில்லை. என்ன அழகாக பெரியார் இஸ்லாத்தை அன்றே விளங்கியிருக்கிறார் என்பதை முழு உரையையும் கேட்டுத் தெளிவுறுங்கள்.

இனி பெரியாரின் பேச்சைக் கேட்போம்....

சகோதரர்களே! உங்கள் மத சம்பந்தமான ஒரு சிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு என்னைத் தலைமை வகிக்க அழைத்ததற்கு நான் நன்றி செலுத்துகிறேன். என்னை அநேகர் மத துவேஷி என்றும் கடவுள் மறுப்புக்காரன் என்றும் சொல்லுவார்கள். இந்த ஊரிலும் பலர் சொல்லுவார்கள். அப்படியிருக்க நீங்கள் என்னை அழைத்து மிகவும் தைரியமென்றே சொல்ல வேண்டும். எப்படி இருந்தாலும் நான் இந்த மாதிரி சந்தர்ப்பங்களில் எனது அபிப்பிராயத்தை வெளியிட பின்வாங்குவதே இல்லை. சென்ற வருஷத்திலும் இதேமாதிரி கொண்டாட்டத்தில் நான் பேசி இருக்கின்றேன். அதிலும் பல இந்து முஸ்லீம்களுக்கு அதிருப்தி இருந்திருக்கலாமானாலும் அநேகருக்கு திருப்தி ஏற்பட்டு முஸ்லீம்களால் அல்லாசாமிப் பண்டிகை நிறுத்தப்பட்டதற்கு நான் மகிழ்ச்சி அடைகின்றேன்.

ஆனால் என்பேரில் கோபித்துக் கொண்ட இந்துக்கள் இவ்வூரில் தங்கள் மாரியம்மன் பண்டிகையைக்கூட நிறுத்திவிட சம்மதிக்காமல் மிகுதியும் காட்டுமிராண்டித்தனமான முறையிலேயே நடத்துகின்றார்கள். இப்படியேதான் எங்கும் நடைபெறுகிறது. இந்துக்களை விட இஸ்லாமானவர்கள் அறிவுக்கு மதிப்புக் கொடுப்பவர்கள் என்பதும் நியாயத்தை ஒத்துக்கொண்டு அதன்படி உடனே நடப்பவர்கள் என்பதும் இதிலிருந்து ஒருவாறு உதாரணமாய் விளங்குகிறது. ஆனால் இன்னும் அநேக விஷயங்களில் திருத்துப்பாடு ஆகவேண்டி இருக்கிறது என்பதை மறந்து விடாதீர்கள். முஸ்லீம் சீர்திருத்தத் தலைவர்கள் இதை வலியுறுத்திக்கொண்டே வருகின்றார்கள். கூண்டு திருவிழா முதலிய வற்றையும் நிறுத்தி விடுங்கள். இதனால் எல்லாம் இஸ்லாம் கொள்கைகள் கெட்டுப்போகாது. இவை இருந்தால் தான் பரிகாசத்திற்கிடமானதாகும்.

இந்த முக்கியமான நாள் என்பதில் வேலூர் மௌல்வி சாயபு அவர்கள் குர்ஆனின் மேன்மையையும் திரு. முகமது நபி அவர்களின் உபதேசத்தின் பெருமையையும் பற்றி சொன்னார்கள். என்னால் அந்தப்படி சொல்ல முடியாது. ஏனெனில் நான் அவற்றை படித்துப் பார்த்தவனல்ல. அந்த வேலைக்கு நான் போவதுமில்லை. நான் அதற்கு அருகனுமல்ல. அப்படி ஏதாவது நான் படித்து அதைப்பற்றி இங்கு பேசுவது என்பதும் அதிகப்பிரசங்கித்தனமேயாகும். ஏனெனில் பெரிய பெரிய மௌல்விகள் இருக்கும் போது அவர்கள் முன் நான் என்னதான் படித்தாலும் என்ன பேச முடியும்? அன்றியும் புஸ்தகத்தில் இருப்பதை விட பிரத்தியக்ஷத்தில் உள்ளதைப் பற்றிப் பேசுவதே பலனளிக்கக்கூடும். நான் இந்த சந்தர்ப்பத்தை எதற்கு உபயோகித்துக் கொள்ள கூடுமென்றால் மக்களிடம் பிரத்தியக்ஷத்தில் காணும் விஷயங்களைப் பற்றியும் இன்னமும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்கின்ற விஷயத்தைப்பற்றியும் பேசுவதும் பயன்படுவதாகும் என்று கருதுகின்றேன்.

திரு.நபி அவர்களின் இவ்வளவு அருமையான உபதேசம் என்பவற்றில் உலக மக்கள் எல்லாம் பயன்அடையும்படி செய்ய என்ன என்ன செய்யவேண்டும் என்பதற்கு ஆகவே நீங்களும் இந்த நாளை பயன்படுத்திக் கொள்ளப்பார்க்க வேண்டும் என்றே கருதுகிறேன்.

செட்டி முடுக்கா? சரக்கு முடுக்கா?

இஸ்லாம் மார்க்கம் “மக்களுக்கு உபதேசிப்பதிலும் வேதவாக்கியங்களிலும் மேன்மையானதாய் இருக்கின்றது” என்கின்ற திருப்தியானது மனிதசமூகத்திற்கு எல்லாப் பயனையும் அளித்துவிடாது. ஆனால் அதன் தத்துவத்திற்கொப்ப காரியத்தில் அதன் பயனை உலகத்தில் மேன்மையுறச் செய்து மக்களுக்கு நல்ல வழிகாட்டியாகி உலகமக்களை ஒன்றுபடுத்தவும் அனைவரையும் சகோதரத்தன்மையுடனும் இருக்கவும் பகுத்தறிவுடனும், சுயமரியாதையுடனும், சுதந்திரத்துடன் வாழவும் செய்யவேண்டும். எந்தக் கொள்கைக்காரனும் புஸ்தகத்தில் இருப்பதைக்கொண்டு தங்கள் முன்னோர்கள், பெரியார்கள் சொன்னார்கள் என்பதைக் கொண்டு இனி உலகத்தை ஏய்க்க முடியாது.

உலகம் பகுத்தறிவுக்கு அடிமையாகி எதையும் பிரத்தியக்ஷ அனுபவத்தைக் கொண்டு பரீட்சித்து சரிபார்க்க வந்துவிட்டது. அதற்கு துணிந்தும் விட்டது. செட்டி முடுக்கு செல்லாது. சரக்கு முடுக்காய் இருந்தால்தான் இனி செலாவணியாகும். ‘என் சரக்கை பரீக்ஷிக்கலாமா?’ என்கின்ற அடக்குமுறை இனிப்பலிக்காது. ‘அவர் ஒஸ்தியென்று சொன்னார்.’ ‘இவர் ஒஸ்தியென்று சொன்னார்’ ‘ஆண்டவன் சொன்னான்’ என்பதெல்லாம் அனுபவத்திற்கு நிற்காவிட்டால் காரியத்தில் நடந்து காட்டா விட்டால் இனி மதிப்புப்பெற முடியாது. ஆதலால் எந்தச்சரக்கின் யோக்கியதையும் கையில் வாங்கிப்பார்த்துதான் மதிக்க வேண்டியதாகும். அந்த முறையில் இஸ்லாம் கொள்கை என்பதும் முஸ்லீம் மக்களின் நடத்தையைக் கொண்டும் அவர்களது பிரத்தியட்சப்பயனைப் கொண்டும் தான் மதிக்கப் படமுடியும். உலகம் சிரிக்காதா?

இந்துக்கள் தேரிழுப்பதைப் பார்த்து முஸ்லீம்கள் பரிகாசம் செய்து விட்டு முஸ்லீம்கள் கூண்டுகட்டி சுமந்து கொண்டு கொம்பு, தப்பட்டை, மேளம், பாண்டு, பாணம் வேடிக்கைசெய்து கொண்டு தெருவில் போய்க் கொண்டிருந்தால் உலகம் திருப்பிச் சிரிக்கமாட்டாதா? என்று யோசித்துப் பார்க்கவேண்டும். இந்துக்கள் காசிக்கும், ராமேஸ்வரத்திற்கும் போய் பணம் செலவழித்துவிட்டு “பாவம் துலைந்துவிட்டது” என்று திரும்பி வருவதைப் பார்த்து முஸ்லீம்கள் சிரித்துவிட்டு முஸ்லீம்கள் நாகூருக்கும், முத்துப் பேட்டைக்கும், மக்காவுக்கும் பணத்தை செலவு செய்து கொண்டு போய் விட்டு வந்து தங்கள் “பாவம் எல்லாம் துலைந்து விட்டது” என்று கருதிக் கொண்டு புதுக்கணக்குப்போட வந்தார்களானால் மற்றவர்கள் சிரிக்க மாட்டார்களா? என்று நினைக்க வேண்டும்.

மக்கள் மார்க்கத்தைக் காப் பாற்றுவதென்றால் கொள்கைகளை பகுத்தறிவுக்கு இணங்கி இருக்கும்படி ஜாக்கிரதையாய் பார்த்து பயன்படுத்தவேண்டும். “தீர்க்கதரிசிகள் பகுத்தறிவுக்கு விறோதமாய் சொல்லி இருக்கமாட்டார்கள்” என்று கருதி அவற்றை தன் இஷ்டப்படி அருத்தம் செய்து கொண்டு பிடிவாதமாய் இருப்பது மூட நம்பிக்கையைவிட மோசமானதாகும். அம்மாதிரி மூட நம்பிக்கையின் பயனாய் தீர்க்கதரிசிகள் என்பவர்கள் சொன்னதின் கருத்தையும், உண்மையையும் அறிந்து கொள்ள முடியாமலும் போகும்.

பகுத்தறிவு

நமக்குப் பகுத்தறிவையும் நடுநிலைமையையும் எதிலும் பயன்படுத்த உறுதியும், துணிவும் இருந்தால்தான் உண்மையைக் கண்டு பிடிக்கவே முடியும். நாம் அறிவை உபயோகப்படுத்தாமல் நபிகள் வாக்கியத்திற்கு புரோகிதர்கள் சொல்லுகின்றபடி தப்பர்த்தம் செய்து கொண்டு ‘இதுதான் நபிகள் சொன்னது’ என்று சொன்னால் நபிகளுக்கு மரியாதை செய்ததாகுமா? நமது சொந்தக்கண்ணை பரிசுத்தப்படுத்திப் பரீட்சித்துப்பார்க்க வேண்டும். சாளேசரம் இருந்தால் சரியாய்த் தெரியாது. பக்கப்பார்வையாய் இருந்தாலும் சரியாய்த் தெரியாது. இரண்டுக்கும் தகுந்தபடி தூரத்தை சரிபடுத்தி நல்ல கண்ணாடி கொண்டு பார்க்கவேண்டும்.

மஞ்சள் கண்ணாடி போட்டுக்கொண்டு பார்த்தால் மஞ்சளாகத்தான் தெரியும். சிகப்பு சிகப்பாகவும், பச்சை பச்சையாகவுந்தான் தெரியும். நல்ல சுத்தமான எந்தவித நிறமும் இல்லாத கண்ணாடிகொண்டு பார்க்கவேண்டும். அது போலவே தைரியமான பகுத்தறிவுடன் சுத்தமான நடுநிலைமை மனதுடன் எதையும் பார்க்கவேண்டும். கண்ட உண்மையை தைரியமாய் வெளியில் எடுத்துச் சொல்ல வேண்டும். அப்படிக்கில்லாமல் தங்களுக்கு தெரிந்த தப்பிதங்களை மூடி வைத்திருந்தால் கடைசியாக ரிபேர் செய்யமுடியாத அளவு மோசமானதாகி விடும்.

நீங்கள் பார்க்கின்ற கண்ணும், நீங்கள் செய் கின்ற அருத்தமும், நீங்கள் அறிந்த மாதிரியும் யுக்திக்கும், அனுபவத்திற்கும் பொறுத்திப் பாராமல் எல்லாம் சரியானதாகத்தான் இருக்கும் என்று நினைத்து விடாதீர்கள். உங்களைப்போன்ற மற்றவர்கள் எப்படி நினைத்தார் கள்? நினைக்கிறார்கள் என்று பாருங்கள்.

மற்றவர்கள் மதிப்பது

நபி அவர்கள் உபதேசங்களை துருக்கியர் எப்படி மதிக்கின்றார்கள்? எப்படி அர்த்தம் செய்கின்றார்கள்? அவர்கள் என்ன பலன் அடைகின்றார்கள்? என்பவைபோல உலகத்தின் முஸ்லீம்களின் நடப்பு முழுவதையும், அமுலையும், பலனையும் நன்றாய் கவனித்துப் பார்க்க வேண்டும். உங்கள் ‘எதிரி’ மதத்தை (கொள்கைகளை) பரிசோதிப்பதுபோல் எதிரிஆதாரத்தை எந்தெந்த வழியில் பரிசோதித்து நியாயம் அநியாயம் சொல்லுவோமோ அந்த நோக்கத்துடன், அந்த வேகத்துடன் உங்கள் கொள்கைகள் என்று உங்களுக்குப் புரோகிதர்களால் போதிக்கப்பட்டு நீங்கள் நடக்கும் ஒவ்வொரு நடவடிக்கையையும் பரிசோதித்துப் பார்க்கவேண்டும்.

கண்ட உண்மையை வீரத்துடன் வெளியிட்டு குற்றமிருப்பின் திருத்தவேண்டும். மனிதன் முடிவுபெற்ற முற்போக்கானவன் என்று யாரும் கருதிவிடக்கூடாது. உலகமும் முழு முற்போக்கை அடைந்து விட்டதாகக் கருதிவிடாதீர்கள். திருத்தம் அவசியமானால் திருத்தியாக வேண்டும். திருத்தம் சரியென்று பட்ட வழியில் மனம் திரும்ப பயமோ வெட்கமோ அடையக்கூடாது.

இந்தியாவும் அப்படித்தான்

நபி அவர்கள் தோன்றிய காலத்தில் அரேபியாதேசம் எப்படி இருந்ததென்று மௌல்வீ சாயபு அவர்கள் சொன்னார்களோ அப்படியேதான் இன்னமும் இந்தியா இந்து கொள்கைகள் இருந்து வருகின்றது. அரேபியர்களிடத்தில் பெண் குழந்தை பிறந்தால் துக்கப்பட்டு கொல்லுகின்ற வழக்கம் இருந்ததாக மௌல்வி சாயபு சொன்னார்கள். இந்துக்களிடத்திலும் பெண் குழந்தை பிறந்தால் துக்கப்படும் வழக்கம் இன்னும் இருக்கின்றது. சமீப காலம் வரை பெண்களை பெரிய பெரிய பெண்களை புருஷன் இறந்துபோனால் பக்கத்தில் உயிருடன் வைத்து நெருப்புக்கொளுத்தும் வழக்கம் இருந்து வந்தது. இன்றும் பெண்களை அதைவிடக் கேவலமாய் விதவை என்று சொல்லி சகுனத்தடையாகப் பாவித்து கொடுமைப்படுத்தும் முறை இருந்துதான் வருகின்றது.

அரேபியர் பல கடவுள்களை வணங்கினதாகச் சொன்னார்கள். அதுபோலவே இன்றும் இந்துக்கள் ஒவ்வொருவரும் பல கோடிக்கணக்கான கடவுள்களை உருவத்துடன் மாத்திரமல்லாமல் பெண்டு, பிள்ளை வைப்பாட்டி ஆடு மாடு குதிரை யானை எலி பெருச்சாளி மயில் கெருடன் பாம்புவாகிய உருவங்களுடன் வணங்குகின்றார்கள். இவையெல்லாம் கீழ் மக்கள் என்று சொல்லுகின்றவர்களிடம்தான் இருக்கின்றது என்று நினைத்து விடாதீர்கள். மேல்மக்கள் என்று மதத்தின்பேரால் முடிவு கட்டப்பட்ட மக்களிடமே இருக்கின்றது. ஆதலால் திரு.மகமதுநபி அவர்கள் தோன்றுவதற்கு முன் அரேபியா பாலைவனம் எப்படிப்பட்ட காட்டுமிராண்டித்தனத்தில் இருந்ததோ அதுபோலவேதான் இன்றைய வரையில் இந்தியாவின் இந்து சமூகம் இருந்து வருகின்றது.

இந்த லட்சணத்தில் இதை எடுத்துச் சொன்னால் இந்துக்களுக்கு வரும் கோபத்திற்கு அளவே இல்லை. இந்தமாதிரியான ஒரு மதசம்பந்தமான முக்கிய நாள் என்பதற்கு உங்களைப் போல் இந்துக்கள் என்னைக் கூப்பிட வும் மாட்டார்கள். நான் ஏதாவது சொன்னால் பொறுக்கவும் மாட்டார்கள். என்னை வைவதையே அவர்கள் மதப்பிரசாரமாய் கருதுவார்கள். ஆனால் இஸ்லாம் கொள்கை என்பது எவ்வளவு பெருமையாய் எவ்வளவு சகோதரத் தன்மையாய் யாரையும் எந்தவித அபிப்பிராயக்காரனையும் கூப்பிடவும் அவர்கள் சொல்லும் எதையும் பொருமையாய் கேட்கவும் இருக்கின்ற சுதந்திரத்தைப் பார்த்து இவ்விஷயத்தில் இந்துக்கள் வெட்கப்பட வேண்டுமென்றே சொல்லுவேன்.

துலுக்கர் துடுக்கரா?

மௌல்வி ஆஜீ அப்துல் கரீம் சாயபு அவர்கள் துலுக்கன் துடுக்கன் என்று இந்துக்களால் சொல்லப்படுவதாய்ச் சொன்னார். இது இந்துக்களுக்குள் பலமில்லாத காரணத்தாலும் தங்களுக்குள் வீரமும் ஒற்றுமையும் இல்லாத காரணத்தாலும் சொல்லப்படுவதேயாகும். முஸ்லீம்களுக்குள் இருக்கும் ஒற்றுமையும் வீரமும் இந்துக்களுக்கு துடுக்கர்களாய் காணப்படுவது அதிசயமில்லை. என்னை ஒரு சாயபு அடித்தால் ஒரு அய்யரோ ஒரு செட்டியாரோ ஒரு முதலியாரோ சிபாரிசுக்கு வரமாட்டார். ஏனெனில் ஜாதிப்பிரிவு காரணமாக இந்துக்களுக்குள் சகோதரத்தன்மை இல்லாமல் போய்விட்டது. ஒருவனுக்கு மற்றவர்களிடம் அன்பு இல்லாமல் போய் விட்டது. ஜாதிப்பிரிவு இல்லாத காரணத்தாலேயே முஸ்லீம் மக்களுக்கு சகோதரத்தன்மை இருந்து வருகின்றது.

சகோதரர்களை தாராளமாய் உடையவனைக் கண்டால் யாரும் அஞ்சுவது வழக்கம்தான். ஆதலால் இந்துக்கள் உங்களை குற்றம் சொல்லுகிறார்களே என்று கருதி உங்கள் சகோதரத்தன்மையையும் வீரத்தையும் நழுவவிட்டு விடாதீர்கள். எண்ணிக்கையில் கொஞ்சமாயிருந்தாலும் உலகத்தில் நீங்களும் தலைசிறந்து விளங்கக் காரணமே உங்கள் சகோதரத்தன்மையே யாகும். ஆகையால் அதைவிட்டு விடாதீர்கள். ஆனால் மற்ற கொள்கைக்காரரையும் உங்கள் சகோதரர்களாக ஆக்கிக்கொள்ள முயலுங்கள். அதற்குத் தடையாயிருக்கும் சாதாரண காரியங்களையும் வெரும் வேஷமாத்திரத்தால் இருக்கும் வித்தியாசங்களையும் லக்ஷியம்செய்யாமல் ராஜிக்குத் தயாராயிருங்கள். இந்த வகையில் தான் ஒவ்வொரு கொள்கையும் செல்வாக்குப் பெற்று தலை சிறக்கமுடியும். இஸ்லாம் கொள்கையைப்பற்றி யாராவது தப்பிதமாய் நினைத்திருந்தால் தைரியமாய் திருத்த முற்படுங்கள்.

சந்தேகத்தை திருத்துங்கள்

உதாரணமாக மக்கா யாத்திரையைப் பற்றி மலேயா நாட்டில் உள்ள கிடாசுங்கப்பட்டானியில் என்னிடம் ஒரு இந்து என்பவர் ஒரு கேள்வி கேட்டார். அதாவது ‘இந்துக்களது காசி ராமேஸ்வரம் மதுரை யாத்திரையை மூடநம்பிக்கை என்கின்றாயே, இஸ்லாமானவர்கள் மக்கா யாத்திரை செய்ய மலேயாவில் அநேக முஸ்லீம்கள் செல்வதால் கஷ்ட நஷ்டப்படுகின்றார்களே’ என்றார். நான் பதில் சொல்லமுடியாமல் அப்படியானால் முஸ்லீம்கள் அநுசரிக்கும் கொள்கைகள் முழுவதும் பகுத்தறிவுக்கொள்கை என்று நான் சொல்லவரவில்லை என்றும் அதில் அநேக நல்ல கொள்கை பிரத்தியட்சத்தில் பார்க்கிறேன் என்றும் சொன்னேன்.

பிறகு சென்ற வருஷம் இதே கொண்டாட்ட நாளில் ஈரோட்டிற்கு வந்த மௌல்வி அப்துல் அமீது சாயபு பாகவியவர்களைக் கேட்டேன். அவர் விளக்கமாக்கினார். முஸ்லீம்கள் மக்காவுக்குப் போவதில் செல்வத்திலும், சரீர திடத்திலும் தகுதியுள்ளவர்கள் தான் போகவேண்டுமென்று இருக்கின்றதே தவிர எல்லோரும் போய்த்தீர வேண்டுமென்று இல்லை யென்றும் அந்த இடம் முகம்மதுநபி அவர்கள் உண்மையில் பிரத்தியட்சத்தில் பிறந்தஇடம் என்பதற்காக அங்கு போவது என்பது தவிர வேறு அற்புதமில்லை என்று அறிவு வளர்ச்சிக்கும் மற்ற மக்கள் நடை,

உடை, நாகரீகம் பார்த்து வரவும் பயன்படும் படியான ஒரு யாத்திரை என்றும் “கொலை களவு கொள்ளை நடத்தின பாபம் தீர்ந்து விடும் என்று சொல்லுவது தப்பு” என்றும் அந்த மாதிரி எண்ணத்துடன் யாரும் போவதில்லை என்றும் சொன்னார். யாராவது அந்தப்படி போனாலும் அது தெரியாத்தனமென்றே சொன்னார்கள். ஆகவே மக்களிலேயே பிறவியில் வித்தியாசமில்லை என்று சொல்லும் கொள்கையில் இடத்திற்கு இடம் வித்தியாசம் கற்பிக்கப்பட்டு இருக்காது என்பது பகுத்தறிவில் பட்டதேயாகும். ஆனால் இந்து கொள்கைகள் என்பவற்றில் ‘ஒரு மனிதன் எவ்வளவு அயோக்கியனாயிருந்தாலும், கொலை செய்தாலும், திருடினாலும், நம்பிக்கை துரோகம் வஞ்சகம் முதலிய காரியம் செய்தாலும், ஒரு ஊரை நினைத்தால் ஒரு ஊருக்குப் போனால் ஒரு ஊரில் ஒரு குளத்திலுள்ள தண்ணீரைத் தலையில் தெளித்துக் கொண்டால் பாபம் பரிகாரமாகிவிடும், மோட்சமடைந்து விடுவான்’ என்று எவ்வளவோ அடியோடு பொய் பெருமைகளை கற்பித்து மூடநம்பிக்கை உண்டாக்கி அங்குள்ள சோம்பேறிகள் பிழைக்க ஸ்தல யாத்திரை ஏற்படுத்தப்பட்டிருக்கின்ற தென்றும், அப்படிப்பட்ட ஸ்தல யாத்திரைப்புரட்டுகள் எல்லாம் பகுத்தறிவுக்கு விறோதமானது ,மூடநம்பிக்கையில் பட்டது என்றும் சொல்லும்போது மற்றவர்கள் யாராவது அது போல் செய்தாலும், அந்தந்த தலைப்பின் கீழ்தான் வருமல்லவா? என்பதை யோசித்து நடக்க வேண்டியது மக்கள் கடமையாகும் என்று ஒவ்வொருவரும் நினைக்க வேண்டும்.

இப்படிப்பட்ட நாள்

ஆகவே இப்படிப்பட்ட அருமையான நாட்களை மனிதன் மேன்மைக்கும் முற்போக்கிற்கும் ஒற்றுமைக்கும் அறிவு விளக்கத்திற்கும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்கின்ற எண்ணத்தின் மீதே இங்குள்ள இந்து முஸ்லீம்களை சகோதரர்களாகக் கருதியே என் மனதில் பட்டதைச் சொன்னேன். மௌல்வி சாயபு அவர்கள் இருவரும் சொன்ன விஷயங்களிலும் பெரிதும் அறிவுக்கு விரோதமானதோ கேள்விக்கு இடமானதோ இல்லை என்பதை முக்கியமாய் முஸ்லீம்களும் மற்ற இந்துக்களும் கவனித்துப் பார்த்து இதுபோலவே எல்லாக் கொள்கைகள் விஷயங்களிலும் பகுத்தறிவுடனிருக்க வேண்டுமென்றே கேட்டுக் கொள்ளுகிறேன்.

மற்றும் நான் சொன்ன விஷயங்களில் உங்கள் பகுத்தறிவுக்கும் ஆராய்ச்சிக்கும் ஒப்புக் கொள்ளாததைத் தள்ளி விடுங்கள். மற்றும் இம் மாதிரி நாட்களை வெறும் விருந்துக்கு உபயோகித்துக் கொள்ளாதீர்கள். இன்று சுமார் 500 ரூ. வசூல் செய்து பெரிய விருந்து சாப்பாடு செய்து சாப்பிட்டதாகத் தெரிகின்றது. இது பிரயோஜனமில்லை. பணங்கள் வசூல் செய்து பகுத்தறிவு பிரசாரம் செய்யவும் ஏழை மக்களுக்கு கல்விக்கும் கொள்கைகளின் உண்மை தத்துவத்தை பகுத்தறிவுக்குப் பொருத்திப் பார்த்து பயன்படுத்தும் தத்துவத்திற்கும் உபயோகிக்கச் செய்யவும் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்ளுகிறேன்.

02.08.1931 அன்று ஈரோடு முஸ்லீம் வாலிப சங்கக் கட்டிடத்திற்கு முன் நடைபெற்ற நபிகள் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் தந்தைபெரியார் அவர்கள் ஆற்றிய தலைமையுரை – “குடி அரசு” – சொற்பொழிவு – 09.08.1931

--------------------------------------------------------------

வஹாபிகளான நாங்கள் இன்று என்ன சொல்கிறோமோ அதைத்தானே அன்றே பெரியாரும் சொல்லியிருக்கிறார். அப்படீன்னா...பெரியாரும் வஹாபியா? :-)

//அந்த இடம் முகம்மது நபி அவர்கள் உண்மையில் பிரத்தியட்சத்தில் பிறந்தஇடம் என்பதற்காக அங்கு போவது என்பது தவிர வேறு அற்புதமில்லை //

இது தவறான புரிதல். முகமது நபி பிறந்த நாடு என்பதனால் அந்த பூமி புண்ணியமாகி விடவில்லை. உலகில் முதலில் இறைவனை வணங்குவதற்காக எழுப்பப்பட்ட முதல் ஆலயம் கஃபா என்பதாலேயே அந்த இடம் புனிதப்படுகிறது. இதை அங்குள்ள மௌலவியாவது பெரியாருக்கு விளக்கி சொல்லியிருக்கலாம்.

16 comments:

Anonymous said...

Mohamed Ali, is a resident of Melapalayam, Tirunelveli. Ironically, the three persons arrested in relation with the Bangalore case are also from the same place. The Muslims see a witch hunt in this and have protested against these arrests.

The recent incidents in Tamil Nadu have raised a number of doubts. There were recent attacks on BJP leaders in some parts of the state. There is a strong doubt that these attacks could have been stage managed by the party itself. Strangely, the attacks were carried out at places where the BJP has got a significant presence. Doubts emerge that the attacks might have been carried out to gather the votes in the forthcoming elections.

http://www.newindia.tv/en/india/420-one-arrested-in-attack-on-bjp-leader

Anonymous said...

பேசத் தொடங்கிவிட்டோம்
எங்கள் வார்த்தைகள்
நாறத்தான் செய்யும்

வாய் நாற்றமல்ல அது
வலுக்கட்டாயமாய் எம்
வாய்திறந்து ஊட்டிய
உங்கள் ஆணவ மலத்தின்
துர்நாற்றம்

நாங்கள்
உங்கள் நிலங்களை
உழுதோம்

நீங்கள்
எங்கள் பசியை
அறுவடை செய்தீர்கள்

அந்த நிலமும்
எங்களுடையதுதானென்பது
அப்போது எங்களுக்குத் தெரியாது

உங்கள் அடுப்புகள் எரிய
விறகுகள் வெட்டினோம்

நீங்கள்
எங்கள் குடிசைகளை
எரித்தீர்கள்

கோடரிகளும் ஆயுதமென்பதை
அப்போது நாங்கள்
அறிந்திருக்கவில்லை

உங்கள் பெண்களின்
தீட்டுத் துணிகளையும்
துவைத்துக்கொடுத்தோம்

நீங்கள்
எங்கள் பெண்களின்
நிர்வாணத்தையும் கிழித்தீர்கள்

அப்போது எங்களுக்குத் தெரியாது
கருத்த தோலே எங்களின்
கனத்த ஆடையென்று

வாழ்வின்
கூட்டல் கழித்தல் கணக்குப் போட
எங்கள் முதுகு உங்களுக்குக்
கரும்பலகையானது

அப்போது எங்களுக்கு
எழுதப் படிக்கத் தெரியாது

இப்போது நாங்கள்
படிக்கத் தொடங்கிவிட்டோம்
எழுத்துக்களைக் கூட்டி மட்டுமல்ல
எங்களையும் கூட்டி

செத்துப்போன
மாட்டின் தோலையும்
அதிர...அதிர
நியாயம் கேட்கவைக்கும்
பறையின் குரல்
எங்களுடையது

நாங்கள்
பேசத் தொடங்கிவிட்டோம்

-பழநிபாரதி

Anonymous said...

கடந்த 2007-ஆம் ஆண்டு அக்டோபர் 11 அன்று அஜ்மீர் தர்காவில் நடந்த குண்டுவெடிப்பை நடத்தியது தாங்கள்தாம் என்பதை தீவிரவாதி பவேஷ் பட்டேல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டு வாக்குமூலம் அளித்துள்ளான்.



கடந்த மாதம் டெல்லியில் கைது செய்யப்பட்ட குஜராத் மாநிலத்தைச் சார்ந்த பவேஷ் பட்டேல் ஜெய்ப்பூரில் மாஜிஸ்திரேட் நீதிபதி முன்பாக குண்டுவைத்த குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளான்.

அந்த வாக்குமூலத்தில்; “குண்டுவெடிப்பை நிகழ்த்துவதற்கு ஒரு வாரம் முன்பாக நான் அஜ்மீருக்கு வரவேண்டும் என்று குண்டுவெடிப்பில் தொடர்புடைய தற்போது தலைமறைவாக உள்ள சுரேஷ் நாயர் என்னிடம் கட்டளையிட்டார். நான் சம்மதித்தபோது இருவரும் ஒன்றாக செல்லலாம் என்று சுரேஷ் நாயர் கூறினான். தொடர்ந்து அக்டோபர் 10-ஆம் தேதி கோத்ராவிற்கு வந்தோம். சுரேஷ் நாயர், முகேஷ் வாஸ்னி, ஹர்ஷாத் ராஜ் ஆகியோரும் இதர மூன்று பேரும் அங்கே காத்திருந்தோம். கோத்ராவில் இருந்து புறப்பட்ட குழுவினர் மறுநாள் 11-ஆம் தேதி அஜ்மீரை அடைந்தோம். மாலையில் தர்காவிற்கு சென்ற குழுவினர் குண்டை வைத்தனர். ஆனால், அஜ்மீர் பயணத்தின் நோக்கம் குறித்து எனக்கு தெரியாது. அஹ்மதாபாத்திற்கு திரும்ப செல்ல பேருந்தில் ஏறும் போது சுரேஷ் நாயர் அஜ்மீர் செல்வதன் நோக்கத்தை கூறினான். அஜ்மீர் தர்காவில் குண்டு வைக்கும் திட்டத்தை தயாரித்தவர் மனோஜ் பாய் என்றழைக்கப்படும் ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரக்கான சுனில் ஜோஷி” என்று பவேஷ் பட்டேல் தனது குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தில் கூறியுள்ளான்.

மாஜிஸ்திரேட் முன்பாக அளித்த குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை ஆதாரமாக ஏற்றுக் கொள்ளலாம் என்று என்.ஐ.ஏ (தேசிய புலனாய்வு ஏஜன்சி) தெரிவித்துள்ளது. கோத்ரா ரெயில் தீ விபத்து சம்பவத்திற்கு பின்னர் பிப்ரவரி 27-ஆம் தேதி முஸ்லிம்களின் வழிப்பாட்டுத் தலமான மசூதியின் மீது குண்டுவீசிய வழக்கிலும் பவேஷ் பட்டேல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளான்.

முன்னதாக அஜ்மீர் தர்காவில் குண்டுவைக்கும் திட்டத்தை தயாரித்த சுனில் ஜோஷியை சம்பவம் நிகழ்ந்து இரண்டு மாதங்களுக்குப் பிறகு தீவிரவாத அமைப்பினர் சுட்டுக்கொலைச் செய்துள்ளனர். இவ்வழக்கில் இன்னொரு தீவிரவாதி ஹர்ஷத் ராஜ் முன்னர் கைது செய்யப்பட்டான். மேலும் கேரளாவைச் சார்ந்த தீவிரவாதி சுரேஷ் நாயர் பல வருடங்களாக தலைமறைவாக உள்ளான். இவனது தலைக்கு என்.ஐ.ஏ 2 லட்சம் ரூபாய் பரிசுத் தொகை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

http://newindia.tv/tn/india/530-ajmer-blast-magistrate-confessing-8-47

Anonymous said...

காபா என்பதே சிவ ஆலயம்தான்!

suvanappiriyan said...

//காபா என்பதே சிவ ஆலயம்தான்! //

ஏக இறைவனைத்தான் நமது முன்னோர்கள் சிவனாக கருதியுள்ளார்கள். பின்னர் அதற்கு உருவம் கற்பிக்கப்பட்டது.

கஃபாவை சுற்றி 365 சிலைகள் இருந்தனவாம். முகமது நபி காலத்துக்கு பிறகு ஏக இறைவனை வணங்கும் பழக்கம் அந்த மக்களுக்கு ஏற்பட்டது.

Anonymous said...

குரான் படிக்காமல் ஒரு நண்பர் சொன்னதை அங்கே சொல்வதாக அவரே சொல்கிறார் கண்டிப்பாக குரான் படித்திருந்தால் அவர் பேச்சு வேறு மாதிரி இருந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

Dr.Anburaj said...

முகம்மதுவின் வரலாற்றை அவசரபுத்தி கொண்ட பெரியார் படிக்கவில்லை.கூட்டத்தினரின் எண்ணிக்கைக்கு தக்க பேசுவதில் வல்லவர்.ஆண்கள் திருமணமத்திற்கு முன் பிரம்மச்சரியம் கடை பிடிப்பவர்களாகவும்,திருமணமத்திற்குபின் ஏகபத்தினிவிரதம் பின்பற்றுவர்களாக உள்ள சமுதாயத்தில் மட்டுமே பெண்களின் வாழ்வு நிம்மியாக இருக்கும். அரேபியாவில் முகம்மதுவே 40 குமுஸ் பெண்களை வைப்பாட்டியாக வைத்திருந்த தகவல், 9 வயது சிறுமி ஆயிசாவை திருமணம் செய்தது ...... ஈவேரா அறியமாட்டார்.மணியம்மை என்ற சிறுமியை திருமணம் செய்த ஈவேரா கிழவன் முகம்மதுவை புகழந்தது வியப்பில்லை.

suvanappiriyan said...

//ஆண்கள் திருமணமத்திற்கு முன் பிரம்மச்சரியம் கடை பிடிப்பவர்களாகவும்,திருமணமத்திற்குபின் ஏகபத்தினிவிரதம் பின்பற்றுவர்களாக உள்ள சமுதாயத்தில் மட்டுமே பெண்களின் வாழ்வு நிம்மியாக இருக்கும்.//

இந்தியாவில் பெண்களின் நிலை மோசமடைந்து வருவதாக ஐநாவே கவலைபடுகிறது. நீங்கள் பத்திரிக்கை எல்லாம் படிப்பதில்லையா? :-)

//அரேபியாவில் முகம்மதுவே 40 குமுஸ் பெண்களை வைப்பாட்டியாக வைத்திருந்த தகவல், 9 வயது சிறுமி ஆயிசாவை திருமணம் செய்தது ....//

ஹா...ஹா...நீங்கள் சொல்லும் பொய்யை உங்களின் இந்துத்வா வாதிகளே நம்ப மாட்டார்கள். வைப்பாட்டிகள் வைத்திருந்தால் கல்லெறிந்து கொல்ல வேண்டும் என்று சட்டம் இயற்றி அதை நடைமுறையும் படுத்தியவர் முகமது நபி. சிறுவர் திருமணம் அந்த சமூகத்தில் முன்பு நடைமுறையில் இருந்தது. இவருக்கு இவரை மணமுடித்து கொள்வோம் என்று நிச்சயம் செய்து வைத்துக் கொள்வார்கள். பூப்பெய்தவுடன் மணமகன் வீட்டுக்கு திருமணம் செய்து அனுப்பப்படுவார்.

நமது பாரதியார் கூட 9 வயது பெண்ணைத்தான் திருமணம் முடித்தார். எனவே கொஞ்சம் நம் நாட்டு வரலாறுகளையும் படித்தால் நல்லது.

suvanappiriyan said...

//குரான் படிக்காமல் ஒரு நண்பர் சொன்னதை அங்கே சொல்வதாக அவரே சொல்கிறார் கண்டிப்பாக குரான் படித்திருந்தால் அவர் பேச்சு வேறு மாதிரி இருந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை. //

முதலில் நீங்கள் குர்ஆனை தமிழில் படித்திருக்கிறீர்களா? படித்திருந்தால் இந்தக் கேள்வியே உங்களுக்கு வந்திருக்காது.

Anonymous said...

இந்திய தத்துவத்தின்படி சிவம் என்பது இந்த பிரபஞ்சம் முழுவதும் எல்லா பொருட்களிலும் எல்லா உயிர்களிலும் நீக்கமற நிறைந்திருப்பது ஆகும். அதை உணர்ந்து கொண்ட தெளிவினால்தான் யாரையும் எதையும் வணங்கும் பழக்கம் ஏற்பட்டது.தன்னைத்தவிர வேறு யாரையும் வணங்கினால் நரகத்தில் தள்ளுவான் என்று நீங்கள் கருத்து உருவாக்கம் செய்த ஏக இறைவன் சிவம் அல்ல.

Anonymous said...

இறைவனா ? தாதாவா ?

தாதாக்கள் எப்படி மதிக்கப்படுகிறார்கள். அவர்களின் தத்துவ அறிவாலா ? அவர்களின் அறிவியல் பலத்தினாலா ?
இல்லை மாறாக தாதாவின் அடியாட்கள் பொது மக்களிடம் எப்போதுமே தங்கள் தாதாவை பற்றி ஒரு பயத்தை வைத்திருப்பார்கள். பயம் இல்லையென்றால் யாரும் தாதாவை மதிக்க மாட்டார்களே ? அப்படிப்பட்ட தாதாவின் அடியாட்களோடு பேசிக் கொண்டிருந்த ஒரு கற்பனை உரையாடல்.

நான் : சரி தாதாவை பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன் ?

அடியாள் : ஒரு சிம்மாசனத்தில் தாதா உட்கார்ந்திருப்பார். ஆனால் அவருக்கு உருவம் கிடையாது.

நான் : தாதாவை பார்த்ததே இல்லையே ? அவர் எங்கிருக்கிறார் ?

அடியாள் : அவர் உலகில் எங்கோ ஒரு முலையில் இருப்பார், யாரும் அவரை பார்த்து விட முடியாது. யாருடைய கண்களுக்கும் புலப்பட மாட்டார்.

நான் : ஒன்றுமே புரியவில்லையே, எப்படிதான் தாதாவைய் புரிந்துக் கொள்வது.

அடியாள் : தாதாவை யாராலும் புரிந்துக் கொள்ள முடியாது. ஆனால் அவர் யாருக்கும் புலப்பட மாட்டார் என்பது மட்டும் புரிந்து கொள்ள முடியும்,

நான் : தாதாவுக்கு கட்டுப்படாமல் இருப்பவர்களின் கதி என்ன ?

அடியாள் : நீங்க‌ள் காஃபிர்கள் என்று அழைக்கப்படுவீர்கள், தாதா உங்களை வெட்டவும், கொலை செய்யவும் எங்களுக்கு உத்தரவிட்டிருக்கிறார். பின் நீங்கள் தாதா இருக்கும் இடத்திற்கு க்ளைமாக்ஸ் காட்சியில் அனுப்பப் படுவீர்கள். அங்கு தாதா உங்களை நெருப்பில் வாட்டி எடுப்பார்.

நான் : ஐயோ வேண்டாம் !! தாதாவுக்கு அடங்கி நடப்பவர்களுக்கு என்ன கிடைக்கும் ?

அடியாள் : நீரோடைகள் உள்ள சொகுசு விடுதிகள், அழகான இளம் பெண்கள்.

நான் : தாதாவும் மனிதனா ?

அடியாள் : தாதா மனிதன் இல்லை, மிகப்பெரியவன்.

நான் : தாதா நம்மை பார்க்க முடியுமா ?

அடியாள் : நிச்சயம் முடியும்.

நான் : தாதாவால் கேட்க முடியுமா ?

அடியாள் : சத்தமாக இறைஞ்சும் போது மட்டுமே அவரால் கேட்க முடியும் ?

நான் : தாதாவால், பார்க்க முடியும், கேட்க முடியும் என்றால், எங்கோ இருக்கும் அவரோடு ஒரு ஊடகம் மூலமாக பேசலாமே.

அடியாள் : கூடவே கூடாது. அவரோடு நேராக தான் பேச முடியும்.

நான் : எப்போது அவரோடு பேசுவது ?

அடியாள் : அவர் ஒருவரே தாதா என்று நம்பினால், ஐந்து முறை சத்தமாக இறைஞ்சினால், பாலைவணத்தில் உள்ள ஒரு கட்டிடத்தில் கூழாங் கல்லால் அடிக்கும் சடங்கு செய்தால், ஒரு மாதம் முழுதும் பகலில் பட்டினியாய் இருந்து இரவு முழுதும் உணவருந்தினால், அவரின் அடியாட்களுக்கு உதவி செய்தால் அவரை காண‌லாம்.

நான் : நல்லது செய்தால் ? அடுத்தவருக்கு கெடுதல் செய்யாமல் இருந்தால அவர் என்னை சேர்த்துக்கொள்ள மாட்டாரா ?

அடியாள் : எத்தனை தான் நல்லது செய்தாலும் சரி, இந்த ஐந்து கொள்கைகளை கடைப்பிடிக்காவிட்டால் நீங்கள் காஃபிர்கள்தான்.

நான் : அடுத்தவரை கொல்பவர்கள், அநீதி செய்வபர்கள் கதி என்ன ?

அடியாள் : ஐந்து கடமைகள்தான் தாதாவின் உலகில் மிக முக்கியம். அதை செய்தாலே போதுமானது. ஒசாமா, அப்சல் குரு, அஜ்மல் கசாப் போன்ற பல அடியாட்கள் இந்த கடமைகளை சரி வர செய்து நீரோடைகளில், அழகான பெண்களுடன் உல்லாசமாய் இருக்கிறார்கள். காந்தி, புத்தர் போன்ற காஃபிர்கள் நெருப்பில் எரிந்துக் கொண்டிருக்கிறார்கள்.

நான் : வேறு யாரையாவது நான் தாதா என்று தெரியாமல் நினைத்து விட்டால், தாதா என்னை என்ன செய்வார் ?

அடியாள் : தாதா உங்களை கேள்வி கேட்பார். "ஏன்டா என்னை இப்படி இருப்பேன், அப்படி இருப்பேன் என்று சொன்னாயே, நான் அப்படியா இருக்கிறேன்" என்று உதைப்பார்.

நான் : தாதா மனித உருவம் போல் இருப்பாரா ?

அடியாள் : தாதா எப்படியும் இருக்க மாட்டார். தாதாவை யாரோடாவது நீங்கள் ஒப்பிட்டீர்கள் என்றால் தாதாவுக்கு கோபம் வந்துவிடும். பின்னர் உங்களை சித்திரவதை செய்வார் அவர். நெருப்பில் போட்டு பொசுக்குவார்.

நான் : தாதா மனிதன் இல்லை என்றீர்கள், ஆனால் அவருக்கு கோபம் வந்துவிடும் என்கிறீர்களே ? தாதாவுக்கு உணர்ச்சிகள் உண்டா ?

அடியாள் : டேய் யார் அங்கே, இந்த முட்டாள் அதிகமாய் கேள்வி கேட்கிறான். இவனை சிந்தக்க முடியாமல் செய்து நம்மை போல் தாதாவுக்கு அடிமையாக்குங்கள்.

Anonymous said...

உலகையே ஆட்டி படைத்து கொண்டிருக்கும் வஹாபிஸம் என்றால் இன்னும் தெரியாதா உங்களுக்கு ?

கடந்த பதினைந்து இருபது வருடங்களாய் உலக நாடுகளிலும், நம் நாட்டிலும் மத அடிப்படைவாதம் பெருகி வருவதை நீங்கள் கண்டிருந்தால் அதற்கு முக்கிய காரணம் வஹாபிஸம் ஆகும்.

"வஹாபிஸம்" எனப்படுவது சுன்னி இஸ்லாமில் ஒரு பகுதியாகும். பதினெட்டாம் நூற்றாண்டில் ஒரு புரட்சியாக தொடங்கிய இவ்வியக்கம் "குரான்", "ஹடீத்" ஆகியவற்றின் அடிப்படை கூறுகளை தீவிரமாய் கொண்டு செயல்படுவதாய் தொடங்கியது. "முஹம்மத் இப்ன் அல் வஹ்ஹாப்" (1703-17920 என்பவர் இதனை தொடங்கி வைத்ததாய் சொல்லப்படுகிறது. அவரின் பெயரை கொண்டே இது "வஹ்ஹாபிஸம்" என்று அழைக்கப்படுகிறது. ஆரம்பத்தில் அவ்வியக்கத்தை அவர் அமைதியான முறையில் தொடங்கி சௌதி அரேபிய இஸ்லாமியர்களிடையே அதை பற்பல விவாதங்களோடு வளர்த்தினார் என்று சொல்லப்பட்டாலும், போகப் போக‌. அதனுடைய வளர்ச்சி மிக வேகமாகவும் பயங்கரமாகவும் இருந்ததாக சொல்கிறார்கள். உடன்படாத பல சுன்னி முஸ்லீம்களை வஹ்ஹாபின் ஆதரவாளர்கள் கொன்று குவித்தனர் என்று சொல்லப்படுகிறது. அவருடைய மார்கம் "முஹம்மத் பின் சௌத்" என்பவரின் அரசியல் மற்றும் பொருளாதார உதவியால் மேலும் பரவி, சௌதியில் தன்னிகரற்றதாக மாறியது.

ஆரம்பத்தில் வஹாபிஸத்தை எதிர்த்தவர்கள் வஹ்ஹாபின் தந்தை "அப்த் அல் வஹ்ஹாப்" மற்றும் அவரின் சகோதரர் "சல்மான் அப்த் அல் வஹ்ஹாப்" ஆவர். இஸ்லாமிய அறிஞரான அவரின் சகோதரர் வஹ்ஹாபிஸத்தை எதிர்த்து புத்தகங்களை எழுதினார். பல இஸ்லாமிய அறிஞர்கள் வஹாபிஸத்தை ஒரு பிரிவினைவாத மற்றும் பிற்போக்கு சிந்தனை என்று கண்டித்தனர். 1801 - 1802 ஆம் ஆண்டுகளில் "முஹம்மத் இப்ன் சௌத்" படையெடுத்து சென்று இராக்கிய ஷியா புனித நகரங்களான கர்பாலா மற்றும் நஜாஃப் ஆகிய பகுதிகளை கைப்பற்றி அங்குள்ள முஹம்மதின் பேரனான "ஹுசைன் இப்ன் அலி" என்பவரின் வழிபாட்டு தளங்களை அழித்தார். 1803-1804 ஆம் ஆண்டில் சௌதிகள் மெக்கா மற்றும் மதினாவை கைப்பற்றி அங்குள்ள மற்ற சிலைகளையும், கோபுரங்களையும், முஹம்மத்தின் மகளாக சொல்லப்படுகிற பாத்திமாவின் நினைவாக கட்டப்பட்ட கோபுரங்களையும் தகர்த்து எறிந்தனர். பிற்காலத்தில் 1998 ஆம் ஆண்டுகளில் சௌதிகள் முஹம்மத்தின் தாயாக சொல்லப்படுகிற "அமினா பிந்த் வஹாப்" என்பவரின் கல்லரையையும் விட்டு வைக்காமல் அழித்து ஒழித்தனர். அது இஸ்லாமிய உலகில் பெரும் கிளர்ச்சியை உண்டாக்கியது. இப்படியாக வாளாளும், வெறியாலும் அது வளர்ந்தது. தத்துவரீதியாக, நம்முடைய ஆழ்வார்கள் மற்றும் நாயன்மார்களின் பக்தி நெறியினனை ஒத்த, இஸ்லாமின் ஒரு பிரிவான "சுஃபிஸ்ஸத்தை" அது உலகமெங்கும் வேடையாடி கிட்டத்தட்ட அழிவின் விளிம்பில் கொண்டு சென்று விட்டதென நம்பப்படுகிறது. உலகமெங்கும் ஷியாக்கள் மேல் ஏற்படும் மோதல்களுக்கும் முக்கிய காரணமாய் உள்ளது வஹாபிஸத்தின் அடிப்படைவாதம்தான் என்று கூறுகிறார்கள்.

வஹ்ஹாபிஸம் வளர்க்க யார் செலவழித்தார்கள் ? 1970 களுக்கு இடையே எண்ணை விலை பல மடங்காக உயர்ந்ததால் செழிப்படைந்த சௌதி அரேபிய அரசாங்கம் வஹாபிஸத்தை வளர்பதற்காக பல பில்லியன் டாலர்களை செலவு செய்தது. பல ஆயிரம் வஹாபிய மசூதிகளையும், மதரஸாக்களையும் கட்டியது. மற்ற இஸ்லாமிய பிரிவுகளை விட தங்களுடையதுதான் குரானை சரியாக சித்தரிக்கும் மார்க்கம் என்று காட்டுவதற்கு இந்த கோடிக்கணக்கான டாலர்கள் உதவியது.

சௌதி அரேபிய அரசாங்கம் கிட்டத்தட்ட 87 பில்லியன் டாலர்களை கடந்த இருபது ஆண்டுகளில் தங்கள் மார்கத்தை பறப்ப செலவிட்டதாய் புள்ளி விவரங்கள் சொல்கின்றன. அவை பெரும்பாலும் வஹாபிய இமாம்களுக்கு பயிற்சி கொடுக்கவும், வஹாபிய புத்தகங்கள் அச்சடிக்கவும், வஹாபிய மசூதிகள் மற்றும் வஹாபிய பல்கலைகழகங்கள் மற்றும் நிறுவனங்களை உண்டாக்கவும் செலவழிக்கப் பட்டன. சௌதியில் பணி செய்ய செல்லும் பல ஆயிரம் வெளிநாட்டு தொழிலாளர்கள் வஹாபிஸத்தில் பயிற்சி கொடுக்கப்பட்டு, பின்னர் திரும்பி செல்கையில் தங்கள் நாட்டில் அதை பிரச்சாரம் செய்கிறார்கள்.


மூலக்கூறுகள் பின்வரும் புத்தகங்களை தழுவியவை.

Saudi Arabia, Wahhabism and the Spread of Sunni Theofascism
Wahhabism: A deadly scripture
Saudi Arabia's Export of Radical Islam
Islam in South and Southeast Asia
Radical Islam in Central Asia
The Destruction of Holy Sites in Mecca and Medina By Irfan Ahmed in Islamic Magazine, Issue 1, July 2006
Nibras Kazimi, A Paladin Gears Up for War, The New York Sun, November 1, 2007
John R Bradley, Saudi's Shi'ites walk tightrope, Asia Times, March 17, 2005 — withmuzzammil M lalpet (newyork).

Anonymous said...

//வஹாபிகளான நாங்கள் இன்று என்ன சொல்கிறோமோ அதைத்தானே அன்றே பெரியாரும் சொல்லியிருக்கிறார்//

பெண்கள், கல்யாணம் செய்து கொள்ள தேவை இல்லை, யாரும் யாருடனும் உறவு வைத்து கொள்ளலாம், எவருடனும் போகலாம், கற்பு என்பதே காட்டுமிராண்டி தனமானது, என்றெல்லாம் புரட்சி கருத்துகள் பலவற்றையும் சொல்லி இருக்கிறார், அதையும் அப்படியே நம்ம தவ்கீத் அண்ணனிடம் சொல்லி பரப்ப சொல்லலாமே,

பெரியார் இந்து மதம் ஒளிந்து போக வேண்டும் என்று ஆசைப்பட்டார், அதை தான் நீங்களும் சொல்லி வருகிறீர்களா! ஓன்று புரிகிறது, நாய்க்கு இருக்க இடம் கொடுத்தால் அது மடத்தை பிடிக்க ஆசைப்படும் என்பது, துலுக்கத்தை இந்த அளவு இந்த நாட்டு ஏமாளி இந்துக்கள் வளர விட்ட முட்டாள் தனம் தான் இன்று இந்து சமயத்தை அழிக்க வேண்டும் என்று துலுக்கர்கள் சொல்லும் அளவிற்கு கொண்டு நிறுத்தி இருக்கிறது

Dr.Anburaj said...

ராமசாமி நாயக்கர் தனது விடுதலை பத்திரிக்கையில் "முதலியார் ஒழிப்பு இயக்கம்" என்ற தலைப்பில் ஓர் தலையங்கம் எழுதினார். ஏன்? அவர் ஒரு முதலியார் மீது கடும் கோபம் கொண்டார். எனவே முதலியார்களையெல்லாம் ஒழித்து விடவேண்டுமென புறப்பட்டு விட்டார். அது தான் ராமசாமி நாயக்கர்.

யார் அந்த முதலியார்? அவர் தான் தமிழகத்தின் முன்னால் முதல்வர் திரு. பக்தவத்சலம். அவர் ஒரு முதலியார்.

தமிழகத்தைப் பொறுத்த வரை ஒரு பெரிய வியாதி உண்டு. சைக்கோத்தனமான வியாதி, அது திராவிட சித்தாந்த வியாதி. இந்த வியாதியின் மூலப்பகுதி பிராமண எதிர்ப்பு வியாதி. ஆனால் இதை ஏதோ ஒரு அறிவுசார் சித்தாந்தம் போலவே நினைத்து ஒப்பாரி வைத்துக் கொண்டிருப்பவர்கள் அதிகம். இதன் ஆணிவேர் அடிவேர் தெரியாமல் மேடையில் வாந்தி எடுப்பவர்களின் திராவிட சித்தாந்த பார்ப்பன எதிர்ப்பை அப்படியே குடித்து விட்டு போகுமிடமெல்லாம் பதில் வாந்தி எடுப்பவர்களின் எண்ணிக்கை அளவில்லாதது.

ராமசாமி நாயக்கர் பேசியதெல்லாம் சித்தாந்தம் என நம்பிக்கொண்டிருக்கும் ஒரு பெருங்கூட்டம் அவரது ஜாதி எதிர்ப்பிற்கான உள்நோக்கங்களை முழுமையாக உணர்ந்திருக்க மாட்டார்கள் என்பதே உண்மை.

ராமசாமி நாயக்கரின் பிராமண எதிர்ப்பு என்பது ஒரு சித்தாந்தம் அன்று, மாறாக ராமசாமி நாயக்கர் எந்த தனிப்பட்ட நபர்கள் மீதெல்லாம் கோபம் கொள்கிறாரோ அந்த ஜாதிக்காரர்களை அப்படியே ஒழித்து விட வேண்டும் என்று கூறுகிறார். இப்படிப்பட்ட ஆத்திரம் மிகுந்த குணம் ஒரு வித மனப்பிறழ்வு நிலை என்றே தோன்றுகிறது.

இது குறித்த ஒரு செய்தியைப் பார்ப்போம். ம பொ சி அவர்களோடு நெருங்கிப் பழகிய திரு மு மாரியப்பன் அவர்கள் 'சிலம்புச் செல்வர் ம பொ சியுடன் ' என்கிற தனது புத்தகத்தில் ம பொ சி யுடனான தனது அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார். அதில் ராமசாமி நாயக்கர் பற்றிய குறிப்பைப் பார்ப்போம்.

"ராமசாமி நாயக்கர் தனது விடுதலை பத்திரிக்கையில் "முதலியார் ஒழிப்பு இயக்கம்" என்ற தலைப்பில் ஓர் தலையங்கம் எழுதினார். அதில் முதல்வர் பக்தவத்சலனார் சார்ந்திருக்கும் ஜாதிக்கு எதிராகத் தாம் ஒரு போராட்டம் துவங்கப் போவதாகவும் இதுவரை தான் நடத்தி வந்த பிராமணர் எதிர்ப்புப் போராட்டம் தகுந்த பலன் கிடைக்கவில்லை என்றும் எழுதியிருந்தார். மேலும் முதல்வர் பக்தவத்சலம் அவர்களைக் கடுமையாக வார்த்தைகளால் வசை பாடியிருந்தார்."

சரி, முதலியார்களையெல்லாம் சப்ஜாடாக ஒழிக்க வேண்டும் என்று ராமசாமி நாயக்கர் ஏன் கூறினார்.

தமிழகத்தின் முதல்வராக பக்தவத்சலம் தேர்வான பின்னர், பல அரசு உயர் பதவிகளை முதலியார் ஜாதியினர் பெற்று வந்தனர். ராமசாமி நாயக்கரின் செல்வாக்கு பக்தவத்சலத்திடம் செல்லுபடியாகவில்லை. அதன் பின் நடந்தவற்றையும் திரு. மு மாரியப்பன் கீழ்கண்டவாறு விவரிக்கிறார்.

"விவசாயத் துறையில் இயக்குனர் பதவியிலிருந்த பிராமணர் ஒருவர் ஓய்வு பெற்றதன் விளைவாக அந்தப் பதவி காலியாக இருந்தது. ஈ வெ ரா பிராமணர் அல்லாத ஒருவரை (தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவரா என குறிப்பில்லை) அப்பதவிக்கு சிபாரிசு செய்தார். ஆனால் பக்தவத்சலமோ திரு க்ருஷ்ணமூர்த்தி என்பவரை நியமித்தார். "


மேற்கண்ட சம்பவம் ஈ வெ ரா வை கடுப்பேற்றியது, காரணம் நியமிக்கப் பட்ட க்ருஷ்ணமூர்த்தி என்பவரும் முதலியாரே. தனது செல்வாக்கு முதலியார்களிடம் பலிக்கவில்லை என்ற ஆத்திரம் ராமசாமி நாயக்கருக்கு தலைக்கு ஏறிவிட்டது.

Dr.Anburaj said...

முதலியார் ஒழிப்பு இயகம்" என்று!

ஆக ராமசாமி நாயக்கரை ஏதோ சித்தாந்த வாதி போல தூக்கிக் கொண்டாடிக் கொண்டிருக்கும் அவரது கால் நக்கிகளெல்லாம் கொஞ்சம் நின்று நிதானித்து புரிந்து கொள்ள வேண்டும். ஈ வெ ரா வின் எதிர்ப்புக்களெல்லாம் அவரது செல்வாக்கை நிலை நிறுத்தும் சுயநலப் போராட்டமாகத்தான் இருந்திருக்கிறதே ஒழிய சமூகப்போராட்டம் அல்ல என்பதை.

அப்படித்தான் யாரோ சில பிராமணர்கள் மீது தனக்கு இருந்த ஆத்திரத்தை ஒட்டு முத்தமாக பிராமண ஜாதியினர் மீது ராமசாமி நாயக்கர் திணித்திருக்கிறார் என்பது இதன் மூலம் தெளிவாகிறது.

இப்படி கொசுவிற்காக வீட்டைக் கொளுத்துவது என்பது சித்தாந்தமா அல்லது மனநோயா என்று வரலாற்றை உற்று நோக்குபவர்கள் தான் புரிந்து கொள்ள வேண்டும். தன் சுயநல ஆதிக்கமும் செல்வாக்கும் செல்லுபடியாகவில்லை என்றால் ஒரு சமூகத்தையே அழித்துவிடுவது என்கிற காட்டுமிராண்டித் தனத்தை தமிழகத்தில் ஒரு கூட்டமே சித்தாந்தமாகக் கொண்டாடிக் கொண்டிருக்கிறது. அத்தகைய கூட்டத்தினரின் எண்ணிக்கையைப் பார்க்கும் போது அத்தகையோரின் அடிப்படை மனோநிலையின் மீதே சந்தேகம் உண்டாகிறது.

கொசுவிற்காக வீட்டைக் கொளுத்தும் மனப்பிறழ்வு நிலைக்கு இன்னொரு எடுத்துக் காட்டு:

1950களின் இறுதியில், தமிழக அதிகாரிகளில் பலர் மலையாளிகளாக இருப்பதைப் பட்டியல் போட்டார் ராமசாமி நாயக்கர்.

உடனே முழக்கமிட்டார்,

"இப்படியே நிலைமை தொடருமானால், ‘மலையாளிகள் எதிர்ப்பு மாநாட்டை’ நடத்த வேண்டியிருக்கும்"





--

Dr.Anburaj said...

அரபியாவில் இருக்கும் ஜாதிமுறையில் அரபுகள் செல்லும் இடமெல்லாம் கொண்டு செல்லும் ஜாதிவெறியாலும் தினந்தோறும் பாதிக்கப்படும் பெண்களை பற்றியும் ஜாதிவெறியால் நிகழும் இழிவுகளை பற்றியும் தொடர்ந்து பதிந்து வருகிறேன்.

They're considered untouchable. One Yemeni saying goes: “Clean your plate if it is touched by a dog, but break it if it’s touched by an Akhdam”.


நாய் தொட்டுவிட்டால் அந்த பாத்திரத்தை கழுவு. ஆனால் அக்தம் தொட்டுவிட்டால் அந்த பாத்திரத்தை உடைத்துபோடு என்பதுதான் அரபுகள் இவர்களை நடத்தும் விதம்.


ஏமனில் அல் அக்தம் என்று தீண்டத்தகாத மனிதர்களாக ஏமனின் மக்களே இழிவு செய்யப்பட்டு 500000க்கும் மேற்பட்ட மனிதர்கள் கொடுமைக்கு ஆளாக்கப்படுகிறார்கள்.