Followers

Wednesday, April 17, 2013

ஆரம்பிச்சுட்டாங்கய்யா....பெங்களூரில் குண்டு வெடிப்பாம்!

சில நாட்களுக்கு முன்பு கோவையில் இந்து கட்சியைச் சேர்ந்த அர்ஜூன் சம்பத் வீட்டில் அதிகாலையில் வெடி குண்டு வீச்சு. தற்போது பெங்களூரில் பாஜக அலுவலகம் முன்பு குண்டு வெடிப்பு. ஆச்சரியமாக இந்த குண்டு வெடிப்பிலும் உயிரிழப்பு இல்லை என்பதை கவனிக்கவும். குண்டு வெடிப்பை நிகழ்த்தியவர்களுக்கு இந்த செய்தியை மீடியாக்கள் மூலம் பலரையும் சென்றடையச் செய்ய வேண்டும் என்பதே முக்கிய நோக்கமாக இருந்துள்ளது. ஒருக்கால் இதனை எந்த பெயர்தாங்கி முஸ்லிம் குழுக்களாவது செய்திருக்குமானால் சட்டத்தின் முன் நிறுத்தி உச்சபட்ச தண்டனை எதுவோ அதனை விரைவாக தர வேண்டும். இனி செய்தியை பார்ப்போம்.



பெங்களூரு : பெங்களூருவில் மல்லேஸ்வரத்தை தொடர்ந்து ஹிப்பல் என்ற இடத்தில் உள்ள மேம்பாலம் அருகிலும் குண்டுவெடிப்பு தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது. மல்லேஸ்வரத்தில் பா.ஜ. அலுவலகம் அருகே இன்று பைக்கில் வைக்கப்பட்டிருந்த ‌குண்டு வெடித்தது. மல்லேஸ்வரம் பா.ஜ., அலுவலகம் அருகே நடைபெற்ற தாக்குதலில் 8 போலீசார் உள்பட 16 பேர் காயமடைந்தனர். ஹிப்பல் மேம்பாலத்தில் நடைபெற்ற தாக்குதலில் 15 பேர் காயமடைந்துள்ளனர். கர்நாடகா தேர்தல் நடைபெற உள்ள சமயத்தில் அடுத்தடுத்து நடத்தப்பட்டிருக்கும் குண்டுவெடிப்பு தாக்குதல்கள் அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
கர்நாடகா மாநிலம், பெங்களுரூவையடுத்த, மல்லேஸ்வரம் பகுதியில் பா.ஜ., அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்திற்கு வெளியே இன்று காலை பயங்கர சத்தத்துடன் திடீரென சக்திவாய்ந்த குண்டு வெடித்தது. இதில் வெளியில் நிறுத்தப்பட்டிருந்த 3 கார்கள் தீப்பிடித்தன. காரில் இருந்து வெடிகுண்டு நிகழ்ந்தது தெரியவந்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்தில் பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசார் 8 பேரும், அந்த வழியாக வந்த மாணவி ஒருவரும் படுகாயமடைந்தனர்.

கர்நாடக சட்டசபை தேர்தலுக்கு வேட்பு மனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் என்பதால் பா.ஜ.க, தலைவர்கள் பலர் வேட்புமனு தாக்கல் செய்ய புறப்பட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அலுவலக வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 3 கார்கள் திடீரென வெடித்து சிதறி உள்ளது.

குண்டுவெடிப்பிற்கு அரசியல் ஆதாயமே காரணம் என காங்கிரஸ் தலைவர் ஷகீல் அகமது குற்றம்சாட்டி உள்ளார். அரசியல் ஆதாயம் பெறுவதற்காக பா.ஜ.க, வே இந்த குண்டுவெடிப்பை நிகழ்த்தி உள்ளதாக பெங்களூரு குண்டுவெடிப்பு குறித்து காங்கிரஸ் தலைவர் பேசி உள்ளது புதிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

ஷகீல் அஹமதின் வாதத்தை நாம் ஒதுக்க முடியாது. ஏனெனில் ஊழலாலும் உட்கட்சி தகராறுகளாலும் பிஜேபி இனி ஆட்சியை பிடிக்க முடியாது என்பது தெளிவாகவே அவர்களுக்கும் தெரிந்துள்ளது. இந்த நிலையை மாற்ற ஊழல்களை மறைத்து உட்கட்சி பூசல்களையும் மறைக்க இந்த குண்டு வெடிப்பு பிஜேபிக்கு நன்றாகவே கைக் கொடுக்கும். இதன் மூலம் இந்துக்களின் ஓட்டுக்களை சிதறாமல் அள்ளலாம் என்பது இவர்களின் திட்டம். இந்த வகையில் போலீஸார் விசாரித்தால் உண்மை குற்றவாளிகள பிடிபடுவார்கள். பிஜேபி ஆட்சியில் இது சாத்தியப் படுமா! யாராவது பிளாட்பாரத்தில் தூங்கிக் கொண்டிருக்கும் ஒரு பெயர்தாங்கி முஸ்லிமை பிடித்து 'பாகிஸ்தான் ஆதரவோடு வெடி குண்டு வைத்த தீவிரவாதி கைது' என்று பத்திரிக்கைகளில் நாளை செய்தி வரும். ஆனால் உண்மை நிலவரங்களை த்றபோது பெரும்பாலான இந்துக்களும் உணர்ந்தே வருகின்றனர்.

எனவே இந்த நாட்டை முன்னேற்றுவதறகு சிறந்த திட்டங்களை தீட்டி அதைச் சொல்லி பிஜேபி ஆட்சியைப் பிடிக்கட்டும். இனிமேலும் குண்டு வெடிப்புகளை நிகழ்ததி அதன் மூலம் ஆட்சியைப் பிடிக்க கனவு காண வேண்டாம். இது தொடர்ந்தால் இந்துக்களாலேயே இவர்கள் ஓரம் கட்டப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை.

--------------------------------------------------------

AHMEDABAD: Gujarat's VHP leadership is up in arms against Gujarat government's decision to seek death penalty for former state minister Maya Kodnani and nine others in connection with the 2002 Naroda Patiya massacre case.

"VHP strongly condemns the reported decision of the Gujarat government to seek death penalty for Maya Kodnani, Babu Bajarngi and other Hindus sentenced in the Naroda case," Gujarat VHP general secretary Ranchhod Bharwad told reporters here on Wednesday.

http://timesofindia.indiatimes.com/india/VHP-up-in-arms-against-Modi-govt-opposes-move-to-seek-death-penalty-for-Kodnani/articleshow/19600825.cms

கலவரம் என்ற பெயரால் ஆயிரக்கணக்கான முஸ்லிம்களை படுகொலை செய்ய உதவியவர் மோடி என்பது நமக்குத் தெரியும். தற்போது இந்த வழக்கிலிருந்து தாம் தப்பித்துக் கொள்ள முஸ்லிம்களை படுகொலை செய்யப்பட்ட வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட 10 பேருக்கு தூக்குத் தண்டனை விதிக்க மோடி அரசு பரிந்துரைத்துள்ளது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கோட்னானி,பஜ்ரங்கி உட்பட 32 பேரை குற்றவாளிகள் என தீர்ப்பளித்தது. இதில் கோட்னானிக்கு 28 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

பஜ்ரங்கிக்கு ஆயுட்கால சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் 8 பேருக்கு 31 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. 22 பேருக்கு 24 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

இந்நிலையில் 7 மாதங்களுக்குப் பிறகு குஜராத் மாநில அரசு திடீரென ஒரு முடிவை எடுத்திருப்பது அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது. இந்த வழக்கில் கோட்னானி, பஜ்ரங்கி உட்பட 10 பேருக்கு விதிக்கப்பட்ட ஆயுட்கால சிறைத் தண்டனையை தூக்கு தண்டனையாக மாற்றக் கோரி ஆளும் நரேந்திர மோடி அரசு முறையீடு செய்ய முடிவு செய்திருக்கிறது.

இதற்காக மாநில அரசு, மூன்று நபர் சட்ட வல்லுநர் குழுவை அமைத்துள்ளது. விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து 10 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கக் கோரி குஜராத் அரசு சார்பில் இன்று உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட இருக்கிறது.

பிரதமர் வேட்பாளராக தம்மை பாஜக முன்னிறுத்தினாலும் குஜராத் கலவரங்களை காரணம் காட்டி தம் மீது முன்வைக்கப்படும் விமர்சனங்களுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் வகையில் நரேந்திர மோடி இத்தகைய நடவடிக்கையை மேற்கொண்டிருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர். மாயா கோட்னானியைப் பொறுத்தவரையில் மோடியின் மிக நெருங்கிய ஆதரவாளர்தான்... ஆனாலும் தம் மீதான கறையைத் துடைத்தாக வேண்டிய நிலையில் மாயா கோட்னானியை பலி கொடுக்கும் முடிவை எடுத்திருக்கிறார் மோடி.

ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற தனது ஆட்களையே பலிகடா ஆக்கவும் இந்த இந்துத்வாவாதிகள் தயங்க மாட்டார்கள் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு சிறந்த எடுத்துக் காட்டு. என்னதான நல்லவர் வேஷம் தற்போது கட்டினாலும் குஜராத் கூட்டுக் கொலையில் மோடியின் பங்கை மறைக்க முடியாது. இன்றில்லா விட்டாலும் வருங்காலத்திலாவது அதற்கான தண்டனையை மோடி அனுபவிக்க வேண்டும். நடுநிலைவாதிகள் எதிர்பார்ப்பதும் அதைத்ததான்.

---------------------------------------------------------------
டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் வந்த சில வாசகர் கடிதங்கள்...


criss (Sydney ) said.....
When the day comes and election results come Modi will be the biggest joke of the century as Advani was. I am a Hindu and I don't support Modi. I don't mind Advani or Sushma or Jaswant Singh but no to Modi, he is a arrogant politician

------------------------------------------
prasoon chudry said....
Hindus to not support these terrorist, VHP and RSS who wants to be the Taliban for Hindus. Neither Hindus are medieval narrow minded community stuck in time by any old dogma or book. Even though the Hindu rituals looks very ancient and stuck in stone age, the reality is he leaves the religion once he is out of the temple after 10 min of mindless ritual. You can guess how much Hindus appreciate these rituals from the fact that they would pay extra to the priest to finish the ritual by taking shortcut. This is the reason BJP never crossed more than 150 mark in parliament now even 100 looks a impossible task for them. One thing I like about India is the secular democracy even though we are a super corrupt nation we have been successful in preserving the secular democracy. India needs to handle these terrorist with heavy hand and give them maximum sentence. There is no place for such elements in Indian society it not like barbarian Bedouin tribes of middle east we are a progressive nation we have to move forward and remove these weeds.

------------------------------------------
mksh dubai said....
Now the nation understands why Modi was called 'maut ka saudagar'. 3000 deaths to win three Gujarat assembly elections in a row. Now a few more deaths of his own soldiers to stake the claim for the top job of the country. Modi is truly a good businessman. Jay Modi.

7 comments:

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

குண்டு வெடிப்புக்கு நமது கடும் கண்டனம். குண்டை யார் வைத்தாலும் எந்த கட்சி வைத்தாலும் அது மன்னிக்க முடியாத குற்றம்.


இன்றைய தேர்தல் அரசியலில் குண்டு வெடிப்புகளுக்கு மிகவும் முக்கியத்துவம் உண்டு.


பாஜக ஆளும் மாநிலங்களில் அதன் தேர்தல் வெற்றிக்கு முக்கியமாக தேவைப்படுவது குண்டு வெடிப்புகள்தான்கள்..!

அது வெடிக்க வேண்டிய இடங்கள்.... கோவில்கள் அல்லது பாஜக சங் பரிவார அலுவலகங்கள்.

//சில நாட்களுக்கு முன்பு கோவையில் இந்து கட்சியைச் சேர்ந்த அர்ஜூன் சம்பத் வீட்டில் அதிகாலையில் வெடி குண்டு வீச்சு. தற்போது பெங்களூரில் பாஜக அலுவலகம் முன்பு குண்டு வெடிப்பு.//

ஆகவே... அடுத்த ஐந்து வருஷம் கர்நாடகாவை ஆளப்போவதற்கு பாஜக தன்னை மிகச்சிறப்பாக அனாயாசமாக தயார் படுத்திக்கொண்டுவிட்டது..!

இதற்கு பதிலடியாக காங்கிரஸ் தனது கட்சி அலுவலகத்திலும் பள்ளிவாசல்கள் சர்ச்சுகள் போன்ற இடங்களிலும் வெடிகுண்டு வைத்துக்கொண்டால்... பாஜகவுக்கு இன்றைய மத அரசியலிலும் தேர்தலிலும் கொஞ்சம் டஃப் ஃபைட் கொடுக்கலாம்..!

(ஆனால், இதையும் அரசும் ஊடகமும் தம் வசம் உள்ளதால்... முஸ்லிமகள் மீது பழி போட்டு காங்கிரசுக்கு எதிரான ஓட்டு அறுவடை செய்யத்தான் கர்நாடக பாஜக முயலும். ஆகவே, காங்கிரஸ் சற்று சிந்தித்து நிதானிப்பது நல்லது.)

பொறுத்திருந்து பார்ப்போம்... காங்கிரசின் அரசியல் அறிவு பாஜக அளவுக்கு இருக்கிறதா என்று..!

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

ஸலாம் சகோ.சுவனப்பிரியன்,

//இந்நிலையில் 7 மாதங்களுக்குப் பிறகு குஜராத் மாநில அரசு திடீரென ஒரு முடிவை எடுத்திருப்பது அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது. இந்த வழக்கில் கோட்னானி, பஜ்ரங்கி உட்பட 10 பேருக்கு விதிக்கப்பட்ட ஆயுட்கால சிறைத் தண்டனையை தூக்கு தண்டனையாக மாற்றக் கோரி ஆளும் நரேந்திர மோடி அரசு முறையீடு செய்ய முடிவு செய்திருக்கிறது.//

இது மோடி பிரதமர் ஆக பாஜக மோடிக்கு தந்த யோசனை.

ஆனால்.....

நான் பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் பிரதமர் ஆக அதைவிட சூப்பர் ஐடியா சொல்லவா...?

பேசாமல்...
"கோத்ரா ரயில் எரிப்பு, குஜராத் கலவர கொலைகள், நாட்டில் நடந்த பற்பல சங் பரிவார பயங்கரவாத குண்டு வெடிப்புகள் எல்லாத்துக்கும் மூல காரண சூத்திரதாரி நரேந்திர மோடிதான்" என்று ராஜ்நாத் சிங் ஒரே ஒரு அறிக்கை விட்டுவிட்டு... அதற்கான சாட்சிகளை உச்ச நீதி மன்றத்தில் சமர்ப்பித்து விட்டு மோடிக்கு தூக்கு தண்டனை கோரி விட்டால் போதும்..!

சந்தேகமே இல்லாமல்... அடுத்த ஆட்சி... பாஜக ஆட்சிதான்... அடுத்த பிரதமர்.. 'நீதிமான்' ராஜ்நாத் சிங் தான்..!

இந்த திட்டத்தை கொஞ்சம் பாஜகவினர் யோசித்தால் என்ன..?

//ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற தனது ஆட்களையே பலிகடா ஆக்கவும் இந்த இந்துத்வாவாதிகள் தயங்க மாட்டார்கள் என்பதற்கு//

இப்படி ஒரு சம்பவம் மேலும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக இருக்கட்டுமே..!

மிஸ்டர் ராஜ்நாத் சிங், நீங்க பிரதமர் ஆக... இந்த ஐடியாவுக்கு - காப்பிரைட் எனக்குத்தான் சொல்லிப்புட்டேன்... ஆமாம்..!

Seeni said...

nantri !

Unknown said...

அடேங்கப்பா. நிஜமாவே இஸ்ரேல்ல, பாலஸ்தீனத்துல பாகிஸ்தான்ல வெடிக்குற குண்டு எல்லாம் பிஜெபி பண்ணினது போல. நான் ஏமாந்துட்டேன் சுவனம்

suvanappiriyan said...

சலாம் சகோ ஆஷிக்!

//ஆகவே... அடுத்த ஐந்து வருஷம் கர்நாடகாவை ஆளப்போவதற்கு பாஜக தன்னை மிகச்சிறப்பாக அனாயாசமாக தயார் படுத்திக்கொண்டுவிட்டது..!//

இது போன்ற ஐடியாவெல்லாம் இவர்கள் மோடியிடமிருந்து கற்றுக் கொண்டவை. 3000 முஸ்லிம்களைக் கொன்று மூன்று முறை ஆட்சியை தக்க வைத்து கொண்டாகி விட்டது. தற்போது பிரதமர் பதவி ஆசையால் தனது ஆட்களையே பலிகடா ஆக்க துணிந்து விட்டார் மோடி. இந்த நூற்றாண்டின் மிக மோசமான அருவறுக்கத் தக்க தலைவர்களில் முதலிடத்தில் இருப்பவர் மோடி என்றால் மிகையில்லை.

suvanappiriyan said...

//அடேங்கப்பா. நிஜமாவே இஸ்ரேல்ல, பாலஸ்தீனத்துல பாகிஸ்தான்ல வெடிக்குற குண்டு எல்லாம் பிஜெபி பண்ணினது போல. நான் ஏமாந்துட்டேன் சுவனம்//

அங்கும் இது போன்ற குண்டு வெடிப்புகளை நிகழ்த்துவது மொசாத்தின் கைக் கூலிகளே! அமெரிக்க ராணுவம் இதனை சாக்காக வைத்து இன்னும் சில ஆண்டகள் அந்த நாடுகளில் கொள்ளையடிக்கலாம் அல்லவா!

இந்துத்வாவாதிகள் மொசாத்தோடு நெருங்கிய தொடர்பு வைத்துள்ளதையும் உன்னிப்பாக நாம் கவனித்தால் இது போன்ற குண்டு வெடிப்புகள் ஒரு சர்வதேச கூட்டு சதி என்பதை அறிந்து கொள்ளலாம்.

Anonymous said...

பெங்களூருவில் பாஜக அலுவலகம் அருகே நடந்த குண்டு வெடிப்புச் சம்பவத்தில் குண்டு வைத்து வெடிக்கப் பயன்படுத்திய இருசக்கர வாகனத்தின் உரிமையாளர், சென்னையை சேர்ந்தவர்

எனத் தெரியவந்ததை தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

பெங்களூருவில் பா.ஜனதா அலுவலகம் அருகே மோட்டார் சைக்கிளில் அந்த வெடிகுண்டு மறைத்து வைக்கப்பட்டு இருந்தது, விசாரணையில் தெரிய வந்தது. தமிழ்நாடு பதிவு எண் கொண்ட அந்த ‘யமஹா’ மோட்டார் சைக்கிள், 25 ஆண்டு பழமையானதாகும்.

இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், சென்னை பழவந்தாங்கல் அருகில் உள்ள தில்லை கங்கா நகரைச் சேர்ந்த கே.எஸ். சங்கரநாராயணனின் மகன் சுந்தரின் பெயரில் அந்த வாகனம் பதிவு செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து அவரிடம் விசாரித்ததில், தனது மகன் 4 ஆண்டுகளுக்கு முன்பே வெளிநாடு சென்று விட்டதால், அவரது வாகனத்தை அப்போதே விற்றுவிட்டதாகத் தெரிவித்துள்ளார். ஆனால் அவர்களிடம் விற்பனை செய்யப்பட்டதற்கான ஆவணங்கள் எதுவும் இல்லை. இதுகுறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.