Followers

Saturday, June 07, 2014

க்ருஷ்ணகுமாருக்கு வன்முறை பற்றிய சில வரலாறுகள்!



(சிதம்பரம் கோவிலில் சமணர்கள் கழுவிலேற்றி கொல்லப்பட்டதை விவரிக்கும் சிற்பங்கள்)

திரு க்ருஷ்ணகுமார்!

//மாற்றுக்கொள்கைகளைக் கொண்டவர் என்பதற்காக சொந்த மதத்தைச் சார்ந்தவரின் ரத்தத்தை மிக அதிக அளவில் குடிக்கும் மதம் இஸ்லாம் என்றால் மிகையாகாது.//

வாழ் நாளில் எதைவேண்டுமானாலும் மறைத்துவிடலாம், மறந்தும் விடலாம். ஆனால், உண்மைகளையும் சரித்திரத்தையும் ஒருபோதும் எவராலும் மறைக்கவும், மறக்கவும் முடியாது. உலகத்தின் எந்த மூலைக்கு ஓடினாலும் உங்களின் சரித்திரம் உங்களை விடாமல் துரத்தி துரத்தி பிடிக்கும். என்றாவது ஒரு நாள் கட்டாயம் அகப்பட்டுக்கொள்வீர்கள். இஸ்லாம் வன்முறையில் வளர்ந்ததா? அல்லது வன்முறையைப் பயன் படுத்தி சமணத்தையும் பவுத்தத்தையும் அழித்து சைவ வைணவ மதமாக வளர்ந்து இன்று இந்து மதமாக பரிணமித்துள்ளதா? எது உண்மை என்பதை இந்த பதிவு உங்களுக்கு மிக அழகாக விவரிக்கும்.. இனி பதிவுக்குள் செல்வோம்.

சமண - பௌத்த மதங்களை அழித்த சைவம்!

கி.பி.ஐந்து ஆறு ஏழாம நூற்றாண்டுகளில் தமிழ் நாட்டில் சமண சமயமும் பௌத்த மதமும் பெரிதும் செழித்து வளர்ந்திருந்தது. சைவ வைணவ மதங்கள் முடங்கிக் கிடந்தன. மக்களில்பெரும்பாலோர் சமணராகவும் பௌத்தராகவும் இருந்தனர். நாட்டை ஆண்ட மன்னர்களும் சமண பௌத்த மதங்களைத் தழுவியிருந்தனர்.

கி.பி.ஏழாம் நூற்றாண்டில் சைவ அடியார்களான நாயன்மார்களும், வைணவ அடியார்களான ஆழ்வார்களும் 'பக்தி' இயக்கத்தை ஆயுதமாகக் கொண்டு சமண பௌத்த மதங்களை அழித்திட முற்பட்டனர்.

'சமண சமயம் பலவிதத்தில் தாக்கப்பட்டது. கொடுமைப் படுத்துதல், கழுவேற்றுதல், கொலை செய்தல், கலகம் விளைவித்தல், நில புலங்களைக் கவர்தல் முதலிய செயல்கள் நிகழ்ந்ததைக் காண்கிறோம். இந்துக்கள் சமண மதத்தை அழித்த செய்திகள் பல உள்ளன.
-மயிலை சீனி வேங்கடசாமி, சமணமும் தமிழும்,
Page 68.

'வெறுப்போடு சமணர் முண்டர் வீதியில் சாக்கியர்கள் நின்பால் பொறுப்பரியன்கள் பேசில் போவதே நோயதாகிக் குறிப்பெனக் கடையுமாகில் கூடு மேல் தரையை ஆங்கே அறுப்பதே கருமங்கண்டாய் அரங்கமா நகருளானே!'
-தொண்டரடிப் பொடியாழ்வார், திருமலை, எட்டாவது பாடல்.

ஆழ்வாரின் இந்தப் பாடலின் மூலம் அக்காலத்தில் சமயப் போர் எவ்வளவு வேகம் கொண்டிருந்தது என்பது விளங்குகிறது. இங்கு சாக்கியர்கள் என்று வருவது பௌத்தர்களைக் குறிக்கும்.

-----------------------------------------

திருநாவுக்கரசர்!

தென் ஆற்காடு மாவட்டத்தில் உள்ள பாடலிபுத்திரத்தில் சிறப்புப் பெற்றிருந்த சமணப்பள்ளி இருந்தது. இங்கிருந்து தான் சர்வநந்தி என்பவர் 'லோகவிபாகம்' என்னும் நூலை எழுதினார்.கி.பி. 458 - ல் சிம்மவர்மன் என்னும் பல்லவ மன்னன் காஞ்சிபுரத்தை அரசாண்டிருந்த போது அவ்வரசனது இருபத்திரண்டாவது ஆட்சி ஆண்டில் 'லோகவிபாகம்'பாகத மொழியிலிருந்து வட மொழியில் மொழி பெயர்க்கப்பட்டது. இதன் பிறகு நூற்று அறுபது ஆண்டுகளுக்கு பின்னர் திருமுனைப்பாடி நாட்டில் திருவாமூரில் புகழானார், மாதினியார் புதல்வராகப் பிறந்தவர் மருணீக்கியார். இவரது சமய அறிவால் சமணர்கள் 'தருமசேனர்' என்னும் பெயர் கொடுத்து அவரைப் போற்றினார்கள். நெடுங்காலம் சமணகுருவாக பாடலிபுத்திர சமணப் பள்ளியில் இருந்த தருமசேனர் சமண சமயத்தை விட்டு சைவ சமயத்திற்கு வந்த போதுதான் திருநாவுக்கரசர் என்ற பெயர் மாற்றம் பெற்றார்.
-மயிலை சீனி. வேங்கடசாமி, மகேந்திரவர்மன்,
Chennai, Page 27-29
-Mysore Archaeological Report, 1909-10, Page 112

-------------------------------------------

சமண மதம் துடைக்கப் படுதல்

சமண சமயத்தவனாக இருந்த பல்லவ மன்னன் மகேந்திரவர்மனைச் சைவ சமயத்தில் திருநாவுக்கரசர் சேர்த்தார். அத்தோடு நின்று விடாமல், தாம் அப்பர், தருமசேனர் என்னும் பெயருடன் தங்கியிருந்த பாடலிபுத்திர சமணப் பள்ளியை இடித்துத் தள்ளவும் ஏற்பாடு செய்தார்.

பல்லவ அரசனும் சமணக் கல்லூரியை ஒழித்தான். பள்ளிகளையும் பாழிகளையும் அழித்தான். அவற்றின் சிதைவுகளைக் கொண்டு வந்து திருவதிகையிற் 'குணதரஈச்சரம்' என்று தன் பெயரால் கோவில் ஒன்று கட்டினான்.
-Page 275, பல்லவர் வரலாறு,

இங்கு சமணர் கோவில் இருந்தது என்பதை உறுதிப்படுத்த மஞ்சக் குப்பம் சாலையில் யாத்திரிகர் பங்களாவுக்கு அருகில் இன்றும் சமணத்திற்கு உருவம் காணப்படுகிறது.
-South Arcot District, Gazetter, Page 369.

-------------------------------------------

பெரிய புராணம் தரும் செய்தி!

'வீடறியாச் சமணர் மொழி பொய்யென்று மெய்யுணர்ந்த காடவனுந் திருவதிகை நகரின் கட்கண்ணுதற்குப் பாடலிபுத்திரத்தில் மண் பள்ளியொடு பாழிகளுங் கூட இடித்துக் கொணர்ந்து குணதரவீச்சரம் எடுத்தான்.
-தெய்வப் புலவர் சேக்கிழாரடிகள் அருளிய திருத் தொண்டர் மாக்கதை, ப.இராமநாதபிள்ளை
-திருநாவுக்கரசு நாயனார் புராணம், பாடல் 146, பக்கம் 289.

------------------------------------------


திருஞான சம்பந்தருக்கனுப்பிய தூது!

'மங்கையர்க்கரசியும் குலச்சிரையாரும் ஓர் பிராமணன் மூலமாக திருஞான சம்பந்த மூர்த்திக்கு ஒரு திருமுகம் அனுப்பி, மதுரைக்கு வந்து சமண இருளைப் போக்கி சைவப் பயிர் முன் போல் தழைக்க அனுக்ரஹிக்கும்படி வேண்டினர்.'
-கா.சு. சேஷகிரி அய்யர், சிவபிரானது 64 திருவிளையாடற்சுருக்கம், பக்கம் 84.

கழுவிலேறிய சமணர்கள்!

'பாண்டியவரசர் குலச்சிறை நாயனாரை நோக்கி சமணரைக் கழுவிலேற்றி முறை செய்யுமாறு பணித்தார். பிள்ளையார் அவர் செய்த சிவா பராதங்கருதி விலக்காதிருந்தார். குலச்சிறை நாயனார் முறை செய்யச் சமணர் யாவரும் கழுவிலேறி மாண்டார்கள்.'
-சதாசிவ செட்டியார், தேவாரப் பதிகங்கள், சென்னை
1925, page 18

'அரசர் குலச்சிறையாரை நோக்கி, 'சமணர்களைக் கழுவிலே ஏற்றுக என்று ஆஞ்ஞாபித்தார்..... திடபக்தியுடைய அமைச்சர் குலச்சிறையார் கழுத்தறிகளை நிறையாக நாட்டு வித்து அவைகளில் ஏற்ற, அதிபாதகர்களாகிய சமணர்கள் எண்ணாயிரவரும் தானாகவே ஏறினார்கள்.'
ஏ.ஜி.கோமதி அம்மாள், திருத் தொண்டர் பெரிய புராணம், சைவம் வளர்த்த அரசி, கோவில்பட்டி,
1948, Page 18

'அமைச்சர் குலச்சிறையார் கழுத்தறிகளை நாட்டிய பின் தோல்வியுற்று நின்ற சமணர் அனைவரும் அத்தறிகளில் ஏறி உயிர் துறந்தனர்.'
க. வெள்ளைவாரணன்,பன்னிறு திருமறை வரலாறு, அண்ணாமலைப் பல்கலைக்கழகம்,
1972, Page 144

--------------------------------------------

சமணர்கள் அனுபவித்த கொடுமை!

'மன்னன் சமண விரோதியாகி, பாண்டிய நாட்டிலுள்ள சமணர்களை வெட்டி வீழ்த்தி, அவர்கள் சொத்து, சுதந்திரம், கோயில், குளம், மடம் முதலியவைகளைக் கைப்பற்றும்படி தன் சைன்யங்களை ஏவியதோடு, தன் முன்னிலையிலேயே அநேக ஆயிரக்கணக்கான சமண முனிவர்களை வலியப் பிடித்து கழுமரத்திலேற்றி பதைக்கப் பதைக்கக் கொன்றான்.'
-அ.பொன்னம்பலம், அப்பரும் சமபந்தரும், சென்னை,
1983, Page 28

'கழுவிலேறாத சமணர்களை எல்லாம், சைவாச்சாரத்தைக் கொண்டவர்கள் ஒவ்வொருத்தராகப் பிடித்து அந்த முத்தலைக் கழுமரங்களிலே ஏற்றியிருத்திக் கொன்றார்கள். அந்த சமணர்களுக்குப் பாரம்பரியாக அடியார்களானவர்கள் சாவப்பயந்து மனங்குலைந்து விபூதி பூசிக் கொண்டார்கள். அந்த விபூதி கிடையாமல் பசுவின் கோமயத்தை எடுத்திட்டுக் கொண்டார்கள். அதுவும் கிடைக்காத சிலர் பசுவின் கன்றைத் தோள் மேலே தூக்கிப் போட்டுக் கொண்டார்கள்.'
'விபூதி, கோமயம், பசுவின் கன்று இந்த மூன்றுங் கிடையாத சிலர் விபூதி பூசின நெற்றியுடனே நெற்றியை மோதிப் பூசிக் கொள்ள கோமயத்திலுமப்படியே மோதியிட்டுக் கொண்டும் இப்படியாகத் தங்கள் பாசங்களை வென்று பிழைக்க எண்ணினவர்களைக் கொல்லாமல் விட்டு விட்டனர்.'
-பூவை கலயாண சுந்தர முதலியார் பொழிப்புரை, திருவிளையாடற் புராணம்,சென்னை,
1925, Page 494.

--------------------------------------------

நாய் நரி தின்ற சமணர் உடல்கள்!

விபூதி பூசியவர்கள் உயிர் தப்பினர். அதற்கு உடன் பட மறுத்ததால், கழுவிலேற்றிக் கொல்லப்பட்டவர்களின் உடல்கள் என்ன ஆயிற்று தெரியுமா?

'கழுவிலேறி இறந்தவர்களெல்லாம் சுற்றப்பட்ட பருந்துகளும், காக்கைகளும், நரிகளும், நாய்களும், தொடர்ந்து கௌவிப் பிடித்திழுத்துத் தின்னக் கிடந்தார்கள்.'

'மற்றிவர் தம்மை யூற்றஞ் செய்திலர் யாருஞ் சுற்றிய சேனங்காக நரிகணாய் தொடர்ந்து கௌவிப் பற்றிநின் றிர்த்துத் தின்னக் கிடந்தனர்.'

பரஞ்சோதி முனிவர் அருளிய திருவிளையாடற் புராணம், உ.வே.சா.பதிப்பு, சென்னை,
1937, Page 1195.

'கூன் பாண்டியன் சைவத்திற் புகுந்த நாளே சமணமும் வீழ்ந்த நாளாகும். அதன்பின் புத்தமதம் திரும்பத் தலை தூக்கவே இல்லை. நம்பியாண்டார் நம்பி காலமாகிய பதினோறாவது நூற்றாண்டில் தமிழ்நாட்டிலிருந்து அவை அழிந்து பொயின.'
பெ. சுந்தரம் பிள்ளை எழுதிய 'திருஞான சம்பந்தர் காலம்' என்ற ஆங்கில நூல்.

'திருஞான சம்பந்தர் மதுரையில் எட்டு ஆயிரம் சமணரைக் கழுவில் ஏற்றினார் என்று சைவ சமய நூல்களாகிய பெரிய புராணம், திருவிளையாடற்புராணம், தக்கயாகப் பரணி முதலிய நூல்கள் கூறுவதும் இவற்றை நினைவு படுத்த மதுரைப் பொற்றாமரைக் குளத்து மண்டபத்தின் சுவற்றில் சமணரைக் கழுவேற்றும் காட்சியைச்சித்திரம் தீட்டி வைத்திருப்பதும், மதுரைக் கொவிலில் நடை பெற்று வரும் உற்சவங்களில் ஐந்து நாள் கழுவேற்று உற்சவம் ஆண்டு தோறும் நடைபெற்று வருவதும் இவை நடைபெற்றதற்கு முதன்மையான சான்றுகளாகும்.'
மயிலை சீனி வேங்கடசாமி, சமணமும் தமிழும், பக்கம் அறுபத்தெட்டு.

திருமங்கையாழ்வார்

தொள்ளாற்றுப் போர் வென்ற நந்தியின் பாட்டனான பல்லவ மன்னன் நந்திவர்மன் காலத்தில் திருமங்கையாழ்வார் வாழ்ந்திருந்தார். அவர் சமண பௌத்த சமயங்களைத் தாக்கி வைணவ சமயத்தை நிலை நிறுத்தினார்.
-மாணிக்கம் பிள்ளை, பல்லவர் வரலாறு, சென்னை, பக்கம் இருநூற்று எழுபத்தேழு.

கி.பி.எட்டாம் நூற்றாண்டினரான இரண்டாம் நந்திவர்மன் காலத்தில் சோழ நாட்டின் ஒரு பகுதியான ஆலி நாட்டை ஆண்ட குறுநில மன்னர் திருமங்கை ஆழ்வார்.
இவர் நாகப் பட்டினத்துப் பௌத்த விகாரத்தில்இரந்த பொன்னால் வேயப்பட்ட புத்தர் சிலையைக் கவர்ந்து வந்து அதைக் கொண்டு பல கொவில் திருப்பணிகள் செய்தார். பௌத்த சமண சமயங்கள் மீது நாயன்மாரைப் போலவே மிக்க வெறுப்புற்றவர் என்பதை இவரது பாடல்களைக் கொண்டு நன்கு உணர முடிகிறது.
-மயிலை சினி வேங்கடசாமி, மூன்றாம் நந்திவர்மன்,சென்னை,பக்கம் ஐம்பத்து இரண்டு.
-மா.இராசமாணிக்கம் பிள்ளை, பல்லவர் வரலாறு, பக்கம் இருநூற்று எழுபத்து ஏழு.

'திருமங்கை ஆழ்வார் திருவரங்கம் பெரிய கொவில் விமான மண்டப கோபுராதி கைங்கரியங்கள் செய்யத் திருவுள்ளமாய்ப் பொருள் தேட எண்ணுகையில் நாகப்பட்டினத்தில் ஒரு பொன்னாலான புத்த விக்ரஹமிருப்பதை அறிந்து அதை அறுத்துத் திருப்பணி செய்ய நினைத்து நாகப்பட்டினம் சென்று புத்தன் கோயிலுக்குச் சென்று விக்ரஹத்தை எடுத்து வந்துடைத்துச் சுட்டுரைத்து நன் பொன்னாக்கித் திருமதிள் கைங்கர்யத்துக்கு உபயோகப்படுத்தினர்.'
-நாலாயிர திவ்விய பிரபந்தம், சென்னை, பக்கம் இருபத்திஆறு.

கோயம்புத்தூர் மாவட்டம் உடுமலைப் பேட்டை திரு மூர்த்தி மலையிலுள்ள சமணர் கோவில் அமணலிங்கேசுவரர் என்று ஹிந்து மதக் கோவிலாக மாற்றப் பட்டது.
-புலவர் செந்தலை ந. கவுதமன், சூலூர் வரலாறு, பக்கம் நூற்று தொண்ணூற்றொம்பது.

'நாகராஜர் கோவில் தூண்களில் சமண சமயத் தீர்த்தங்கரர்களான பார்வத நாதரும், மகா வீரரும் தவக் கோலத்தில் நின்றும் அமர்ந்தும் காட்சி தருகின்றனர்.'
'கிபி பன்னிரண்டாம் நூற்றாண்டுக்குப் பின்னர் பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஆரம்பம் வரை உள்ள இடைப் பட்ட காலத்தில் நாகராஜர் கோவில் இந்து சமய கோவிலுக்குரிய மாற்றங்களைப் பெற்றிருக்க வேண்டும் எனத் தெரிகிறது.'
-எஸ். பத்மநாபன்,குமரி மாவட்ட கொவில்கள், நாகர் கோவில், பக்கம் 51,52

செஞ்சியை ஆட்சி செய்து வந்த வேங்கடபதி நாயக்கர் சமணர்களுக்கு மிகுந்த கொடுமைகளைச் செய்தார். அதனைத் தாங்க முடியாத சமணர்கள் தப்பியோடினர். செஞ்சி அரசன் அந்நாட்டுச் சமணர் தலையை வெட்டிய காலத்தில் வேறு நாடுகளுக்குத் தப்பிப் போய்விட்ட சமணர்களில் காங்கேய உடையாரும் ஒருவர்.
-மயிலை சீனி. வேங்கட சாமி, சமணமும் தமிழும், பக்கம் எழுபத்து நாலு.

-----------------------------------------

திருவாரூர் திருக்குளம்

தமிழ் நாட்டிலே பெரிய அளவிலானதும் பதினெட்டு ஏக்கர் நிலப்பரப்பைக் கொண்டதுமான திருவாரூர் திருக்குளம் இப்போதும் இருக்கிறது. திருவாரூரில் சமணர்கள் செல்வாக்குடன் இருந்த காலத்தில் அந்தத் திருக்குளம் சிறியதாக இருந்தது. அத்துடன் அந்தக் குளத்தின் நான்கு பக்கங்களிலும் சமண சமயத்தவருடைய நிலங்களும், மடங்களும், பள்ளிகளும், பாழிகளும் இருந்தன. அப்போது 'தண'டியடிகள்' என்னும் சைவ நாயனார் அந்தக் குளத்தைப் பெரிய குளமாக்கிட முயற்சி செய்தார். அங்குள்ள அரசன் சமணரை ஊரை விட்டுத் துரத்திய பின்னர் அவர்களுடைய கட்டிடங்களையும் நிலங்களையும் அழித்துப் பறித்து அந்தச் சிறிய குளத்தை இப்போதுள்ள பெரிய குளமாகத் தொண்டினான்.

'பன்னும் பாழிப் பள்ளிகளும் பறித்துக் குளஞ்சூழ் கரைபடுத்து'

-திருத் தொண்டர் புராணம், தண்டியடிகள், பக்கம் அறுபத்தொன்பது.

கும்பகோணம் தாலுகாவைச் சேர்ந்த திருநாகேச்சுவரர் கோயிலின் மண்டபக் கற்றூணில் உள்ள சாசனம் தென் கரைத்திமூர் நாட்டில் இருந்த மிலாடுடையார் பள்ளி என்னும் சமணக் கொவிலைக் குறிப்பிடுகிறது. திருக் கோவலூரில் இருந்த 'மிலாட்' அரசனால் கட்டப்பட்ட இந்தச் சமணக் கோவில் பின்னால் இடிக்கப் பட்டது. அக் கோயிற் கற்களைக் கொண்டு இப்போதுள்ள திருநாகேசுவரத்துச் சைவக் கோயில் கட்டப் பட்டது. இவ்வூருக்கு அருகிலுள்ள வயல்களில் சமண உருவங்கள் இன்றும் காணப்படுகின்றன.
-சமணமும் தமிழும், பக்கம் நூற்று முப்பத்தொன்பது.

நன்னிலம் ரயில் நிலையத்திற்கு கிழக்கே வர்த்தமானீச்சுவரர் கோயில் இப்போது உள்ளது. ஸ்ரீவர்த்தமானர்(மகாவீரர்) 24 வது தீர்த்தங்கரர். இவரத பெயரைக் கொண்டே இது பழங்காலத்தில் சமணக் கோயிலாக இருந்ததைத் தெரிந்து கொள்ள முடிகிறது. கி.பி. ஏழாம் நூற்றாண்டுக்கு முன்னரே சைவரால் கைப்பற்றப்பட்ட இச்சமணக் கோவில் சைவக் கோவிலாக்கப்பட்டது.
-சமணமும் தமிழும், பக்கம் நூற்று நாற்பது.

-----------------------------------------------

குலசேகர நல்லூர் சிவன் கோவில!

இராமநாதபுரத்திலிருந்து வட மேற்கேயும், நல்லூர் திருச்சூளை என்னும் இடத்திலிருந்து மேற்கேயும் உள்ள குல சேகர நல்லூரில் சிவன் கோவில் இருக்கிறது.

குலசேகர பாண்டியன் இந்தக் கிராமத்திலிருந்த சமணர்களைத் துரத்தி விட்டு சமணக் கொவிலை சைவக் கோவிலாக மாற்றினான்.
-சமணமும் தமிழும், பக்கம் நூற்று நாற்பத்தி ஏழு

பஸ்தீபுரம்!

கொள்ளேகால் தாலுகாவில் பஸ்தீபுரத்தில் இருந்த சமணக் கோவிலை இடித்து அந்தக் கற்களைக் கொண்டு சிவன் சமுத்திரம் என்னும் இடத்தில் காவிரி ஆற்றில் ஒரு பாலம் கட்டினார்கள்.
-சமணமும் தமிழும், பக்கம் நூற்று அறுபத்தி ஆறு.

விசயமங்கலம்!

ஈரோடு தாலுகாவில் விசய மங்கலத்துக்கருகில் அரசண்ணாமலை என்ற குன்றில் சமணக் கோவில் இருந்தது. இப்போது அக் கோவில் சிவன் கோவிலாக மாற்றப் பட்டிருக்கிறது.
-சமணமும் தமிழும், பக்கம் நூற்று அறுபத்தேழு

கும்பகோணம் விநாயகர் ஆலயம்!

கும்பகோணம் நாகேசுவரசாமி திருமஞ்சன வீதியில் உள்ள விநாயகர் ஆலயத்தில் பகவரிஷி என்னும் பெயருள்ள புத்தர் கோவில்கள் பல பிற்காலத்தில் விநாயகர் கோவில்களாக்கப்பட்டன. இங்குள்ள விநாயகர் கோவிலும் அதில் உள்ள புத்தர் உருவமும் இதற்குச் சான்றாகும்.
-மயிலை சீனி வேங்கடசாமி, பௌத்தமும் தமிழும், பக்கம் நாற்பத்தி ஐந்து.

காஞ்சிபுரத்திற்கு தென்மேற்கே பல்லவபுரம் என்ற பல்லாவரத்திற்கு அருகில் 'கணிகிலுப்பை' என்ற ஊரில் புத்தர் கோவிலை இடித்து அந்த இடத்தில் விநாயகர் ஆலயம் கட்டியிருக்கிறார்கள். அத்தோடு அங்கிருந்த புத்த உருவங்களையும் ஏரிக் கரையில் கொண்டு போய்ப் போட்டு விட்டார்கள்.
-மயிலை சீனி வேங்கடசாமி, பௌத்தமும் தமிழும்,பக்கம் நாற்பத்தி ஐந்து.

---------------------------------------------

காஞ்சிபுரம்!

காஞ்சிபுரத்தில் முக்கியமானவைகளாகக் கருதப்படும் எல்லாவற்றிலும் காமாட்சி அம்மையார் கோயில்ஒன்றாகும்.

'காமாட்சி அம்மன் கோயில் ஆதியில் பௌத்தரின் தாராதேவி ஆலயம். இவ்வாலயத்தில் பல புத்த உருவங்கள் இருந்தன.'
-மயிலை சீனி வேங்கடசாமி, பௌத்தமும் தமிழும், பக்கம் ஐம்பத்து ஐந்து.

'ஸ்ரீ ஆச்சாரியாள் பௌத்தமத நிரஸனம் செய்து வேத மதத்தை நிலை நாட்டிக் காஞ்சியில் ஷண்மத ஸ்தாபனம் செய்தபோது 'சத்தி' மதத் தலைமை ஸ்தாபனமாகப் பிரதிஷ்டை செய்ததே இந்தக் காமாட்சி அம்மன் கோவில் ஆகும்.'
-எம்.கே.ஸ்ரீநிவாசன்,காஞ்சிக் கோவில்கள், காஞ்சிபுரம், பக்கம் முப்பத்தது ஐந்து.

காஞ்சிபுரத்திலுள்ள 'புத்தர் கோவில் தெரு' இப்போது 'காமாட்ஷி அம்மன் சந்நிதித் தெரு' என்ற பெயரைப் பெற்றிருக்கிறது.
-சோமலெ,செங்கற்பட்டு மாவட்டம்,சென்னை, 1963, பக்கம் நூற்று முப்பத்தொன்பது.
1:35 AM

படிக்க படிக்க ஒவ்வொரு உண்மையாக வெளிவருவது எனக்கு ஆச்சரியத்தை அளிக்கிறது. தமிழக வரலாற்றை தோண்டிப் பார்த்தோமானால் நமது முன்னோர்கள் மதத்தின் பெயரால் ஒருவரை ஒருவர் வெட்டிக் கொண்டும் கழுவிலேற்றியும், ஒரு மதத்தவரின் வழிபாட்டுத்தலத்தை இடித்து மற்றொருவர் கோவில் கட்டிக் கொள்வதுமாக அநியாயங்கள் தடையின்றி அரங்கேறியுள்ளது. இதற்கு அரசர்களும் உடந்தையாய் இருந்திருப்பதுதான் விந்தை.

இவ்வளவு ரத்தக் கறைகளை சுமந்து கொண்டு க்ருஷ்ணகுமார் போன்றவர்களால் இஸ்லாம் வாளால் பரவியது என்று எப்படி சொல்ல மனம் வருகிறது. ஏனெனில் எங்கள் இந்து மதம் மிகவும் சகிப்புத் தன்மை வாய்ந்தது. வன்முறையை நாங்கள் ஏறெடுத்தும் பார்த்ததில்லை. என்று பல பதிவுகளில் கூறி வருகிறார். இதற்கு தர்க்க ரீதியான பதிலை எதிர்பார்க்கிறேன்.

3 comments:

Anonymous said...

வெட்ககேடு, இவ்வளவு வீரியத்துடன் இருந்த இந்துக்கள் இன்று சோரம் போய் செல்லா காசாக உள்ளனர். அதனால் தான் கண்டவனும் இங்கே ஷரியா, கொண்டு வருவோம் இஸ்லாமிய தேசம் ஆக்குவோம் என்று முழங்குகிறான்.
அய்யா யோக்கியரே. அப்படிஎன்றால் நீங்கள் எல்லாம் அன்பு மொழி பேசியா உங்கள் மதத்தை வளர்த்தீர்கள். வரலாற்றை எழுதியவர்கள் எல்லாம் பொய்யாக எழுதி விட்டார்களா
.

ஆனந்த் சாகர் said...

சரி, சில சைவ, வைணவ ஹிந்துக்கள், மன்னர்கள் சமண, புத்த மதத்தை பின்பற்றியவர்களை வன்முறையால் ஒடுக்கினர். இவர்கள் என்ன ஹிந்து மதத்தை தோற்றுவித்தவர்களா? ஹிந்து மத ரிஷிகளா? இவர்களின் வன்முறை செயலுக்கும் ஹிந்து மதத்திற்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது?

ஏழாம் நூற்றாண்டில் ஹிந்துக்களில் சிலர் பிற மதத்தினர் மீது வன்முறையை ஏவினர். இந்த வரலாறை நாங்கள் மறுக்கவில்லை. அதே சமயம் அந்த வன்முறைகளை தற்போதைய ஹிந்துக்கள் ஏற்கவும் இல்லை. இதுதான் சிந்தனை பரிணாமம். இது முஸ்லிம்களிடம் இருக்கிறதா?

சில ஹிந்துக்கள் செய்த வன்முறை செயல்கள் எப்படி முகம்மதுவின் பயங்கரவாத வன்முறை செயல்களை நியாயப்படுத்தும்? வன்முறையில் ஈடுபட்ட அந்த ஹிந்துக்கள் சாதாரண மனிதர்கள். முதிர்ச்சி இல்லாமல் அப்படி நடந்து கொண்டார்கள். ஆனால் முஹம்மது அப்படியா? அவர் தன்னை இறைவனின் தூதர், மனிதர்களுக்கு நேர்வழிகாட்டி, உலகங்களுக்கெல்லாம் அருட்கொடை, முன்மாதிரி என்றல்லவா சொல்லிக்கொண்டார்? அவர் உண்மையிலேயே அப்படிப்பட்டவராக இருந்தால் எவ்வாறு அவரால் தன்னை ஏற்காதவர்களை படுகொலை செய்ய முடியும்? அவர்களின் பெண்களை கற்பழிக்க முடியும்? செல்வங்களை கொள்ளையடிக்க முடியும்? அடிமைத்தனத்தில் தள்ள முடியும்? மற்றவர்களின் வன்முறை செயல்கள் எப்படி முகம்மதுவின் வன்முறை செயல்களை நியாயப்படுத்தும்?

ASHAK SJ said...

@ ஆனந்த் சாகர் said...
சரி, சில சைவ, வைணவ ஹிந்துக்கள், மன்னர்கள் சமண, புத்த மதத்தை பின்பற்றியவர்களை வன்முறையால் ஒடுக்கினர். இவர்கள் என்ன ஹிந்து மதத்தை தோற்றுவித்தவர்களா? ஹிந்து மத ரிஷிகளா? இவர்களின் வன்முறை செயலுக்கும் ஹிந்து மதத்திற்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது?

ஏழாம் நூற்றாண்டில் ஹிந்துக்களில் சிலர் பிற மதத்தினர் மீது வன்முறையை ஏவினர். இந்த வரலாறை நாங்கள் மறுக்கவில்லை. அதே சமயம் அந்த வன்முறைகளை தற்போதைய ஹிந்துக்கள் ஏற்கவும் இல்லை. இதுதான் சிந்தனை பரிணாமம். இது முஸ்லிம்களிடம் இருக்கிறதா?

சில ஹிந்துக்கள் செய்த வன்முறை செயல்கள் எப்படி முகம்மதுவின் பயங்கரவாத வன்முறை செயல்களை நியாயப்படுத்தும்? வன்முறையில் ஈடுபட்ட அந்த ஹிந்துக்கள் சாதாரண மனிதர்கள். முதிர்ச்சி இல்லாமல் அப்படி நடந்து கொண்டார்கள். ஆனால் முஹம்மது அப்படியா? அவர் தன்னை இறைவனின் தூதர், மனிதர்களுக்கு நேர்வழிகாட்டி, உலகங்களுக்கெல்லாம் அருட்கொடை, முன்மாதிரி என்றல்லவா சொல்லிக்கொண்டார்? அவர் உண்மையிலேயே அப்படிப்பட்டவராக இருந்தால் எவ்வாறு அவரால் தன்னை ஏற்காதவர்களை படுகொலை செய்ய முடியும்? அவர்களின் பெண்களை கற்பழிக்க முடியும்? செல்வங்களை கொள்ளையடிக்க முடியும்? அடிமைத்தனத்தில் தள்ள முடியும்? மற்றவர்களின் வன்முறை செயல்கள் எப்படி முகம்மதுவின் வன்முறை செயல்களை நியாயப்படுத்தும்?
1:33 AM ##

முஹம்மது (ஸல்) தன்னை ஏற்காதவரை கொன்றார் என்று அதாரபூர்வமாக நிரூபிக்கவும், முடியவில்லை என்றால் இனி கமெண்ட் போடாமல் இந்த blogspot ஐ விட்டு ஓடி விடவும், மேலும் முஸ்லிம் அல்லாதவர்கள் மற்றவரை கொன்ற பொது ஹிந்து தீவிரவாதம் என்று சொல்லாத நீங்கள், முஸ்லிம்களை மட்டும் இஸ்லாமிய தீவிரவாதி என்று சொல்வது ஏன். மூடர் கூடம்