Followers

Monday, December 01, 2014

தமிழகம் அராபிய கலாசாரத்தை உள் வாங்குகிறது என்பது உண்மையா?

திரு க்ருஷ்ணகுமார்!

//இதே தளத்தில் ஜெனாப் சுவனப்ரியன் என்ற இஸ்லாமிய சஹோதரர் இடக்கு மடக்காக வஹாபியர்களின் பொய்யான தமிழ்ப்பற்றை முன் வைத்த போது……… மிகத்தெளிவான தமிழக இஸ்லாமிய சஹோதரர்கள் எப்படி அராபிய மயமாகி வருகின்றனர் என்ற கருத்தை முன்வைத்தார்.//

இங்கு தவறான கருத்தை முன் வைக்கிறீர்கள். கடந்த 25 ஆண்டுகளாகத்தான் வஹாபிய (தவ்ஹீத்) சிந்தனை தமிழ் இஸ்லாமிய மக்களிடத்தில் வேரூன்றியுள்ளது. இதனால் தமிழகம் அடைந்த நன்மைகள் என்னென்ன?

1. கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக இஸ்லாமியரிடத்தில் இருந்த அரசுக்கெதிரான எண்ணங்கள் களையப்பட்டு அவர்களை சமூக நீரோட்டத்தில் கலக்க வைத்துள்ளது. இதனால் இந்து முஸ்லிம் ஒற்றுமை காக்கப்பட்டுள்ளது.

2. இன்று வரை தமிழகத்தில் இரத்த தானம் அளிப்பதில் பல ஆண்டுகளாக முதலிடத்தில் இருப்பது வஹாபிய இயக்கமான 'தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்'. இந்த குருதிக் கொடையினால் இந்துக்களும் கிருத்தவர்களும் பெரும் பலனடைந்துள்ளார்கள். அரசு பொது மருத்துவ மனை கூட தங்களுக்கு உடனடி ரத்தம் தேவைப்பட்டால் முதலில் அணுகுவது வஹாபிய இயக்கத்தைத்தான்.

3. தமிழக கிராமங்கள் தோறும் 'இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்' என்ற நிகழ்ச்சியை நடத்தி இந்துக்களையும் கிருத்தவர்களையும் அழைத்து அவர்களுக்கு உள்ள முஸ்லிம்களின் மேல் உள்ள சந்தேகங்களை போக்க வைத்து அவர்களை சகோதரர்களாக பாவிக்க வைத்துள்ளது இதே தவ்ஹீத் ஜமாத் தான்.

4. 'தமிழ் இந்துக்களின் மொழி: அரபி இஸ்லாமியரின் மொழி' என்ற எண்ணம் பல இஸ்லாமியரிடத்தில் இருந்தது. ஆனால் குர்ஆனோ நபி மொழிகளோ இதனை ஆதரிக்கவில்லை. 'உலக மொழிகள் அனைத்தையும் படைத்தது இறைவனான நானே' என்று இறைவன் குர்ஆனில் கூறுகிறான். அடுத்து முகமது நபி தனது போதனையில் 'குலப் பெருமையை எனது காலடியில் போட்டு மிதிக்கிறேன். அரபி, அரபி அல்லாதவன், வெள்ளையன், கருப்பன் என்று எதிலும் பாகுபாடு காட்டக் கூடாது. இறைவனை தூய உள்ளத்தோடு நெருங்குபவனே உயர்ந்தவன்' என்ற போதனையை அனைத்து மக்களிடத்திலும் கொண்டு சென்று இன மொழி பாகுபாட்டை இஸ்லாமியரிடத்தில் குறைத்துள்ளது இதே வஹாபிய இயக்கமான 'தவ்ஹீத் ஜமாத்'.

5. முதியோர் இல்லம், அனாதை இல்லம் என்று பல இடங்களில் தமிழகத்தில் ஆதரவற்று அலைந்து திரிந்த பல இஸ்லாமியர்களை ஒன்றினைத்து உண்ண உணவும் இருக்க இருப்பிடமும் கொடுத்து பராமரித்து வருவதும் இதே வஹாபிய அமைப்புதான்.

6. தர்ஹா, தட்டு, தாயத்து, புரோகிதம் என்று இந்து மதத்தில் உள்ள அனைத்தையும் இஸ்லாமியரும் தழுவி பல காலமாக வாழ்ந்து வந்தனர். அவர்களிடம் கடந்த 25 ஆண்டுகளாக தொடர்ந்து பிரசாரம் செய்து குர்ஆன் காட்டும் இஸ்லாமியர்களாக பெரும்பாலானோரை மாற்றியமைத்ததும் இந்த தவ்ஹீத் அமைப்புதான்.

7. இது போன்ற மிகக் குறுகிய அழகிய மாற்றத்தை பார்த்த தலித்களும் பிற்படுத்தப்பட்ட மக்களும் சாரை சாரையாக தினமும் இஸ்லாத்தினுள் தங்களை இணைத்து வருகின்றனர். அவர்களுக்கு மூன்று மாத இலவச பயிற்சி தங்குமிடமும் சாப்பாடும் கொடுத்து சிறந்த முஸ்லிம்களாக வெளியாக்குவதும் இதே வஹாபிய அமைப்பான 'தவ்ஹீத் ஜமாத்' தான்.

8. நீங்களோ அல்லது உங்களின் சாதியான பார்பன இனத்தைச் சார்ந்த மற்றவர்களோ இதனை விரும்ப மாட்டீர்கள். காலாகாலமாக இந்த மக்களை அடிமைகளாக நடத்தி பழக்கப்பட்ட உங்களைப் போன்றவர்கள் இதனால் கோபமுற்று 'அராபிய கலாசாரம் தமிழகத்தில் வஹாபியத்தால் புகுத்தப்படுகிறது' என்று கூச்சலிடுகிறீர்கள். 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்பதும் 'யாதும் ஊரே யாவரும் கேளீர்' என்பதும் 'நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள் இருக்கையில்' என்ற சிவ வாக்கியரின் வாக்கும் இந்த மண்ணுக்கு சொந்தமான கொள்கை. அதனைத்தான் இஸ்லாமும் சொல்கிறது. அதனை அராபிய கலாசாரம் என்று சொன்னால் அதனை உங்கள் மனசாட்சியே முதலில் ஒத்துக் கொள்ளாது.

1 comment:

Dr.Anburaj said...

இசுலாம் என்பது ”அரேபிய வல்லாதிக்கம் ” என்ற கடுமையான கருத்த்தை உள்வாங்கிய மென்மையான பதம்.Euphemism. முஸ்லீம் என்பவன் அரேபிய அடிமை.
கருத்துக்கள் எல்லாம் இந்தியாவில்உ ள்ளது. யாதும் ஊரே யாவரும் கேளீா் ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று கூறம் ஞான நூல்களை மசுதியில் படிப்பதுண்டா ? அரேபியன் போல் வாழ வேண்டும் என்ற அடிமைப்புத்தியை வளா்ப்து இசலாம் என்பதில் சந்தேகம் இல்லை.