Followers

Wednesday, November 19, 2014

அமெரிக்காவில் ஹிஜாபுக்கு கிடைத்த மரியாதை!



http://www.youtube.com/watch?v=mgw6y3cH7tA

இன்று உலகம் முழுவதும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. நமது இந்தியாவில் இன்னும் ஒரு படி மேலே போய் கூட்டு கற்பழிப்புகளும், ஈவ் டீஸிங்களும் மிக சர்வ சாதாரணமாக நடந்து வருகின்றன. சில பெண்கள் இதனால் தற்கொலையும் செய்து கொண்டுள்ளனர். இதனை தடுப்பதற்கு இஸ்லாம் பெண்களை சற்று கூடுதலான ஆடைகளோடு வெளியே வரச் சொல்கிறது. கை முகம் தவிர மற்ற உறுப்புகள் வெளியில் தெரியாமலும், இறுக்கமான ஆடைகளை அணியாமலும் வெளியில் வரக் கட்டளையிடுகிறது. இந்த கட்டளையின் தாக்கம் எவ்வாறு இருக்கும் என்பதை பரீட்சித்துப் பார்க்க அமெரிக்காவில் உள்ள மன்ஹாட்டன் நகரில் ஒரு இளம் பெண்ணை இறுக்கமான உடை அணிந்து நடந்து வரச் செய்தனர். அவ்வாறு அந்த பெண் நடந்து சென்றபோது அவரை கடந்து சென்ற ஒவ்வொரு ஆண் மகனும் ஒரு முறையாவது திரும்பிப் பார்க்காமல் செல்லவில்லை. இன்னும் சிலர் அந்த பெண்ணை நோக்கி சீடடி அடிப்பதும் தவறாக நடக்க முயற்சிப்பதும் தொடர்கிறது. அந்த பெண்ணைப் பார்த்து வழியில் நடந்து சென்ற ஆண்கள் கூறிய ஒரு சில வார்த்தைகளை கீழே பார்ப்போம்.

"Hi... good look in"

"hello"

"excuse me"

"wow"

"Ay mamy"

"yo... i am watching that ass"

"God bless you"

"How you doin sweet heart"

"Right here"

"Hey Gorgeous"

"come back here baby"

இவை எல்லாம் அந்த பெண்ணை கடந்து செல்லும் போது ஆண்கள் உதிர்த்த வார்த்தைகளே இவைகள்.

ஒரு ஆண் சற்று அதிகமாக அந்த பெண்ணிடம் 'ஜாலியாக இருக்கலாம் வருகிறாயா?' என்று கூப்பிடுகிறான். 'எனக்கு அதில் விருப்பமில்லை. எனக்கு பாய் ஃபிரண்டும் இருக்கிறான்' என்று அந்த பெண் மறுத்தாலும் விடாது தொந்தரவு செய்வதைப் பார்க்கிறோம்.

அந்த ஆண்களின் மீது எந்த குற்றமும் இல்லை. ஏனெனில் இயற்கையிலேயே பெண்ணினால் கவரப்படுபவனாகவே ஆண் படைக்கப்பட்டுள்ளான். ஒரு மாதிரி இறுக்கமான ஆடைகளை அணிந்து வீதியில் செல்லும் போது பலரின் கவனம் அந்த பெண்ணின் மீது செல்கிறது. இதனை நம் ஊர்களிலேயே சர்வ சாதாரணமாகப் பார்க்கலாம்.

இது ஒரு புறம் இருக்க...

அதே பெண் அதே சாலைகளில் ஐந்து மணி நேரம் அதே போன்று குர்ஆன் கட்டளையிடும் ஹிஜாபை அணிந்து கண்ணியமாக கடந்து செல்கிறார். முன்பு திரும்பிப் பார்த்த எந்த ஆண்களும் இந்த முறை அந்த பெண்ணின் அருகில் கூட வரவில்லை. இவள் ஒழுக்கமான பெண். இவளிடம் நமது பாச்சா பலிக்காது என்று ஆண்கள் தானாகவே விலகிச் செல்வதைப் பார்க்கிறோம். இதனை நமது ஊரிலும் பார்க்கலாம். புர்ஹா அணிந்து வந்தாலே அந்த பெண்ணை மரியாதையோடு பார்க்கும் பழக்கம் நம் நாட்டிலும் உள்ளது. ஒரு சில இடங்களில் சில புர்ஹா அணிந்த பெண்கள் தவறாகவும் நடக்கிறார்கள். கெட்டுப் போன அந்த ஒரு சதவீத பெண்களை நாம் கணக்கில் எடுத்துக் கொள்ளக் கூடாது. பெரும்பான்மையான முஸ்லிம் பெண்களுக்கு பாதுகாப்பு கேடயமாக இந்த புர்ஹா இருக்கிறது என்றால் அது மிகையாகாது.

யுட்யூபில் இந்த வீடியோ வெளியிட்டு 13 நாட்களே ஆகின்றன. அதற்குள் 3 மில்லியன் பார்வையாளர்களை இந்த காணொளி சென்றடைந்துள்ளது. இந்த குறுகிய காலத்திலேயே அங்கு வந்த பின்னுட்டங்கள் 7212. அனைத்து பின்னூட்டங்களையும் படித்துப் பாருங்கள். மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும்.

1 comment:

Anonymous said...

மதரஸாக்களில் தீவிரவாதம் எனக்கூவியவர்களே!

அரியானா மாநிலத்தில் சர்ச்சைக்குரிய சாமியார் ராம்பாலை கைது செய்யச் சென்ற போது ஏற்பட்ட கலவரத்தில் அவரது ஆதரவாளர்கள் ஆசிரமத்தில் இருந்து கையெறி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதால் துணை ராணுவ படை குவிக்கப்பட்டு காலையில் இருந்து இரு தரப்பாருக்கும் கடும் துப்பாக்கி சண்டை நடந்து வருகிறது!

இதுவே ஒரு மதரஸாவில் நடந்து இருந்தால் இந்நேரம் இந்த ஊடகங்கள் எப்படி சொல்லி இருக்கும்? ‘மதரஸா உள்ளே இருந்து தீவிரவாதிகள் வெடிகுண்டு வீச்சு’ ஆனால் இப்போது குண்டு வீசுபவர்கள் சாமியாரின் ஆதரவாளர்களாம்!

இந்த லட்சணத்தில் மதரஸாக்களை கண்காணிக்க வேண்டும் என சங்பரிவார் குரல் எழுப்புகின்றனர்!

கண்காணிக்க வேண்டியது பஞ்சத்தில் வாடும் மதரஸா மாணவர்களை அல்ல! மஞ்சத்தில் ஆடும் சாமியார்களை! துறவிகள் எனும் பெயரில் கோடிகோடியாய் சொத்து சேர்த்து வைத்து இருக்கும் ஆசிரமங்களை ! கொலைக்கும் அஞ்சாத மடங்களை! குண்டுவீசி துணைராணுவப் படையை எதிர்க்கின்ற தீவிரவாத ஆதரவாளர்களை !

செய்யுமா மத்திய காவி அரசு?

பாபா ராம் தேவுக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கும் கேடு கெட்ட அரசு எப்படி செய்யும்?