ஏழைகளை தேடிச் சென்று உதவுவோம்!
இறைத்தூதர்(ஸல்) அவர்கள்
கூறினார்கள். ஒருவர் ஒரு சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது பாதையில்
முட்கிளையொன்றைக் கண்டு அதை எடுத்து (எறிந்து)விட்டார். அவரின் இந்த நற்செயலை
அல்லாஹ் அங்கீகரித்து அவருக்கு (அவர் செய்த பாவங்களிலிருந்து) மன்னிப்பு
வழங்கினான்.
அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள்.
நூல்: புஹாரி.
அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள்.
நூல்: புஹாரி.
----------------------------------------------------------------------------------------
குறள் 221:
வறியார்க்கொன்று
ஈவதே ஈகைமற் றெல்லாம்
குறியெதிர்ப்பை
நீர துடைத்து.
இல்லாதவர்க்கு
வழங்குவதே ஈகைப் பண்பாகும். மற்றவர்களுக்கு வழங்குவது என்பது ஏதோ ஓர் ஆதாயத்தை
எதிர்பார்த்து வழங்கப்படுவதாகும்.
2 comments:
கர்ப்பூரமாமோ கடலுப்பு?
நம்மில் பலரும் அறியாமையின் காரணமாகவோ, பொறாமையின் காரணமாகவோ உயர்ந்த பதவியில், உயர்ந்த நிலையில் உள்ளவர்களுடன் நம்மை ஒப்பிட்டுக் கொள்வோம். அவர்களுடைய முயற்சி, உழைப்பு முதலியவற்றை மறைத்துவிட்டு நம்மை அவர்களுக்குச் சரி சமமாக காட்ட முயல்வோம். இது தவறு என்பதை விளக்க சில அழகான தமிழ்ப் பாடல்கள் உள.
கர்ப்பூரம் போலக் கடலுப் பிருந்தாலுங்
கர்ப்புர மாமோ கடலுப்புப் — பொற்பூரும்
புண்ணியரைப் போல இருந்தாலும் புல்லியர்தாம்
புண்ணியரா வாரோ புகல்
–நீதி வெண்பா (எழுதியவர் பெயர் கிடைக்கவில்லை)
பொருள்:
கடல் நீரில் உண்டாகும் உப்பு, கர்ப்பூரத்தைப் போலவே இருந்தாலும், அந்த உப்பு, கர்ப்பூரம் ஆகி விடுமா?
ஒருக்காலும் ஆகாது, அது போல,
தீச்செயல் புரிவோர், தோற்றத்தில், அழகு மிக்க நல்வினையாளர் போலத் தோன்றினாலும், அவர்கள் புண்ணியர் ஆகிவிடுவரோ? நீயே சொல்.
கான மயிலும் வான் கோழியும் ஒன்றா?
கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழி
தானு மதுவாகப் பாவித்துத் — தானுந்தன்
பொல்லாச் சிறகைவிரித் தாடினாற் போலுமே
கல்லாதான் கற்ற கவி – வாக்குண்டாம்
முறையாக யாப்பிலக்கணம் கற்காதவன், கற்றறிந்தோர் சபையில் கவி பாடுவதானது காட்டில் உள்ள மயில் தன் அழகிய தோகையை விரித்தாடியதைக் கண்ட வான் கோழி, தன்னையும் அந்த மயில் என்று எண்ணிக் கொண்டு, அதுவும் தன் அழகில்லாத சிறகுகளை விரித்தாடியது போலாகும்.
கல்லாதவன்= வான் கோழி
கற்றவன்= கான மயில்
தவறான கவிதைகள் = வான் கோழிச் சிறகு
இலக்கணக் கவிதைகள்= மயில்தோகை
நாம் வான் கோழியைப் பின்பற்றமல் இருப்போமாக!
தமிழுக்காகத் தாலியைத் ஈந்த இந்து தமிழன்! புலவா் பசி தீா்க்க தாலியைத் தானம் செய்தவன்
மதுரையை திருமலை நாயக்க மன்னன் (கி.பி 1623 முதல் 1699 முடிய) அரசாண்ட காலம் அது.அவரது அரசில் தளவாயாக இருந்தவர் ராமசுப்பய்யர் என்பவர். கண்டிப்புக்குப் பெயர் பெற்றவர். மிகுந்த பலசாலி. புத்தி கூரமையுள்ளவர்.அரசாங்கத்துக்கு வரியைச் செலுத்தத் தவறிய பாளையகாரர்களின் காணியாளர்களை அவர் சிறைப் பிடித்து சங்ககிரி துர்க்கக் கோட்டையில் அடைத்தார்.
ஆணூருக்குச் சென்ற தமிழ்ப் புலவர் ஒருவர் சம்பந்தச் சர்க்கரை மன்றாடியைப் பார்க்க விழைந்தார். ஆனால் அவர் சங்ககிரி துர்க்கத்தில் சிறை வைக்கப்பட்டிருப்பதைக் கேட்டு அங்கு சென்றார்.வாயில் காவலரிடம் நயமாகப் பேசித் தான் புலவர் என்பதைத் தெரிவித்து சிறைக்குள் சென்றார். அங்கோ உயர்ந்த பதவியில் இருந்த பலரும் இருந்தனர்.
கவிபாடி வந்த புலவரைப் பார்த்த சம்பந்த சர்க்கரை மன்றாடியார் புன்முறுவலுடன் அவரை வரவேற்றார்.
“ஐயா, புலவரே! பாடல் பாடிப் பரிசு பெறுகின்ற இடமா, இது:” என்று கூறிச் சிரித்தார்.
உடனே புலவர்,
“எவரை என்று நாம் அறிவோம்; இரப்பவனோ இடம் அறியான் இரவில் வானம்
கவரு மதி ஒருபுறத்தே நிலவெரிக்கும் பான்மைதனைக் கண்டிலீரோ
அவரை பதமாகு முனம் கடுகு பொடியாகி விடும் அதனை ஓர்ந்து
துவரை முதற் கரதலனாஞ் சம்பந்தச் சர்க்கரையார் சொல்லுவீரே!”
என்று பாடினார்.
இதைக் கேட்டு மகிழ்ந்த சர்க்கரை மன்றாடியார் புலவரை இறுகத் தழுவினார்.
“இந்தச் சிறைக்கூடத்தில் என்னைச் சந்திக்க மிகவும் சிரமப்பட்டிருப்பீர்களே” என்று கூறிக் கண்ணீர் விடுத்தார்.சிறைச்சாலையில் கவிஞருக்குப் பரிசாகக் கொடுக்கக் கையில் பணமில்லையே என்று வருந்தினார்.
பின்னர் கோட்டைக்கு வெளியே வந்து காவலாளி ஒருவனைத் தன மனைவியிடம் அனுப்பி புலவர் வந்திருக்கும் விவரத்தைச் சொல்லச் சொன்னார்.
விவரமறிந்த சிறந்த மதியூகியான அவரது மனைவி தம்மிடம் வேறு பொருளில்லாததை நினைத்துத் தன் திருமாங்கலியத்தைக் கழட்டிக் கொடுத்தனுப்பினார்.
மனைவியார் அனுப்பிய தாலியைக் கண்ணீருட்ன கண்ணில் ஒற்றிக் கொண்ட சர்க்கரை மன்றாடியார் அதை மகிழ்ச்சியுடன் புலவரிட்ம் கொடுத்து, “என்னால் இப்போது கொடுக்க முடிவது இவ்வளவு தான். இதைப் பெரிய பரிசாக நினைத்துக் கொள்க” என்று உருக்கமாகக் கூறினார்.அதை மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்ட கவிஞர் அதை அப்படியே கையில் ஏந்திக் கொண்டு நேராக ராமசுப்பய்யரிடம் சென்று அதைக் காண்பித்தவாறே நடந்ததைக் கூறினார்.
அதைக் கேட்டு வியந்த ராமசுப்பையர் உடனே சர்க்கரை மன்றாடியாரைத் தம்மிடம் அழைத்து வருமாறு ஆணையிட்டார்.அவரும் வந்தார்.அவரைத் தழுவிக் கொண்ட ராமசுப்பய்யர்,
தமிழ் மீதுள்ள உமது தணியாக் காதலையும் உமது கொடைத் திறமையையும் கண்டு வியக்கிறேன்.
நல்ல சுபிட்ச காலம் வந்தவுடன் கொடுக்க வேண்டிய வரியைக் கொடுத்தால் போதும்; இப்போது நீங்கள் செல்லலாம்” என்று மகிழ்ச்சியுடன் கூறினார்.
உடனே சர்க்கரையார், “என்னைப் போலவே சிறையிலிருக்கும் மற்றவரை விட்டு விட்டு நான் மட்டும் எப்படி வெளியே போக முடியும்” என்று கூறினார்.
உடனே தள்வாய், “அனைவரையும் விடுவிக்கிறேன்” என்று கூறி அப்படியே அதற்கான ஆணையை இட்டார்.
அனைவரும் விடுதலையாகி மகிழ்ச்சியுடன் தம் இருப்பிடம் மீண்டனர்.
உடனே இன்னொரு பாடல் பிறந்தது.
“வாணன் உரைத்திட மால் ராமப்பையன் மனம் மகிழ்ந்து
வேணது கேள் எனச் சம்பந்தச் சர்க்கரை வேளினுமிவ்
வீணரைக் காவல் விடீரென்று கூறிட விட்டிடலுந்
தாணுவென்று இம்முடிக் காணிக்கை சாசனம் தந்தனரே”
தமிழுக்காக தாலியைப் பரிசாக அளித்த சம்பந்த சர்க்கரை மன்றாடியாரின் புகழும் அந்தச் செயலை உவந்து போற்றிய ராமப்பையரின் புகழும் கொங்கு நாடு முழுவதும் பரவலாயிற்று,
Post a Comment