பாகிஸ்தானின் கராச்சி நகரில் ரிக்ஷா ஓட்டுனராக பணிபுரிந்து வருபவர் அம்ஜத் அலி. இவருக்கு ஆறு பெண் குழந்தைகள்: ஒரு ஆண் மகன். மனம் துவண்டு விடாத அம்ஜத் அலி ஆறு பெண் பிள்ளைகளையும் நன்கு படிக்க வைக்கிறார். காலா காலத்தில் பெண்ணுக்கு திருமணம் முடிக்காமல் இப்படி படிப்பு படிப்பு என்று பணத்தை வீணாக்குகிறாயே என்று பலரும் சொல்வதை இவர் பொருட்படுத்தவில்லை.
மூத்த பெண் முஸ்கான் இன்ஸ்டிட்யூட் ஆஃப் பிஸினஸ். மற்றொரு பெண் டோ பல்கலைக்கழகத்தில் ஹெல்த் சையின்ஸ். நான்காவது மகள் டிசிஎஃப் கல்லூரி. 13 வயது மகனும் படித்து வருகிறான்.
'எனது மன உறுதிக்கு தூண்களாக நிற்பது எனது மகள்களே. மகனோ, மகளோ அவர்களை நன்கு படிக்க வைத்து விட்டால் எந்த பேதமும் இல்லை. ஒரு முறை எனது இளைய சகோதரனோடு சொத்து தகறாரில் சிறைக்கு சென்றேன். எனது இளைய மகள் என்னை ஜாமீனில் கொண்டு வந்தார். உலகின் சிறந்த பல்கலைக்கழகங்களில் இன்று என் மகள்கள் படிப்பது பெருமையாக உள்ளது. இதற்காக உதவிய தொண்டு நிறுவனங்களுக்கும் எனது நன்றி' என்று முடிக்கிறார் அம்ஜத் அலி.
இரண்டு பெண் குழந்தையை பெற்றாலே மூன்றாவது குழந்தையை வறுமைக்கு பயந்து கொன்று விடும் பலரை பார்க்கிறோம். இவர்களுக்கு மத்தியில் ஆறு பெண் குழந்தைகளையும் போராடி படிக்க வைத்துக் கொண்டிருக்கும் அம்ஜத் அலி ஒரு சிறந்த மனிதராகத் தெரிகிறார். .
மொழி பெயர்ப்பு : சுவனப்பிரியன்
தகவல் உதவி
சமா தொலைக்காட்சி
பாகிஸ்தான்
சமா தொலைக்காட்சி
பாகிஸ்தான்
1 comment:
இது ஒரு சாதாரண நிகழ்வு. இதைப்போய் பதிவு செய்ய வேண்டுமா ?
சுனப்பிரியன் தனக்கு பிரயமான மண்ணின் மைந்தரின் செயலை பாராட்டுகின்றாா். இந்தியாவில் கல்லூரிகள் அனைத்திலும் மாணவிகள் நிரப்பி வழிகின்றாா்கள்.
Post a Comment